தமிழ்மொழி பன்னெடுங்கால வரலாற்றையும் இருத்தலையும் இலக்கிய இயங்கியலையும் கொண்ட மொழி எனும் கருத்தியலுக்குச் சான்றாகத்திகழ்வனவற்றுள் ஒன்றாக விளங்குவது முச்சங்க வரலாறும் ஆகும். இச்சங்கங்கள் குறித்து இறையனார் அகப்பொருளுரை சில கருத்தியல்களை முன்வைக்கிறது. சிலப்பதிகாரக் காப்பியம் சங்கங்கள் குறித்துச் சிலகருத்தியல்களை முன்வைக்கும் பொழுதும் இறையனார் அகப்பொருளுரை முன்வைக்கும் கருத்தியல்களே ஆய்வாளர் பலராலும் விவாதப்படுத்தப் பெறுகின்றன. இறையனார் அகப்பொருளுரை முன்வைக்கும் சங்கங்கள் குறித்த கால எல்லை வரையரையும் வீற்றிருந்த மன்னர் எண்ணிக்கை, புலவர் எண்ணிக்கை, முதலானவற்றின் மிகைப்படுத்தப்பட்ட குறிப்புகளே இவ்விவாதங்களுக்கான காரணிகளாகின்றன. சங்கங்கள் குறித்த பதிவுகள் உண்மை என நிறுவுவோர் தங்களுக்கு ஆதாரமாக விளங்கும் சான்றுகளைக் கொண்டும் அவை உண்மையான நடப்பிலுக்குப் புறம்பானவை எனக் கருதுவோர் தங்களுக்குரிய ஐயப்பாடுகளைக் கொண்டும் விவாதித்து வருகின்றனர்.
1.0. முன்னுரை
தமிழில் குறுந்தொகையும், பிராகிருதத்தில் காதா சப்த சதியும் சமகாலத்திய இலக்கியங்களாகக் கருதப் பெறுகின்றன. இவ்விரு இலக்கியங்களில் முறையே 312, 189 என்ற இருபாடல்கள் ஒத்த கருத்துடையவை. இருப்பினும் அவ்விரு பாடல்களின் காலம் மட்டும் தான் மாறுபடுகிறது என்பார் அ. செல்வராசு (2008:37). ஆனால் அது களவு, கற்பு குறித்த காலமா? அல்லது பாடல் எழுதப்பட்ட காலமா? எனத் தெளிவுபடுத்தவில்லை. இருப்பினும், அவ்விரு பாடல்களில் நிலவும் அவ்விரு கவிஞர்களின் சிறப்பினைச் சுட்டிக் காட்டுவதாக இக்கட்டுரை அமைகின்றது.
அவ்விரு கவிஞர்களின் சிறப்புகளை,
1. ஒத்த தன்மை: தலைவியின் நுண்ணறிவு
2. வேறுபட்ட தன்மை: சமகாலத்தியப் பதிவுகள் என்றாயிரு வகைகளில் விளக்கலாம்.
மகாகவி பாரதி அக்கினிக்குஞ்சாய் வீறுகொண்டு எழுந்தவன்.வறுமை விரட்டியபோதும் உறவுகள் எதிர்த்தபோதும் சுதந்திரபாரதம் பெறத் தன் வாழ்வையே அர்ப்பணித்தவன்.தாமிரபரணிபாயும் சீவலப்பேரி, மகாகவி பாரதியின் தந்தை சின்னச்சாமிஐயர் பிறந்தஊர்.தந்தை கடுவாய்ச் சுப்பைய்யர் காலமானபின் தாய் பாகீரதியம்மையாருடன் பாரதியின் தந்தை எட்டயபுரம் செல்ல நேரிடுகிறது. எட்டயபுரத்தில் சின்னசாமிஐயர் பள்ளிப்படிப்பை முடித்து எட்டயபுரஜமீனில் பணிபுரிகிறார்.அதே ஊரில் வசித்த லட்சுமிஅம்மையாரை மணக்கிறார்.1882 டிசம்பர் 11 இல் மகாகவி பாரதி பிறக்கிறார்.சுப்ரமணியன் என்று பெயரிடுகிறார்கள்.பாரதி பிறந்து ஐந்தாமாண்டில் 1887இல் பாரதியின் தாய் லட்சுமிஅம்மையார் காலமாகிறார். பாரதி தன் சுயசரிதையில் தன்தாயின் இறப்பை ஏக்கத்தோடு பதிவு செய்துள்ளார்.
