பி. சேஷாத்ரியும் அவரது “மலைவாழ் வாழ்க்கையும்” (பெட்டாடே ஜீவா)

- வெங்கட் சாமிநாதன் -

கன்னட சினிமாவில் பி. சேஷாத்ரி என்று ஒரு இயக்குனர். அவரை அறிமுகம் செய்து வைத்துத் தான் ஆகவேண்டும். நம் தமிழரில் நல்ல சினிமாவை ரசிப்பவர்கள் ஒருசில ஆயிரமாவது இருப்பார்கள் என்று நம்ப விரும்புகிறேன். அது பற்றிப் பேசுபவர் தெரிந்ததாக சொல்லிக்கொள்பவர்கள் இதைவிட ஒன்றிரண்டு மடங்கு  கூடவே இருக்கக் கூடும் தான். நான் ரசிப்பவர்களைப் பற்றி மாத்திரமே பேச விரும்பு கிறேன். நம்மூர் சிவாஜி கணேசன், சிம்பு வகையறா போன்று அங்கும் ராஜ்குமார் போன்றாரை விட்டு ஒதுங்கி தனிப்பாதையிட்டுச் செல்லத் தொடங்கியவர்கள், கிரீஷ் கர்நாட், காஸரவல்லி, பி.வி. காரந்த் போன்றாரைத் தெரிந்திருக்கலாம். எம்.எஸ் சத்யு, ஜி.வி. ஐயர் போன்றார், தெரிந்த பெயர்களாக இருக்குமா என்பது தெரியாது. அதிலும் கிரீஷ் கர்நாட் தெரிந்திருப்பது, அவர் நடித்த சம்ஸ்காரா ,எழுபதுகளில் பெரும் சச்சரவில் சிக்கியது காரணமாகவே இருக்கக் கூடும்.

கொஞ்சம் காட்டமாகவே நான் எழுதுவதாகத் தோன்றலாம். எனக்கான நியாயங்கள், சரியோ தவறோ இரண்டு மூன்று இருக்கத் தான் செய்கின்றன. நல்ல சினிமா பயிற்சி பட்டறைகள் ஒன்றிரண்டு, அதில் ஒன்றில் என் கன்னட நண்பர் ஒருவர், சினிமா ரசிகர் வகுப்பெடுக்கச் சென்றார். எடுத்த உடனேயே அந்த பயிற்சி மாணவர்கள் சொன்னது, “ஐயா நீங்கள் எல்லாம் உடனே இத்தாலி சினிமா, ப்ரெஞ்ச் சினிமா என்று பேச ஆரம்பித்து விடுகிறீர்கள். நீங்களும் உங்கள் நண்பர் சாமிநாதனும். நம்ம ஊரைப் பத்திப் பேசுங்க. இந்த மண்ணைப் பத்திப் பேசுங்க” என்பது அவர்களது ஏகோபித்த வேண்டுகோள். இவர்கள் ஏற்கனவே பயிற்சியில் இருப்பவர்கள். முதல் நாள் முதல் ஷோ பார்க்க சென்னை வெயிலில் டிக்கட் வாங்க நிற்பவர்களாக இருக்கமாட்டார்கள். அவர்கள் பயிற்சியில் என்ன எதிர்பார்த்தார்களோ தெரியாது.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 92: டெறிக் த சில்வாவின் ‘தொன்மம்’ மற்றும் உதய பிரசாந்த மெத்தகமவின் ‘முன்னோர்’ பற்றி…..

டெறிக் த சில்வாவின் 'தொன்மம்' மற்றும் உதய பிரசாந்த மெத்தகமவின் 'முன்னோர்' பற்றி.....

