‘நடனத்திற்கு மிகவும் பொருத்தமான பாடல்களைத் தேர்ந்தெடுத்து வார்த்தைகளை உணர்ந்து அந்த மனநிலைகளை அபிநயத்தால் வெளிக்காட்டுவது குருவுக்கும் சீடருக்குமான மரபுசார் நுட்பமாகும். இத்தகைய சாஸ்திரீய முறைகளை மிக அழகாகவே குருவிடமிருந்து பயின்று புஷ்பாஞ்சலி, அலாரிப்பு, ஜதீஸ்வரம், சப்தம், வர்ணம், கீர்த்தனம், பதம், அஷ்டபதி, தில்லானா போன்ற அத்தனை உருப்படிகளிலும் செல்வி பிரீத்தி பவித்திரா மகேந்திரன் வித்தியாசமான தனது கலை நுட்பங்களை வெளிக்காட்டியிருந்தார்’ என்று அண்மையில் லண்டன் ‘பெக் தியட்டரில இடம்பெற்ற பரதநாட்டிய அரங்கேற்றத்தின்போது பிரதம விருந்தினாராக வருகை தந்திருந்த ஸ்ரீமதி கீதா உபத்தியா அவர்கள் தெரிவித்திருந்தார்.
அவர் மேலும் பேசுகையில் ‘நளினமும் உடல்வாகும் நிரம்பப்பெற்ற நாட்டியக் கலாஜோதி பிரீத்தி மகேந்திரனின் நடன வெளிப்பாடுகள், ஸ்ரீ மாணிக்கம் யோகேஸ்வரனின் ராகத்துடனும் சாகித்தியத்துடனும் கச்சிதமாகவே பொருந்தி, பக்கவாத்தியக் கலைஞர்களான ஸ்ரீ பிரதாப் ராமச்சந்திரனின் மிருதங்கத்தோடும், ஸ்ரீ ஞானசுந்தரத்தின் வயலின் இசையோடும், ஸ்ரீ பிச்சையப்பா ஞானவரதனின் புல்லாங்குழல் இசையுடனும் இணைந்து பார்வையாளர்களை கட்டிப்போட்டது என்றால் மிகையாகாது எனத் தெரிவித்தார். சர்வதேச ரீதியாக அறியப்பட்ட புகழ்பெற்ற நடன ஆசிரியையான ஸ்ரீமதி உஷா ராகவனை குருவாகப் பெற்ற செல்வி பிரீதி மகேந்திரனின் நடனம் வர்ணிக்கத் தக்க வசீகரமான முறையில் அவரது முதலில் அரங்கேறும்; அரங்கேற்றம் போன்றல்லாது, நாட்டியத்தில் நீண்ட அனுபவம் கொண்ட நர்த்தகியாகத் திகழ்ந்தார் என்றும் பாராட்டினார். பிரீதி மகேந்திரனின் சில நடனங்களுக்கு அவரின் அண்ணன் டாக்டர் மேவின் மகேந்திரனும் மிருதங்கத்தை வாசித்து மெருகூட்டியமை மிகவும் சிறப்பைக் கொடுத்தது’ என்றும் மேலும் வியந்து பேசியிருந்தார்.
நான்கு நூல் அறிமுக நிகழ்வு: Scarborough Civic Centre, 150 Borough Dr, Scarborough, ON, M1P 4N7 முகவரியில் ஒக்ரோபர் 28, 2017 சனிக்கிழமை, பி.ப.…
இடம்: 08 Shadlock St. Unit 5A Markham, On. L3S 3K9 (On Steels Ave E between Middlefield Rd and Markham Road)
திகதி: ஞாயிறு, ஒக்டோபர் 22, 2017
நேரம்: பி.ப 3.00 – 5.30
ஆர்வமுள்ள அனைவரையும் நூல் வெளியீட்டு நிகழ்விலும் அதனைத் தொடர்ந்து தேனுகாவுடனான கருத்துரையாடலிலும் பங்குபற்றுமாறு அன்புடன் அழைக்கின்றோம். நூலுக்கான குறைந்தபட்ச அன்பளிப்பு: $ 40.00
யாழ். இந்துக் கல்லூரிச் சங்கம் – கனடாவும் நூலக நிறுவனமும்
தொடர்பு: அருண்மொழிவர்மன்: 416 854 6768; தயாநிதி: 647 298 1894; பிரேமச்சந்திரா 647 779 3502
நிகழ்ச்சி நிரல்
(1) உலகம் பலவிதம் நூல் அறிமுகமும் வெளியீடும் (ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளையின் இந்து சாதன எழுத்துக்கள், பதிப்பாசிரியர் சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார், யாழ் இந்துக் கல்லூரி 125ம் ஆண்டுவிழா வெளியீடு)
வரவேற்புரை: அருண்மொழிவர்மன்
தலைமை உரை: பேராசிரியர் சேரன்,
நூல் வெளியீடு
பேச்சாளர்கள்:
1.பேராசிரியர்,நா.சுப்பிரமணியன்: ம .வே. திருஞானசம்பந்தப்பிள்ளையின் நாவல்களும் தமிழ் உரைநடையும்
2. க.சண்முகலிங்கம். சமூகவியலாளர், முன்னாள் தமிழ் விவகார,,இந்து கலாசார அமைச்சின் செயலாளர், இலங்கை:
சமூகவியல்,,பார்வையில் ம .வே .திருஞானசம்பந்தப்பிள்ளையின் படைப்புகள்
3.,கலாநிதி மைதிலி தயாநிதி: காலனியம்,காலனிய எதிர்ப்பு பின்னணியில் ம.வே.,திருஞானசம்பந்தப்பிள்ளையின் பத்திகளில் பெண்குறித்த கருத்துக்கள்
4. ஆ. சிவநேசச்செல்வன். முன்னாள் ஆசிரியர்,வீரகேசரி,தினக்குரல்: பழைய இந்து சாதனம் இதழ்களை எவ்வாறு காப்பகப்படுத்தினோம்?
