வாசிப்பும் யோசிப்பும் 97 , 98 & 99

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்

வாசிப்பும் யோசிப்பும் 97 : ஒரு கவிதையென்ற உரைநடை பற்றிச் சில வரிகள்…..

அண்மைக்காலமாக வெளிவரும் கவிதைகள் என்ற பெயரில் வரும் படைப்புகளைப் படிக்கும்போது ஒரு விடயத்தை அவதானிக்க முடிகிறது. கவித்துவமான தலைப்புகளுக்காக நேரத்தைச்செலவிடும் அவ்விதமான படைப்புகளைப் படைப்பவர்கள் கவிதையென்ற பெயரில் எழுதுபவையெல்லாம் கவிதைகளாக எனக்குத் தெரியவில்லையே. உங்களுக்குத் தெரிகிறதா?

உதாரணத்துக்குக் கீழுள்ள கவிதையென்ற பெயரில் வந்துள்ள படைப்பினை ஒருமுறை வாசித்துப் பாருங்கள்”

கவிதையின் தலைப்பு: மெய்நிகர் தீபம்

கவிதை கீழுள்ளவாறு செல்கிறது.  வரிகளென்ற பெயரில் முறித்து முறித்து எழுதப்பட்டிருந்த படைப்பினை ஒரு மாறுதலுக்காக முறிக்காமல் எழுதியிருக்கின்றேன்.

“மெட்ரோபாலிடன் நகரின் வேகம் பரபரக்கும் சாலை அது. பின்னிருக்கையில் உட்காரப் பழகாத மலரொன்றை அமர்த்தியிருக்கிறான் தகப்பனெனப்படுபவன். செல்பேசியில் தன் காதலியோடு உல்லாசித்தபடியே செலுத்துகிறான். இருசக்கர வாகனத்தை. இடையிடையே வெடித்துச் சிரிக்கிறான். அப்போதெல்லாம் வாகனம் சமன் குலைகிறது.”

Continue Reading →

வெங்கட் சாமிநாதன் பக்கம்: தெருக்கூத்து (1)

தொடங்கும் முன் சில வார்த்தைகள்……

- வெங்கட் சாமிநாதன் -

எனக்கு பல விஷயங்களில் தொடர்பும்  பிடிப்பும் பின் ரசனை உணர்வும் ஏற்பட்டது வேடிக்கையாக இருக்கும். தமிழ் நாட்டில் இருந்த வரை, எனது பதினெட்டாம் பிராயம் வரை நான் தெருக்கூத்து பார்த்தவனுமில்லை. அப்படி ஒன்று இருப்பதாக அறிந்தவனுமில்லை. தமிழ் நாட்டிலிருந்து ஒரிஸ்ஸா வுக்கும் பின்னர் தில்லிக்கும்  சென்று பத்து வருடங்களுக்குப் பின் தான் தெருக்கூத்து என்ற சமாசாரத்தின் ஒர் சிறு சாம்பிள் முப்பது நாற்பது நிமிஷ துண்டுக் காட்சி அனுபவம் கிடைத்தது. அது 1966 அல்லது 1967- ஆக இருக்கக் கூடும்  அது ஒரு குறுகிய நேரக் காட்சியே ஆனாலும், அது ஒரு மின் வெட்டாக இன்றும் மனதில் ஓடும் நிரந்தர பதிவாக ஆகிவிட்டது. அது பற்றி எழுதியதும்  என்  நினைவில் இருக்கிறது.  எழுதியது அந்த வருடத்தின் பின் மாதங்களில் தீபம் இதழில் என்பதும் நினைவில் இருக்கிறது. ஆனால் இப்போது அது கைவசம் அகப்பட  மறுக்கிறது. தில்லி ரவீந்திர பவன் புல்வெளியில் சங்கீத நாடக் அகாடமியின் அந்நாளைய செயலாளர், பெயர் சுரேஷ் அவஸ்தி என்று நினைக்கிறேன், அவருடைய நாடகம் என்ற கருத்தாக்கத்தில் இந்தியா முழுதும் பரவிக் கிளைத்துள்ள கிராமீய கலைகள், பூர்வீக குடிகளின் கலைகள் எல்லாமும் அடங்கும். வருடா வருடம் Folk Arts Festival ஒன்றை அவர் நடத்துவார். அவர் நடத்திய அந்த விழாக்களிலிருந்து தான் அவற்றை ஒன்று விடாமல் பார்த்து அனுபவித்தபின் தான்  அந்த பார்வையை நானும் ஸ்வீகரித்துக் கொண்டேன். என் ரசனைக்கும் அது ஏற்புடையதாக இருந்தது. தெருக்கூத்து பார்த்த முதல் அனுபவமும் ரசனையும் அது பல தளங்களில் இயங்கும் ஒன்று  என்ற அறிவும் அன்றைய சங்கீத் நாடக் அகாடமியின் செயலாளர் சுரேஷ் அவஸ்தியின் உபயம்.