இலங்கையில் தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்குமிடையில் நிலவும் முரண்பாடுகள் அண்மைக்காலத்தில் ஏற்பட்டவையல்ல. இரண்டாயிரம் வருடங்களுக்கும் அதிகமானவை. குடங்கிப் படுத்திருக்கும் சிறுவன் துட்டகெமுனு அதற்குக் காரணமாகக் கூறுவான் ” தெற்கில் கடலும், வடக்கில் தமிழரும் இருக்கையில் எவ்விதம் நீட்டி நிமிர்ந்து படுப்பது?” என்று. துட்டகெமுனுவை சிங்கள தேசிய விடுதலை வீரனாகச்சித்திரிக்கும் சிங்கள மக்களின் வரலாற்று நூல்கள் தமிழர்களை எதிரிகளாகவும் சித்திரிக்கும். குழந்தைப் பருவத்திலிருந்தே தமிழர்களைச் சிங்கள மக்களின் எதிரிகளாகச் சித்திரிக்கும் இவ்விதமான வரலாற்று நூல்கள் திருத்தி எழுதப்பட வேண்டியது அவசியம். டெறிக் த சில்வாவின் ‘தொன்மம்’ என்ற இந்தக் கவிதை அந்த வரலாற்றைக் கேள்விக்குள்ளாக்குகின்றது. [இங்குள்ள மொழிபெயர்ப்புக் கவிதைகள் சோ.பத்மநாதனின் ‘தென்னிலங்கைக் கவிதை’ நூலிலுள்ள மொழிபெயர்ப்புக்கவிதைகளாகும்.]

ஒரு பிள்ளையின் அச்சமாகிய

அந்தகாரத்தில்

பளபளக்கும் வாள்கள் தந்த

அழிவு எவ்வளவு?

ஆறாய் ஓடிய குருதி

எவ்வளவு?

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 91: கதைக்குள் ஒரு கவிதை!

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்

அண்மையில் தமிழினி ஜெயக்குமாரன் ‘மழைக்கால இரவு’ என்றொரு சிறுகதையினைப் ‘பதிவுகள்’ இணைய இதழில் எழுதியிருந்தார். இதுவே தமிழினியின் முதலாவது சிறுகதை என்று கருதுகின்றேன். இந்தச்சிறுகதையின் இறுதியில் வரும் வரிகள் அழகானதொரு கவிதையாக அமைந்திருந்தன. ‘பசியடங்காத பூதம்’ போல் மீண்டும் பயங்கரமாக வாயைப்பிளந்து கொண்டது யுத்தம். உவமையில் வெளிப்படும் நல்லதொரு படிமம் இது. எவ்வளவு பேரைக்கொன்றொழித்தும் யுத்தமென்ற பூதத்தின் பசி அடங்கவில்லை. கண் முன்னால் நிணமும், குருதியும் கடை வாயில் ஒழுகக்காட்சிதரும் பூதமாக யுத்தம் விசுவரூபமெடுத்து நிற்கிறது.

பசியடங்காத பூதம்!

கரு மேகங்கள் சூழ்ந்த வானம்

இருள்மூடிக் கிடந்தது.

நசநச வென்று வெறுக்கும்படியாக

மழை பெய்து கொண்டேயிருந்தது,

இடை வெளியில்லாமல் காது கிழியும்படி

பீரங்கிகள் மீண்டும் முழங்கத் தொடங்கியிருந்தன.

நிணமும் குருதியும் கடைவாயில்

வழிய வழிய

பசியடங்காத பூதம்போல மீண்டும்

பயங்கரமாக வாயைப்

பிளந்து கொண்டது

யுத்தம்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 90: அண்மையில் வாசித்தவை மற்றும் யோசித்தவை பற்றிய குறிப்புகள் சில….

தேவகாந்தனின் 'கனவுச்சிறை' மகாநாவல் வெளியீடு!

தேவகாந்தனின் ‘கனவுச்சிறை’ நாவல் வாசித்துக்கொண்டிருக்கின்றேன். நாவலுக்கு சிறந்ததொரு முன்னுரையினை எழுதியிருக்கின்றார் எழுத்தாளர் தேவிபாரதி. ஈழத்தமிழர்களின் அரசியல் வரலாற்றினை நன்கு புரிந்துகொண்ட ஒருவராக அவரை இனங்காட்டுகிறது அந்த முன்னுரை. நாவலைப்பற்றிய அவரது திறனாய்வில் நாவலின் நாயகியான ராஜியை மணிமேகலையுடன் ஒப்பிட்டு, மணிபல்லவத்தில் (நயினாதீவில்) நடைபெறும் நாவலைச் சுட்டிக்காட்டியிருப்பது அவரது இலக்கியப்புலமையினைக் காட்டுகிறது. ஈழத்துத்தமிழ் இலக்கியக்களத்திலிருந்து தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் வகையில் வெளிவந்திருக்கிறது ‘கனவுச்சிறை’ நாவல். அதனை எழுதிய எழுத்தாளர் தேவகாந்தன் பாராட்டுக்குரியவர்.

