உயிரியக்கம் ஓசையால் உறவாடுகிறது. புலன் உணர்வுகளின் வெளிப்பாடுகள் அனைத்துமே ஒருவகையில் பேச்சின் உட்பிரிவுகள்தாம். நமது பார்வைக்கும் உறவுக்கும் ஓசையும் மொழியும் தரும் உருமாற்றம் ‘பேச்சு’. மொழியைக் குழைத்தும் பிசைந்தும் கிடைக்கிற பேச்சுக்கு இலக்கியம் ஓர் நிரந்தர பிம்பத்தை ஏற்படுத்தித் தருகிறது பேச்சு செயல்பட சில அத்தியாவசியப் பொருட்கள் தேவை.ஓசை, உச்சரிப்பு, தொனி, கால பிரமாணம், பேசுபவர் கேட்பவர் இருவருக்குமிடையேயான உறவு, பேச்சில் தொடர்புடைய இரு மனிதர்களின் தகுதரம், இடங்கள் (உதாரனத்திற்கு நேருக்கு நேரா, ஆளுக்கொரு திசையில் இருந்துகொண்டா?) பேச்சுக்கு பேசுகின்ற நபரின் தேவை எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அள்விற்கு கேட்பவர் என்று ஒருவர் வேண்டும் இல்லையேல் அப்பேச்சால் எவ்வித பயனுமில்லை. நட்போ பகையோ இரண்டிற்கும் பேச்சு வேண்டும். எண்ணத்தை ஓசையுடன் பகிர்ந்து கொள்ள பேச்சு உதவும், அதே எண்ணத்தை மௌனமாக பகிர்ந்துகொள்ள எழுத்து உதவும். பேச்சு மொழி கேட்கும் தருணத்தில் மட்டுமே செயல்படமுடியும், மாறாக எழுத்து வடிவ பேச்சு எழுதிய தருணத்தைக் கடந்து நிற்கும். எடுத்துரைப்பில் பேச்சு தவிர்க்கமுடியாததொரு தனிமம். எடுத்துரைப்பு குறித்த பேராசிரியரின் திறனாய்வு கட்டுரைகளில் எட்டாவது அத்தியாயத்தில் பேச்சும், அதனைத் தொடர்ந்து பனுவல் வாசிப்பும் இடம்பெற்றுள்ளன
வீரகேசரியில் பணியாற்றிய காலத்தில் அடிக்கடி நான் செய்திகளில் எழுதும் ஊரின் பெயர் மூதூர். ஒரு காலத்தில் இரட்டை அங்கத்தவர் தொகுதி. தமிழர்களும் முஸ்லிம்களும் புட்டும் தேங்காய் துருவலும் போன்று ஒற்றுமையாக வாழ்ந்த பிரதேசம். அரசியல் இந்தத்தொகுதியை சின்னாபின்னப்படுத்தியிருக்கிறது. தமிழ் – முஸ்லிம் அரசியல் தலைவர்களும் அப்பாவி பொது மக்களும் அதிக அளவில் கொல்லப்பட்டிருக்கின்றனர். பல தமிழ்க்கிராமங்கள் இந்த ஊரை அண்மித்திருக்கின்றன. மூதூருக்கு படகில் செல்லவேண்டும் என்றெல்லாம் சிலர் சொல்லக்கேட்டுள்ளேன். ஆனால், நான் இலங்கையிலிருந்த காலப்பகுதியில் திருகோணமலைக்கோ அதன் அயல் ஊர்களுக்கோ சென்றதில்லை. அதற்கான சந்தர்ப்பங்களும் கிடைக்கவில்லை. 1965 இல் பாடசாலை சுற்றுலாவிலும் 1978 இல் சூறாவளியின் பொழுதும்தான் மட்டக்களப்பை தரிசித்தேன். இலங்கையில் பார்க்கத்தவறிய தமிழ் ஊர்களும் தமிழ்க்கிராமங்களும் ஏராளம். மன்னார், திருக்கேதீஸ்வரம், திருகோணமலை, மூதூர் என்பனவும் முன்னர் எனது தரிசனத்துக்கு கிட்டவில்லை. 1984 இல் தமிழ்நாட்டுக்கு இராமேஸ்வரம் வழியாக சென்றவேளையிலும் மன்னார், தலைமன்னார் ரயில் நிலையங்களைத்தான் கடந்திருக்கின்றேனே தவிர அந்தப் பிரதேசங்களுக்குள் சென்று உலாத்திவிட்டு வருவதற்கு சந்தர்ப்பமே கிடைக்கவில்லை. எனினும் – குறிப்பிட்ட தமிழ்ப்பிரதேசங்களை பார்க்கத்தவறிய ஏக்கம் மனதில் நீண்டகாலம் இருந்தது. அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து வந்து 2009 இல் போர் முடிவுக்கு வந்தபின்னரே 2010 இற்குப்பின்னர் மேற்சொன்ன தமிழ் ஊர்களுக்கும் கிராமங்களுக்கும் பயணித்துவருவதற்கான வாய்ப்பு கிட்டியது.
