வாசிப்பும், யோசிப்பும் 107 : ஜெயபாலனின் ‘கள்ளிப்பலகையும், கண்ணீர்த்துளிகளும் (மேலும் சில முகநூல் குறிப்புகள்).’

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்எழுத்தாளர் வ.ஐ.ச. ஜெயபாலனை மீண்டும் முகநூலில் சந்தித்தபொழுது எழுந்த நினைவலைகளின் பதிவிது. கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனென்று பலராலும் அறியப்படுபவர்; அண்மைக்காலமாக இந்திய மத்திய அரசின் விருதுபெற்ற நடிகராகவும் ‘ஆடுகளம்’ ஜெயபாலன் என்றும் அறியப்படுகின்றார். கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனென்று அறியப்பட்டாலும் , இலக்கியத்தின் பல்துறைகளிலும் தன் ஆளுமையைப்பதித்தவர், பதித்து வருபவர் இவர் என்பதால் எழுத்தாளர் வ.ஐ.ச.ஜெயபாலன் என்று இவரை அழைப்பதே பொருத்தமானதென்று படுகிறது.

இன்று சிறிது முரட்டுத்தனம் மிக்கவராகவும், சிறந்த கவிஞர்களிலொருவராகவும் அறியப்படும் ஜெயபாலன் நான் சந்தித்த காலகட்டத்தில் வித்தியாசமான ஆளுமை மிக்கவராகவிருந்தார். மிகவும் மென்மையான உள்ளம் கொண்டவராக, வாய்க்கு வாய் ‘ராசா’ என்று அழைக்குமொருவராக, ஈழத்துத் தமிழர்களின் சமூக, அரசியல் பற்றிய விடயங்களைச் சம்பாஷிப்பதில் மிகவும் ஆர்வம் மிக்கவராக விளங்கியவராக இவ்விதமாகவே என் நினைவினிலிருக்கின்றார். ‘நல்லூர் இராஜதானி நகர அமைப்பு’ பற்றிய ஆய்வுக்காக, ஈழத்தமிழர்களின் வரலாற்றினைக்கூறும் நூல்களிலொன்றான ‘யாழ்ப்பாண வைபவமாலை’யினைப்பெறுவதற்காக இவரை முதன் முதலாகச்சந்தித்திருக்கின்றேன். அதன் பின்னர் மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தமிழ்ச்சங்க வெளியீடான ‘நுட்பம்’ சஞ்சிகைக்கு இவரது கவிதை வேண்டிச் சந்தித்திருக்கின்றேன். அக்காலகட்டத்தில இவருடன் சைக்கிளில் யாழ்நகரில் திரிந்த நாள்கள் நினைவிலுள்ளன.

Continue Reading →

எழுத்தாளர், ஆய்வாளர், நடிகர், ஒளிப்படக்கலைஞர் கலைவளன் சிசு. நாகேந்திரனுக்கு 95 வயது. முதிய வயதிலும் தமிழ் அகராதி எழுதியவர்

1_sisunagenthiran.jpg - 18.40 Kbகாலம்  தரித்து  நிற்பதில்லை.   அதனால்  வயதும்  முன்னோக்கியே நகர்ந்து கொண்டிருக்கும்.   இறுதியில்  முதுமை  வரும்பொழுது  உடன் வரும்  நண்பர்கள்  தனிமை,   இயலாமை,   நனவிடை  தோயும் இயல்பு.   எல்லாம்  போதும்  என்ற  மனப்பான்மை. ஆயினும் –  முதுமையிலும்  ஒருவர்  அயராமல்  இயங்குவதென்பது கொடுப்பினை.   அவ்வாறு  மருத்துவனையில்  தங்கியிருக்கும் வேளையிலும்  தமிழ்  அகராதியொன்றை   தயாரிப்பதற்காக குறிப்புகளை    பதிவு செய்துகொண்டிருக்கும்  எம்மத்தியில்  வாழும் ஒரு    மூத்தவர்  பற்றியதே   இந்தப்பதிவு. அவர்தான்   அவுஸ்திரேலியா  மெல்பனில்  வதியும்  பல்துறை ஆற்றல்  மிக்க  கலைவளன்  சிசு. நாகேந்திரன். அவருக்கு    09-08-2015  ஆம்  திகதி  95  வயது  பிறந்தது. அவருக்கு   மனமார்ந்த  வாழ்த்துக்களை   தெரிவித்துக்கொண்டே இந்தப்பதிவை   தொடருகின்றேன்.

