பயணத்தொடர்: நேபாளம் – பயணக்குறிப்புகள் (3)

அத்தியாயம் மூன்று:  சித்துவான் தேசிய வனம்

நேபாளப் பயணத்தில் இறுதியாகச் செல்லும் இடமாக கவுதம புத்தர் அவதரித்த லும்பினி இருந்தது. நேபாளத்தில் சாக்கிய வம்சமென்பது தற்பொழுது அங்கு தமிழ் நாட்டில் முதலியார் – பிள்ளை என்பதுபோல சாதிப்பேராக மாறிவிட்டது.அந்தி மயங்கிய நேரத்தில் இரண்டு, மங்கிய மஞ்சள் நிறக் கண்கள் இமைக்காது என்னை ஊடுருவியவாறு இருந்தது. இதுவரையில், இவ்வளவு அருகில் காரியல் முதலையை (Gharial Crocodil) அருகில் சென்று பார்த்ததில்லை. இதுவே சந்தனு மகாராஜாவின் மனைவியான கங்காதேவி பயணித்த வாகனமாக சொல்லப்படுகிறது.

மரக்கட்டைபோல் தூரத்தில் தெரிந்தபோதும் அருகே நெருங்கிப்பார்த்தபோதுதான், பிரவுண் நிற வட்டமான கண்கள் நீளமான பலம்வாய்ந்த தாடை பெரிய மூக்கு பகுதி செதில்கொண்ட முதுகாக நாலடி நீளத்தில் அசையாது ஆற்றங்கரையில் கிடந்தது. அதனது பார்வை தொடர்ந்து என்னை குத்துவதுபோல் இருந்தது.

இந்த உலகத்தில் உனது முப்பாட்டன் பிறக்க முன்பே நான் பிறந்தேன். பல மில்லியன் வருடங்கள் முன்பு இந்த உலகத்தையே ஆண்ட டைனோசரின் உறவினன் நான் தெரியுமா?
இப்படியான அலட்சியமான எண்ணம் அதனது மனதில் இருப்பது தவிர்க்கமுடியாது.

ரப்ரி நதி இமயமலையின் சாரலில் இருந்து வரும் சிறிய ஆறு . நாங்கள் தற்போது நிற்கும் காட்டு விடுதிகளுக்கும் சித்துவான் தேசிய வனத்திற்கும் இடையே ஓடுகிறது.

Continue Reading →

பயணத்தொடர்: நேபாளம் – பயணக்குறிப்புகள் (2)

அத்தியாயம் இரண்டு: புக்காரா நகரம்

புக்காரா நகரத்தின் மத்தியில் உள்ள வாவி ( Phewa Tal) அழகானது.நாங்கள் காட்மாண்டுவிலிருந்து புக்காரா என்ற இரண்டாவது பெரிய நகரத்திற்குப் புத்தா விமானச் சேவைக்குரிய விமானத்தில் பயணித்தோம்.

நமது நாட்டில் முருகன் உணவுக்கடை, பிள்ளையார் விலாஸ் , லட்சுமி அடைவு கடை என பலதரப்பட்ட வர்த்தகத்திற்கு மனேஜர்களை வைத்து வர்த்தகத்தை பெருக்குருக்கிறோம். நேபாளத்தில் புத்தர் மட்டுமே ஒரு மார்கெட்டிங் மனேஜர் ஆக பல வியாபார நிறுவனங்களுக்கு உதவியாக தொழிற் படுகிறார் . அவரது பெயரில் உணவகம், நட்சத்திர விடுதிகள், லொரி சேர்விஸ் எனப்பல உண்டு. நேபாளிகள் புத்தரில் முழுநம்பிக்கை வைத்திருக்கிறார்கள் விமானத்தின் யன்னலோரத்து ஆசனத்தில் அமர்ந்து, இமையமலைச் சிகரங்கள் மேலாக பறக்கும்போது மனதில் டென்சிங்கையும் எட்மண்ட் ஹிலாரியையும் நினைத்துப் பார்க்காது இருக்கமுடியாது .

காலையில் செல்லவேண்டிய புத்தா விமானச்சேவை பல மணிநேரம் தாமதமடைந்து புறப்பட்டது. இமயமலை மேலாக பறப்பதால் காலநிலை சரியாக இருக்கவேண்டும். நாங்கள் சென்ற நாளன்று மேகமூட்டமாக இருந்தது. நேபாளத்தில் பல இடங்களில் மேகம் உயரத்தில் இல்லை. தரையில் வந்து இறங்கிவிடும். எனக்கும் மனைவிக்கும் இடையிலும் வந்துவிடும் என்றால் பாருங்களேன்.

