காலத்தின் தேவைதான் பெரும அரசியல், சமூக, பெருளாதார, கலாசார நிறுவனங்களை தோற்றுவிக்கின்றது எனக் கொண்டால் இன்றைய சமூகத் தேவைதான்- வரலாற்றுத் தேவைதான் இலங்கை கல்வி சமூக சம்மேளனத்தையும் (Sri Lanka Educational Community Organisation- SLECO) தேற்றுவித்தது எனலாம். அந்தவகையில் கல்விசார் பணியாளர்களான ஆசிரியர்கள், அதிபர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள், ஆகியோர் எதிர் நோக்கும் பிரச்சனைகளை அவர்களின் துன்பத் துயரங்களை வெவ்வேறு வகைகளிலும் வடிவங்களிலும் உணர்ந்து அதற்கான மாற்றுச் செயற்பாடுகளை முற்போக்கான திசையில் முன்னெடுப்பதே இவ்வியக்கத்தின் நோக்கமென அவ்வமைப்பினர் பிடகடனப்படுத்தியுள்ளனர். அவ்வாறே, தமது செயற்பாடுளை எத்தனங்களை ஒரு பிரதேச எல்லைக்குள் மட்டும் மட்டுப்படுத்திக் கொள்ளாமல் தேசம் தழுவிய அமைப்பாக இது செயற்படும். ஐக்கியம் புதிய தளம் அமைக்கும் என்ற தாரக மந்திரத்துடன் தோற்றங்கொண்டுள்ள இவ்வமைப்பு எந்தவொரு கட்சிக்கும் சார்பானதோ எதிரானதோ இல்லை. அந்தவகையில் எந்தக் கட்சியிலும் உள்ள ஒருவர் தனது கட்சிக்குரிய அமைப்பாக்கும் நோக்கம் இல்லாமல், தனது கட்சிக்கு விரோதமாயல்லாத வெகுஜன செயற்களங்களில் இவ்வமைப்போடு சேர்ந்து இயங்க இயலும். இது பரந்துபட்ட சமூக தளம் என்கிறவகையில், வெவ்வேறு சமூகத்தின்- குறிப்பாக பின்தங்கிய சமூகங்களின் கல்வி வளர்ச்சியை தமது இலக்காக கொண்டே இவ்வமைப்பு செயற்படும்.
நண்பர்களே மாற்று சினிமா முயற்சிகளை முன்னெடுக்கும் தமிழ் ஸ்டுடியோவின் இணைய இதழான பேசாமொழியின் 24வது இதழ் வெளியாகிவிட்டது. இந்த இதழில், பல முக்கியமான கட்டுரைகள் வெளியாகியுள்ளது. குறிப்பாக, டொராண்ட்டோ திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியிருக்கும் காக்கா முட்டை படத்தின் இயக்குனர் மணிகண்டனின் நேர்காணல் வெளியாகியுள்ளது. தமிழ் ஸ்டுடியோவின் திரைப்பட பயிற்சி இயக்கமான “படிமை” யின் 3வது அணியை சேர்ந்த மாணவரின் முதல் கட்டுரை இது. இது தவிர, லத்தீன் அமெரிக்க சினிமாவின் மிக முக்கியமான திரைப்படமான கறுப்பு ஓர்ஃபியூ திரைப்படம் பற்றிய சாரு நிவேதிதாவின் கட்டுரையும், பெர்லின் சுவர் தகர்ப்பு பின்னணியில் வெளியாகியிருக்கும் நோ பிளேஸ் டு கோ படம் பற்றிய யமுனா ராஜேந்திரனின் கட்டுரையும், தவறாமல் வாசிக்க வேண்டிய கட்டுரைகள்.
அன்புடையீர்!! அருந்தமிழ்ப் பற்றுடையீர்!! வணக்கம்! பிரான்சு கம்பன் கழகம் பதிமூன்றாம் ஆண்டுக் கம்பன் விழாவை 18.10.2014 சனிக்கிழமை 14.00 மணியிலிருந்து 20.30 மணிவரையும் 19.10.2014 ஞாயிற்றுக்கிழமை 14.00…
திருப்பூர் மத்திய அரிமா சங்கம் ஆண்டுதோறும் சிறந்த குறும்பட விருது, பெண் எழுத்தாளர்களுக்கான ‘சக்தி’ விருது ஆகியவற்றை வழங்கி வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் வெளிவந்த குறும்படங்கள், ஆவணப்படங்கள், பெண் எழுத்தாளர்களின் நூல்கள், திரைப்படம், குறும்படம் குறித்த புத்தகங்களின் இரு பிரதிகளை திருப்புர் மத்திய அரிமா சங்கத்துக்கு அனுப்பலாம்.
