ஒரே இலக்கில் இரண்டு பறவைகள்

1_thangavadivel5.jpg - 286.67 Kbதிரு. தங்கவடிவேல் ஆசிரியர் அவர்கள் எனது தந்தை அகஸ்தியரின் ‘லெனின் பாதச் சுவடுகளில்…’ என்ற நூல் வெளியீட்டிற்கு சிறப்புச் சொற்பொழிவாற்ற வருகை தந்து சிறப்புரை ஆற்றியமை எங்களுக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய கௌரவமாக நான் கருதுகிறேன். திரு.தங்கவடிவேல் அவர்கள் எனது தந்தையின் சம காலத்தவர். முற்போக்கு அரசியல் இலக்கிய பாரம்பரியத்தைச் சுவீகரித்தவர்கள். திரு. தங்கவடிவேல் மாஸ்டர் அவர்கள் தன் சமகாலத்தில் முற்போக்கு இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டிருந்த அனைத்து எழுத்தாளர்களுடனும் நல்லுறவைப் பேணி வந்தவர் ஆவார். \யாழ்ப்பாணத்தில் நிலவிய சாதி ஒடுக்குமுறை தமிழ் சமுதாயத்தின் கோரமான முகம் என்பதை நன்குணர்ந்த என் தந்தை அகஸ்தியர் அவர்கள் இந்த சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக ‘எரிநெருப்பில் இடைபாதை இல்லை’ என்ற நாவலை எழுதினார். எழுத்து வெறும் கலைக்காக  மட்டுமல்ல அது சமுதாய மாற்றத்தைக் கோரி நிற்கும் புரட்சிகரப் பணியாகும் என்பது என் தந்தையின் இலக்கியக் கோட்பாடாக இருந்தது.

Continue Reading →

பிரான்சில் இம்மாதம் 25-ம் திகதி தாய்த் திருநாள்: தாயைப் போற்றுவோம்..!

பத்மா இளங்கோவன‘பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனி சிறந்தனவே..”

உலக சுகங்கள் யாவற்றையும் மிஞ்சிய, வானுலகச் சொர்க்கமெனச் சொல்லப்படுவதையும்விட உயர்ந்தது தாயன்பு. எம் கண் முன்னே நடமாடும் சுயநலமற்ற ஓர் ஆத்மா தான் தாய். ஒழுக்கத்திலும் அறிவிலும் சிறந்த நம் முன்னோர், தாயைத் தெய்வமாகப் போற்றினர். தெய்வம் பூமிக்கு இறங்கி வருவது தாயில் வடிவில் என்று நம்பினார்கள்.

‘தாயிற் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை” –

Continue Reading →

அலைகள்.காம்: டென்மார்க் பொருளியலாளர் அலன் தர்மன் புதிய பதவிக்கு தேர்வு..

அலன் தர்மன்டென்மார்க்கின் அதிக வருமானம் தரும் நோவா நோடியாவில் NNIT ல் ஒரு தமிழ் நிர்வாகி…  நோவா நோடியா குழுமத்தில் உள்ள என்.என்.ஐ.ரி நிறுவனத்தின் நிர்வாகியாக பதவியேற்பது நோவா நோடியாவுடன் தொடர்புபட்ட பணியாகவே உள்ளது. காலில் ஒரு முள் குத்தினால் அதை இன்னொரு முள்ளினால்தான் எடுக்க முடியும் இது இயற்கையின் நியதி.. இந்த உதாரணம் ஈழத்தமிழினத்திற்கு மிகவும் பொருந்தும்.. அதை இப்படி வடிவப்படுத்தலாம்.. கல்வியில் ஏற்பட்ட தரப்படுத்தலால் ஆயுதம் தூக்கி போராடப் புறப்பட்ட ஈழத் தமிழினம் அறத்துக்கு புறம்பாக உலக நாடுகளால் அழிவைச்சந்தித்தது முடிந்த கதை. ஆனால் அந்த அழிவுகளால் ஏற்பட்ட இழப்பை மறுபடியும் வென்று இலக்கைத் தொட வேண்டுமானால் அதற்கும் தற்போதய நிலையில் ஏற்ற வழி கல்வியாகத்தானிருக்கும். பிரச்சனையும் கல்வி அதற்கான தீர்வும் கல்வி… இதுதான் ஈழத்தமிழினத்தின் வரலாறாகப் போகிறது.. கல்வியால் உயர்ந்து சர்வதேச அளவில் முக்கிய பதவிகளில் அமரும்போது அந்தப்பலம் ஒரு சர்வதேச பலமாக உருவெடுக்கும், ஒரு நாள் ஈழத்தமிழினம் தனக்கான சுயமரியாதையை நிலைநிறுத்திக்கொள்ள அந்தச் சக்தியே அதி சிறந்த ஆயுதமாக மாறும். இது ஒரு சிந்தனை.. ஆனால்.. ஈழத் தமிழினத்தின் விடிவுக்கு வைக்கப்படும் பல்வேறு தரப்பட்ட யோசனைகளில் இதுவும் ஒரு யோசனையாகும். இது கடினமான வழி ஆனால் சேதம் குறைந்த வழி.. இந்த யோசனையை ஓர் அழகான பின்னணியாகத் தீட்டி அதன் முன்னால் நிறுத்திப் பார்க்க வேண்டிய இளைஞரே டென்மார்க் வயன் நகரத்தில் வாழ்ந்து தற்போது தலைநகரில் முக்கிய பதவி பெற்றுள்ள அலன் தர்மனாகும்.