மதிப்பிற்குரிய பதிவுகள் ஆசிரியருக்கு, மாதொருபாகன் கதையைப் பதிவிறக்கம் செய்து வாசித்தேன். எழுத்தாளரை ஒடுக்க நினைக்கும் போக்கிற்குக்கண்டனம் தெரிவிக்க வேண்டியது அவசியம். அதே சமயம், கதை குறித்த எதிர்மறைக் கருத்துகள் கட்டாயம் எழும்தான். ஊரைக் குறிப்பிட்டு ஒரு சர்ச்சைக்குரிய விஷயத்தை எழுதும்போது சம்பந்தப்பட்ட ஊர் மக்களுக்கு எழும் அக,புற பாதிப்புகளை நம்மால் முன்கூட்டியே ஊகித்துக்கொண்டு அதற்கேற்ப எழுத்தை வடிவமைத்துக்கொள்ள முடியாதா? இல்லை, பெண் சிசுக் கொலை போல் இத்தகைய வழக்கம் இன்னமும் சில இடங்களில் குழந்தையில்லா தம்பதிகளின் உறவினர்களின் தொல்லையால் தொடருகிறதென்றால் அதை தைரியமாக எதிர்த்து எழுத வேண்டும்.
ஆசிரியருக்கு இந்த விஷயத்தை எழுதும்படியான தூண்டுதல் எழுந்தது எதனால் என்பது அவருக்குத் தான் தெரியும். பல்வேறு காரணங்களால் அவர் வெளியிடத் தயங்கும் ஏதோ வொரு விஷயம் அவரை அலைக்கழித்திருக்கிறது என்று தோன்றுகிறது. கதை மேம்போக்காக, இந்துக்கடவுளர்களை மதிப்பழிப்பதற்காக எழுதப்பட்டதாகத் தெரியவில்லை. [பொன்னா திருவிழாவுக்குப் போகும் சமயம் நடக்கும் கூத்து நிகழ்வில் கோமாளியின் பேச்சில் கடவுளர்கள் கேலிசெய்யப்படுகிறார்கள். என்றா லும்] சொல்லப்போனால், மாதொருபாகன் என்ற கதைத் தலைப்பை ONE PART WOMAN என்று ஆங்கிலத்தில் கொச்சையாக [பரபரப்பிற்காகவா?] மொழிபெயர்த்திருப்பதுதான் அந்த வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறது. அர்த்தநாரீஸ்வரம் என்பதன் தமிழ் மொழிபெயர்ப்பான மாதொருபாகனை,, ஆண்மையும் பெண்மையும் சரிசமவிகிதத்தில் அமையப்பெற்ற நிலையை இப்படி மொழிபெயர்த்திருப்பது சரியா? மொத்த மொழியாக்கம் எப்படியிருக்கிறது என்று இனிதான் பார்க்க வேண்டும்.
