!- பேராசிரியர் கா.சிவத்தம்பியின் மறைவு பற்றிய செய்தியினை எழுத்தாளர் மேமன்கவி மின்னஞ்சல்வாயிலாக அறியத்தந்திருந்தார். ஈமச்சடங்கு பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படுமெனவும் அறிவித்திருந்தார். ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகிற்கு மட்டுமன்றி, உலகத் தமிழ் இலக்கிய உலகிற்கே பேராசிரியரின் மறைவு பேரிழப்பே. ஈழத்துத் தமிழ் முற்போக்கிலக்கியத்திற்கு பேராசிரியர்கள் க.கைலாசபதி, கா.சிவத்தம்பி ஆகியோர் ஆற்றிய பணி அளப்பரியது. முதன் முறையாக இவரை நான் அறிந்து கொண்டது இவரது ‘ஈழத்துத் தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும், வளர்ச்சியும்’ என்னும் நூல் மூலமாகத்தான். நான் வவுனியா மகா வித்தியாலயத்தில் , 7ஆம் வகுப்பு மாணவனாக இருந்த சமயம், மட்டக்களப்பு, புனித மைக்கல் கல்லூரியில் நடைபெற்ற அகில இலங்கைத் தமிழ்த் தின விழாவில் தமிழ்க் கட்டுரைப் போட்டியில் அகில இலங்கையில் முதலாவதாக வந்ததற்காக கேடயமொன்றினையும், நூல்கள் பலவற்றையும் பரிசுப் பொருட்களாகத் தந்திருந்தார்கள். ‘மட்டக்களப்புத் தமிழகம்’, புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையின் நூலொன்று, வடமோடி தென்மோடி கூத்துகள் பற்றிய நூலொன்று, இன்னும் சில நூல்களுடன் பேராசிரியரின் மேற்படி ‘ஈழத்துத் தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும், வளர்ச்சியும்’ நூலும் அவற்றிலடங்கும். சிறிய நூலானாலும், ஆய்வு மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக விளங்கிய, விளங்கும் நூலது. அது முதல் ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் எழுதிய பலரும் மேற்படி நூலின் அடிப்படையிலேயே தமது ஆய்வுகளைத் தொடர்ந்திருப்பார்கள். இவரை ஒருமுறை சந்தித்துமுள்ளேன். அப்பொழுது மொறட்டுவைப் பல்கலைகழகத்தின் தமிழ்ச் சங்கத்தினரால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ‘நுட்பம்’ இதழின் ஆசிரியராகவிருந்த சமயம். அம்மலர் மிகவும் சிறப்பாக வெளிவருவதற்கு முனைவர் மு. நித்தியானந்தன் அவர்கள் மிகவும் உதவியாகவிருந்தார். அம்மலருக்கு ஆக்கங்கள் வேண்டி, அப்பொழுது யாழ்பல்கலைக் கழகத்தில் விஞ்ஞானபீட மாணவனாகப் பயின்றுகொண்டிருந்த நண்பர் ஆனந்தகுமாருடன் பேராசிரியர்களான க.கைலாசபதி, கா.சிவத்தம்பி ஆகியோரைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. இருவருமே இதழுக்குக் கட்டுரைகள் தருவதாக உறுதியளித்தார்கள். ஆயினும் அச்சமயம் பேராசிரியர் க.கைலாசபதியிடமிருந்து மட்டுமே உரிய நேரத்தில் கட்டுரை எமக்குக் கிடைத்தது. பேராசிரியர் கா.சிவத்தம்பியின் மறைவு பற்றிய செய்தி மேற்படி நினைவுகளை மீண்டும் ஒருமுறை எழுப்பின. அவரது மறைவையொட்டி, கானாபிரபாவின் வலைப்பதிவிலிருந்து பேராசிரியர் மெளனகுருவின் பேராசிரியர் கா.சிவத்தம்பி பற்றிய பகிர்வுகளை மீள்பிரசுரம் செய்கின்றோம். – வ.ந.கிரிதரன் , பதிவுகள் –
[அண்மையில் மறைந்த எழுத்தாளர் ர.சு.நல்லபெருமாள் பற்றித் ‘தினமணி’ பத்திரிகையில் வெளியான கட்டுரையிது. அவரது ஞாபகார்த்தமாக மீள்பிரசுரம் செய்யப்படுகிறது. – பதிவுகள் -] அண்ணாச்சி ர.சு.நல்லபெருமாள் இன்று உடலோடு இல்லை. இயற்கை எய்தினார் இறைவனடி சேர்ந்தார் என்று பலபடச் சொன்னாலும் காலமானார் என்று சொல்லுவதுதான் சாலப் பொருந்தும் அந்தப் பெருமகனாருக்கு. ஆமாம், கல்கியின் அன்புக்குப் பெரிதும் பாத்திரப்பட்டவர் அண்ணாச்சி. அவரது வாழ்க்கை வருங்கால இளையவர்க்குப் பெரும் பாடமாக அமையும். மிகுந்த அன்பு கொண்டவர் அண்ணாச்சி. அதிர்ந்து பேசாத பண்பாளர். எந்தவித தீயபழக்கங்களும் இல்லாத தூயவர். அவரது சித்தப்பா சங்கரபாண்டியம் பிள்ளை நாடாளுமன்ற உறுப்பினர் நேரு அவையில். இன்றோ அவரது உறவில் தம்பி ஏ.எல்.எஸ். திருநெல்வேலி மாநகரத் தலைவர். எனினும், அண்ணாச்சிக்கும் அரசியலுக்கும் தூரம் அதிகம்.
