ஈழத்துச் சிறுகதைகள்: எனது பார்வை

முல்லை அமுதன்ஈழத்து சிறுகதைகளின் மீதான பார்வை தமிழக விமர்சகரிடையே பரவலாக தென்படவிலையோ என்பதான ஆதங்கம் எம்மிடையே இருப்பதை மறுக்க முடியாது. விமர்சகர்களின் வாசனைத் தளம் பலரை உள் வாங்காமல் இருந்திருக்கலாம். விமர்சகர்களும் தங்கள் பரப்பை விட்டு வெளி வரத் தயாராகவும் இல்லை. ஈழத்து விமர்சகர்கள் முன்வைத்த சிறுகதைகள் பல தளங்களிலும் பேசப்படாமல் போயும் இருக்கலாம். மேலும் அவ்வாறான சிறுகதைகளின் ஆசிரியர்களால் மீண்டும் எழுதாமல் போனதுவும் நமது துரஷ்டமுமாகும். குறிப்பாக திருக்கோவில்.கவியுவன், கோ.றஞ்சகுமார் போன்றோரிடமிருந்து சிறுகதைகள் பேசும் படியாக வரவில்லை. கோ.றஞ்சகுமாரின் ‘மோகவாசல்’ தொகுப்பு மீள் பிரசுரம் பெற்றிருந்தாலும் அதில் அவரின் தொடர்ச்சியான வளர்ச்சியைத் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

Continue Reading →

‘நந்தலாலா’ ஜோதிகுமாருடன் ஒரு நேர்காணல்!

'நந்தலாலா' ஆசிரியர்களிலொருவர்.இலங்கையிலிருந்து வெளிவரும் ‘நந்தலாலா’ , முன்பு வெளிவந்த ‘தீர்த்தக்கரை’ ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமாருடன் நடைபெற்ற நேர்காணல். இந்த நேர்காணல் 1997இல் ஜோதிகுமார் தொராண்டோ வந்திருந்த சமயம் எடுக்கப்பட்டது. பதிவு செய்ய வேண்டியதன் அவசியம் கருதிப் பதிவுகளுக்காக இங்கு பதிவு செய்கின்றோம். பேட்டி கண்டவர் வ.ந.கிரிதரன்.-

வ.ந.கிரிதரன்:ஜோதிகுமார்! நீங்கள் ஆரம்பத்தில் ‘தீர்த்தக்கரை’ சஞ்சிகையினை வெளியிட்டீர்கள். தற்போது ‘நந்தலாலா’வினை வெளியிடுகின்றீர்கள். ஏனிந்தப் பெயர் மாற்றம்?

Continue Reading →

எமிலி ஸோலா: வழுக்கி விழுந்த வடிவழகி ‘நானா’ மூலம் வையத்தைக் கலக்கிய நாவலாசிரியர்! பிரெஞ்சுப் பேனா மன்னர்களின் ஒப்பற்ற ஜோதி எமிலி ஸோலா!

