இணையத்தின் மூலம் இலக்கணம் கற்றல்

அண்மையில் பாரதிதாசன்பல்கலைக்கழக உறுப்பு கலைமற்றும் அறிவியல் கல்லூரியில் (தமிழ்நாடு) நடைபெற்ற “தமிழ்க்கணினி இணையப் பயன்பாடுகள்” பன்னாட்டுக்கருத்தரங்கிற்குச் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடர்ச்சியாகப் பிரசுரிக்கப்படும். இவற்றைத் தொடர்ச்சியாகப் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பி வைப்பதாக முனைவர் துரை மணிகண்டன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். முதல் கட்டுரையாக திரு.சிவாப்பிள்ளை (கோல்ட்ஸ்மித் பல்கலைக்கழகம் லண்டன்) அவர்களின் கட்டுரை வெளியாகின்றது. - ஆசிரியர், பதிவுகள் -– அண்மையில் பாரதிதாசன்பல்கலைக்கழக உறுப்பு கலைமற்றும் அறிவியல் கல்லூரியில் (தமிழ்நாடு) நடைபெற்ற “தமிழ்க்கணினி இணையப் பயன்பாடுகள்” பன்னாட்டுக்கருத்தரங்கிற்குச் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடர்ச்சியாகப் பிரசுரிக்கப்படும். இவற்றைத் தொடர்ச்சியாகப் ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு அனுப்பி வைப்பதாக முனைவர் துரை மணிகண்டன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.  – ஆசிரியர், பதிவுகள் –

முன்னுரை :
  தற்போது கணினி அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. கல்விச் செயல்முறையிலும் கணினி அதிகம் அளவு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ”கற்றது கைமண் அளவு கல்லாதது உலக அளவு” என்பதற்கு ஏற்ப கணினியின் மூலம் இலக்கணம் எப்படி பயனுள்ள வகையில் கற்கமுடியும் என்பதையும் விபரங்களை பாதுகாக்கவும் பகுத்தாய்வு செய்யவும் பயன்படுத்தப்படுகின்றது என்பதை இக்கட்டுகரையில் காண்போம்.

Continue Reading →

கணித்தமிழ்: இணையம் வழி தமிழ்மொழியைக் கற்றல் – கற்பித்தல்

அண்மையில் பாரதிதாசன்பல்கலைக்கழக உறுப்பு கலைமற்றும் அறிவியல் கல்லூரியில் (தமிழ்நாடு) நடைபெற்ற “தமிழ்க்கணினி இணையப் பயன்பாடுகள்” பன்னாட்டுக்கருத்தரங்கிற்குச் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடர்ச்சியாகப் பிரசுரிக்கப்படும். இவற்றைத் தொடர்ச்சியாகப் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பி வைப்பதாக முனைவர் துரை மணிகண்டன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். முதல் கட்டுரையாக திரு.சிவாப்பிள்ளை (கோல்ட்ஸ்மித் பல்கலைக்கழகம் லண்டன்) அவர்களின் கட்டுரை வெளியாகின்றது. - ஆசிரியர், பதிவுகள் -– அண்மையில் பாரதிதாசன்பல்கலைக்கழக உறுப்பு கலைமற்றும் அறிவியல் கல்லூரியில் (தமிழ்நாடு) நடைபெற்ற “தமிழ்க்கணினி இணையப் பயன்பாடுகள்” பன்னாட்டுக்கருத்தரங்கிற்குச் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடர்ச்சியாகப் பிரசுரிக்கப்படும். இவற்றைத் தொடர்ச்சியாகப் ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு அனுப்பி வைப்பதாக முனைவர் துரை மணிகண்டன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.  – ஆசிரியர், பதிவுகள் –

ஆய்வுச்சுருக்கம்
தமிழ்மொழியைக் கற்றல் கற்பித்தலுக்கு உதவும் இணைய ஏந்துகள் (வசதிகள்) தற்போது பல்கிப் பெருகி வருகின்றன. மழலையர்; கல்வி தொடங்கி முனைவர் படிப்பு வரையில் தமிழில் படிப்பதற்குரிய வாய்ப்புகளை இன்றைய இணையம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. கேட்டல், பேச்சு, வாசிப்பு, எழுத்து முதலான அடிப்படைப் படிப்பு முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரையில் இணையத்தில் படிக்கக்கூடிய நிலைமை உருவாகிக்கொண்டு வருகின்றது. தமிழ்மொழியைக் கற்றல் கற்பித்தலுக்கு இணையத்தை எவ்வாறு பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதையும், இணையம் தொடா;பான ஏந்துகளைத் தமிழ்மொழியைக் கற்றல் கற்பித்தலுக்கு எவ்வாறெல்லாம் பயன்படுத்த முடியும் என்பதையும், இலக்கணத்தையும் இலக்கியத்தையும் புதிய ஊடகத்தின் வழியாக புதிய அணுகுமுறைகளோடு தமிழ்மொழியைக கற்பது கற்பிப்பதுப் பற்றி இக்கட்டுரை எடுத்துக் கூறுகின்றது.

