அதாவது நான், நீ, ஒபாமா, ஒசாமா.

நாகரத்தினம் கிருஷ்ணாபிச்சைகாரர்கள் என சொல்கிறபோது மனது ஏற்படுத்தும் பிம்பங்கள் கிழிந்த அல்லது அழுக்கேறிய உடைகள், கலைந்த தலை, துர்நாற்றமென்ற பொதுப்பண்புகளைக் கொண்டவை. ஆனால் பிச்சை எடுப்பதற்கான அவசியமேதும் இல்லாததுபோலத்தான் அவளுடைய தோற்றமிருக்கிறது. உடல் வனப்பிலும், முகத்தைத் திருத்திக்கொள்வதிலும் அக்கறை கொள்ளாதவள் என்பதைத் தவிர பெரிதாக குறைசொல்ல ஒன்றுமில்லை: செம்பட்டை நிறத்தில் நீண்டிருந்த தலைமயிர் அருவிபோல முதுகில் விழுந்திருக்கிறது. மையிட்ட பெரிய பூனைக் கண்கள். காற்று அலைமோதுகிறபோதெல்லாம் கால்களில் ஒட்டிக்கொள்வதும் படபடப்பதுமாய் தாள்வரை வழியவழிய மிட்டாய் நிறத்தில் ஒரு பூபோட்ட பாவாடை, இறுக்கமாக ஒரு சோளி – நாடோடிப்பெண்.

Continue Reading →

சிறுகதை: நட்பு

சிறுகதை: நட்பு  எழுதியவர்: கடல்புத்திரன்சரஸ்வதி, அவசர அவசரமாக வெளிக்கிட்டு.. அம்மா வைத்த சாப்பாட்டுப் பெட்டியையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள். வீட்டையும் ஒரு தரம் திரும்பிப் பார்த்தாள். வாசற்கதவின் வலத்தூணின் தலைப் பகுதியில் ‘மருது இல்லம்’ என எழுதப்பட்டிருந்தது. புதிதாய் அந்த வீட்டைக் கட்டிய போது, அம்மா தெரிவு செய்த பெயர். ‘மருது இல்லம்’ என எவர் கேட்டாலும், கூட்டி வந்து அவள் வீட்டருகே விட்டு விடுவார்கள். கிராமத்திலேயே, அந்த வீட்டுக்கு மட்டுமே ‘பெயர்’ இருந்தது.

Continue Reading →

பதிவுகள் சிறுகதைகள் – 3

பதிவுகள் சிறுகதைகள் -3

‘பதிவுகளி’ல் வெளிவந்த சிறுகதைகளில் சில ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றன். இதுபோல் அவ்வப்போது மேலும் பல ஆக்கங்கள் , சிறுகதைகளுட்பட , இனி வரும் இதழ்களில் மீள்பிரசுரமாகும் – பதிவுகள்-

Continue Reading →

பதிவுகள் சிறுகதைகள் – 2

பதிவுகள் சிறுகதைகள் -2

 -‘பதிவுகளி’ல் வெளிவந்த சிறுகதைகளில் சில ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றன். இதுபோல் அவ்வப்போது மேலும் பல ஆக்கங்கள் , சிறுகதைகளுட்பட , இனி வரும் இதழ்களில் மீள்பிரசுரமாகும் – பதிவுகள்-

Continue Reading →

நத்தார் சிறுகதை: கிறிஸ்துமஸ் பரிசு!

