தமிழ் ஸ்டுடியோ.காம்: படச்சுருள் இரண்டாமாண்டு தொடக்க விழா

10-07-2016, ஞாயிறு, மாலை 5 மணிக்கு. பியூர் சினிமா அலுவலக மாடியில், 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி. வாசன் ஐ கேர் அருகில், விக்ரம்…

Continue Reading →

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை – மின்னிதழ் செய்தி!

ஆய்வுக் கட்டுரைகளை ஒருங்குறி எழுத்துருவில் ‘வேர்டு’ கோப்பாக அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: utsemagazine@gmail.com தகவல்: உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை – மின்னிதழ் செய்தி!  

Continue Reading →

அமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலகக்குறுநாவல் போட்டி 2016

அமரர் எஸ்.பொஅவுஸ்திரேலியாவில் இருந்து செயற்படும் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தினால் மறைந்த மாபெரும் எழுத்தாளரும், அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தின் பிரதம இலக்கிய ஆலோசகராக இருந்தவருமான எஸ்.பொ. அவர்களின் இரண்டாவது நினைவினையொட்டி அனைத்துலக ரீதியாக குறுநாவல் போட்டியொன்று நடாத்தப்பட உள்ளது.

போட்டிகள் பற்றிய பொது விதிகள்

1. உலகெங்கும் வாழும் தமிழ் பேசும், எழுதும் எவரும்    இப்போட்டியில் பங்கு பற்றலாம்.
2. ஒருவர் ஒரேயொரு குறுநாவலை மட்டுமே அனுப்பிவைக்க முடியும்.
3 குறுநாவல் யுனிகோட் (Unicode) எழுத்துருவில் – மின்னஞ்சல் இணைப்பாக Microsoft Word வடிவத்தில் அனுப்பப்படல் வேண்டும். மின்னஞ்சலின் subject இல் ’எஸ்.பொ நினைவுக் குறுநாவல் போட்டி- 2016’ எனக் குறிப்பிட்டு, அஞ்சலின் உட்பகுதியில் குறுநாவலின் தலைப்பு, போட்டியாளரின் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் தரப்படல் வேண்டும். போட்டியாளரின் புகைப்படம், மற்றும் சிறுகுறிப்பு இணைத்தல் வேண்டும்.
4. போட்டியாளரின் சொந்தப் படைப்பாக இருத்தல் வேண்டும். அனுப்பப்படும் குறுநாவல் ஏற்கனவே வேறு போட்டிகளுக்கு அனுப்பப்பட்டதாகவோ, பிரசுரிக்கப்பட்டதாகவோ அல்லது வெளியிடப்பட்டதாகவோ இருத்தல் கூடாது.
5. போட்டிக்கு அனுப்பப்படும் குறுநாவல்களை இணையத்தளங்களில் பிரசுரிக்கவும், நூலாக வெளியிடவும் அக்கினிக்குஞ்சு நிர்வாகத்தினருக்கு உரித்துண்டு.
6. குறுநாவல் 4,000 வார்த்தைகளுக்குக் குறையாமலும் 8,000 வார்த்தைகளுக்குக் கூடாமலும் அமைதல் வேண்டும்.
7. அக்கினிக்குஞ்சு நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

இப்போட்டிகளுக்கான பரிசு விபரங்கள் பின்வருமாறு:

முதலாம் பரிசு – 400 அவுஸ்திரேலிய வெள்ளிகள்
இரண்டாம் பரிசு- 350 அவுஸ்திரேலிய வெள்ளிகள்
மூன்றாம் பரிசு – 250 அவுஸ்திரேலிய வெள்ளிகள்
சிறப்புப் பரிசு – தேர்வு பெறும் ஐந்து படைப்புகள் ஒவ்வொன்றிற்கும் 150 அவுஸ்திரேலிய வெள்ளிகள்.

முடிவுத்திகதி: 30.09.2016

Continue Reading →

நிகழ்வுகள்: கனவு இலக்கிய வட்டம்: ஜீன் மாதக் கூட்டம்: நூல் அறிமுகம்!

கனவு இலக்கிய வட்டத்தின் ஜீன் மாதக் கூட்டம்        16/6/16 அன்று மாலை சக்தி பில்டிங், அம்மா உணவகம் அருகில், பாண்டியன் நகரில், திருப்பூர்  நடந்தது. கலாமணி கணேசன்(…

Continue Reading →

கனடாத்தமிழ் இலக்கியம்: ழகரம் சஞ்சிகை மீண்டும் வெளிவரவுள்ளது; வாழ்த்துகள்!

