வாசிப்பும், யோசிப்பும் 63: எம்.வி.வி’யின் ‘வேள்வித் தீ’ பற்றிச் சில அறிமுகக் குறிப்புகள்….

வாசிப்பும், யோசிப்பும் 63: எம்.வி.வி'யின் 'வேள்வித் தீ' பற்றிச் சில அறிமுகக் குறிப்புகள்....எம்.வி.வெங்கட்ராம்அண்மையில் எம்.வி.வெங்கட்ராமின் ‘வேள்வித் தீ’ வாசித்தேன். காலச்சுவடு வெளியீடாக வெளிவந்துள்ள நாவலிது. மணிக்கொடி எழுத்தாளரான எம்.வி.வெங்கட்ராம் தமிழ் இலக்கிய உலகின் முக்கிய படைப்பாளிகளிலொருவர். எம்.வி.வெங்கட்ராம் அப்பாவுக்குப் பிடித்த எழுத்தாளர்களிலொருவர். எழுபதுகளில் ஆனந்த விகடனில் மாத நாவலென்றொரு தொடர் வெளிவந்துகொண்டிருந்தது.  அதில் பல எழுத்தாளர்களின் மாத நாவல்கள் தொடராக வெளிவந்தன. நான்கு அல்லது ஐந்து அத்தியாயங்களில் முடியும் தொடர்களவை. அம்மாத நாவல்களிலொன்றினை எம்.வி.வெங்கட்ராம் எழுதியிருந்ததாக நினைவு. அத்தொடர் கோபுலுவின் ஓவியங்களுடன் வந்ததாகவும் நினைவு. அம்மாத நாவலின் பெயர் ‘தேவி மகாத்மியம்’ என்றிருந்ததாகவும் ஞாபகம். அந்நாவலினை அப்பா விரும்பி வாசித்ததாகவும் ஞாபகம். ஆனால் நான் அந்நாவலை வாசித்ததாக ஞாபகமில்லை என்றுமொரு ஞாபகம். அவ்விதம்தான் எனக்கு எம்.வி.வெ’யின் அறிமுகம் ஏற்பட்டதாகவும் ஞாபகம். அண்மையில் எம்.வி.வெ’யின் ‘வேள்வித்தீ’ நாவலை வாசித்தபொழுது எம்.வி.வெ பற்றிய , ஆழ்மனதில் ஆழ்ந்து கிடந்த மேற்படி ஞாபகப்பறவைகளெல்லாம் மெல்ல மெல்லச் சிறகடித்து மன வானில் பறக்க ஆரம்பித்தன.

Continue Reading →

பதிவுகளில் அன்று: அம்மூடனார் பக்கம்! – முடமூளை அம்மூடனார் –

ammuudanar5.jpg - 10.85 Kb– ஏப்ரில் 2003  இதழ் 40 – டிசம்பர் 2003 ; இதழ் 48 வரை வெளியான பதிவுகள் இணைய இதழில் வெளிவந்த அம்மூடனார் பக்கத்தில் பிரசுரமான கவிதைகள் மற்றும் குறிப்புகள் ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றன. –