Continue Reading →

பயணத்தொடர்: நேபாளம் – பயணக்குறிப்புகள் (1)

அத்தியாயம் ஒன்று: காட்மாண்டு பள்ளத்தாக்கு

நேபாளம், இமயமலையின் தென் பகுதி அடிவாரத்தில் உள்ள நாடு. ஐம்பது மில்லியன் வருடங்கள் முன்பாக புவியின் வடகண்டம் தென்கண்டம் ஆகிய இரண்டும் கண்ட நகர்வினால் ஒன்றுடன் ஒன்று மோதியபோது ஏற்பட்ட அமுக்கத்தால் புவியின் மேற்பகுதி மேலெழுந்து 2900 கிலோ மீட்டர் நீளமான மலைத் தொடர் உருவாகியது.

அந்த மலைத்தொடரின் வடபகுதி திபேத் பீடபூமி. தென்பகுதியில் நேபாளம் மற்றும் இந்தியா உள்ளது. உலகத்தில் 14 மலைச்சிகரங்கள் 8000 மீட்டருக்கு மேற்பட்டவை அதில் எவரெஸ்ட் உட்பட 8 மலைச்சிகரங்கள் நேபாளத்தில் உள்ளன.

விமானத்தில் பறக்கும்போது யன்னல் கண்ணாடியூடாக பார்க்கும்போது, பனிபடர்ந்த அந்தச் சிகரங்கள் தொடர்ச்சியாக பளிங்கில் செதுக்கி வைத்திருப்பதுபோல் அழகான காட்சியாக தென்படும். அந்த மலைத்தொடரின் மேலுள்ள பனிப்படலத்தில் உதயசூரியன் பட்டு கண்ணாடியின் மேல் வைத்த வைரமாலையாக ஒளிரும் காட்சி எக்காலத்திலும் மனதை விட்டு அகலாது .

புவியின் அசைவியக்கத்தால் உருவாகிய பிரதேசமானதால் இங்கு தொடர்ச்சியான கண்ட நகர்வு நடந்து கொண்டிருக்கிறது. அத்துடன் இந்தச் சிகரங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. இப்படியான தொடர் மாற்றத்தினால், இந்தப் பிரதேசத்தில் பூகம்பம் வருவது வழக்கம்.

நான் அங்கு சென்றபோது 2015 இல் ஏற்பட்ட பூகம்பத்தின் அழிவுகளை காட்மண்டு நகரத்தினருகிலேயே காணமுடிந்தது.

ஒரு காலத்தில் கடலாக இருந்த பிரதேசமென அறியப்பட்ட இந்நகரத்தில் வாழ்ந்த பல கடல் வாழ் உயிரினங்களது சுவடுகளை மியூசியங்களில் பார்க்கக்கூடியதாக இருந்தது. .அவுஸ்திரேலியாவில் இமய மலையில் இருந்து எடுத்த உப்பு பாளங்களில் இருந்து விளக்கு உருவாக்கப்படுகிறது. அவை காற்றின் மாசுகளை நீங்குமென அறிந்து ஒரு காலத்தில் கட்டிலருகே அத்தகைய ஒரு விளக்கை வைத்திருந்தேன் . இமய மலை, அதனது சிகரங்கள் பற்றிய படங்கள், நூல்கள் மற்றும் புனைவுகள் என்பன சிறு வயதிலிருந்தே என்னைப் பாதித்தவை. அறிந்தும் அறியாத ஒரு புதிராக மனதில் கூடு கட்டியிருந்தது. மற்றவர்களது கற்பனைகளின் மீது நான் கற்பனை செய்வதைவிட , நான் நேரில் காணும் காட்சியில் எனது எண்ணங்களை மற்றும் கற்பனைகளை மனதில் வரைபடமாக்க விரும்பியதால் அங்கு சென்றேன் . எனவே பல காலமாக எதிர்பார்த்திருந்த பயணம் இந்த நேபாளப் பயணம்.