Continue Reading →

கணித்தமிழ்: சமூக வலைதளங்கள் – நன்மை தீமைகள்.

கணித்தமிழ்: சமூக வலைதளங்கள் – நன்மை தீமைகள்.வளர்ந்துவரும் அறிவியல் முன்னேற்றத்தில் கணினிப் பயன்பாடுகள் மிக இன்றியமையாத பங்கு வகிக்கின்றது. கணினிப் பயன்பாடுகள் இல்லாத துறைகளே இல்லை எனலாம். இன்று கிராமங்களில் கூட இணையப்பயன்பாடு என்பது மிக சாதாரணமாக உள்ளது. எனவே இணையக் கலாச்சாரம் அதீத வளர்ச்சியடைந்து வருகிறது. இன்று இணையம் ஒரு ரூபாய் நாணயத்தைப்போல நன்மை, தீமைகள் என இரண்டு பக்கங்களைக் கொண்டுள்ளது.

வலைதளங்கள்
உலகளாவிய அளவில் பல்வேறு வலைதளங்கள்  உலகத்தகவல் அனைத்தையும் நம் கண்முன்னே நம் இல்லத்திலேயே அள்ளித்தருகிறது. இதில் பொழுதுபோக்கிறகாக அமைக்கப்பட்ட பல சமூக வலைதளங்களும் அடங்கும்.

சமூக வலைதளங்கள்
இணையம் வழியாக சமூக வலைதளங்கள் அனைத்து வகை மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்டன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் வகையில் சமூக வலைதளங்களின் பங்கு அமைகிறது. இத்தகைய சமூக வலைதளங்களினால் பல நன்மைகள் இருந்தாலும் தற்சமயம் பல குற்றங்களும் பெருகி வருகின்றன என்பதை மறுக்க இயலாது. பல்வேறு இணையங்களும், சமூக வலைதளங்களும் மக்களின் முன்னேற்றத்திற்காக வடிவமைப்பட்டவையாக அமைந்துள்ளன.

Continue Reading →

கணித்தமிழ்: காலத்தால் அழியாத பழமொழிகளைத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் அடுத்த தலைமுறையினருக்காகவும் மின் கற்றலுக்காக கணினி மயப்படுத்துதல்

முன்னுரை

அண்மையில் பாரதிதாசன்பல்கலைக்கழக உறுப்பு கலைமற்றும் அறிவியல் கல்லூரியில் (தமிழ்நாடு) நடைபெற்ற “தமிழ்க்கணினி இணையப் பயன்பாடுகள்” பன்னாட்டுக்கருத்தரங்கிற்குச் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடர்ச்சியாகப் பிரசுரிக்கப்படும். இவற்றைத் தொடர்ச்சியாகப் ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு அனுப்பி வைப்பதாக முனைவர் துரை மணிகண்டன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.  – ஆசிரியர், பதிவுகள் –