Continue Reading →

முருகபூபதி பக்கம்: எழுதவிரும்பும் குறிப்புகள்: ஓய்வின் பின்னரும் ஓயாமல் இயங்கிக்கொண்டிருக்கும் பேராசிரியர் மௌனகுருவுக்கு 72 வயது! ஆறிலிருந்து எழுபதையும் கடந்து தொடரும் கலைப்பயணத்தில் மகாபாரதம் சார்வாகனனை எமக்கு படைப்பிலக்கியத்தில் வழங்கிய பன்முக ஆளுமை!

எழுதவிரும்பும் குறிப்புகள் ஓய்வின் பின்னரும் ஓயாமல் இயங்கிக்கொண்டிருக்கும் பேராசிரியர் மௌனகுருவுக்கு 72 வயது ஆறிலிருந்து எழுபதையும் கடந்து தொடரும் கலைப்பயணத்தில் மகாபாரதம் சார்வாகனனை எமக்கு படைப்பிலக்கியத்தில் வழங்கிய பன்முக ஆளுமை இலக்கியப்பிரவேசம்   செய்த  காலப்பகுதியில்  சென்னை   வாசகர் வட்டம்   வெளியிட்ட அறுசுவை  என்ற  ஆறு குறுநாவல்கள் இடம்பெற்ற   நூலைப்படித்தேன்.   அதில் சார்வாகன்  என்ற  பெயரில் ஒருவர்  அமரபண்டிதர்  என்ற  குறுநாவலை   எழுதியிருந்தார். அவர்   ஒரு  மருத்துவநிபுணர்  என்ற  தகவல்,   நான் அவுஸ்திரேலியாவுக்கு  வந்த பின்னர்தான்  தெரியும்.   அவர் தொழுநோயாளர்களுக்கு சிறந்த சிகிச்சையளித்தமைக்காக இந்திய அரசினால்   பத்மஸ்ரீ  விருதும்  வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர். எங்கள்   மூத்த  தமிழ்  அறிஞர்  கி. இலக்ஷ்மண  அய்யரின் துணைவியார்   பாலம்  அவர்களின் ஒன்றுவிட்ட  சகோதரர். மெல்பனுக்கு   அவர் வந்தபொழுது   எனக்கு அறிமுகப்படுத்தினார் திருமதி  பாலம்  லக்ஷ்மணன். சார்வாகன் அவரது  இயற்பெயரல்ல. அந்தப்  புனைபெயரின் பின்னாலிருந்த   கதையை    தமிழக சார்வாகனே   சொன்னார். மகாபாரதத்தில்    குருஷேத்திர  களத்தில்  கௌரவர்களை   அழித்து வெற்றிவாகைசூடிய   பாண்டவர்கள்,   தருமருக்கு  பட்டாபிஷேகம் சூட்டும்விழாவில்    அந்தச் சபையிலிருந்து எழுந்து  அந்த  வெற்றியின் பின்னாலிருக்கும் பேரழிவை   சுட்டிக்காண்பித்து  கடுமையாக விமர்சித்தவர்   சார்வாகன்  என்ற  முனிவர். அவரது  கூற்றால் வெகுண்டெழுந்த  மக்கள் அவரை    அடித்தே  கொன்றுவிட்டார்களாம். சார்வாக  மதம்  என்ற  புதிய  கோட்பாடு உருவானது  என்றும் பாஞ்சாலியும்   அந்த   மார்க்கத்தை  பின்பற்றியதாக  கதை இருப்பதாகவும்   சார்வகன்  என்ற  புனைபெயரைக்கொண்டிருந்த மருத்துவர்   ஸ்ரீனிவாசன்  சொன்னபொழுது  மகாபாரதத்தின் மற்றுமொரு  பக்கத்தை   தெரிந்துகொண்டேன்.

