தொடர் நாவல்: அசோகனின் வைத்தியசாலை 19

தொடர் நாவல்: அசோகனின் வைத்தியசாலை நோயல் நடேசன்இரண்டு நாட்கள் ஓய்வுக்கு பின்னால் மீண்டும் வேலைக்கு சென்று, வழக்கம் போல் சாமுடன் வேலை செய்து கொண்டிருந்தான் சுந்தரம்பிள்ளை.  மாதத்தில் முதலாவது செவ்வாய்க்கிழமையாக இருந்ததால் நிர்வாக குழு உறுப்பினர் கூட்டத்திற்கு வருவார்கள். என்பதால் வைத்தியசாலையில் வேலை செய்பவர்கள் மத்தியில் வழக்கத்தை விட இறுக்கமான தன்மை தெரியும். வேலை செய்பவர்களின் மனங்களில் பதற்றம்,அவர்கள் நடக்கும் வேகம் வழக்திலும் அதிகமாக இருப்பதில் தெரிந்து கொள்ள முடிந்தது. நாய் பகுதி மேற்பார்வையாளரான மேவிஸ் அரைக்கால்சட்டையும் நீல பெனியனும் அணிந்து கொண்டு கரகரத்த குரலில் கட்டளைகளை இட்டுக்கொண்டிருந்தார். அந்தப் பகுதியில் வேலை செய்யும் ஜோனும் மாவினும் சிரித்தபடியே தங்கள் வழக்கமான விடயங்களைச் செய்து கொண்டிருந்தார்கள். பூனைப்பகுதியில் கெதர் வழக்கத்திலும் பார்க்க  அந்த பகுதியைச் சுத்தமாக வைத்திருந்தார். அங்குள்ள  பரிசோதனை மேசையை முகம் தெரிவது போல் துடைத்து வைத்திருந்தார்கள். கிருமிநாசினி கலந்த நறுமணம் அந்த இடத்தில் நிறைந்து இருந்தது.

Continue Reading →

தொடர் நாவல்: வேர் மறந்த தளிர்கள் (27, 28, 29 *30)

27 கைகொடுத்த இல்லம்

வே.ம.அருச்சுணன் – மலேசியாஇவர்கள் இவ்வளவு சுயநலமா இருப்பாங்கனு நான் கனவுலக்கூட நினைச்சுப் பார்க்கலிங்க!”  மனைவி கடுங்கோபங் கொள்கிறார்.  வெளிப் பகட்டுக்காகப் பல்லித்துப் பேசி, நயவஞ்சகத்தோடுப்பழகும் வேடதாரிகள் நமக்கு இனியும்  வேண்டாம் என்ற  தீர்க்கமான  முடிவுக்கு வந்து விட்டனர் கணவனும்  மனைவியும். பெற்றோர் பேசிக் கொண்டிருந்ததை, பார்த்திபன் கேட்டதும் பெரும் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைகிறான்! தான் செய்த தவற்றினால் குடும்ப மானம் காற்றில் பறந்துவிட்டதே என்று தன்னையே நொந்து கொள்கிறான். பெற்றெடுத்த தாய்க்கும், பல சிரமங்கள்பட்டு வளர்த்த அப்பாவிற்கும் எவ்வளவு பெரிய அவமானத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டேன்! யாரிடமும் தலைவணங்காத பெற்றோருக்குத் தலைகுனிவை ஏற்படுத்திவிட்டேனே என்று மிகுந்த கவலை கொள்கிறான்! தனது செயலுக்காகக்  கூனிக் குறுகிப்போகிறான்!  நான் முந்தி நீ முந்தி என்று போட்டிப் போட்டுக் கொண்டு  தனக்குப் பெண் கொடுக்க வந்த உறவினர்கள், இப்போது  கண்டும்  காணாததுபோல்  நடந்து  கொண்டது குடும்பத்தார்  எதிர்ப்பார்க்காத  ஒன்று! இதுநாள்  வரை மலைபோல் நம்பிக் கொண்டிருந்தவர்கள் தங்களை நட்டாற்றில் தவிக்கவிட்டு வேடிக்கைப் பார்க்கிறார்களே என்று எண்ணிப்பார்த்த போது அவனுக்கு உறவினர்கள் மீது கோபம் கோபமாக வந்தது!
   

