படித்தோம் சொல்கிறோம்: ஈழத்தமிழ் மக்களிடம் திணிக்கப்பட்ட போரின் அவலங்களைப் பேசும் கருணாகரனின் வேட்டைத்தோப்பு அரசியல் அறமே கூற்றுவனாகி மக்களின் வாழ்வை குலைத்துப்போட்டதை சித்திரிக்கும் தொகுப்பு!

ஈழத்தமிழ்  மக்களிடம்  திணிக்கப்பட்ட  போரின்   அவலங்களைப் பேசும்   கருணாகரனின்     வேட்டைத்தோப்புமுருகபூபதிஇலங்கையில்   மட்டுமன்றி   தமிழகம்  மற்றும்  தமிழர்  புகலிட நாடுகளிலும்    இலக்கிய   வாசகர்களின்   கவனிப்பிற்குள்ளான கருணாகரன்  –   கவிஞராகவே    முன்னர்   அறியப்பட்டவர்.    வெளிச்சம் இதழின்    ஆசிரியராகவுமிருந்தவர்.    பத்தி   எழுத்தாளர் -ஊடகவியலாளர் –   சில நூல்களின் பதிப்பாளர்   –  இலக்கிய     இயக்க செயற்பாட்டாளர்.  எனக்கு  கருணாகரன்  இலக்கியத்தின்  ஊடாக  அறிமுகமானது  2008 இல்தான்.  லண்டனில்   வதியும்  முல்லை  அமுதன்  தொகுத்து   வெளியிட்ட இலக்கியப்பூக்கள்   தொகுப்பில்  மறைந்த  செம்பியன் செல்வனைப்பற்றி    கருணாகரன்   எழுதியிருந்த    கட்டுரை வித்தியாசமானது.    வழக்கமான   நினைவுப்பதிவுகளிலிருந்து முற்றிலும்    மாறுபட்டு    புதியகோணத்தில் எழுதப்பட்டிருந்தது. எனக்கு    அந்தத்தொகுப்பில்    மிகவும்   பிடித்தமான   அக்கட்டுரையை எழுதிய    கருணாகரன்   யார்?    அவர்    எங்கே   இருக்கிறார்?    என்று ஒரு நாள்   முல்லை  அமுதனுடன்   தொலைபேசியில் தொடர்புகொண்டு    விசாரித்தேன். கருணாகரன்   வன்னியிலிருப்பதாக தகவல்   கிடைத்தது.   2009 இல் மெல்பனில்    நடந்த   எழுத்தாளர்   விழாவில்   குறிப்பிட்ட இலக்கியப்பூக்கள் தொகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.   பாடும்மீன் சு. ஸ்ரீகந்தராசா    அறிமுகப்படுத்தினார். இவ்விழாவில்   கலந்துகொண்ட    ஜெயமோகன்   தமிழகம் திரும்பியதும்   எழுதியிருந்த   புல்வெளிதேசம்   நூலிலும்  இந்தத் தகவலை    பதிவுசெய்திருந்தார்.

Continue Reading →

மகாஜனாவும் ஈழத்து இலக்கியப் பாரம்பரியமும்

dr_n_subramaniyan.jpg - 12.37 Kbdr_kauslaya_subramaniyan5.png - 47.49 Kbலங்கை, தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியானது 2010ஆம் ஆண்டிலே தனது நூறாவது ஆண்டை நிறைவுசெய்தது. அச்சந்தர்ப்பத்திலே அதன் கல்விசார் பன்முக இயங்குநிலைகளின் சாதனைகளை  நுனித்து நோக்கி மதிப்பிடும் முயற்சிகள் அதன் பழையமாணவர்களால் அனைத்துலக மட்டத்தில் பல நிலைகளில் முன்னெடுக்கப் பட்டன.  அக்கட்டத்திலே கனடாவில் வெளிவந்த  மகாஜனன்   நூற்றாண்டு மலருக்காக எழுதப்பட்டு, அதில் இடம்பெற்ற கட்டுரை இது.  அக்கல்லூரி சார்ந்தோர் தமிழ் இலக்கியம் சார்ந்து இயங்கிநின்ற மற்றும்  இயங்கி நிற்கின்ற நிலைகள் பற்றிய ஒரு சுருக்கமான  வரலாற்றுப்  பார்வையாக இது அமைகின்றது. இத்தலைப்பிலான ஒரு கட்டுரை எழுதவேண்டுமென்ற எண்ணத்தை எமக்கு விதைத்தவர் மேற்படி கல்லூரியின் முன்னாள் அதிபர்களுள் ஒருவரான  மதிப்புயர் திரு.பொ. கனகசபாபதி  அவர்களாவார்.  அவருக்கு எமதுமனம்நிறைந்த நன்றியைத ;தெரிவித்துக்கொண்டு இக்கட்டுரையை (சில புதுத்தகவல்களையும் உள்ளடக்கியதாக) இங்கு மீள்பிரசுரமாக முன்வைக்கிறோம்.