 இந்தக்கிழமை -I: எமக்கானது / எம்மாலானது

குழம்பியிருக்கிறேன்
நிரம்ப, உட்குடம் நுரை ததும்பத் ததும்ப.
நிலையால், நிகழ்வால் நீங்காக்குழப்பம்;
மேலாய், எரிநாள் நெடுக்க, 
பேசியதை மீள மூளப் பேசவேண்டிய 
மிருகவதை மூளை மேல் துரத்திப் படர்வதனால்.
ஓங்கு தான் உள்ளே ஒரு கணம் தயங்கினாலும், 
ஒன்று சொல்லித்தான் ஆகவேண்டும்;
“நான் குழம்பியிருக்கிறேன் – முக்கியமாய்
பேசப்படும் நான் பிம்பமில்லாதானானதினால்.”
இடது வலது எல்லாம் நாணிக் குழைந்தொன்றாய் 
தெரு வழிந்தோடிப் போக, சுற்றி அவகதிலயத்திலே
உயிர்கொத்தியள்ளி, அதிர்கிறது சொத்திக்கூத்து.
கொள்ளிக்கையனும் அள்ளித்தின்னியும்
கறைக்கையைக் கோர்த்துக்கொண்டு
துள்ளித் துள்ளி ஆடும் துடிநாட்டியத்துரிதம்.
இடையிடையே எனதென்ற கடிதத்தில்
என்னைக் கொள்ளையடித்தவனுக்கும்
முகமிறுக்கி விட்டோம் முழுக்குத்தென
ஏராளமிட்டுக்கொண்டார் கையொப்பம் –
என் பெயரால், உன் பெயரால்
ஊரிருந்தார், உருவிறந்தார் 
நிழல் பெயர்ந்தார், நிலைபெயரார்
எல்லார் பெருகுதுயர் பெயராலும்.
அடுத்தவேளைக்குப் பருப்புத்தேடும் சிறுத்த மனிதப்புள்ளி
அரசச்சு விளம்பரப்பொறி பரந்த தெரு அகல்சுவரில் 
மூச்சுத் தப்பொரு பொட்டிடுக்குத் தேடி 
மறுப்பறிக்கை சுழித்துக் காட்டமுடியுமா, 
மெய் சொல்.
அவனிவன்மேல் ‘கொள்கைக்காரன்’, ‘கொள்ளைக்காரன்’

Continue Reading →

உரை வீச்சு: அரபிக்கடலோரம்…

– பதிவுகள் இணைய இதழில் ஏப்ரல் 2004 இதழ் 52 தொடக்கம் ஜனவரி 2005 இதழ் 61 வரை வெளியான எழுத்தாளர் புதியமாதவி (மும்பை) -எழுதிய கவித்துவம் மிக்க உரை வீச்சு ‘அரபிக்கடலோரம்’. தற்போது ஒரு பதிவுக்காக மீண்டும் இங்கே  பிரசுரமாகின்றது. –

கவிதை: அரபிக்கடலோரம்… அலை…1

puthiyamadhavi_abcde.jpg - 16.63 Kbஎன் கடற்கரைகளை..
நான் மூன்று சக்கர வண்டிகள் ஓட்டி
விளையாடிய புல்தரைகளைக் காணவில்லை.

என் கடற்கரையில்
அன்று அலைவீசியது
உண்மைதான்.
ஆனால்-
அள்ளிவந்தவை முத்துக்கள் அல்ல
சிப்பிகளும் கழிவுகளுமே..
என் கடலலைகள்
மீண்டும் மீண்டும் அள்ளிவந்து
என் மடியில் கொட்டின.

Continue Reading →

அ.முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள்: அ.முத்துலிங்கம் பற்றிய கட்டுரைகள் தொகுப்பு!

–  எஸ்.இராமகிருஷ்ணன், சுப்ரபாரதிமணியன்,உமாசக்தி, வெங்கட்சாமிநாதன், ஜெயமோகன், பராசக்தி சுந்தரலிங்கம், தமிழ்மகன், நாஞ்சில்நாடன், பாவண்ணன், மு.இராமநாதன், இல.சைலபதி, மதுமிதா, காயத்ரி சித்தார்த், எஸ். செந்தில்குமார் கட்டுரைகள் –