விசுவாமித்திரன் வரங்கள் பல பெற விரும்பி ஒரு வேள்வி செய்யத் தீர்மானித்தார். அதே நேரத்தில் அந்த வேள்வியைக் குழப்பிவிடப் பல அசுரர்கள் எத்தனிப்பர் என்ற ஐயப்பாடும் அவருக்கு ஏற்பட்டது. எனவே, கடுகதியாய் அயோத்தி சென்று, தசரத மன்னனைக் கண்டு, விடயத்தைக் கூறி, வேள்வியைக் காப்பதற்கு இராமனைத் தந்தருளுமாறு வேண்டி நின்றார். இராமனைப் பிரிய விரும்பாத தசரதன் துடிதுடித்து ஈற்றில் இராமர், இலக்குமணன் ஆகிய இருவரையும் விசுவாமித்திரருடன் செல்வதற்குச் சம்மதித்தான். விசுவாமித்திரன், இராமன், இலக்குமணன் ஆகிய மூவரும் அயோத்தியிலிருந்து காட்டுக்குச் சென்றனர். ஆங்கு முனிவர்களின் தவத்திற்கு இடையூறு புரிந்து வருபவளான தாடகை என்ற அரக்கியை இராமன் அம்பைத் தொடுத்துக் கொன்றான். அதன்பின் இராமரும், இலக்குமணனும் யாக சாலையைச் சுற்றி நின்று காவல் புரிய, விசுவாமித்திரன் அரிய வேள்வியை ஆறு நாட்கள் நடாத்தி முடித்து இராமனையும், இலக்குமணனையும் வாழ்த்தினார்.
தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர்களுள் குறிப்பிடத்தக்கவர் ந.பிச்சமூர்த்தி ஆவார். பாரதிக்குப் பிறகு மொழி ஆளுமை, கூறும் முறை ஆகியவற்றால் நவீனத் தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியவர் ந. பிச்சமூர்த்தி ஆவார். தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் முறையினைத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சாரும். இத்தகைய பெருமைக்குரிய ந.பிச்சமூர்த்தி தமிழ்நாட்டில் கலைகள் செழித்த மாவட்டமாகத் திகழும் தஞ்சாவூரில் உள்ள கும்பகோணம் நகரில் 1900-ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 15-ஆம் நாள் நடேச தீட்சிதர் – காமாட்சி அம்மாள் ஆகியோருக்கு நான்காவது மகனாகப் பிறந்தார்.
மீள்பிரசுரம்: தினக்குரல்.காம்
முற்போக்கு இடதுசாரி இயக்க செல்நெறிகளில் ஆழக்கால் பதித்த செ.கணேசலிங்கன் ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு அறுபது ஆண்டு காலத்துக்கு மேலாகப் பணியாற்றி வருபவர்களில் முதன்மை பெற்று நிற்கின்றார். எண்பது நூல்களுக்கு மேல் எழுதி வெளியிட்டுச் சாதனை படைத்தவர். சிறுகதை, நாவல், கட்டுரை, விமர்சனம், சிறுவர் இலக்கியம், சஞ்சிகை என்று பல்துறை இலக்கிய வடிவங்களுக்கூடாக தன் ஆளுமையை நிலை நிறுத்தியுள்ளார். இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் அதன் கொள்கை வழிநின்று செயற்பட்ட பேராசிரியர் க.கைலாசபதி, பேராசிரியர் கா.சிவத்தம்பி, கே.கணேஷ், எச்.எம்.பி.மொஹிடீன், சில்லையூர் செல்வராஜன், இ.முருகையன், நீர்வை பொன்னையன், அ.முகம்மது சமீம், இளங்கீரன், கே.டானியல்,பிரேம் ஜி, டொமினிக் ஜீவா, அ.ந.கந்தசாமி போன்றவர்களுடன் தோழமை உணர்வுடன் ஒன்றிணைந்து முற்போக்கு இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பை செ.கணேசலிங்கன் வழங்கினார். தாம் மேற்கொண்ட மார்க்சிய சித்தாந்தக் கொள்கைப் பற்றுறுதியுடன் இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கும் செ.கணேசலிங்கன் முற்போக்கு இலக்கியச் செம்மல்களில் ஒருவராக முகிழ்ந்து நிற்கின்றார்.