1. ஈழத்து இலக்கியமும்  மகாஜனக் கல்லூரியும் – ஒரு தொடக்கநிலைக் குறிப்பு

    ஈழத்தின் தமிழிலக்கிய மரபானது ஏறத்தாழ ஈராயிரமாண்டு பழமைகொண்டது. சங்கப் புலவரான ஈழத்துப் பூதந்தேவனாரைத் தொடக்கப் புள்ளியாகக் கொண்டு தொடரும்  இந்த மரபானது 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ‘நவீன இலக்கியம்’   எனப்படும் புதிய வரலாற்றுப் பாதையில் அடி பதிக்கத் தொடங்கியது. இப்புதிய பாதையிலே கடந்த நூறாண்டுக்காலப்பகுதியில் ஈழத்திலக்கியம் கடந்துவந்த வரலாற்றை மூன்று முக்கிய கட்டங்களாக வகைப்படுத்தலாம். 

Continue Reading →

‘பதிவுகளி’ல் அன்று: ‘பறத்தல் அதன் சுதந்திரம்’ – இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பெண் கவிதைகளின் தொகுப்பு ஓர் அறிமுகம்!

– ‘பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். — ஆசிரியர்

'பதிவுகளி'ல்  அன்று: 'பறத்தல் அதன் சுதந்திரம்' -  இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப்  பெண்  கவிதைகளின் தொகுப்பு ஓர் அறிமுகம்! தமிழ்ச் சூழலில் பெண்ணிய நோக்கு பெண்ணிய விமர்சனம், பெண்ணிய எழுத்துக்கள் அண்மைக்காலங்களில் வெகுவாக விவாதிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் 1986 இல் வெளிவந்த ஈழத்துப் பெண் கவிஞர்களின் தொகுப்பான ‘சொல்லாதசேதிகள்’  என்னும் கவிதைப் தொகுப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம். அதேபோல் புலம்பெயர் பெண்களால் வெளியிடப்பட்ட ‘மறையாத  மறுபாதியும்’  இதற்குள் அடங்கும். 2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் காவ்யா பதிப்பகத்தினால் வெளியிடப்பட்ட இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பெண் கவிதைகள் ’’பறத்தல் அதன் சுதந்திரம்’’ என்னும் கவிதைத்தொகுப்பு வெளிவந்துள்ளது. இந்நூலை அண்மையில் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது.  இத் தொகுப்பில் 52 பெண் கவிஞர்களின் கவிதைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இக் கவிதைத் தொகுப்பை மாலதி மைத்ரியின் உதவியுடன் க்ருஷாங்கினி தொகுத்துள்ளார். இதற்கு வ.கீதா முன்னுரை எழுதியுள்ளார்.  அத்துடன் 11 பெண் ஓவியர்கள் தம் ஓவியங்களால் இத்தொகுப்புக்கு கனம் சேர்த்துள்ளனர். பெண்களது சுயாதீனம், தனித்துவம், சுய இயல்பு, அவர்களின் அடையாளம் மற்றும் கலாச்சாரம், பாலியல், குடும்பம் ஆகியவை பற்றிய சிந்தனைகள் இன்று கட்டுரைகள், கவிதைகள் (ஹைக்கூ உட்பட),  விமர்சனங்கள் நாடகங்கள், ஒவியங்கள் என தமிழ்ச் சூழலில் இன்று பெண்களின் எழுத்துத்துறை வளர்ச்சிப் பாதையில் செல்வதை நாம் காண்கின்றோம். அந்தவகையில் இத் தொகுப்பில் வெளிவந்த அனைத்துக் கவிதைகளும் சஞ்சிகைகளிலோ அல்லது பத்திரிகைகளிலோ, தொகுப்புகளாகவோ வெளி வந்துள்ளன. அவையெல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து தொகுப்பாக ”பறத்தல் அதன் சுதந்திரம்” வெளிவந்துள்ளது. 