Continue Reading →

தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் கதை!

இலங்கையில் கடந்த (05.02.2014) அன்று Facebook கின் காரணமாக தற்கொலை செய்துகொண்டாள் எனச் சொல்லப்பட்டு வரும் சிறுமி வெனுஷா இமந்திஇலங்கையில் கடந்த (05.02.2014) அன்று Facebook கின் காரணமாக தற்கொலை செய்துகொண்டாள் எனச் சொல்லப்பட்டு வரும் சிறுமி வெனுஷா இமந்தி Facebook கின் காரணமாகத்தான் தற்கொலை செய்து கொண்டாளா என்பதனை, உண்மையில் என்ன நடந்ததென்பதை வைத்து நீங்களே தீர்மானியுங்கள். 10 ஆம் வகுப்பில் கல்வி கற்றுவந்த வெனுஷா இமந்தியின் Facebook கணக்கின் Wall இல், அவரது நண்பனாக இணைந்துகொண்ட ஒருவன், காதல் ஜோடியொன்றின் புகைப்படத்தை Tag செய்துவிடுகிறான். அதனை வெனுஷாவின் பாடசாலை ஆசிரியை ஒருவர் கண்டு, அதிபரிடம் போய் முறையிடுகிறார். அதிபர், 5000 மாணவர்கள், ஆசிரியர்கள் முன்னிலையில் அந்தச் சிறுமியை மேடைக்கு அழைத்து ‘வேசி’ எனத் திட்டுகிறார். மறுதினம் பெற்றோரை பாடசாலைக்கு அழைத்துவரும்படி கட்டளையிடுகிறார். தான் செய்யாத ஒரு தவறுக்காக அவப் பெயர் கேட்க நேர்ந்ததையிட்டு பெரும் மன உளைச்சலுக்குள்ளான சிறுமி, தனது தந்தைக்கு 3 பக்கங்களில் ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு, தாயின் சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்கிறாள். கீழேயுள்ளதுதான் சிறுமி தற்கொலை செய்துகொள்ள முன்பு எழுதி வைத்த கடிதம் – மரண வாக்குமூலம்

