கனவு இலக்கிய வட்டம் டிசம்பர் மாதக் கூட்டம்: நூல் அறிமுகம்
என் நாவல் சாயத்திரை : வங்காள மொழிபெயர்ப்பு அறிமுகம் கனவு இலக்கிய வட்டத்தின் டிசம்பர் மாதக் கூட்டம் மாலை சக்தி பில்டிங், அம்மா உணவகம் அருகில், பாண்டியன் நகரில், திருப்பூர் நடந்தது. கலாமணி கணேசன்( தலைவர் ஸ்ரீ சக்தி மகளிர் அறக்கட்டளை, பாண்டியன் நகர் ) தலைமை தாங்கினார். சுப்ரபாரதிமணியனின் ” சாயத்திரை ” நாவலின் வங்காள மொழிபெயர்ப்பு நூலை ஜோதி அறிமுகப்படுத்திப் பேசினார்.
” சாயத்திரை ” நாவல் “ ரங்க பர்தா “ என்ற பெயரில் அமரர் கல்கத்தா கிருஷ்ணமூரத்தி அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு கல்கத்தாவைவைச் சார்ந்த ஆதர்ஷ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அந்நாவல் முன்பே ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. புலவர் சொக்கலிங்கம் பேசுகையில் ” குறிப்பிட பிரதேசம் சார்ந்த மக்களின் வாழ்க்கையை பதிவு செய்யும் இலக்கியம் எப்போதும் உயர்வான இடத்தை அதன் மொழி, கலாச்சாரம் சார்ந்து பெறும். அதுவே மண்ணின் படைப்பாக இருக்கும். திருப்பூர் மக்களின் பழமையான வாழ்க்கையையும், நகரமயமாதல், தொழில் மய்மாதலின் விளைவுகளையும் ” சாயத்திரை “ பேசுவதாலே அது சிறப்பிடம் பெற்றுள்ளது “ என்றார்.சுப்ரபாரதிமணியன், மோகன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். விஜயா நன்றி கூறினார். Kanavu 8/2635, Pandian nagar, Tiruppir 641 602 ( ph. 9486101003 )
சுப்ரபாரதிமணியனின் நாவல் “ சாயத்திரை “ – சிறந்த நாவலுக்கான தமிழக அரசு பரிசு பெற்றது. ஆங்கிலம், மலையாளம், கன்னடம், ஹிந்தி, வங்காள மொழிகளில் வெளிவந்துள்ளது.* தமிழின் சிறந்த நாவல்கள் பட்டியலில் இடம் பெறுவது. – பிரேமா நந்தகுமார்: இந்தியா டுடே விமர்சனம் –
விளம்பர யுகத்தின் வண்ணங்கள் காட்டும் மாயையில் இன்று நாம் சிக்கியிருக்கிறோம். இந்த வானவில்லின்பின்னால் அனைத்தும் சோகம். இயற்கையைப் பார்த்து, அதைப் போல் தானும் வர்ணங்களை சிருஷ்டிக்க முடிந்தமனிதன், புலியைப் பார்த்து பூனை சூடிட்டுக்கொண்டாற்போல் அவதியுறுவதை சுப்ரபாரதிமணியன் மறக்க முடியாத-அல்ல, மறக்கக் கூடாத-புதினமாக வடித்திருக்கிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தரையில் உதிர்ந்த பவழ மல்லிமலர்களைப் பிழிந்து தம் உடைக்குக் காவி ஏற்றிய புத்த பிட்டுக்கள் இயற்கையை அழிக்கவில்லை. இன்றுஇயற்கையின் மகத்தான படைப்பாம் மனிதனை இந்த வண்ண மோகம் எப்படி அரித்துக் கொண்டிருக்கிறது, அழித்துக்கொண்டிருக்கிறது என்ற அவலத்தை சாயத்திரை நாவல் எடுத்துச் சொல்கிறது.