Continue Reading →

பார்வை: பாரதிநாதனின் ‘வந்தேறிகள்’

பாரதிநாதனின் வந்தேறிகள்

தாஜ் (சீர்காழி)ஒரு நாவலை வாசிக்கிற போது, அதனை ரசித்து உள்வாங்கிக் கொள்வதென்பதும் அதன் கதாபாத்திரங்களோடு ஒன்றிப்போவதென்பதும் வேறு வேறு நிலைரசனை கொண்டவை. ஆழ்ந்து அவதானித்தால் இரண்டு ரசனைகளுக்கிடையே நிரம்ப வித்தியாசங்கள் உண்டென்பதைக் கணிக்க முடியும். இவ்விரண்டு நிலையுமே வாசிப்பின் நிறைவை வெளிப்படுதும் பாங்குதான் என்றாலும், நாவலோடு ஒன்றிப்போவதென்பதையே கூடுதல் ஈடுபாடாகக் கருதயிடமுண்டு!. தோழர் பாரதிநாதனின் ‘வந்தேறிகள்’ நாவலை வாசித்த போது என் நிறைவை, கூடுதல் ஈடுபாடுகளுடன்தாம் உணர்ந்தேன்!பேட்டை – மந்தைத்திடல், கள்ளிப்பாளைய முதலாளிகள், அவர்களது கைத்தடிகள், அவர்கள் அழைத்துவந்திருந்த போலீஸ்களென அத்தனை பேர்களோடும் நியாயத்திற்காக முரண்பட்டு சந்துரு களத்தில் முன்நிற்க, மாதேசு, ஏழுமலை, கந்தப்பன் குடும்பம் இன்னும் இன்னும் ஏராளமான ஜனங்கள் குழுமியிருந்த மந்தைதிடல் கூட்டத்தில் நானும் இருந்தேன்! என்ன யோசிக்கின்றீர்கள்! மிகைதான். ஆனாலும் இருந்தேன்! அந்த அளவில் அந்நாவலோடு என் ஐக்கியம் இருந்தது. பேட்டைப் பகுதியில், பெரும் விசைத்தறி உற்பத்தியாளர்களாக அறியப்படும் கொழுத்த முதலாளிகள், தங்களை அண்டிவாழும் சிறு விசைதறி முதலாளிகளை வஞ்சிக்கிறார்கள். அவர்களிடம் பணிபுரிந்த தொழிலாளர்கள் வேலையற்றுப் போய், வீதிக்கு வருகிறார்கள். இச்சூழ்ச்சியில், சிறு முதலாளிகளுக்கு ஆதரவாக விசைத்தறித் தொழிலாளர்கள் களம் காண்கிறார்கள்.

Continue Reading →

இங்கே எதற்காக – ஜெயபாரதியின் திரையுலக வாழ்க்கைக் குறிப்புகள்

- வெங்கட் சாமிநாதன் -

இங்கே எதற்காக என்று ஒரு புத்தகம் திரைப்பட இயக்குனர் ஜெயபாரதியினது ஒரு புது வரவு சில மாதங்களுக்கு முன் வெளிவந்தது. மிகப் பழைய நினைவுகள் சில, அதிகம் இல்லை. எப்போதோ எழுபதுகளின் ஆரம்ப வருஷங்களில், நான் தஞ்சையில் விடுமுறையில் இருந்த போது ஒரு கடிதம் வந்தது. சினிமா பற்றி ஏதாவது எழுதும்படி. அது மாலனோ அல்லது ஜெயபாரதியோ அல்லது இருவருமே அடுத்தடுத்தோ, சரியாக நினைவில் இல்லை. என்ன எழுதினேன் என்று நினைவில் இல்லை. என்ன எழுதக்கூடும் நான் என்ற தயக்கத்தோடு தான் எழுதிய ஞாபகம். ஏதும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய எதுவும் இல்லை. இதை நினைவு கூறக் காரணம், நான் என்ன எழுதினேன் என்பது அல்ல. இப்போது தனக்கு அறுபத்து மூன்று வயதாவதாகச் சொல்லும் ஜெயபாரதி அப்போது 22 வயதினராக இருக்க வேண்டும். ஒரு பத்திரிகை, சினிமா பற்றி, அதுவும் தமிழில் சினிமா பற்றி மிகவும் வித்தியாசமாக, சிந்திக்கும் மனதில் உருவாக்கிக் கொண்டிருக்கும் ஜெயபாரதி. சத்யஜித் ரே, மிருணால் சென், ரித்விக் காடக்,  என பலர் அகில இந்திய தளத்திலும் உலக சினிமா தளத்திலும் புதிய சரித்திரம் படைப்பவர்களாக, உலவத் தொடங்கிய பிறகு, தமிழ் நாட்டிலும் ஒரு ஜெயகாந்தன் ஒரு எளிய தொடக்கமாக உன்னைப் போல் ஒருவனைத் தந்து விட்ட பிறகு, ஒரு சில நூறு பேராவது, சரி ஒரு சில ஆயிரம் பேர்களாவது முற்றிலும் வேறு பாதையில் தமிழ் சினிமாவைப் பற்றி சிந்திக்கவாவது தொடங்கியிருந்திருக் கிறார்கள். இதனால் எதுவும் ஆகிவிடப்போவதில்லை ஆகிவிடவுமில்லை.

