திரும்பிப்பார்க்கின்றேன்: கற்காலம் முதல் கம்பியூட்டர் காலம் வரையில் ஆடற்கலையின் நுட்பங்களின் ஆய்வில் தேடுதலில் ஈடுபட்ட மூத்த நடன நர்த்தகி நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்!

நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்கொழும்பில் கலை இலக்கிய நண்பர்கள் கழகம் என்ற அமைப்பு 1970களில் இயங்கியது. இதில் எழுத்தாளர்கள் சாந்தன், மாவை நித்தியானந்தன், குப்பிழான் சண்முகன், யேசுராசா, இமையவன், நெல்லை க.பேரன் உட்பட சில நண்பர்கள் அங்கம்வகித்து அடிக்கடி கலை, இலக்கிய  சந்திப்புகளை   நடத்திக்கொண்டிருந்தார்கள். சில நிகழ்ச்சிகளை வெள்ளவத்தை  தமிழ்ச்சங்கத்திலும்  நடத்தி  மூத்த  எழுத்தாளர்களை  அழைத்து  அவர்களின்  இலக்கிய அனுபவங்களை பேசவைத்தார்கள்.

இலங்கையின்  வடபகுதியைச் சேர்ந்த  இந்த  இலக்கிய  நண்பர்கள் தொழில்   நிமித்தம்  கொழும்பில்  வாழ்ந்துவந்தனர்.  பெரும்பாலும் அனைவருக்கும்   அப்பொழுது  திருமணம்  ஆகியிருக்கவில்லை. இந்த  பிரம்மச்சாரிகள்  நடத்திய  சில  சந்திப்புகளில் நீர்கொழும்பிலிருந்து  சென்று  கலந்துகொள்ளும்  சந்தர்ப்பங்களும் எனக்குக்கிடைத்தது.    சில  சந்திப்புகள்  நண்பர்களின்  வாடகை அறைகளில்  நடக்கும். அங்கிருக்கும்  கட்டில்களே  ஆசனங்கள்.

நாடகம்,   கவிதை,  சிறுகதை,  நாவல்,  விமர்சனம்  என்று அந்தக்கலந்துரையாடல்கள்   அமைந்திருக்கும்.   மிகவும்  தரமான கருத்துப்பரிமாறல்களுக்கு  களம்  அமைத்திருந்த   அச்சந்திப்பில்  ஒரு நாள்  நாட்டியம்  பற்றிய  கலந்துரையாடல்  நடந்தது. நடன   நர்த்தகி  கார்த்திகா  கணேசர்  அவர்கள்  எழுதி  தமிழ் நாடு தமிழ்ப்புத்தகாலயம்  1969  இல்  வெளியிட்டிருந்த  தமிழர்  வளர்த்த ஆடற்கலை   என்ற   நூலையே  அன்று  பேசுபொருளாக எடுத்திருந்தார்கள்.    அன்றைய   சந்திப்புக்கு  இலக்கிய   திரனாய்வாளர்    கே.எஸ். சிவகுமாரனும்  வருகை  தந்திருந்தார்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 111: மேலும் சில முகநூல் குறிப்புகள்!

1. ‘வெங்கட் சாமிநாதன்’: வாதங்களும் விவாதங்களும்’

