திருமதி மைதிலி தயாபரனின் படைப்புக்கள் ஓர் அறிமுகம்.

– இந்நிகழ்வு பற்றிய அறிவித்தலைத்தவறவிட்டுவிட்டோம். வருந்துகின்றோம். ஒரு பதிவுக்காக இங்கே பிரசுரமாகின்றது. -பதிவுகள் – ‘01.03.2015பி.ப 3 மணிஅழகியற் கல்லுாரி திருமறைக்கலாமன்றம். டேவிட் வீதி, யாழ்ப்பாணம். தலைமை…

Continue Reading →

பேசாமொழி – திரைப்படத் தணிக்கை சிறப்பிதழ்!

பேசாமொழி - திரைப்படத் தணிக்கை சிறப்பிதழ்!தமிழ் சினிமா தோன்றி அதன் நூற்றாண்டை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த சூழலில், இதுவரை திரைப்படத் தணிக்கை தொடர்பாக ஒரு விரிவான உரையாடல் நடைபெறாமல் இருந்திருக்கிறது என்பது குறித்து நிறையவே வேதனைப்பட வேண்டியிருக்கிறது. வணிக சினிமா தான் சார்ந்த ஒவ்வொரு நுணுக்கங்களையும், பரவலாக்குவதை விரும்புவதில்லை. அது குறிப்பிட்ட சிலர் மட்டுமே தங்களின் எதேச்சிகாரத்தை கோலோச்ச வழிவகை செய்கிறது.

இந்த நிலையில், திரைப்படத் தணிக்கை தொடர்பாகவும், அதில் இருக்கும் பல்வேறு சிக்கல் குறித்தும் ஒரு நீண்ட உரையாடலை பல்வேறு கட்டுரைகளின் வாயிலாகவும், சில நேர்காணல் வாயிலாகவும், சில மொழியாக்கக் கட்டுரைகளின் வாயிலாகவும் பேசாமொழியின் இந்த இதழில் தொடங்கிவைக்க முயற்சித்துள்ளோம். எனினும் இதன் தொடர்ச்சி அடுத்த இதழிலும் வெளிவரும். தணிக்கை தொடர்பான இந்த சிறப்பிதழை சாத்தியப்படுத்ததில் பல்வேறு நண்பர்களுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. பல பணிகளுக்கிடையில் பேசாமொழிக்காக கட்டுரைகளை எழுதியும், மற்றக் கட்டுரைகளை சரிப்பார்த்துக்கொண்டும் தொடர்ந்து இயங்கும் தினேஷ், தனியார் துறையில் வேலை பார்த்துக்கொண்டே, பேசாமொழிக்காக நேரம் ஒதுக்கி தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருக்கும் நண்பர் யுகேந்தர், இந்த இதழில் ஐந்துக் கட்டுரைகளை மொழியாக்கம் செய்துக் கொடுத்துள்ளார். ஐந்துக் கட்டுரைகளை குறிப்பிட்ட தேதிக்குள் மொழியாக்கம் செய்துக் கொடுப்பது என்பது அத்தனை எளிதான ஒன்றல்ல. ஒவ்வொரு நாளும் நள்ளிரவில் நண்பர் யுகேந்திரனின் குறுந்தகவல் வரும், கட்டுரையை முடித்து மின்னஞ்சல் அனுப்பி வைத்திருக்கிறேன் என்று. அவரது எத்தனையோ நாட்களின் உறக்கத்தை இந்த மொழியாக்கக் கட்டுரைகள் தின்று செரித்திருக்கும். மேலும், பேசாமொழியில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் யமுனா ராஜேந்திரன், பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியிலும், தணிக்கை தொடர்பான வரலாற்றையும், அதனையொட்டிய அரசியலையும் இந்த இதழில் விரிவாக அலசியுள்ளார். புதிதாக தீக்ஷன்யா இந்த இதழில் ஒரு கட்டுரையை மொழியாக்கம் செய்துள்ளார். புதியவர் என்பதால், அவரது கட்டுரையை நண்பர் செகோ முகுந்தன் மேற்பார்வை செய்து, திருத்தி அனுப்பியுள்ளார். தியடோர் பாஸ்கரன் இந்த இதழுக்காக ஒரு முக்கியமான கட்டுரையை கொடுத்துள்ளார். இவர்கள் இல்லாமல் இந்த இதழ் சாத்தியமில்லை. இவர்கள் அனைவருக்கும் பேசாமொழி சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

