இலங்கையில் நடைபெறவுள்ள வ.ந.கிரிதரனின், (தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள) ‘குடிவரவாளன்’ நாவலின் வெளியீட்டு நிகழ்வு பற்றி…

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'இலங்கையில் வ.ந.கிரிதரனின், தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள  ‘குடிவரவாளன்’ நாவலின்  வெளியீட்டு நிகழ்வு பற்றி…

நண்பர்கள் மற்றும் கலை, இலக்கிய ஆர்வலர்கள் அனைவருக்கும் வணக்கம். எதிர்வரும் 15.05.2016 , ஞாயிற்றுக்கிழமை அன்று  மாலை 3.30 மணிக்கு, ஞானாலயம், பருத்தித்துறை என்னும் முகவரியில் என்னுடைய நாவலான ‘குடிவரவாளன்’ நாவலின் வெளியீடும், கருத்தரங்கும் நடைபெறவுள்ளன.

எழுத்தாளர் குப்பிழான் ஐ.சண்முகன் தலைமையில் நடைபெறவுள்ள விழாவில், எழுத்தாளர் அறிமுகவுரையினை சு.குணேஸ்வரனும்,  அவரைத்தொடர்ந்து நூல் மதிப்பீட்டு உரைகளை திரு.ஜி.ரி. கேதாரநாதன் ,  வேல். நந்தகுமார் ஆகியோரும் ஆற்றுவார்கள். நிகழ்வின் முடிவில் நன்றியுரையினை சித்திராதரன் ஆற்றுவார்.

அதற்கான அழைப்பிதழினை இத்துடன் இணைத்துள்ளேன். கலை, இலக்கிய ஆர்வலர்கள் அனைவரினதும் ஆக்கபூர்வமான பங்களிப்பில் நிகழ்வு வெற்றிகரமாக நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்நிகழ்வினை ஏற்பாடு செய்ததற்காக ‘உயில் & சித்தம்’ குழுவினருக்கும், எழுத்தாளர் சு.குணேஸ்வரனுக்கும், மற்றும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் எழுத்தாளர்கள் குப்பிளான் ஐ.சண்முகன், ஜி.ரி.கேதாரிநாதன், வேல்.நந்தகுமார் மற்றும் சித்திராதரன் ஆகியோருக்கும் நன்றி! நன்றி! நன்றி!

இந்நிகழ்வில் நூல் விற்பனையில் கிடைக்கப்பெறும் பணம் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்விச்செலவுக்கு வழங்கப்படும்.

இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்கும் கலை, இலக்கிய ஆர்வலர்கள்  அனைவருக்கும் நன்றி!


‘குடிவரவாளன்’ நாவலின் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிரதிகள் இலங்கையிலும் விற்பனைக்குள்ளன. நூலின் பிரதிகளை வாங்க விரும்புபவர்கள் எழுத்தாளர் குணேஸ்வரன் அவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். அவருடைய அலைபேசி இலக்கம்: +94776120049

கனடா நண்பர்கள் கவனத்துக்கு: இந்நாவலை வாங்க விரும்பும் நண்பர்கள் முகநூலின் தகவல் பெட்டி மூலம் தொடர்பு கொள்ளலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ளலாம். எனது மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com

தமிழகம் மற்றும் ஏனைய நாடுகளில் வசிக்கும் , நூலினை வாங்க விரும்பும் நண்பர்கள் ஓவியா பதிப்பகத்தாருடன் தொடர்பு கொள்ளுங்கள். அவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான விபரங்கள் வருமாறு:

வதிலைப்பிரபா: Oviya Pathippagam, 17-16-5A, K.K.Nagar, Batlagundua – 642 202 Tamil Nadu, India. Phone: 04543 – 26 26 86 | Cell: 766 755 711 4, 96 2 96 52 6 52. email: oviyapathippagam@gmail.com | vathilaipraba@gmail.com

Continue Reading →

விளையாட்டுத்துறையில் சாதிக்கும் யாழ் இந்துவின் மைந்தர்கள்! வாழ்த்துகிறோம்!