Continue Reading →

எதிர்வினை: மனித நேயம்

- குரு அரவிந்தன்வாயில்லா உயிர்களிடம் காட்டும் நேசம் பற்றிய லதா ராமகிருஷ்ணனின் ‘அன்புக்கு அஸ்வினி’ என்ற பதிவுகள் இணைய இதழில் வெளிவந்த கட்டுரை அருமையாக இருந்தது. அஸ்வினி அனாதரவாக இருக்கும் அத்தகைய உயிர்களிடம் காட்டும் அன்பு நிச்சயம் போற்றப்பட வேண்டியது. இது போன்று வாயில்லா உயிர்களிடம் அன்பு காட்டும் பலர் பல்வேறு நாடுகளிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். சமீபத்தில் கூட அதிபர் பொ. கனகசபாபதி அவர்கள் கொழும்பிலே ஓய்வு பெற்ற ஒருவர் தெரு நாய்களுக்குத் தினமும் உணவு ஊட்டுவதாகவும், அவரைத் தான் சந்தித்து உரையாடியதாகவும் ஜேர்மனியில் இருந்து வெளிவரும் வெற்றிமணி என்ற இதழில் தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். தாயின் பாசத்திற்கு அடுத்தபடியாக, வாயில்லா உயிர்களிடம் வைக்கும் அன்பு தான் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத அன்பு என நான் நினைக்கின்றேன்.

Continue Reading →

அன்புக்கு அஸ்வினி: அஸ்வினியிடம் ஒரு அடர்செறிவான நேர்காணல் இதோ!

அஸ்வினி   

அஸ்வினிlatha ramakrishnanவாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிநின்றார் வள்ளலார். காக்கை குருவி எங்கள் ஜாதி என்றார் பாரதியார்.  தெருநாய்களையும் பூனைகளையும் புரந்து காக்க அயராது பாடுபட்டுவருகிறார் அஸ்வினி. இளம்பெண். வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல. இருந்தும் தெருநாய்களையும் பூனைகளையும் பாதுகாத்து அவற்றின் பசியாற்றி பிணிதீர்க்கும் பரிவும் பிரியமும் கரிசனமும் அஸ்வினியிடம் கடலெனப் பரந்துகிடக்கின்றன! மெல்லிய குரலில் நிதானமாக பிராணிகள் மீதான தன் பிரியத்தையும் அக்கறையையும் வெளிப்படுத்தி இந்த உலகம் அவற்றிற்குமானதுதான் என்பதை அழுத்தமாக எடுத்துரைக்கிறார் ஸ்ரீ ராம சரண் அறக்கட்டளை என்ற தொண்டுநிறுவனத்தின் சார்பில் சென்னை மயிலையிலுள்ள மாநகராட்சி மழலையர் பள்ளியில் மாண்டிசோரி ஆசிரியையாக மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றிவரும் அஸ்வினியின் வீட்டில் எப்பொழுதுமே தெருநாய்களுக்கும், பூனைகளுக்கும் தாற்காலிகத் தங்குமிடங்களுண்டு! நாயும் பூனையும் அங்கே தோழர்களாக நட்புறவாடிக் கொண்டிருக்கும். தெருவில் அடிபட்டுக் கிடக்கும் நாய்கள், வருவோர் போவோரின் கல்லடிக்காளாகின்றவை, நோய்வாய்ப்பட்டிருப்பவை, கருத்தரித்திருப்பவை, பிரசவித்திருப்பவை என உதவியும் சிகிச்சையும், ‘’ஸ்ட்ரெரிலைஸேஷனு’ம் தேவைப்படும் தெருநாய்களுக்கு உணவளிப்பதோடு அவற்றைத் தன் செலவில் உரிய மருத்துவமனைகளுக்குக் கூட்டிச்சென்றுவருவதையும் தொடர்ந்து செய்துவருகிறார். செல்லப்பிராணிகள், குறிப்பாக தெருநாய்கள் பூனைகளின் பாதுகாப்புக்கு நம்மிடையே போதுமான அமைப்புகளோ விழிப்புணர்வோ இல்லை. அப்படியிருக்கும் அமைப்புகளும் இந்த வாயில்லா உயிர்களை அலட்சியமாக நடத்தும் அவலநிலையையே பரவலாகக் காணமுடிகிறது என்று வருத்தத்தோடு சுட்டிக்காட்டுகிறார் அஸ்வினி. மழலையர்களின் ஆசிரியையாக அவருடைய சிறந்த பணியைப் பாராட்டி சமீபத்தில் அவருக்கு ‘இன்னர் வீல்’ என்ற அமைப்பு விருது வழங்கி கௌரவித்தது.