அ.முத்துலிங்கம் சுப்ரபாரதிமணியன்இலங்கை எழுத்தாளர் அமரர் செ.யோகநாதன் என்னிடம் எண்பதுகளில்   அ.முத்துலிங்கத்தின்   எழுத்தினைப் பற்றி ரசனையோடு சிலாகித்து நிறைய பேசியது அவரைத் தேடிப்படிக்கச் செய்தது. இலங்கை தேசிய இனப்பிரச்சினயில் அவர் இங்கு வந்து தங்கி இருந்தபோது  இலங்கைச்சூழல் பற்றி அவ்வப்போது செய்த இல்க்கியப் பதிவுகள் குறிப்பிடத்தக்கவை. அ.முத்துலிங்கம் அவர்களின் ஆரம்ப நூல்கள் மணிமேகலை பிரசுரம் போன்றவற்றில் வெளிவந்தது அவருக்கு குறையாகவே பட்டதை வருத்தத்துடன் சொல்வார். அது முதல் அவரை தொடர்ந்து வாசித்து வந்திருக்கிறேன்.  பாக்கிஸ்தானில் முத்துலிங்கம்  இருந்த போது எனக்கு வெளிநாட்டு தொலைபேசி வசதியிருந்ததால் நிறைய தொலைபேசியில் கதைத்திருக்கிறோம். அந்த அனுபவங்களின் மூலத்துளிகளை அப்போது அவர் சொல்ல சிலதை அனுபவித்திருக்கிறேன். அந்த சமயத்தில் அவரின் இரு கதைகள் ” கனவு” இதழில் வந்தன. அதில் ஒன்று பிறகு குமுதத்தில் கூட வந்தது. அல்லது அக்கதை கனவிற்கு அவர் அனுப்பி கனவு   வெளிவர தாமதமானதால் குமுதத்தில் வந்த வகையிலும் சேர்த்துகொள்ளலாம். கனவு வெளிவந்த அதே வாரம் குமுதத்திலும் அக்கதை வந்தது. அவர் நிறைய எழுதுவதைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.அப்புறம் தொடர்பு அவரின் எழுத்து, படைப்புகளின் கதாபாத்திரங்கள்  என்றாகி விட்டது.முத்துலிங்கம் சொல்வது போல “ குரங்கு சாகும் காலம் வந்தால் எல்லா மரமும் வழுக்கும் ‘ என்பது போல அலுவலக நெருக்கடிகளில் தொடர்புகள் இல்லாமல் போய் விட்டது.

Continue Reading →

துணிவும் தீரமும் கொண்ட பெண் எழுத்தாளர் அம்பை!

துணிவும்  தீரமும் கொண்ட பெண் எழுத்தாளர் அம்பை!மிழ் எழுத்தாளர்களுள் நீண்டகால வரலாற்றில் ஆண்களே முதன்மை வகித்து வந்துள்ளனர்.  ஆனால் சில பெண் எழுத்தாளர்களும் தங்கள் எழுத்தாற்றலால் தமது நிலையை இலக்கிய உலகில் தக்க வைத்துள்ளனர். பெண்களை இரண்டாம் படியில் வைத்துப் பார்ப்பவர்கள் இந்திய மரபுவாதிகள். இந்தியப் பாரம்பரியத்தின் விளைவாக பெண்கள் இயல்பு வாழ்க்கையில் காலடியெடுத்துவைத்தால் தானுண்டு தன் குடும்பம் உண்டு என வாழப் பழகிக் கொள்வார்கள். கணவன். பிள்ளைகள்,  பெற்றோர் என அவர்களின் நலன் சார்ந்து வாழவேண்டியவர்களால் ஆக்கப்பட்ட சமுதாய கட்டுக்கோப்பை மீறமுடியாதவர்களாக குடும்பத்தோடு இணைந்து விடுவார்கள். இந்தியரில் விரல் விட்டு எண்ணக்கூடிய பெண் தமிழ் எழுத்தாளர்களே இருந்துள்ளனர். இந்தச் சூழ்நிலையின் மத்தியில் சடங்கு, சம்பிரதாயம் என அவற்றிற்குக்கட்டுப்பட்டு வாழ்ந்தவர்களின் மத்தியில் ஒரு சிலர் அந்த நிலைமைகளை மீறிக்கொண்டு வெளியே வந்துள்ளனர்.

Continue Reading →

என்னோடு வந்த கவிதைகள்—7

“நான் எங்கு சென்றாலும்
என் தாய்நாட்டின் காயங்களைச்
சுமந்து செல்கிறேன்
ஓ கோவா
உன் அன்பு இல்லாமல்
உன் வாழ்விலிருந்து விலகி
எப்படி வாழ்வது எனக்குத்தெரியவில்லை” 
– கொங்கனி கவிஞர் மனோகர்ராய் ஸர்தேசாய்( கோவா) –

