‘கிறிஸ்தவ மதத்தின் பிடியிலிருந்து மக்களை மீட்டு எடுத்தால் மட்டும்தான் புரட்சியின் வெற்றி சாத்தியமென்று’ பிரெஞ்சுப் புரட்சியின் பயங்கரவாத ஆட்சியின்போது கருதப்பட்ட நிலையில் Bordeaux என்னுமிடத்தில் அதி.வண.பேராயர் Pierre Bienvenu Noailles அவர்களால் உருவாக்கிய திருக்குடும்பக் கன்னியர் மடத்தின் வரலாற்றோடு இளவாலைக் கன்னியர் மடத்தின் வரலாறும் பின்னிப்பிணைந்துள்ளது. 1858 இல் யாழ்ப்பாணத்துக் கத்தோலிக்க சமய அதி வணக்கத்திற்குரிய ஆயராக இருந்த Semeria (OMI) அவர்களால் அதி வண. பேராயர் Noailles அடிகளார்க்கு யாழ்ப்பாணத்தில் பெண்கள் மத்தியில் கல்வி ஊட்டும் முகமாகää கன்னியாஸ்திரிகைகளை அனுப்பி வைக்குமாறு கடிதம் எழுதி வேண்டிக் கொண்டதிற்கிணங்க உருவானதே இளவாலைக் கன்னியர் மடமாகும்.
வாழ்வின் எந்தவொரு கணத்திலும் நாம் தோல்வியடைய விரும்புவதில்லை. எந்தவொரு போட்டியிலும் வெற்றியைப் பெறுவதற்கும், எந்தவொரு இடத்திலும் முதலாவதாக, உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவதற்கும், முன்னேறுவதற்கும் நாம் விரும்புகிறோம். இது தவறான எண்ணமல்ல. தான் ஒரு திறமை மிகுந்தவனாக ஆகவேண்டும், தன்னால் முடிந்த அளவு வாழ்வில் உயர்ந்த இடத்துக்கு வரவேண்டும் என்ற இலட்சியத்தோடு முயற்சி செய்வது மிகவும் நல்ல விடயம். இவ்வாறாக முன்னேற வேண்டுமென்ற மனப்பான்மையே மனதில் வெற்றிக்கான விதைகளைத் தூவி விடுகிறது. பதவிகளில் உயர்ந்த அந்தஸ்தினை நோக்கி, போட்டிகளில் வெற்றிகளை நோக்கி எனப்பல எதிர்பார்ப்புக்கள் மனதில் வேர்விடத் தொடங்குகின்றன. இதில் தவறேதுமில்லை. வாழ்க்கையினை முன்னேற்றகரமான பாதையில் திருப்புவதற்கான ஒரு உந்து சக்தியாக இவ் எதிர்பார்ப்புக்கள் ஆகிவிடுகின்றன. அது போல எப்பொழுதும் சோர்ந்திருக்கும் மனங்களுக்கு ‘வெற்றி பெற வேண்டும்’ என்ற எண்ணம் மகிழ்வையும், வாழ்க்கை குறித்தான திருப்தியையும் அளிக்கக் கூடியது.
தருமபுரி ஒரு பின்தங்கிய மாவட்டம். ஆனால் சாதிவெறியில், தீண்டாமைக் கொடுமையில் மிகவும் முன்னேறியுள்ளது. காதல், காதல், காதல், காதல் போயின் சாதல், சாதல், சாதல் என்று அன்பின் வலிமையை, காதலின் சிறப்பை வலியுறுத்தினான் பாரதி. அந்த எட்டயபுரத்தானின் நெஞ்சில் நெருப்பு கொட்டியிருக்கிறார்கள் தருமபுரி சாதிவெறியர்கள். தருமபுரி – திருப்பத்தூர் சாலையில் நாய்க்கன் கொட்டாய் பகுதியில் இருக்கிறது நத்தம் குடியிருப்பு. இந்த ஊர் இளவரசனுக்கும் பக்கத்து ஊரான செல்லங்கொட்டாய் ஊரைச் சேர்ந்த திவ்யாவிற்கும் காதல். திவ்யா வன்னிய சமூகம். இளவரசன் ஆதிதிராவிடர். திவ்யாவின் பெற்றோர் இவர்களின் காதலை விரும்பவில்லை. ஆனால் எதிர்ப்பை மீறி இருவரும் அக்டோபர் 14ஆம் நாள் பதிவுத் திருமணம் முடித்துக் கொள்கின்றனர். குடும்பங்களுக்குள் சண்டை, இரண்டு ஊரின் சண்டையானது. இரண்டு ஊரின் சண்டை சாதியச் சண்டையானது. பல கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பின்பும் இருவரையும் பிரிக்க முடியவில்லை.