பிரெஞ்சு எழுத்தாளர் எமிலி சோலாஅறிஞர் அ.ந.கந்தசாமி[14.10.1951ல் சுதந்திரன் வாரப்பதிப்பில் வெளியான அறிஞர் அ.ந.கந்தசாமியின் எமிலி ஸோலா பற்றிய கட்டுரையிது. சுதந்திரனில் ஸோலாவின் நாவலான ‘நானா’வை மொழிபெயர்த்து வெளியிடுவதற்கு முதல்வாரம் ‘நானா’வின் ஆசிரியரான எமிலி ஸோலாவைப் பற்றி அ.ந.க எழுதிய அறிமுகக் கட்டுரையாக இதனைக் கருதலாம்]. உலக எழுத்தாளர் வரிசையிலே முதலிடம் பெற்றவர்களில் ஒருவர் எமிலி ஸோலா. ஸோலாவின் வாழ்க்கை துன்பமும், துயரமும் நிறைந்தது. வாழ்க்கைப் பாதையிலே சென்று கொண்டிருக்கும்போது சற்றும் எதிர்பாராதவிதமாக இருளில் மறைந்திருந்து கள்வர்கள் தாக்குவதுண்டல்லவா? உலகத்திலுள்ள மாந்தரிலெ அனேகருக்கு ஏற்படும் துன்பங்கள் இந்த ரகத்தைச் சேர்ந்தவைதான். ஆனால் ஸோலாவோ துன்பத்தை எதிர்கொண்டழைத்த வினோதப் பிரகிருதி. ‘பாதையிலே கள்வன் இருப்பான்; அதுவும் கத்தியும், ஈட்டியும், துப்பாக்கியும் தாங்கிக் காத்திருப்பான். நானோ நிராயுதபாணியாக உள்ளத்தின் துணிவொன்றே கவசமாக, சத்தியத்தின் கேடயமே காவலாகச் செல்கிறேன். கள்வன் ஆயுதபாணியாகக் காத்திருப்பது மட்டுமல்ல, என்னைத் தாக்குவதும் நிச்சயம். இருந்துமென்ன? துன்பம் நிறைந்த அந்தப் பாதையிலே செல்ல வேண்டியது உண்மை அறிந்த எனது பொறுப்பு. உலகினரென்னைப் பார்த்து எள்ளி நகையாடுவர். கருங்கற்பாறையில் கவிஞன் தன் தலையை மோதினால் கவிஞனுக்காபத்தா கல்லுக்காபத்தா? என்று பேசுவர். இருந்துமென்ன? வானந்தூளாகினாலும், மண் கம்பமெய்தினாலும், என் மண்டை சுக்குநூறாகினாலும் இந்தப் பாதையால்தான் சென்று தீருவேன். ஒரு உத்தம கொள்கைக்காக என்னையே நான் பணையம் வைக்கிறேன்!’ என்ற ஒரே மனப்பான்மையோடு துன்பத்தை வரவேற்கச் சென்ற தியாக புருஷர் ஸோலா.

Continue Reading →

ஒரு நினைவோட்டம்: எல்லோருக்கும் இனிய மனிதன் சிவகுருநாதன்..

சிவகுருநாதன் - முன்னாள் தினகரன் ஆசிரியர்எங்கள் வீடு ஒரு செய்தி நிறுவனம் போன்று பல்லாண்டுகள் இயங்கியது. மூத்த சகோதரர் நாவேந்தன் முதல் கடைசிச் சகோதரர் வரை எங்கள் சகோதரர்கள் யாபேருமே சுமார் நாற்பது வருடங்கள் ஒருவரைத் தொடர்ந்து ஒருவரெனக் காலத்துக்காலம் பத்திரிகை, வானொலிச் செய்தியாளர்களாகச் செயற்பட்டோம். நாவேந்தன் பதினாறு வயதில் வீரகேசரியில் ஒப்புநோக்காளராகச் சேர்ந்து சில மாதங்கள் கடமையாற்றிவிட்டு ஊருக்குத்திரும்பிச் சில வருடங்கள் வீரகேசரியின் நிருபராகச் செயற்பட்டார். துரைசிங்கம் அண்ணர் தினகரன் நிருபராக விளங்கினார். பின்னர் அக்கா ஞானசக்தி, சிவானந்தன் அண்ணர், யான், தங்கை சரோஜினி, தம்பி தமிழ்மாறன் என எல்லோருமே காலத்துக்காலம் இலங்கையிலிருந்து வெளிவந்த சகல பத்திரிகைகளுக்கும் நிருபர்களாகக் கடமையாற்றினோம். வீரகேசரி, தினகரன் குறூப், தினபதி குறூப், டெயிலி மிரர் – ஈழமணி, ஈழநாடு, ஈழமுரசு, முரசொலி, செய்தி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் யாவற்றுக்கும் எமது வீட்டு மேசையிலிருந்து விதம்விதமாகச் செய்திகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் அனுப்பப்பட்டன.