M.சோமதாசன்காலத்தால் சாலப்பழைமையுடைய நம் செம்மொழியாம் அருமைத் தமிழ்மொழி பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வளர்ந்து சீரிளமைத் திறத்தோடு விளங்குகின்றது. அறிவியல் நுட்பங்களைத் தன்னகத்தே உள்வாங்கி மாறிவரும் உலக சூழலுக்கேற்ப தகவல் தொடர்பு மின்னணுச் சாதனங்கள் மற்றும் கணினி இணைய வலைத்தளங்கள் ஊடாக தேவைக்கேற்ப பரிணாம வளர்ச்சி பெறும் தன்மையானது ஒரு மொழியின் நிலைத்த தன்மைக்கு இன்றியமையாததாகும். அந்த வகையில் இந்த பாரினுள் கிட்டத்தட்ட 80 மில்லியன் மக்களால் பேசப்பட்டு வரும் தலைசிறந்த கலை இலக்கிய அறிவுப் பெட்டகமாகத் திகழும் எமது தமிழ் மொழியை இன்றைய கணினி யுகத்திலே கணினிச் சுதேசிகள் Digital Natives என்றழைக்கப்படும் எமது எதிர்காலத் தலைமுறையினருக்கு இட்டுச் செல்வது நாம் நமது மொழிக்குச் செய்யும் பாரிய தொண்டாகும். இதை மையப்படுத்தி இந்த ஆய்வுக் கட்டுரையிலே தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், சீரிய வாழக்கைக்கு அடித்தளமிடும் வாழ்க்கை நெறிகளுக்கும் பழமொழிகள் வழங்கும் பங்களிப்பு யாது என்பது ஆராயப்படுவதோடு மட்டுமல்லாமல் அவற்றை மின் கற்றலுக்காக E-Learning,  கணினி மயப்படுத்தி அடுத்த சந்ததியினர் பயன் பெறவும், ஒரு கணினி மென்பொருள் உருவாக்கப்படுகிறது. இந்த உருவாக்கமானது கணினி வழி ஊடாக தமிழ் மொழிக் கற்றலில் ஒர் அங்கமாகத் திகழ்வது மட்டுமல்லாமல் பல ஆண்டுகளுக்கு எமது மொழியின் தங்கு தடையற்ற பாவனைக்கும் ஒரு பாலமாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.

Continue Reading →

கணித்தமிழ்: தமிழ் மொழிப் பாடத்திட்ட கட்டமைப்பு- இங்கிலாந்து-UK

அண்மையில் பாரதிதாசன்பல்கலைக்கழக உறுப்பு கலைமற்றும் அறிவியல் கல்லூரியில் (தமிழ்நாடு) நடைபெற்ற “தமிழ்க்கணினி இணையப் பயன்பாடுகள்” பன்னாட்டுக்கருத்தரங்கிற்குச் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடர்ச்சியாகப் பிரசுரிக்கப்படும். இவற்றைத் தொடர்ச்சியாகப் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பி வைப்பதாக முனைவர் துரை மணிகண்டன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். முதல் கட்டுரையாக திரு.சிவாப்பிள்ளை (கோல்ட்ஸ்மித் பல்கலைக்கழகம் லண்டன்) அவர்களின் கட்டுரை வெளியாகின்றது. - ஆசிரியர், பதிவுகள் -அண்மையில் பாரதிதாசன்பல்கலைக்கழக உறுப்பு கலைமற்றும் அறிவியல் கல்லூரியில் (தமிழ்நாடு) நடைபெற்ற “தமிழ்க்கணினி இணையப் பயன்பாடுகள்” பன்னாட்டுக்கருத்தரங்கிற்குச் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடர்ச்சியாகப் பிரசுரிக்கப்படும். இவற்றைத் தொடர்ச்சியாகப் ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு அனுப்பி வைப்பதாக முனைவர் துரை மணிகண்டன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். முதல் கட்டுரையாக திரு.சிவாப்பிள்ளை (கோல்ட்ஸ்மித் பல்கலைக்கழகம் லண்டன்) அவர்களின் கட்டுரை வெளியாகின்றது. – ஆசிரியர், பதிவுகள் –

 மொழிகலாச்சார வேறுபாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதை  பிரிட்டிஷ் மொழியியல் அமைப்பு அடையாளம் கண்டு  இவற்றை வருங்காலத்தில் மக்களுக்கு அடையாளம் காணடுபிக்க வேண்டும் என்ற தேவையை உணர்ந்து கொண்டனர். குழந்தைகளின் இரு மொழிஅறிவை கலாசார  அறிவு சமூக வளர்ச்சி ஆகியனவற்றின் முக்கியத்துவத்தை கடந்த காலங்களில் தெளிவாக அறிந்து கொள்ளவில்லை. அதிர்ஷ்டவசமாக சமீப காலத்தில் UK மற்றும் பல நாடுகளில் மொழியியல் ஆய்வாளர்கள்  இவற்றின் முக்கியத்துவத்தைக் கண்டறிந்து  கல்வி கற்பிப்போருக்கும் பெற்றொருக்கும்  இருமொழி ஆற்றல் பற்றிய முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்கள்.  இது பற்றிய பல ஆய்வுக்கட்டுரைகள் பல நாடுகளில் பலர் எழுதி இருக்கிறார்கள். இரு மொழிஅறிந்த குழந்தைகளின் பள்ளிக்கூடப் பெறுபேறுகள் ஒரு மொழிதெரிந்த குழந்தைகளை விட மேலாக இருப்பதையும் அவர்களின் புரிந்துணர்வை மனப்பான்மையையும் அவர்கள் சமூகத்திற்கு  நல உதவிகனைளச் செய்வதில் ஆற்றல் படைத்தவர்கள் என்பதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தார்கள்.

