அவுஸ்திரேலியா: தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நாவல் இலக்கிய அனுபவப்பகிர்வு!

அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய  கலைச்சங்கம்  வருடாந்தம்  தமிழ் எழுத்தாளர்   விழாவை  கலை  இலக்கிய  ஒன்றுகூடலாக நடத்திவருவதுடன்   அனுபவப்பகிர்வு  நிகழ்வுகளையும் ஒழுங்குசெய்து வருகிறது. கடந்த   காலங்களில்  சிறுகதை,  கவிதை …

Continue Reading →

இற்றைத் திங்கள்: சகாயம் ஆய்வுக்குழு விவகாரம், சிறையாளிகளின் சிக்கல்கள்…

இற்றைத் திங்கள்: சகாயம் ஆய்வுக்குழு விவகாரம், சிறையாளிகளின் சிக்கல்கள்...இந்த மாதம் இற்றைத் திங்கள் நிகழ்வு: அகநாழிகை புத்தக உலகம், 390 அண்ணா சாலை, KTS வளாகம், (RG Stone மருத்துவமனை அருகில்), சைதாப்பேட்டை, சென்னை – 600 015.

நிகழ்ச்சி நிரல்:  தமிழகத்தில் கனிமவள, தாது மணல், ஆற்றுமணல் கொள்ளைகளும் சகாயம் ஆய்வுக்குழு விவகாரமும்: உண்மை என்ன?

சிறப்புப் பேச்சாளர்கள்: முகிலன், ஒருங்கிணைப்பாளர், கனிமவளக் கொள்ளை சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்கம் | சிவ இளங்கோ: தலைவர், சட்டப் பஞ்சாயத்து இயக்கம் | தமிழகச் சிறைகளில் கைதிகளின் அவல நிலை: உமர்கயான். தமிழினியன். சே.ஜெ , ஒருங்கிணைப்பாளர், இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்

Continue Reading →

தமிழ் ஸ்டுடியோ.காம்: இயக்குனர் ருத்ரைய்யா நினைவுக் கூட்டம்…

30-11-2014, ஞாயிறு, மாலை 5 மணிக்கு. புக் பாய்ன்ட் அரங்கம், ஸ்பென்சர் பிளாசா எதிரில், அண்ணா சாலை, சென்னை. நினைவை பகிர்ந்துக் கொள்பவர்கள்:வேங்கடபதி (முன்னாள் மத்திய அமைச்சர்),…

Continue Reading →

அறிவித்தல்: அவுஸ்திரேலியாவில் இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவி பெறும் மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் உதவிப்பணம் அதிகரிப்பு. 25 ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டத்தில் தீர்மானம்.

இலங்கையில்   நீடித்த  உள்நாட்டுப்போரினால்  பெற்றவர்களையும் குடும்பத்தின்   மூல  உழைப்பாளியையும்  இழந்து  பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ்   மாணவர்களுக்கு  அவுஸ்திரேலியாவிலிருந்து  உதவிவரும் இலங்கை   மாணவர்  கல்வி   நிதியத்தின்  25  ஆவது  ஆண்டுப்பொதுக்கூட்டம்   மெல்பனில்  அண்மையில் Vermont South  மண்டபத்தில்  நிதியத்தின் தலைவர்   திருமதி  அருண். விஜயராணியின்   தலைமையில்  நடைபெற்றது. நிகழ்ச்சியின்  தொடக்கத்தில்  போர்களில்  உயிரிழந்தவர்களின்   ஆத்ம சாந்திக்காக   ஒரு  நிமிடம்  மௌன   அஞ்சலி  செலுத்தப்பட்டது. நிதிச்செயலாளர்   திருமதி  வித்தியா  ஸ்ரீஸ்கந்தராஜா   நிதியத்தின்  24  ஆவது ஆண்டுப்பொதுக்கூட்ட    குறிப்புகளையும்  2014-2015   ஆண்டறிக்கை    மற்றும்    நிதியறிக்கைகளை   சமர்ப்பித்தார்.

