தமிழ் இலெமுரியா -கார்த்திகை 2044 இதழ்(நவம்பர் 2013)

தமிழ் இலெமுரியா -கார்த்திகை 2044 இதழ்(நவம்பர் 2013)அன்புடையீர், தமிழ் இலெமுரியா கார்த்திகை  2044 ( 15 நவம்பர்  2013) இதழ் நம் இணையத் தளத்தில் வண்ணப் பக்கங்களுடன் வலையேற்றம் செய்யப் பட்டுள்ளது. www.tamillemuriya.com மகாராட்டிரா மாநிலத்திலிருந்து கடந்த ஆறு ஆண்டுகாலமாக வெளிவந்து கொண்டிருக்கும் “ தமிழ் இலெமுரியா” எவ்வித வணிக நோக்கமும் இன்றி, தமிழ், தமிழர் நலம், வளம் சார்ந்த சிந்தனைகளைத் தாங்கி வரும் ஒரு மாறு பட்ட மாத இதழ். தாங்கள் “தமிழ் இலெமுரியா” இணையத் தளத்தில்  இலவசமாகப் பதிவு செய்து கொண்டு முந்தைய இதழ்களையும் வாசித்துப் பயன் பெற வேண்டுகின்றோம். தமிழும் நாமும் வேறல்ல, தமிழே நம் வேர். தங்களின் ஆதரவிற்கு நன்றி,  வாசித்து மகிழ்க!  www.tamillemuriya.com நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யவும்.

Continue Reading →

வல்லமையில் புத்தக மதிப்புரைப் போட்டி – மறு அறிவிப்பு: வாசிப்பினை நேசிப்போம்! வாசிப்பினை சுவாசிப்போம்!

வல்லமையில் புத்தக மதிப்புரைப் போட்டி – மறு அறிவிப்பு: வாசிப்பினை நேசிப்போம்! வாசிப்பினை சுவாசிப்போம்!நல்ல புத்தகம், நல்ல நண்பனைப் போன்றது . நேரம் பொன்னானது. அப்படிப்பட்ட நேரத்தை பயனுள்ள வகையில் செலவு செய்யும் முக்கியமான விசயங்களில் நூல் வாசிப்பிற்கே முதல் இடம் என்றால் அது மிகையாகாது! நம் பொழுதை வெட்டியாகக் கழிக்காமல் வெல்லக்கட்டியாகச் சுவைக்கச் செய்யும் வல்லமை வாசிப்பிற்கு மட்டுமே உண்டு. வாழ்வில் எதிர்பாராமல் ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்வதற்கும், சவால்களைச் சந்திப்பதற்கும் தேவையான சக்தியை நமக்குக் கொடுப்பதில் நல்ல புத்தக வாசிப்பிற்கு பெரும்பங்கு உண்டு. ஒரு இசைக்கருவியை மீட்டுவது மட்டுமே கலை அல்ல. நல்ல வாசிப்பும் ஒரு அற்புதமான கலைதான்! வாசிப்பு நம் வாழ்க்கைத் தரத்தையே உயர்த்த வல்லது. பதவியும் பட்டமும் பெறுவதற்காக மட்டுமல்லாமல் ஒன்றை ஏற்கவோ அன்றி ஒதுக்கவோ, மறுக்கவோ அன்றி விவாதிக்கவோ தேவையான ஆற்றலை நமக்கு நல்ல வாசிப்பு மட்டுமே வழங்க முடியும். தூக்கு மேடைக்குச் செல்ல வேண்டிய கடைசி நிமிடங்களில் கூட புத்தகம் வாசிப்பதை நிறுத்தவில்லை பகத்சிங்! ஆம், தூக்கு மேடைக்குச் செல்ல வேண்டிய சில நிமிடங்களுக்கு முன்னால், லெனின் எழுதிய ‘அரசும் புரட்சியும்’என்ற நூலை வாசித்த பிறகுதான் தூக்குக் கயிற்றை முத்தமிடப் போனான் பகத்சிங்.

Continue Reading →

International Conference on Tamil Diaspora and the Preservation of Tamil Culture (Mauritius, 16, 17 & 18th July, 2014) Organised Jointly by the Institute of Asian Studies, Chennai and the Mahatma Gandhi Institute, Mauritius

International Conference on Tamil Diaspora and the Preservation of Tamil Culture (Mauritius, 16, 17 & 18th  July, 2014) Organised Jointly by the Institute of Asian Studies, Chennai and the  Mahatma Gandhi Institute, Mauritius“Diaspora” is the term for a group of persons with a common group identity, unique in culture and language, dispersed or scattered in various parts of the world. A diaspora maintains and nurtures its own civilizational and cultural identity and its aspirations are linked with their country of origin, as well as with the diaspora worldwide, making it a global unity with global identity. The Jewish, Chinese and Indian diasporas are some of the vibrant diasporas with a presence all over the world. The Tamil diaspora is a demographic group of Tamil people, of Indian and Sri Lankan origin, who have settled in various parts of the world. Among the Indian diasporas, the Tamil diaspora is a very strong and vibrant community whose presence has been in Asia and Europe from age-old days, when the Tamil people developed commercial ties with various countries all over the world. Tamils are a sea-faring race and their trade with the western and eastern worlds has been documented from the pre-Christian era. This early commercial trade, followed by the travel of Buddhist monks and Saivite and Vaishnavite saints to East and Southeast Asia, then the conquering of the later Chola kings of Southeast Asia all resulted in early Tamil settlements in various countries.