Continue Reading →

கணித்தமிழ்: இணையத்தில் இலக்கியம் – சில குறிப்புகள்

-March 19, 2014,  கொழும்பு தழிழ் சங்கத்தில் நடைபெற்ற ‘துரைவி’ அவர்களின் நினைவு தினத்தில் நினைவுப்புபேருரைக்காக வாசிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரை.  ஊடகக்கல்லூரியில் (இலங்கை) சிரேஷ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றும் தேவகெளரி மகாலிங்கசிவம் அவர்களின் முகநூற் பதிவிலிருந்து மீள்பிரசுரமாகின்றது. நன்றி. –

கணித்தமிழ்: இணையத்தில் இலக்கியம் - சில குறிப்புகள்இணையத்தில் இலக்கியம் என்ற இந்த பொது தலைப்பில் நவீன ஊடக சூழலில் இலக்கியம் பற்றிய என் அவதானிப்புகளை முன்வைக்கிறேன்..குறிப்பாக இங்கு நவீன ஊடகங்கள் சார்ந்து நவீன இலக்கியங்களின் போக்கை கணிப்பிட முயன்றுள்ளேன். நவீன இலக்கியங்கள் என்று சொல்லப்படுகின்ற கதை,கவிதை,நாவல் வகையறாகளின் வெளிப்பாடும் இருப்பும் இந்த தொழில் நுட்ப கலாசாரத்தில் எத்தகையதாக இருக்கிறது?நவீன ஊடகம் இவற்றில் எத்தகைய தாக்கத்தை செலுத்துகிறது?என்பதற்கான விடைகளை தேடிய ஒரு ஆய்வாகவே இது அமையும். குறிப்பாக 1970 களில் அடித்தளமிடப்பட்ட இணையத்தில் ஆரம்பித்து கடந்த ஆறு ஆண்டுகளாக விஸ்வருபம் எடுத்திருக்கும் சமூக வலைத்தளங்கள் (முகப்புத்தகம் 10ஆம்வருடம்) வரை இலக்கியம் பரிணமித்திருக்கிறது.இதனூடாக ஒரு இலக்கியகாரருக்கு அவரது ஒட்டுமொத்த எழுத்து சூழல் மாறியிருக்கிறது. ஒரு கதையை எழுதி இரண்டு பேரிடம் கொடுத்து சரிபார்த்து அல்லது வெகுஜன ஊடகத்தில் பிரசுரத்திற்கு அனுப்பி அது வெளிவந்து ,சிலவேளை வெளிவராமலும் இருக்கும் நிலையில் பின்னர் அதை நூலாக்கி அறிமுகப்படுத்தி ,வாசிப்புக்கு விட்டு ,விமர்சனத்துக்குள்ளாக்கி ஒரு மீள்ளுட்டத்தைப் பெறும் பொறிமுறை உண்மையில் பிரசவம்தான்.காலமும் பொறுமையும் அந்த இலக்கிய காரரின் சிந்தனைக்கே சிறைவைத்துவிடுகிறது.அடுத்த படைப்பிற்கு வெகுகாலம் எடுக்கிறது.

Continue Reading →

தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பத்து வயது; தமிழ் விக்கியூடகங்களில் பெண்களின் பங்களிப்பு

