(நூல்வெளி.காம்) எழுத்தாளர் ஞாநி மறைவு!

(நூல்வெளி.காம்) எழுத்தாளர் ஞாநி மறைவு! பத்திரிகையாளர், எழுத்தாளர், அரசியல் விமர்சகர், நாடகக் கலைஞர் என பல்வேறு முகங்கள் கொண்டவர் ஞாநி சங்கரன். பரீக்‌ஷா நாடகக் குழுவை 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிறார். அதன் மூலம் பல்வேறு சமூக நோக்குள்ள வீதி நாடகங்களையும், மேடை நாடகங்களையும் நிகழ்த்தியுள்ளார்.

1954ம் ஆண்டு செங்கல்பட்டில் பிறந்தவர். அங்குள்ள புனித சூசையப்பர் பள்ளியில் படித்தார். பின்பு கல்லூரிக் கல்வியை சென்னை கிறித்துவக் கல்லூரியில் படித்திருக்கிறார். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் விளம்பர்ப பிரிவில் பணியாற்றியவர், இதழியல் பட்டயப் படித்து பின்பு அதே நாளிதழில் நிருபராகவும் பணியில் சேர்ந்தார். அதன் பிறகு பல்வேறு ஊடகங்களில் பணியாற்றிய காலத்தில் அரசியல் விமர்சனக் கட்டுரைகள் எழுதி அவருக்கென ஒரு தனி பாணியை உருவாக்கினார். அவருடைய ஞான பானு என்கிற பதிப்பகத்தின் மூலம் அவருடைய படைப்புகள் அனைத்தையும் புத்தகமாக கொண்டுவந்தார். பல்வேறு பத்திரிகைகளுக்கு கெளரவ ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். கடைசியாக அவர் தினமலர் நாளிதழின் இணைப்புப் பிரதியான ‘பட்டம்’ இதழின் ஆலோசகராக பணியாற்றினார்.

Continue Reading →

கிளிநொச்சி: “ரசஞானி” லெ. முருகபூபதி பற்றிய ஆவணப்படம் கிளிநொச்சியில் திரையிடல்!

எழுத்தாளரும் ஊடகவியலாளருமான லெ. முருகபூபதி பற்றிய ஆவணப்படம் – “ரசஞானி” கிளிநொச்சியில் திரையிடப்படவுள்ளது. கிளிநொச்சி, பழைய ஆஸ்பத்திரி மருந்தகத்துக்கு அருகில் உள்ள மண்டபத்தில் எதிர்வரும் சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் இந்தப் படத்தை இயக்கிய ‘மறுவளம்’ எஸ். கிருஸ்ணமூர்த்தியும் கலந்து கொள்கிறார். இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து அவுஸ்ரேலியாவில் வாழும் முருகபூபதி நீண்டகாலமாக வீரகேசரி பத்திரிகையில் பணியாற்றியவர். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கியத்தில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார். இதுவரையில் 25 புத்தகங்களுக்கு மேல் பிரசுரமாகியுள்ளன. பல நூற்றுக்கணக்கான பதிவுகளையும் கட்டுரைகளையும் எழுதியிருக்கும் முருகபூபதி, சமூகச் செயற்பாடுகளிலும் ஆர்வத்தோடு ஈடுபட்டு வருகிறார். இலங்கை மாணவர் கல்வி நிதியம் என்ற அமைப்பை நண்பர்களுடன் இணைந்து உருவாக்கி, அதன் மூலம் பல ஆயிரக்கணக்கான பிள்ளைகளுக்கு கல்விக்கான உதவிகளைச் செய்து வருகிறார்.

