எகிப்தில் சில நாட்கள் ( 5 )

எகிப்தில் சில நாட்கள் 5கெய்ரோவின் மத்திய பகுதியில் இருந்து கீசா (Giza) என்ற இடத்தில் இறங்கியபோது நடுப்பகல் தாண்டி விட்டது. பாலைவன வெய்யில் கண்ணாடித் துகள்களில் பட்டு சிதறுவதுபோல் நிலத்தில் பட்டுத் தெறித்து கண்களை கூசவைத்தது. இந்தக் கடும் வெய்யிலும் பாலைவனத்தின் கொதிப்பும்தான் 5000 வருடங்களாக எகிப்தின் புராதன சின்னங்களைப் பாதுகாத்திருக்கின்றன. மழையற்ற பாலைப் பிரதேசத்தின் ஈரலிப்பற்ற சீதோஷ்ணம் கட்டிடங்களில் விரிவும் சுருக்கமும் மாறி மாறி ஏற்படாது புராதன சின்னங்களை ஒரு நிலையில் வைத்திருக்கிறது. புராதன கட்டிடங்களுக்கு மனிதர்களால் ஏற்பட்ட அழிவுகள் அதிகம். பிரமிட்டின் மம்மிகளோடு இருந்த செல்வங்களை திருடர்கள் கொள்ளையடித்தனர். பிரமிட்டின் கற்களையும் பளிங்குகளையும் பிற்காலத்தில் வந்த எகிப்திய அரசர்கள் பள்ளிவாசல்கள் கட்டுவதற்கு அழித்தனர். மனிதர்களால் இவ்வாறு அழிவுகள் ஏற்பட்டபோது இயற்கை பல புராதன சின்னங்களை மண்ணால் மூடியும், வெப்பம் இயற்கையின் நுண்ணுயிர்களில் இருந்தும் பாதுகாத்திருக்கிறது.

Continue Reading →

எகிப்தில் சில நாட்கள் 4

எகிப்தில் சில நாட்கள் 3நோயல் நடேசன்சலாடினால் கட்டப்பட்ட சிற்றாடல் என்ற அந்தக் கோட்டையின் சிலபகுதிகளை மட்டும்பார்த்து முடித்துக்கொண்டு மதியத்திற்கு கெய்ரோவின் கடைகளை பார்ப்பதாக ஜனநாயக முறையில் தீர்மானித்தோம். எந்த ரகமான கடைகள் என்பது பிரச்சனையாக முளைத்தது. பெண்கள் நவீன சொப்பிங் கொம்பிளக்ஸ் போவோம் என கூறியபோது எனது நண்பனும் நானும் புராதன காலமாக அமைந்துள்ளதும் அதிகமாக உல்லாசப்பிரயாணிகள் செல்லும் பெரியகடைவீதி அருகில் உள்ளது. அங்கு செல்வோம் என்று முடிவு எடுத்து கான் எல்-காலி (Khan El-Khalili) கடைவீதிக்கு சென்றோம். வெள்ளிக்கிழமையாதலால் அந்தப் பகுதியில் நமது நல்லூர் திருவிழா போல் உள்ளுர் மக்கள் நின்றார்கள். ஆனால் வெளிநாட்டு உல்லாசப்பிரயாணிகளைக் பெருமளவு அங்கு காணவில்லை. பள்ளிவாசல் கடைவீதி மற்றும் கோப்பி கடைகள் என எல்லாம்அருகருகே அமைந்துள்ளன.

Continue Reading →

எகிப்தில் சில நாட்கள் -3!

எகிப்தில் சில நாட்கள் 3நோயல் நடேசன்கெய்ரோவில் நாங்கள் தங்கிய ஹோட்டலின் உள்ளே செல்லும்போது பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தன. அவை விமானமேறுவதற்கு முன்பாக செய்யப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளான மெற்றல் டிடெக்ரர் மற்றும் செக்கியுரிட்டி ஸ்கானர் என்பனவாகும்.  இதே போன்ற பாதுகாப்புகளை தாண்டித்தான் இலங்கையில் சில மந்திரிமாரை போர்க் காலத்தில் பார்க்கப் போகவேண்டும். டெல்லியில் சில ஷொப்பிங் பிளாசாக்களுக்குள் சென்ற போதும் இந்த அனுபவம் ஏற்பட்டது. ஆனால், உல்லாசப் பயணியாக சென்ற அந்த நாட்டில் ஹோட்டலில் ஏற்பட்ட அனுபவம் கொஞ்சம் சங்கடமாக இருந்தது. இந்த ஹோட்டல் ஏனையவை போன்றது அல்ல. எகிப்தின் அரசரால் அக்காலத்தில் ஒரு பெரிய சாம்ராச்சியத்தின் மகாராணி தங்குவதற்காக கட்டப்பட்டது. இந்த ஹோட்டலின் பின்னால் ஓரு வரலாறு இருக்கிறது. எகிப்தில் எங்குதான் வரலாறு இல்லை என நீங்கள் நினைக்கலாம்.  உண்மைதான். 19 ஆம் நூற்றாண்டில் எகிப்தை ஆண்ட முகம்மதலியின் பேரனாகிய கெடிவ் இஸ்மயில் (Khedive Ismail) காலத்தில் சூயஸ் கால்வாய் திறந்து வைக்கும்போது அந்த வைபவத்திற்கு வருகை தரும் முக்கிய விருந்தாளியை தங்கவைக்க இந்த மாளிகை கட்டப்பட்டது.