. 'வெங்கட் சாமிநாதன்': வாதங்களும் விவாதங்களும்' கடந்த ஐம்பது வருடங்களுக்கும் அதிகமாக தமிழ்க்கலை, இலக்கிய உலகில் கலை, இலக்கிய விமர்சகராகப்பங்களித்து வருபவர் திரு. வெங்கட் சாமிநாதன் அவர்கள். முதுமையின் தளர்ச்சியையும் உள்வாங்கிச்சோர்ந்து விடாமல் தொடர்ந்தும் சஞ்சிகைகள், இணைய சஞ்சிகைகள் என்று தன் எழுத்துப் பங்களிப்பினை வழங்கி வருபவர் வெங்கட் சாமிநாதன். அவருடன் கருத்து முரண்பாடு கொண்டவர்கள் கூட தமிழ்க்கலை, இலக்கியச்சூழ்நிலையில் நிராகரிக்க முடியாத அவரது ஆளுமையினை ஏற்றுக்கொள்வார்கள், ‘பதிவுகள்’ இணைய இதழுக்குப் பல வருடங்களாகத்தன் கட்டுரைகளை அனுப்பி வருபவர் அவர். ‘பதிவுகள்’ இணைய இதழினை மிகவும் மதிப்பவர் திரு.வெ.சா, அவர் தன் படைப்புகளை அனுப்பும்போது எப்பொழுதும் மின்னஞ்சலில் ‘அன்புள்ள நண்பர், ஆசிரியர் பதிவுகள் கிரிதரன் அவர்களுக்கு’ என்று விளித்துத்தான் தன் படைப்புகளை அனுப்புவார். இது அவரது பெருந்தன்மையினைக்காட்டுகிறது. என்னை அவர் தன் நண்பர்களிலொருவராக ஏற்றிருப்பது அவரது நல்ல உள்ளத்தைக்காட்டுகிறது. அது ‘பதிவுகள்’ இணைய இதழ் மேல் அவர் வைத்துள்ள மதிப்பினையும் எடுத்துக்காட்டுகிறது.

திரு.வெ.சா.வின் ஐம்பது வருட இலக்கியப்பணியினைச் சிறப்பிக்கும் முகமாக எழுத்தாளர்கள் பா.அகிலன், திலீப்குமார் மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோர் சந்தியா பதிப்பகம் வாயிலாக ‘வெங்கட் சாமிநாதன்’: வாதங்களும் விவாதங்களும்’ என்றொரு தொகுப்பு நூலினை 2010இல் வெளியிட்டு வைத்தார்கள். மிகவும் நேர்த்தியான வடிவமைப்பில், தடித்த மட்டையுடன் வெளியான அந்த நூலில் கலை, இலக்கிய ஆளுமைகள் பலரின் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. எனது கட்டுரையான ‘அறிவுத்தாகமெடுத்து அலையும் வெங்கட்சாமிநாதனும் அவரது கலை ,மற்றும் தத்துவியற் பார்வைகளும்’ என்றொரு நீண்டதொரு கட்டுரையினை எழுதியிருந்தேன். மேலும் மேற்படி நூலினைப்பெற விரும்புவோர் சந்தியா பதிப்பகத்துடன் தொடர்புகொள்ளவும். முகவரி வருமாறு: சந்தியா பதிப்பகம், புது எண் 77, 53ஆவது தெரு, 9ஆவது அவென்யு, அசோக் நகர் , சென்னை 600 083 என்னு முகவரிக்கு எழுதித்தொடர்பு கொள்ளுங்கள். விலை ரூபா 300.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 110: ஆவணப்பதிவு- எழுக அதிமானுடா! (கவிதைகள்) – வ.ந.கிரிதரன்

நூல்: எழுக அதிமானுடா! (கவிதைகள்) - வ.ந.கிரிதரன்நூல்: எழுக அதிமானுடா! (கவிதைகள்) – வ.ந.கிரிதரன்
முதற்பதிப்பு: தை 1994
புத்தக வடிவமைப்பு: ஜோர்ஜ் இ.குருஷேவ்
அட்டை வடிவமைப்பு: பாலா ஆர்ட்ஸ்
வெளியீடு: மங்கை பதிப்பகம் ( ‘டொரோண்டோ’, கனடா)