இரண்டு மாதங்களுக்கு மேலாக நீதித்துறையின் சுதந்திரத்தின் மீது வசைமாரி பொழிந்து வரும் விவகாரம், பிரதம நீதியரசராக இருக்கும் ஷிராணி பண்டாரநாயக்காவின் வெளியேற்றத்தோடு ஒரு முடிவுக்கு கொண்டுவரப்படுவதற்கு, எண்ணிக் கொள்ளுங்கள் இன்னும் ஏழு நாட்கள்தான் பாக்கியிருக்கின்றன, ஏனெனில் அவர் தவறு இழைத்துள்ளார் என்று நிரூபிக்கப்பட்டதாலோ, அல்லது குற்றம் புரிந்துள்ளார் என்பதாலோ இது நடக்கவில்லை ஆனால் ராஜபக்ஸவின் ஆட்சி அவர் வெளியேற வேண்டும் என்று முடிவு செய்துள்ளது. அந்த ஆசனத்தில் அமரப்போகும் அடுத்த அரசாங்க வேலைக்காரர் யாராகவிருந்தாலும், அவர் நிச்சயமாக ராஜபக்ஸவின் கற்பனைக்கு ஏற்ற ஒருவராக இருப்பாரே தவிர, தகுதிப்படி நியமனம் பெற்றவராக இருக்கமாட்டார். சுயாதீனமான நீதித்துறை பற்றி உருவாகிவரும் இந்த குழப்பங்கள் யாவற்றுக்கும் அப்பால், இந்த விடயம் பற்றி மிகவும் குறைவாகப் பேசப்பட்டது மாத்திரமன்றி இதை ஒரு பிரச்சினையாக ஒருபோதும் யாருமே எடுத்துக் கொள்ளாததுதான், இதிலுள்ள மனிதாபிமானமான துயரம்.
அநேகமாக கவனத்தைக் கோருவதும் குவிப்பதும் விலகல்களும் வேறுபடல்களும் ஆச்சரியங்களுமே. குறிப்பாக எழுத்தாளர்கள் இந்த வகை விலகல்களாகவும் ஆச்சரியங்களாகவும் இருப்பதுண்டு. அதனால் அவர்கள் கவனத்தைக் குவிப்பவர்களாகவும் அவர்களால் பல மையங்கள் கவனத்துக்குரியனவாகவும் அமைகின்றன. கவனத்தைக் குவிக்கும் விலகல்களில் ஒருவராக லெ. முருகபூபதியும் இருக்கிறார். அவருடைய இலக்கியப் பங்களிப்பு, எழுத்து என்பவற்றுக்கு அப்பால், இலக்கியத்தின் வழியாக அவர் கொண்டிருக்கும் அக்கறைகளும் செயற்பாடுகளும் இந்த விலகலை அடர்த்தியாக்குகின்றன. எனவேதான் முருகபூபதி கூடிய கவனத்தைப் பெறுகிறார். தன்னுடைய அக்கறைகளுக்காகவும் பங்களிப்புக்காகவும் முருகபூபதி இயங்குகின்ற வேகமும் நுட்பமும் அசாதாரணமானது. துடிப்பும் ஒருங்கு குவிந்த கவனமும் அவரையும் அவருடைய செயற்பாடுகளையும் முன்னகர்த்திக் கொண்டிருக்கின்றன. அதனால் அவர் சோர்வின்றி உழைக்கிறார். எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறார். பிறரையும் இயக்குகிறார். பிறரும் இயங்கத்தூண்டுகிறார். இதில் பெரும்பாலானவை பொதுப்பணிகள். உதவிப்பணிகள். ஊக்கப்பணிகள். மறு பக்கத்தில் “எழுதுங்கள் – செயற்படுங்கள்“ என்று ஊக்கப்படுத்தும் காரியங்கள்.