5. வ.ந.கிரிதரன். எழுத்தாளர், ஆசிரியர் ,பதிவுகள் இணைய இதழ்: இலக்கியம் ஒரு காலக்கண்ணாடி(ம .வே . திருஞானசம்பந்தப்பிள்ளை படைப்புகளை முன் வைத்து)
6. எஸ்.கே.விக்னேஸ்வரன். முன்னாள் முகாமைத்துவ ஆசிரியர், சரிநிகர் வார இதழ்: பத்திரிகையாளராகவும் , பத்தி எழுத்தாளராகவும் ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளை
கருத்துப் பரிமாற்றம்
நன்றி உரை,–,அருண்மொழிவர்மன்
-toronto tamilsangam <torontotamilsangam@gmail.com>
தகவல்: பிறேமச்சந்திரா
எனது அன்பின் தமிழ் சிறுகதைகள் எழுதுவதில் ஆர்வம் உள்ள தமிழ் எழுத்தாளர்களே. இந்த தொகுப்பில் நீகள் எழுதிய முதுமையோடும் உங்கள் வாழக்கை அனுபவத்தோடும் இனைந்த சிறு கதைகள்…
கவிதைகள் சார்ந்து தமிழ் மொழியிலும், பிற மொழிகளிலும் பல்வேறு நூல்கள் தொடராக வெளிவந்துகொண்டிருக்கின்றன. அவை கவிதைகளாக, கவிதை பற்றிய ஆய்வுகளாக, கவிஞர்கள் சேர்ந்த தொகுப்புகளாக, கவிஞரின் தனி நூலாக என பல்வகைத் தளங்களில் உலாவருகின்றன. இந்தச் சூழ்நிலையில்தான் தமிழ்மொழிக்கு இன்னொரு புதிய வரவாக ‘1000 கவிஞர்கள் கவிதைகள்’ பெருநூல் கிடைக்கின்றது. பல்வேறு நாடுகளினைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான கவிஞர்களின் கவிதைகளினை ஒரே நூலில் காணும் வாய்ப்பினை வழங்கும் நூலே ‘1000 கவிஞர்கள் கவிதைகள்’ பெருநூலாகும்.
2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இந்த நூலுக்கான கவிதைகள் பெறுவது தொடர்பான செய்திகள் பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணைய ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் என்பவற்றில் வெளிப்படுத்தப்பட்டன. உலக அளவில் ஆகக்குறைந்தது 25 நாடுகளின் கவிஞர்களையாயினும் இணைப்பதே இப்பணியின் முதல் இலக்கு எனினும் பணி தொடங்கப்பட்டு ஒரு மாதத்திற்குள்ளாகவே பாரிய வரவேற்பு உலகெங்கிலும் இருந்து கிடைத்தது. ஒவ்வொரு தேசங்களில் இருந்தும் கவிதைகளினை பெறும்பொருட்டு அந்தந்த தேசங்களுக்கு ‘செயலாற்றுநர்’ எனும் பணியில் பலர் ஈடுபட்டனர். இலங்கை, இந்தியா போன்ற தேசங்களுக்கு மாவட்ட ரீதியாகவும், மாநில ரீதியாகவும் செயலாற்றுநர்கள் இயங்கினர். செயலாற்றுநர்களின் தீவிரமான முயற்சியினால் விரைவாகவே கவிஞர்கள் நூலுடன் இணைந்துகொள்ளத் தொடங்கினர். குறிப்பாகச் சொல்வதென்றால் இந்தியா தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களின் கவிஞர்களும் இப்பெருநூலில் இடம்பெறுகின்றனர். இலங்கையின் அனைத்துப் பிரதேச கவிஞர்களும் பெருநூலுக்கு கவிதை அளித்துள்ளனர்.
