இன்று ஞானம் தனது 175 இதழாக வெளியிட்டிருந்த சிறப்பு இதழான ‘ஈழத்துப்புலம் பெயர் இலக்கியச் சிறப்பிதழின் வெளியீட்டு விழா ‘டொராண்டோ’வில் நடைபெற்றது. கனடாத்தமிழ்ச்சங்க ஆதரவில் வைத்திய கலாநிதி லம்போதரனுக்குச்சொந்தமான ‘டொராண்டோ’ தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில். எழுத்தாளர் அகில் தொடக்கவுரையினையும், வைத்திய கலாநிதி இ.லம்போதரன் தலைமையுரையினையும் ஆற்ற அறிமுக உரையினைப் பேராசிரியர் அ.ஜோசப் சந்திரகாந்தன் ஆற்றினார். அதன்பின்னர் நூல் நிகழ்வுக்கு வந்திருந்தோருக்கு விற்பனைக்கு விடப்பட்டது. தொடர்ந்த நிகழ்வில் கலாநிதி நா.சுப்பிரமணியன் அவர்கள் சிறப்புரையினையும், இறுதியாக நன்றியுரையினை எழுத்தாளர் ஶ்ரீரஞ்சனி விஜேந்திராவும் ஆற்றினார்கள். நிகழ்வில் கலாநிதி சுப்பிரமணியன் அவர்கள் நீண்டதொரு , சிந்தனையைத்தூண்டும் உரையினை ஆற்றியதும் குறிப்பிடத்தக்கது. அதிலவர் புலம்பெயர் தமிழர்களின் இலக்கியத்தில் ஆரம்பத்திலிருந்து இன்றுவரையில் கருப்பொருளாக அமைந்த பொருளில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி விரிவாக அவற்றைப்பிரிவுகளாக்கி எடுத்துரைத்தார். ஆரம்பத்தில் வெளியான படைப்புகள் தாயகமண் பற்றிய கழிவிரக்கமாக அமைந்திருந்தன; அதன் பின்னர் ஈழம் மற்றும் புகலிடச்சூழல்களை உள்வாங்கியவையாக விளங்கின; அதன் பின்னர் புகலிடத்தில் காலூன்றியவர்கள், புகலிடத்தில் தம் தாயகத்தில் நிலவிய பண்பாட்டுச்சூழலை மீண்டும் உருவாக்க முனைவதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டனர். அதே சமயம் பெண்ணியம், சாதியம் போன்றவை புலம்பெயர் இலக்கியத்தில் ஏற்படுத்திய பாதிப்புகள் எத்தகையன என்பதுபற்றியும் அவரது உரை ஆராய்திட முற்பட்டது. இவ்விதமாகத்தனது நீண்ட உரையினை ஆற்றிய கலாநிதி நா.சுப்பிரமணியன் அவர்கள் இறுதியில் புலம்பெயர் தமிழ் இலக்கியத்தின் எதிர்காலம் பற்றி எழுத்தாளர்களான தேவகாந்தன் , ஜெயமோகன் ஆகியோர் முறையே 2000ஆம் ஆண்டிலும், 2010இலும் தெரிவித்த கருத்துகளையும் குறிப்பிட்டார். அத்துடன் அவர் எஸ்.பொ/ இந்திரா பார்த்தசாரதியால் தொகுத்து வெளியிடப்பட்ட ‘பனியும், பனையும்’ சிறுகதைத்தொகுப்பு பற்றியும் குறிப்பிட்டார். அத்தொகுப்பில் படைப்புகள் வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா என்று அன்றே குறிப்பிடப்பட்டிருந்ததை எடுத்துரைத்து, இன்று மீண்டும் அவ்விதமான பிரிவுகளை நோக்கித்தான் எமது புலம்பெயர் இலக்கியமும் சென்று கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
[Our previous series of articles on valluvar had created a great deal of interest among our readers, and we now publish a series of three articles by A.N.Kandasamy on what he regards as unique in Valluvar. The second and third installments of this series will be publsihed in the coming weeks. – EDITOR, Tribune]
The final impression that scholars and writers who write on Valluvar leave in the minds of their readers is that he is either an outstanding moralist of the stoic-philosopher type or a didactic poet on ethics. But to me this is a grossly wrong estimation of one of the great thinkers of the world, a secular philosopher with a unique outlook in many ways, not just an author of a few hundreds of ethical aphorisms, but how is it that this well-unintentioned, in fact adolatary under-estimation has gained such currency among writers and readers as well? Perhaps the fact that the early translators of Kural were Christian missionaries like the Rev.G.U.Pope and Rev.W.H.Drew has something to do with it.