Continue Reading →

எகிப்தில் சில நாட்கள் 2!

எகிப்தில் சில நாட்கள் 1நோயல் நடேசன்“அந்த ஜக் டானியல் போத்தல் உள்ள பெட்டியை கையில் எடு” என நண்பன் கூறினான். நானும் அதேபோன்ற சிங்கிள் மோல்ட் விஸ்கி இரண்டு போத்தல் வைத்திருந்தேன். ஏனைய பெட்டிகளை அகமட் விமான நிலய பெல்டில் இருந்து தூக்கினார். குதிரையையும் வாளையும் துருக்கியர்கள் மற்றவர்களிடம் கொடுக்கமாட்டார்கள். அது போலத்தான் எங்களது விஸ்கி போத்தல்களை மற்றவர் கைகளில் கொடுக்க நாங்கள் தயாரில்லை. இரண்டு பேருமே குடிகாரர்கள் என நினைக்க வேண்டாம். அந்தப் போத்தில்கள் தனியாக கதை சொல்லும். கம்பன் வீட்டு கைத்தறிபோல எகிப்தில் எந்த குடிவகையும் குடிக்க முடியாது என்பதும் எங்களுக்குச் சொல்லப்பட்ட தகவல்களில் ஒன்று. அது இஸ்லாமிய நாடு. இதன் காரணத்தால் துபாயில் ஆளுக்கு இரண்டு போத்தல்கள் வாங்கியபோது அதற்கு உபரியாக எடுத்துச் செல்ல தள்ளிக்கொண்டு செல்லும் அழகான பெட்டியையும் தந்திருந்தார்கள். அந்தப் பெட்டியை எப்படியும் எகிப்துக்கு எடுத்துச் செல்வது எமது நோக்கமாக இருந்தது.

Continue Reading →

எகிப்தில் சில நாட்கள் – 1

எகிப்தில் சில நாட்கள் 1நோயல் நடேசன்உலகத்தில் முதன்முதலாக ஆணுறையைப் பாவித்தவர்கள் யார் தெரியுமா? எகிப்தியர்கள். எகிப்திலிருந்து முதலாவது ஆணுறை எப்படி உருவாகியது? அறிய ஆவலாக இருக்கிறீர்களா? செம்மறி ஆட்டின் குடலின் வெளிப்பக்கத்தில் உள்ள மெல்லிய லைனிங்கில் இருந்து செய்தது. இந்த குடல் லைனிங்தான் இப்பொழுது சொசேச் செய்வதற்கு பயன்படுகிறது. சத்திர சிகிச்சை  வைத்தியத்துறையில் ஆரம்ப உபகரணங்கள் எகிப்தில் பாவிக்கப்பட்டதாக மருத்துவ சரித்திரம் கூறுகிறது. எழுத்து வடிவம் பப்பரசி இலையில் எழுதப்பட்டது. பப்பரசி பேப்பர்தான் இப்பொழுது பேப்பர் ஆகியது. இந்த பப்பரசி செடிகள் நைல் நதிக் கரையோரம் விளைகின்றன. உலகத்தின் முதல் நாகரீகம் நைல் நதிக்கரையில் தொடங்கியது எனப் பாடப்புத்தகங்கள் வாயிலாகப் படித்தேன். இதே போல் வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டில் யூதமக்கள் மோஷசால் எகிப்திய மன்னர்களிடம் இருந்து இறைவனின் கட்டளைப்படி விடுவிக்கப்பட்டார்கள் என்கிறது. இதன்பின்பு குரானைப் படிக்கும்போது அங்கும் எகிப்திய மன்னர்களையும் யூதர்களைப் பற்றியும் அவர்களை அழைத்து சென்ற மோஷசை பற்றியும் பல வாக்கியங்கள்  பேசப்படுகிறது.

Continue Reading →