‘1000 கவிஞர்கள் கவிதைகள்’ பெருநூலில் 32 நாடுகளின் 1098 கவிஞர்கள் இடம்பெறுகின்றனர். நூலின் மொத்தப் பக்கங்கள் 1861 ஆகும். இப்பக்கங்கள் ஏ4 தாள் அளவு கொண்டவை. நூலொன்றின் மொத்த நிறை 04.415 கிலோகிராம் ஆகும். நூலினை வள்ளுவர்புரம் செல்லமுத்து வெளியீட்டகம் வெளியிடுகின்றது.
இலங்கையின் மூத்த கவிஞர்கள் என சொல்லத்தக்கவர்கள் பலரும் பெருநூலினை அலங்கரிக்கின்றனர். சேரன், சோ.பத்மநாதன், எம்.ஏ.நுகுமான், அனார் என இப்பட்டியல் நீள்கின்றது. இந்திய அளவில் மூத்த, இளைய, சினிமாசார் கவிஞர்கள் என பலரும் நூலில் உள்வாங்கப்பட்டனர். அப்துல் ரகுமான், வைரமுத்து, கலைஞர் கருணாநிதி, கமல்ஹாசன், அறிவுமதி, பா.விஜய், தாமரை என யாவரும் இப்பெருநூலில் உள்வாங்கப்பட்டுள்ளனர். நூலின் பின் அட்டைக்குறிப்பினை தமிழுலகு அறிந்த உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் வரைந்திருக்கின்றார்.
நூலில் 12 வயதுடைய பிள்ளைக்கவி முதல் தொண்ணூறு வயது கடந்த கவிஞர்கள் வரையும் இடம்பெற்றுகின்றனர். இந்தியா தமிழ்நாட்டின் மாவட்டங்கள் தவிர புதுடில்லி, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களின் கவிஞர்களும் நூலில் இடம்பெறுகின்றமை சிறப்பு.
இலக்கியப்படைப்பாளரும் பத்திரிகையாளருமான லெ.முருகபூபதியின் புதிய நூல் சொல்லவேண்டிய கதைகள் வெளியீட்டு விழாவும் முருகபூபதியின் வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் ரஸஞானி ஆவணப்படம் திரையிடலும் எதிர்வரும் 30 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5.15 மணிக்கு அவுஸ்திரேலியா மெல்பனில், பிரஸ்டன் நகர மண்டபத்தில் ( Preston City (Shire) Hall – Gower Street, Preston 3072) நடைபெறும். ‘சொல்லவேண்டிய கதைகள்’ யாழ்ப்பாணம் அல்வாயிலிருந்து வெளியாகும் ஜீவநதி இதழின் புதிய வெளியீடாகும். இந்நூல் முருகபூபதியின் 21 ஆவது நூல் என்பது குறிப்பிடத்தகுந்தது.
ரஸஞானி ஆவணப்படம் – எண்ணமும் எழுத்தும் : எழுத்தாளர் செல்லமுத்து கிருஷ்ணமூர்த்தி. ஒளி, ஒலிப்பதிவு, தயாரிப்பு: கலை, இலக்கிய ஆர்வலர் மூர்த்தி. பின்னணிக்குரல் வானமுதம் வானொலி ஊடகவியலாளர் நவரத்தினம் அல்லமதேவன்.
முருகபூபதி வீரகேசரியில் பணியாற்றிய காலப்பகுதியில் வாரவெளியீட்டில் ரஸஞானி என்ற புனைபெயரில் இலக்கியப்பலகணி என்ற பகுதியில் தொடர்ந்து பத்திக்கட்டுரைகள் எழுதியவர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது. திருமதிகள் ஜெஸி ரவீந்திரன், சாந்தநாயகி கிருஷ்ணமூர்த்தி, பவானி கிருஷ்ணமூர்த்தி, சித்ரா லயனல் போப்பகே, கமிலா ஹனிஃபா, யாழ். இந்துக்கல்லூரியின் பழையமாணவர் சங்கத்தின் விக்ரோரியா கிளையின் தலைவர் திரு.’ லயன்’ சக்தி கிருஷ்ணபிள்ளை, மூத்த கல்விமான் யூசுப் முஸ்தபா, கலாநிதி மு. ஶ்ரீ கௌரிசங்கர் ஆகியோர் மங்கல விளக்கேற்றி விழாவை தொடக்கிவைப்பர். இலங்கையின் மூத்த எழுத்தாளர் (அமரர்) மருதூர்க்கனியின் மகள் மருத்துவ கலாநிதி (திருமதி) வஜ்னா ரஃபீக், தலைமையில் நடைபெறவிருக்கும் இவ்விழா, செல்வி மோஷிகா பிரேமதாசவின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகும். செல்வி ஹரினி ஶ்ரீதரன் தமிழ்வாழ்த்துப்பாடுவார். திருமதிகள் கலாதேவி பாலசண்முகன், ரேணுகா தனஸ்கந்தா, சாந்தி சிவக்குமார், கலாநிதி கௌசல்யா அந்தனிப்பிள்ளை ஆகியோர் நூல் விமர்சனவுரை நிகழ்த்துவர்.