இந்த நாவல பற்றிய எழுத்தாளர் தேவிபாரதியின் கருத்தொன்றினையும், , நாவலின் இயற்கை வர்ணனையொன்றினையும் இங்கு பகிர்ந்து கொள்கின்றேன்.

” ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக்காலகட்டத்தைத் தன் படைப்புக்கான பின்புலமாகக்கொள்ளும்போது அந்தக்காலகட்டத்தின் மிகமுக்கியமான சமூக அரசியல் நிகழ்வுகளைப்பற்றிய பதிவுகள் இடம் பெறுவது ஒரு ஒத்துக்கொள்ளப்பட்ட, வெற்றிகரமான இலக்கியக்கோட்பாடு. வரலாற்றின் வசீகரங்களிலிருந்து வாழ்வின் அர்த்தத்தை அல்லது அர்த்தமின்மையை உருவாக்கியவர்கள் டால்ஸ்டாயும், மீகயில் ஷோலக்காவும் ஹெமிங்வேயும். ‘புயலிலே ஒரு தோணி’யை முன்னிட்டு ப.சிங்காரம் இந்தப்பட்டியலில் சேரக்கூடியவர். கல்கி போன்றவர்கள் வரலாற்றின் வசிகரங்களை வணிக உத்தியாகப்பயன்படுத்திக்கொண்டார்கள். போர் அதன் இயல்பிலேயே மனித மனங்களைக்கிளர்ச்சியுறச்செய்வது. அந்தக் கிளர்ச்சியிலிருந்து தப்பிச்செல்வது எழுத்தாளன் முன்னுள்ள சவால். அந்தச் சவாலை எதிர்கொள்வதில் தேவகாந்தன் பெற்றுள்ள வெற்றியே இந்த நாவலை முக்கியமானதாகக்கருதச் செய்வதில் முதன்மையான பங்கு வகிக்கின்றது.” (தேவிபாரதியின் முன்னுரையிலிருந்து)

Continue Reading →

எழுத்துப்போராளி ஷோபாசக்தி நடித்த தீபன் ஆவணப்படத்திற்கு சர்வதேச விருது

ஷோபாசக்திமுருகபூபதி“ஒப்பீட்டளவில்  இந்திய  நாடு,  இலங்கையைவிட  ஊடகச் சுதந்திரம்   lமிகுந்த  நாடு.   இவ்விரு  நாடுகளின்  திரைப்பட அடிப்படைத்  தணிக்கை விதிகள்   காலனியக்  காலத்தில்  உருவாக்கப்பட்டவை. தணிக்கையே   இல்லாத  சுதந்திர ஊடகவெளிதான்  நமது விருப்பமென்றாலும்   இப்போதுள்ள  தணிக்கை விதிகளைக் கண்டு  நாம்  பேரச்சம் அடையத் தேவையில்லை.   ஆனந்த் பட்வர்த்தனின்   அநேக   படங்கள் தணிக்கை    விதிகளுடன்  நீண்ட  போராட்டத்தை    நடத்தித்தான் வெளியாகியுள்ளன.    தமிழில்  சமீபத்திய  உதாரணமாக  நான் பணியாற்றிய  ‘செங்கடல்’ திரைப்படமும்    நீண்ட  சட்டப் போராட்டத்தை    நடத்தித்  தணிக்கையை   வென்றிருக்கிறது” இவ்வாறு  சில வருடங்களுக்கு முன்னர்  எழுதியிருக்கும்  ஷோப சக்தி நடித்திருக்கும்  தீபன்  என்ற   ஆவணப்படம்  சமீபத்தில்  நடந்த கேர்ன்ஸ்    சர்வதேச திரைப்படவிழாவில்  சிறந்த ஆவணப் படத்திற்கான விருதை வென்றிருக்கிறது. முதலில்   அவரை   மனந்திறந்து  பாராட்டி  வாழ்த்திக்கொண்டே    அவர்    பற்றிய குறிப்புகளை   இங்கு  பதிவுசெய்கின்றேன்.