Continue Reading →

நிகழ்வுகள்: சுப்ரபாரதிமணியன் தொகுத்த அ.முத்துலிங்கம் குறித்த இரு நூல்கள் வெளியீடு

books_757.jpg - 14.29 Kb1. அ.முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள் (நற்றிணை பதிப்பகம்,சென்னை ரூ90  ) அ. முத்துலிங்கம் பற்றிய கட்டுரைகள்
2. தமிழ்மொழிக்கு ஒரு நாடில்லை –  அ.முத்துலிங்கம் பேட்டிகள் , கவின்கலை பதிப்பகம் சென்னை ரூ120)

* 30/11/14 ஞாயிறு காலை 10 மணி : நரசிம்ம நாயுடு மேல்நிலைப்பள்ளி, மரக்கடை, கோவை

* பங்கு பெறுவோர்:
கோவை ஞானி, நித்திலன்,சுப்ரபாரதிமணியன் க.வை.பழனிச்சாமி, சுஜாதா செல்வராஜன், பொன்இளவேனில், இளஞ்சேரல், தியாகு, யாழி ,ஓசை அகல்யா, மணோன்மணி, இசை    மற்றும் பலர்.

– ( நிகழ்ச்சி அமைப்பு : கோவை இலக்கியச் சந்திப்பு -)

Continue Reading →

நிகழ்வுகள்: கனடா தமிழ் மிரர் பத்திரிகையின் விருது வழங்கும் விழா

நிகழ்வுகள்: கனடா தமிழ் மிரர் பத்திரிகையின் விருது வழங்கும் விழாகனடாவில் இருந்து வெளிவரும் தமிழ் மிரர் ஆங்கிலப் பத்திரிகையின் வருடாந்த விருது வழங்கும் விழாவும் இரவு விருந்துபசாரமும் சென்ற வெள்ளிக்கிழமை 31-10-2014 அன்று ஸ்காபரோவில் உள்ள கொன்வின்ஷன் சென்ரரில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பலவேறு துறைகளைச் சார்ந்த திறமை மிக்கவர்கள் சிலர் தெரிந்தெடுக்கப்பட்டு இந்த விருது வழங்கும் விழாவில் அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. 2014 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான விருதை, ஈழத்தமிழ் எழுத்தாளரான குரு அரவிந்தன் அவர்கள் பெற்றுக் கொண்டார். 2011 ஆம் ஆண்டு தமிழகத்திலிருந்து வெளிவரும் மூத்த தமிழ் இதழான கலைமகள் நடத்திய ராமரத்தினம் நினைவு குறநாவல் போட்டியில் ‘தாயுமானவர்’ என்று குறநாவலுக்கான பரிசைப் பெற்ற குரு அரவிந்தன் 2012 ஆம் ஆண்டு தமிழர் தகவலின் இலக்கியத்திற்கான விருதையும் பெற்றவர் மட்டுமல்ல, இலங்கை இந்தியா கனடா போன்ற நாடுகளில் நடந்த போட்டிகளில் சிறுகதை, புதினம் போன்றவற்றுக்கும் பல விருதுகளையும், பரிசுகளையும் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading →

முற்போக்கு இலக்கிய முன்னோடி காவலூர் ராஜதுரைக்கு இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் அஞ்சலி

இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் பொதுவான வளர்ச்சியையும், குறிப்பாக அவ்விலக்கியத்தின் மக்கள் சார்பு ஆழ அகலப்பாட்டை வற்புறுத்தி அதற்காக செயற்பட்டதில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கு முக்கிய இடமுண்டு. அவ்வகையில் இலங்கையில் முற்போக்கு இலக்கியத்தின் பரிணாமத்திலும், அப்பரிணாமம் ஆழமாகவும் அகலமாகவும் வளத்தெடுக்கப்பட வேண்டும் என்பதில் மூத்த முற்போக்கு எழுத்தாளர்களிரொருவரவரும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முத்த உறுப்பினராக  காவலூர் ராஜதுரை முக்கியமான ஒருவர். வாழ்விலிருந்து அந்நியப்படாமல் இவர் தீட்டிய சிறுகதைகள் சமூக முக்கியத்துவம் உடையவைகளாகும். யாழ்பாணத்தில் ஊர்காவற்துறையில் கரம்பன் என்னுமிடத்தில் பிறந்த இவர் தமது சமூகம் சார்ந்த செயற்பாடுகளினூடாக முழு இலங்கை சார்ந்த புத்திஜீவியாக ஆளுமையாக திகழ்ந்தார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுதாபனத்தில் நீண்டகாலம் பணியாற்றிய இவர் தமக்கு கிடைத்த வாய்ப்பையெல்லாம் முற்போக்கு இலக்கியத்தின் செழுமைக்காக பயன்படுத்தியவர். இவரது கதைகள் நாடகங்களாகவும் தொலைக்காட்சி நாடகங்களாகவும் தயாரிக்கப்பட்டுள்ளன. இவரது காலங்கள் என்ற தொலைக்காட்சி நாடகம் மலையக மக்களின் வாழ்வை பின்னணியாகக் கொண்டது. பொன்மணி என்ற இலங்கைத் திரைப்படத்திற்கு வசனம் எழுதியதுடன் அதன் நிர்வாகத் தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கின்றார்.