பார்வதிஸ்ரீ, தமிழ்நாட்டின் சேலத்தைச் சேர்ந்தவர். தமிழ் விக்கிபீடியாவுக்கு வயது 10. இச்சாதனையை நிஜமாக்கிய அனைவரையும் பதிவுகள் வாழ்த்துகிறது. இச்சாதனையினையொட்டி இம்முறை 'பதிவுகள்' தமிழ் விக்கிபீடியாவினை நினைவு கூரும் முகமாக சிறப்புக் கட்டுரைகள் சில்வற்றை வெளியிடுகிறது. ஆக்கங்களைச் சேகரித்து பதிவுகளுக்கு அனுப்பியவர்: சந்திவதனா செல்வகுமாரன். அதற்காக அவருக்குப் பதிவுகள் தனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறது. விக்கிபீடியா பத்தாவது வயதினை அடைந்திருக்கும் இவ்வேளை, அதன் சாதனைகள் மேன்மேலும் பரந்து விரிந்து செழிக்க வேண்டுமென்று பதிவுகள் வாழ்த்துகிறது. - பதிவுகள் -எல்லா மொழி விக்கிப்பீடியாக்களையும் நாளாந்தம் 500 மில்லியன் பயனர்கள் பயன்படுதுகிறார்கள். அண்ணளவாக 200 000 பயனர்கள் தொகுக்கிறார்கள். ஆனால் விக்கிப்பீடியர்களில் 13% ஆனவர்களே பெண்கள்.[1] இதில் தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ச்சியாகத் தொகுப்பவர்களில் 1% பயனர்கள் மட்டுமே பெண்கள். இந்த நிலை ஏன் பாதகமானது, குறைவான பங்களிப்புக்கான காரணங்கள் என்ன, பெண்கள் பங்களிப்பை எப்படி ஊக்குவிக்கலாம் ஆகிய விடயங்களைச் சுருக்கமாக விபரிப்பதே இக் கட்டுரையின் நோக்கம்.

பங்கேற்பதன் முக்கியத்துவம்
விக்கியூடகம் இன்று பரந்து பயன்படுத்தப்படும் ஒரு தகவல் ஊடகம். இதில் உருவாக்கப்படும் உள்ளடக்கத்தில் பெண்களின் பங்களிப்பு இருப்பது முக்கியம் ஆகும். எழுதப்படும் தலைப்புகள், எழுதப்படும் முறை, விக்கி செயற்படும் நோக்கு ஆகியவற்றில் பெண்கள் தங்களின் உள்ளீடுகளை வழங்க முடியும். இல்லாவிடின் பெண்கள் தொடர்பான தலைப்புக்கள் போதிய அக்கறை பெறாமல் போகும் வாய்ப்பு உள்ளது.[2]

பல மொழிகள், பண்பாடுகள், துறைகள், ஈடுபாடுகளைக் கொண்டவர்கள், கட்டற்ற அறிவு என்ற ஒரே இலக்கோடு இணையும் களம் விக்கியூடகம். அதில் பெண்கள், பெண்களின் குரல்கள், பங்களிப்புக்கள் சிறப்பாக இருக்க வேண்டும். விக்கி அனைவரையும் உள்வாங்கும் பங்கு கொண்டது, எனவே அதில் இணைவது, செயற்படுவது இலகுவானது.[3] பெண்கள் உரிமைகள், பெண்கள் இயக்கத்தின் செயற்பாடுகளின் ஒரு நீட்சியாக இது அமையும்.[4]

Continue Reading →

தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பத்து வயது!

