Sunday at 4:00pm. | Don Montgomery Recreational Center, 2467 Eglinton Ave E, Toronto, ON M1K 2R1, Toronto, Ontario, Canada.
காலம்: 26.07.2015 | நேரம்: மாலை 3 மணி முதல் மாலை 6 மணிவரை | இடம்: Peaccock Room, Shri Siva Vishnu Temple, 52…
இடம்: Menzies Hall, Menzies Avenue, Dandenong North, Vic 3175 , Australiaகாலம்: Saturday, 18 July 2015 4.00PM to 8.30PM அன்பிற்குரியவர்களே, கேசி…
தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு ஒவ்வொரு மாதமும் பிரபல பெண் எழுத்தாளர்களை பன்முக ஆற்றல் கொண்டவர்களை இனம் கண்டு மாதாமாதம் (கலாசூரி விருது )கொடுத்து கௌரவித்து வருகின்றார்கள். அதன் நான்காவது கலாசூரி விருதினை ஜூலை மாதம்(05-07-2015) இன்று பிரபல பெண் எழுத்தாளர் பன்முக ஆற்றல் கொண்டவருமான ஷைலஜா (Shylaja Narayan)அவர்கள் பெறுகின்றார். மழலைகளின் எழுத்தாளர் என புகழ் பெற்ற திருமதி ஷைலஜா அவர்களின் இயற்பெயர் மைதிலி. இந்தியாவில் ஸ்ரீரங்கத்து மண்ணில் பிறந்து வளர்ந்தார். தற்போது இவர் கணவருடனும், தன் இரு பெண்பிள்ளைகளுடனும் பெங்களூரில் வசித்து வருகின்றார். மறைந்த பிரபல எழுத்தாளர் திரு ஏ.எஸ். இராகவன்அவர்களின் புதல்வி தான் ஷைலஜா அவர்கள் எப்பொழுதும் கலகலப்பாக நகைச்சுவை உணர்வுடன் விளங்கும் இவர் 3 முறை ராஜ் டி.வி.யில் நகைச்சுவை நாடகங்களில் பங்கேற்றுள்ளார். கோவை, திருச்சி, பெங்களூர் வானொலி நிலயங்களில் நிகழ்ச்சி நடத்தி, தனது படைப்புகளை வாசித்திருக்கிறார். விளம்பரப்படம், குறும்படங்களுக்குப் பின்னணிக் குரல் கொடுக்கின்றார் . சிஃபி தமிழ் இணைய தளத்தில் குரல் பதிவுகள் அளிக்கிறார். இணையதள வானொலி ஒலி எஃப் எம்மில் அறிவிப்பாளராய் பகுதி நேரங்களில் பணிபுரிகிறார். ஓவியம், சங்கீதம், ரங்கோலி முதலியவற்றில் ஈடுபாடு கொண்டவர். இவர் ஒரு சமையல் கலைப் பிரியர். புதிய சில கண்டுபிடிப்புகளைப் பத்திரிகைகளில் எழுதி உள்ளார். எழுத்துத் துறையில் ஆழ்ந்த பற்றுள்ள இவர் விகடன், தினமலர், கல்கி, அமுதசுரபி, கலைமகள் ஆகியவைகள் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசுகளும், நாடகம் 2ல் நடித்து இரு முறை சிறந்த நடிகை விருதும் வாங்கி உள்ளார். பொதிகை தொலைக்காட்சி நடத்திய பொங்கல் சிறப்பு விமர்சனக் கவிதையில் சிறப்புப் பரிசும், இணையத்தில் மரத்தடி.காம், தமிழ் உலகம், முத்தமிழ், அன்புடன் குழுமங்கள் நடத்திய கதை கவிதைப் போட்டிகளில் பரிசுகளும் அடைந்துள்ளார். இவர் எழுதி, தினபூமி, தினச்சுடர், கலைமகள் இவைகளில் தொடர் நாவலும், ஒரு சிறுகதைத் தொகுப்பும் சிறுகதைகளும் இடம் பெற்றுள்ளன. ஒரு மூறை திருச்சி எழுத்தாளர் சங்கம் அந்த மாதத்தின் சிறந்த சிறுகதையாக இவரது கதையினைத் தேர்ந்தெடுத்தது. இவரது 3 கதைகள் கன்னடத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. 270சிறுகதைகள் .12 நாவல்கள், 2 குறுநாவல்கள் பலகட்டுரைகள்,பல கவிதைகள் .12 வானொலிநாடகங்கள் 3 தொலைக்காட்சிநாடகங்கள் என தொடர்கின்றது
02-07-2015, வியாழன், இரவு 7.00 மணிக்கு, | ஸ்பேசஸ் அரங்கு, பெசன்ட் நகர், தலபாக்கட்டி உணவகம் அருகில்.