It is the opening section of Thirukural ARAM or VIRTUE («Èõ) that has a appealed to these gentlemen as the cream of Valluvar’s thought. The Second and Third sections deal with Politics and Love respectively and the vocation of these translators must have had a limiting influence on their appreciation of these sections.
“merchants and pirates were for a long time one and the same person. Even today mercantile morality is really nothing but a refinement of piratical morality.”
When Nietzsche, the German philosopher, uttered these words in the nineteenth century, he was actually echoing the views of that kautiliya of Arthasastra held on the same matter about 2,250 years before him. For Kautiliya in his Fourth Book of the Arthasastra entitled the Removal of Thorns has devoted the entire second chapter of the book to the protection of the people from the avarice and trickeries of the trading classes. In fact the name of the chapter itself is Protection against Merchants. By the use of the carefully chosen word “Protection,” Kautiliya clearly suggests to us that he considers the merchant as an enemy of society and that people should be afforded protection against his onslaughts on them in the same way you provide protection against pestilences, famines and fire.
While one may hesitates to endorse either Kautiliya or Nietzsche completely in their considering the trader as an enemy of the people or a pirate, no one would disagree in classifying the hoarder, the blackmarketeer, the smuggler, the adulterator and the swindler who uses short weights and measures among them as No.1 enemies of the public and treat them as such. These public enemies become the more odious when they practice their hateful activities in the field of essential stuffs especially in the field of trade in food materials.
தமிழ்க்கவிதைகள் சங்ககாலத்திலிருந்து இன்று வரையில் பல்வேறு விடயங்களைப்பற்றி விபரித்திருக்கின்றன. சங்காலக்கவிதைகள் , காப்பியங்கள் பல அக்காலகட்டத்து நகர்களைப்பற்றிய தகவல்கள் பலவற்றைத்தருகின்றன. குறிப்பாக சிலப்பதிகாரம் அக்காலகட்டத்தில் புகழ்மிக்க கோநகர்களாக விளங்கிய காவிரிப்பூம்பட்டினம், மதுரை மற்றும் வஞ்சி பற்றி, அந்நகர்களில் வாழ்ந்த மக்கள் பற்றி, அவர்கள் ஆற்றிய பல்வேறு தொழில்கள் பற்றியெல்லாம் விரிவாகவே தகவல்களைத்தருகின்றது. அக்கால நகரங்களின் நகர வடிவமைப்பு பற்றி, வாழ்ந்த மக்கள் புரிந்த தொழில்கள் பற்றி, நடைபெற்ற விழாக்கள் பற்றி, பிற நாடுகளுடன் நடைபெற்ற வர்த்தக நடவடிக்கைகள் பற்றி.. என்று பல்வேறு வகைப்பட்ட தகவல்களை அவற்றின் மூலம் அறிந்துகொள்ளலாம். இதனைப்போல் அண்மைக்காலத் தமிழ்க்கவிஞர்களின் கவிதைகளில் நகரம் கூறு பொருளாக அமைந்துள்ளதா என்று சிறிது சிந்தனையையோட்டியதன் விளைவுதான் இக்கட்டுரை. இதுவொரு விரிவான ஆய்வல்ல. எதிர்காலத்தில் மேலும் பல படைப்புகளை ஆராய்ந்து காலத்துக்குக்காலம் விரிவுபடுததப்படுத்தக்கூடியதொரு ஆரம்பக்கட்டுரையே.