எனது    விருப்பத்துக்குரிய  படைப்பாளி  ஷோபா சக்தி. இதுவரையில் நாம்   நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டதில்லை.   எழுத்துக்களினால் பரிச்சயமானவர். 1994   ஆம் ஆண்டளவில்  எஸ்.பொன்னுத்துரையுடன் இணைந்து புகலிடச்சிறுகதைகளை தொகுக்கும்  பணியில்  ஈடுபட்டபொழுது ஷோபா சக்தியினதும்    சிறுகதையொன்றை   புகலிட  இதழிலிருந்து தெரிவுசெய்தோம். எனினும்    அந்தப்பெயரைப்பார்த்ததும்  அவர்  ஆணா… பெண்ணா… என்ற    மயக்கமும் வந்தது.    காலப்போக்கில்  அவரது  கொரில்லா நாவலைப்படித்ததன்    பின்னரும்  தமிழக இதழ்களில்  அவர் பற்றிய குறிப்புகளை   படித்த பின்னரும்தான்  உண்மை   தெளிவானது.

Continue Reading →

பூங்காவனம் 19 ஆவது இதழ் மீதான பார்வை!

பூங்காவனம் 19 ஆவது இதழ் பூங்காவனம் வாசகர் கரங்களில் தற்பொழுது மணம் பரப்பிக்கொண்டிருக்கின்றது. பூங்காவனத்தின் வழமையான அம்சங்கள் இந்த  இதழையும் அலங்கரித்திருக்கின்றன. டிசம்பர் மாதம் மூன்றாம் திகதி சர்வதேச ஊனமுற்றோர் தினம் அனுஷ்டிக்கப்படுவதை வாசகர்கள் அறிவார்கள். அதனை நினைவுபடுத்துமுகமாக ஆசிரியர் பக்கத்தில் சிறந்த பல யோசனைகள் தரப்பட்டிருக்கின்றன. மனதில் உறுதியிருந்தால் உடலில் ஏற்படும் ஊனம் திறமையை பாதிப்பதில்லை என்பதையும், ஏனையவர்கள் ஊனமுற்றவர்களின் மனதை காயப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதையும் நினைவுபடுத்தவே வருடாந்தம் ஊனமுற்றோர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது என்ற கருத்து சொல்லப்பட்டிருக்கின்றது. மேலும், முயற்சியையே மூலதனமாகக் கொண்டுள்ள ஊனமுற்றவர்கள் உலக ரீதியாக பல சாதனைகளைப் படைத்திருக்கின்றனர். இறைவன் இவர்களுக்கு விசேட வல்லமைகளைக் கொடுத்திருக்கிறான் என்ற உண்மையும் கூறப்பட்டிருக்கிறது. ஊனம் என்பது தனிநபர் சம்பந்தப்பட்ட விடயமாக இருப்பதால் அவர்களை அணுகி அவர்களுக்கான உளவள ஆலோசனைகளை வழங்கி நட்புடன் உறவாடி `வாழ்க்கை வாழ்வதற்கே’ என்ற உண்மையை உணர வைக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது.

Continue Reading →

ஆய்வு: கம்பராமாயண அரச மகளிரின் மாண்பும் மாட்சியும்

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரண்டும் தலைசிறந்த பழம்பெருங் காப்பியங்களாய்த் திகழ்கின்றன. வால்மீகி என்னும் முனிவர் இராமாயணத்தை வடமொழியில் எழுதியுள்ளார். இதைத் தழுவிக் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிச்சக்கரவர்த்தியான கம்பர் ‘கம்பராமாயணம்’ என்ற நூலைத் தமிழில் யாத்துள்ளார். ‘கல்விச் சிறந்த தமிழ்நாடு, புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு’ என்று பாரதியார் சிறப்பித்துக் கூறியுள்ளார். கம்பராமாயணத்தில்  ஆறு காண்டங்கள், 112 படலங்கள், 10,569 பாடல்கள் உள்ளன. ஆறு காண்டங்களோடு தெய்வப் புலவர் ஒட்டக்கூத்தர் அருளிய உத்தரகாண்டமும் சேர்த்துக் காண்டங்கள் ஒருமித்து ஏழாகின்றன. இனி, கம்பராமாயணம் பேசும் மகளிர் பெருமை பற்றிக் காண்போம்.