Continue Reading →

சிறுகதை: எதிர்காலச் சித்தன்!

man.jpg - 5.39 Kb[ ஈழத்துத் தமிழ் இலக்கிய வானில் பல்துறைகளிலும் சுடர்விட்டு அமரரான அறிஞர் அ.ந.கந்தசாமியின் கவிதைகளில் ‘எதிர்காலச் சித்தன்’ என்னும் கவிதை என்னைக் கவர்ந்த அவரது கவிதைகளிலொன்று. ஈழத்துத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த கவிதைகளிலொன்று. எந்த ஒரு ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றிய தொகுப்பிலும் தவறாமல் இடம் பெற வேண்டிய கவிதைகளிலொன்று. அக்கவிதையைத் தழுவி இச்சிறுகதை எழுதப்பட்டுள்ளது.  மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள் மீராவின் ‘எனக்கும் உனக்கும் ஒரே ஊர். வாசுதேவ நல்லூர்’ என்பதையே முதலாவது தமிழில் வெளிவந்த அறிவியற் கவிதையாகக் குறிப்பிடுவார். ஆனால் அதற்கும் பல வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த அ.ந.க.வின் ‘எதிர்காலச் சித்தன்’ கவிதையினையே தமிழின் முதலாவது அறிவியற் கவிதையாக நான் கருதுகின்றேன். சுஜாதாவுக்கும் அ.ந.க.வின் மேற்படி கவிதை பற்றி தெரிந்திருந்தால் அவரும் அவ்விதமே கூறியிருப்பார். மேற்படி கவிதை நிகழ்கால மனிதன் எதிர்கால மனிதன் ஒருவனைச் சந்தித்து, உரையாடித் திரும்புவதைப் பற்றி விபரிக்கிறது.]

எதிர்காலத்திரை நீக்கி நான் காலத்தினூடு பயணித்தபொழுதுதான் அவனைக் கண்டேன். அவன் தான் எதிர்கால மனிதன். இரவியையொத்த ஒளிமுகத்தினைக் கொண்டிருந்த அந்த எதிர்கால மனிதனின் கண்களில் கருணை ஊறியிருந்தது. அவன் கூறினான்: “நிகழ்கால மனிதா! எதிர்கால உலகமிது. இங்கேன் நீ வந்தாய்? இங்கு நீ காணும் பலவும் உன்னை அதிர்வெடி போல் அலைக்கழிக்குமே. அப்பனே! அதனாலே நிகழ்காலம் நீ செல்க!”

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 96:குணா கவியழகனின் ‘விடமேறிய கனவு’ நூல் மற்றும் வாசிப்பு பற்றிய எண்ணங்கள்…

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்

நேற்று குணா கவியழகனின் ‘விடமேறிய கனவு’ நூல் வெளியீடு நிகழ்வுக்குத். தவிர்க்க முடியாத காரணங்களினால் செல்ல முடியவில்லை. நண்பரும் எழுத்தாளருமான தேவகாந்தன் சென்றிருந்தார். எனக்கும் ஒரு பிரதி வாங்கி வருமபடி கூறியிருந்தேன். அதனைப்பெற்றுக்கொள்ள நேற்றிரவு அவர் இருப்பிடம் சென்றிருந்தேன். சிறிது நேரம் பல்வேறு விடயங்களைப்பற்றி உரையாடினோம். நூல் வெளியீடு, முகநூல், தமிழகத்தில் அவரது அனுபவங்கள் என்று பல்வேறு விடயங்கள் உரையாடலில் வந்து போயின.