திருக்குறள் அதிகாரப் பெயர்களும் தெலுங்கு மொழிப் பெயர்ப்பும்உலகறிந்த திருக்குறள் பல்வேறு உலக மொழிகளிலும், இந்திய மொழிகளிலும் மொழிப் பெயர்க்கப் பட்டுள்ளது. அவற்றில் திராவிட மொழி குடும்பத்தைச் சார்ந்த…
கற்புவாழ்க்கையில் தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் பிரியக்கூடிய சூழல்கள் நேரிடும். அப்படி தலைவன் தலைவியைவிட்டு பிரியக்கூடிய பிரிவுகள் வேந்தன் பொருட்டுப் பிரிவுää பொருள்வயிற்பிரிவு என இருவகைப்படும். ‘வினையே…
சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தில் தனக்கென முத்திரை பதித்து எழுதி வருபவர் திருமதி ஜெயந்தி சங்கர். கவிதை, மொழிபெயர்ப்பு, சிறுகதை, கட்டுரை, நாவல் என இவரின் இலக்கியம் விரிகிறது. தமிழக மதுரையில் 1964இல் பிறந்தவர்.சிங்கப்பூரில் வாழ்கிறார். மதுரை ஹிந்து சினீயர் செகண்டரி பள்ளி,சிதாலக்ஸ்மி ராமசாமி கல்லூரி, பெசண்ட்தியாசோபிகல் பள்ளி ஆகியவற்றில் பயின்று இன்று பி.எஸ் சி பிசிக்ஸ் பட்டதாரியாகவும், பகுதி நேர மொழிபெயர்ப்பாளராகவும், முழுநேர எழுத்தாளராகவும் நமக்குத் தெரிந்திருக்கிறார். நாலேகால் டாலர், பின்சீட், நியாயங்கள் பொதுவானவை, மனுஷி, திரைகடலோடி, தூரத்தே தெரியும் வான்விளிம்பு,வாழ்ந்து பார்க்கலாம் வா,நெய்தல், மனப்பிரிகை, குவியம், ஏழாம் சுவை, பெரும் சுவருக்குப்பின்னே, சிங்கப்பூர் வாங்க,ச்சிங்மிங், கனவிலே ஒரு சிங்கம், முடிவிலும் ஒன்று தொடரலாம், மிதந்திடும் சுயபிரதிமைகள், சூரியனுக்கு சுப்ரபாதம்,இசையும் வாழ்க்கையும், மீன்குளம் எனப் பல சிறுகதை,மொழிபெயர்ப்பு,சிறுவர் இலக்கியம், நாவல், கட்டுரைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.
ஆற்றுப்படை இலக்கியம் வளர்வதற்கு காரணம் அக்காலச் சூழலே காரணமாகும். ஏனெனில் சங்க காலம் மன்னரின் ஆட்சிகாலம் என்பதால் அவை சமூக உணர்வு நோக்கோடு செயல்பட்டது. மன்னனுக்காக சமுதாயமும்…
தோழி தலைவியைத் தலைவன் வரைந்துகொள்ளாது காலந்தாழ்த்தும் சூழலில் தலைவனிடம் தலைவியை வரைந்து கொள்ளுமாறு பல்வேறு காரணங்களைக் கூறியும் தலைவிக்கு ஏற்படும் இடையூறுகளைக் (வெறியாட்டுää இற்செறிப்பு, அலர், தலைவனையே…
முன்னுரை
உலகின் மனிதகுல வரலாறானது மகத்துவம் வாய்ந்தது. கூட்டு உழைப்பில் வாழத்தொடங்கிய துவக்ககால சமூகத்தினை இனக்குழு, நாடோடி, நிலவுடைமை ஆகிய முச்சமூகப் படிநிலைகளில் மானுடச்சமூகம் வளர்ச்சி பெற்றது. நிலவுடைமைச் சமூகத்தில்தான் குடும்ப அமைப்பு உருவானது. இக்குடும்பத்தில் சேகரிக்கப்பட்ட உணவுப் பொருட்களைப் பெண் பாதுகாப்பதோடு குடும்ப நிருவாகத்தையும் பெண் பார்ப்பதாக அமைந்தது. இதுவே தாய் வழிச்சமூகமாகும். நிலவுடைமைச் சமூகத்தின் தொடக்க காலத்தில் தான் தாய்வழிச் சமூகம் நிகழ்ந்தது. இச்சமூகம் வளர்ச்சி பெற்ற நிலையில் பெண்ணின் உழைப்பு சுரண்டப்பட்டுக் குடும்ப அரசியல், பொருளாதாரம், உடலமைப்பு போன்ற அடிப்படையில் பெண் அடிமைப்படுத்தப்படுகிறாள். இவ்வாறு பெண்ணை அடிமைப்படுத்தும் ஆணாதிக்கப் போக்கே தந்தைவழிச் சமூகமாகும். இந்நிலையில் உலகளவில் பெண்ணை அடிமைப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பெண்ணைப் பொருளாகவும் பார்க்கக்கூடிய சமூகமாக இம்மானுடச்சமூகம் திகழ்கிறது. நிலவுடைமைச் சமூகத்திலிருந்து பெண் அடிமைப்படுத்தப்பட்ட நிலையினையும், சிலப்பதிகாரத்தில் பெண் விற்கப்படுதலையும் பற்றி ஆராய்ந்தறிவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
1.0 முன்னுரை
தெலுங்கு இலக்கிய உலகில் குறிபிடத்தக்கவர் பிங்களிசூரனார். இவர் களாபூரணோதயம் எனும் கற்பனைக் காவியத்தைப் படைத்துள்ளார். இப்படைப்பில் பாத்திரங்களை அறிமுகப்படுத்துமிடத்தும், அப்பாத்திரங்களின் தன்மைகளைக் குறிக்குமிடத்தும், இயற்கைச் சார்ந்த காட்சிகளை வருணிக்குமிடத்தும் உவமைகளைப் பயன்படுத்தியுள்ளார். அவ்வுமைக் குறித்து விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.