Continue Reading →

மட்டுவில் ஞானகுமாரனின் ‘சிறகு முளைத்த தீயாக’ கவிதைத் தொகுதியின் மீதான பார்வை

மட்டுவில் ஞானகுமாரனின் 'சிறகு முளைத்த தீயாக'- அஷ்ரஃப் சிஹாப்தீபுதுக் கவிதையின் வரவானது பலநூறு கவிஞர்களை உருவாக்கி விட்டிருக்கிறது. அது எப்படியென்றால் இடறி விழுந்து நிமிர்ந்து பார்த்தால் அவன் அநேகமாக ஒரு கவிஞனாகவே இருப்பான். இந்தச் சூழலில் கணினியின் கைங்கரியத்தாலும் வசனத்தை உடைத்துப் போட்டால் கவிதை என்கிற வசதியினாலும் கவிதை என்கிற பெயரில் வெளிவரும் பல்லாயிரம் கவிதையின் வடிவ எழுத்துக்கள் தொகுக்கப்பட்டுப் பல நூறு நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறான நூல்களுக்குள்ளும் ஒரு சில நல்ல கவிதைகள் இடம்பெறவே செய்கின்றன. ஒரு சில வரிகள் மின்னிக் கொண்டுதானிருக்கின்றன.

Continue Reading →

சீன மரபு காட்டும் ஒருபால் உறவு: பாதி கடித்த ருசிமிகு பீச் பழம்

ஜெயந்தி சங்கர்ஸியா என்பவன் பழஞ்சீன மாமன்னரின் காதலன். ஒருநாள், அரசருடன் அரண்மனைத் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தவன், கனிந்து சாறு சொட்டும் பீச் பழத்தைக் கடித்து ருசித்து அதன் சுவையில் மயங்கி பாதி கடித்த அந்தக்கனியை அரசருக்குக் கொடுக்க அவர் அதை வாங்கிச் சுவைத்தபடியே, “ஆஹா ! பழத்தை நான் ருசிக்க வேண்டும் என்பதில் உனக்குத் தான் எத்தனை அக்கறை ! உனது பசியை விட என் மீதான காதலே உனக்குப் பெரிதாக இருக்கிறதென்றறிந்து யாம் மிக மகிழ்ந்தோம்’, என்று கசிந்துருகுவார்.

Continue Reading →

சர்வதேச மகளிர் தினம் மார்ச் – 8: பத்திரிகைத்துறையில் ஓர் சாதனை மாது…

எழுத்தாளர் யாழ்நங்கை (அன்னலட்சுமி ராஜதுரை)சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பத்து வருடங்களுக்கு முன்பு (2000) ‘ஞாயிறு தினக்குரல்” பத்திரிகையில் தோழர் ‘பாரதிநேசன்” வீ. சின்னத்தம்பி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். ‘கம்யூனிஸ இயக்க வளர்ச்சியில் தமிழ்ப் பெண்கள்” என்பது அக்கட்டுரையாகும். அடுத்த ஆண்டு அவர் காலமாகிவிட்டார். அவரது நினைவாக அக்கட்டுரையைச் சிறு நூலாக யான் வெளியிட்டேன். அக்கட்டுரையில் வேதவல்லி கந்தையா, தங்கரத்தினம் கந்தையா, பரமேஸ்வரி சண்முகதாசன், வாலாம்பிகை கார்த்திகேசன், பிலோமினம்மா டானியல் ஆகிய மாதரசிகளின் பணிகள் குறித்துச் சுருக்கமாக விளக்கியிருந்தார். இம்மாதரசிகளையும் அவர்தம் பணிகளையும் யான் நன்கறிவேன். அவர்களது பணிகள் மெச்சத்தக்கவை தான்.பாடசாலைக் காலத்திலிருந்தே மூத்த சகோதரர்களைப் பின்பற்றி கலை இலக்கிய, அரசியல்துறைகளில் யான் ஈர்ப்புக்குள்ளானேன். அக்காலத்திலேயே யானும் மேடையேறத் தொடங்கினேன். அறுபதுகளின் முற்பகுதியிலிருந்தே பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், அரசியல் பிரமுகர்களோடு பழகும் வாய்ப்புகள் ஏற்பட்டன. அன்று சிறந்த பெண் பேச்சாளர்களாக வடபகுதியில் பண்டிதை சத்தியதேவி துரைசிங்கம், பண்டிதை பொன் பாக்கியம், பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி, புஸ்பா செல்வநாயகம், வேதவல்லி கந்தையா, உருத்திரா கந்தசாமி ஆகியோர் விளங்கினர். இவர்களது பேச்சுக்களைக் கேட்கவும், இவர்கள் சிலரோடு மேடையேறும் சந்தர்ப்பமும் அன்றே எனக்கு வாய்த்தது.