இக்கட்டுரைக்காக ஆராய்ந்த கவிஞர்களின் கவிதைகள் நகரங்களைப்பற்றி விபரிக்கையில் அங்கு வாழ்ந்த பல்வகைப்பட்ட மக்களைப்பற்றி, சமூக வாழ்க்கை முறைபற்றி, நகரங்கள் சூழலுக்கு ஏற்படுத்திய பாதிப்பு பற்றி, நகரங்களில் நிலவிய சமூக வாழ்வின் இயல்பினால் மனிதர்களின் உளவியலில் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி, அங்கு நிலவிய வர்க்கங்கள் மானுட வாழ்விலேற்படுத்தும் பாதிப்புகள் பற்றி, நகரச்சூழல் ஏற்படுத்தும் உடல் உபாதைகள் பற்றி, மானுட சமூகங்களுக்கிடையிலான முரண்பாடுகள் நகரத்தில் ஏற்படுத்திய போர்ப்பாதிப்புகளைப்பற்றி…. எனப்பல்வேறு விடயங்களை வெளிப்படுத்தி நிற்கின்றன. இவற்றை எடுத்துக்கொண்ட படைப்புகளினூடு இனங்காணுவதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.
“ஒருவன் என்னவாக இருக்க வேண்டும் என்பதை அவன் மனமோ அல்லது அவனின் அறிவோ தீர்மானிப்பதில்லை, அவனின் ஆன்மாதான் தீர்மானிக்கிறது” என்ற மகாபாரத தத்துவத்தை சமீபத்தில் படித்தேன். இந்தத்தத்துவத்தை நெஞ்சத்துக்கு நெருக்கமானவர்களுடன் ஒப்பிட்டுப்பார்க்கையில் அதிலிருக்கும் உண்மை புலப்படுகிறது. வயது செல்லச்செல்ல நெஞ்சத்துக்கு நெருக்கமானவர்கள் யார்…? என்ற தெரிவு எம்மையறியாமலேயே மனதிற்குள் உருவாகிவிடுகிறது. அவர்களில் பலருடைய மறைவு வெற்றிடத்தையும் தோற்றுவிக்கிறது. ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் காத்திரமான பங்களிப்புச்செய்தவரும் மூத்ததலைமுறை எழுத்தாளரும் சமூகப்பணியாளருமான அன்புமணி இரா . நாகலிங்கம் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் திகதி மறைந்தவுடன் கிழக்கிலங்கையில் மட்டுமல்ல எழுத்தாளர்கள் மத்தியிலும் ஒரு வெற்றிடம் தோன்றியதுபோன்ற உணர்வே வந்தது.
அவர் தமது வாழ்வில் என்னவாக இருக்கவேண்டும் என்று விரும்பினார்…? என்ற வினாவுக்குத் தேவைப்படும் பதில் அவரது வாழ்விலேயே இருந்தது. அவர் தமது அறிவை சமூகநலன்சார்ந்து பயன்படுத்தியவர். எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பணிகளுக்கு ஆதரவு வழங்கிய மட்டக்களப்பு பிராந்தியத்தின் செயலூக்கமுள்ள நால்வரைப்பற்றி நண்பர் பிரேம்ஜி அடிக்கடி சொல்வார். அவர்கள்: ரீ. பாக்கியநாயகம், எதிர்மனசிங்கம், செ.குணரத்தினம், அன்புமணி. இவர்களில் அதிகமாக எழுதிக்குவித்தவர் செ.குணரத்தினம். எதிர்மனசிங்கம் ஒருவகையில் எனது உறவினர். கலாசார உத்தியோகத்தராக பணியாற்றியவர். பாக்கியநாயகம் மட்டக்களப்பு எழுத்தாளர் சங்கத்தின் தூணாக விளங்கியவர். பாக்கியநாயகத்தையும் எதிர்மனசிங்கத்தையும் மட்டக்களப்பு கச்சேரிக்கு 1978 காலப்பகுதியில் சென்றபொழுது முதல் முதலில் சந்தித்தேன். அவ்வேளையில் மட்டக்களப்பை சூறாவளி கோரமாகத்தாக்கியிருந்தது. குணரத்தினம் அவ்வப்பொழுது வீரகேசரி வந்து செல்லும் படைப்பாளி. அதனால் அவர் இலக்கிய நண்பரானார். அன்புமணி பற்றி மல்லிகைஜீவா என்னிடம் சொன்ன காலத்தில் அவர் கிழக்கிலங்கையிலிருந்து மலர் என்ற இலக்கிய திங்கள் இதழை வெளியிட்டுக்கொண்டிருந்தார். கொழும்பு சென்றால் கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாகவிருந்த ராஜேஸ்வரி பவனில் இதர இலக்கிய இதழ்களுடன் மலர் இதழையும் வாங்கிவிடுவேன். மலர் தரமான இதழ். ஆனால், 1972 காலப்பகுதியிலேயே தனது ஆயுளை முடித்துக்கொண்டது.