Continue Reading →

சென்னை: சர்வதேச புத்தகக் கண்காட்சியில் எம்.ரிஷான் ஷெரீப் மொழிபெயர்ப்பில் ‘எனது தேசத்தை மீளப் பெறுகிறேன்’

சென்னை: சர்வதேச புத்தகக் கண்காட்சியில் எம்.ரிஷான் ஷெரீப் மொழிபெயர்ப்பில் 'எனது தேசத்தை மீளப் பெறுகிறேன்'

அன்பின் ஆசிரியருக்கு, இன்று இந்தியா,சென்னையில் ஆரம்பமாகியிருக்கும் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் ‘எனது தேசத்தை மீளப் பெறுகிறேன்’ எனும் எனது புதிய தொகுப்பு வெளியாகியிருக்கிறது.  என்னால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட சர்வதேச புகழ்பெற்ற இருபத்திரண்டு ஆபிரிக்க எழுத்தாளர்களின் முப்பது உலகச் சிறுகதைகள் அடங்கிய பெருந் தொகுப்பாக அமைந்திருக்கும் இந் நூலை இந்தியாவின் பிரபல பதிப்பகங்களுள் ஒன்றான ‘வம்சி’ பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

எனது ஐந்து வருடங்களுக்கும் மேற்பட்ட,  உலகப் புகழ்பெற்ற ஆபிரிக்க சிறுகதைகள் குறித்த வாசிப்பில், மனதை பெரிதும் ஈர்த்தவையும், பாதித்தவையுமே என்னால் இங்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. மேற்கத்தேய ஊடகங்களில் நர மாமிசம் உண்ணும் காட்டுமிராண்டிகளாகவும், வன்முறையாளர்களாகவும், ஒழுக்கமற்றவர்களாகவும், மனிதாபிமானமற்றவர்களாகவும் சித்தரிக்கப்படும் ஆபிரிக்கர்களையே நாம் பெரும்பாலும் கண்டிருக்கிறோம்.  ஆனால் அவர்கள் உண்மையில் அவ்வாறானவர்கள் அல்ல. நேர்மையும், மனிதாபிமானமும் மிக்க அம் மக்களது நிஜ சொரூபத்தையே இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள் விவரிக்கின்றன. இந்த உண்மையானது, தமிழ் வாசகர்களிடத்திலும் கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இச் சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன்.

Continue Reading →

மெல்பனில்: ஆவணப்பட இயக்குநர் – தயாரிப்பாளர் கனடா மூர்த்தி அவர்களுடன் சந்திப்பும் கலந்துரையாடலும்

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக்கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் இலக்கியச்சந்திப்பும் வாசிப்பு அனுபவப்பகிர்வும் கலந்துரையாடலும் எதிர்வரும் 19 ஆம் திகதி (19-11-2017) ஞாயிற்றுக்கிழமை மெல்பனில் VERMONT SOUTH COMMUNITY HOUSE (Karobran Drive, Vermont South, Victoria 3133) மண்டபத்தில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும்.சிவாஜி ஒரு பண்பாட்டியற் குறிப்பு – ஜெயகாந்தன் உலகப்பொது மனிதன் ஆகிய ஆவணப்படங்களை தயாரித்தவரும், சிங்கப்பூர் தேசிய தொலைக்காட்சிக்காக குறும்படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் இயக்கித் தயாரித்தவருமான எழுத்தாளர் ‘கனடா’ மூர்த்தி அவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்துள்ளார். ‘கனடா’ மூர்த்தி அவர்களுடனான சந்திப்பும் கலந்துரையாடலும் எதிர்வரும் 06-01-2018 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு மெல்பனில்

Clayton Community Centre Library Meeting Room மண்டபத்தில் (9-15, Cooke Street , Clayton, Victoria – 3168 ) சங்கத்தின் தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியன் தலைமையில் நடைபெறும்.

இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்
மின்னஞ்சல்: atlas25012016@gmail.com
இணையத்தளம்: www.atlasonline.org

Continue Reading →

PUTHIYA VELICHAM’S FREE TRAINING WORKSHOPS

புதிய வெளிச்சம் ஒழுங்குசெய்யும் இலவச பயிற்சிப் பட்டறைகள்!Dr. Jayanthisri Balakrishnan is one of Tamil Nadu’s renowned mental health counselor and motivational speaker. Last year, she visited 18 war-impacted regions in Sri Lanka, and provided counsel to widows, teachers, and students who were impacted by war. She gave a poignant and powerful oration to the attendees in an effort to heal the psychological trauma experienced by the community members organized by Puthiya Velicham.

