அறிவிப்பு ஒன்று: பாலு மகேந்திரா – திரைப்படங்கள் திரையிடல்.
நாள்: 01-03-2014, சனிக்கிழமை, காலை 11 மணிக்கு (சரியாக 11 மணிக்கு திரையிடல் தொடங்கிவிடும்)
இடம்: பிரசாத் பிலிம் & டி.வி. அகடெமி, சாலிக்ராமம் (பிரசாத் லேப் Preview திரையரங்கம் இல்லை, பிரசாத் கல்லூரியில் உள்ள சிறிய திரையரங்கம்) தொடர்புக்கு: 9578780400
திரையிடப்படும் படங்கள்: அழியாத கோலங்கள், வீடு, சந்தியா ராகம்.
அறிவிப்பு இரண்டு: படிமை – திரைப்பட பயிற்சி வகுப்பு – மாணவர் சேர்க்கை
முழுவேகத்தில், உலகத் தரமான பாடத்திட்டத்தோடு படிமை திரைப்பட பயிற்சி இயக்கத்தை மார்ச் மாதம் முதல் தொடங்கவிருக்கிறது தமிழ் ஸ்டுடியோ. இடையில் மார்ச் முதல் வாரத்தில் தியடோர் பாஸ்கரன் அவர்கள் படிமை மாணவர்களோடு உரையாடுகிறார். இன்னமும் ஐந்து மாணவர்கள் இதில் இணைந்துக் கொள்ளலாம். பாலு மகேந்திராவின் சினிமாப் பட்டறை மூடப்படுமாயின், அதில் இதுவரை பயின்று வந்த மாணவர்களையும் இந்த பயிற்சி இயக்கத்தில் சேருமாறு அழைப்பு விடுக்கிறேன். வணிக சினிமா, வெகுஜன சினிமா, கலைப் படங்கள் என்கிற போலிக் கற்பிதங்களை தாண்டி, எது சினிமா என்கிற உண்மையை உங்களுக்குள்ளிருந்தே உணரும் இடமாக இந்த பயிற்சி இயக்கம் அமையும்.