மறக்க முடியாத மனிதர்கள குறித்து சிறப்பாகப் பதிவு செய்துள்ள இளங்கோவன் பணிகள் பாராட்டுக்குரியவை..! இலண்டன் இலக்கிய மாலை நிகழ்வில் பாராட்டு..!!

மறக்க முடியாத மனிதர்கள குறித்து சிறப்பாகப் பதிவு செய்துள்ள இளங்கோவன் பணிகள் பாராட்டுக்குரியவை..! இலண்டன் இலக்கிய மாலை நிகழ்வில் பாராட்டு..!!‘மக்கள் பணிபுரிந்த மாமனிதர்கள் குறித்துச் சிறப்பான பதிவுகளை இளங்கோவன் செய்துவருகிறார். அவை அவசியமான சிறந்த பணியாகும். நவீன தொழில்நுட்ப வசதி> முகநூல்> இணையத்தளங்கள் புத்தக வாசிப்பை அருகிடச் செய்துவிட்டது எனக் கூறுகிறார்கள். ஆனால் புத்தக வாசிப்பு உடலுக்கும் உள்ளத்திற்கும் நன்மை தருவதாகும். முற்போக்குச் சிந்தனையுடனும் மாறாத இலட்சியப் பிடிப்புடனும் எழுதிவருபவர் இளங்கோவன். அவரது நூல்கள் ஆங்கிலம், இந்தி மொழிகளில் வெளியாகி பல நாடுகளிலும் பாராட்டைப் பெற்றுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது.” இவ்வாறு கடந்த 31 -ம் திகதி ஞாயிறு (31 – 03 – 2019) இலண்டன் மாநகர் – ஈலிங் ஶ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற ‘இலக்கிய மாலை” நிகழ்வுக்குத் தலைமைவகித்து உரையாற்றிய மூத்த எழுத்தாளர் கரவை மு. தயாளன் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் ‘கலாபூஷணம் – இலக்கிய வித்தகர்” வி. ரி. இளங்கோவனின் ‘ஈழத்து மண் மறவா மனிதர்கள், என் வழி தனி வழி அல்ல, ஒளிக்கீற்று” ஆகிய நூல்களும் ‘பாரதி நேசன்” வீ. சின்னத்தம்பியின் ‘ஈழத்தின் வடபுலத்தில் கம்யூனிஸ இயக்கத்தின் வளர்ச்சியில் தமிழ்ப்பெண்கள்” என்ற நூலும் வெளியிடப்பட்டன.

நிகழ்வில் எழுத்தாளர் மு. தயாளன் மேலும் பேசுகையில் குறிப்பிட்டதாவது: ‘இலக்கியப் பாரம்பரியக் குடும்பத்தைச் சேர்ந்த இளங்கோவனின் புலமையை அவரது கவிதை நூலில் கண்டு மகிழ்ந்தேன். அந்நூலில் யாரிடமும் அணிந்துரை பெறாது தைரியத்துடன் அவர் எழுதியுள்ள முன்னுரை என்னைக் கவர்ந்தது. அவர் கவிதைகள் காலத்தின் பதிவாகச் சிறப்பாகவுள்ளன. ஈழத்தில் மட;டுமல்ல புலம்பெயர்ந்த நாட்டிலும் எழுத்தாளன் தனது படைப்புகளை நூலுருவில; வெளிக்கொணர்ந்து மக்களிடம் சேர்ப்பிக்கப் பல அவதாரங்கள் எடுக்கவேண்டியுள்ளது. சிந்தனையில் வந்ததை எழுதி முடித்தல், ஒழுங்காகப் பதிதல்,  அச்சகம் தேடிக் கொடுத்தல், பிழை திருத்தம் பார்த்தல்> அச்சுக்கூலியைத் தேடிக் கொடுத்தல், நூல்களைத் தேவையான இடங்களில் சேர்ப்பித்தல்,  வெளியீட்டு விழாக்களை ஒழுங்கு செய்தல், விமர்சனம் என்ற வகையில் பேச்சாளர்களின் அறுவைகளைக் கேட்டுக் கொள்ளல், மிகுதி நூல்களை வீட்டில் அடுக்கி வைத்தல், மனைவி – பிள்ளைகளின் நச்சரிப்பைத் தாங்குதல் – இப்படியான நிலைமைகளையெல்லாம் சமாளித்து எழுத்தாளன் தன்னளவில் திருப்திப்படவேண்டியுள்ளது. இந்த அவல நிலைதான் எம்மிடையே உள;ளது. இத்தகைய நிலையிலும் சளைக்காது பல நூல்களை வி. ரி. இளங்கோவன் தொடர்ந்து வெளியிட்டுவருவது பாராட்டுக்குரியது” என்றார்.