In January 2018, Puthiya Velicham will be holding similar workshops covering three major topics within the Jaffna, Mullaithivu, Kilinochchi, Mannar, and Vavuniya districts. These training workshops will be led and directed by Dr. Jayanthisri Balakrishnan along with others from Canada and abroad. Along with these speakers, we will also be collaborating with professors and other industry experts within the Jaffna district.

Below is a breakdown of the three major themes for the workshops:

  1. Student workshops for students who completed their A/L

  2. Educational training workshops for teachers

  3. Farmer workshops on Natural/Ecological farming methods – As a result January 8 – 14 will be considered “Ecological Agriculture Awareness Week” in the North and East of Sri Lanka.

Each workshop has been designed to accommodate 100 participants, and will be held from January 2 – 12 in over 10 locations in each of the listed districts.

Continue Reading →

புதிய வெளிச்சம் ஒழுங்குசெய்யும் இலவச பயிற்சிப் பட்டறைகள்!

புதிய வெளிச்சம் ஒழுங்குசெய்யும் இலவச பயிற்சிப் பட்டறைகள்!25 – 12 – 2017. – தமிழகத்தைச்சேர்ந்த சிறந்த உளநலம் சார்ந்த பேச்சாளரான பேராசிரியர் திருமதி ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்கள் கடந்த வருடம் இலங்கைக்கு வருகை தந்து சுமார் 18 நிலையங்களில் போரால் பாதிக்கப்படட மக்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரை ஆற்றுப்படுத்தும் வகையிலான உரைகளை ஆற்றி அவர்களின் உளநல மேம்பாட்டை வளர்ப்பதில் பெரும் பங்கு ஆற்றியிருந்தார். புதிய வெளிச்சம் இந்த செயற்பாடுகளை ஒழுங்குசெய்திருந்தது. அந்த வகையில் எதிர்வரும் தைமாதம், யாழ்ப்பாணம் முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களை சேர்ந்த பயனாளிகளுக்கு மூன்று பிரிவுகளில் இலவச பயிற்சிப் பட்டறைகளை புதிய வெளிச்சம் ஒழுங்குசெய்கிறது. இந்த பயிற்சிப் பட்டறைகளை நடத்த இந்தியாவில் இருந்து பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் தலைமையிலான வளவாளர்களுடன், தமிழ் நாட்டிலிருந்து பயிற்றினர் விவசாயிகள் ஐக்கிய ராச்சியம் மற்றும் கனடாவில் இருந்தும் வளவாளர்கள் வருகை தர உள்ளார்கள். இவர்களுடன் யாழ்ப்பாணத்ததை சேர்ந்த துறைசார் வல்லுனர்களையும் இணைத்தே இந்த பயிற்சிப்பட்டறைகளை ஒழுங்கு செய்கிறோம்.

கீழ்வரும் பிரிவுகளில் பயிற்சிப் பட்டறைகள் இடம்பெற உள்ளன,

1. பாடசாலைக் கல்வியை பூர்த்திசெய்த இளைஞர் யுவதிகளுக்கான   பயிற்சிப் பட்டறை.
2. ஆசிரியர்களுக்கான கற்பித்தல்  பயிற்சிப் பட்டறை.
3. விவசாயிகளுக்கான இயற்கைவிவசாய பயிற்சிப் பட்டறை.- இதன் மூலம் ஜனவரி 8ஆம் திகதிமுதல் ஜனவரி 14ஆம் திகதிவரை “இயற்கை விவசாய விழிப்புணர்வு வாரம்” ஆக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கு முழுவதும் தொடர் கருத்தரங்குகளை நடத்தவுள்ளோம்

