navina.virutcham@gmail.com
பனிப்பூக்கள் சஞ்சிகை, சில வாரங்களில் எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 2012 ஆம் ஆண்டு, உலகத் தாய்மொழித் தினத்தன்று. அமெரிக்க மாநிலமான மினசோட்டாவில் வாழும் தமிழர்களுக்கு, தனித்துவ முறையில் கலாச்சாரப் பாலமாகச் செயல்படும் நோக்கத்துடன் தொடங்கிய சஞ்சிகை இன்று அகிலமெங்கும் பரவி பல்லாயிரக்கணக்கான வாசகர்களைக் கொண்டுள்ளது. இந்தப் பயணத்தில் பல தமிழ் எழுத்தாளர்களை அறிமுகம் செய்த பெருமையும் பனிப்பூக்களுக்கு உண்டு.
மகிழ்ச்சிகரமான இத்தருணத்தைப் படைப்பாளிகளுடன் சேர்ந்து கொண்டாட விழைந்து, 2020 ஆம் ஆண்டுக்கான பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டியை அறிவிக்கிறோம். உங்கள் கற்பனை சிறகை விரித்து, சிறுகதை வடித்து போட்டியில் பங்கேற்க அழைக்கிறோம்.
போட்டிக்கான விதிமுறைகள்
சிறுகதைகள் தமிழில் மட்டுமே இருக்கவேண்டும். கதைகள் MS Word அல்லது எளிதில் திருத்தம் செய்யக் கூடிய செயலியில், யூனிகோட் எழுத்துருவில் வடிக்கப்பட்டதாய் இருத்தல் வேண்டும். கையெழுத்துப் பிரதிகள், நிழற்பட பிரதிகள், PDF வடிவிலான ஆவணங்கள் கண்டிப்பாகப் போட்டியில் ஏற்கப்படமாட்டாது. சிறுகதைகளை கீழ்க்கண்ட விலாசத்திற்கு மின்னஞ்சல் இணைப்பாக அனுப்பவேண்டும்.
தொழில்நுட்பம் பெருகி வரும் இன்றைய காலகட்டத்தில் புலம்பெயர் நாடுகளில் மட்டுமன்றி நாம் பிறந்து வளர்ந்த நாடுகளிலும் அசாதாரண செயல்கள் இடம்பெறுவது கவலை தருகின்ற விடயமாகும். தமது சூழலுக்கேற்ற நடத்தை நியமங்களினின்றும் தவறி ஒருவர் நடந்துகொள்வாரானால் அவரது நடத்தை அசாதாரணமானது என்று நினைக்கத் தோன்றுகின்றது. புலம்பெயர்ந்து வசதிபடைத்த, கல்வி வளங்கள் சூழ்ந்த நாடுகளில் வாழ்ந்துகொண்டிருக்கும் இளம் சமுதாயத்தினரிடமும், தமது வாழ்க்கையை வெற்றிகரமாக எடுத்துச் செல்லமுடியாது மனம் சோர்வதை அவதானிக்க முடிகின்றது. மனம் பதட்டமடைந்து மற்றவர்களுடன் தமது உள்ளார்ந்த உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளத் தயங்கித் தங்களைத் தாங்களே மாய்த்துக்கொள்ளும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன. எமது சமூகத்திடையே இடம்பெறும் இவ்வகையான கவலையான செயல்களை ஆராய்ந்து ஒரு விழிப்புணர்ச்சியை எம்மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் லண்டனில் வாழும் கொழும்பு ராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவிகளால் மன அழுத்தம் பற்றிய கருத்தரங்கு முன்னெடுக்கப்பட்டது. மன்றத்தின் தலைவி சிவா றூபி, செயலாளர் துர்கா சிவான்தன், பொருளாளர் அனன்னியா ஐங்கரன் ஆகியோரின் முயற்சியில் லண்டன் ஹரோ ஐயப்பன் கோயில் மண்டபத்தில் இந்நிகழ்வு வெற்றிகரமாக இடம்பெற்றது.