எண்பதுகளில், தொண்ணூறுகளில் வீரகேசரி, தினகரன், நுட்பம், தாயகம் (கனடா) , குரல் (கையெழுத்துப்பிரதி, கனடா) ஆகிய ஊடகங்களில் வெளியான மற்றும் ஊடகங்களில் வெளிவராத எனது ஆரம்பகாலத்துக் கவிதைகளின் தொகுப்பிது. இத்தொகுப்பில் 30 கவிதைகளுள்ளன. இவை பிறந்த மண்ணின் அரசியலை, புகலிடத்திருப்பினை, ஆசிரியருக்குப் பிடித்த ஆளுமைகளைப் பற்றிய எண்ணங்களை மற்றும் சூழற் பாதுகாப்பினை விபரிக்கின்றன. இக்கவிதைகளில் சிலவற்றில் அதிமானுடா போன்ற ஆணாதிக்கத்தை வெளிப்படுத்தும் சொற்களுள்ளன. இவை அக்காலத்தின் என் எண்ணங்களின் வெளிப்பாடு. இப்பொழுது எழுதுவதாயின் மானுடம், மானிடர் போன்ற சொற்களையே பாவிப்பேன். ஆயினும் ஏற்கனவே வெளிவந்த பதிப்பிலுள்ளவற்றை மாற்ற முடியாத காரணத்தால் , அடுத்து வரும் பதிப்புகளில் இவ்விதமான சொற்கள் மாற்றப்படும். இத்தொகுப்பிலுள்ள கவிதைகளில் சிலவற்றைத்தவிர ஏனையவற்றை கவிதை ஆர்வத்தின் வெளிப்பாடுகள் என்று கூறுவேன். என் அக்காலத்து உணர்வுகளை வெளிப்படுத்துவதையே முக்கியமாகக்கொண்டு உருவான சொற்களின் வெளிப்பாடுகள் என்றும் கூறுவேன். விடுதலை அமைப்புகளின் அக, புற முரண்பாடுகளை, முஸ்லீம் மக்களின் பலவந்த  வெளியேற்றத்தினை, மலையக மக்களின் துயரினையெல்லாம் கவிதைகள் தம்பொருளாகக்கொண்டுள்ளன. கனடாப்பூர்வீகக்குடியினரின் சோகங்களையும் கவிதைகள் விபரிக்கின்றன.

Continue Reading →

எதிர்வினை: என்னைக் கவர்ந்த கவிதை வரிகள்

[ பதிவுகளில் வ.ந.கிரிதரனின் பக்கத்தில்  ‘சிலோன் விஜயேந்திரன்’ பற்றி வெளியான குறிப்பு பற்றிய குரு அரவிந்தனின் எதிர்வினை இது. இங்கு ‘சிலோன்’ விஜயேந்திரன் பற்றிய மேலதிகத்தகவல்களைப் பகிர்ந்து…

Continue Reading →

சில எண்ணப்பதிவுகள்: கவிஞர் அய்யப்ப மாதவன்

கவிஞர் அய்யப்ப மாதவன்

- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -

நவீன தமிழ்க்கவிதைவெளியில் 20 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து எழுதிக்கொண்டு வருபவர் அய்யப்ப மாதவன். 1966இல் பிறந்தவர். தமிழின் முக்கிய மாற்றிதழ்கள் எல்லாவற்றிலும் இவருடைய கவிதைகள் வெளியாகி யுள்ளன. ஏறத்தாழ நவீனத் தமிழ் இலக்கிய  முன்னணிப் பதிப்பகங்கள் எல்லாமே இவருடைய தொகுப்புகளைக் கொண்டு வந்துள்ளன. சிறந்த புகைப்படக் கலைஞர். இவருடைய வலைப்பூவில் காணக்கிடைக்கும் இவர் எழுதிய கவிதைகளும், எடுத்த புகைப்படங்களும் இவருடைய படைப்புக் கலைக்குக் கட்டியங்கூறுபவை.

பரதேசி படத்திற்காக இந்திய அரசின் விருது பெற்ற ஒளிப்பதிவாளர் செழியன் இவருடைய நெருங்கிய நண்பர். அய்யப்ப மாதவன் திரைப்படத்துறையில் இயங்கிவருபவர். திரைப்பட  இயக்குனர் ஆகவேண்டும் என்பது இவருடைய இலட்சியம். அதற்கான எல்லாத் தகுதிகளும் இவரிடம் உள்ளன. காலம்தான் இன்னும் கனியவில்லை. [திரைப்படத்துறையில் உள்ள இவருடைய நண்பர்கள் முயன்றால் அய்யப்ப மாதவனின் கனவை நிறைவேற்ற முடியாதா என்ன?]