இந்த  95   வயதிலும்   அயராமல்  இயங்கி   கலை,   இலக்கிய  மற்றும் சமூக  நிகழ்வுகளுக்கு  வருகைதரும்  எழுத்தாளர்  சிசு. நாகேந்திரன் அவர்கள்,    அவுஸ்திரேலியாவில்  வருடந்தோறும்  தமிழ்   எழுத்தாளர்   விழாவை   நடத்திவரும்  தமிழ்  இலக்கிய கலைச்சங்கத்தின்   காப்பாளர்.   சில  வருடங்களுக்கு  முன்னர்  இந்த அமைப்பின்  தலைவராகவும்  பணியாற்றியவர்.

தமிழ்  எழுத்தாளர்  ஒன்று கூடல்  நிகழ்வுகளில்  தவறாமல் கலந்துகொள்ளும்   இவர்,    நிகழ்ச்சிகளிலும்  பங்கேற்பார்.   எழுத்தாளர் விழா   மெல்பனில் – சிட்னியில் –  கன்பராவில்  நடந்தாலும் சாக்குப்போக்குச் சொல்லாமல்,  தமது  உடல்  நலத்தையும் பொருட்படுத்தாமல்  அர்ப்பணிப்பு  உணர்வுடன்  பங்கேற்று கருத்தரங்குகளில்    கட்டுரையும்  சமர்ப்பிப்பார்.

Continue Reading →

இசை: தமிழ்மரபு (1)

- வெங்கட் சாமிநாதன் -இசையில் ஒரு தனித்வமான தமிழ் மரபைப் பற்றிப் பேசுவது கடினம். மிக பழம் காலத்திலிருந்து தமிழ் இசையின் சரித்திரத்தை தேடிப் செல்வோமானால் ,நமக்குக் கிட்டும் இலக்கியச்சான்றுகள் அதைத் தமிழ் இனம் மற்றும் பண்பாட்டின் விளைபொருளாகக்  காட்டும் என்பதில் சந்தேகமில்லை.  ஆனால் அதே சமயம் அது ஒரு பரந்த பெரிதான அகில இந்திய (Pan-Indian)மரபின் ஒரு பகுதியாகவும்  இருப்பதைப்  பார்ப்போம் அப்படிப் பார்க்கையில் அதில் முழுதுமாய் தமிழ் மரபு சார்ந்தது மட்டுமே எனச் சொல்லக் கூடியதாய் தனித்வம் கொண்டது என எதுவும் இருக்காது.  விரைவாய் சரித்திரத்தின் பிரவாஹத்தில் பயணித்து  இன்று வரையில் வருவோமானால்,  பல கால கட்டங்களில், அம்மரபு திராவிடத் தென்னகம் முழுவதுமே பரவியிருந்த போதிலும் அதில் தமிழர்களின் பங்களிப்பே அதிகம் பரவலாக இருப்பதைப் பார்க்கலாம். அப்படியிருக்கையில், எங்கிருந்து தொடங்குவது? புரந்தரதாசரிடமிருந்தா?  

