கண்ணம்மா!
நேற்று -இன்று – நாளை என்று
காலத்தின் ஒரு திசை பயணத்தில்
மீளுதல் சாத்தியமற்றதா? ஆயின்
‘அறிவுணர்’வுக்கு அது இல்லை. ஆம்!
அது இல்லை. எது?
ஆம்! அதுதான். அதுதான்.ஆம்!
அது இல்லை.
தயக்கமெதுவற்று அதனால் தங்குதடையின்றிப்
பயணிக்க முடியும்.
நேற்று – இன்று – நாளை
காலத்தின் அர்த்தமற்றதொரு நிலை
‘அறிவுணர்’வுக்குண்டு.
குவாண்டம் நுரையில் கிடக்கும் இருப்பில்
நேரத்துக்கும் அர்த்தமுண்டோ?
அங்கு அனைத்துமே சம காலத்தில்
இருப்பன. அறிவாயா கண்ணம்மா!
காலமே காலமாகி விட்ட நிலைதான்
குவாண்டம் நிலை. ஆம் ! அந்த நிலை.
என் ‘அறிவுணர்’வு கொண்டு
என்னால் எங்கும் பயணிக்க முடியும் கண்ணம்மா!
உனக்கது புரியுமா?
சமூகம் இப்படித்தான் இருக்கும். ஆனால், சமூகம் எப்படி இருக்கவேண்டும் என தமது கற்பனையில் நினைத்துப்பார்ப்பவர்கள் ஆக்க இலக்கியப்படைப்பாளிகள். அந்தப்படைப்பாளிகள் தீவிரமான மனிதநேயர்களாக இருப்பின், அவர்களது படைப்பிலக்கிய எழுத்துக்களில் அவர்கள் எதிர்பார்க்கும் கதாமாந்தர்கள் வருவார்கள். அசாதாரண சம்பவங்கள், திடீர் திருப்பங்கள் நிகழும். பெரும்பாலான ஆக்க இலக்கியப்படைப்பாளிகளுக்கு அவர்தம் வாழ்க்கைத் தரிசனங்களே அவர் எழுதும் கதைகளாகிவிடும். சொந்த வாழ்வில், பயணத்தில், சந்திப்புகளில், அனுபவங்களில், தரிசிக்கும் மனிதர்களில் , உறவாடும் நட்புகளில் , உயிரினங்களில் இன்ன பிற காட்சிகளில் கிடைக்கும் சித்திரம் மனதில் பதிந்துவிடும். தருணம் வரும்போது அவை, சிறுகதையாக, கவிதையாக, நாவலாக, நாடகமாக, ஏன் திரைப்படமாகவும் உருமாறிவிடும்.
இலங்கையிலும் உலக அரங்கிலும் காணாமல் போன மனிதர்கள் பேசுபொருளாகியிருக்கும் காலப்பகுதியில், தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் ஓரே காலப்பகுதியில் அறிமுகமான படைப்பிலக்கியவாதி ஏ.ஏ.ஹெச்.கே.கோரி எழுதியிருக்கும் காணாமல் போகவிருந்த கதைகள் தொகுதி எனக்கு தபாலில் வந்து சேர்ந்தது. தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிவரும் இவரை, நான் நேரில் பார்த்திராதபோதிலும், இவரது கதைகளை முன்னர் இலங்கை மல்லிகையில் படித்திருக்கின்றேன். ஒருசமயம் இவர் மல்லிகை அட்டைப்படத்தையும் அலங்கரித்து, அதிதியானவர். அதில் இவரைப்பற்றி எழுதியவர் ஈழத்து எழுத்தாளரும் அண்மையில் சாகித்திய ரத்னா விருதுபெற்றவருமான ஐ. சாந்தன். சாந்தனுக்கு கோரியை அக்காலப்பகுதியில் கொழும்பில் அறிமுகப்படுத்தியவர் இலங்கை வானொலி, லண்டன் பி.பி.ஸி புகழ் அப்பல்லோ சுந்தா சுந்தரலிங்கம் அவர்கள்.
உண்மையென்று ஏதேனுமொன்றுண்டா ?
நான் பார்ப்பது, நீ இருப்பது இதுவெல்லாம்
உண்மையென்று எவ்விதம் நான் நம்புவது ?
நீயே சொல். நீ சொல்கின்றாய் நீ இருக்கிறாயென்று.உண்மையாக
நீ இருக்கின்றாயென்று.