இவருடைய கவிதை ஒன்று குறும்படமாக வெளியாகி பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கவிஞர் அய்யப்பனின் தொடர்பு அலைபேசி எண்: +919952089604. இவருடைய மின்னஞ்சல்  முகவரி: iyyappan66@gmail.com.

இதுவரை இவருடைய 11 கவிதைத்தொகுப்புகள் வெளியாகியுள்ளன.

Continue Reading →

இசை – தமிழ் மரபு (3)

- வெங்கட் சாமிநாதன் -பதினாறாம் நூற்றாண்டிலிருந்து தமிழர்களின் படைப்பு மேதைமை இசையிலும் நடனத்திலுமே தன்னை வெளிப்படுத்திக் கொண்டது. பக்தி சகாப்தத்தின் இலக்கிய மேதைமை கம்பனில் தன் உச்சத்தை அடைந்து பின் சரிவடையத் தொடங்கி, 16  – ம் நூற்றாண்டுக்குப்பின் கிட்டத்தட்ட வறண்டு போனது அம்மேதைமை இசையிலும், நடனத்திலும் தன் கவனத்தை முழுவதுமாய் திருப்பியது,  இதற்குப் பின் தமிழ் நாடு இவ்விரண்டு துறைகளிலும் கற்பனை, மேதைமை இரண்டிலும் மிகச் சிறந்து மலர்ந்தது. பல்லவர்களும் சோழர்களும் கோவில்களை தமிழர் வாழ்க்கையின் உட்கருவாய் மாற்றியதில் அவர்களது நடவடிக்கைகள் கோவிலைச் சுற்றியே இருந்தன .விஜயநகர சாம்ராஜ்யமும் அவர்களுக்குக் கீழ்ப்பட்ட நாயக்கர்களும் இத்தகைய அமைப்புகளை ஒருங்கிணைத்து அவற்றை இன்னும் வலுப்படுத்தினர். இத்தகைய நிகழ்வுகள் வடக்கில் பழங்காலத்தில் குப்தர்களின் காலத்துக்குப் பின் எப்போதும் காணப்படவில்லை, அது தேய்ந்து போன நினைவுகளாயிற்று., உயிர்ப்புள்ள நிஜம் அல்ல. தெற்குக்கு அதன் சரித்திரம் முழுவதிலும் நீடித்து இருந்த ஒரு விஷயம் அதன் அறுபடாத மரபு, அம்மரபின் மேல் அது கட்டி எழுப்பிக் கொண்டு போக முடிந்தது,  அதற்கு சாதகமாக இருந்தது   வட இந்தியாவை ஒப்பிட்டு நோக்கும் போது, இங்கு நிலவிய அமைதி. கோவிலிலிருந்து பிரவாஹித்த பாடகர்களின், நாட்டிய கலைஞர்களின்  இனிமையான இசை மற்றும் லயத்துடனான தாள ச்ப்தங்கள்  அப்பிரதேசம் முழுவதுமே எதிரொலித்தது. நாயக்கர்களுக்குப் பின்வந்த மராத்தா மன்னர்களும் இன்னும்  அதிக அளவில் இம்மரபைத் தொடர்ந்தனர். சாலைகளிலும், கோவில்களின் நடைபாதைகளிலும் நிரம்பியிருந்த இசைக்கு  பாமர மக்களும் (hoi polloi), நூற்றாண்டுகள் பலவாகத் தொடர்ந்து நிலவும் இத்தகைய சூழலில் இதற்கு அன்னியப்பட்ட பாமர மக்கள் இருந்திருப்பாராயின், அப்பாமர மக்களும் இச்சுழலில் மூழ்கி மகிழ்ந்தனர். . கோவில் திருவிழாக்களின்போது வாரக்கணக்கில் பாட்டுக் கச்சேரிகளும் நடன நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன, வருடம் முழுவதும் நாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தன, தெருக்களில் ஊர்வலமாய் நாகஸ்வர இசையும், நடனமும் நிகழ்த்தப்பட்டன. திருமணங்களிலோ அல்லது செல்வந்தர் வீட்டு விசேஷங்களிலோ நடந்த பாட்டுக் கச்சேரிகளும் நடன கச்சேரிகளும் எல்லோருக்கும் திறந்து விடப்பட்டிருந்தன. விடியலுக்கு முன்பாடகர்கள் கூட்டமாய் தேவாரமும்,  பிரபந்தமும், தியாகராஜ கிருதிகளும் பாடிக்கொண்டு போகும் காலைப் பொழுதுகளில் சாலைகள் விழித்தன. சங்ககாலத்தில் பாணர்களும் பொருணர்களும், பக்தி சகாப்த நூற்றாண்டுகளில் ஆழ்வார்களும் நாயன்மார்களும் இதைத்தான் செய்தனர்.