1484 – ம் –வருடம் அவர் பூனா மாவட்டத்தின் புரந்தர்கர் என்னும் கிராமத்தில் பிறந்தவர் , அவரது கீதங்கள் கன்னடத்தில் இருந்தன. இசையில் இன்று வழக்கத்தில் இருக்கும் கர்நாடக மரபின் தொடக்கங்களை  ஆராய்ந்து பார்த்தால், அதன் நீட்சியில், வரலாற்றின் ஆரம்ப இழைகள்  புரந்தரதாசரிடமிருந்து தொடங்குவதைக் காணலாம். ஆம், அது இந்துஸ்தானி பத்ததியிலிருந்து தனிப்பட்டுக் காணும் ஒவ்வொரு அம்சத்திலும், கர்நாடக பத்ததியின் தந்தை அவர் என்றே சொல்லவேண்டும். கர்நாடக சங்கீதக் கல்வியின் பாடத்திட்டம், சொல்லிக் கொடுக்கும் முறை, முதல் நிலையில் அதன் தொடக்கமான சரளி வரிசை,  ஜண்டை வரிசை, ஸ்வரப் பயிற்சி என்பதுபோல் இவை அனைத்துமே புரந்தரதாசரின் ஆக்கங்கள் தான் .இந்துஸ்தானி சங்கீதம் போலல்லாது கர்நாடக சங்கீதம் கீர்த்தனைகளை சார்ந்ததாக இருப்பதால், கிருதி அல்லது கீர்த்தனை ஒரு ராகத்தின் சொல் வடிவமாகி, ராகத்தின் பாவமும் லட்சணமும் கிருதிகள் மூலமே பாதுகாக்கப்பட்டு சிஷ்யர்களுக்கு கொடுக்கப்படுகிறது (துல்லியமான விஞ்ஞான ரீதியான இசைக்குறியீடுகள் இல்லாத காரணத்தால், இசையை கற்பித்தல் காலம் காலமாக வாய் வழியாகவே குருகுல முறையில் நடந்து வந்துள்ளது) – இவை அனைத்துக்கும்  கர்நாடக சங்கீதம் புரந்தரதாசருக்குக் கடமைப்பட்டுள்ளது. ஒரு கன்னடக் காரரான அவருக்கு, தமிழ்மரபின் சூழலில் என்ன பங்கு உள்ளது? இதை அறிய சரித்திர பிரவாஹத்தில் முன்னும் பின்னும் போகவேண்டும். பின்னோக்கிப் போகையில், புரந்தரதாசர் தமிழ் இலக்கிய சரித்திரத்தின் (கி.பி.100 – 200) சங்ககால “பாணர்” ‘பொருணர்” மரபில் வருகிறார் என்பதைக் காணமுடியும். அம்மரபு தமிழ்ப் பண்பாட்டின் தனித்த விளைபொருள் .வீடுகளில் பொங்கி வழிந்து, ஒவ்வொரு சாலையிலும், நாட்டின் பரந்த விஸ்தாரத்தில் வழிந்தோடி இறுதியில் அரசரின் மாளிகையில் உச்சத்தை அடைந்த தமிழ்க் கவிதை மற்றும் இசையின் ஒப்பற்ற இணைவு (இவ்வரிசை முறையைத் தலைகீழாகச் சொல்வோமானால் அதுவும் சரியாகத்தான் இருக்கும்).

Continue Reading →

” இளம்தலைமுறையினரே கனவு காணுங்கள் ” என்று அறைகூவல் விடுத்தவரின் நீண்ட கால கனவு நனவாகவில்லை. உலகத்தலைவர்களுக்கும் தேசங்களுக்கும் முன்மாதிரியாக வாழ்ந்த படகோட்டியின் மைந்தன்

கடல்  அலைகள்,  பொன்மணல்,
புனிதயாத்திரிகர்களின்  நம்பிக்கை,
இராமேஸ்வரம்   பள்ளிவாசல்  தெரு,
இவையெல்லாம்  ஒன்று  கலந்த  உருவம்  நீ…
என்  அன்னையே…
உன்  ஆதரவுக்கரங்கள்  என்  வேதனையை  மென்மையாய் அகற்றின
உன்  அன்பும்  ஆதரவும்  நம்பிக்கையும்  எனக்கு  வலிமை   தந்தன.
அதைக்கொண்டே  நான்  இந்த  உலகை
அச்சமின்றி   எதிர்கொண்டேன்
என்   அன்னையே…  நாம்  மீண்டும்  சந்திப்போம்
அந்த   மாபெரும்  நியாயத்தீர்ப்பு  நாளில்.