அந்தச் சாக்கடை முடைநாற்றத்தில் இவர்கள் எப்படிக் குடித்தனம் நடத்துகிறார்களோ? வானமே கூரை!பேருந்து நிலையத்தின் பக்கவாட்டுச் சுவர்தான் ஒரே சுவர்; நான்கு பக்கச் சுவரெல்லாம் இந்தக் குடித்தனத்துக்கு கிடையாது. அந்தச் சுவரில் எப்படியோ போட்ட கள்ளத்தனமான துளையில் ஒரு குச்சியைச் செருகி பழைய கந்தல் சாக்கை ஒட்டுப்போட்டு தைத்து முன் பக்கம் நடப்பட்ட இரண்டு குச்சிகளில் இணைத்துக் கட்டியிருப்பதுதான் அந்தச் சாக்கடை முடைநாற்றத்தில் இவர்கள் எப்படிக் குடித்தனம் நடத்துகிறார்களோ? வானமே கூரை!பேருந்து நிலையத்தின் பக்கவாட்டுச் சுவர்தான் ஒரே சுவர்; நான்கு பக்கச் சுவரெல்லாம் இந்தக் குடித்தனத்துக்கு கிடையாது. அந்தச் சுவரில் எப்படியோ போட்ட கள்ளத்தனமான துளையில் ஒரு குச்சியைச் செருகி பழைய கந்தல் சாக்கை ஒட்டுப்போட்டு தைத்து முன் பக்கம் நடப்பட்ட இரண்டு குச்சிகளில் இணைத்துக் கட்டியிருப்பதுதான் அவர்களுக்குரிய இடம் என்பதைத் தெரிவிக்கும் அடையாளம்! இப்போது ஓரளவுக்கு உங்களுக்கு இது யாருக்குச் சொந்தமான குடித்தனம் என்று யூகித்திருப்பீர்கள்.

Continue Reading →

குறுநாவல்: ‘தூதர்கள்’

-1-

ஆசி கந்தராஜாடிஸ்கோ பண்டா, பேர்ளின் சுரங்கவண்டி நிலைய வாங்கொன்றில் அமர்ந்திருந்தான். அவன் அருகில் நிறை வெறியில் சில்வா! டிஸ்கோ பண்டாவின் வாயிலிருந்தும் அல்ககோல் நெடி வீசியது. அவன் போதையில் தடுமாறவில்லை. நிதானமாகவே புகையை உள்ளுக்கு இளுத்து வளையம் வளையமாக வெளியே ஊதிக் கொண்டிருந்தான். அவர்கள் இருவரதும் வாழ்க்கை தடம்மாறி, தள்ளாட்டத்துடன் உருண்டு கொண்டிருப்பதை அவர்களுடைய தோற்றங்கள் வெளிப்படுத்தின. இருவரும் ஒரு காலத்தில் என்னுடன் படித்த கலாசாலை மாணவர்கள். ஜேர்மனியில் படித்த காலத்திலே டிஸ்கோ பண்டா எனக்கு அறிமுகமானான். ஜேர்மனி, கிழக்கும் மேற்குமாக இரண்டு நாடுகளாகப் பிரிந்திருந்த காலத்தில் இது நடந்தது. பண்டா அப்போது கிழக்கு ஜேர்மன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தான். இடையில் ஒரு வரலாற்றுக் குறிப்பு! 1949 ஒக்டோபர் மாதம் ஏழாம் திகதி தொடக்கம், 1989 நவம்பர் மாதம் ஒன்பதாம் திகதிவரை நாலு தசாப்தங்கள் ஜேர்மனியின் கிழக்குப்பகுதி, கம்யூனிச ஆட்சியின்கீழ், ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு என்ற பெயருடன் விளங்கிற்று. அந்தக் காலங்களில், வளர்முக நாடுகளிலுள்ள கம்யூனிசக் கட்சிகள,; தங்கள் ஆதரவாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப் பரிசுகள் வழங்கி கம்யூனிச நாடுகளுக்கு அனுப்பிவைத்தன.