Continue Reading →

அஞ்சலி: சாந்தி சச்சிதானந்தம் பற்றிச் சில நினைவுகள்…

சாந்தி சச்சிதானந்தம் நாடறிந்த சமூக சேவையாளர்; எழுத்தாளர். விழுது அமைப்பின் ஸ்தாபகர். இலங்கையிலேயே தொடர்ந்தும் தங்கியிருந்து பெண்களின் உரிமைக்காக, மனித உரிமைகளுக்காகத் தொடர்ந்தும் போராடி வந்தவர். இவரை எனக்கு 1978இலிருந்து தெரியும். என்னுடன் மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை பயின்றவர். இவரது தந்தையார் சச்சிதானந்தம்தான் லங்கா சமசமாஜக் கட்சி சார்பில் 1970இல் நல்லூர் தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டவர். சிறிது காலத்தின் முன்புதான் என் முகநூல் நண்பர்களிலொருவராக இணைந்து கொண்டார். இவரது திடீர் மறைவு யாரும் எதிர்பாராதது. நீண்ட நாள்களாக இவர் நோய்வாய்ப்பட்டிருந்த விடயமே இவரது மறைவினையொட்டி வெளியான செய்திகளின் வாயிலாகவே அறிந்துகொண்டேன். இவரது திடீர் மறைவானது பழைய நினைவுகள் சிலவற்றை அசைபோட வைத்துவிட்டது.

மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் எங்கள் வகுப்பில் இவர் ஒருவரே தமிழ்ப்பெண். மிகவும் துணிச்சல் மிக்கவர். மிகவும் இனிமையாகப்பாடும் குரல் வளம் மிக்கவர். மொறட்டுவைப்பல்கலைக்கழக நிகழ்வுகளில் தமிழ்த்திரைப்படப்பாடல்களைப்பாடி அனைவரையும் கவர்ந்திருக்கின்றார். பெண் உரிமை பற்றி அக்காலகட்டத்திலேயே தீவிரமாக வாதிடுவார். மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தமிழ்ச்சங்கத்தில் நான் இதழாசிரியர் குழுத்தலைவராக இருந்தபொழுது இவர் சங்கத்தின் உபதலைவராகக்கடமையாற்றினார்.

ஒருமுறை எம் வகுப்பைச்சேர்ந்த சிங்கள, தமிழ் மாணவர்கள் அனைவரும் ‘மலைநாட்டிலிருந்த World’s Endற்குச் சுற்றுலா சென்றிருந்தபொழுது இவரும் வந்திருந்தார். இவர் பொதுவாக மாணவர்களின் சுற்றுலாக்களுக்கு வருவதில்லை அந்த ஒரு சுற்றுலாவைத்தவிர.