abdulkalam5.jpg - 3.04 Kbமுருகபூபதிஇவ்வாறு  தமது  அன்னையை   நினைத்து  கவிதை   எழுதிய  பாரத ரத்னா  அப்துல்கலாம்,  தமது  அன்னையிடமே   சென்றுவிட்டார். அவர்   மாபெரும்  நியாயத்தீர்ப்பு  நாள்  என்று  எதனைக் குறிப்பிட்டார் என்ற  விளக்கம்  இங்கு  அவசியமில்லை. ஒரு  விறகு  வெட்டியின்  மகன்  அமெரிக்காவின்  ஜனாதிபதியானார். ஒரு    செருப்புத்தைக்கும்  தொழிலாளியின்  மகன்  ருஷ்யாவில் அதிபரானார். பாரத  நாட்டில்  ஒரு  படகோட்டியின்  மகன்  ஜனாதிபதியாகி  இன்று மக்களின்    மனங்களில்  வாழ்ந்துகொண்டு   விடைபெற்றார். இராமேஸ்வரமும்    இராமனும்  அரசியலாகிய  கதை   தெரியும். இராமர்    பாலம்  அமைத்த  இராமன்  எந்த  பொறியியல்  கல்லூரியில் படித்தான்   எனக்கேள்வி  கேட்டவரின்  தலையை   கொய்து எறியப் போனவர்களின்  செய்தியும்  தெரியும்.   இராமரா  –   பாபர் மசூதியா  என்ற  போர்க்களத்தில்   மாண்டுபோன  இன்னுயிர்கள் பற்றியும்   அறிவோம். இந்தப்பின்னணிகளுடன்    இலங்கையையும்  இந்தியாவையும் பிரிக்கும்   கடல்  எல்லைக்  கடலோரக்  கிராமத்தில்  ஏழ்மையான குடும்பத்தில்  பிறந்து,  இளம்தலைமுறைக்கு கலங்கரைவிளக்கமாகத்திகழ்ந்த   அப்துல்  கலாம்  என்ற  பிரம்மச்சாரி    விஞ்ஞானியாகவும்  எழுத்தாளராகவும்   திகழ்ந்தவர்.

எழுச்சித்தீபங்கள்  –   இந்திய  ஆற்றலின்  ஊற்றுக்கண்  என்ற  தமது  நூலை   ஒரு   பன்னிரண்டாம்    வகுப்பு  படிக்கும்  மாணவிக்கே சமர்ப்பணம்  செய்திருந்தார். அவர்   அதற்கான  காரணத்தையும்  இவ்வாறு  சொல்கிறார்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 106: கவிஞர் இந்திரனின் கவிதை கவிஞர் ஜெயபாலனின் பெயரில்….

வாசிப்பும், யோசிப்பும் 107: கவிஞர் இந்திரனின் கவிதை கவிஞர் ஜெயபாலனின் பெயரில்....பிரபல கலை , இலக்கிய விமர்சகரும் கவிஞருமான இந்திரன் அவர்கள் தனது முகநூல் குறிப்பில் தனது ‘மியூசியம்’ என்னும் கவிதையினை கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலனின் கவிதையாகக் கனடாத் தமிழ் இலக்கியத்தோட்டத்தினால் தேர்வு செய்யப்பட்டு, தொகுத்தளிக்கப்பட்ட ”In Our Translated World” என்னும் ஆங்கிலமொழிபெயர்ப்பில் வெளியான கவிதைத்தொகுப்பில் சேர்த்திருப்பதாகக் குற்றஞ்சாட்டியிருக்கின்றார். இது பற்றி இதுவரையில் பலரிடம் முறையிட்டுள்ளதாகவும் ஆனால் பயன் எதுவுமில்லையென்றும் வருத்தப்பட்டிருக்கின்றார்.

இது பற்றிய குற்றச்சாட்டினை இப்பொழுதுதான் முதல் முதலாக நான் அறிகின்றேன். Ontario Trillium Foundation அமைப்பின் நிதி உதவியுடன் வெளியான நூலிது. இதில் இவ்விதம் தவறு ஏற்பட்டிருப்பது ஆச்சரியமளிக்கிறது. எவ்விதம் இவ்விதமானதொரு தவறு ஏற்பட்டிருக்கலாம் என்று சிந்தித்துப்பார்க்கிறேன். ஏன் இது பற்றி இதுவரையில் கவிஞர் ஜெயபாலன் அறிக்கை எதனையும் வெளியிடவில்லை என்றொரு கேள்வியும் எழுகிறது.

இந்த நூலின் மீள்பதிப்பு விகடன் பதிப்பாகவும் வெளியாகியிருப்பதாகவும் இந்திரன் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார். இந்தப்பிரச்சினைக்குரிய சரியான தீர்வு இந்த ஆங்கில நூலினை மீண்டும் தவறினைத்திருத்தி, தவறுக்கு வருத்தம் தெரிவித்துக் கனடாத் தமிழ் இலக்கியத்தோட்டம் வெளியிடுவதுதான். அத்துடன் கனடாத் தமிழ் இலக்கியத்தோட்டம் பகிரங்கமாகவும் தனது தவறுக்காகவும், கவிஞர் இந்திரனுக்கு ஏற்படுத்திய மன உளைச்சலுக்காகவும் வருத்தம் தெரிவிக்க வேண்டியது அவசியம்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 105 : மேலும் சில முகநூல் குறிப்புகள்!