ஊடகவியலாளர் எஸ்.கே.ராஜன் பேசுகையில் குறிப்பிட்டதாவது: ‘என் பள்ளிப் பருவம் முதல் வி. ரி. இளங்கோவனுடன் பழகி வருகின்றேன். அவர் ஒரு தகவல் பொக்கிசமாகத் திகழ்பவர். இலக்கியம், அரசியல் சம்பந்தமான எந்தச் சந்தேகங்களையும் அவரிடம் கேட்டு நிவிர்த்திக்கலாம்;. அவை குறித்து ஆர்வத்துடன் விளக்கமாகக் கூறுவார். மறக்க முடியாத மனிதர்களின் பணிகள் குறித்துப் பதிவுகள் செய்த அவர் இன்றைய தலைமுறைக்கேற்ற பல படைப்புகளை, பதிவுகளை மேலும் தரவேண்டும்” என்றார்.

Continue Reading →

இலங்கைக் குண்டுத்தாக்குதல்களில் பலியாகிய , பாதிக்கப்பட்டவர்களுக்காக ‘சமாதானத்திற்கான கனடியர்கள் அமைப்பு’ ஒழுங்கு செய்த அஞ்சலி நிகழ்வு!

இலங்கைக் குண்டுத்தாக்குதல்களில் பலியாகிய , பாதிக்கப்பட்டவர்களுக்காக 'சமாதானத்திற்கான கனடியர்கள் அமைப்பு' ஒழுங்கு செய்த அஞ்சலி நிகழ்வு!இன்று ஸ்கார்பரோவில் அமைந்துள்ள ‘ஹீரோ பார்ட்டி ஹா’லில் அண்மையில் இலங்கையில் நிகழ்ந்த கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் நட்சத்திர ஹொட்டல்கள் ஆகியவற்றில் தற்கொலைக்குண்டுத் தாக்குதல்களில் பலியான, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நினைவஞ்சலிக் கூட்டமும், கலந்துரையாடலும் நடைபெற்றன. தற்போதுள்ள சூழலில் மிகவும் கட்டாயமாக நடத்த வேண்டிய இந்நிகழ்வினைச் சிறப்பாகக்  குறுகிய நேரத்தில் ஏற்பாடு செய்ததற்காகக் ‘சமாதானத்திற்கான கனடியர்கள் அமைப்பு’ பாராட்டுக்குரியது.  குறிப்பாக அவ்வமைப்பினைச் சேர்ந்த ரட்ணம் கணேஷ், நேசன் & டெரென்ஸ் அந்தோனிப்பிள்ளை , சபேசன், சத்தியசீலன் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள்.

நிகழ்வில் கனடியக் கலை, இலக்கிய, சமூக மற்றும் அரசியல் வெளிகளில் பங்கு பற்றும் பலரைக் காண முடிந்தது. குறிப்பாக நேசன் , பாலா (கரவெட்டி), எல்லாளன், அலெக்ஸ் வர்மா, கிருபா, திலீபன், மெலிஞ்சி முத்தன், கலாநிதி சுல்ஃபிகா,  பாலசுப்பிரமணியம் (கரவெட்டி), கற்சுறா, ஜெபா கற்சுறா, எஸ்.கே.விக்னேஸ்வரன், அவரது மகள் அரசி விக்னேஸ்வரன் , ‘அரங்காடல்’ செல்வன் , நிரூபா ஆயிலியம், சிவா கந்தையா (டெலோ),பாக்கியம் முருகேசு எனப் பலரைக் காண முடிந்தது.