Continue Reading →

பயணம்: ‘சூரியனை நோக்கி ஒரு பயணம் 2

8ம் நாள் – தான்ஜீர்: மொரக்கோவின் வாசல்    July 25, 2016

- மீராபாரதி - தான்ஜீரில் பழைய ரீயாட் (Riyad) ஒன்றை தங்கும் விடுதியாக மாற்றிய இடம் ஒன்றில் தங்கினோம். மிகச் சிறிய அறை. ஒரு ஈரோ 10 டினார்கள். ஒரு கனேடியன் டொலர் 7 டினார்கள். இலங்கை இந்தியாவை விட பண மதிப்பு கூடிய நாடு. இருப்பினும் ஐரோப்பாவின் விடுதி விலைகளுக்கு சரிசமனாகவே இங்கு அறவீடுகின்றார்கள். நாம் எதிர்பார்த்ததைவிட விடுதி விலைகள் அதிகம். ஆனால் மரக்கறிகள் மிக மலிவு. சமைத்து சாப்பிட இடமில்லாதது பெரும் குறையாக இருந்தது.

நமது பொதிகளை வைத்துவிட்டு வெளியில் கிளம்பினோம். முதல் வேளை தொலைபேசிக்கு சிம் காட் ஒன்று வாங்குவது. இரண்டாவது இரவு உணவிற்கு மரக்கறி சாப்பாடு சாப்பிடக் கூடிய கடை ஒன்றைத் தேடுவது. வெளியில் வந்தவுடனையே வாசிலில் நின்ற விற்பனையாளர்கள் நம்மை சூழ்ந்து கொண்டார்கள். தாம் மதீனா பார்க்க கூட்டிச் செல்வதாகவும் எங்கே போகவேண்டும் எனக் கேட்டு நமது பயணத்தை தீர்மானிப்பவர்களாக இருந்தார்கள். நாம் அவர்களிடமிருந்து மெதுவாக நழுவி நமக்கு கிடைத்த மதீனா வரைபடத்தின் உதவியுடன் நடந்தோம்.

போகும் வழியில் சிறிய உணவுவிடுதி. அதன் உணவு விபரங்களைப் பார்த்தோம். தான்ஜின் என்ற உணவில் பல வகைகளும் மற்றும் முட்டைப் பொறியலில் பல வகைகளும் இதைவிட மாமிச உணவு வகைகளுக்கான விபரங்களும் இருந்தன. Tripadvisorஆல் சிபார்சு செய்யப்பட்ட விளம்பரமும் ஒட்டப்பட்டிருந்தது. சரி வேறு உணவு விடுதிகளை கண்டு பிடிக்க முடியாவிட்டால் இந்தக் கடையில் வந்து சாப்பிடுவோம் என நினைத்துக் கொண்டு சென்றோம். ஒரு வீதியில் நிறைய சனம். கடைகள் திறந்து வீதி முழுக்க பலவிதமான வியாபாரிகள் தமது பண்டங்களை விற்றுக் கொண்டிருந்தார்கள்.

எல்லாவிதமான சாப்பாடுகளும் திறந்து விற்பனைக்கு இருந்தன. எந்தவிதமான  உணவு பாதுகாப்பு விதிகளும் கடைப்பிடிக்கப்படவில்லை. ஈக்களும் மனிதர்களைப் போல உணவுப்பண்டங்களை சுற்றி குமிந்து இருந்தன. புதிதாக  வரும் ஐரோப்பியர்களுக்கு அதுவும் தற்சமயம்  ஸ்பெயினின் அழகிய நகரங்களான மலக்கா சிவிலி என்பவற்றிலிருந்து  வருபவர்களுக்கு இது ஒரு கலாசார அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் எம்மைப் போன்ற ஆசிய நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு அப்படி இருக்காது என நினைக்கின்றோம். நாம் கனடாவில் வாழ்ந்தபோதும் இந்த இடம் நமது ஊருக்கு வந்த ஒரு உணர்வை ஏற்படுத்தியது.