பட்டத்தரசிகள்

கோசலை, கைகேயி, சுமத்திரை ஆகிய மூவரும் கோசல நாட்டின் தசரத மன்னனின் பட்டத்தரசிகளாவர். இவர்களுக்கு மகப்பேறு இல்லாதலால் தசரத மன்னன் கவலையுற்றான். இதையறிந்த கலைக்கோட்டு முனிவர் புத்திர காமேஷ்டி யாகம் செய்து ஒரு கிண்ணத்தில் அமிர்தத்தை மன்னரிடம் கொடுத்துத் தேவியர்களக்குக் கொடுக்கும்படி பணித்தார். தசரத மன்னன் தன் மனைவியர் மூவருக்கும் அமிர்தத்தைப் பகிர்ந்து கொடுத்து, கிண்ணத்தில் ஒட்டியிருந்த அமிர்தத்தைச் சுமந்திரைக்கு மீண்டும் கொடுத்தான். மூவரும் கர்ப்பமுற்று, கோசலை- இராமன் என்ற குழந்தையையும், கைகேயி- பரதன் என்ற குழந்தையையும், சுமத்திரை- இலக்குவன், சத்துருக்கன் என்ற இரு குழந்தைகளையும் பெற்றெடுத்தனர்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 89: ‘தொராண்டோ’வில் தேவகாந்தனின் ‘கனவுச்சிறை’ நாவல் வெளியீடு பற்றி……

தேவகாந்தனின் 'கனவுச்சிறை' மகாநாவல் வெளியீடு!

–  எழுத்தாளர் தேவகாந்தனின் ‘கனவுச்சிறை’ நாவல் வெளியீடு பற்றிய எனது முகநூல் குறிப்பும், அது பற்றிய எழுத்தாளர் தேவிபாரதியின் கருத்தும் இங்கு ஒரு பதிவுக்காகப் பதிவு செய்யப்படுகிறது. –

பல வருடங்களாக எதிர்பார்க்கப்பட்டிருந்த தேவகாந்தனின் ‘கனவுச்சிறை’ நாவல் கடந்த மே 16, 2015 அன்று ‘டொராண்டோ’வில் வெளியானது. தேவகாந்தன் திருப்தியும், மன நிறைவும் அடையக்கூடிய விதமாக நூல் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக, நேர்த்தியான வடிவமைப்பில் வெளிவந்துள்ளது.

அன்று தவிர்க்க முடியாத காரணங்களினால் சிறிது தாமதமாகவே செல்ல முடிந்தது. நான் சென்றுகொண்டிருந்தபொழுது எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம் நாவலைப்பற்றிய தனது உரையினை ஆற்றிக்கொண்டிருந்தார். எழுத்தாளர் அருண்மொழிவர்மன் தனது உரையினை ஏற்கனவே ஆற்றியிருந்திருக்க வேண்டும். ஏனெனில் அதன்பின் அவர் அங்கு உரையாற்றவில்லை.

நிகழ்வினைத்தலைமை தாங்கி சிறப்புறச்செய்தவர் கலாநிதி மைதிலி தயாநிதி.

என்.கே.மகாலிங்கத்தைத்தொடர்ந்து அடிகளார் சந்திரகாந்தன் அவர்கள் தனது உரையினை ஆற்றினார். அவரது உரையினைத்தொடர்ந்து முனைவர் சேரன் நூலினை வெளியீட்டு வைக்க சட்டத்தரணி மனுவல் ஜேசுதாசன் முதற் பிரதியினை வாங்கினார். அவரைத்தொடர்ந்து சிறப்புப் பிரதிகளைக் குறிப்பிட்ட சிலர் வாங்கினார்கள்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 88 : நூல் அறிமுகம் – வேலணையூர் தாஸின் ‘மழைக்காலக்குறிப்புகள்’ பற்றி….

