நினைவேந்தலும் நூல் வெளியீடும்: Sunday, November 8 at 5:00pm | The Queen Palace Banquet Hall (1173 Brimley Road, Toronto, Canada)
இலங்கையிலிருந்து மாதந்தோறும் தவறாது வெளிவரும் ‘ஞானம்” இலக்கிய சஞ்சிகைச் சிறப்பிதழின் அறிமுக நிகழ்வு பாரிஸ் மாநகரில் நடைபெறவுள்ளது. ‘ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம்” என்ற பெயரில் 976 பக்கங்களில்…
நிகழ்ச்சி நிரல்: ‘தொல்காப்பியரும் சங்கச் சான்றோரும் கண்ட> காணவிழைந்தபெண்கள்” பிரதமவிருந்தினர் உரை: முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ் சிறப்பு விருந்தினர்கள் உரை:திருமதி. சுந்தரேஸ்வரி சிவதாஸ் – ‘தொல்காப்பியர் கண்டபெண்கள்”திரு.குமரகுரு…
கனடிய எழுத்தாளர் குரு அரவிந்தனின் 25 வருட கால கனடிய இலக்கிய சேவையைப் பாராட்டிக் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சார்பில் சென்ற வெள்ளிக்கிழமை பாராட்டுவிழா ஒன்று ஸ்காபரோவில் நடைபெற்றது. சென்ற ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி 2015 இல் இந்த நிகழ்வு ஸ்காபரோ, 3300 மக்னிக்கல் அவென்யூவில் உள்ள பாபா பாங்குவிட் ஹோலில் இடம் பெற்றது. மங்கள விளக்கேற்றி, கனடா தேசிய கீதம், தமிழ் வாழ்த்துப் பாடல், மௌன அஞ்சலி ஆகியவற்றுடன் பாராட்டு விழா ஆரம்பமானது. கனடா தேசிய கீதத்தை செல்வி சாலினி மணிவண்ணனும், தமிழ் தாய் வாழ்த்தை செல்வி சங்கவி முகுந்தனும் இசைத்தனர். எழுத்தாளர் குரு அரவிந்தனை கனடா எழுத்தாளர் இணையத்துடன் இணைந்து கனடாவில் உள்ள பல தொடர்பு சாதனங்கள், மன்றங்கள், சங்கங்கள் என்பன அவரைக் கௌரவித்திருந்தனர்.
காக்கைச் சிறகினிலே மாத இதழ் முன்னெடுக்கும் கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு – ‘புலம்பெயர் சிறுகதைப் போட்டி 2016’ – வள்ளுவராண்டு 2047
காக்கைச் சிறகினிலே இதழ் தொடக்க நெறியாளராகப் பணியாற்றி மறைந்த இலக்கியவாதி ‘கி பி அரவிந்தன்’ கனவின் மீதியில் எழும் புதிய தடமாக அமைகிறது இந்தப் போட்டி. பாரதி கண்ட “சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் !” என்ற கனவை நனவாக்கும் முயற்சிகளில் ஒன்று. உலகெங்கும் வியாபித்தவர்களாகி தொடரும் வாழ்வில் அடுத்தடுத்த தலைமுறையினர் எண்ணங்களைக் கொண்ட எழுத்துகளையும் படைப்புகளையும் ஊக்குவிக்கும் முகமாக இப் போட்டி அமைகிறது.
நவம்பர் 7 (சனி) | நவம்பர் 8 (ஞாயிறு)
இடம்: சென்னை
பயிற்சிக் கட்டணம் : ரூபாய் 3500
முன்பதிவுக்கு : 98406-98236
தமிழ் ஸ்டுடியோவின், படச்சுருள் மாத இதழுக்கு நிதி திரட்டும் விதமாக ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங்க் மற்றும் ஒளிப்பதிவாளர் ஞானம் சுப்ரமணியன் இருவரும் இணைந்து இரண்டு நாள் திரைப்பட ஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை நடத்திக்கொடுக்கவுள்ளனர்.
பயிற்சிப் பட்டறையின் முதல் நாளில், ஒளிப்பதிவு சார்ந்த விஷயங்கள் யாவும் கோட்பாட்டு ரீதியில் விளக்கப்பட்டு, இரண்டாம் நாள்., திரைப்படத்தில் பயன்படுத்தப்படும் கேமராவைக் கொண்டு செய்முறைப் பயிற்சியாக, சிறப்பு வகுப்பும் நடத்தப்படும். ஒளிப்பதிவில் லைட்டிங்க் பற்றியும், அழகியல் பற்றியும் இதில் விளக்கப்படவிருக்கிறது.
நண்பர்களுக்கு! எதிர்வரும் நவம்பர் 14ம் திகதி சனிக்கிழமை மாலை அண்மையில் மரணமடைந்த டேவிட் ஐயா, கவிஞர் திருமாவளவன் ஆகியோர் பற்றிய நினைவுப் பகிர்வும் நூல்கள் வெளியீடும் இலண்டனில்…
நண்பர்களே, அக்டோபர் மாத பேசாமொழி இணைய இதழ் பதிவேற்றப்பட்டுள்ளது. ஸ்ரீவித்யா பற்றிய யமுனாவின் கட்டுரை, தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது விழாவில் பி.கே. நாயர் பேசியதன் தமிழ்…
தொல்காப்பியம் தமிழில் கிடைக்கும் பழந்தமிழ் இலக்கணநூலாகும். பண்டைத் தமிழ் மொழி, இலக்கியம், வாழ்க்கைமுறை, அரசியல், பண்பாடு; முதலான பல்வேறு விடயங்களை விளக்கி இலக்கணம் கூறும் முதல் நூல்…
‘இளவாலை திருக்குடும்பக்கன்னியர்மடத்தின் புகழ் மிக்க அதிபராகத் திகழ்ந்த அருட் சகோதரி லுசில்லா அவர்கள் அதிபராக இருந்த காலம் இளவாiலைக் கன்னியர்மடத்தின் வரலாற்றில் சிறப்பும்,, பொலிவும் மிக்க காலமாகும். அவரிடம் கல்வி பயலும் மாணவிகள் தற்போது பல்வேறு துறைகளில் அமெரிக்கா,, லண்டன்,, பிரான்ஸ்,, ஜேர்மனி,, நோர்வே போன்ற பல நாடுகளில் சிறந்து விளங்குவது தனக்கு பெருமகிழ்வைத் தருவதாக பிரதம விருந்தினராக வருகை தந்திருந்த அருட்தந்தை ரி.இ.ரி. ராஜன் அவர்கள் தனது உரையில் தெரிவித்திருந்தார். இன்று அம்மாணவிகளை லண்டனில் மீண்டும் சந்திப்பது அன்றைய மகிழ்வான நினைவுகளை மீட்பதற்கு சிறந்த ஒரு சந்தர்ப்பமாக அமைகின்றது’ என மேலும் சுட்டிக்காட்டினார்.