Continue Reading →

பயணம்: ‘சூரியனை நோக்கி ஒரு பயணம் 1

18 நாட்கள்: மொரோக்கோ – மதினாக்களின் நாடு.  June 20, 2016

தொலைந்துபோக…

- மீராபாரதி - நமது பயணத்தில் சென்ற மூன்றாவது நாடு மொரோக்கோ. இந்த நாடு இரண்டு வகையில் எங்களுக்கு முக்கியமானது. முதலாவது ஆபிரிக்க கண்டத்திலுள்ள ஒரு நாட்டிற்கு முதன் முதலாக செல்கின்றோம். இரண்டாவது இதுவே  நாம் செல்கின்ற முதல் முஸ்லிம் நாடுமாகும். இந்த நாட்டின் பழங்குடி மக்கள் பாபர் (Berber) என்ற மனிதர்கள். இவர்கள் இந்தியாவிலிருந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது. இயற்கையுடன் வாழ்ந்த இந்த மக்களையும்  நாட்டையும் ஒன்பதாம் நூற்றாண்டிற்கு முதல் ரோமர்கள் ஆக்கிரமித்து ஆண்டார்கள். வரலாறு எழுதும் மேற்குலகினர் ரோமர்கள் பிற்காலங்களில் இந்த நாட்டை விட்டு விட்டுச் சென்றதாகவும் முஸ்லிம்கள் பின் ஆக்கிரமித்ததாகவும் எழுதுகின்றார்கள். இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களோ பாபர்கள் கடவுளின் தூதர்களை எதிர்பார்த்திருந்தாகவும் முஸ்லிம்கள் வந்தபின் இஸ்லாமே தமது மதம் என உணர்ந்து ஏற்றுக் கொண்டார்கள் என்றும் கூறுகின்றார்கள். இவ்வாறுதான் வரலாறு என்பது ஆதிக்கத்திலிருப்பவர்களின் வரலாறாகவே உள்ளது. ஆனால் வரலாறுகளை எழுதும் பெரும்பாலானவர்கள் இன்னுமொரு நாட்டை தமது நாட்டினிர் மதத்தினர் ஆக்கிரமித்து ஆண்டார்கள் என்ற உண்மையைக் கூறுவதுமில்லை. ஏற்றுக்கொள்வதுமில்லை. ஆரம்பகால பாபர்கள் இந்த ஆக்கிரமிப்பாளர்களின் வருகையை எப்படிப் பார்த்தார்கள் என ஒருவரும் கூறுவதில்லை. இதுவே வரலாறுகளின் தூரதிர்ஸ்டம். இப்பொழுதும் இவர்களில் பெரும்பாலானவர்கள் காடுகளிலும் மலைகளிலும் பாலைவனங்களிலும் அலைந்து திரிந்தே வாழ்கின்றனர்.

இந்த நாட்டை அரேபியர்கள் 9ம் நூற்றாண்டில் ஆக்கிரமித்தபின் முதல் மதீனா 10ம் நூற்றாண்டில் வெஸ்சில் (Fes/Fez) கட்ட ஆரம்பிக்கப்பட்டு 15ம் நூற்றாண்டுவரை தொடர்ந்தது கட்டி முடிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மொரோக்கோவின் பல நகரங்களில் மதீனாக்கள் கட்டப்பட்டன. இன்று மொரோக்கோ பல மதீனாக்களைக் கொண்ட ஒரு நாடு. தான்ஜீர் (Tangier). செவ்செவ்வோன்(Chefchaouen). வெஸ் (Fez). மரகாஸ் (Marrakesh) மற்றும் பல நகரங்களிலும் பெரிய சிறிய மதீனாக்கள் உள்ளன. தொலைந்து போக விருப்பமானவர்களுக்கும்  தொலையாமல் இருப்பதற்கான சவாலை எதிர்கொள்பவர்களும் பயணிக்க வேண்டிய நகரங்கள் இவை. ஏனெனில் இந்த மதினாக்கள் திட்டமிட்டு கட்டப்பட்டவையல்ல. மதினாக்களின்  மத்தியில் கஸ்பா அல்லது ரியாட் ஒன்று முதன் முதலாக கட்டப்பட்டுள்ளது. அதனுடன் இணைந்து தமது தேவைக்கும் விருப்பத்திற்கும் புதிதாக குடியேறியவர்கள் சிறிய கஸ்பாக்களையும் சிறிய பெரிய ரியாட்களையும் கட்டியுள்ளார்கள். வெளியிலிருந்து பார்க்கும் பொழுது சிறிய வீடுகளாக இருக்கும். ஆனால் உள்ளே சென்றால் அழகிய வேலைப்பாடுகளுடன் பெரிய நாற்சதுர வீடுகளாக இருக்கும். கஸ்பா என்பது ஒரு குடும்பத்திற்குரியது. நான்கு கோபுரங்களைக் கொண்ட நாற் சதுர வீட்டின் ஒவ்வொரு கோபுரத்திலும் ஒரு மனைவியார் என மொத்தமாக நான்கு மனைவிமார் வசிக்கலாம். ரீயாட் என்பது கொஞ்சம் பெரியதும் வசதியானதுமாகும். சிலவற்றில் நடுவில் நீந்திக் குளிப்பதற்கான வசதிகளும் பூந்தோட்டங்களும் உள்ளன.