என்னை விட்டுத் தனியாக எப்பொழுதுமே
இருப்பதாக நீ கூறுகின்றாய்.
எவ்விதம் நம்புவது.
ஆயிரம் மில்லியன் ஒளிவருடங்களிற்கு
அப்பாலிருந்து இருந்து வரும்ஒளிக்கதிர்களுக்கும்
உன்னிலிருந்து வரும் ஒளிக்கதிர்களுக்கும்
இடையிலென்ன வித்தியாசம் ?நேரத்தினைத் தவிர.
ஒளிக்கூம்புக்குள் விரிந்து , சுருங்கி,
மீண்டும் விரிந்து
கிடக்குமென் அண்டம்.
அடியே! அண்டத்தில் நீ இங்கெங்கு சென்றிடினும்
உன்னால் ஒருபோதுமே என்னிடமிருந்து
மறைந்துவிடவே முடியாதடி.
ஏனென்று கேட்கின்றாயா?
நீயே அறிந்துகொள்
நீயே புரிந்துகொள்
என்று நானுனக்குக்கூறிடப் போவதில்லை.
உன் சிந்திக்குமறிவுக்கும் வேலை
வைக்கப்போவதில்லை.
நானே கூறுகின்றேன் விளக்கம் கண்ணம்மா!
உன்னால் புரிந்துகொண்டிட முடிந்தால்
புரிந்துகொள்.
ஏனென்றால் இப்பிரபஞ்சத்துடனான என் உறவு
ஏன் உன் உறவும் கூடத்தான்
ஒருபோதுமே பிரிக்கப்பட முடியாதடீ.
இருந்தாலும் கவலையை விடு.
இன்னும் சிறிது விளக்குவேன்.
நீ, நான் , இங்குள்ள அனைத்துமே
துகள்களின் நாட்டியம்தாம்.
சக்தியின் வடிவம்தான்.
புரிந்ததா சகியே!
எழுத்தாளர்கள் கலைஞர்கள் மற்றும் மகத்தான ஆளுமைகள் குறித்த நினைவுகள் பற்றியக் கட்டுரைகளும் படைப்புகளும் அவர்கள் மறைந்த பின்புதான் வெளிக்கொணர வேண்டும் என்பதில்லை. அவர்கள் வாழும் காலத்திலேயே அவை பதிவு செய்யப்படுவது அந்த படைப்பாளிக்கு கவரவம் தருவதாகும். அதுவும் இன்றைய புதிய தலைமுறையினர் பழைய தலைமுறை ஆளுமைகள் குறித்து அறிந்துகொள்ள இவ்வகை படைப்புகளும் ஆவணங்களும் முக்கியமாக இருக்கின்றன. அந்த வகையில் ஓர் ஆளுமை குறித்த ஆவணப்படம் ஒன்றை புதுவை யுகபாரதி இயக்கியிருக்கிறார் . புதுச்சேரி தமிழ்க்காப்பியத்தாத்தா துரை. மாலிறையனார் அவரின் வயது 80……
50 க்கு மேற்பட்ட நூல்களை வெளியிட்டிருக்கிறார் .அதில் மரபு கவிதைநூல்களும் காவியங்களும் காப்பியங்களும் முக்கியமானவை .இன்றைய இளைய தலைமுறையும் கல்வி சார்ந்த மக்களும் மரபுக்கவிதை எழுதுவதை குறைத்துக் கொண்டு விட்டார்கள் .இந்த சூழலில் மரபுக்கவிதையின் ஓசைநயம் அவற்றை பாடுவதில் உள்ள மெய்மறந்த அனுபவம், அவற்றில் நவீன கவிதையை அம்சங்களையே கொண்டுவருவது மற்றும் நெடும் கவிதைகள் அதன் நீட்சியாக காப்பியங்கள் ,காவியங்கள் ஆகியவற்றை உருவாக்குவது இன்றைய இளைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களாக இருக்கின்றன, அதற்காக புதுவையை சேர்ந்த கவிஞர் துரை. மாலிறையனார் அவர்களின் வாழ்க்கையை முன்வைத்து இந்த ஆவணப்படத்தை புதுவை யுகபாரதி உருவாக்கியிருக்கிறார். பெரும்பாலும் படைப்பாளிகளின் குடும்பச்சூழல் அவர்களுக்கு ஒத்துழைப்பு தராது .இன்னொரு பக்கம் அவர்களின் கேள்விக்கான சூழ்நிலையில் மாட்டிக் கொள்வார்கள் .இந்த சூழலில் கவிஞரின் துரை. மாலிறையனார்