பொதுத்தகவல்
தமிழ் விக்கிபீடியாவுக்கு வயது 10. இச்சாதனையை நிஜமாக்கிய அனைவரையும் பதிவுகள் வாழ்த்துகிறது. இச்சாதனையினையொட்டி இம்முறை 'பதிவுகள்' தமிழ் விக்கிபீடியாவினை நினைவு கூரும் முகமாக சிறப்புக் கட்டுரைகள் சில்வற்றை வெளியிடுகிறது. ஆக்கங்களைச் சேகரித்து பதிவுகளுக்கு அனுப்பியவர்: சந்திவதனா செல்வகுமாரன். அதற்காக அவருக்குப் பதிவுகள் தனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறது. விக்கிபீடியா பத்தாவது வயதினை அடைந்திருக்கும் இவ்வேளை, அதன் சாதனைகள் மேன்மேலும் பரந்து விரிந்து செழிக்க வேண்டுமென்று பதிவுகள் வாழ்த்துகிறது. - பதிவுகள் -இணையமே தற்காலத்து மிகப்பெரிய தகவல் ஊடகமாக இருக்கின்றது. இவ்வாறான இணையத்தில் மிகவும் பயனுள்ள, புகழ்பெற்ற ஊடகமாக விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் இருக்கின்றது. 2001ஆம் ஆண்டு, இதனை ஜிம்மி வேல்ஸ் என்பவரும் லாரி சாங்கர் என்பவரும் இணைந்து ஆரம்பித்தனர். விக்கி நுட்பத்தைப் பயன்படுத்தி ஆங்கிலத்தில் தொடங்கப்பட்ட இந்த விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம், உலகின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து தன்னார்வத்துடன் இணைந்து கொண்ட பல பயனர்களின் பங்களிப்பால் மிக விரைவாக வளர்ச்சியடைந்து வந்தது. இந்த 2013ஆம் ஆண்டில், ஆங்கில விக்கிப்பீடியா  4.3 மில்லியன் கட்டுரைகளைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கின்றது. அதிவேகமாக வளர்ச்சியடையத் தொடங்கிய விக்கிப்பீடியாவில், தமிழ் மொழி உட்பட பல்வேறு மொழிகளும் இணைந்து கொண்டன. இன்றைய காலகட்டத்தில், 286 மொழிகளில் விக்கிப்பீடியா இயங்கத் தொடங்கியுள்ளது. தமிழ் மொழியிலான தகவல்களுக்கும் இணையம் மிக அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதுடன், தமிழ் விக்கிப்பீடியாவும் மிக முக்கியமான ஒரு ஊடகமாக இருக்கின்றது.  விக்கிப்பீடியாவின் உருவாக்கத்தின் பின்னர், விக்கிமீடியாவின் விக்கி நூல்கள், விக்கிச் செய்திகள், விக்சனரி, விக்கிப் பொதுவகம், விக்கி மேற்கோள்கள், விக்கித் தரவு போன்ற பல செயற்திட்டங்கள் உருவாக்கப்பட்டு, வளர்ச்சி பெற்றன. தமிழ் மொழியிலும் இதே செயற்திட்டங்கள் தொடங்கப்பட்டு, பல தன்னார்வலர்களின் பங்களிப்பால் வளர்ச்சியடைந்து வருகின்றன.

Continue Reading →

தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பத்து வயது; தமிழ் விக்கியூடகங்களில் மாணவர்கள்

- நித்தியானந்தன் ஆதவன் -தமிழ் விக்கிபீடியாவுக்கு வயது 10. இச்சாதனையை நிஜமாக்கிய அனைவரையும் பதிவுகள் வாழ்த்துகிறது. இச்சாதனையினையொட்டி இம்முறை 'பதிவுகள்' தமிழ் விக்கிபீடியாவினை நினைவு கூரும் முகமாக சிறப்புக் கட்டுரைகள் சில்வற்றை வெளியிடுகிறது. ஆக்கங்களைச் சேகரித்து பதிவுகளுக்கு அனுப்பியவர்: சந்திவதனா செல்வகுமாரன். அதற்காக அவருக்குப் பதிவுகள் தனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறது. விக்கிபீடியா பத்தாவது வயதினை அடைந்திருக்கும் இவ்வேளை, அதன் சாதனைகள் மேன்மேலும் பரந்து விரிந்து செழிக்க வேண்டுமென்று பதிவுகள் வாழ்த்துகிறது. - பதிவுகள் -– தமிழ் விக்கியூடகங்களில் மாணவர்கள்” என்ற கட்டுரையை விக்கிப்பீடியர்கள் உதவியுடன் 13 வயது 8 ஆம் வகுப்பு மாணவர் நித்தியானந்தன் ஆதவன் எழுதியுள்ளார்.  தமிழ் விக்கிப்பீடியாவை மாணவர்கள் எப்படிப் பயன்படுத்துகிறார்கள், பங்களிப்புக்கள், பங்களிக்க இருக்கும் தடைகள் உட்பட்ட விடயங்களைக் இக் கட்டுரை சுருக்கமாக மாணவர் பார்வையில் இருந்து ஆய்கிறது.  –
 
 
தமிழ் விக்கியூடகங்கள் என்பது யாவராலும் தொகுக்கப்படக் கூடிய இணைய ஊடகங்கள் ஆகும். இதில் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பொறியியலாளர்கள் போன்ற பலரும் பங்களிக்கின்றனர். இப்படி பல்வகைப்பட்டோர் பங்களிக்கும் விக்கியூடகங்கள் தன்னகத்தே கொண்டுள்ளவை ஏராளம். இதிலும் குறிப்பிட வேண்டியது, விக்கியூடகங்களின் உள்ளடக்கம் அனைவருக்கும் பயன் தரும் வகையில் அமைந்துள்ளது தான். அந்த வகையில் பல்வகைப்பட்டோர் பங்களிக்கும் விக்கியூடகங்களில் மாணவர்களின் செயற்பாடு பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Continue Reading →