சுபகாரியம் சீக்கிரம் என்பார்கள். சுபகாரியம் மட்டுமல்ல – எந்தக்காரியத்தையும் தாமதிக்காமல் உரியவேளையில் செய்யத்தவறிவிட்டால் அதற்கான பலனையும் அடைய முடியாமல் போய்விடும் என்பதும் நிதர்சனமான உண்மை. பல மாதங்களுக்கு முன்னர், எனது அக்காவின் சம்பந்தியான ஸ்ரீஸ்கந்தராஜா அண்ணா, என்னிடம் மரம் மாந்தர் மிருகம் என்ற நூலைத்தந்து, தனது ஆசான் பொ. கனகசபாபதி அவர்கள் எழுதியது என்றார். அவர் எப்பொழுதும் நல்ல விடயங்களை எனக்கு அறிமுகப்படுத்துபவர்.அத்துடன் நல்ல இலக்கிய ரசிகர். யாழ்.மகாஜனா கல்லூரியின் பழையமாணவர். இக்கல்லூரியின் பல பழையமாணவர்கள் கலை, இலக்கியவாதிகளாகவும் ஊடகவியலாளர்களாகவும் இருப்பதாக அறிவேன். மகாஜனா கல்லூரியில் விஞ்ஞானப்பட்டதாரி அதிபராக பணியாற்றியவர் கனகசபாபதி. மரம் மாந்தர் மிருகம் நூலை கையில் எடுத்தவுடன், மரங்களின் தன்மைகளைப்பற்றிய பட்டியல் தரும் நூலாக இருக்குமோ…? என்ற எண்ணத்திலேயே நூலைப்படித்தேன். ஆனால், அதனைப்படிக்கும்பொழுது எனக்குள் ஆச்சரியங்கள் மலர்ந்தன. தனது வீட்டில் பெற்றவர்களினால் வளர்க்கப்பட்ட மற்றும் தானாகவே வளர்ந்துவிட்ட மரங்கள், செடி, கொடிகள் வீட்டு மிருகங்கள் என மரங்களையும் மிருகங்களையும் அவற்றை வளர்த்த மாந்தர்களின் மகிமைகள் பற்றியும் நாம் அறியத்தவறிவிட்ட பல அரிய தகவல்களுடன் நூலை எழுதுகிறார் கனகசபாபதி.
[ வாசித்தவை, யோசித்தவை, வாசித்து யோசித்தவை எனப்பல்வேறு விடயங்களையும் உள்ளடக்கியது இந்த ‘வாசிப்பும், யோசிப்பும்’ பகுதி. – பதிவுகள். ]
அன்று ரணில் பிரதமராக இருந்தபோது ஏற்பட்ட ‘சமாதானப் பேச்சு வார்த்தைகள்’ அன்று நிறைவேற்று அதிகாரங்கள் கொண்ட ஜனாதிபதியாக விளங்கிய சந்திரிகா குமாரதுங்க அம்மையாரால் நிறைவேற்ற முடியாமல் செய்யப்பட்டது. இன்று ஆட்சி மாறி மீண்டும் பிரதமராக ரணில்…. சந்திரிகா குமாரதுங்கவோ எந்தவித அதிகாரங்களுமற்ற முன்னாள் ஜனாதிபதி. ஆனால் அவர் ரணிலுடன் கூட்டுச்சேர்ந்திருக்கின்றார். அன்று சமாதான உடன்படிக்கையைச் சீர்குலைத்து மகிந்த ராஜபக்சவை ஆட்சிக்கட்டிலில் ஏற வழி வகுத்த அவர். இன்று மகிந்தாவைப் பதவியை விட்டே ஓட வியூகம வகுத்து வெற்றியும் அடைந்திருக்கின்றார். இன்று ஜனாதிபதியாக எதிர்கட்சியின் தலைவரான மைத்திரிபால சிரிசேன. இருக்கிறார்.
அன்று ஏற்பட்ட சமாதான உடன்படிக்கை சீர்குலைந்ததால் ஏற்பட்ட விளைவு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் வந்து முடிந்தது. அத்துடன் விடுதலைப்புலிகள் தங்கள் ஆயுதங்களையும் மெளனிக்க வைத்தது.