Continue Reading →

‘ரொறன்ரோ’ தமிழ்ச்சங்கம் ; மாதாந்த இலக்கிய கலந்துரையாடல்

தமிழ் சிறுகதை இலக்கியம்

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்

நிகழ்ச்சி நிரல்
சிறப்பு விருந்தினர்கள் உரை:
சிறுகதைகளும் பின்நவீனத்துவமும் – எழுத்தாளர் அகில்
கனடாவில் வெளிவந்த தமிழ் சிறுகதைகளின் கருப்பொருட்கள் – எழுத்தாளர் குரு அரவிந்தன்
ஆங்கில சிறுகதைகள் பற்றிய நவீன இலக்கிய திறனாய்வுகள் – பேராசிரியர் அ.ஜோசப் சந்திரகாந்தன்       சங்கீதம் சார்ந்த சிறுகதைகள் – பேராசிரியர் சு.பசுபதி

கௌரவ விருந்தினர் உரை:
எழுத்தாளர் அ.முத்துலிங்கம்

பெப்பிரவரி; மாத இலக்கிய நிகழ்வுகள்
தொகுப்புரை: திருமதி ஜெயகௌரி சுந்தரம்பிள்ளை

Continue Reading →

புலம்பெயர் எழுத்தாளர்கள் விபரத் திரட்டு வெளிவந்துவிட்டது!

வணக்கம், புலம்பெயர் எழுத்தாளர்கள் பற்றிய விபரத் திரட்டு வெளிவந்துவிட்டது.அதன் பிரதிகளை ஓவியா பதிப்பகம் மூலம் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். நண்பர்களுக்கும் அறிமுகம் செய்வதன் மூலம் வருடாந்தம் தொடர்ச்சியாக மேலதிக…

Continue Reading →

கவிதை இனி மெல்லச் சாகும் ?? லண்டன் ஈஸ்டஹாம் நகரில் நடைபெற்ற ஆறு கவிதை தொகுப்புகளின் மதிப்புரை, கருத்துப் பகிர்வுகளின் நிகழ்வு தொடர்பாக—–

கவிதை இனி மெல்லச் சாகும் ?? லண்டன் ஈஸ்டஹாம் நகரில் நடைபெற்ற ஆறு  கவிதை தொகுப்புகளின் மதிப்புரை, கருத்துப் பகிர்வுகளின்  நிகழ்வு தொடர்பாக-----  - எஸ்.வீ.எஸ். வாசன் -கடந்த நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட காலவோட்டத்திற்கும் அரசியல் சூழ் நிலைகளுக்குமேற்ப தனது புதிய பாய்ச்சலை மேற்கொண்ட ஈழத்து தமிழ் கவிதையானது பதித்த தடங்களையும் பரிமாணங்களையும் மீறி பிறந்துவிட்ட புதிய நூற்றாண்டில் அடைந்த தேக்கநிலை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையானது  முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின்னர் முற்றுமுழுதாக இதன் வீச்சு  அடங்கிவிட்டதா என்று ஐயம் கொள்ளும் வண்ணம் ஒரு நிசப்தநிலையை  தோற்றுவித்திருந்தது. தீபச்செல்வனின் ‘போர் தின்ற நகரம்’ நிலாந்தனின் ‘யுகபுரானம்’ இன்னும் பல இனப்படுகொலையின் பதிவுகளை அச்சேற்றிய பல கவிதைத்தொகுதிகள் வெளி வந்த போதும் ‘ஈழத்துக்கவிதை இனி மெல்ல சாகும்’ என்ற நக்கல்களும் ஆருடங்களும் கூட  வெளிப்படையாக எழும்பத்தொடங்கின. புகலிடத்தில் இதற்கான முனைப்புகள் முற்றுமுழுதாக அடங்கி விடவில்லை எனினும் அதனை முடக்கும் குரல்கள் ஆங்காங்கே தோன்றின. பல மாதங்களிற்கு முன்பு கவிஞர் குட்டி ரேவதியின் இலண்டன் வருகையின் போது ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலின் போது கணிசமான அளவு வாசகர்கள் கலந்துகொண்ட போதும், அதில் கலந்து கொண்ட ஒரு அறிவு ஜீவி ஒன்று “புகலிடத்தில் இலக்கியக் கூட்டங்களிக்கு அதிகம் பேர் வருவது கிடையாது. அரசியல் கூட்டமானால் மட்டும் கொஞ்சம் பேர் வருவார்கள்” என்று அந்திமழையில் பார்ப்பனத்தின் ஊதுகுழலாய் திருவாய்மலர்த்தருளினார். அதன் பின் குட்டி ரேவதி மீதான சேறு வாரியடிப்பு மிக அதிகமாக நடைபற்றது. ‘அறம்’ பாடிய ஜெயமோகனும் ‘உன்னத சங்கீதம்’ பாடிய சாரு நிவேதிதாக்களும் மிகவும் கொச்சைத்தனமான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டிருந்தனர்.எல்லாவற்றுக்கும் மேலாக கடந்த மாதம் நடைபெற்ற எழுநா குழுவினரால் நடத்தப் பட்ட புத்தக அறிமுக விழாவில் பேசிய கவிஞர் ஒருவர் ‘ நான் இப்போது கவிதைகளே வாசிப்பதில்லை’ என்று பிரகடனப்படுத்தி கவிதைகளை சிலுவையில் அறைய முற்பட்டார். இது பலருக்கும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவமாகும்.