யாமினி தன் நடன வாழ்க்கையைத் தொடங்கிய ஆரம்ப வருடங்களிலேயே, எவ்வளவு சிக்கலான தாளக் கட்டுகள் கொண்ட ஜதிகளாகட்டும், மிக அனாயாசமாக துரித கதியில் ஆடும் திறமை தனக்குண்டெனக் காட்டியவர் பின் வருடங்களில் அத்திறமை வளர்ந்து கொண்டுசென்றதைக் கண்டார். அது அவருடைய ஆளுமையின் ஒரு அம்சமாக விருந்தது. அவரது மெல்லிய மென்மையான தேகம் அவர் இஷ்டத்துக்கு சிறுத்தையென பாயும், தன் பலத்தைக் காட்ட விரும்பினால். தன் சலனத்தில் ஒரு அழகைக் காட்ட விரும்பினால், அந்தப் பாய்ச்சல் மானைப் போன்று ஒரு அழகு கொள்ளும். மானின் அழகான துள்ளலில் கவிதை காணும். யாமினி தன் நடனத்தில் இவற்றைப் பிரதிபலிக்கும் போது அவர் தன்னை வருத்திக்கொள்வதில்லை. வியர்த்து விறுவிறுத்து மூச்சிறைக்கும் காரியமாக இராது. தன்னை மறந்த நிலையின் உற்சாக வெளிப்பாடாகவே அது இருக்கும். இது அவரது நடன நிகழ்ச்சியின் புகைப்படங்களைப் பார்த்தால் தெரியும். அவரது சலனத்தில் ஒரு கண்ணிமைக்கும் நேரக் காட்சியே உறைந்து காணும் புகைப்படங்களில், யாமினியின் மகிழ்ச்சி ததும்பும் தோற்றமே பதிவாகியிருக்கும். அவரது முகத்தில் அயர்வின், களைப்பின் சுவடே காணமுடியாது அப்பதிவில். அவரது உற்சாகம் ததும்பும் சிருஷ்டி மனத்தின் ஜீவத் துடிப்பு தான் அவரது அயர்வற்ற நடனத்தை இயக்குகிறது. அதன் பின் மறைந்திருப்பது ஒரு அசாதாரண ஒழுங்கு, கட்டுப்பாடு, பின், நடனத்துக்கான அர்ப்பணிப்பு உணர்வு எலலாமே தான். இவையெல்லாம் தான் அவரது நடனக்கலையின் குணத்தை உருவாக்கியிருக்கின்றன. அவர் விரும்பினால், அவரது நடனம் மெதுவான இயக்கமும் பெறும். அது அவரது விருப்பத்தையும் நடனத்துக்கு தேர்ந்தெடுக்கும் பதத்தையும் பொருத்தது. தியாகராஜரின் “சாதிஞ்சினே …. ஓ.. மனஸா….”வுக்கு ஆடத்தொடங்கினால், அவரது ஆட்டம் விளம்ப அல்லது மத்திம காலத்துக்கு மாறும். “அதை நான் ஒரு சவாலாகவே எடுத்துக் கொள்வேன்.” என்கிறார் அவர். காரணம் அவரது தன்னியல்பான சலனம் துரித காலத்திலேயே வெளிப்பாடு பெறும். இதைச் சொல்லும் போது அவர் தனது உள்ளார்ந்த இயல்பையும், தேர்ந்த விருப்பையும் தன்னை மறந்து சொல்லிவிட்டார் என்றே சொல்லவேண்டும். பூணை மூட்டைக்குள்ளிருந்து வெளியே குதித்துவிட்டது. அவரது இயல்பானதும் விருப்பமும் துரித கதியில் தான். அவரது