I do not agree with what you have to say, but I’ll defend to the death your right to say it. – Voltaire
பெருமாள் முருகனின் கருத்துகளை நாம் ஏற்கலாம் அல்லது ஏற்காமலிருக்கலாம். ஆனால் அவரது கருத்துகளைத் தர்க்கரீதியாக எதிர்கொள்ள வேண்டுமே தவிர அவரது எழுத்தின்மேல் வன்முறையினைப் பிரயோகிக்க யாரையும் தூண்டக்கூடாது. அவரது கருத்துகளைக்கூறும் அவரது அடிப்படை உரிமையினை மதிக்கும் அதே சமயம், அவரது கருத்துகளைத் தர்க்க ரீதியாக எதிர்வு கொள்ளும், அமைதியான வழிகளில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாற்றுக்கருத்தாளர்களினது உரிமையினையும் மதிப்போம். கருத்தை கருத்துரீதியாக எதிர்கொள்ளாமல், எழுத்தாளர் ஒருவரின்மேல் வன்முறையினைப் பிரயோகிப்பது அல்லது தூண்டிவிடுவது, அனைவராலும் எதிர்க்கப்பட வேண்டியது. தர்க்கரீதியாக படைப்புகளை அணுகுங்கள்; உணர்ச்சிவெறியூடாக ஒருபோதுமே அணுகாதீர்கள். எழுத்தாளர் ஒருவரின் படைப்புச் சுதந்திரம் முக்கியமானது’ மதிக்கப்பட வேண்டியது. அதே சமயம் எழுத்தாளரொருவர் இவ்விதமான எதிர்ப்புகளைக் கண்டு தளர்ந்து விடுவதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
சரியாக இருபது வருடங்கள் ஆகப்போகின்றன. இமையத்தின் எழுத்துடன் முதல் பரிச்சயம் நிகழ்ந்து. கோவேறு கழுதைகள் நாவல் இமையத்தின் எழுத்துடனான முதல் பரிச்சயத்தைத் தந்தது. தலித் சமூகத்திடமிருந்து இன்னம் ஒரு சிறப்பான எழுத்தின் வருகையைக் கண்டு எனக்கு மிகுந்த உற்சாகமும் மகிழ்ச்சியும். வெகுஜன கவர்ச்சியை மீறி தனித்தடம் ஒன்று தனக்கென வகுத்துக்கொண்டு தம் பயணத்தைத் தொடங்கியவர்கள் கணிசமாக வந்துகொண்டிருந்த காலம் அது, கவனிக்கப் பட்டுக்கொண்டிருந்த கால கட்டமும்/. தன்னை ஸ்திரப்படுத்திக்கொண்ட கால கட்டம். ஆனால் வெகு ஜன கவர்ச்சியை ஒதுக்கியது ஒன்று தான் அவர்களை ஒன்று படுத்தியதே தவிர, அதில் உரத்த கோஷங்களும், பிரசாரமும், மிகைப் படுத்தல்களூம், கொள்கைகளே அனுபவங்களாக உருவாக்கப்பட்டவையாகவும் இருந்தவை ஒரு சுவடாகவும், இன்னொரு சுவடு இதுவரை சொல்லப்படாத அனுபவங்களுக்கு எழுத்துரு கொடுக்கப்பட்டனவாகவும், வரத் தொடங்கின. இந்த இரண்டாம் சுவட்டில் தான் பூமணி, சிவகாமி, சோ தருமன் போன்றோருடன் இமையமும் சேர்ந்து கொண்டது தெரிந்தது.