Continue Reading →

மலேசியா: இந்நாட்டின் விளையாட்டுத்துறையில் இந்தியர்களின் பங்கு

-  வே.ம.அருச்சுணன் – மலேசியா பல்வேறு துறைகளில் மலேசியா முத்திரைப் பதிப்பது போல் விளையாட்டுத்துறையிலும் அது தனிச் சிறப்பினை அடைந்து வருவதைக் கண்கூடாகக் காணலாம். உலக அளவில் “தாமஸ் கிண்ண” பூப்பந்துப்போட்டியில் பல முறை வெற்றி வாகைச்சூடி உலக ஜாம்பவான் பட்டியலில் இடம்பெற்றுள்ள மலேசியா வெற்றிகரமாக தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டியையும் காமன்வெல்த் போட்டியையும் மிகச் சிறப்பாக நடத்தி இத்துறையில் மலேசியாவுக்கு இருக்கும் தனித்திறமையை உலகுக்குக் காட்டியுள்ளது.தொடர்ந்து உலகக்கிண்ண ஹாக்கிப் போட்டியையும் நடத்தி மலேசியா புகழ் உச்சியில் நிற்பது தெளிவு. குவாஷ் விளையாட்டுப்போட்டியில் நிக்கல் டேவிட் மூலம் உலக முதல் நிலை விளையாட்டாளரை உருவாக்கிய பெருமையை நமது நாடு பெற்றிருப்பது பாராட்டுக்குரியது. நாடு விளையாட்டுத் துறையில் வெற்றி நடை போட்டாலும் நமது இந்திய இளைஞர்களின் பங்களிப்பு இத்துறையில் அதர்ச்சி அடையும் நிலையில் இருப்பது எதிர் காலத்தில் நமது இளைஞர்களின் வாழ்க்கை பெரும் கேள்விக்குறியாகிவிடும் என்பதில் ஐயமில்லை! இந்நிலை ஏற்படுவதற்குக் காரணம் என்ன? இந்திய இளைஞர்களின் பால் இந்திய சமூகம் அக்கறைக்கொள்ளாமல் இருந்துவிட்டதா? அல்லது திட்டமிட்டு இந்திய இளைஞர்களை விளையாட்டுத் துறையில் நுழைய விடாமல் மலேசிய அரசாங்கமே தடுத்து விட்டதா? இதற்கு முறையான விடையைக் காண்பது அவசியமும் அவசரமும் ஆகும்.

Continue Reading →

தள்ளாத வயதிலும் தமிழ்த்தொண்டு

பெரியவர் வை.ஆறுமுகம் காதறுந்த ஊசி கூடக் கால் முள்ளகற்ற உதவும். எதுவும் வீணில்லை இந்த வாழ்க்கையில்.நகர்ந்து போகிற இந்த மனிதப் பிரவாகத்தில் நாம் நீண்ட தொடர்ச்சியின் கனிவான கண்ணிகள்.ரேசன் கடையில் மண்ணெண்ணை டின்னை நகர்த்துகிற மாதிரி காலம் நம்மை நகர்த்தி நகர்த்தி முன்னெடுக்கிறது.இனம் தெரியாத மனிதர்களோடு சங்கமிக்க வைக்கிறது.மானிட சமுத்திரம் நானெனக் கூவக் கற்றுக் கொடுக்கிறது.உரிமம் பெற்று வருகிற உறவுகளை விட உயிர்மம் பெற்று வரும் உறவுகள் உன்னதமனவையாய் அமையும் ரகசியம் அதுதான்.அயல்நாடுகளுடன் நட்புறவு ஒப்பந்தம் போட அரசுப் பணத்தில் பறக்கிற அதிகாரிகளை விட சாலை நடுவில் ரத்தச் சகதியாய் செத்துக் கிடக்கும் நாயை அகற்றுபவன் அருமையானவன். மாதம்தோறும் குயில் நண்பர்களோடு ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் செல்லும்போது கண்ட அந்த மனிதர்கள் உன்னதமானவர்கள்.