மீண்டும் 'ழகரம்'மீண்டும் ழகரம் சஞ்சிகை எதிர்வரும் ஜூன் 19ந்திகதி வெளிவரவுள்ளது. கனடாத் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்த சஞ்சிகைகளில் ‘ழகரம்’ சஞ்சிகைக்கும் முக்கியமானதோரிடமுண்டு. ஆனி 1997, ஆடி 1997, ஆவணி/புரட்டாதி 1997 & ஐப்பசி 1997 என நான்கு இதழ்களே வெளிவந்துள்ள போதிலும் கனடாத்தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்த சஞ்சிகை.  ‘ழகரம்’ சஞ்சிகையினை எழுத்தாளர் அ.கந்தசாமி அவர்களே சக எழுத்தாளர்களான கவிஞர் திருமாவளவன், பொன்னையா விவேகானந்தன் ஆகியோருடன் இணைந்து  வெளியிட்டு வந்தார். எழுத்தாளர் அ.கந்தசாமி எழுபதுகளில் யாழ் நகரில் புகழ்பெற்ற பெளதிக ஆசிரியராக விளங்கியவர். கனடா வந்த பிறகுதான் இவரது இலக்கியப் பங்களிப்பு பற்றி அறிந்து கொண்டேன். கவிதைகள், தொடர்கதைகள் என பலவகைப்படைப்புகளைக் கனடாவில் வெளிவந்த சஞ்சிகைகள், பத்திரிகைகளில் தொண்ணூறுகளில் எழுதியிருக்கின்றார். ‘கானல் நீர்க்கனவுகள்’ என்னும் கவிதை நூலினை வெளியிட்டிருக்கின்றார்.  ‘காலத்தின் பதிவுகள்’ என்னும் கவிதைத்தொகுதி மலையன்பன், ரதன் ஆகியோரின் கவிதைகளுடன் இவரது கவிதைகளையும் உள்ளடக்கி வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே வெளிவந்த ‘ழ’கரம் சஞ்சிகை இதழ்களைப் ‘படிப்பகம்’ இணையத்தளத்தில் வாசிக்கலாம். அதற்கான இணையத்தள முகவரி: http://www.padippakam.com/index.php?option=com_sectionex&view=category&id=14&Itemid=54#catid227

‘ழகரம்’ இதழ்கள் பற்றிய சுருக்கமான விபரங்கள் வருமாறு:

இதழ் 1 – ஆனி 1997:

உள் அட்டையில் விளம்பரத்துக்குப் பதில் கவிதை: திணிப்பு – ராவுத்தர். முதலாவது பக்கத்தில் ஒரு பக்க ழகரம் குழுவினரின் ஆசிரியத்தலையங்கம் ‘குவியம்’ என்னும் பெயரில் வெளியான அனைத்து இதழ்களிலும் வெளியாகியுள்ளது. ஆனால் ழகரம் குழு உறுப்பினர்கள் யார் யார் என்னும் விபரம் அறிவிக்கப்படவில்லை.

இதழ் ஒன்றில் வெளியான ஆக்கங்கள் விபரம் வருமாறு:

கவிதை: சந்தனக்கல் – பொன்னையா விவேகானந்தன்.
கவிதை: மின்மினிப்புள்ளி – அ.கந்தசாமி
பத்தி: கரிச்சான் கோலங்கள் – கரிச்சான் குஞ்சன்.
கவிதை: – சம்பாத்தியம் – நிலா குகதாசன் (இவர் அமரராகிவிட்டார்).
கவிதை: வேனில் – திருமாவளவன்
கவிதை: சங்காரம் – சிவவதனி பிரபாகர்
கட்டுரை: பேர்ரோல்ற் பிறேஷ்ட் – P.விக்கினேஸ்வரன்
கவிதை: பொழுது – சகாப்தன்
மொழிபெயர்ப்புக் கவிதை: கவிதையை நேசிக்கும் சிலர் – மூலம்: விஸ்லாவா ஸிம்ப்ரோஸ்கா; தமிழில் – ஜெகன்
கட்டுரை: கடலின் மீது ஒரு வண்ணத்துப் பூச்சி – சேரன் (பிரமிள் நினைவு தினக்கட்டுரையின் சுருக்கிய வடிவம்).
சிறுகதை: நானும் கேஸ்டினாவும் ஒரு பந்தயக் குதிரையும் – சக்கரவர்த்தி (சிறுகதை என்னும் பெயரில் வெளியான நெடுங்கதை; 14 பக்கங்கள்)
கட்டுரை: இளங்கறுவலின் பனிவயல் உழவு

ஓவியம் : கருணா

Continue Reading →

முனைவர் நீலமலர் இலக்குவனாரின் நூல் அறிமுகம்.

An Endless Refugeeமுனைவர் நீலமலர் இலக்குவனாரின் நூல் அறிமுகம்.கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவில், தமிழகத்தில் இருந்து வருகை தந்த கலாநிதி நீலமலர் செந்தில்குமார் அவர்களின்  An Endless Refuge   என்ற ஆங்கில் நூல் அண்மையில் ரொறன்ரோவில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்விற்குக் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் உபதலைவர் எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்கள் தலைமை தாங்கினார். இலக்கிய ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டு இந்த நிகழ்வைச் சிறப்பித்தனர். தலைமை தாங்கிய எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் உரையில் இருந்து ஒரு பகுதியை இங்கே தருகின்றேன்.

கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த பல எழுத்தாளர்களைப் பலதடவைகள் கௌரவித்திருக்கின்றது. அந்த வகையில் கலாநிதி நீலமலர் அவர்களையும் கௌரவிக்கும் பாக்கியம் இன்று எழுத்தாளர் இணையத்திற்குக் கிடைத்திருக்கின்றது. கலாநிதி நீலமலர் அவர்களின் இலக்கியக் கருத்துரையைச் செவிமடுக்க வந்திருக்கும் உங்கள் எல்லோருக்கும் வணக்கம்கூறி, அவரைப்பற்றியும் அவரது ஆக்கங்கள் பற்றியும் சில வார்த்தைகள் குறிப்பிடலாம் என நினைக்கின்றேன்.

கலாநிதி நீலமலர் அவர்களின் தாத்தாதான் தமிழ் அறிஞர் சி. இலக்குவனார் அவர்கள். தமிழ் மீது கொண்ட அதீத பற்றுக் காரணமாக இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது பணி நீக்கம் செய்யப்படாலும் மனம் தளராது தொடர்ந்தும் தாய் மொழிக்காகப் போராடியவர். அவர் தனது மகனுக்கும் மறைமலை அடிகளாரின் பெயரையே சூடியிருந்தார். கலாநிதி நீலமலர் அவர்களின் தந்தையான மறைமலை இலக்குவனார் தமிழ் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். அவரது உரையைப் பல தடவைகள் நான் கேட்டிருக்கின்றேன். குறிப்பாக உலகத்தாய் மொழி நாளன்று சண் தொலைக்காட்சியில் அவர் ஆற்றிய உரை மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. கலாநிதி நீலமலரின் தாயாரும் ஒரு பேராசிரியராவார். திருமதி நீலமலர் செந்தில்குமார் அவர்கள் எதிராஜ் கல்லூரியில் கல்வி கற்றவர். சென்னையில் வசிக்கும் இவர் தொடக்கத்தில் விளம்பர நிறுவனம் ஒன்றில் பணியாற்றியவர். தற்போது அண்ணா பல்கலைக் கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணி புரிகின்றார்.

Continue Reading →

தாய் வீடு பத்திரிகையும் சுயாதீன கலை திரைப்பட மையமும் இணைந்து ரொறன்ரோ வில் நடத்தும் சர்வதேச தமிழ் குறுந்திரைப்பட விழா.

12:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, Scarborough Civic Centre, 150 Borough Dr,, Toronto, Ontario M1P 4N7மேலதிக தொடர்புகளுக்கு: 416 450…

Continue Reading →

கற்சிலைமடு மாணவர்களுக்குத்தேவை ஒரு நூலகம்!

– கற்சிலைமடு மாணவர்களுக்காக நூலகமொன்றினைச் சிறிய அளவில் ஆரம்பிக்க நண்பர் ஜெயக்குமரன் முயற்சிகளை ஆரம்பித்திருக்கின்றார். அது பற்றி அவர் முகநூலில் இட்டிருந்த பதிவினை இங்கு நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.…

Continue Reading →

கற்சிலைமடுவின் குழந்தைகள்!

கற்சிலைமடு பாடசாலையில் கல்வி கற்கும் பிள்ளைகளில் யுத்தத்தில் பெற்றோரை இழந்த தரம் 8 முதல் க.பொ. த உயர்தரம் வரை கல்வி கற்கும், 15 பிள்ளைகளுக்கு வழங்குவதற்கென கற்றல் உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு 04.06.2016 சனிக்கிழமை கற்சிலைமடுவில் இடம்பெற்றது

கற்சிலைமடு பாடசாலையில் கல்வி கற்கும் பிள்ளைகளில் யுத்தத்தில் பெற்றோரை இழந்த தரம் 8 முதல் க.பொ. த உயர்தரம் வரை கல்வி கற்கும், 15 பிள்ளைகளுக்கு வழங்குவதற்கென கற்றல் உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு 04.06.2016 சனிக்கிழமை கற்சிலைமடுவில் இடம்பெற்றது

கற்சிலைமடு பாடசாலையில் கல்வி கற்கும் பிள்ளைகளில் யுத்தத்தில் பெற்றோரை இழந்த தரம் 8 முதல் க.பொ. த உயர்தரம் வரை கல்வி கற்கும், 15 பிள்ளைகளுக்கு வழங்குவதற்கென கற்றல் உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு 04.06.2016 சனிக்கிழமை கற்சிலைமடுவில் இடம்பெற்றது. கனடாவில் வதியும் எழுத்தாளர் வ.ந கிரிதரனின் “குடிவரவாளன்” நாவலின் அறிமுகநிகழ்வின் மூலம் பெற்றுக்கொண்ட ஒரு தொகைப்பணமே நூலாசிரியரின் வேண்டுகோளுக்கு ஏற்ப இச்செயற்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் சு.குணேஸ்வரன், சித்திராதரன் ஆகியோர், குறித்த பிள்ளைகளின் கல்விச்செயற்பாட்டுக்கு பொறுப்பாகச் செயற்படும் திரு தர்சன் (ஆசிரியர்) அவர்களை கற்சிலைமடுவில் நேரில் சந்தித்து கற்றல் உபகரணங்களை ஒப்படைத்தனர்.

Continue Reading →