அவ்வப்போது நாம் ஓய்வாகக்கூடியிருக்கும் வேளைகளில் மட்டக்களப்பைச்சேர்ந்த மோகன் அருளானந்தனையும், இவரையும் பாடல்களைப்பாடச்சொல்லி வற்புறுத்துவோம். ‘அமுதைப்பொழியும் நிலவே’ பாடலை மிகவும் இனிமையாகப்பாடுவார்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும்: 109: ஈழத்துத்தமிழ்க்கவிதை வாசிப்போமா? , கருந்துளைகள் பற்றி ஹார்கிங்! , ஓடையிலே என் சாம்பர் கரையும் போதும் , ஒரு கணத்து மின்னலும், அரைக்கணத்து மின்னலும் இரு கவிஞர்களும் & பதிப்பகத்தார் விடும் தவறுகள் பற்றி….

ஈழத்துத்தமிழ்க்கவிதை வாசிப்போமா? (1) : மூட்டைபூச்சியினைத்தூது விடும் கவிஞன்!

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்தமிழ்க்கவிஞர்கள் அன்னத்தைத் தூது விட்டதைப் படித்திருக்கின்றோம். வெண்ணிலாவை, வெண்முகிலை, நதி அலையினை, புறாவினையெல்லாம் தூது விட்டிருப்பதை அறிந்திருக்கின்றோம். ஆனால் மூட்டைப் பூச்சியினை யாராவது தூதனுப்பியிருப்பதைப் பார்த்திருக்கின்றீர்களா? நம்மூர்க்கவிஞனொருவன், மீன்பாடும் தேனாட்டுக் கவிஞனொருவன் மூட்டைப்பூச்சியினைத்தூதுவிட்டுக் கவி பாடியிருக்கின்றான். அவன் வேறு யாருமல்லன். அமரக் கவிஞன் இராஜபாரதிதான் அவன். ‘ஓடையிலே என் சாம்பர் ஓடும்போதும், ஓண்தமிழே சலசலத்து ஓட வேண்டும்’ என்று பாடிய அதே கவிஞன் இராஜபாரதிதான் அவன்.

Continue Reading →

இசை: தமிழ் மரபு (2)

- வெங்கட் சாமிநாதன் -இந்திய இசைச்சரட்டின் இந்த முனையைப் பற்றியவர்கள், என ஆந்திரத்தில் தோன்றிய தல்பாக்கம் அண்ணமாச்சாரியார்,  பத்ராசலம் ராமதாஸர், நாராயண தீர்த்தர், கர்நாடகத்தில் புரந்தரதாசர் போன்றவராவர் இந்துஸ்தானி சங்கீதம் பாரசீக, அராபிய இசைகளின் தாக்கத்துக்குட்பட்டு வேறு வளர்ச்சிப் பாதையில் சென்றுவிட்டது. மேல் ஸ்தாயிகளை எட்டுவதில் இஸ்லாமியர்களின் பிரமிக்கவைக்கும் சாதனைகளுடன் த்ருபத் உள்ளே நுழைந்து பிரபந்தங்களை வெளியேற்றியது. கர்நாடக இசையில் கீர்த்தனங்கள்/ கிருதிகள் பிரபந்தத்தின் இடத்தை எடுத்துக்கொண்டன. வடக்கின் பிரபந்தங்களின் எச்ச சொச்சங்களைத் தேடிப்போனால் கிழக்கை நோக்கி ஜெயதேவர், வித்யாபதி, ஞானதாசர், சைதன்யர், துக்காராம், ஞானதேவர், நாமதேவர், ஏக்நாத் மற்றும் நர்ஸிமேத்தா, சங்கர தேவர் அல்லது மாதவ தேவர் போன்றவர்களிடையே போகவேண்டும், இஸ்லாமியப் படையெடுப்புக்களுக்கும் ஆக்கிரமிப்புக்கும் உட்பட்டிருந்த கங்கைச் சமவெளியில் அப்படி யாரும் நமக்குக் கிடைக்க இல்லை.  ஆழ்வார்களும், நாயன்மார்களும் தெற்கில் பல நூற்றாண்டுகளுக்கு முன்புசெய்ததை கங்கைச் சமவெளியில் திரும்பச் செய்வதற்கு தெற்கிலிருந்து மதுராவுக்கு இடம்பெயர்ந்த வல்லபாச்சாரியாரின் வருகை வரை காத்திருக்க வேண்டியிருந்தது.  வல்லபாச்சாரியாருக்குப் பிறகே பக்தி இயக்கம் வடக்கில் சூடுபிடிக்க ஆரம்பித்தது – ராஜஸ்தான், மஹாராஷ்டிரம் மதுரா மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மக்களின் மொழியில் இசை பிரவாஹிக்க ஆரம்பித்தது. பரதரிலிருந்து சாரங்கதேவர் வரையில் எவரும் இந்திய இசையில் இன்று காணப்படும் இந்துஸ்தானி ,கர்நாடக இசை எனும் பிரிவுகளைப் பற்றிப் பேசவில்லை. ஏனெனில் இப்பிரிவுகள் அப்போது இருக்கவில்லை,  பின்பு தான் வந்தன. .துணைக்கண்டம் முழுவதிலும்  ஒரே இசைமரபுதான் இருந்தது. இசை அளவைகளை (scale)  ஏழுஸ்வரங்களாகவும், 12 ஸ்வர ஸ்தானங்களாகவும், அவற்றை மீண்டும் கால்தொனிகளாகவும் பிரிப்பது என சாரங்கதேவர் நிறுவியது அனைத்தும் இளங்கோவுக்குத் தெரிந்திருந்தது, இவை ஒரு சாதாரண தரத்திலுள்ள கர்நாடக இசைப்பாடகரின்  நிகழ்ச்சியில் கூடப் பார்க்கலாம். ஆனால் ஸ்வரங்களுக்கு இடையே உள்ள துல்லிய ஒலி அலைகளை (microtones) கணக்கில் எடுத்துக்கொள்ளாத இந்துஸ்தானி கலைஞரின் பாட்டில் இவற்றைப் பார்க்க முடியாது.  மீண்டும் ராமானுஜ ஐயங்காரின் வார்த்தைகளில், 

