தமிழ் இலக்கியத் தோட்டம்: திரு டொமினிக் ஜீவா அவர்களுக்கு வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனையான சிறப்பு இயல் விருது (2013)

மல்லிகை ஜீவாவுக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி 88 வயது பிறக்கிறது!னடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் இயல் விருது (2013) இவ்வருடம் திரு. டொமினிக் ஜீவா அவர்களுக்கு அவருடைய 88வது பிறந்த நாளை ஒட்டி சிறப்பு விருதாக வழங்கப்படுகிறது. இந்த விருது பரிசுக் கேடயமும், 2500 டொலர் பணப் பரிசும் கொண்டது.  ‘ஈழத்தமிழ் நவீன இலக்கிய எழுச்சியின் சின்னம்’ எனப் போற்றப்படும் இவர் இந்த விருதைப் பெறும் 15வது ஆளுமை ஆவர். முற்போக்கு இயக்கத்தின் முக்கிய பண்புக் கூறுகளான சமூகமயப்பாடு, சனநாயகமயப்பாடு ஆகியவற்றின் பெறுபேறாக எழுச்சி பெற்ற பல படைப்பாளிகளில் டொமினிக் ஜீவா குறிப்பிடத் தகுந்தவர்.
 
டொமினிக் ஜீவா 1927ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஜோசப் – மரியம்மா தம்பதிகளுக்கு பிறந்தார். இவரது தந்தையார் ஜோசப் ஒரு கலைப் பிரியர். நாட்டுக் கூத்தில் நாட்டமுடையவர். தாயார் மரியம்மாவோ அருவி வெட்டுக் காலங்களில் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி, சக தொழிலாளர்களை மகிழ்வித்தவர். கலையில் ஈடுபாடு கொண்ட தாய் – தந்தையர்க்குப் பிள்ளையாகப் பிறந்த ஜீவா, கலை இலக்கிய ஆளுமையின் ஊற்றுக்கண்ணை பெற்றோரிடமிருந்து பெற்றார். பின்னாளில் ஈழத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு சாதனையாளராக மிளிர்வதற்கான பின்புலம் இப்படி அமைந்தது.

Continue Reading →

வவுனியாவில் பண்டாரவன்னியன் நாடகவிழா!

1_bandaravanniyan_viza2014.jpg - 25.67 Kbபோர்வாளை தனது கொடியின் சின்னமாக கொண்டு, புலியெனப்பாய்ந்து, முல்லைத்தீவில் ஆங்கிலேயர்கள் அமைத்திருந்த பிரமாண்டமான கோட்டையை நிர்மூலமாக்கி, வரலாற்று வெற்றியை பதிவுசெய்து, இறக்கும் வரை வன்னி பெருநிலப்பரப்பை அந்நிய சக்திகளிடம் வீழ்ச்சியுறாமல் அரசாண்ட, இறுதி தமிழ் மன்னன் பண்டாரவன்னியன் ஆவான். அந்த தீரனின் அஞ்சா நெஞ்ச வாழ்க்கையை கூறும் வரலாற்று நாடகம் எதிர்வரும் 06.07.2014 அன்று வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் அரங்கேற்றம் செய்யப்படவுள்ளது. வடமாகாணசபை உறுப்பினரும், “வன்னி குறோஸ்” சுகாதார நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளருமாகிய வைத்தியகலாநிதி சி.சிவமோகனின் முயற்சியால், ஏறத்தாள ஏழு வருடங்களுக்கு பிறகு முல்லை கலைஞர்களால் அரங்கேற்றம் செய்யப்படவுள்ள இந்த நாடகவிழாவில், பிரதம விருந்தினர்களாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை.சேனாதிராசா, சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும், சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சர் ப.சத்தியலிங்கம், மாகாணசபை உறுப்பினர்கள் லிங்கநாதன், தியாகராசா, இந்திரராசா மற்றும் வரலாற்று ஆய்வாளரும் ஊடகவியலாளருமான அருணா செல்லத்துரை ஆகியோரும், கலாநிதி தமிழ்மணி அகளங்கன், வவுனியா மாவட்ட கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கின்றனர்.

Continue Reading →

கனடா: பேராசான் கா. சிவத்தம்பி நினைவாக….