மாந்தர் செய்திப் பரிமாற்றத்திற்குத் தொடக்கத்தில் சைகைகளையும் ஒலிகளையும் பயன்படுத்தியிருக்கின்றனர். பின்னர், தொடர்ந்த வளர்ச்சி நிலையில், படிப்படியே சொற்களை உருவாக்கி, மொழியை அமைத்து, அம் மொழி வழி பேசத் தொடங்கினர். அதன்பின் வரிவடிவங்கள் அமைத்துக் கொண்டு, அதன் வழியாகத் தம் எண்ணங்களை எழுத்திலும் வெளிப்படுத்தத் தொடங்கினர். முதலில் உருவான எழுத்து வழியான செய்தித் தொடர்பு ஊடகமே மடல் அல்லது கடிதம். தொலைவில் இருப்பாருடன் தொடர்பு கொள்ளப் பல நூற்றாண்டுகளாகப் பயன்பட்டுவரும் இந்த ஊடகம், கணிப்பொறி கைப்பேசி வருகைக்குப்பின் பெரிதும் குறைந்து அறவே மறைந்துவிடும் நிலைக்குச் சென்றுகொண்டுள்ளதைக் காண்கிறோம்.
மடல் ஊடகத்தின் சிறப்பு
இயல்பாகவே நாம் பேசுகின்ற நிலையைவிட, எழுதுகின்ற நிலையில் பிழையின்றியும், அழகிய சொல்லிய அமைப்புக்களோடும் செப்பமாக இருக்கக் கவனம் கொள்கிறோம். கடிதம், இலக்கு நோக்கிச் செலுத்தும் அம்பைப் போல், ஒருவரையோ, ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தையோ விளித்து, உணர்வார்ந்த கருத்துகளைச் சொல்லும்போது எண்ணியவாறு பயன் விளைகின்றது என்பதனால் இந்தக் கடிதம் எழுதி கருத்துரைக்கும் உத்தி, இன்றளவும் பலராலும் கையாளப்படுகின்றது.
[ தமிழ் இலக்கிய வரலாற்றில் பிரமிளின் பங்களிப்பானது முக்கியமானது. கதை, கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, நாடகம், தத்துவமென இவரது ஆளுமை பரந்துபட்டது. இவை தவிர ஓவியம், சிற்பம் போன்ற துறைகளிலும் ஆர்வமும், திறமையும் கொண்டவராக விளங்கினார். தமிழ்ப் படைப்பாளிகளில் குறிப்பிட்ட வெகு சிலரே நவீன அறிவியற் துறையின் பலவேறு கோட்பாடுகளை, அவை கூறும் பொருளினைச் சரியாகப் புரிந்து கொள்ளும் வகையிலான தேடலை மேற்கொண்டவர்களெனலாம். அவர்களில் பிரமிள் முக்கியமானவர். விஞ்ஞானத்தை ஆதாரமாகக் கொண்டு இருப்பை அறிதற்கு முயன்றவர் பிரமிள். நவீன விஞ்ஞானம் கூறும் காலவெளி, ‘குவாண்டம்’ இயற்பியல், சார்பியற் தத்துவம் போன்றவற்றின் அடிப்படையில் இருப்பை அறிதற்கு முயன்றார். இதனைத்தான் ‘விஞ்ஞானம் – ஞானம் – விபூதிப்பட்டை’, ‘விஞ்ஞானப் பார்வையும் காலாதீதமும்’ போன்ற அவரது கட்டுரைகள் புலப்படுத்துகின்றன. பிரமிளின் பிறந்த தினம ஏப்ரல் 20. அவரது நினைவாகவும், தமிழ் இலக்கிய உலகில் அவரது ஆளுமையினை, பங்களிப்பினை நினைவு கூரும் முகமாகவும் அவரைப் பற்றிய மற்றும் அவரது ஆக்கங்கள் சில ‘பதிவுகளி’ல் மீள்பிரசுரம் செய்யப்படுகின்றன. – பதிவுகள்]
1. உங்களைப்பற்றிய ஒரு விரிவான அறிமுகம் வாசகர்களுக்காக:
15 சிறுகதைதொகுப்புகள் கொண்ட சுமார் 250 சிறுகதைகள் , 7 நாவல்கள் ( மற்றும் சிலர், சுடுமணல், சாயத்திரை, பிணங்களின் முகங்கள், சமையலறைக்கலயங்கள், தேநீர் இடைவேளை, ஓடும் நதி ) , இரண்டு குறுநாவல் தொகுப்புகள், கட்டுரைத்தொகுப்புகள் மூன்று, நாடகம், வெளிநாட்டுப்பயண அனுபவம், திரைப்படகட்டுரைகள் இரண்டு என்று 30 நூல்கள் வெளிவந்துள்ளன. மூன்று நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகி வந்துள்ளன. அ. மொழிபெயர்ப்புகள், விருதுகள், திரைத்துறை ஈடுபாடு, களப்பணிகள்…… திரைப்படக்கட்டுரைகள் சில மொழிபெயர்த்திருக்கிறேன். ஜே பி தாஸ் என்ற ஒரிய எழுத்தாளரின் சிறுகதைத்தொகுப்பு, திருப்பூர் பின்னலாடைதுறை சம்பந்தமான “ தி நிட்டெட் டூகதர் “ என்ற ஆராய்ச்சி நூல் ஆகியவைதான் மொழிபெயர்த்தவை. சிறந்த சிறுகதையாளருக்கான கதா விருது , சிறந்த நாவலுக்கான தமிழக அரசு பரிசு, ஏர் இண்டியா குமுதம் குறுநாவல் போட்டிப்பரிசாக அய்ரோப்பா, இங்கிலாநது நாடுகளின் பயணம், மற்றும் பல்வேறு இலக்கிய அமைப்புகளின் பரிசுகள் ஆகியவைதான். தனியாகக் களப்பணி என்று எதுவும் செய்ய நேரம் வாய்த்ததில்லை.நாவல்கள் களப்பணிகளைக் கோருபவை.ஆனால் வந்து சேரும் அனுபவங்களை எழுதுவதைத் தவிர வேறு நேரம் வாய்க்காத வேலை வாழ்க்கை சங்கக்டப்படுத்துகிறது.
அச்சுப் போன்ற தமிழை அடக்கமாக உச்சரித்து, நகைச்சுவை ததும்ப தமிழை ஈழமண்வாசனையுடன் சுவைக்கத்தந்தவர் புலவர் அமுது. லண்டனில் ‘மூதறிஞர்’பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டு சரித்திர வரலாறாகிய புலவர் அமுது, ஈழத்தின் பாரம்பரிய பண்டித மரபையும் பல்கலைக்கழகத்தின் நவீன இலக்கிய மரபையும் இணைத்த ஒரு பாலமாகத் திகழ்ந்தவர். இத்தகைய ஒரு பெரிய தமிழ் அறிஞரை நான் அவருடைய இளைய மகள் ஜெயமதியுடன் இளவாலைக் கன்னியர் மடத்தில் சிறுமியாகப் படித்த காலம் தொட்டே அறிந்திருந்தேன். எமது பாடசாலையின் அனைத்து முக்கியமான வைபவங்களிலும் வெள்ளை வேட்டி சால்வையோடு மெல்லிய உயர்ந்த இந்த அறிவுச்சுடரின் தலை பளபளக்க, கழுத்தை பூ மாலைகள் அலங்கரிக்க, முதல் வரிசையில் இருந்ததைப பார்த்திருக்கிறேன். லண்டனில் ஆண்டுதோறும் இடம்பெறும் இளவாலைக் கன்னியர் மடத்தின் பழைய மாணவிகளின் ஒன்றுகூடலின்போதுதான் இவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது.
தற்போதைய யாழ். நவீன சந்தைக் கட்டிடம் அப்போது கட்டப்படவில்லை. அந்த இடத்தில் தான் அன்றைய பஸ் நிலையம் அமைந்திருந்தது. அதற்கு மேற்குப்புறமாகக் கஸ்தூரியார் வீதியின் ஆரம்பம். அதனருகாமையில் மேற்குப்புறமாகத் தகரக் கூரைகளுடன் வரிசையாகப் பல கடைகள். அதிகமானவை குளிர்பானம், பிஸ்கட் முதலியன விற்கப்படும் கடைகள். அவற்றின் நடுவே ஒரு புத்தகசாலை. அந்தப் புத்தகசாலையின் உள்ளேயும், வாசலிலும் தினசரி பல இலக்கியவாதிகள், ஆசிரியர்கள், அரசியல் பிரமுகர்களைக் காணலாம். உள்ளே ஓர் உயர்ந்த கறுப்பு உருவம், வெள்ளை வேட்டி, அதற்கேற்ற வெள்ளை நாசனல் – சேட், சிவப்பு நிற ‘மவ்ளர்” தோளில் – சிலவேளை நாரியில் இறுக்கக்கட்டியபடி, சிலவேளை நெற்றியில் சந்தனப் பொட்டு, பளிச்சிடும் வெண்ணிறப் பற்கள் தெரிய சிரிக்கும் அழகு, அன்பாகப் பண்பாகப் பேச்சு. ஆமாம்.. அவர் தான் அந்தப் புத்தகசாலையின் உரிமையாளர் ஆர். ஆர். பூபாலசிங்கம்.