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 108 : திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதனை வணங்க வேண்டும்.

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்‘போட்டோஷாப்’ மென்பொருளை உருவாக்கியவர்களிலொருவரான தஞ்சாவூர்த்தமிழரான சீதாராமன் நாராயணன் என்னும் தமிழருடனான நேர்காணலை விகடன் பிரசுரித்திருந்தது. அதன் வாசிப்பின்போது தோன்றிய சிந்தனைத்துளிகளே எனது இக்குறிப்புகள்.

‘சுந்தர் பிச்சை மற்றும் சீதா ராமன் நாராயணனைப்போன்றவர்களெல்லாரும் எதற்காகச் சொந்த மண்ணுக்குப் பயன்படாமல் பிறதேசத்தவர்களுக்குப் பயன்படும் வகையிலான வாழ்வினைத் தேர்ந்தெடுக்கின்றார்கள்? எப்பொழுது தமிழர்கள் உருவாக்கும் மென்பொருள்கள் அவர்கள் வாழும் மண்ணிலிருந்து உலகெங்கும் பரவிச்சாதிக்கப்போகின்றது? என்றெல்லாம் எண்ணுவதுண்டு. சபீர் பாட்டியா போன்று என்று நம்மவர்கள் சொந்தமாகத் தங்கள் மென்பொருள்களை உருவாக்கிச் சாதனைகள் புரியப்போகின்றார்களென்று எண்ணுவதுண்டு.

இந்தப்பேட்டியில் இவர் கூறிய கருத்தொன்று என்னைக் கவர்ந்தது. அது: “ஆர்வமும், திறமையும்,தேடலும் இருந்தால்போதும் எந்த காரணியும் முன்னேற்றத்தை பாதிக்காது. இதை ஏன் சொல்லுகிறேன் என்றால், நானும் பத்தாவது வரை தமிழ் மீடியத்தில் தான் படிச்சேன். அதனால மொழி பற்றியெல்லாம் சாக்கு சொல்லி தப்பிச்சுகாதீங்க மாணவர்களே”

Continue Reading →