முத்துக்குமார். 1982-ம் ஆண்டு நவம்பர் 19 அன்று தூத்துக்குடியில் பிறந்த இவன் தன் இனத்தை உயிராய் நேசித்த தன்மான தமிழன். தமிழகத்தில் யாரும் இந்த தியாகியை மறந்திருக்க முடியாது. தமிழ் ஈழத்தில் நடந்த கொடூர யுத்தத்தில் குழந்தைகளும் பெண்களும் உட்பட பல்லாயிரக்கணக்கான அப்பாவிகள் ஈவு இரக்கமின்றி அநியாயமாக கொல்லப்பட்டதை எதிர்த்து எந்த அரசியல் வாதியும் குரல் கொடுக்க முன் வராத நிலையில் இந்த இளம் எழுத்தான் ஜனவரி மாதம் 29-ம் திகதி 2009 அன்று தன்மீது பெட்ரோலை ஊற்றி தன்னையே ஆகுதியாக்கி எல்லோர் கவனத்தையும் ஈர்த்தான். தான் எதற்காக தீக்குளிக்க முடிவு செய்தான் என்பதை கடிதம் ஒன்றில் பதிவு செய்து விட்டு தன் உடலை வைத்து போராடி இளைஞர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தி, தனது உடலை ஆட்சியாளர்களோ காவல்துறையோ கைப்பற்றி அடக்கம் செய்ய விடாமல் தனது உடலை ஒரு துரும்புச் சீட்டாக வைத்துக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் கொண்டு திரிந்து மாணவர்கள் இளையோர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தி ஈழத்தில் போர் நிறுத்தம் ஏற்படும் வரை போராடுமாறு கூறி, அப்போராட்டத்தை தொடருங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தான் அந்த மாவீரன்.
ராஜீவ் காந்தியின் கொலையை காரணமாக காட்டி இந்தியாவே பழிவாங்கும் நோக்கில் ஈழத்தில் அப்பாவி மக்களை கொன்று குவிக்கிறது என்று தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியிருந்தான் இந்த உணர்வாளன். அன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சட்ட கல்லூரி மாணவர்களோடு அனைத்து மாணவர்களும் இணைந்து கொண்டு ஈழத்தமிழர்களுக்கு நீதி கேட்டு, அகிம்சை வழியில் போராட வேண்டும் என்ற வேண்டுகோளுடன் தீயில் கருகினான். தமிழ் நாட்டில் வாழும் பிற இனத்தவரின் ஆதரவையும் சர்வதேச சமுகத்தின் கவனத்தையும் இறைஞ்சி, பதினான்கு கோரிக்கைகளை முன்வைத்து தீயில் வெந்து தீய்ந்தான். அம்மாவீரனின் வேண்டுகோளை நிறைவேற்ற எடுத்த முயற்சிகள் தோல்வியுற்ற அதேவேளை, கொந்தளித்த மாணவர்களை ஒடுக்கும் முயற்சியை அன்றைய தமிழக அரசு வெற்றிகரமாக செய்ததை மறந்து விட்டிருக்க முடியாது. கொஞ்சம் கூட மனச்சாட்சியின்றி எல்லாமே மறைக்கப்பட்டது , மறுக்கப் பட்டது.
‘ஈழத்தில் வாழ்ந்த உலகப் புகழ்பெற்ற சிறந்த ஆளுமைகள் பலர் குறித்த தகவல்களை இளங்கோவன் திரட்டித் தந்திருக்கிறார். ‘ஈழத்து மண் மறவா மனிதர்கள்” நூலை வாசிக்கும்போது வியப்பாகவிருந்தது. சீனப் பெருந்தலைவர் மாஓவினால் பாராட்டப்பட்ட தோழர் சண்முகதாசன், மக்கள் இலக்கியக் கர்த்தா கே. டானியல், புதுநெறி காட்டிய பேராசான் கைலாசபதி, தமிழறிஞர் சிவத்தம்பி, அன்று தென்தமிழகத்தைக் கவர்ந்திருந்த இலங்கை வானொலியில் தன்குரல்வளத்தால் எம்மைச் சொக்கவைத்த பல்கலைவேந்தர் சில்லையூர் செல்வராசன், சீனாவில் பல ஆண்டுகள் தமிழ்ப்பணியாற்றிய வீ. சின்னத்தம்பி, ஆங்கில இலக்கியத்துறையில் உலகப்புகழ்பெற்ற அழகுசுப்பிரமணியம் மற்றும் பல சிறந்த ஆளுமைகளைப்பற்றி, அவர்களுடன் பழகிய அனுபவங்களைச் சிறப்பாக நூலில் தந்துள்ளார் வி. ரி. இளங்கோவன். புலம்பெயர்ந்த ஈழத்து இளந்தலைமுறையினர் மாத்திரமல்ல நாமும் இந்நூலை அவசியம் படிக்கவேண்டும். சிறந்த ஆவணமாகவுள்ள இந்நூலை அளித்த இளங்கோவன் எமது பாராட்டுக்குரியவர். நூலை அச்சிட்டு வெளியிட்ட மதுரை தழல் பதிப்பகம் இத்தகைய நல்ல நூல்களைத் தொடர்ந்து வெளிக்கொணர வேண்டும் ” இவ்வாறு மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் கடந்த மாதம் 23 -ம் திகதி (23 – 12 – 2019) நடைபெற்ற ‘நூல் அரங்கேற்றம்” நிகழ்வில் உரையாற்றிய கவிஞர் மூரா குறிப்பிட்டார்.