கனடா: பேராசான் கா. சிவத்தம்பி நின்வாக....அன்புடையீர், பேராசான் கா. சிவத்தம்பி அவர்களின் பிறந்த தினத்தை அவரது மறைவின்பின் வருடாவருடம் நாம் நினைவு கூர்ந்து வருவது நீங்கள் அறிந்ததே. நமது பேராசானின் பல்துறை ஆளுமையை எடுத்தியம்பும் நிகழ்வுகளையும் நடத்தி அவரைக் கொண்டாடி வருகிறோம். மறைந்த அம் மாமேதையின் ஆன்மா மகிழ்வுறும் என்ற நம்பிக்கையுடன் சில தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் நிலைப்பட்ட முன்முயற்சிகளை அவருக்குச் சமர்ப்பணமாக்கியும் வருகிறோம். அவ்வகையில் பேராசிரியரின் 82ம் பிறந்த தினத்தினையொட்டிய நினைவுப் பெருநாளை எதிர்வரும் ஜூலை 6ந்தேதி நினைவுகூர இருக்கிறோம்.  இந்நினைவுப் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சியில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு பணிவுடன் அழைக்கிறோம். ஜூலை 6ந்தேதி மாலை 6.30 மணியளவில் நினைவுப் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி ஆரம்பமாகும். பேராசானின் ஆளுமை குறித்த சிறப்புரையை பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள் நிகழ்த்துவார்கள். அதைத் தொடர்ந்து பேராசான் பற்றியதொரு ஆய்வுக் குறிப்புரையை கலாநிதி பார்வதி கந்தசாமி அவர்கள் வழங்குவார்கள். தொடர்ந்து பேராசானுக்குப் பெருமை செய்யும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இவ்வாண்டு பேராசானுக்கான இலக்கிய சமர்ப்பணமாக ‘பருவம்’ என்ற நூல் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இலக்கியத் திரட்டாய் அமைந்திருக்கும் அந்நூல் குறித்த சுருக்கமான அறிமுகக் குறிப்புரையை ரொறன்ரோ பல்கலைக்கழக கலாநிதிநிலை ஆய்வாளர் அ. பொன்னி அவர்கள் நிகழ்த்துவார்கள்.

Continue Reading →

கனடா: மாதாந்த இலக்கிய கலந்துரையாடல்

கனடா: மாதாந்த இலக்கிய கலந்துரையாடல்நிகழ்ச்சி நிரல்

செம்மொழித் தமிழ்: வரலாறு, இயல்புகள், பயன்பாடு – உரை: வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ்

சிறப்பு விருந்தினர்கள் உரை
*தமிழல்லாத ஒரு செம்மொழி – பேராசிரியர் அ.யோ.வ.சந்திரகாந்தன்
*செம்மொழித் தமிழ்: ஒரு மொழியியல் நோக்கு – முனைவர் பார்வதி கந்தசாமி
*இன்றைய இளையவர் நோக்கில் செம்மொழித் தமிழ் – திரு.குணரட்ணம் இராஜ்குமார்

ஆனி மாத இலக்கிய நிகழ்வுகள்

தொகுப்புரை: திருமதி ஜெயகௌரி சுந்தரம்பிள்ளை

Continue Reading →

அறிவித்தல்: பேசாமொழி 17வது இதழ் வெளியாகிவிட்டது – இனி மாதமிருமுறை

நண்பர்களே, தமிழில் மாற்று சினிமாவிற்காக வெளிவரும் இதழான பேசாமொழியின் 17வது இதழ் இன்று வெளியாகியிருக்கிறது. ஜூலை மாதம் முதல், பேசாமொழி மாதமிருமுறை இதழாக வெளிவரவிருக்கிறது. ஒவ்வொரு மாதமும்,…

Continue Reading →

மாதாந்த இலக்கிய கலந்துரையாடல்

கனடா: மாதாந்த இலக்கிய கலந்துரையாடல் நிகழ்ச்சி நிரல் நிகழ்ச்சி நிரல்
 
தமிழில் காலக்கணித இலக்கியம்

உரை: கலாநிதி பால. சிவகடாட்சம்

கருத்துரை வழங்குவோர்
கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியன்
வைத்திய கலாநிதி இ.லம்போதரன்
திரு.சிவ.ஞானநாயகன்
திருமதி லீலா சிவானந்தன்

Continue Reading →

சர்வதேசத் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஊடக இரவு நிகழ்வு!