திரையிடப்படும் படம்: Father Son & Holy War (Directed by: Anand Patwardhan)
நண்பர்களே, மும்பை பிரித்வி அரங்கில் ஆனந்த் பட்வர்தன் தொடர்ச்சியாக அரசியல் பேசும் ஆவணப்படங்களை திரையிட்டு வருகிறார். நாம் தலைகீழாக புரண்டாலும் அத்தகைய படங்களை வேறு எங்கும் பார்க்க முடியாது. தவிர அரசியல் படங்களை திரையிட்டு விவாதிப்பது என்பது ஒரு கலாச்சாரத் தேவை. ஆனால் தமிழ்நாட்டில் அப்படியான படங்களை தொடர்ந்து திரையிட தமிழ் ஸ்டுடியோ சார்பாக முன்னமே முயற்சித்து இடம் கிடைக்காமல் தவித்து வந்தேன். ஆர்.கே.வி ஸ்டுடியோ மட்டுமே கிடைக்கும். ஆனால் அவர்கள் கேட்கும் வாடகை 3௦ ஆயிரம். மாத திரையிடலில் இதெல்லாம் சாத்தியமே இல்லை. சென்ற வாரம் ஆனந்த் பட்வர்தன் சென்னை வந்திருந்தபோது, இது பற்றி விவாதித்தேன். அருகில் இருந்த சதானந்த மேனனிடம் ஸ்பேசஸ் இடத்தை அத்தகைய அரசியல் திரைப்படங்களை திரையிட கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன். அவரும் ஒப்புக்கொண்டார். ஆனால் வார இறுதி நாட்களில் அதாவது விடுமுறை நாட்களில் கொடுக்க இயலாது, வியாழன் மட்டுமே அரங்கு கிடைக்கும் என்றார். அருகில் இருந்த ஆனந்த் பட்வர்தன் அரங்கு கிடைக்க வேண்டும் அதுதான் முக்கியம். முதலில் ஒப்புக்கொள்ளுங்கள், ஆரம்பத்தில் கூட்டம் இல்லாமல் போகலாம். போக போக வந்துவிடுவார்கள் என்றார். சரி என்றேன்.
புலம்பெயர்ந்த மண்ணில் பீல் பிரதேச தமிழர்களின் பெருமுயற்சியால் சொப்கா என்ற பெயரில் பீல்பிரதேச தமிழர்களின் அமைப்பு ஒன்று கடந்த ஆறு வருடங்களாக மிகவும் சிறப்பாக இயங்கிவருகின்றது. இந்த அமைப்பினால் கடந்த ஞாயிற்றுக் கிழமை (28-06-2015) கனடாத்தினம் கொண்டாடப்பட்டது.
கனடா தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம், தமிழ் வாழ்த்து, மன்றக் கீதம் ஆகியன இசைக்கப்பட்டன. பிரதம விருந்தினர் வைத்திய கலாநிதி செந்தில்மோகன் அவர்களால் கனடா பிறந்ததின கேக் வெட்டப்பட்டது. மன்றத்தின் தற்போதைய தலைவரும் சட்டத்தரணியுமான வாணி செந்தூரன் அவர்களால் தலைவர் உரை நிகழ்த்தப்பட்டது. பிரதம விருந்தினராக மகாஜனக் கல்லூரி பழைய மாணவரும் வைத்திய கலாநிதியுமான செந்தில்மோகன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். அரங்கம் நிறைந்த கனடாவிழாவில் மன்ற அங்கத்தவர்களால் மேடையேற்றப்பட்ட பல கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. கனடா தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி அடைந்தவர்களுக்குப் பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டது. இந்த மேடையில் சொப்கா தன்னார்வத் தொண்டர்களும் பாராட்டப்பட்டனர்.
நண்பர்களே, தமிழ் ஸ்டுடியோவின் புதிய முன்னெடுப்பான படச்சுருள் மாத இதழை தமிழ்நாடு முழுக்க அறிமுகம் செய்யும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பயணம் செய்யவிருக்கிறோம். உங்கள் பகுதியில் நீங்கள்…
கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ் நாடகத் துறைக்குப் பிரமிக்கத்தக்க பங்களிப்பைச் செய்துவரும் பிரபல நாடக இயக்குனர் க. பாலேந்திரா அவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்துள்ளார். தமிழ் அவைக்காற்றுக்…
உரையாற்றுவோர்மணி வேலுப்பிள்ளைஷான சந்திரசேகர்பேராசிரியர் ஜோசப் சந்திரகாந்தன்முனைவர். ந.சுப்பிரமணியன்முனைவர் பார்வதி கந்தசாமி காலம்: 20 – 06 – 2015 சனிக்கிழமைநேரம்: மாலை 4.30 மணி…இடம்: மல்வன் சென்டர்Malvern…