Continue Reading →

எரிமலையை நோக்கிய பயணம்: வனவாத்து (Vanuatu) – தென்பசிபிக்தீவுகள்

செஸ்னா விமானம்

ஏழாயிரம் அடி உயரத்தில் ஆகாயவெளியில் ஆறு இருக்கைகளைக் கொண்ட செஸ்னா விமானம் பறந்தபோது எதிரே புகைபோல் வந்த ஓவ்வொரு மேகக்கூட்டமும் அந்த விமானத்தை தூக்கித் தூக்கி எறிந்தது. சிறுகுழந்தை, விளையாட்டு விமானத்தை விளையாடுவதுபோல் அந்த மேகக்கூட்டங்கள் விளையாடியது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த மேககூட்டங்களை பயத்துடன், மவுனமாக சபித்துக் கொண்டேன்.வனவாத்து வருவதற்கு முதல்நாள் மண்டைக்கயிறுக்கு (மனைவியின் தம்பி) கொடுக்க வேண்டிய பணத்தை வங்கியில் போட்டுவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது. ஏதாவது காரணத்தால் அந்த ஒற்றை எஞ்சின் விமானத்தில் கோளாறு ஏற்படும் பட்சத்தில் கடன்காரனாக மரணமடைய வேண்டிஇருக்காது என்பது ஒரு ஆறுதலான நினைப்பு. எனக்குப் பக்கத்தில் இருந்த மனைவிக்கு அது ஒற்றை இயந்திர விமானம் என்பது தெரியாது. எனக்குப் பக்கத்தில் மேலும் சுமார் இருபது வயதுள்ள இரண்டு அவுஸ்திரேலிய இளைஞர்ளைப் பார்த்ததும் மனதில் தைரியம் வந்தது. கமராவை எடுத்து படங்கள் எடுக்கத் தயாரானேன்.

Continue Reading →

எகிப்தில் சில நாட்கள் -9 : லக்சர் கோவில்

எகிப்தில் சில நாட்கள் 9லக்சர் கோவில் எகிப்தின் 18 ஆவது அரசவம்சத்தைச் சேர்ந்த ஆமன்ஹோரப்111 என்பவரால் உருவாக்கப்பட்டது. பின்பு 19 ஆவது அரச வம்சத்தைச் சேர்ந்த மகா இராம்சியால் (இராம்சி11) பிரமாண்டமாக கட்டப்பட்டது. ஏனைய அரசர்களது காலத்தில் சில கட்டிடவேலைகள் நடந்த போதிலும் மேற்குறிப்பிட்ட இரு அரசர்களுமே இந்தக் கோயிலைப் பொறுத்தவரை முக்கியமானவர்கள்.

முகப்பில் தனியாக நின்று கொண்டிருந்த ஓபிலிஸ்க் (Obelisk) என்ற பிரமாண்டமான தூணைப் பற்றிய விடயங்களை எமது வழிகாட்டி முகமட் சொல்லிக் கொண்டிருந்தபோது, அதன் அருகே நின்ற இரண்டு எகிப்திய சிறுவர்கள் கல்லில் செதுக்கிய வண்டுகளை (Scarab or Dung beetle) (நமது ஊரில் சாணியை உருட்டும் வண்டுகள்) எமக்கு விற்க முனைந்தார்கள். அந்த வண்டுகளின் அடையாளம் பண்டைய எகிப்திய கலாச்சாரத்தில் முக்கியமானது. அக்காலத்தில் இந்த வண்டுகளை புனித அடையாளமாக கொள்வார்கள். விலை உயர்ந்த கற்களில் வண்டு உருவங்களை பதக்கமாகச் செய்து பெண்கள் அணிவதுடன் பரிசுப் பொருளாக மற்றவர்களுக்கு கொடுப்பதும் வழக்கம். அந்தச் சிறுவர்கள் வைத்திருந்த செதுக்கிய கல்வண்டின் அடியில் எகிப்தின் பண்டைய குறியீட்டு மொழியில் ஏதோ எழுதப்பட்டிருந்தது.