Continue Reading →

Exemplary Educational Service by Sri Ram Charan Charitable Trust

- Rajeshwari Vijayan, Freelance writer, India - 
“As I was watching the children my whole heart went out to those children, ‘Is it possible for me to give them these lessons and the training  that are being given under your system, to those children?  “I hope that it will be possible not only for the children of the wealthy and well to  do, but also for children of pampers to receive training of this nature.”
_Mahatma Gandhi on Montessori System of Education

Big or small, each of us have a dream. Thus, it was the dream of Smt.Padmini Gopalan, a kind-hearted individual endowed with social  consciousness, to enable the children from underprivileged sections of the society to have access to ‘quality’ education, which would help them in their personality development; a dream that she had cherished and nourished over the years. As a result,  Sri Ramacharan Charitable Trust came into being in 1999.  It was the brain child of Smt.Padmini Gopalan. She wanted to help the economically backward people around her by providing interest free micro loans. True, when we make an unselfish resolve, help comes from somewhere. She tried to receive donations for the cause, at the rate of $100 per person from her NRI nephews and their friends. B.Sridhar , her nephew , was involved with an organization called Child Vikas International.  So,Child Vikas International came forward to provide the initial capital to start the scheme. The scheme proved was a great boon for poor people having school going children. Most people repaid the loans while some did not.  Those who failed to repay loans were not necessarily the poorest. Ms. Padmini does not say much about the defaulters, but she is all admiration for those who did pay back in spite of adverse circumstances.

Continue Reading →

மேலாடைப் போராட்டம்

புதுமையான பல செய்கைகளை அறிமுகப்படுத்துவதில் வட அமெரிக்கா மிகவும் பிரபலமானது. வருடப்பிறப்பு, தீபாவளி, தைப்பொங்கல் வந்தால் ஊரிலே நாங்கள் புத்தாடை வேண்டும் என்று வீட்டிலே பெற்றோரிடம் அடம் பிடிப்பதுண்டு. ஆனால் கனடாவில் அதற்கு மாறுபாடாகத் தங்களுக்கு மேலாடை வேண்டவே வேண்டாம் என்று அடம் பிடிக்கும் ஒரு சாராரும் உண்டு. இப்படி அடம் பிடிப்பவர்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து 2007ஆம் ஆண்டு தங்களுக்குள் ஒரு அமைப்பை உருவாக்கி இருக்கின்றார்கள். ஆண்களும் பெண்களும் அந்த அமைப்பில் அங்கத்தவர்களாக இருக்கின்றார்கள். இந்த அமைப்பினர் கடந்த 27ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமையை மேலாடையின்றிச் சுதந்திரமாய் திரியும் நாளாக ஏற்கனவே பிரகடனப் படுத்தியிருந்தார்கள். பிரகடனப் படுத்தியது மட்டுமல்ல தாங்களும் முன் உதாரணமாய் சென்ற ஞாயிற்றுக்கிழமை பொது இடங்களிலும் வீதிகளிலும் மேலாடையின்றி நடமாடினார்கள்.குரு அரவிந்தன் புதுமையான பல செய்கைகளை அறிமுகப்படுத்துவதில் வட அமெரிக்கா மிகவும் பிரபலமானது. வருடப்பிறப்பு, தீபாவளி, தைப்பொங்கல் வந்தால் ஊரிலே நாங்கள் புத்தாடை வேண்டும் என்று வீட்டிலே பெற்றோரிடம் அடம் பிடிப்பதுண்டு. ஆனால் கனடாவில் அதற்கு மாறுபாடாகத் தங்களுக்கு மேலாடை வேண்டவே வேண்டாம் என்று அடம் பிடிக்கும் ஒரு சாராரும் உண்டு. இப்படி அடம் பிடிப்பவர்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து 2007ஆம் ஆண்டு தங்களுக்குள் ஒரு அமைப்பை உருவாக்கி இருக்கின்றார்கள். ஆண்களும் பெண்களும் அந்த அமைப்பில் அங்கத்தவர்களாக இருக்கின்றார்கள். இந்த அமைப்பினர் கடந்த 27ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமையை மேலாடையின்றிச் சுதந்திரமாய் திரியும் நாளாக ஏற்கனவே பிரகடனப் படுத்தியிருந்தார்கள். பிரகடனப் படுத்தியது மட்டுமல்ல தாங்களும் முன் உதாரணமாய் சென்ற ஞாயிற்றுக்கிழமை பொது இடங்களிலும் வீதிகளிலும் மேலாடையின்றி நடமாடினார்கள்.

Continue Reading →