Continue Reading →

தொடர் நாவல்: அசோகனின் வைத்தியசாலை 18

தொடர் நாவல்: அசோகனின் வைத்தியசாலை நோயல் நடேசன்நிர்வாகக் குழு காலோசின் ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கொடுத்திருந்த இரு கிழமைகள் வைத்தியசாலையில் தற்காலிகமாகவேனும் ஒரு தலைமை வைத்தியர் நியமிக்கப்படவில்லை. தலைமை வைத்தியர் இல்லாமல் சகல வேலையும் வழமைபோல் நடந்து கொண்டிருந்தது. கப்டன் இல்லாத போதும் எந்தத் தங்கு தடையின்றிச் செல்லும் கப்பலைப் போல வைத்தியசாலை சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. ஒவ்வொருவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளைச் செய்வதால் அறுபது வருடமாக இந்த  வைத்தியசாலை அவுஸ்திரேலியாவில் முன்மாதிரியாக நடந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும் வரும் நூற்றுக்கு மேற்பட்ட செல்லப்பிராணிகளைக் கொண்டு வருபவர்களைக் கவனித்து, அவற்றின் பிணி தீர்க்கும் உன்னதமான கடமையாற்றுவது என்பதாலும் மற்றும் இலாப நோக்கமற்று நியாயமான பணத்தில் இந்தச் சேவை நடப்பதாலும் மெல்பேனில் வாழும் பலருக்கு இந்த வைத்தியசாலையில் மரியாதையும் பற்றும் உள்ளது.  சில செல்வந்தர்கள் தங்களது செல்லப்பிராணிகளைக் கொண்டு வந்து மணிக்கணக்காக காத்திருப்பார்கள். தங்கள் செல்லப்பிராணிணிகளில் அதிக அன்பு செலுத்தியவர்கள் தங்களது சொத்துக்களை இறக்கும் போது வைத்தியசாலைக்கு எழுதி வைத்துள்ளார்கள். பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் காயமுற்ற செல்லப்பிராணிகள் இங்கு வைத்தியம் பெறுவது அடிக்கடி தகவல்களாக வெளிப்படுத்துவதால் பலரது கவனத்தைப் பெறும் இடமாகிறது. இந்த அளவு முக்கியத்துவம் பெற்ற  இடத்தை தலைமை வைத்தியர் இல்லாமல் இரண்டு கிழமை நடத்தியது நிர்வாக குழு, காலோஸ் சேரத்தின் மேல் வைத்த மரியாதையை காட்டுகிறது என சுந்தரம்பிள்ளையால் புரிந்து கொள்ள முடிந்தது.

Continue Reading →

தொடர் நாவல்: வேர் மறந்த தளிர்கள் (24, 25 & 26)

24  உறவு                   
 
வே.ம.அருச்சுணன் – மலேசியாநொந்து போயிருக்கும் மனைவிக்கு ஆறுதலாக இருக்கட்டுமே,என்பதற்காக ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை  வீட்டுக்கருகில் இருக்கும் முருகன் ஆலயத்திற்கு மனைவியைத் தவறாமல் அழைத்துச் செல்வதை,வழக்கப் படுத்திக் கொள்கிறார் தினகரன். கணவன் மனைவி இருவரும் இறைவன் சந்நிதியில் மகனின் விடுதலைக்காக  நெஞ்சுருகிப் பிராத்தனைச் செய்வர். மகன் நல்லபடியாக விடுதலை அடைந்து நலமுடன் வீடு திரும்பிவிட்டால்,பத்துமலைத் திருமுருகனுக்குக் குடும்பத்துடன் பால்குடம் எடுப்பதாகத் தினகரன் வேண்டிக் கொள்வார். வழிபாடு நடத்தப்படும் நாள் அன்று,அம்பிகை மனம் சாந்தி அடைந்தவராகக் காணப்படுவார்.மகனைப் பற்றிய சஞ்சலம் ஏதுமின்றி அமைதியுடன் இரவில் தூங்குவார். தினகரனுக்கும் மனைவியின் அமைதியான உறக்கம் கண்டு சற்று ஆறுதல் கொள்வார். முருகா….! மனைவிக்கு நீதான் அமைதியைக் கொடுக்க வேண்டும்.உன்னைவிட்டால் எங்களுக்கு வேறு கதியேது….? மனமுருகி மனதில் வேண்டிக் கொள்வார்! வழக்கம்போல் கணவன் மனைவி இருவரும் தத்தம் பணிகளுக்குக் காலையில்  சென்று மாலையில் வீடு திரும்பினாலும் பழைய சுறுசுறுப்பும் உற்சாகமும்  இல்லாமல் மனம் சோர்ந்து காணப்படுவர்! பார்த்திபன் சிறைவாசம் அனுபவிக்கும் காலத்தில் கடந்த ஒன்றரை ஆண்டில் இரண்டு முறைகள் அவனைச் சென்று கண்டு வந்தார்கள்.அவனைக் கண்டு வந்த பிறகு அம்பிகை மேலும் கவலை அடைந்தார்.இதனால் அவனைச் சென்று காண்பதை தினகரன் தவிர்த்து வந்தார்.
 