‘நேர்காணல்’ இன்று தவிர்க்க முடியாதபடி நவீன இலக்கியத்தில் ஒரு கலை வடிவமாக உருப்பெற்றுள்ளது. கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக்கலை, நாடகம் போன்றே ஆளுமைகளின் நேர்காணல்கள் யாவும் தொகுப்புக்களாக ஒரு கலை வடிவமாக உருமாற்றம் அடைந்துவரும் மேற்கத்தைய சூழலில், அதற்கு சளைக்காத வகையில் தமிழ் இலக்கியச் சூழலிலும் நேர்காணல் வடிவம் ஆனது தனக்கான ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. நேர்காணல்கள் ஆனது பிரதிகள் மூலமே அறியப்பட்ட ஒரு ஆளுமையின், அறியப்படாத பல பரிமாணங்களை வெளிக்கொணரும் சந்தர்ப்பங்களை எமக்கு உருவாக்கித் தருகின்றன. இவை முக்கியமாக ஒரு ஆளுமையின் வாழ்க்கைப் பின்னணி, தத்துவ நோக்கு, மாறுபடும் கால, சூழலிற்கு ஏற்ப மாறுபடும் அவரது சிந்தனைகள், செயற்பாடுகள் என்பன குறித்த ஒரு நேரிடையான, தெளிவான பார்வைகளை வெளிப்படுத்தி நிற்கின்றன.
90 களின் ஆரம்பித்தில் இருந்தே நேர்காணல் ஆனது நவீன தமிழ் இலக்கியச் சூழலில், அதிலும் முக்கியமாக சிறுபத்திரிகைச் சூழலில் ஒரு முக்கியமான இடத்தைச் சுவீகரித்துக் கொண்டது. பல தருணங்களில் இலக்கியச் சூழலில் ஏற்படுகின்ற சோர்வினையும் அயற்சியினையும், நேர்காணல்கள் ஆனது அது ஏற்படுத்திய சர்ச்சைகள் மூலமும் பரபரப்புக்கள் மூலமும் விரட்டியடித்த வரலாறினை பல்வேறு காலகட்டங்களிலும் நாம் அவதானித்து வந்திருக்கின்றோம். இவ்வகையில் தமிழகத்தில் சுபமங்களா, புதிய பார்வை, தீராநதி போன்ற இதழ்கள் நேர்காணல்களை சிறப்பித்த இதழ்களாக அல்லது நேர்காணல்கள் மூலம் சிறப்புற்ற இதழ்களாக நாம் வரையறுத்துக் கொள்ளலாம். இந்த நேர்காணல்களுக்காக மட்டுமே இவ்விதழ்களை காசு கொடுத்து வாங்கிப் படித்தவர்களும் உண்டு. இவ்விடயத்தில் ஈழத்தமிழ் இலக்கியமானது தனது கவனிப்பினை சரியாக செய்யாத நிலையில் , 90 களின் இறுதியில் இருந்து வெளிவர ஆரம்பித்த எம்.பௌசரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘மூன்றாவது மனிதன்’ இதழானது தனது ஒவ்வொரு இதழிலும் ஒன்று அல்லது இரண்டு இலக்கிய ஆளுமைகளுடனான நேர்காணல்களுடன் வெளிவந்து நேர்காணல்களுக்கும் இலக்கியத்திற்குமான உறவை பலப்படுத்தி நின்றது. இவற்றிடையே மூன்றாவது மனிதன் பதிப்பகம் ஆனது இந்நேர்காணல்கள் பலவற்றினதும் தொகுப்பாக ‘ஈழத்து இலக்கியத்தின் சமகால ஆளுமைகளும் பதிவுகளும்’ என்ற நூலினை வெளியிட்டு ஈழத்தமிழ் இலக்கிய உலகில் நேர்காணலுக்கான ஒரு நூலினை முதலாவதாக வெளியிட்டு இலக்கிய வரலாற்றில் ஒரு முக்கியமான தடத்தைப் பதித்து விட்டிருந்தது. இங்கு தோழர் பௌசரினால் தொகுத்தளிக்கப்பட்ட இந்நூல் குறித்து ஒரு பார்வையினையும் சில கருத்துக்களையும் முன் வைப்பதே எமது நோக்கமாகும்.