நிகழ்வு அண்மையில் இலங்கையில் குண்டுத்தாக்குதல்களில் பலியாகிய மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்துவதுடன் ஆரம்பமாகியது. ‘சமாதானத்திற்கான கனடியர்கள் அமைப்’பினைச் சேர்ந்த ரட்ணம் கனேஷின் ஒருங்கிணைப்பில் ஆரம்பமாகியது. நிகழ்வினை ஆரம்பித்து வைத்து அவராற்றிய உரையில் ‘சமாதானத்திற்கான கனடியர்கள் அமைப்பு’ நடைபெற்ற தாக்குதல்கள் பல்லின மக்களுக்கிடையிலான இணக்கத்துக்கு அபாயத்தை ஏற்படுத்தியதுடன் இலங்கையின் பொருளாதாரத்துக்கும் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது என்று எடுத்துரைத்ததுடன் அரசு மேலும் எதிர்காலத்தில் இது போன்ற தாக்குதல்கள் நிகழாதவாறு நடவடிக்கைகளை எடுத்து மக்களைப் பாதுகாக்க வேண்டுமெனவும் வேண்டிக்கொண்டார். இதற்கு மக்களாகிய நாமனைவரும் ஒத்துழைக்க வேண்டுமெனவும் வேண்டிக்கொண்டார்.

அவரைத்தொடர்ந்து கலாநிதி ந.ரவீந்திரன் அவர்கள் உரையாற்றினார். அவரது உரை இலங்கையின் கடந்த கால மற்றும் தற்கால அரசியல் பற்றிய தெளிவான உரையாக அமைந்திருந்தது. இலங்கையில் மார்க்சிசக் கட்சிகளின் செயற்பாடுகள், தேசியப் பிரச்சினை , சோவியத் உடைவுக்குப்பின்னர் பண்பாட்டுத்தளத்தில் முன்னெடுக்கப்படும் சமூக, அரசியற் செயற்பாடுகள், இலங்கையில் நிலவிய சாதியை, இன, மத, மொழி மற்றும் வர்க்கத்தை மையமாக வைத்தியங்கிய அடையாள அரசியல், பயங்கரவாதத்தை ஆரம்பத்திலிருந்தே ஆதரித்த இலங்கைத்தமிழர்கள் (இவ்விதமான நடவடிக்கைகளை அவர்களது ‘பையன்க’ளே செய்திருந்தாலும் வெளியில் அவர்கள் அவற்றை அவர்களது ‘பையன்கள்’ செய்யவில்லை என்று கூறிக்கொண்டாலும், அவர்கள் ‘பையன்க’ளின் பயங்கரவாத நடவடிக்கைகளைக் கண்டிக்காலம் ஆதரவானதொரு நிலைப்பாட்டினையே எடுத்திருந்தார்கள் ) இவற்றைப்பற்றியெல்லாம் தொட்டுச் சென்றது அவரதுரை. அவர் தனதுரையில் முஸ்லிம் மக்கள் தம்மினத்தவர் செய்த தற்கொலைக்குண்டுத்தாக்குதல்களைக் கண்டித்ததன் மூலம் பயங்கரவாத நடவடிக்கைகளை ஆரம்பத்திலேயே கண்டித்திருக்கின்றார்கள் என்பதையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

Continue Reading →

யாழ்ப்பாணத்தில் ‘படிப்பகம்’

முற்போக்கான , சமூகம் சார்ந்த நூல்களை உள்ளடக்கிய நூலகத்துடன் கூடிய புத்தகக்கடை வரவேற்கத்தக்க விடயம். சமூக மற்றும் இலக்கியப் பிரக்ஞை மிக்க அனைவரும் பாவிக்க வேண்டிய அமைப்பு.…

Continue Reading →