Continue Reading →

தொடர் நாவல்: வேர் மறந்த தளிர்கள் ( 20, 21, 22 & 23 )

அத்தியாயம் 20 :  நீதிமன்றம்
                
வே.ம.அருச்சுணன் – மலேசியாகணவரின் முகம் கவலையால் மேலும் வாடிப்போகிறது. வாய்ப்பேசமுடியாத  ஊமையாய்த் திகிலுடன் அமர்ந்திருக்கிறார். மிகுந்த பணச்செலவில் அமர்த்தப் பட்ட நாட்டிலுன் பிரபல வழக்கறிஞர்களின் வாதத்திறமையால் மகன் தப்பினால்தான் ஆச்சு.  அமர்த்திய வழக்கறிஞரின் வாதத் திறமைகளைத் தினகரன் மிகவும் உண்ணிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்.  பத்து நாட்கள் கோட்டுக்கும் வீட்டுக்குமாய் நடந்து நடந்து உடலும் உள்ளமும் தினகரனுக்கு அலுத்து போயிருந்தது. அம்பிகை ஒரு மன நோயாளியாகவே மாறிவிட்டிருந்தார்.  நீதிமன்றம் வழக்கத்திற்கும் மாறாகப் பார்வையாளர்கள் நிறைந்து காணப்படுகின்றனர். கடந்த பத்து நாட்களாக நடந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் நாள் இன்று! அதிகாலையிலேயே அம்பிகை கொயிலுக்குச் சென்று மகன் விடுதலையாக இறைவனிடம் வேண்டிக் கொண்டு முழு நம்பிக்கையுடன் தீர்ப்பைக் கேட்க கணவருடன் வந்திருந்தார்.  பார்த்திபன் நீதிபதி முன் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுகிறான்.நீதிபதி சில வினாடிகளில் சொல்லப் போகும் தீர்ப்பைக் கேட்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். சந்தேகத்திற்கு இடமின்றி அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் பார்த்திபன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்ததால், இறுதியில் பார்த்திபன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்படுகிறது.
 

Continue Reading →

தொடர் நாவல்: அசோகனின் வைத்தியசாலை – அத்தியாயம் 16 && 17

அத்தியாயம் 16

தொடர் நாவல்: அசோகனின் வைத்தியசாலை நோயல் நடேசன்மெல்பேனின் தெற்கேயும் தென்கிழக்கேயும் இருக்கும் டன்டினோங் மலைத்தொடர் ஒரு விதத்தில் நகரின் எல்லைச் சுவராக செல்கிறது. மெல்பேனின் வடக்கு, மேற்குப் பகுதிகள் சமவெளியாக பல கிலோமீட்டர் தூரம் செல்கின்றன. மெல்பேனின் கிழக்கில் மலையடிவாரங்களில் பல புற நகர்கள் அமைந்துள்ளன. மலையடிவாரங்களில் ஐந்து ஏக்கர், பத்து ஏக்கர் என காணிகளில் வீடுகட்டி வாழ்வது பலரது இலட்சியமாக இருப்பதால் டண்டினோங் மலைப் பகுதியில் பல புறநகர்கள் தோன்றியுள்ளன. இந்தப் பகுதிகளில் வாழ்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. நகரின் சந்தடிகளில் இருந்து ஒதுங்கி வாழ விரும்புவர்கள்,  சிறிய தோட்டங்களை உருவாக்கி அதன் நடுவே  தங்கள் மூதாதையாரால் தொலைத்துவிட்ட கிராமிய வாழ்கையை மீண்டும் தேடுபவர்கள், குதிரை, பசு ,ஆடு என மிருகங்களை வளர்க்க விரும்புவர்கள். இதைவிட கண்களுக்கு ரம்மியமான காட்சிகள் தேடும் வேறு சாரரரும் இந்த மலைப் பகுதிகளைத் தேடுகிறார்கள்.