Continue Reading →

நெய்தல் – நீர்கொழும்பு வாழ்வும் வளமும் நூல் வெளியீட்டு அரங்கு; விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் வைரவிழாவை முன்னிட்டு நடைபெறும் முதலாவது இலக்கியப்பொது நிகழ்வு

– இந்நிகழ்வு பற்றிய அறிவித்தலைத்தவறவிட்டுவிட்டோம். வருந்துகின்றோம். ஒரு பதிவுக்காக இங்கே பிரசுரமாகின்றது. -பதிவுகள் –

நெய்தல் -   நீர்கொழும்பு   வாழ்வும்  வளமும்   நூல்  வெளியீட்டு அரங்கு; விஜயரத்தினம்  இந்து  மத்திய  கல்லூரியின் வைரவிழாவை  முன்னிட்டு நடைபெறும்  முதலாவது இலக்கியப்பொது   நிகழ்வு நீர்கொழும்பு   விஜயரத்தினம்  இந்து  மத்திய  கல்லூரி பழையமாணவர்  மன்றம்  ஏற்பாடு  செய்துள்ள  நெய்தல்  நூல் வெளியீட்டு   அரங்கு  எதிர்வரும்  28-02-2015   சனிக்கிழமை   மாலை 3 மணிக்கு    கல்லூரி    மண்டபத்தில்    நடைபெறும். மன்றத்தின்    தலைவரும்  நீர்கொழும்பு  மாநகராட்சி  மன்ற பிரதிநிதியுமான    திரு. சதிஸ் மோகன்    தலைமையில்  நடைபெறவுள்ள  இந்த   அரங்கில்  வெளியிடப்படும்  நெய்தல்  நூல் நீர்கொழும்பின்    வாழ்வையும்  வளத்தையும் விரிவாகப்பதிவுசெய்துள்ளது.    இக்கல்லூரியின்  வைரவிழாவை முன்னிட்டு    கல்லூரியின்    முதல்  மாணவரும் படைப்பிலக்கியவாதியுமான    திரு. லெ. முருகபூபதி  இந்நூலை தொகுத்துள்ளார்.

வெளிநாடுகளில்    புலம்பெயர்ந்து    வாழும்   கல்லூரியின் பழையமாணவர்கள்   எழுதியிருக்கும்  சிறுகதைகள்,   கட்டுரைகள், கவிதைகள்,    விமர்சனங்கள்,   ஆய்வுகளை    உள்ளடக்கியது  இந்நூல். சங்க    இலக்கியத்தில்  இடம்பெறும்  கடலும்  கடல்  சார்ந்த பிரதேசமுமான    நெய்தல் நிலப்பரப்பின்    மகிமையை    பதிவுசெய்யும் வகையில்   ஆக்கங்கள்     இடம்பெற்றுள்ள     இந்நூலில் அவுஸ்திரேலியா,    சிங்கப்பூர்,   பிரான்ஸ்,  ஜெர்மனி,  இங்கிலாந்து, கனடா,   துபாய்,   மற்றும்  இலங்கையில்  வதியும்  பலர் எழுதியுள்ளனர்.