Continue Reading →

எகிப்தில் சில நாட்கள் -08: மேற்குலகம் கடத்திய கலைச்செல்வங்கள்

எகிப்தில் சில நாட்கள் -08: மேற்குலகம் கடத்திய கலைச்செல்வங்கள்கெய்ரோவில் இருந்த லக்சருக்கு செல்வதற்கு மீண்டும் விமான நிலையத்திற்கு சென்றோம். விமானப் பிரயாண நேரம் ஒரு மணித்தியாலத்திற்கு சற்று அதிகமாக இருந்தாலும் விமான நிலய பாதுகாப்புக்காரணங்களால் காலை வேளையில் சென்று மதியத்துக்கு மேல் லக்சர்(Luxor) செல்வதாக இருந்தது. இந்த லக்சரில் இருந்து தான் ஐந்து நாட்கள் எமது சுற்றுலாப் பிரயாணம் தொடர்கிறது. நைல் நதியில் படகுப் பிரயாணம் பல ஹொலிவுட் படங்களிலும் நாவல்களிலும் வருகிறது. அதனாலும் இந்தப்படகுப் பயணம் பிரபலமாகியுள்ளது. முக்கியாக அகதா கிறிஸ்டியின் நைல் நதியில் மரணம் நாவல் படமாகியது (Death on the Nile) இந்தப்படத்தில் சில காட்சிகள் மட்டுமே நினைவிலிருந்தாலும் அதில்வரும் நைல் நதிப்பயணம் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. முக்கிய நதிகளில் தெற்கேயிருந்து வடக்கு ஓடுவது நைல் நதி மட்டுமே. ஆதிகாலத்தில் இருந்தே நைல் நதிப்பயணம் எகிப்தியர்களுக்கு இலகுவானது. நைல் நதியில் தெற்கு நோக்கி, அதாவது சூடான் பக்கமாக செல்லும் போது காற்று தெற்கு நோக்கி வீசுவதால் பாய்மரத்தை விரித்தால் படகு போய்க் கொண்டேயிருக்கும்.அதே போல் வடக்கு நோக்கி நைல்நதியில் செல்லும்போது , பாயை இறக்கிவிட்டால் அந்த நீரோட்டத்தில் அலக்சாண்ரியாவுக்கு வந்து மத்திய தரைக்கடலை அடைந்து விடலாம். இவ்விதமாக காற்றுக்கு இசைவாக கப்பலோட்டம் இருந்ததால் எகிப்தியர்கள் பெரிய கப்பல்களையோ தேர்ச்சிபெற்ற மாலுமிகளையோ உருவாக்கவில்லை என்பது வரலாற்றாசிரியர்களின கருத்து. எகிப்தை ஆயிரம் வருடங்கள் ஆண்டவர்களான கிரேக்கர்,ரோமர் முதலானோர் பலமான கப்பல்ப் படையை கொண்டவர்களாகவும் சிறந்த கப்பலோட்டிகளாகவும் விளங்கியிருக்கிறார்கள்.