Continue Reading →

நாவல்: வேர் மறந்த தளிர்கள் (14, 16, 17, 18, 19) –

 15 மகன் திரும்பல  
 
வே.ம.அருச்சுணன் – மலேசியா “நான் இருக்கும் போது உங்களுக்கு அந்த முயற்சி வேண்டாம்,உங்களுக்கு என்ன பிடிக்கும் என்று கோடிக்காட்டினா, குழம்பிப்போயிருக்கும் எனக்குச் சட்டென்றுச் சமையலைச் செய்ய ஏதுவா இருக்கும் இல்லே…?”         

 “பேசி…..நேரத்தை வீணாக்காம மளமளன்னு எதையாவது  சமை…..அம்பிகை  பசி வயிற்றைக்  கிள்ளுது…..!” சமையலில்  தனக்கு  இதுவரையில் எதுவும்  தெரியாது  என்ற சிதம்பர ரகசியத்தை அப்பட்டமாக ஒத்துக்கொண்ட  தினகரன்  மனைவியின்  முகத்தைப் பரிதாபமாகப் பார்க்கிறார்.களைப்புடன் வீடு திரும்பியிருக்கும் கணவர் முகத்தைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.
 
“என்னங்க…..தேநீர் கலக்கித் தர்றேன். முதல்ல அதைக் குடிச்சிட்டுப் பேப்பரைப் படியுங்க, அரைமணி  நேரத்திலே  உங்களுக்குப்  பிடித்தச் சமையலைச் செஞ்சிடுறேன்!” நவீன மின்சார கேத்தலில் ஏற்கனவே கொதித்திருந்த சுடுநீரில் அம்பிகை  சில நிமிடத்தில் தேநீர்  கலக்கிக் கணவரிடம் கொடுக்கிறார்.    
 
இரவு மணி  ஏழு. இன்னும்  பார்த்திபன் வீடு திரும்பாமல் இருந்தான்.அம்பிகை  சமையல்  வேலைகளில்  மும்முரம்  காட்டினாலும் வாசலை நோக்கியே அவரது கவனம் முழுமையாக இருந்தது.காலையில்  வேலைக்குச் சென்ற  மகன்  இன்னும்  இல்லம்  திரும்பாமல்  இருந்ததை எண்ணி மனம் சஞ்சலம் அடைகிறார்.
 

Continue Reading →

தொடர் நாவல்: அசோகனின் வைத்தியசாலை 15

தொடர் நாவல்: அசோகனின் வைத்தியசாலை அந்த ஞாயிற்றுக்கிழமை சுந்தரம்பிள்ளைக்கு விடுமுறை நாள்.  வீட்டில் மனைவி , பிள்ளைகளுடன் ஒன்றாக இருக்க கிடைத்த  அந்த நாளை ஓவட்ரைம் செய்வதற்கு ஒப்புக்கொண்டதால் வேலைக்கு  வந்தது மட்டுமல்லாது விடுமுறையில் இருந்த சாமையும் துணைக்காக இழுத்து வந்ததான்.  அன்று விசேடமான வேலை நாள்.  பெண் பூனைகளை மட்டும் கருத்தடை ஆபிரேசன் செய்வதற்கு வேதனத்துக்கு அப்பால் விசேடபோனசாக பணம் கிடைக்கும் என்பதால் அன்று வேலை செய்ய ஒப்புக்கொண்டிருந்தான்.  சொந்தமாக வீடு வங்கியதால் ஏற்பட்டுள்ள பெரிய வங்கிக்கடனில் இந்த பணம் சிறு துளியாக  உதவும் என்ற சிந்தனையில் ஒப்புக்கொண்ட வேலையிது. மற்றைய நாட்களைப் போல் காலை வந்து இரவுவரை வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை.
இருபது பெண் பூனைகளும் ஒரு ஆண் பூனையும் கருத்தடை ஆபரேசன் செய்ய வேண்டி இருந்தது. அதை செய்து முடித்தால் எப்போதும் வீடு செல்லலாம். ஓவ்வொரு பூனைக்கும் இவ்வளவு பணம் என்பதுதான்.