[அண்மையில் திரைப்படப் பின்னணிப் பாடகி சின்மயி கொடுத்த புகாரின் அடிப்படையில் புகழ்பெற்ற வலைப்பதிவர்களில் ஒருவரான ராஜன் லீக்ஸ் கைது செய்யப்பட்ட விடயம் யாவரும் அறிந்ததே. ஒழுங்காக விசாரணை முடியவில்லை. வழக்கு முடியவில்லை. அதற்குள் தமிழகப் பத்திரிகைகள், சஞ்சிகைகள், ‘பிரபல’ எழுத்தாளர்களெனப் பலரும் பாடகிக்கு ஆதரவாகக் களத்தில் இறங்கி விட்டார்கள். இந்நிலையில் இணையத்தில் தேடியபோது ராஜன் லீக்ஸ் தனது வலைப்பதிவில் மார்ச் 29, 2012 அன்று எழுதிய பதிவொன்று கிடைத்தது. இதற்கெல்லாம் முதற் காரணம் பாடகி சின்மயி தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்டது சம்பந்தமாகத் தெரிவித்த கருத்துகளே எனத்தெரியவருகிறது. ராஜன் லீக்ஸின் அந்தப் பதிவினை ஒரு பதிவுக்காக ‘பதிவுகள்’ மீள்பிரசுரம் செய்கின்றது. சின்மயியின் புகார் சம்பந்தமாகச் சட்டம் தன் கடமையினைப் பாரபட்சமில்லாது செய்வது அவசியம். ஆனால் அது அவ்விதம் செய்யுமா என்பது தற்போது நடைபெறும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது சந்தேகமாகவிருக்கிறது. வழக்கு முடிவதற்கு முன்னரே ராஜன் தண்டிக்கப்பட்டுவிட்டார். அவரது பதவி பறி போயுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாடகிக்குப் பின்னால் அதிகாரமும், பணபலமும் இருப்பதாகத் தெரிகின்றது. இவ்விதமானதொரு சூழலில் ராஜனின் அடிப்படை மனித உரிமைகள் மதிக்கப்படுமா என்பதுவும் சந்தேகமே. மார்ச் 29, 2012இல் எழுதப்பட்ட ராஜனின் பதிவினை வாசிக்கும்போது ராஜனில் கேள்விகள் நியாயமானவையாகவே தெரிகின்றன. இக்கேள்விகளுக்குப் பாடகி பதிலளித்தாரா என்பதும் தெரியவில்லை. இவ்விதமானதொரு சூழலில் , ராஜனுக்கு எதிராகத் தமிழகக் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், ஊடகங்களும் சரி, தனிப்பட்ட மனிதர்களும் சரி ராஜனைக் குற்றவாளியாக முடிவு செய்து தமது கருத்துகளை அள்ளி வீசுவது தவறு, ராஜன் நீதியான விசாரணைகளை எதிர்கொள்வதற்கு அவை இடையூறாக இருக்கும். கைது செய்யப்பட்ட ராஜன் பிணையில் விடுதலை செய்யப்பட்டு, தனது பக்க நியாயங்களை எடுத்துரைப்பதற்கு நியாயமான சந்தர்ப்பம் வழங்கப்படுவது மிகவும் அவசியம். – பதிவுகள்]
இப்பூவுலகில் மனித இனப் பெருக்கத்தில் மிகப் பாரிய பொறுப்பை ஏற்றுச் செயற்பட்டு நிற்பவர்கள் தன்னலங் கருதாப் பிறர் நலங்கருதும் பெண்குலத்தினர் ஆவர். அவர்கள்தான் பத்து மாதம் கருவைத் தம் வயிற்றில் சுமந்து பாதுகாத்துப் பிள்ளைச் செல்வங்களைப் பெற்றுத் தந்து உலகை நிலைநாட்டி நிற்கின்றனர். இது ஓர் அளப்பரிய சேவையாகும். பெண்களின் உடல் அமைப்பு அதற்கு ஏதுவாய் அமைந்துள்ளது. ஆண்களால் இதைச் செய்ய முடியாது. ஆனாலும் பெண்கள் கருவறையில் குழந்தை உருவாவதற்கு ஆண்கள்தான் உயிர் விந்துக்களைக் கொடுத்துதவுகின்றனர். இத்துடன் அவர்கள் உயிர் கொடுக்கும் வேலை முடிவடைந்து விடுகின்றது. தற்பொழுது உலகில் எழுநூற்றியொரு (701) கோடி மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் அனைவரையும் பெற்றுத் தந்த பெருமை பெண்குலத்தாரைச் சாரும். பெண்கள் எல்லாரும் தாய்மை அடைவதையே விரும்புவர். அது அவர்கள் சுபாவம். திருமணம் ஆகியதும் பெண்கள,; குழந்தை வேண்டுமென்று திட்டம் தீட்டித் தொழிலில் இறங்கி விடுவர். அதிலும் வெற்றி காண்பது அவர்கள்தான். பிள்ளைப் பேறற்ர பெண்களை ‘மலடி’ என்று பட்டஞ் சூட்டி மகிழ்வர் மனித குலத்தார். “தாயறியாத சூல் உண்டோ? ” என்பது பழமொழியாகும். “பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த, மக்கட்பேறு அல்லபிற.” (குறள் 61) என்று பெண்நிலை முற்றும் அறிந்த திருவள்ளுவர் மக்கட்பேற்றின் பெருமை பற்றித் திருக்குறளில் பேசுகின்றார்.