அரங்கேற்றத்தின் போதும் நடந்தது இது தான். அன்றிலிருந்து நாம் பார்த்து வந்த நடன நிகழ்ச்சிகள் எல்லாமே இதைத்தான் நமக்குச் சொல்கின்றன, ஒரு வேளை அவர் குரு எல்லப்ப பிள்ளையும், அவர் நடனம் பயின்ற பந்தநல்லூர் பத்ததியும் கூட காரணமாக இருக்கலாம்.. ஆனால், விளம்ப காலத்தில் இருக்கும் எதுவும் அவரது இயற்கைக்கும், இயல்புக்கும் விரோதமானது தான். ஆனால், அவரால் அதையும் ஏற்று, தடையில்லாது, பிசிரற்று, தடுமாற்றம் இல்லாது ஆடிவிடமுடியும்.
“வார்த்தைக்கு தவமிருந்து
வரப்பெற்றவையல்ல
என்கவிதைகள்
பூமி பிளக்க விரைந்தெழும்பும்
விதைகள் போலுமல்ல
அதன் வார்ப்பு
அக்கா படிப்பதுபோல்
அம்மா சமைப்பதுபோல்
காற்றிற்கு நெற்பூக்கள் மடங்குவதுபோலும்
நானும் செய்கிறேன்
எனக்குத்தெரிந்ததை
ஒருவேளை
அவை கவிதைகளாயிருக்கலாம்”
சே. பிருந்தா
கவிதை என்ற புதுவனத்திற்குள் நான் நுழையக்காரணம் ஊருக்குள்ளே நடந்த குருகுலம்தான். அங்கேதான் நான் தட்சணை கொடுக்காமல் இலக்கியம் கற்றேன். முன்பு சொன்னதுபோல் ஒரு இலக்கியவட்டம் “தானா” என நாங்கள் அழைக்கும் உறவினர் தங்கவேல் தலைமையில் இயங்கினோம். தங்கவேல் எனும் பெயரில் உள்ள அந்த ‘த’ என்ற எழுத்தை நாங்கள் ‘தானா’ என்றழைப்போம். செட்டிநாட்டில் ‘லேனா’, என்று அழைப்பதுபோல் நாங்கள ‘தானா’ என்றழைப்போம். அவர் புலவருக்குப் படித்தவர். நாங்கள் மாலைப்பொழுதை விளையாட்டில்தான் கழிப்போம். பகல் பொழுதை பேசித்தான் தீர்ப்போம். இங்கேதான் புலவர் “தானா” அவர்களின் பங்கு அதிகம். “கற்றலில் கேட்டலே நன்று” என்பது எவ்வளவு உண்மை. ‘தானா’ அவர்கள் கேட்டது அதிகம். ‘தானா’ அவர்கள் படித்தது அதிகம். அவையெல்லாம் எங்களுக்குத் தானாகவே கிடைத்தது. எங்களூரில் எங்களுக்குக்கிடைத்த முதல் நூலகமே அவர்தான். எனக்குக்கிடைத்த முதல் இலக்கிய நூலும் அவர்தான். எங்கள் ஊரில் நூலகமில்லை. இலக்கிய அமைப்பு இல்லை. இலக்கியக்கூட்டங்களும் கிடையாது. இந்த நிலையிலிருந்து நான் கவிதையோடு நெருங்கிப்பழக, கவிதையோடு உறவுகொள்ள, கவிதையின் முகவரியைத் தெரிந்துகொள்ள காரணமாக இருந்த காரணங்களுள் “தானா” க்கு முதலிடம் . அவர்கேட்ட; படித்த இலக்கியச்செய்தியை சொன்னபாங்கு என்னைகவர்ந்தது. புகழ்பெற்ற பேச்சாளர்கள் எப்படிப்பேசுவார்கள், என்னன்ன பேசினார்கள் என்பதை அவர்சொல்ல நாங்கள் கேட்போம்.