Continue Reading →

கனடா உதயன் பத்திரிகையின் பல்சுவை விழா – 2013

கனடா உதயன் பத்திரிகையின் பல்சுவை விழா - 2013 கனடாவில் இருந்து வாராவாரம் வெள்ளிக் கிழமை தோறும் வெளிவரும் உதயன் பத்திரிகையின் வருடாந்தம் நடக்கும் பல்சுவைவிழா சென்ற சனிக்கிழமை மாலை (26-10-2013) ரொரன்ரோவில் உள்ள ஆர்மேனியன் இளைஞர் மன்ற மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. முதல் நிகழ்வாக மங்கள விளக்கேற்றப்பட்டு கனடா கீதமும் தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டன. தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் விழாவில் இடம் பெற்றன. கனடிய பிரமுகர்களின் உரையைத் தொடர்ந்து, இந்தியாவில் இருந்து வருகை தந்திருந்த திரு. அரங்க நெடுமாறனின் பாட்டு மன்ற நிகழ்ச்சி முக்கிய கலை நிகழ்ச்சியாக இடம் பெற்றது. இதைவிட கர்நாடக இசை, நடனம், நாடகம் போன்ற நிகழ்ச்சிகளும் உள்ளுர் கலைஞர்களால் மேடை ஏற்றப்பட்டன.

Continue Reading →

அணு உலை எதிர்ப்பு கவிதைப் போட்டி? கடைசி நாள் : 31.12.2013! இதழாளர்கள், வலைப்பதிவர்கள் இச்செய்தியினை வெளியிட்டு உதவுங்கள்!

அணு உலை எதிர்ப்பு கவிதைப் போட்டி? கடைசி நாள் : 31.12.2013! இதழாளர்கள், வலைப்பதிவர்கள் இச்செய்தியினை வெளியிட்டு உதவுங்கள்!அணு உலை எதிர்ப்பு கவிதைப் போட்டி?
தலைப்பு :
கூடங்குளம்: ஏன் இந்த உலை வெறி?

1. கவிதை எந்தப் பா வகையிலேயும்
(புதுப்பா, மரபுப்பா) இருக்கலாம்.
2. 24 வரிகளுக்கு  மிகாமல் இருக்க வேண்டும்.
3. அணுஉலை எதிர்ப்புக் கருத்துகளை உள்ளடக்கிய கவிதைகளை மட்டுமே அனுப்புக!
4. கடைசி நாள் : 31.12.2013.
5. உங்களின் தெளிவான அஞ்கல் முகவரி,
  மின்னஞ்சல் (e-mail),            
  அலைப்பேசி விவரங்களைக் குறிப்பிடுக.

Continue Reading →

கோவை இலக்கிய சந்திப்பு: குமரி எஸ். நீலகண்டனின் ஆகஸ்ட்15-நாவல் அறிமுக கூட்டம்!

கோவை இலக்கிய சந்திப்பில் வருகிற 24 ஆம் தேதி குமரி எஸ். நீலகண்டனின் ஆகஸ்ட் 15 –  நாவல் அறிமுக நிகழ்வு கோவையில் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்வு பற்றிய மேலதிக விபரங்கள் கீழே:

கோவை இலக்கிய சந்திப்பு: குமரி எஸ். நீலகண்டனின் ஆகஸ்ட்15-நாவல் அறிமுக கூட்டம்!

நாள் – நவம்பர் 24 ஆம் தேதி காலை 10 மணி
இடம் – நரசிம்ம நாயுடு உயர்நிலைப் பள்ளி, மரக்கடை சந்திப்பு, கோவை

Continue Reading →

பொலிகையூர் சு.க சிந்துதாசனின் “கடலின் கடைசி அலை” கவிதைநூல் வெளியீடு

பொலிகையூர் சு.க சிந்துதாசனின் “கடலின் கடைசி அலை” கவிதைநூல் வெளியீடு துவாரகன்பொலிகையூர் சு.க சிந்துதாசனின் “கடலின் கடைசி அலை” கவிதைநூல் வெளியீட்டு நிகழ்வு 17.11.2013 ஞாயிறு மாலை 3.30 மணிக்கு யா/பொலிகண்டி இ.த.க பாடசாலை மண்டபத்தில் சு. குணேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் வரவேற்புரையை ஆ. முல்லைத்திவ்யன் நிகழ்த்தினார். நூலின் வெளியீட்டுரையை பருத்தித்துறை பிரதேச செயலரும் கவிஞமான த. ஜெயசீலன் நிகழ்த்தினார். நூலின் முதற்பிரதியை சண்முகசுந்தரம் பிறேம்குமாரும் (உரிமையாளர், செல்லமுத்தூஸ் புடவையகம், நெல்லியடி), சிறப்புப்பிரதியை பருத்தித்துறை பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் சே. செல்வசுகுணாவும் பெற்றுக் கொண்டனர். நூல் மதிப்பீட்டுரைகளை இ. இராஜேஸ்கண்ணன், தானா விஷ்ணு ஆகியோரும் ஏற்புரையை நூலாசிரியர் சு.க சிந்துதாசனும் நிகழ்த்தினர்.