Continue Reading →

தோழர் கலைச்செல்வனின் 10வது ஆண்டு நினைவு ஒன்றுகூடல்

அன்புடன் நண்பர்களுக்கு , வணக்கங்கள்! தோழர் கலைச்செல்வனின் மறைவின் 10வது ஆண்டு நினைவையொட்டிய ஒன்றுகூடல் நிகழ்வு எதிர்வரும் மார்ச் மாதம் 28ம் திகதியன்று பாரிஸில் நடைபெற இருக்கின்றது.…

Continue Reading →

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலை இலக்கிய மேடை

பத்திரிக்கைச் செய்தி : நாவல் ஆய்வரங்கம்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலை இலக்கிய மேடைஎழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் “ புத்து மண் “ என்ற புதிய நாவல் ஆய்வரங்கம் சனியன்று  மாலை மகாகவி வித்யாலயா, இந்திராநகர், icic வங்கி அருகில்அவினாசி சாலையில் வி.மணி, மாநிலத்தலைவர் , அவர்களின் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலை இலக்கிய மேடை மாநில பொதுச்செயலாளர்  தேனி விசாகன் பேசுகையில் “ சமூகப் போராளிகள் அவர்கள் வாழும் கால்த்திலேயே அங்கீகாரம் செய்யப்பட வேண்டும் . அவர்கள் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக் இருந்தாலும், தன்னார்வத் தொண்டர்களாக இருந்தாலும், சமூகப்பணியாளர்களாக இருந்தாலும் அவர்களுக்கு சமூகத்தில் பெரிய அங்கீகாரம் இல்லாமல் இருப்பது துயரமானது. சுற்றுச்சூழல் சார்ந்து இயங்குகிற போராளிகளும், செயல்பாட்டாளர்களும் எழுத்தாளர்களும் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் “ என்றார்.

சுற்றுச்சூழல் சார்ந்து இயங்குகிற ஒருவரின் வாழ்க்கை அனுபவங்களை இந்த ”புத்துமண் “ நாவல் சொல்கிறது. இதை சென்னை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது, பக்கங்கள் 120 விலை ரூ 100

எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் ஏற்புரையில் : நவீன முதலீட்டாளர்கள், கார்ப்பரேட் உலகம் பற்றிய பல விமர்சனங்களை அக்கறையுடன் எழுத்தாளர்கள் எழுதி வருகிறார்கள். முதலீட்டாளர்கள், .கார்ப்பரேட்டுகள் முதலீடு செய்யலாம்.லாபம் சம்பாதிக்கலாம். அதே சமயம் நதியைப் பாழாக்குவதற்கோ, நிலத்தடி நீரை,  மண்ணை பாழாக்குவதற்கோ அவர்களுக்கு உரிமை இல்லை. சம்பாதிக்கும் லாபத்தில் ஒரு பகுதியை தொழிலாளர் நலனுக்காக  கார்ப்பரேட்  சமூக நலத்திட்டத்தின் கீழ் செலவு செய்ய வேண்டும்  என்று விதிகளும், பாராளுமன்ற மசோதாக்களும் இருந்தாலும் அவை நடைமுறைபடுத்தப்படுவதில்லை. பேர் டிரேடு -நியாய வணிகம் சார்ந்து அவர்கள் இயங்க வேண்டிய அவசியத்தை படைப்புகள்   மூலம் வலியுறுத்துகிறோம்.. முதலீட்டாளர்கள்,  கார்ப்பரேடுகளுக்கு எதிரான குரலாக இல்லாமல் கார்ப்பரேட்டுகளின் சமூகப் பொறுப்புணர்வு பற்றிய அக்கறையை தொடர்ந்து வலியுறுத்துகிறோம். இது காலத்தின் தேவையாகவும் இருக்கிறது.அதைக் கடைபிடித்தால் சுற்றுச்சூழல் பிரச்சினைகளிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். தொழிலாளர்களையும் காப்பாற்ற முடியும் “

Continue Reading →

ரொறன்ரோ தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில் ஞானம் சஞ்சிகையின் ‘ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம்’ சிறப்பிதழ் அறிமுக விழா

தலைமை:  வைத்திய கலாநிதி இ.லம்போதரன்  நிகழ்ச்சி நிரல்தொடக்கவுரை: அகில்  தலைமையுரை: வைத்திய கலாநிதி இ.லம்போதரன் அறிமுகவுரை: பேராசிரியர் அ.ஜோசப் சந்திரகாந்தன்       சிறப்புப் பிரதிகள் வழங்கல் சிறப்புரை: கலாநிதி…

Continue Reading →

நிகழ்வுகள்: “ பனியன் “ நாவல் வெளியீடு:

[இத்தகவலினைத் தவறுதலாகத் தவற விட்டு விட்டோம். ஒரு பதிவுக்காக பிரசுரமாகிறது.  – பதிவுகள் -] 10/01/15 சனி மாலை 6 மணிஸ்ரீ இராம மடாலயம்( நாச்சியார் கோவில்…

Continue Reading →