யாழ் இந்துக்கல்லூரியின் மாணவர்கள் பலர் சர்வதேசரீதியாகப் கல்வி சார்ந்த பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்து வருவது யாவரும் அறிந்ததே. அண்மைக்காலமாக விளையாட்டுத்துறையிலும் சர்வதேசரீதியாகக் கவனம் பெற அவர்கள்…

Continue Reading →

இலண்டன் லோகன் மண்டபத்தில் பரதநாட்டிய அரங்கேற்றம்

‘நாட்டியத்திற்குரிய உடல்வாகும் நளினமும் நிரம்பப்பெற்ற நாட்டியக் கலாஜோதி பிரதிஷ்ரா ஞானரட்னசிங்கம் ஓம்கார வந்தனம்; முதற்கொண்டு அலாரிப்பு, ஜதீஸ்வரம், ஜானகி கௌத்வம், வர்ணம், ஸ்ரீ ஆண்டாள், சிவ ஸ்துதி, அஷ்தவித நாயகிகள், தில்லானா போன்ற அத்தனை உருப்படிகளையும் ஈடுபாட்டுடன் தனக்குள் இருக்கும் ஜீவனின் வெளிப்பாடாக கொண்டுவந்தமை பாராட்டுக்குரிய விடயம். ஜானகி கௌத்வம் போன்ற வித்தியாசமான உருப்படிகளை, பல நாட்டிய நூல்களை எழுதி வெளியிட்டவரும், பிரதிஷ்ராவின் குருவுமான   நாட்டிய விசாரத் ஜெயந்தி யோகராஜாவே உருவாக்கி, வடிவமைத்து வித்தியாசமான முறையில் நர்த்தகி பிரதிஷ்ரா ஆடலால் பார்வையாளர்களின் மனதைக் கொள்ளைகொண்ட பாங்கு குருவின் நாட்டிய ஆளுமையை வெளிக்காட்டி நிற்கின்றது’ என சிறப்பு விருந்தினராக சென்னையில் இருந்து வருகை தந்திருந்த நாட்டிய செல்வம் ஸ்ரீ சண்முக சுந்தரம் அவர்கள் தனது சிறப்புரையில் தெரிவித்திருந்தார். ‘சென்னை ஸ்ரீமதி ரோசினி; கணேஷின் பாடல், ஸ்ரீ. எம். பாலச்சந்தரரின் மிருதங்கம், சென்னை ஸ்ரீ முடிகொண்டான ரமேஷ் அவர்களின் வீணை இசை, ஸ்ரீ பிச்சையப்பா ஞானவரதனின் புல்லாங்குழல் இசை, ஸ்ரீ பாலு ரகுராமனின் வயலின் இசை,  ஸ்ரீ தணிகவேல் அண்ணாமலையின் தவில் வாத்தியம், ஸ்ரீ சம்பத்குமார் பாலசுப்ரமணியத்தின் நாதஸ்வர இசையென பிரபல்யமான பக்கவாத்தியங்களின் கூட்டு முயற்சியுடன் பிரதிஷ்ராவின் நாட்டியம் பார்வையாளர்களைப் பிரமிக்க வைத்தமை மிகச்சிறப்பானது’ என மேலும் அவர் தெரிவித்தார்.

Continue Reading →

ஈழத் தமிழ்ச் சங்கம் (ஆஸ்திரேலியா) – முத்தமிழ் விழா 2016 பேச்சு இசைப் போட்டிகள்

ETA Tamil Competition 2016 – Information Pack அன்பான மாணவர்களே / பெற்றோர்களே, ஈழத் தமிழ்ச் சங்கத்தினால் நடாத்தப்படுகின்ற முத்தமிழ் விழாவை ஒட்டிய பேச்சு, இசைப்…

Continue Reading →

மெல்பனில் நினைவரங்கும் இலக்கியச்சந்திப்பும்!