- பிச்சினிக்காடு இளங்கோ என் அம்மாவுக்கு கற்பனை அதிகம்.எந்த இடத்தில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் ; எப்படிப்பேசவேண்டும் என்பதுபற்றியெல்லாம் ஒரு தெளிவு உண்டு.பேச்சிற்கிடையே பழமொழி,கிராமத்துச்சொலவடை உதிர்வதுண்டு. இவ்வளவு வயாசபின்பும்கூட என்மீது  நம்பிக்கை இல்லாமல் இன்னும் முன்னேற்பாடாக நான் நடந்துகொள்ள எனக்கு வழிகாட்டும் வழக்கம் அம்மாவுக்குண்டு. அது எனக்குச் சற்று பிடிக்காது.மேடையில் பேசுகிற மனிதனாக நான் மாறியும்கூட என்மேடைப்பேச்சிற்கும் அம்மா முன்குறிப்புகள் சொன்னதுண்டு. அம்மாவுக்கு தன்னம்பிக்கையும் தன்மதிப்பும் அதிகம்..யாருடைய அலட்சியத்தையும் பொறுத்துக்கொள்ளமுடியாது. யாரையும் அலட்சியம் செய்யும் எண்ணமும் அம்மாவுக்குக்கிடையாது. சின்னவயதில் அம்மாவுக்கு  நீரில் நெடுநேரம் முழ்கி விளையாடும் வழக்கம் இருந்ததால் கேட்கும் ஆற்றல் பிற்காலத்தில் கொஞ்சம் குறைந்துவிட்டது. யாருக்கும் உதவிசெய்யவேண்டும் என்பதே எண்ணமாக இருக்கும்.  சின்னவயதில் அத்திவெட்டி கிராமத்திற்கு திருமண, காதுகுத்து(காதணிவிழா) நிகழ்வுகளுக்காக பத்திரிகை(அழைப்பிதழ்) கொடுக்கப்போகும்போது என்னைப் பெண்கள் யாரென்று விசாரிப்பார்கள்.லட்சுமிமொவனா? ஆத்தாப்பிள்ளைப் பேரனா ?என்று விசாரிப்பார்கள்.அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இரக்கக்குணம் அதிகம்.

Continue Reading →

இலங்கு நூல் செயல்வலர் க.பஞ்சாங்கம்: 7: – நோக்கு நிலை (Focalisation)

நாகரத்தினம் கிருஷ்ணாகண்விழிப்பதுமுதல் கண்ணுறங்குவம்வரை மேற்கத்தியர் முதலீடு செய்த அறிவு நம்மை வழி நடத்திக்கொண்டிருக்கிறது. இன்றைய மனித வாழ்க்கை மேற்கத்தியர்களால் எழுதப்படுவது. கலை இலக்கியமும் அதற்கு விதிவிலக்கல்ல. “இன்றைய மனிதன் உண்மையில் செய்யவேண்டியது என்ன? என்ற கேள்வியைக் கேட்கிற அல்பெர் கமுய் ” அபத்த உலகில் பிறந்த மனிதனுக்குள்ள பங்கு,  வாழ்க்கையை ஏற்பதும், அதனுடன் முரண்படுவதும், அதற்கு அடிமையாகாமிருப்பதும்” என்கிறார். அல்பெர் காமுய் ஒத்த எழுத்தாளர்கள் நம்மிடையே இருக்கலாம், ஆனால் அவனையொத்த சுய சிந்தனைவாதிகள் நமிடம் இல்லை. படைப்பிலக்கியம் என்பது இட்டுக்கட்டுவதும், வார்த்தை விளையாட்டுகளுமல்ல, ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கி, வாசகனுக்கு இலைபோடுவது,  விவாசகனோடு விவாதிப்பது, தன்னைக்கடந்து செல்லவும் வெல்லவும் வாசகனை அனுமதிப்பது.  நவீன இலக்கியத்தின் இன்றைய பரிணாமம் என்பது வாய்ச் சவடால்களால் கண்டதல்ல,  சோர்வுறாத சிந்தனைச் சவடால்களால் உருப்பெற்ற்வை. சந்தைப்படுத்துதல் என்ற சொல்லுக்கு உளவியல் நோக்கில் பொருள்தேடவேண்டும், ஒவ்வொருமுறையும் நுகர்வோரிடத்தில் உபயோகிக்கும் பொருள் புதியது, கூடுதற் பயனை அளிக்கவல்லது என்ற நம்பிக்கையை அளிக்கவேண்டும். இதற்கு என்ன வழி? உற்பத்தியாளருக்குத் தனது பொருளைபற்றிய முழுமையான அறிவும் தெளிவும் வேண்டும், அதன் பின்னரே நுகர்வோரை நெருங்கவேண்டும். புரட்சியைத் தொழில்களில் மட்டுமல்லை சிந்தனைகளிலும் செய்துகாட்டுபவர்கள் மேற்குலகினர். நவீன இலக்கியத்தின் பல படிநிலைகள் இந்திய இலக்கிய மரபிற்குப் புதிதல்ல. அவற்றின் தடங்கள் இருக்கவே செய்கின்றன. ஆனால் இவற்றையெல்லாம் ஒப்பீடு அளவில் ஆய்வு செய்து கீழைத் தடத்தில் ஓர் இலக்கிய மரபைக் கட்டமைக்க தவறி இருக்கிறோம்.