நா.பா.வின் மணிபல்லவம் நாவலைச் சுருக்கி வைத்திருப்பதாகக் கூறினார். தனக்கு ஒரு காலத்தில் பிடித்த நாவலது என்றார். இப்பொழுது வாசிக்கும்போது அன்றிருந்த பிடிப்பு ஏற்படுவதில்லை என்றார். சிலப்பதிகாரம் போல் மணிபல்லவம் நாவலுக்கு ஒரு சிறப்புண்டு. அக்காலத்து மக்களை மையமாக வைத்து உருவான நாவலது. எனக்கு நா.பா.வின் தமிழ் பிடிக்கும். அக்காலகட்டத்தில் அவரது பொன்விலங்கு நாவலின் ‘பைண்டு’ செய்யப்பட்ட பிரதியொன்று என்னிடமிருந்தது. இலட்சிய வேட்கை கொண்ட நாயகனான சத்தியமூர்த்தி மல்லிகைப்பந்தல் கிராமத்து ஆசிரியர் வேலைக்கான நேர்முகப்பரீட்சைக்காகச் செல்வதுடன் ஆரம்பமாகும் நாவலின் இடையில் வரும் கருத்தாழம் மிக்க வசனங்களை அப்போது விரும்பி வாசிப்பதுண்டு. இன்று அக்காலகட்டத்தில் வாழ்வில் இன்பமேற்றிய நினைவுச்சின்னங்களாக அன்று வாசிப்பில் இன்பம் தந்த நூல்கள் விளங்குகின்றன.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 95: சமகால ஈழத்தமிழ் இலக்கியம் பற்றிய பென்குவின் (இந்தியா) தொகுப்பு பற்றி….

வாசிப்பும், யோசிப்பும் 95: சமகால ஈழத்தமிழ் இலக்கியம் பற்றிய பென்குவின் (இந்தியா) தொகுப்பு பற்றி....அண்மையில் French Insititute of pandicherry மற்றும் ‘பென்குவின் (இந்தியா) அமைப்புகள் இணைந்து வெளியிட்டிருந்த Time will write A SONG for you என்னும் ஈழத்தமிழ் இலக்கியத்தைப் பிரதிபலிக்கும் படைப்புகளை உள்ளடக்கிய நூலொன்றினை வாசிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அந் நூலைப் பற்றி முன் அட்டையில் Contemporary Tamil Writing from Sri lanka  என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேற்படி தொகுப்பிலுள்ள படைப்புகளுக்குச் சொந்தக்காரர்களின் எழுத்துத்திறமை பற்றிய சந்தேகம் எதுவும் எனக்கில்லை. அவர்கள் அனைவரும் ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்குக் காத்திரமான பங்களிப்பு செய்தவர்கள். ஆனால் இத்தொகுப்பு தொகுக்கப்பட்ட விதம் மிகவும் ஆச்சரியத்தையும், தொகுப்பின் தரம் பற்றிய சந்தேகத்தினையும் எழுப்புகிறது.

தொகுப்பில் மொத்தம் 68 படைப்புகள் (கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என) உள்ளன. அவற்றில் கீழுள்ள எழுத்தாளர்களின் படைப்புகள் மட்டும் முப்பதுக்கும் அதிகமானவையாக இருக்கின்றன: வ.ஐ.ச. ஜெயபாலன், சிவரமணி, பா.அகிலன், கருணாகரன், சு.வில்வரத்தினம், எஸ்.விநோதினி, எஸ்.செழியன், கி.பி.அரவிந்தன், போஸ் நில்கலே, வி.கெளரிபாலன், நிலாந்தன், மஜீத், ஃபகீமா ஜகன், சண்முகம் சிவலிங்கன்

ஶ்ரீலங்காத்தமிழரின் சமகால எழுத்து என்று குறிப்பிடப்பட்டு வெளியிடப்பட்ட ஒரு தொகுப்பிலுள்ள 68 படைப்புகளில் முப்பதுக்கும் அதிகமானவை மேலுள்ள எழுத்தாளர்களின் படைப்புகளே. இவர்களின் ஒன்றுக்கும் அதிகமான பல படைப்புகளைத் தொகுப்பு உள்ளடக்கியுள்ளது.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 94: நாவல்: ஒரு ஶ்ரீலங்கன் அகதியின் கதை.