Continue Reading →

எகிப்தில் சில நாட்கள் 7

எகிப்தில் சில நாட்கள் 6ஸ்பிங்ஸ் பக்கத்தில் கவ்றியின் பிரமிட் ரோமாபுரி ஒரே நாளில் கட்டப்படவில்லை என சொல்வார்கள்.அதே போல் எகிப்திய அரசர்கள் உடனடியாகவே கிசா என்னும் உலக அதிசயமான பிரமிட்டை கட்டிவிடவில்லை. இந்த பிரமிட் அமைப்பு முறை ஒரு கட்டிடக்கலையின் பரிணாம வளர்ச்சியுடனேயே வருகிறது. பழைய அரசர்கள்(Old Kingdom) காலத்தில்தான் இந்த பிரமிட்டுகள் கட்டப்பட்டன. இந்தக்கால கட்டத்தில் பல அரச வம்சங்கள் தோன்றி கடைசியில் பெப்பி 2 என்ற மன்னன் 94 வருடங்கள் அரசாண்டபின் பழைய அரசர் காலம் முடிவுக்கு வருகிறது.இன்னமும் அவ்வளவு நீண்ட காலம் அரசர் எவரும் உலகத்தில் அரசாளவில்லை என்பதால் அந்த ரெக்கோட் முறியடிக்கப்படவில்லை. எகிப்திய வரலாற்றில் சுதேச மன்னர்கள் ஆண்டகாலத்தை பழைய , மத்திய, பிற்காலம் என மூன்றாக வகுத்திருக்கிறார்கள் எகிப்திய வரலாற்று ஆசிரியர்கள். அத்துடன் இடைப்பட்ட காலங்களில் எகிப்து நலிவடைந்த வேளையில் வேற்று நாட்டவர்கள் ஆண்டிருப்பது பற்றி ய குறிப்புகள் சரித்திரத்தில் இருந்து மறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள். சாதாரண மனிதர்கள் போல் வெற்றிகளை கொண்டாடுவதும் தோல்விகளை மறைக்க நினைப்பதுமான போக்கு எகிப்திய அரசவம்சத்தில் இருந்ததால் நலிவடைந்த காலங்களை அறிவதற்கு இலக்கியங்களைத் தேடி அறிய வேண்டியிருப்பதாக சொல்கிறார்கள்.

Continue Reading →

எகிப்தில் சில நாட்கள் 6

எகிப்தில் சில நாட்கள் 6எகிப்திய காசா பெரிய பிரமிட்டைக் கட்டுவதற்கு 90000 தொழிலாளர்களுக்கு, இருபது வருடங்கள் எடுத்தது. இயந்திரங்களினதோ ,மிருகங்களினதோ உதவியற்ற நிலையில் மனிதர்களினது சக்தியை மட்டுமே பாவித்து உருவாக்கப்பட்ட மகத்தான ஒரு சாதனையை சில மணி நேரத்தில் பார்த்து விட்டு மரியற் ஹொட்டலுக்குச் சென்று இழுத்து போர்த்து தூங்கி விடுவது என்பது என்னைப் போன்ற சுற்றுலா பிரயாணிகளுக்கு இக்காலத்தில் எவ்வளவு எளிதான காரியமாகி விட்டது. குறைந்த பட்சமாக இதைக் கட்டிய காலத்தில் நடந்தவற்றை நினைத்து பார்ப்பதுதான் அக்கால மனிதர்களால் கட்டப்பட்ட இந்த முதல் உலக அதிசயத்திற்கு நான் செலுத்தும் காணிக்கையாகும். எத்தனை மனிதர்களது உடல், மன உழைப்பை உள்வாங்கி 5000 வருடங்களாக வானத்தை நோக்கி நிமிர்ந்து நிற்கிறது? வரலாற்று ஆசிரியர் ஹோரொடொட்ஸ்ன் கூற்றுப்படி ஒவ்வொரு வருடத்திலும், அதனைக் கட்டியவர்கள் மூன்று மாதங்கள் மட்டுமே அந்த வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள். மிகுதி ஒன்பது மாதங்களும் அவர்கள் விவசாயத்தில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. வருடத்தில் மூன்று மாதங்கள் நைல் நதியில் நீரோட்டம் குறைவதனால் விவசாயத்தில் ஈடுபடமுடியாது. அடிமைகளைக் அழைத்துவந்து கொடுமைப்படுத்தித்தான் பிரமிட்டுகள் கட்டப்பட்டன என்று ஏற்கனவே பரப்பப்பட்டிருந்த எண்ணத்தை இந்த வரலாற்றுத் தகவல் அடியோடு சிதற வைத்து விட்டது. கட்டப்பட்ட பிரமிட்டில் அரசனது உடல் வைக்கப்படுவதுடன் சமாதிபோல் மூடப்படுவதில்லை. தொடர்ச்சியாக பூசைகள் வழிபாடுகள் மத குருமார்களால் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்சிகளின் அதன் பின்பு அரசனது மனைவி மற்றும் நெருங்கிய உறவினர்கள் உடனிருப்பார்கள். பிற்காலத்தில் உறவினர்கள் இறக்கும் போது அவர்கள் மம்மியாக்கப்பட்டு இங்கு எடுத்து வரப்பட்டு வைக்கப்படுவார்கள். அந்த மம்மிகளுக்கு வேறாக அறைகள் உள்ளன.

Continue Reading →