Continue Reading →

மலேசியா: ஷா ஆலாம், மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு முதலாம் ஆண்டுக்காண மாணவர் பதிவு

மலேசியா: ஷா ஆலாம், மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு முதலாம் ஆண்டுக்காண மாணவர் பதிவுஷா ஆலாம்,மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு, 2014 ஆம் ஆண்டு முதலாம் ஆண்டுக்காண புதிய மாணவர்கள் சேர்க்கும் நடவடிக்கையில்,பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் தீவிரமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. தலைவர்  திரு.வே.ம.அருச்சுணன் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு, பள்ளியின்சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள செக்‌ஷன் 7, பாடாஞ் ஜாவா,கம்போங் சுங்கை இராசா,கம்போங் மணிமாறன்,ரிம்பா ஜெயா மற்றும் பல்வேறு குடியிருப்புப் பகுதிகளுக்கும் நேரில் சென்று, பெற்றோர்களைச் சந்தித்து மாணவர்களைச் சேர்த்து வருகின்றனர். பள்ளித் தலைமையாசிரியை திருமதி.  கோ.வரலட்சுமி அவர்களின் ஒத்துழைப்புடன்,பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் திரு.ந.இரவிந்திரன், துணைத்தலைவர் திரு.மு.கணேசன் மாணவர்களைச் சேர்க்கும் நடவடிக்கையில் நேரிடையாகக் களத்தில் இறங்கியுள்ளனர்.பள்ளி வாரியம் மேற்கண்ட நடவடிக்கைகளுக்கு முழுஒத்துழைப்பை வழங்கி வருவது மகிழ்ச்சியைத் தருகிறது. பள்ளிப் பிள்ளைகளின் போக்குவரத்துக்குப் பிரச்சனைக்குத் தீர்வு காணும்வகையில் பெற்றோர் களுடன் சந்திப்பு மிக விரைவில் நடைபெறவிருக்கிறது. இன்னும் பிள்ளைகளைப்பதிவு செய்யாத பெற்றோர்கள் பள்ளியின் அலுவலக நேரத்தில் விரைந்து பதிவு செய்துக்கொள்ள  அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.                                
 

Continue Reading →

”சுற்றுச்சூழல் திரைப்பட விழா 2013 ”

” சேவ் “  அமைப்பு ஒருநாள் சுற்றுச்சூழல் திரைப்பட விழாவை விரைவில் நடத்த உள்ளது . அதில் சுற்றுச்சூழல சார்ந்த திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் நாள் முழுக்கத்…

Continue Reading →

தாயக மக்களின் நில அபகரிப்புக்கு எதிராக ரொறன்ரோவில் கண்டனப் பேரணி!

சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்பட்டு வரும் தமிழீழ மண்! வடக்கில் 18,000 சிங்களக் குடும்பங்கள்  குடியேற்றம்! தலைக்கு மேல் வெள்ளம்!  -  நக்கீரன் -பொதுநலவாய மாநாடு   நடைபெறுவதற்கு  இன்னும் மூன்று நாட்களே எஞ்சியுள்ளது.  மாநாடு இந்த வாரம் 15 – 17 வரை கொழும்பில் நடைபெற இருக்கிறது. பொதுநல்வாய மாநாடு சிறீலங்காவில் நடைபெறுவதும் மகிந்த இராசபக்சே தலைமை  ஏற்க இருப்பதும் பன்னாட்டு மட்டத்தில் பலத்த எதிர்ப்பு அலைகளை எழுப்பியுள்ளது. மன்னிப்பு சபை, மனித உரிமை காப்பகம்,  பன்னாட்டு நெருக்கடிக் குழு போன்ற மனித உரிமை அமைப்புக்கள் சிறீலங்காவில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணிக்குமாறு  தொடர்ந்து வேண்டுகோள் விடுத்த வண்ணம் உள்ளன. நீண்ட நாள் இழுபறிக்குப் பின்னர் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என முடிவு எடுத்துள்ளார்.  அவருக்குப் பதில் இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்திஷ் இந்திய குழுவுக்கு தலைமை தாங்க இருக்கிறார். பிரதமர் மன்மோகன் சிங்  பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணிப்பதன் மூலம் ஏழு கோடி தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளித்துள்ளார் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் நேற்று (திங்கட்கிழமை) பொதுநலவாய மாநாட்டை முழுதாகப் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டசபை ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

Continue Reading →