மகாபாரதம், இராமாயணம் ஆகிய இரண்டும் உலகம் போற்றும் உயர்ந்த இதிகாசங்களாகும். மகாபாரதம் இராமாயணத்தைவிடப் பெரியது. அதில் சுமார் முப்பதாயிரம் (30,000) பாடல்கள் உள்ளன. வியாச மகரிசி அவர்களால் மகாபாரதம் எழுதப்பட்டது. இந்நூல் எழுந்த கால எல்லையைக் கணக்கிட்டுக் கூறமுடியாது. ஆனாலும் மகாபாரதம் கி.மு. 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட நூலென்று சிலர் கருத்துரைப்பர். வியாசர் பாரதத்தைத் தழுவித் தமிழில் முதன் முதலில் எழுந்த காப்பியம் வில்லிபுத்தாழ்வாரால் இயற்றப்பட்ட வில்லி பாரதம் ஆகும். இதையடுத்து, ‘நல்லாபிள்ளை பாரதம்’, பாரதியாரின் ‘பாஞ்சாலி சபதம்’, மூதறிஞர் ராஜாஜியின் ‘வியாசர் விருந்து’, பல்கலை அறிஞர் ”சோ’ அவர்களின் ‘மஹாபாரதம் பேசுகிறது’, திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகளின் ‘மகாபாரதம்’, அறிஞர் அ. லெ. நடராசன் அவர்களின் ‘மகாபாரதம்’, சுவாமி சித்பவானந்தர் அவர்களின் ‘மகாபாரதம்’, பேராசிரியர் ஜெ. ஸ்ரீசந்திரன் அவர்களின் ‘மகாபாரதம் உரைநடையில்’ ஆகிய நூல்களும் எழுந்தன.
சகோதரர்களான கௌரவர் குடும்பத்துக்கும், பாண்டவர் குடும்பத்துக்கும் இடையில் தோன்றிய குடும்பப் பிரச்சினைகள் பெரும் யுத்தமாக உருக்கொண்டு பதினெட்டு நாட்கள் மகாபாரதப் போர் நடந்தது. அப்போரில் பதினெட்டு அக்ரோணிப் படைவீரர்கள் (முப்பத்தொன்பது இலட்சத்து முப்பத்தாறாயிரத்து அறுநூறு – 39,36,600) பங்கேற்று, அதில் பத்துப் பேர் தவிர மற்றைய அனைவரும் இறந்துபட்டனர். இறுதியாகப் பாண்டவர்கள் வெற்றி பெற்றுத் தருமர் முடிசூடி அத்தினாபுரத்தைத் தன் சகோதரரான பீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகியோருடன் ஆட்சி புரிந்து வந்தான். அத்தினாபுரத்து மக்களும் மகிழ்ச்சியில் மூழ்கி இன்புற்று வாழ்ந்து வந்தனர்.
இலங்கையின் மூத்த கவிஞரும் விமர்சகருமான நுஃமான் அவர்களுக்கு 70 வயது என்பதை அறிந்து முதலில் எனது நல்வாழ்த்துக்களை அவருக்குத் தெரிவித்துக்கொண்டே இந்தப்பதிவை எழுதத்தொடங்குகின்றேன். நுஃமான் தொழில் ரீதியில் பணியாற்றிய கல்வித் துறையில் எவ்வாறு படிப்படியாக உயர்ந்து இன்று தகைமைசார் பேராசிரியராக விளங்குகிறாரோ அவ்வாறே தாம் சார்ந்த இலக்கியத்துறையிலும் படிப்படியாக உயர்ந்து பலருக்கும் முன்மாதிரியாகியிருப்பவர். அவர் கவிஞர், விமர்சகர், ஆய்வாளர், மொழியியல் அறிஞர், பேராசான், பதிப்பாளர் முதலான பன்முகம் கொண்டவர். இலக்கியப்பிரவேசத்தில் அவர் ஆரம்பத்தில் சிறுகதைகளும் எழுதியிருக்கிறார் என்பதை அறியமுடிகிறது. பின்னாளில் ஆளுமையுள்ள விமர்சகராகத் தோற்றம் பெற்ற பலர் ஆரம்பத்தில் சிறுகதைகள்தான் எழுதியிருக்கின்றனர் என்பது தகவல். அந்த வரிசையில் கைலாசபதி – தொ.மு.சி ரகுநாதன் ஆகியோரையும் குறிப்பிடலாம்.