Continue Reading →

அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!

[இக்கட்டுரை சந்தியா பதிப்பகத்தினரால் எழுத்தாளரும், விமர்சகருமான திரு. வெங்கட் சாமிநாதனின் ஐம்பதாவது ஆண்டு இலக்கியப்பணியினையொட்டி அண்மையில் தமிழகத்தில் வெளியிடப்பட்ட ‘வாதங்களும், விவாதங்களும்’ நூலுக்காக எழுதப்பட்டது ]

 வெங்கட் சாமிநாதன்“‘நான் எழுத்தாளனோ, விமர்சகனோ இல்லை’ என்று ஆரம்பத்திலிருந்தே பிரகடனப்படுத்தி வருகின்றேன்” (விவாதங்கள் சர்ச்சைகள்,  பக்கம்263) என்று தன்னைப்பற்றி வெங்கட் சாமிநாதன் கூறிக்கொண்டாலும் இலக்கியம், இசை, ஓவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற கலையின் பல்வேறு துறைகளிலும் ஆழமான, காத்திரமான பங்களிப்பினைச் செய்த கலை விமர்சகர் இவரென்பது மறுக்கமுடியாதவுண்மை மட்டுமல்ல நன்றியுடன் விதந்துரைக்கப்பட வேண்டியதுமாகும். 1960இல் ‘எழுத்து’ இதழில் வெளியான ‘பாலையும், வாழையும்’ கட்டுரையின் மூலம் எழுத்துலகிற்குக் காலடியெடுத்து வைத்த வெ.சா.வின் க்லைத்துறைக்கான பங்களிப்பு ஐம்பதாண்டுகளை அடைந்திருக்கிறது. இந்த ஐம்பதாண்டுக் காலகட்டத்தில் ‘சாமிநாதனது பேனா வரிகள் புலிக்குத் தன் காடு பிற காடு வித்தியாசம் கிடையாது என்றபடி சகலதையும் பதம் பார்க்கும்’ என்னும் சி.சு.செல்லப்பாவின் கூற்றின்படி அனைவரையும் பதம் பார்த்துத்தான் வந்திருக்கிறது. ஒரு சில வேளைகளில் உக்கிரமாகவும் இருந்திருக்கிறது.  

Continue Reading →

டானியல் நினைவலைகள்…! வி. ரி. இளங்கோவன்

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் கடந்த 14-ம் திகதி வெள்ளிக்கிழமை (14 – 01 – 2011) மாலை இடம்பெற்ற ‘இலக்கியக் களம்” நிகழ்ச்சியில் ‘டானியல் நினைவலைகள்;” என்ற தலைப்பில்  எழுத்தாளர் வி. ரி. இளங்கோவன் (பிரான்ஸ்) நிகழ்த்திய உரையின் சுருக்கம். ‘ஞானம்” சஞ்சிகை ஆசிரியர் டாக்டர் தி. ஞானசேகரன் இந்நிகழ்வுக்குத் தலைமை வகித்தார். டானியல் யார்? என்ன அவர் சாதனை? அவரை  இன்றும் நினைத்துக்கொள்ள, அவர் என்ன செய்துவிட்டார்? டானியல் ஓர் அற்புதமான மனிதர் – கலைஞர் – மனிதாபிமானி – எல்லாவற்றுக்கும்மேலாய் தமிழில் ஓர் அருமையான படைப்பாளி – நாவலாசிரியர் – சமூக விடுதலைப் போராளி – தடம்புரளாத அரசியல்வாதி.

Continue Reading →