Continue Reading →

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் மாதாந்த இலக்கிய கலந்துரையாடல்

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் மாதாந்த இலக்கிய கலந்துரையாடல்நிகழ்ச்சி நிரல்
இசைத்தமிழ்ப் பாடல் வடிவங்கள் – வரலாறும் வளர்ச்சியும் – உரை: கலாநிதி கௌசல்யா சுப்பிரமணிய ஐயர்

சிறப்பு விருந்தினர்கள் உரை
திருப்புகழ்ப் பாடல்களின் இசையமைதி  –  பேராசிரியர் சு.பசுபதி
தமிழரின் அரங்கிசைப்பாடல் மரபு  – சங்கீத வித்வான் தனதேவி மித்ரதேவா M.A.(Music)
தமிழரின் ஆடல்மரபில் இசைப்பாடல்கள் –  நாட்டியக்கலைமணி  தேவகி குலத்துங்கபாரதி
கனடியத்தமிழ்ச் சூழலில் இசை நடன அரங்குகள்  –  திரு.பொ.கனகசபாபதி (முன்னாள் அதிபர்)

ஒக்ரோபர் மாத இலக்கிய நிகழ்வுகள் – தொகுப்புரை: திரு.க.சிதம்பரநாதன்
ஐயந்தெளிதல் அரங்கு

Continue Reading →

நிகழ்வுகள்: பாரிஸ் மாநகரில் நடைபெற்ற விழாவில் மூத்த எழுத்தாளர் வி. ரி. இளங்கோவனுக்குக் கௌரவம்..! தங்கப்பதக்க மாலை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்..!!

elangovan59.jpg - 17.21 Kb‘தமிழ்த் தேசிய உணர்வை, தமிழரசுக் கட்சியை அன்று பட்டினங்கள் முதல் கிராமங்கள் வரை, மேடைகள் முதல் வீடுகள் வரை எடுத்துச் சென்றவர்களில் முதன்மை வகித்தவர் நாவேந்தன். அன்று ஐம்பதுகள் முதல் தனது பேச்சாலும், எழுத்தாலும் தமிழ்மக்களைத் தட்டியெழுப்பியவர். அவரது வீறுகொண்ட இலக்கிய ரசம் பொங்கும் பேச்சாற்றலும், எதிரிகளைச் சுட்டிடும் உணர்வுமிக்க எழுத்தாற்றலும் நிகரற்றவை. அன்று அவரைப்போல பேச வேண்டும் என ஆசைப்பட்டவர்களில் நானும் ஒருவன். அவர் வழியில் சிறுவயதிலேயே பேச்சாற்றல், எழுத்தாற்றலை வளர்த்துக்கொண்டு, முற்போக்குச் சிந்தனையாளராகப் பரி  ணமித்து, இன்று பல்துறை வித்தகராக விளங்கும் அவரது சகோதரர் வி. ரி. இளங்கோவன் சாதனையாளராகக் கௌரவிக்கப்படுவது மகிழ்ச்சிக்குரியதும் பாராட்டத்தக்கதுமாகும்.” இவ்வாறு, பாரிஸ் மாநகரில் அண்மையில் நடைபெற்ற பிரான்ஸ் ‘ஆர். ரி. எம். பிறதர்ஸ்” நிறுவனத்தின் 22 -வது ‘கலைத்தென்றல்” விழாவில் சிறப்புரையாற்றிய ‘கல்விச்சேவையாளர்” சி. காராளபிள்ளை குறிப்பிட்டார்.

Continue Reading →

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் & நியு செஞ்சுரி புக் ஹவுஸ் 26ஆம் ஆண்டு இலக்கியப் பரிசளிப்பு 2014

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் & நியு செஞ்சுரி புக் ஹவுஸ் 26ஆம் ஆண்டு இலக்கியப் பரிசளிப்பு 2014

பரிசு  பெற்றோர் :

* நாவல்:
தறிநாடா – சுப்ரபாரதிமணியன்
கறுப்பர் நகரம்- கரன் கார்க்கி

Continue Reading →