1_iatajlogo.jpg - 38.28 Kb

எமது ஒன்று கூடல் நிகழ்ச்சி சனிக்கிழமை 14.06.2014 அன்று மலை 6 மணிக்கு நடைபெறுகின்றது. இதில் நீங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

Continue Reading →

புனே திரைப்படக் கல்லூரி – குறும்படங்கள் திரையிடல்

புனே திரைப்படக் கல்லூரி - குறும்படங்கள் திரையிடல்நாள்: 15-06-2012, ஞாயிறு, மாலை 5.30 மணிக்கு.
இடம்: புக் பாய்ன்ட் அரங்கம், ஸ்பென்சர் பிளாசா எதிரில், அண்ணா சாலை.

நண்பர்களே, புனே திரைப்படக் கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கும் நண்பர் திவாகர் இயக்கிய இரண்டு குறும்படங்கள் சென்னையில் எதிர்வரும் ஞாயிறு திரையிடப்படவிருக்கிறது. ஏராளமான எழுத்தாளர்களும், திரைப்பட இயக்குனர்களும் கலந்துக்கொள்ளும் இந்த நிகழ்வில் திரளான நண்பர்களும் கலந்துக்கொண்டு திரையிடலை சிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

Continue Reading →

ஜேர்மனியில் தமிழ் எழுத்தாளர்கள் கௌரவிப்பு!

ஜேர்மனியில் தமிழ் எழுத்தாளர்களுக்கு கௌரவிப்பு!ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் எழுத்தாளர்களின் பாராட்டு விழா கடந்த 27.04.2014 ஞாயிற்றுக்கிழமை 15.30 மணியளவில் பெருந்திரளான மக்களின் வரவேற்போடு  International Zentrum – Flachs Markt– 15> 47051 Duisburg என்ற முகவரியில் அமைந்த மண்டபத்தில் திருமதி சந்திரகௌரி சிவபாலன், திருமதி கெங்கா ஸ்ரான்லி மற்றும் திருமதி கீதா பரமானந்தம் ஆகியோர் மங்கல விளக்கேற்ற ஆரம்பமானது.  நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நமது எழுத்தாளர்களை, கலைஞர்களை, ஊடகவியலாளர்களை, அவர்கள் வாழும் காலத்திலேயே, அவர்களை ரவித்துப்பாராட்டிவாழ்த்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தைக்கொண்டு, நடைபெற்ற விழாவில் தாயகத்தின் விடியலுக்காக தம்முயிரை ஈந்த எம் உறவுகளின் ஆத்ம இளைப்பாற்றலுக்காக இருநிமிட மௌன அஞ்சலி நிகழ்த்தப்பட்டதனைத்தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்தினை டோர்ட்மூண்ட் வள்ளுவர் தமிழ்ப்பாடசாலையின் மாணவிகளான செல்விகள் ரஜீவா சிறிஜீவகன் சாதுஷா அருணகிரிநாதன் மற்றும் சௌமியா சிவகுமாரன் ஆகியோர் இனிமையாய் நிகழ்த்தினர். 

Continue Reading →

நிகழ்வுகள்: சென்னைப் பல்கலைக்கழகம் , மலாயாப் பல்கலைக்கழகம், ஸ்ரீசாய்ராம் கல்வி நிறுவனம், கலைஞன் பதிப்பகம், PENA, ITBM இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் ‘கவிதையாய் விரியும் வாழ்வு’ (மலாய், தமிழ்க் கவிஞர்களின் படைப்புகளில் கருத்தாக்கம்) தொடக்க விழா

நிகழ்வுகள்: சென்னைப் பல்கலைக்கழகம் , மலாயாப் பல்கலைக்கழகம், ஸ்ரீசாய்ராம் கல்வி நிறுவனம், கலைஞன் பதிப்பகம், PENA, ITBM இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் ‘கவிதையாய் விரியும் வாழ்வு’…

Continue Reading →