இன்று பிற்பகல் ‘ஃபிளெமிங்டன் பார்க்’கில் அமைந்திருக்கும் ‘டொராண்டோ பொதுசன நூலக’க்கிளைக்குச் சிறிது நேரம் செல்லும் சந்தர்ப்பம் கிட்டியது. அவ்வப்போது இந்நூலகக்கிளையில் தமிழ் நூல்களை இரவல் பெறச்செல்வதுண்டு. ஏதாவது புதிய தமிழ்ப்புத்தகங்கள் வந்திருக்கின்றனவா என்று பார்ப்பதற்காகச் சென்ற எனக்கு அதிர்ச்சியினையூட்டும் நிலையே ஏற்பட்டது. அங்கு தமிழ்ப்புத்தகங்கள் எவற்றையுமே காணவில்லை. அங்கு கடமையிலிருந்த இளம் பணியாளரிடம் சென்று தமிழ்ப்புத்தகங்கள் எங்கே? என்ன நடந்தது? என்று கேட்டேன். அதற்கு அவர் கூறிய பதிலே என் அதிர்ச்சிக்குக் காரணம். அவர் ‘இன்னும் ஓரிரு மாதங்களில் ‘டொரோண்டோ’விலுள்ள நூலகக் கிளைகளிலிருந்து அனைத்துத் தமிழ் நூல்களும் எடுக்கப்பட்டு விடும்’ என்று கூறியதை என்னால் ஒரு கணம் நம்பவே முடியவில்லை. ‘என்ன! எல்லா நூலகக் கிளைகளிலிருந்துமா?’ என்று வியப்புடன் கேட்டேன்.
என் கேள்வியில் தொனித்த வியப்பினையும், கவலையினையும் அவதானித்த அவர் ‘துரதிருட்டவசமாக அதுதான் நிலை. ஃபிரெஞ்ச் & சீனமொழி நூல்களைவிட ஏனைய மொழி நூல்கள் அனைத்தையும் எடுத்துவிடப்போகின்றார்கள். இது பற்றி எங்களுக்கு அறிவித்தல் வந்திருந்தது. இன்னும் ஓரிரண்டு மாதங்களில் முழுமையாக எடுத்து விடுவார்கள்’ என்று துயர் கலந்த தொனியில் பதிலிறுத்தார். பதிலுக்கு நான் அப்படியென்றால் அவ்விதம் நீக்கப்படும் தமிழ்நூல்களை வாங்க முடியுமா?’ என்றன். அதற்கவர் அதே துயர் கலந்த தொனியில் ‘அநேகமாக ‘ரீசைக்கிள்’ செய்வார்கள் ‘என்றார்.
உண்மையிலேயே அதிர்ச்சியினைத்தந்த செய்திதான். எம் தலைமுறையுடன் அதிகமாக நூலகங்களில் தமிழ் நூல்களை இரவல் பெற்று யாருமே படிக்கப்போவதில்லை என்னும் எண்ணமே ஒருவிதத் துயரினைத் தந்தது.
உடனடியாக எழுத்தாளர் சின்னையா சிவனேசனின் (எழுத்தாளர் துறைவன்) நினைவு வரவே அவருக்கு இது பற்றிய செய்தியொன்றினை அனுப்பி விசாரிக்கலாம் என்றெண்ணினேன். அவரிடம் இதுபற்றி விசாரித்துத் தகவலொன்றினை அனுப்பினேன். அதற்கு அவர் இச்செய்தி தனக்குப் புதியதென்றும், அப்படி நடப்பது நம்மவர் நூலகக்கிளைகளைப் பாவிப்பதைப்பொறுத்தது. தமிழ் நூல்களுக்குத் தேவையில்லாவிடில் நூலகம் தமிழ்ப்புத்தகங்களை வாங்குவதற்கு ‘ஓர்டர்’ தராது. இது தமிழ் மக்களைப்பொறுத்தது என்று உடனடியாகவே பதிலை அனுப்பியிருந்தார். நூலகத்துக்குத் தமிழ் நூல்களைத் தெரிவு செய்யும் ஒருவராக அவர் விளங்கியவர் என்பதை அறிந்திருக்கின்றேன். இப்போதும் அப்பணியில் அவரிருக்கின்றாரா? என்று தெரியவில்லை.