மாதாந்த இலக்கிய கலந்துரையாடல் நிகழ்ச்சி நிரல்
உரை: தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தில் பெண் – முனைவர் பார்வதி கந்தசாமி
சிறப்பு விருந்தினர்கள் உரை
சங்ககால ஒளவையின் ஆளுமை அம்சங்கள் – விமலா பாலசுந்தரம்
விலைமகளிர் சமூக அசைவியக்கத்தில் மாதவியும் மணிமேகலையும் – மீரா இராசையா
ஆண்டாள் பாடல்களில் மரபும் மாற்றமும் – தேன்மொழியாள் கங்காதரன்
ஆவணி மாத இலக்கிய நிகழ்வுகள்
ஐயந்தெளிதல் அரங்கு
கலாபூஷணம் பி.ரி. அஸீஸ் எழுதிய சுட்ட பழமே சுவை அமுதே, தென்றலே வீசி வா ஆகிய இரு நூல்களின் வெளியீடும் கலை இலக்கியத்துறையில் ஈடுபட்டு இலை மறை…
கு. சின்னப்பபாரதி இலக்கிய அறக்கட்டளையின் 6 -வது ஆண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அக்டோபர் 2 -ம் திகதி (02 – 10 – 2014) நாமக்கல்லில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் பரிசு பெற்றோருக்கான சான்றிதழ் – விருதுச் சின்னம் – பணமுடிப்பு ஆகியன வழங்கப்படவுள்ளன.
முதன்மை விருது – பணமுடிப்பு – ரூபா ஒரு இலட்சம் – பேராசிரியர் அருணன் – (தமிழகம்)
நாவல் – ”குடை நிழல்” – தெளிவத்தை ஜோசப் – (இலங்கை) – 10000 ரூபா
சிறுகதை – தலா 10000 ரூபா
1. ”தவிக்கும் இடைவெளிகள்” – உசாதீபன் – (தமிழகம்)
2. ”இப்படியுமா” – வி. ரி. இளங்கோவன் – (பாரிசு)
3. ”ஜயந்தி சங்கர் கதைகள்” – ஜயந்தி சங்கர் – (சிங்கப்பூர்)
4. ”வெந்து தணிந்தது காலம்” – மு. சிவலிங்கம் – (இலங்கை)
கட்டுரை – 10000 ரூபா – ”நூல் தேட்டம்” – என். செல்வராஜ◌ா – (இலண்டன்)
வாழ்நாள் சாதனை – மலையக கலை இலக்கிய மக்கள் பணி – 10000 ரூபா – அந்தனி ஜீவா – (இலங்கை)
ஈழத்து இலக்கிய உலகில் தனித்துவமான இடத்தினைப்பிடித்த சிறுகதைப்படைப்பாளியும் முற்போக்கு எழுத்தாளரும், “சமர்” இலக்கிய சஞ்சிகையின் ஆசிரியருமாகிய திரு டானியல் அன்ரனி அவர்கள் காலமாகி பல ஆண்டுகள் ஆகின்றன அவரது இலக்கியப்பணியை நினைவு கூரும் முகமாக அவரது ஞாபகார்த்த குழுவ…ும் அவரது குடும்பமும் இணைந்து இவ்வருடம் தொடக்கம் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு இலக்கியப்போட்டிகளை சர்வதேச ரீதியாக நடாத்தி விருதுகளை வழங்க முன்வந்துள்ளனர் என்பதை அக மகிழ்வோடு அறியத்தருகின்றோம்
மேற்குறித்த சிறுகதைப்போட்டியில்
முதலாவது பரிசு – 25,000ரூபாயும் (தங்கப்பதக்கமும்)
இரண்டாவதுபரிசு-20,000ரூபாயும் வெள்ளி
மூன்றாவது பரிசு- 15,000ரூபாயும் வெண்கலம்
அத்துடன் 10 பேருக்கு தலா 5000/= பெறுமதியான ஆறுதல்ப்பரிசில்களுடன் சான்றிதளும் வழங்கப்படவுள்ளது.
அன்புடையீர், வணக்கம், கொல்கத்தா சு.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு நினைவஞ்சலி கூட்டம் நாளை(12.09.2014) மாலை 8மணி அளவில் தி.ந்கர், வெங்கட்நாராயணா சாலை, தக்கர்பாபா வித்யாலயா, வினோபா அரங்கில் நடைபெற உள்ளது அனைவரும் வருக
Bharathi Puthakalayam
7, Elango Salai, Teynampet
Chennai – 600 018
# 044-24332424
www.bookday.co.in