-*முகநூலில் அவ்வப்போது எழுதிய குறிப்புகள் ஒரு பதிவுக்காக இங்கு மீள்பிரசுரமாகின்றன. – வ.ந.கி. –

1. செர்கய் ஐஸன்ஸ்டினும் இலக்கியமும்.

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்

அண்மையில் சென்னை ஃப்லிம் சொஸட்டி / சவுத் ஏசியன் புக்ஸ் இணைந்து வெளியிட்ட நூலான திரைப்பட மேதை செர்கய் ஐஸன்ஸ்டின்’ நூலினை வாசித்தேன். சிஸன்ஸ்டினின் கட்டுரைகள் சிலவற்றை (எழுத்தாளர் நாகார்ஜுனன் மொழிபெயர்ப்பில்) உள்ளடக்கிய நூலிது. நூலுக்கு ‘அமரக் கலைஞன் ஐஸன்ஸ்டின்’ என்றொரு அணிந்துரையினை கே.ஹரிகரன் எழுதியிருக்கின்றார். கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது என்பார்கள். அதற்கொப்ப அமைந்துள்ள நூலிது. நூல் சிறியதானாலும் கூறும் பொருளில் பெரியது , சிறந்தது என்பேன்.

இத்தொகுதியிலுள்ள ஐஸன்ஸ்டினின் கட்டுரைகள் வருமாறு:

1. ஐஸன்ஸ்டினின் முன்னுரை
2. நான் இயக்குநர் ஆனது எப்படி?
3. வண்ணம் திரைக்கு வந்த கதை
4. தொழிலாளர் – திரைப்படங்களைத் தயாரிப்பது எப்படி?
5. இலக்கியத்திலிருந்து சில பாடங்கள்.
6. பொட்டம்கின் படக்கட்டமைப்பின் ஒருங்கிணைவும் உணர்வெழுச்சியும்

Continue Reading →

கவிதை: காதலிக்கச்சொல்லும் வள்ளுவர்.வள்ளுவர் சொல்லும் காமசூத்திரம் (2)அதிகாரம் 110: குறிப்பு அறிதல்.

- பிச்சினிக்காடு இளங்கோ பாவைக்கு இரண்டுபார்வை’

இந்தப்பாவையின் கண்களுக்கு
இரண்டு பார்வை

ஒரு பார்வை
காதலினால் உயிர்குடிக்கும்
நோய் பார்வை

மறுபார்வை
அதுதீர்த்து
உயிர்தளிர்க்கும் மருந்துபார்வை

கணநெரமே கண்களிடை
பார்வை பண்டமாற்றம்
ஆனால்
அதன்
ஆழமும் பொருளும்
அளவற்றவை

Continue Reading →

பயணியின் பார்வையில் – 05

முருகபூபதி-அற்றைத்திங்கள்  அவ்வெண்ணிலவில்
அலையோர   வெண்மணலில்
நாம்  பதித்த  கால்   தடங்கள்
இல்லாத   இடங்கள்  இல்லை

விஜயலட்சுமி சேகர் நெய்தலில் கடலின் நடுவே போர்ட் சிட்டி – குறிஞ்சியில் மலையடிவாரத்தில் லயன் சிட்டி கடல் மட்டும்  மாறிவிடாத   காலிமுகம் \கடலும்    கடல்  சார்ந்த  பிரதேசமும்    நெய்தல்  என்று   சங்க இலக்கியம்     கூறுகின்றது.    இலங்கையில்     ஐந்து            திணைகளும் ( குறிஞ்சி,   நெய்தல்,   மருதம்,  முல்லை,  பாலை )    இருக்கின்றனவா…? என்று   ஆராய்ந்தால்  பாலை    ( எதுவும்  பயிரிட  முடியாத  நிலம் ) இல்லையா    என்று    நாம்  யோசிப்போம்.  . ஆறாம்    திணை    நவீன    தமிழ்  இலக்கியத்தில்   பிறந்துள்ளது. நான்   பிறந்த  நீர்கொழும்பும்  இலங்கைத்தலைநகரும்  நெய்தல் நிலப்பிரதேசங்கள்.   எங்கள்  ஊரில்  கடலின்  ஓயாத அலையோசையை   கேட்டவாறே  பிறந்து –  தவழ்ந்து –  வளர்ந்து வாழ்ந்தமையினால்  கடலின்    மீது   தீராத  காதல். ஆனால்   –  சுனாமி  கடற்கோள்  வந்தபொழுது  எனக்கு  கடல் மீது கடுமையான   வெறுப்பு  தோன்றியது.    அவ்வாறே   1978  இல் கிழக்கில் சூறாவளி  வந்தபொழுது  காற்றின்  மீது வெறுப்புத்தோன்றியது.    மலையகத்தில்  மண்  சரிவுகளும் வெள்ளப்பெருக்கும்   ஏற்படும்  வேளைகளில் தண்ணீர்  மீது  ஆத்திரம் வருகிறது.