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்

வேலணையூர் தாஸின் ‘மழைக்காலக் குறிப்புக்கள்’ நூலினை அண்மையில் பெற்றுக்கொண்டேன். வேலணையூர் தாஸ் ‘யாழ் இலக்கியக் குவியம்’ அமைப்பின் ஸ்தாபகர். இணைய இதழ்கள், அச்சிதழ்கள் பலவற்றில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. ‘யாழ் இலக்கியக் குவியம்’ அமைப்பின் அழகிய வெளியீடாக மேற்படி நூல் வெளியாகியிருப்பது திருப்தியைத்தருவது. நூலின் ஆரம்பத்தில் ‘பதிவுகள்’ இணைய இதழுட்பட தனது படைப்புகள் வெளிவந்த ஊடகங்களுக்கு நன்றியினை நூலாசிரியர் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் பல,விடயங்களை பாடுபொருளாகக் கொண்டிருக்கின்றன. யுத்தத்தில் தந்தையை இழந்த, மகனை இழந்த, கணவனைஇழந்த எனப் பல்வேறு இழப்புகளைப் பற்றிக் கவிதைகள் விபரிகின்றன. காதல், மழைக்காலத்து அனுபவங்கள், இழந்த நிலம், அன்னை மீதான அன்பு, மழை அனுபவங்கள் எனக் கவிதைகள் பன்முகத்தன்மை மிக்கவை. கவிதைகளும் சொற் சிக்கனம் மிகுந்தவை, சொற்சிக்கனம் சிறிது தளர்ந்தவை எனப்பன்முகமானவை.

Continue Reading →

திரும்பிப்பார்க்கின்றேன். நூல்களை ஏந்திய கைகளில் மற்றவர்களின் பாதணிகளை ஏந்திய மலையகத்தின் தாரகை. மௌனமே மொழியாக வாழ்ந்த தன்னடக்கம் மிக்க ஆளுமை என்.எஸ்.எம். ராமையா

முருகபூபதி

” இயற்கைச்   சூழலின்   மத்தியில்   ஏகாந்தமாயிருந்து  கலையம்சம்   மிக்க – கலை – இலக்கியங்களைப் படைக்க    வேண்டிய    மணிக்கரங்கள்  இரும்புக்கடையின்   மத்தியில்     கணக்கு    ஏட்டுடன்   சதா   கருமமாற்றம்   நிலை    என்றுதான்   மாறுமோ… ?”     என்று    நண்பர்     மேகமூர்த்தி     பல வருடங்களுக்கு    முன்னர்    என்.எஸ்.எம்.     ராமையாவைப் பற்றி  மல்லிகையில்    எழுதியது    நினைவுக்கு  வருகிறது. மேகமூர்த்தி     இன்று    கனடாவில்.   முன்பு    வீரகேசரியில்     துணை ஆசிரியராக     பணியிலிருந்தவர்.     தற்பொழுது     வீரகேசரி   மூர்த்தி    என்ற பெயரில்   எழுதிவருகிறார். நானும்   முதல்   முதலில்  என்.எஸ்.எம்.   அவர்களை  அந்த இரும்புக்கடையில்தான்     சந்தித்தேன்.  அறிமுகப்படுத்தியவர்  மு.கனகராசன். அமைதி – அடக்கம் – பணிவு – மறந்தும்    சுடுசொல்    பாவிக்கத்    தெரியாத அப்பாவித்    தனமான   குண    இயல்புகள்  –  எதனையும்    ரசித்துச்   சிரிக்கும் பொழுது    குழந்தைகளுக்கே  உரித்தான    வெள்ளைச் சிரிப்பு  இவ்வளவற்றையும்   தன்னகத்தே    கொண்டிருந்த     அந்த   வித்தியாசமான மனிதரிடத்தில்    நல்ல   ரஸனையைக்  கண்டேன்.     தர்மாவேசத்தை என்றைக்கும்      கண்டதில்லை. நாம்   அவரை   இராமையா    என்று     அழைப்பது   அபூர்வம்.    அவரது முதல்     எழுத்துக்கள்தான்     இலக்கிய     உலகில்     பிரபலமானவை. மலைநாட்டு எழுத்தாளர்     சங்கத்தின்     தலைவராக     விளங்கிய போதும்கூட   தலைவர்களுக்கே     உரித்தான    கம்பீரம்   காத்து   இமேஜ் தேட முயலாமல்   எளிமையாக     வாழ்ந்தவர்.

Continue Reading →