வ.ந.கிரிதரனின் நாவல்: ஒரு ஶ்ரீலங்கன் அகதியின் கதை!காலம் கைகூடின் எதிர்காலத்தில் வெளியாகவுள்ள இந்த நாவலின் இரு பகுதிகள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. 1983இல் இலங்கையில் நடைபெற்ற தமிழர்களுக்கெதிரான இனக்கலவரத்தைத்தொடர்ந்து , இலங்கையில் அரச திணைக்களமொன்றில் உயர் பதவியிலிருந்த இளங்கோ அகதியாகக் கனடா நோக்கி புலம்பெயர்கின்றார். இடையில் அவரது பயணம் அமெரிக்காவின் பாஸ்டனில் தடைப்படுகின்றது. அங்கிருந்து அவரை கனடாவுக்கு ஏற்றிச்செல்லவேண்டிய டெல்டா நிறுவனம் மறுத்து விடவே அங்கு அரசியல் அடைக்கலம் கோருகின்றார். இவ்விதம் அமெரிக்காவில் அரசியல் அடைக்கலம் கோரிய அவர் நியூயார்க் நகரிலுள்ள புரூக்லீன் தடுப்புமுகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டு தடுத்து வைக்கப்படுகின்றார்.

அவரது புரூக்லீன் நகரத்துத்தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் முதல் பகுதியான ‘அமெரிக்கா’ ‘டொராண்டோ’விலிருந்து வெளியான ‘தாயகம்’ பத்திரிகையில் தொடராக வெளியாகிப் பின்னர் தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாக வெளிவந்தது.

தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட இளங்கோ மேலும் ஒருவருட காலம் நியூயார்க் மாநகரில் சட்டவிரோதக்குடிமகனாக, எந்தவிதக்குடிவரவு ஆவணங்களுமின்றி தன் இருப்புக்காகப் போராடுவதை விபரிக்கும் பகுதியே ‘குடிவரவாளன்’. இருபத்தேழு அத்தியாயங்களை உள்ளடக்கிய இப்பகுதி திண்ணை மற்றும் பதிவுகள் இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது. இப்பகுதி எதிர்காலத்தில் நூலுருப்பெறவுள்ளது.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 93: தொகுப்புகள் பற்றிய சிந்தனைகள்….

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்

ஒரு நாட்டின் இலக்கியம் பற்றி வெளிவரும் தொகுப்பு நூலானது அந்த நாட்டு இலக்கியத்தின் சரியான குறுக்கு வெட்டாக இருக்க வேண்டும். உதாரணமாக ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றி வெளியாகும் தொகுப்பு நூலாக இருப்பின் அத்தொகுப்பு நூலொன்றினை வாசிக்கும்போது ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றிய சரியான குறுக்கு வெட்டினைப் பிரதிபலிப்பதாக அந்தத் தொகுப்பு நூல் இருக்க வேண்டும்.

இருபதாம் நூற்றாண்டிலிருந்து இதுவரையிலான ஈழத்துத் தமிழ் இலக்கியத்தை முறையாகப் பிரதிபலிக்கும் வகையில் வெளிவந்த தொகுப்பு நூல்கள் ஏதாவதிருக்கின்றனவா என்று பார்த்தால் பொதுவாக ஏமாற்றமே ஏற்படுகின்றது. செ.யோகநாதனின் சிறுகதைத்தொகுப்பு நூல்கள் , செங்கையாழியானின் பல்வேறு காலகட்டங்களைப் பிரதிபலிக்கும் (சுதந்திரன் சிறுகதைகள், ஈழநாடு சிறுகதைகள், மறுமலர்ச்சிச்சிறுகதைகள் போன்ற) தொகுப்பு நூல்கள் இவ்விதமான சூழலில் வெளிவந்த முக்கியமான தொகுப்புகள். அது போல்  மித்ரவின் ‘பனியும் பனையும்’, ஞானம் புலம்பெயர் தமிழர்களின் படைப்புகளை உள்ளடக்கிய தொகுப்பு ஆகியவற்றையும் குறிப்பிடலாம்.

Continue Reading →