கம்பனுக்கு ஒரு சடையப்ப வள்ளலும் – கார்ல் மார்க்ஸ_க்கு ஒரு ஏங்கல்ஸ_ம் இருந்தமையால் காவியத்திலும் – காலத்திலும் மானுடம் மேன்மையுற்றது என்பார்கள். இலங்கையில் 1970 இற்குப்பின்னர் இலக்கிய வளர்ச்சிக்கு இலக்கியம் படைக்காமலேயே அளப்பரிய சேவைகள் புரிந்தவர்களாக சிலர் எம்மால் இனம் காணப்பட்டனர். அவர்களில் ஓட்டப்பிடாரம் ஆ. குருசாமி, எம். ஏ. கிஷார், ரங்கநாதன் ஆகியோரின் வரிசையில் போற்றப்படவேண்டியவர் துரை. விஸ்வநாதன் அவர்கள். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் இயங்கு சக்திகளாகவும் மல்லிகை கலை இலக்கிய மாசிகைக்கு பக்கபலமாகவும் இவர்கள் திகழ்ந்தார்கள். 1990 களில் மல்லிகை ஜீவா கொழும்புக்கு இடம்பெயர்ந்தபொழுது அவரதும் மல்லிகையினதும் எதிர்காலம் கேள்விக்குறியானது. ஆனால் – விரைவிலேயே ஆச்சரியக்குறியாக்கியவர் துரைவி என எம்மவர்களினால் அன்புடன் அழைக்கப்பட்ட துரை விஸ்வநாதன் அவர்கள். தமது வாழ்நாள் முழுவதும் கலை, இலக்கிய ரசிகராகவே இயங்கி மறைந்த துரைவியின் இழப்பு ஈழத்து இலக்கிய வளர்ச்சிப்பாதையில் ஈடுசெய்யப்பட வேண்டிய பாரிய இழப்பாகும். துரைவி அவர்கள் தினகரன் பத்திரிகையில் ராஜ ஸ்ரீகாந்தன் ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் நடத்தப்பட்ட சிறுகதைப்போட்டிக்கு ஒரு இலட்சத்து ஒரு ரூபாய் வழங்கி ஊக்குவித்த பெருந்தகை. மலையக இலக்கியவாதிகளுக்கும் மலையக இலக்கிய ஆய்வுகளுக்கும் ஆதர்சமாகத்திகழ்ந்தவர்.