நுஃமான் பிறந்த ஆண்டு 1944 என்பது மாத்திரமே தெரிந்த நிலையில் அவரது வாழ்க்கைப்பின்புலம் பற்றிய எதுவித தகவலும் இற்றைவரையில் எனக்குத் தெரியாது. அவரை முதன் முதலில் கொழும்பில் இலக்கியசந்திப்புகளிலும் – பின்னர் அவர் ஆசிரியராக பணியாற்றிய கொழும்பு அல்.ஹிதாயா வித்தியாலயத்திலும் சந்தித்தேன். எனது நினைவுக்கு எட்டியவரையில் 1972 காலப்பகுதியில் அவரை ஒரு பாடசாலை ஆசிரியராகவும், அதேசமயம் இலக்கிய விமர்சகராகவும் பார்த்தேன். அவரை கவிஞன் என்ற கவிதைக்காக கிழக்கிலங்கையில் (1969 -1970) வெளியான இதழின் இணை ஆசிரியராகவும் மகாகவி உருத்திரமூர்த்தியின் சில நூல்களை பதிப்பித்த பதிப்பாளராகவும் தெரிந்துகொண்டிருந்தேன்.
அப்போது ஜேவிபி கிளர்ச்சிக்காலம். 1971ஆம் ஆண்டு. சரத்ஹாமு தென்னிலங்கையிலே ஹக்மண என்ற ஊரில் வாழ்கின்ற தனவந்தர். ஊர் மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயர். கௌரவமாக வாழும் குடும்பம். சரத்ஹாமுவின் மனைவி உள்ளூர் பாடசாலை ஒன்றில் ஆசிரியையாக இருக்கிறார். ஒருநாள் அந்தப்பாடசாலையில் இன்னொரு ஆசிரியையும் இணைகிறார். அந்த ஆசிரியை அண்மையில் அந்த ஊருக்கு மாற்றலாகி வந்திருக்கும் இன்ஸ்பெக்டர் சமரநாயக்காவின் மனைவி. நாளடைவில் இரண்டு ஆசிரியைகளும் நண்பிகளாகிவிடுகிறார்கள். தினமும் பாடசாலை முடிந்தபின் மனைவியை ஜீப்பில் அழைத்துப்போகவரும் இன்ஸ்பெக்டர், அந்த தனவந்தரின் மனைவிக்கும் லிப்ட் கொடுக்க ஆரம்பிக்கிறார். ஒருநாள் அப்படி இறக்கிவிடும்போது உள்ளே போய் ஒரு டீயும் குடிக்கிறார். இன்ஸ்பெக்டர் குடும்பமும் தனவந்தர் குடும்பமும் நட்பு கொள்கிறது. டீ குடிக்க தினமும் இன்ஸ்பெக்டர் வரத்தொடங்குகிறார். தனவந்தர் இல்லாத டைம் பார்த்தும் வரத்தொடங்குகிறார். இன்ஸ்பெக்டரின் சரளமான ஆங்கிலம், மிடுக்கான சீருடை. கம்பீரம். சரத்ஹாமுவின் மனைவியின் அழகு. சிரிப்பு … இப்படி பல காரணங்கள். இன்ஸ்பெக்டருக்கும் சரத்ஹாமுவின் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு உருவாகிறது. இன்ஸ்பெக்டரின் கண் சரத்ஹாமுவின் மனைவிமீது மட்டுமல்ல. சொத்திலும்தான். சரத்ஹாமுவை கொலை செய்துவிட்டு சொத்தையும் மனைவியையும் நிரந்தரமாக சுருட்டலாம் என்பது அவருடைய எண்ணம். ஜேவிபி பெயராலே கொலை செய்தால் யாருக்கும் எந்த சந்தேகமும் வராது. பக்காவாக திட்டம் திட்டி, ரவுடிகளை அனுப்பி தனவந்தரை கொலை செய்தும் விடுகிறார். கொலை செய்யப்போன ரவுடி இலவச இணைப்பாக சரத்ஹாமுவின் மனைவியை பாலியல் வல்லுறவும் செய்துவிடவே பிரச்சனை சிக்கலாகிவிடுகிறது. எப்படியே இன்ஸ்பெக்டர் சாட்சிகளை மடக்கி, ஜேவிபி மீது பழியினைப்போட்டு தப்பி விடுகிறார்.