“ தன் வாழ்க்கையில் என்ன அவலங்கள் இருந்தாலும் தன் மனதில் எத்தனை சோகச்சுமையிருந்தாலும் அதையெல்லாம் மறைத்து தன் நகைச்சுவையால் மக்களை விலா நோகச்சிரித்து மகிழச்செய்பவர்தானே மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர் “ -என்று நடிகர் சிவகுமாரால் 1986 இல் விதந்து எழுதப்பட்டவர்தான் நடிகர் நாகேஷ். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இலட்சக்கணக்கான ரஸிகர்களை தனது அபாரமான நடிப்பினால் கவர்ந்தவர் நாகேஷ். நாகேஷ், தமிழ்நாடு,தாராபுரம்பகுதியில் கன்னட மாத்வர்கள் வாழும் கொழிஞ்சிவாடி என்ற ஊரில் 1933 ஆம் ஆண்டு செப்டெம்பர் 27 ஆம் திகதி பிறந்தார். 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி மறைந்தார்.
ஆங்கில திரைப்பட உலகில் புகழ்பெற்ற ஜெர்லூயிஸைப் போன்று தமிழ்த்திரையுலகில் தனது ஒடிசலான தேகத்தையும் அம்மைத்தழும்புகள் ஆக்கிரமித்த முகத்தையும் வைத்துக்கொண்டு அஷ்டகோணலாக உடலை வளைத்தும் நெளித்தும் கருத்தாழமிக்க வசனங்களை உதிர்த்தும் தமிழ்த்திரையுலகில் புகழ்பெற்ற நட்சத்திரமாகத் திகழ்ந்த நாகேஷ் அவர்கள் , கமல்ஹாஸன் தயாரித்த ‘மகளிர் மட்டும்’ படத்தில் பிரேதமாகவும் நடித்தவர்.
குண்டுராவ் என்ற இயற்பெயரைக்கொண்ட நாகேஷ், நடித்த முதல் திரைப்படம் தாமரைக்குளம். ஆரம்பத்தில் மேடைநாடகங்களில் நடித்தும் திருமண வைபவங்களில் நகைச்சுவைநிகழ்ச்சிகளை நடத்தியும் வாழ்க்கையைச்சிரமப்பட்டு ஓட்டிய நாகேஷை தமிழ்த்திரையுலகில் நகைச்சுவை நடிகராக மட்டுமன்றி சிறந்த குணச்சித்திர நடிகராகவும் மாற்றிய பெருமை பாலச்சந்தர் மற்றும் ஜெயகாந்தனையே சாரும். பாலச்சந்தரின் நீர்க்குமிழி, எதிர்நீச்சல், ஜெயகாந்தனின் யாருக்காக அழுதான் என்பன அவரது குணச்சித்திர நடிப்புக்குச்சிறந்த சான்று. ஸ்ரீதரின் காதலிக்கநேரமில்லை, ஊட்டிவரை உறவு, ஏ.பி. நாகராஜனின் திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள் மற்றும் சர்வர் சுந்தரம் உட்பட பல நூறு படங்கள் நாகேஷின் தனித்துவமான நடிப்பாற்றலுக்கு சான்று பகர்பவை.
ஜனவரி. 28, 2020
எமது இலக்கிய சகோதரன் மல்லிகை சி. குமார் அவர்களின் மறைவுச்செய்தி அறிந்து ஆழ்ந்த துயரமடைந்தோம். கடந்த 2018 ஆம் ஆண்டில்தான் அவர் தனது மனைவியையும் இழந்திருக்கிறார் என்பது தெரிகிறது. மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் 1972 காலப்பகுதியில் அட்டனில் நடத்திய மாநாட்டில்தான் அவரை முதல் முதலில் சந்தித்தேன். அக்காலப்பகுதியில் இலக்கியப்பிரவேசம் செய்தவர்களில் அவரும் ஒருவர். குறிப்பிடத்தகுந்த மலையக படைப்பாளி. கொடகே விருதும் கிடைக்கவிருந்த தருணத்தில் – அவரது மற்றும் ஒரு நூல் வெளியாகவிருக்கும் வேளையில் அதனையெல்லாம் பார்க்காமல் விடைபெற்றுள்ளார்.