Continue Reading →

இசை : தமிழ் மரபு

ஒரு சில வார்த்தைகள் – தொடங்கும் முன்

- வெங்கட் சாமிநாதன் -இது எண்பதுகளின் தொடக்கத்திலோ அல்லது நடுவிலோ எப்போதோ எழுதப் பட்டது. சரியாகச் சொல்ல இது வெளியான பத்திரிகை இப்போது தேடிக் கிடைத்த பாடில்லை. எந்த அலுவலகத்தில் உட்கார்ந்து எழுதியது, அதற்கு முன்னும் பின்னுமான நினைவிருக்கும் நிகழ்வுகளை வைத்துக் கொண்டு உத்தேசமாக, எண்பதுகளின் இடைவருடங்கல் என்று சொல்ல வேண்டும். எழுதியது ஆங்கிலத்தில். கேட்டது ஒரு ஹிந்தி இதழ். மத்திய அரசின் இதழ். ஆஜ்கல் என்று நினைக்கிறேன். ஹிந்தியில் மொழிபெயர்த்து பாதியாக சுருக்கி வெளியிட்டார்கள். அந்தப் பத்திரிகையின் பிரதியைத் தான் குறிப்பிட்டேன் கிடைக்கவில்லை.  பின் வருடங்களில் ஜே. ஸ்ரீராமன் என்னும் பத்திரிகையாளருக்கு என்னைப் பிடித்துப் போயிற்று. நான் என்ன எழுதினாலும் அவர் தான் துணை ஆசிரியராக இருக்கும் அருணா ஆஸ்ஃப் அலி தொடங்கி நடத்தி வந்த Patriot என்னும் தினப் பத்திரிகையில் ஞாயிறு பதிப்பில் நடுப்பக்கத்து கட்டுரையாகப் பிரசுரித்து விடுவார். அவரைச் சந்திக்கும் போது அங்கு Arts சம்பந்தப்பட்டவற்றைக் கவனிப்பவருடன்  (பெயர் மறந்துவிட்டது) பழக்கமேற்பட்டது. அவர் ஆசிரியத்வம் ஏற்றிருந்த LINK வாரப் பத்திரிகையில் சாமிநாதன் என்ன எழுதினாலும் போடலாம். வாங்கிவா? என்று அங்கு ரிப்போர்ட்டராக இருந்த நண்பர் வெங்கட் ராமனிடம் சொல்லி அனுப்பி, நிஜமாகவே நான் என்ன எழுதினாலும் அதில் பிரசுரமாயிற்று.( யாமினி கிருஷ்ணமூர்த்தி பற்றி எழுதிய கட்டுரையின் முன்னுரையிலும் இதை எழுதியிருக்கிறேன். எனக்கு நடக்கும் நல்ல விஷயங்களை சமயம் கிடைக்கும் போது ஒன்றுக்கு இரண்டு முறை சொன்னால் நல்லது. தப்பில்லை) சரி இவ்வளவு நடக்கிறதே என்று Music – the Tamil Tradition என்று ஆஜ்கல் பத்திரிகைக்கு எழுதிய ஆங்கிலக் கட்டுரையையும் கொடுத்தேன். அது பிரசுரமாயிற்று. கடைசி மூன்றில் ஒரு பகுதி மாத்திரம். அது இன்றைய நிலையைச் சொல்வது. இரண்டு பகுதிகளாக இரண்டு ஞாயிற்றுக் கிழமைகளில். (Patriot, Sunday 8.5.88 /15.5.88) என்னதான் சாமிநாதனைப் பிடித்திருந்தாலும் ஒரு தினசரி எவ்வளவு தான் இடம் கொடுக்க முடியும்? எனக்குத் தெரிந்து சென்னை ஹிந்து பத்திரிகை தான் கிருஷ்ணமேனன் ஐ.நா. பாதுகாப்பு கவுன்ஸிலில் கஷ்மீர் பற்றிய தீர்மானம் குறித்த நேரத்தில் பாஸாகாமல் தடுக்க மணிக்கணக்கில் பேசிக் கொண்டே இருந்தார். அந்த பேச்சு முழுதையும் மூன்று/நான்கு பக்கங்களுக்கோ என்னவோ ஹிந்துவில் பிரசுரமாயிற்று.  அப்போது கின்னஸ் வொர்ல்டு ரிகார்டெல்லாம் இருந்ததோ என்னவோ. இருந்திருந்தால் இதுவரை மீறப்படாத சாதனையாக அது இருந்திருக்கும். அதன் பிறகு கிட்டத்தட்ட 30 வருடங்களுக்குப் பிறகு இப்போது தான் அந்த கட்டுரை அது எழுதப்பட்ட முழுமையில், ஆங்கிலத்தில் இருந்தது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ( உஷா வைத்தியநாதனின் தயவினாலும் பொறுமையினாலும்) பிரசுரமாகிறது.