ஒவ்வொரு பிரிவுகளிலும் நூறு பேர் பங்குபற்ற கூடியவாறு, ஜனவரி 2ஆம் திககி முதல் 12ஆம் திகதிவரை, ஒவ்வொரு மாவட்டங்களிலும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இந்த பயிற்சிப் பட்டறைகளை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் புதியவெளிச்சம் ஒழுங்குசெய்யும் இந்த பயிற்சிப்பட்டறைகள் சரியான வழியில், பயன்பெற வேண்டியவர்களை சென்றடைவதில் மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், வடமாகாண கல்வி அமைச்சு, கல்வித் திணைக்களங்கள், பாடசாலைகள், யாழ்ப்பல்கலைக்கழக விவசாய பீடம் என்பவற்றின் ஒத்துழைப்பை பெற்றுள்ளோம்.

Continue Reading →

பாரதி புத்தகாலயத்தின் புத்தாண்டுக் கொண்டாட்டம்!

பாரதி புத்தகாலயத்தின் புத்தாண்டுக் கொண்டாட்டம்! அனைவரும் திரண்டு வருக! அன்புடையீர், வணக்கம், பாரதி புத்தகாலயத்தின் சார்பில் வாசகர், எழுத்தாள்ர், பதிப்பாளர் சந்திப்பாக புத்தகங்களுடன் புத்தாண்டுக் கொண்டாட்டம் நிகழ்ச்சி…

Continue Reading →

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் மார்கழி மாத இலக்கியக் கலந்துரையாடல்: அரங்கும் கூத்தும் பிரதேச நோக்கில்

நிகழ்வுகள் , அறிவித்தல்கள்

பிரதம பேச்சாளர் உரை:
‘அரங்கும் கூத்தும்’ – திரு.ஞானம் லம்பேட்

சிறப்புபேச்சாளர்கள் உரை:
‘மட்டக்களப்புக் கலைகள்’ – கலாநிதி இ.பாலசுந்தரம்
‘முல்லைத்தீவுக் கூத்துக்கள்’ – கலாநிதி பார்வதி கந்தசாமி

ஐயந்தெளிதல் அரங்கு

“புத்தகம் புதிது” – திரு.என்.கே.மகாலிங்கம்

நாள்: 30-12-2017
நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை
இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம்
Unit 7, 5633, Finch avenue East,
Scarborough,
M1B 5k9  (Dr. Lambotharan’s Clinic – Basement)

Continue Reading →

பேசா மொழி தமிழ் ஸ்டுடியோ: தமிழ் ஸ்டுடியோ புத்தாண்டு கொண்டாட்டம்

நிகழ்வுகள் , அறிவித்தல்கள்

பேசா மொழி தமிழ் ஸ்டுடியோ: தமிழ் ஸ்டுடியோ புத்தாண்டு கொண்டாட்டம். 31-12-2017, ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணி முதல் இரவு 1 மணி வரை.

பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.
நன்கொடை : 250 ரூபாய். (கட்டாயமில்லை)

காலை 10  மணி: திரைக்கதை பயிற்சி: அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக பேராசிரியர்: ஸ்வர்ணவேல்

12:30 – 1:30 வரை உணவு இடைவேளை

மதியம் 2 மணி: எழுத்தாளர் & பத்திரிகையாளர் சமஸுடன் கலந்துரையாடல்

மாலை  4 மணி: ஒளிப்பதிவு கலந்துரையாடல்: ‘தீரன்’ ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியனுடன் ஒளிப்பதிவு குறித்து அதன் தொழில்நுட்பம் குறித்து கலந்துரையாடல்
மாலை 6 மணி: சமீபத்தில் வெளியான “ஒரு கிடாயின் கருணை மனு” திரையிடல் மற்றும் இயக்குனர் சுரேஷ் சங்கையாவுடன் கலந்துரையாடல்
இரவு 10 மணி முதல் அதிகாலை 1 மணி வரை: திரைக்கதை, இயக்கம், ஒளிப்பதிவு, இலக்கியம் குறித்து கலந்துரையாடல்: இயக்குனர் மிஷ்கினுடன் புத்தாண்டு கொண்டாட்டம்.

Continue Reading →