கடலும் கடல் சார்ந்த நிலமும் நெய்தல் என சங்க இலக்கியங்களில் சொல்லப்படுகின்றது. இலங்கையில் மேற்குக்கரையில் இந்து சமுத்திரத்தை அணைத்தவாறு விளங்கும் கடற்கரை நகரம் நீர்கொழும்பு. ஐதீகக்கதைகளும் வரலாற்றுச்சிறப்பும் மிக்க இந்நகரில் வாழ்ந்த மூத்தகுடியினர் தமிழர்கள். அவர்களினால் 1954 இல் விஜயதசமியின்பொழுது 32 குழந்தைகளுடன் தொடங்கப்பட்ட பாடசாலையே இன்று வடமேற்கில் கம்பஹா மாவட்டத்தில் ஒரே ஒரு இந்து தமிழ் மத்திய கல்லூரியாக விளங்கும் விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி. இதன் ஸ்தாபகர் எஸ்.கே. விஜயரத்தினம் நீர்கொழும்பில் நகரபிதாவாக (மேயர்) விருந்த தமிழராவார். தமிழ் மக்களின் பண்பாட்டுக்கோலங்களுடன், வரலாற்றுச்சுவடுகளுடன் வெளிநாட்டு உல்லாசப்பயணிகளையும் கவரும் இந்நகருக்கு அருகாமையிலேயே சர்வதேச விமான நிலையம் கட்டுநாயக்காவில் அமைந்துள்ளது. கல்லூரி 1954 இல் ஆரம்பப் பாடசாலை தரத்திலிருந்தபொழுது முதல் மாணவனாக இணைத்துக்கொள்ளப்பட்டவரும் தற்பொழுது அவுஸ்திரேலியாவில் வதியும் படைப்பிலக்கியவாதியும் ஊடகவியலாளரும் சமூகப்பணியாளருமான லெ. முருகபூபதி விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் 60 வருட நிறைவு வைரவிழாவை முன்னிட்டு தொகுத்து வெளியிட்டுள்ள நெய்தல் – நீர்கொழும்பு வாழ்வும் வளமும் நூல் நீர்கொழும்பில் அண்மையில் சிறப்பாக வெளியிடப்பட்டது.
தென்னிலங்கையின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் மிக முக்கியமான எழுத்தாளராக விளங்கும் திக்வல்லை கமால் அவர்கள் தமிழ் இலக்கிய உலகில் தனது பெயரை ஆழப்பதித்தவர். சாஹித்திய விருதுகள் உட்பட பல பரிசுகளை பெற்றுள்ள இவர், சிறுகதைகள், இலக்கியக் கட்டுரைகள், நாவல்கள், கவிதைகள், வானொலி நாடகங்கள், சிறுவர் இலக்கியங்கள் போன்ற துறைகளில் முனைப்புடன் செயல்பட்டு பல நூல்களை இலக்கிய உலகுக்கு தந்துள்ளார். அதுபோல் மொழியெர்ப்பு துறைகளிலும் ஈடுபட்டு பல நூல்களை பெயர்ப்பு செய்துள்ளார்.
திருமணம் என்பது ஆடம்பரத்துக்காகவும், புகழுக்காகவும் நிகழ்த்தப்படும் காலம் இது. யதார்த்தங்களைத் தொலைத்துவிட்டு மாயையகளுக்குள் ஒளிந்து கொள்ளவே பலரும் பிரியப்படுகின்றனர். சமகால நிகழ்வுகளின் ஓட்டத்தில் காசு பறிக்கும் ஒரு தொழிலாகவே திருமணத்தைப் பார்க்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது. இத்தகைய சூழ்நிலையில் சராசரி ஆண்களில் இருந்தும் மாறுபட்டு பெண் வீட்டிலிருந்து ஒரு சதமும் சீதனம் எடுக்காமல் அல்லாஹ்வுக்காக என்ற எண்ணத்துடன் திருமணம் முடிக்கும் கரீம் மௌலவி பற்றிய கதைப் பிண்ணனிதான் வீடு என்ற இந்த நாவல்.
வீடு என்ற ஒற்றை வார்த்தையில் ஒரு தனிமனிதனின் போராட்ட வாழ்க்கை மிக அழகாக அற்புதமாக இந்நாவலில் சித்தரிக்கப்பட்டுள்ளது. நமது சமூகத்தைப் பொறுத்தளவில் மௌலவி என்பவர்கள் வசதி வாய்ப்பற்றவர்கள்.. நன்றாக படிக்காதவர்கள் என்ற எண்ணப்பாடு அதிகமாக காணப்பட்ட போதிலும், அல்லாஹ்வின் தீனைக் கற்றவர்கள் என்ற அந்தஸ்து உரியவர்களுக்கு வழங்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றது.