Continue Reading →

அருந்ததி ராயின் சின்ன விஷயங்களின் கடவுள்!

அருந்ததி ராயின் சின்ன விஷயங்களின் கடவுள்!யமுனா ராஜேந்திரன்நாவலின் பின்னணியாகப் பின் வரும் விஷயங்கள் இருந்தன : அருந்ததிராயின் அம்மா மேரி ராய் கேரள சிறியன் கிறிஸ்தவர். அப்பா ராய் வங்காளி. மேரி விவாகரத்தானவர். அருந்ததியின் சகோதரர் லலித். அருந்ததியும் லலித்தும் இரட்டைப் பிறவிகள் அல்ல. கோட்டயம் நகரத்திலிருந்து சில கிலோமீட்டர்கள் தள்ளியிருக்கும் அயமனம் கிராமம் இவர்களது சொந்த ஊர். அருந்ததியின் மாமா ஜியார்ஜ் ஐஸக். அருந்ததியின் தாத்தா ஜான் குரியன். தலைமைப் பொறியியலாளராக இருந்து பாதிரியாக ஆனவர். ஐஸக்கின் விவாகரத்துப் பெற்ற மனைவி ஸிஸிலியா பிலிப்ஸன். பாரடைஸ் ஊறுகாய் பேக்டரி ஐஸக் தொடங்கியதுதான். ஐஸக் இப்போதும் தாயுடன்-அம்மாச்சியுடன் தான் வாழ்கிறார். புள்ளியம்பல்லின் வயல்களுக்கு அப்பால் மிருச்சல் நதியோடுகிறது. அருந்ததி கட்டிடக்கலை பயில்கிறார். கோவாவில் திரிகிறார். குகா என்னும் மார்க்ஸிட்டோடு வாழ்கிறார். பிற்பாடு கிருஷ்ணன் என்பவரை மணக்கிறார். கிருஷ்ணன் ஏற்கனவே மனமானவர். இரண்டு குழந்தைகள் அவரது முதல் மனைவிக்குப் பிறந்தவர்கள். அருந்ததி, இரு பெண் குழந்தைகள், கிருஷ்ணன் ஆகியோர் குடும்பமாக வாழ்கிறார்கள். ராய் பிறந்தது ஷில்லாங்கில். பிற்பாடு அயமனம் வந்தவர். மேரி வழக்கு மன்றம் சென்று தன் சொத்துரிமையை நிலைநாட்டியவர்.

Continue Reading →

நூல் அறிமுகம் : அழிந்த ஜமீன்களும் – அழியாத கல்வெட்டுக்களும் ஆய்வு நூல்!