Continue Reading →

நினைவேற்றம் 6

 -தேவகாந்தன்-   அறுவடை முடிந்துவிட்டால் வயல்வெளியில் ‘கிளிக்கோடு’ விளையாட்டு தொடங்கிவிடும். பள்ளி முடிந்து வீடு வந்த பின்னால் வயலுக்குச் செல்வதை தவிர்க்கவே முடிவதில்லையயயய. விளையாடாவிட்டாலும் பார்த்துக்கொண்டு இருப்பதிலும் ஒரு சுகம் இருக்கவே செய்கிறது. சூழ்நிலைமைக்கும் நேரத்துக்கும் தக விளையாடப் போவதற்கு முன்பாகவோ பின்னாகவோ நான் வசந்தாக்கா வீட்டுக்குப் போய் வந்துகொண்டேயிருந்தேன் அந்நாட்களில். சிரிக்கச் சிரிக்கவும் பேசுவதோடு, மிக நகைச்சுவையான வி~யங்களைச் சொல்லும்போது  அவ்வப்போது என் தோளைத் தொட்டுத்தழுவி வசந்தாக்கா பேசுவாள். என்னோடு மட்டும்தான் அவள் அப்படிப் பேசுவதாக நான் நம்பிக்கொண்டிருந்தேன். அதில் இனம்புரியாத ஒரு இன்பத்தையும் நான் அடைந்துகொண்டிருந்தேன். பெரும்பாலும் அவளோடு நான் பேசாத நாட்கள் அதனாலேயே மிக அரிதாக இருந்தன.

ஒரு நாள் வசந்தாக்கா வீட்டுக்குப் போய்விட்டு வீட்டுக்குத் திரும்பிய எனக்கு சிறிதுநேரத்தில்தான் திடுக்கிட்டாற்போல சந்தேகமாகிற்று, அன்று வீட்டுக்குத் திரும்பிவந்து திண்ணையிலே நான் எனது பாட்டா செருப்பை கழற்றிவிட்டேனாவென்று. அப்படியானால் எங்கோ மறந்துபோய்  விட்டிருக்கிறேன். எங்கே? வயல்வெளி விளையாட்டிடத்தில் மறுபடி போட்டுக்கொண்டது ஞாபகம் வந்தது. அல்லது அவ்வாறான ஒரு ஞாபகத்தை நான் வலிந்து உருவாக்கிக்கொண்டேன். அப்படியானால் வசந்தாக்கா வீட்டு படிக்கட்டில்தான் விட்டிருக்கவேண்டும். அதை மறுநாள்கூட நான் எடுத்துவிடலாம். ஆனால் அங்கேதான் விட்டேன் என்றும் நூறு சதவிகிதம் துணிய முடியாமல் இருந்தது. உடனேயே வசந்தாக்கா வீட்டுக்கு சைக்கிளை எடுத்துக்கொண்டு ஓடினேன்.

Continue Reading →