எளிய மக்கள் வரலாறு – மக்கள் மொழி என்பவை பற்றிய நோக்கில் நடுகல் கல்வெட்டுகள் உணர்த்தும் செய்திகளை விளங்கச் செய்வதே இக்கட்டுரை வரையப்பட்டதன் நோக்கம். நடுகற்கள் குறித்த அறிமுக உரை ‘ தமிழ்ப் பெயர்கள் ஏந்திய நடுகற்கள் ‘ என்ற தலைப்பில் ஏற்கெனவே ஒரு கட்டுரையாக வரையப்பட்டுவிட்டது. அதன் இரண்டாம் பகுதியே இக்கட்டுரை. தமிழ முன்னோரே மேலை நாகரிகங்களையும், கீழை நாகரிகங்களையும் ஏற்படுத்தினர் என்பதற்குச் சான்றாக நடுகல் கல்வெட்டுத் தமிழ்ப் பெயர்களுடன் ஒத்து உள்ள பிற நாகரிக மன்னர்ப் பெயர்களும் இதில் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளன. நடுகல் கல்வெட்டுகளில் சிறப்பாக ஆளப்பட்டு உள்ள மருமக்கள் > மருமகன், மக்கள் > மகன், சேவகன், அடியான் ஆகிய சொற்கள் வெவ்வேறு நிலைகளில் உள்ள படைவீரர்களைக் குறிக்கின்றன. ஒரு வேந்தனுக்கு அவன் தனியாகப் பேணுகிற நிலைப் படை (Reserve Army) தவிர படை உதவிகள் அவனுக்கு அடங்கிய மாமன்னர், மன்னர் ஆகியோரிடம் இருந்தே வந்தன. ஆதலால் ஒரு வேந்தனுக்கு மன்னன் எனபவன் படைத்தலைவன் ஆவதால் மருமகன், மகன், சேவகன் எனக் குறிக்கப்பட்டான். அவ்வாறே ஒரு மன்னனின் மேலாதிக்கத்தை ஏற்ற பல சிற்றரசர் அவனுக்கு படைத் தலைவர் ஆவதால் மருமகன், மகன், சேவகன் எனக் குறிக்கப்பட்டனர். ஒரு சிற்றரசனுக்குக் கீழ் இருந்த வேள், கிழான் எனும் ஊர்த் தலைவன் படைத்தலைவன் ஆவதால் மகன், சேவகன் எனப்பட்டான். ஈண்டு, வேந்தன் குலோத்துங்கனுக்கு பல்லவன் கருணாகரத் தொண்டைமான் படைத் தலைவனாய் இருந்ததை எண்ணுக.
“பெண்ணோடு தோன்றி பெண்ணோடு வாழ்ந்தும்
பெண்மனது என்னவென்று புரியவில்லையே?”
மேலேயுள்ள பிரபலமான பழைய தமிழ் சினிமாப் பாடலின் வரிகளை நீங்கள் அறிவீர்களா? முன்பெல்லாம் அந்தப்பாடல் வரிகளைக்கேட்கும்போது ‘அட! நாம் ஆண்களெல்லாம் புரிந்துகொள்ள முடியாதளவு பெண்கள் புதிராக இருக்கின்றார்கள் போல’ என்று பெருமையாகக்கூட நினைத்திருக்கின்றேன். ஆனால், இப்போது கேட்டால் அருவருப்பாகவுள்ளது. இதை வாசித்துக்கொண்டு செல்லும்போது ஏனென்பது உங்களுக்கும் புரியும். பெண்களைப்பற்றி நமது சமூகத்திலுள்ள ஆண்கள் என்னதான் நினைக்கின்றார்கள்? தாய் எனும் பெண்ணிலிருந்து பிறந்து அவளிடம் பாலருந்தி அவளது பராமரிப்பிலேயே வளர்ந்து வருகின்றான்; ஒரு ஆண்மகன். அதே பெண்ணின் வயிற்றிலே பிறந்து தன்னைப்போலவே வளரும் பெண்குழந்தையான தனது சகோதரியுடன் சேர்ந்து ஒரே வீட்டில் ஒரேசூழலில் ஒன்றாக வளருகின்றான். ஆனால் இளம்பருவத்தை எட்டியதும் அவனிடத்தில் பெண்கள் பற்றிய ஏளனமான கருத்துக்களும் வக்கிரமான சிந்தனைகளும் எப்படித் தலைதூக்குகின்றன..?