நூல் அறிமுகம் : அழிந்த ஜமீன்களும் - அழியாத கல்வெட்டுக்களும் ஆய்வு நூல்!நீண்ட நெடிய பாரம்பரிய பண்பாட்டை கொண்டது தமிழ் மரபு. அதை ஆய்வு நோக்கில் பயணிக்கிறது. ‘அழிந்த ஜமீன்களும்-அழியாத கல்வெட்டுக்களும்’. பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரங்கள், நீர்நிலைகள், நாணயங்கள், செப்பேடுகள், போர்முறைகள், இறந்த ஊர்களின் நினைவைப் போற்றும் நடுகற்கள், அவர்களின் பெயர்களும் பெருமைகளும் பேசுகிறது இந்நூல். திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சார்ந்த ஆய்வை நூலாசிரியர் மேற்கொண்டு பல அறிய செய்திகளையும் ஆதாரங்களையும், கல்வெட்டுக்கள் கொண்ட புகைப்படங்களும் இதில் தெளிவாகவும், அழுத்தமாகவும் பதிவு செய்திருக்கிறார். பொதுவாக வரலாற்றின் வெளிச்சத்திற்கு வராமல் போன பல செய்திகளை ஆதாரங்களுடன் கொண்டுள்ளது இந்நூல். பாண்டிய நாடும் 100 நாடுகளும், பாளையக்காரர்களும் பாண்டியனின் மீன் கொடி உருவாக்கம், 73 பாளையங்களின் பெயர்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளது. ஜமீன்களின் எல்லைகள், ஊர்பெயர்களின் அர்த்தங்கள், உதாரணமாக: புரம் என்ற சொல்லும் சிறந்த ஊர்களை குறிக்கும். ஆதலால் காஞ்சிபுரம், சோழபுரம், பல்லாவரம், குள்ளப்புரம் போன்ற தகவல்களும், கூடல் என்றால் ஆறுகள் கூடிடும் துறைகளைப் பனிதமான இடங்களாகக் கருதிப் பண்டைய தமிழர்கள் கொண்டாடினார்கள் அவற்றை கூடல் என்று அழைத்துள்ளார்கள். கி.பி.1290-1296 வரை டில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி ஆட்சி செய்தார். அலாவுதீனின் படைத்தளபதி மாலிக்கபூர். சந்த்ராம் என்ற திருநங்கை மதம் மாறி மாலிக்கபூர் ஆனார் என்ற செய்தி ஆச்சரியத்தை தரும் செய்தியாக இருக்கிறது. இந்த செய்தியை வெளிக் கொணர நூலாசிரியர் எவ்வளவு மெனக்கிட்டுப்பார் என்பதனையும் உணரமுடிகிறது.

Continue Reading →

சங்க இலக்கியங்கள் பேசும் பெண் கூந்தற் பெருமை!

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)பரந்து விரிந்த எல்லையற்ற பெரும் வெட்டவெளியான வானத்தில் ஒரு சூரிய குடும்பம் அந்தரத்தில் மிதந்து குதூகலமாகப் பறந்து திரிந்த வண்ணமுள்ளது. ஆங்கே சூரியன், நிலாக்கள், விண்மீன்கள், ஒன்பது கோள்களாகிய புதன், சுக்கிரன், பூமி, செவ்வாய், வியாழன், சனி, விண்மம் (Uranus – யுறெனஸ்), சேண்மம் (Neptune – நெப்டியூன்), சேணாகம் (Pluto – புளுடோ) ஆகியவை அந்தரத்தில் ஒவ்வொன்றின் ஈர்ப்புச் சக்தியால் மிதந்த வண்ணமும், சுழன்ற வண்ணமும் உள்ளன. இதில் சூரியன் சுமார் 460 கோடி (460,00,00,000) ஆண்டுகளுக்குமுன் தோன்றினான் என்றும், பூமி சுமார் 457 கோடி (457,00,00,000) ஆண்டுகளுக்குமுன் தோன்றினாள் என்றும், பூமி நிலா சுமார் 453 கோடி (453,00,00,000) ஆண்டுகளுக்குமுன் தோன்றினாள் என்றும் அறிவியல் கூறுகின்றது.  மேற்கூறிய ஒன்பது கோள்களில் பூமிக் கோளில் மாத்திரம்தான் உயிரினங்கள் வாழ முடியும். பூமிக் கோளில் சுமார் 400 கோடி (400,00,00,000) ஆண்டளவில் ஒரு கலத்தைக் கொண்ட உயிரினமான அணுத்திரண்மம் (Molecule)  முதன்முதலாகத் தோன்றி உயிர் மலர்ச்சி (Evolution of Life)  முறையை ஆரம்பித்தது. இதையடுத்துப் புல், பூண்டு, செடி, கொடி, தாவரம், மரம், ஊர்வன, நீர்வாழ்வன, பறவை, விலங்கு ஆகிய ஓரறிவிலிருந்து ஐயறிவுவரையான உயிரினங்கள் தோன்றியபின், அவற்றின் உச்சமாக ஆறறிவு படைத்த மனித இனமான ஆண், பெண் ஆகிய இருவரும் இரண்டு இலட்சம் (2,00,000) ஆண்டளவிற் தோன்றி, பூமியில் பல மில்லியனுக்கும் மேற்பட்ட உயிரினங்களுடன் இற்றைவரை தமது ஆட்சியைப் பூமியில் நிலை நிறுத்தி வருகின்றனர்.

Continue Reading →