நான் எழுதிய கவிதைகளில் பல இப்பிரபஞ்சத்தில் நமது , மானுட, இருப்புப் பற்றிய தேடல்களாகவே இருப்பதை எனது கவிதைகளை வாசிப்பவர்கள் அறிந்து கொள்வர். மாணவனாக இருந்த காலத்திலிருந்து இன்று வரையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட அத்தகைய கவிதைகளின் தொகுப்பாக இதனைக் கருதலாம். எனது புனைகதைள் இன்றைய மனிதரினின் சமகால சமூக, அரசியல்ரீதியிலான பாதிப்புகளைக் களமாகக் கொண்டியங்கினால், எனது கவிதைகளோ பெரும்பாலும் இந்தப் பிரபஞ்சம் பற்றி, அது பற்றிய தேடல்களைப் பற்றியே அதிகமாகப் பிரதிபலிக்கும். ஆயினும் அவ்வப்போது சமகால சமூக, அரசியல் நிகழ்வுகளின் பாதிப்புகளைப் பற்றியும் அவை பேசும். ஆயினும் ‘இருப்பதிகாரம்’ என்னுமித் தொகுப்பு எனது இருப்பு பற்றிய தேடல்களின் விளைவான உணர்வுகளைப் பிரதிபலிக்கும். பல்வேறு இணைய இதழ்களில் (திண்னை, பதிவுகள், ஆறாந்திணை, தட்ஸ்தமிழ்.காம் போன்ற) வெளிவந்த கவிதைகள், என் மாணவப் பிராயத்திலே ஈழநாடு மாணவர் மலர், மற்றும் பலவேறு ஈழத்துப் பத்திரிகைகளான வீரகேசரி, ஈழமணி, சிந்தாமணி, தினகரன் போன்ற் பத்திரிகைகளில் வெளிவந்த ஆரம்பகாலக் கவிதைகளில் இருப்பு பற்றிய தேடலைப் பிரதிபலிக்கும் கவிதைகளின் தொகுப்பிது. ஏற்கனவே ‘பதிவுக’ளில் வெளிவந்தது.
‘பதிவுகள்’ ஆகஸ்ட் கவிதைகள் -2
[பதிவுகள் இதழில் ஏற்கனவே வெளிவந்த படைப்புகள் அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள் பிரசுரம் செய்யப்படுகின்றன. அந்த வகையில் பதிவுகளின் ஆரம்பகால இதழ்களில் வெளிவந்த கவிதைகளை இம்முறை மீள்பிரசுரம் செய்கின்றோம். பதிவுகள் தனது கடந்த காலத்தில் தமிழ் இலக்கியத்திற்கு, குறிப்பாகக் கணித்தமிழ் இலக்கிய உலகிற்கு ஆற்றிய வளமான பங்களிப்பினை இவ்வித மீள்பிரசுரங்கள் புலப்படுத்துவதால், அன்றைய கணித்தமிழின் ஆரம்ப காலத்தில் உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் தமிழ்ப் படைப்பாளிகள் எவ்வளவு ஆர்வத்துடன் பதிவுகள் இதழுடனிணைந்து தங்கள் பங்களிப்பினை நல்கினார்களென்பதையும் இவ்வகையான மீள்பிரசுரங்கள் புலப்படுத்துவதால் இவை முக்கியத்துவம் பெறுகின்றன; இவற்றை மீள் பதிவு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றன. இன்று கணினிகளில் ஒருங்குறி எழுத்துருவில் மிகவும் இலகுவாகத் தமிழ் ஆக்கங்களை வாசிக்க முடிகிறது. ஆனால், அன்றைய காலகட்டத்து நிலை வேறு. இணைய இதழ்கள் பாவிக்கும் எழுத்துருவை அவற்றை வாசிக்கும் ஒவ்வொருவரும் தத்தமது கணினிகளில் நிறுவிக்கொள்ள வேண்டும். இத்தகைய தடைகளையெல்லாம் மீறி வாசகர்களும், படைப்பாளிகளும் ஒருங்கிணைந்து படித்தல் (வாசித்தல்) , படைத்தல் (எழுதுதல்) ஆகியவற்றை ஆற்றுவது கணித்தமிழ் உலகிற்கு மிகவும் முக்கியம். அந்த வகையில் ‘பதிவுகள்’ கணித் தமிழ் இலக்கிய உலகிற்குத் தன் பங்களிப்பினை நல்ல முறையில் ஆற்றியிருக்கிறது; ஆற்றிவருகிறது. அதனையிட்டு நாம் பெருமையுறுகின்றோம். – பதிவுகள் ]