Continue Reading →

பிரெஞ்சு நாவல்: காதலன் – 10 & 11!

அத்தியாயம் -10

- மார்கெரித் த்யூரா; தமிழில -  நாகரத்தினம் கிருஷ்ணா -நாகரத்தினம் கிருஷ்ணாமரி கிளாட் கார்பெண்ட்டர்(Marie-Claude Carpenter) அமெரிக்க பெண்மணி. எனது நினைவுத்திறனை நம்புவதால் அவள் பாஸ்ட்டனைச்( Boston) சேர்ந்தவள் என்பது உறுதி. மிகவும் நிர்மலமான கண்கள். வெளிர்நீலம். 1943. இளமஞ்சள்நிறம். வயதுக்கான தளர்ச்சியில்லை, தவிர அழகானவளென்றும் ஞாபகம். முகத்திற் சட்டென்று மின்னலாய் தோன்றி மறையும், கணநேரப் புன்னகை. நன்றாக நினைவிருக்கிறது, தாழ்ந்த குரல், உரத்துபேசுவதைத் தவிர்க்கும் ரகம். நடுத்தர வயதைக் கடந்திருந்தாள், நாற்பத்தைந்துவயது.  பாரீஸின் பதினாறாவது வட்டத்தில், அல்மா(Alma)வுக்கு அருகில் வசித்துவந்தாள். அவளுடையது கடைசி மாடி, மிகப்பெரியது, எட்டிப்பார்த்து சேன்(Seine)நதியை வியக்கலாம். குளிர்காலத்தின் இரவு உணவுக்கும், கோடையில் மதிய உணவுக்கும் அங்கு சென்றதுண்டு. அவற்றைப் பாரீஸ் நகரத்திலிருந்த உயர்ரக உணவு விநியோக விடுதிகளிலிருந்து தருவிப்போம். பெரும்பாலும் அவை தரமானவை என்பது உறுதி, ஆனால் வயிறு நிறைந்ததில்லை.

Continue Reading →

நாவல்: அசோகனின் வைத்தியசாலை (14)

இரண்டாம் பாகம்

நோயல் நடேசன்சுந்தரம்பிள்ளை வேலைக்கு சேர்ந்து எட்டு மாதங்கள் ஆகிவிட்டன. மனைவியும் வேலையில் சேர்ந்து பணம் சம்பாதிப்பதால் குடும்பம் வசதியாக வாழ முடிந்தது. இரண்டு பேரின் சம்பளப் பணத்தில் பிள்ளைகளின் பாடசாலை ,வீட்டு வாடகை ,குடும்பச் செலவு என செலவு செய்த பின்பும் கையில் பணம் சேமிப்பாக மிஞ்சியது. இதனால் வீட்டுக்குச்  சொந்தகாரராக வேண்டும் என்ற ஆசை தொத்திக் கொண்டது. எலி வளையானாலும் தனி வளை தேவை என்ற நினைப்பில்  தற்பொழுது இருக்கும் வாடகை வீட்டை விட்டு  சொந்தமாக வீடு வேண்டும் என்ற நினைப்பு மனத்தில்  வந்து விட்டது. அவுஸ்திரேலியாவில் குடி வந்தவர்களின் பொதுவான கனவு, மெய்ப்படுத்த விரும்பி வீட்டுக்  கடனுக்கு, வங்கிகளை அணுகிய போது ‘கவலை வேண்டாம்’ எந்த பிரச்சனையும் இல்லாமல்  கடன் தருவதாக கூறினார்கள்.

Continue Reading →