Continue Reading →

‘பதிவுகள்’ சிறுகதைகள் -1

பதிவுகள் சிறுகதைகள் -1

-‘பதிவுகளி’ல் வெளிவந்த சிறுகதைகளில் சில ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றன். இதுபோல் அவ்வப்போது மேலும் பல ஆக்கங்கள் , சிறுகதைகளுட்பட , இனி வரும் இதழ்களில் மீள்பிரசுரமாகும் – பதிவுகள்-

Continue Reading →

சிறுகதை: “தப்பிப் பிழைத்தல்”

கே.எஸ்.சுதாகர்கஸ்டப்பட்டு உழைக்கும் பணத்தை, தட்டிப் பறிப்பதற்கு என்று ஒரு கூட்டம் இங்கு அலைந்து திரிகின்றது.  இந்திரன் மிகவும் கடின உழைப்பாளி. இரண்டு வேலைகளுக்குப் போகின்றார். பகலில் முழு நேர வேலை. இரவில் பகுதி நேர வேலை. உழைக்கும் பணத்தை நாட்டுக்கு அனுப்புகின்றார். வீட்டுக்கு அனுப்புகின்றார். அத்தோடு தனது குடும்பத்தை மிகவும் நன்றாகவே கவனித்துக் கொள்கின்றார். வாழ்க்கையின் பெரும்பாலான நாட்கள் அவருக்கு தூக்கக் கலக்கத்திலேயே கழிகின்றது.

Continue Reading →

‘பதிவுகள்’/ ‘தமிழர் மத்தியில்’ ஆதரவுச் சிறுகதைபோட்டி முடிவுகள் 2004!

ஆதவன் தீட்சண்யாஅலர்மேல் மங்கை[‘பதிவுகள்’ மற்றும் நந்தா பதிப்பகத்தாரின் (கனடா) ‘தமிழர் மத்தியில்’ ஆதரவுடன் 2004இல் சிறுகதைப் போட்டியொன்றை நடாத்தியது. அப்போட்டியின் நடுவர்களாக பிரபல எழுத்தாளர்கள் அ.முத்துலிங்கம், என்.கே.மகாலிங்கம் ஆகியோர் இருநது பரிசுக்கதைகளைத் தேர்ந்தெடுத்தனர். அது பற்றிய விபரங்களையும், பரிசுக் கதைகளையும் ஒரு பதிவுக்காக மீள் பிரசுரம் செய்கின்றோம். – பதிவுகள்]

Continue Reading →

சிறுகதை: துக்கத்தின் உச்சம்!

செகாவ்வின் சிறுகதை: துக்கத்தின் உச்சம்!.அன்டன் செகாவ்[கதாசிரியர் பற்றி: மணிமேகலை சதீஷ்குமார் பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரியின் தமிழ்ப் பிரிவில் உதவிப் பேராசிரியராகப் பணி புரிகின்றார். அவர் மொழிபெயர்த்த (ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து)  அன்டன் செகாவ்வின் புகழ்பெற்ற சிறுகதைகளில் ஒன்றான இச்சிறுகதை மகனை இழந்த குதிரையோட்டி ஒருவரின் துயரத்தினை விபரிப்பது.] அது ஒரு மங்கலான மாலை நேரம். அப்பொழுதுதான் ஏற்றப்பட்டிருந்த தெரு விளக்குகளைச் சுற்றிச் சுழன்று கொண்டிருந்தது ஈரமான பனி. வீடுகளின் மேற்பகுதியிலும் குதிரைகளின் பின்புறத்திலும் மெல்லிய பனி அடுக்குகள் படர்ந்திருந்தன. அந்தப் பகுதி மக்களின் தோள்களையும் தொப்பிகளையுங் கூடப் பனிப்படலம் விட்டு வைக்கவில்லை. குதிரை வண்டியோட்டி ஐயோனா பொட்டாப்பாவ் வெளுத்திருந்தார். அவர் பார்ப்பதற்கு ஒரு பேயைப் போலிருந்தார். ஒரு மனித உடலை எவ்வளவுக்கெவ்வளவு வளைக்க முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு தன் உடலை வளைத்திருந்தார் ஐயோனா. அவர் தன் பெட்டியின் மீது அமர்ந்திருந்தார். அவரிடம் எந்த அசைவும் இல்லை. பனிக்குவியலே அவர்மீது நிறைந்தாலும் அதை அசைத்து உதிர்த்து விடத் தேவையில்லை என்பது போல் அமர்ந்திருந்தார். அவருடைய சிறிய குதிரையும் வெண்மையாயிருந்தது.

Continue Reading →