அண்மையில்  இலங்கையில்  அடுத்தடுத்து  மறைந்தவர்களான  படைப்பாளி செங்கை  ஆழியான்,  நூலியல்  பதிவு  ஆவணக்காப்பாளர்  புன்னியாமீன், ஊடகவியலாளரும்  எழுத்தாளருமான  கே. விஜயன்  ஆகியோரின் வாழ்வையும்   பணிகளையும்  நினைவுகூரும்  நிகழ்ச்சியும்…

Continue Reading →

ரொறன்ரோவில் நடந்த இசைத்திறன்காணல் நிகழ்ச்சி

ரொறன்ரோவில் நடந்த இசைத்திறன்காணல் நிகழ்ச்சி அண்மையில் ரொறன்ரோ,  கனடாவில் உள்ள பிரபல இசைக்கல்லூரியான பாரதி கலைக்கோயிலின் வருடாந்த இசைத் திறன் காண் போட்டி நடைபெற்றது. தமிழ் மொழி, தமிழ் இசை, பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றைப் புலம்பெயர்ந்த கனடிய மண்ணில் பேணிக்காப்பதற்காக சிறந்த நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட இந்த கலைக்கல்லூரி இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மணவர்களைக் கலைத்துறையில் இந்தப் புலம்பெயர்ந்த மண்ணில் உருவாக்கியிருக்கின்றது. மாலை நான்கு மணிக்கு ஆரம்பித்த இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களும் வைத்திய கலாநிதி செந்தில்நாதன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற இந்தப் போட்டியில் சுமார் 250 மாணவ, மாணவிகள் பங்கு பற்றித் தமது திறமையை வெளிப்படுத்தினர். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட எழுத்தாளர் குரு அரவிந்தன் தனது உரையில்,

‘புலம் பெயர்ந்த இந்த மண்ணில் கடந்த 25 வருடங்களாக நடக்கும் நிகழ்ச்சிகளை அவதானித்து வருபவன் என்ற முறையில், இந்த மண்ணில் எங்கள் தமிழ் மொழியையும், பண்பாடு கலாச்சாரத்தையும் பேணிக்காப்பதில் பல மன்றங்களும், கல்லூரிகளும் முன்னின்று பாடுபடுகின்றன என்பதையிட்டுப் பெருமைப்படுகின்றேன். அந்த வகையில் பவதாரணியின் பாரதி கலைக்கோயில் கனடிய மண்ணில் முக்கிய இடத்தை வகிக்கின்றது. இசை என்பது வெறும் இசையல்ல, அது மனதில் ஆரோக்கியத்தை வளர்க்கின்றது. இங்கே இசைபயிலும் பிள்ளைகள் கல்வியிலும் சிறந்தவர்களாக மிளிர்வதை அவதானிக்க முடிகின்றது. தவறான வழியில் செல்லாமல் தங்கள் பிள்ளைகளுக்கு எங்கள் இசை, கலை, பண்பாடு, கலாச்சாரத்தைக் கற்பிக்கும் பெற்றோர்களாகிய உங்களுக்கு எனது பாராட்டுக்கள். எங்கள் தமிழ் மொழி இந்த மண்ணில் அழிந்து போகாமல் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மட்டுமல்ல, அடுத்த தலைமுறையிடம் விட்டுச் செல்ல வேண்டிய கடமையும் பெற்றோர்களாகிய உங்கள் கைகளிலேதான் இருக்கின்றது. சுமார் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வாழும் இந்த மண்ணில் கலையை மட்டுமல்ல மொழியையும் காப்பாற்ற வேண்டும். மொழி அழிந்தால் நம் இனம் அழிந்து விடும் என்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள். எமது இலட்சியங்களை நிறைவேற்ற முடிந்தவரை ஒன்றுபட்டு உழைப்போம்.’

Continue Reading →