Continue Reading →

இலங்கு நூல் செயல் வலர்-க.பஞ்சாங்கம்-5: எடுத்துரைப்பியல் -1

– இக்கட்டுரைகள்  பேராசிரியர் க.பஞ்சாங்கத்தினுடைய நவீன இலக்கிய கோட்பாடுகள் நூல் குறித்த சிறு அறிமுகமே அன்றி முழுமையாகாது. ஆசிரியர் நூலைப் படிப்பதொன்றே அவரது கட்டுரைகளின் முழுப்பயன்பாட்டினைப் பெறுவதற்கான வழி –

k_panjangakm.jpg - 6.46 Kbநாகரத்தினம் கிருஷ்ணாஇது எடுத்துரைப்பு உலகம், எடுத்துரைப்பின் காலம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை அதுகுறித்த அறிவியல் பிரக்ஞையோ, பயிற்சியோ இன்றி  எடுத்துரைப்பில் தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் ‘எடுத்துரைப்பு’ என்ற சொல்லாடல் வேண்டுமானால் நமக்குப் புதிதாக இருக்கலாம். மாறாக அதனுடைய செயற்கூறுகள்  இலைமறைகாயாக மனிதர்கள் என்றைக்கு மொழியூடாக உரையூடாக ஆரம்பித்தார்களோ அன்றே தொடங்கிவிட்டன. குழைந்தைப் பருவத்தில் தாலாட்டிலும்; மொழி புரிய ஆரம்பித்ததும் பாட்டியின் கதையிலும் எடுத்துரைப்பு நம்மை மடியில் போட்டுக்கொண்டது. கதைகளின்றி நாமில்லை என்றாகிவிட்டோம் அதற்கான தேவைகள், கையாளும் மனிதர்கள் ஆகியவற்றைப் பொருத்து அவற்றின் கவர்ச்சிகள் தீர்மானிக்கப்படுகின்றன.  உண்மைகளைக் காட்டிலும் அவ்வுண்மைகளைச்சுற்றிக் கட்டப்படும் கதைகள் சுவாரஸ்யமாக இருக்கின்றன.  உண்மைகளைச்சொல்ல கதைகள் உதவியதுபோக தற்போது கதைகளைச்சொல்ல உண்மைகள் உதவிக்கொண்டிருக்கின்றன. எடுத்துரைப்பை நம்பியே கலைகளும், இலக்கியங்களும், திரைப்படங்களும் பிறவும் உள்ளன. ஓர் படைப்பிலக்கியவாதியை அவன் எடுத்துரைப்பை வைத்தே மதிப்பிடுகிறார்கள். இலக்கியத்தில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும் அது வியாபித்தித்திருக்கிறது. விளம்பரங்கள், அரசியல், இதழியல், பொருளியல், மருத்துவம்.. எடுத்துரைப்பின் நிழல்படியா துறைகள் இன்றில்லை.

Continue Reading →

திரும்பிப்பார்க்கின்றேன்: இலக்கிய விமர்சனங்களை எழுதினாலும் – தன்மீதான விமர்சனங்களை மௌனமாகவே எதிர்கொண்ட பேராசிரியர் கைலாசபதி

கலாநிதி க.கைலாசபதிமுருகபூபதிநம்மிடத்தில் – நம்மவர்களைப் பற்றிய     எதிர்பார்ப்பு   ஒன்று    உண்டு.அவருக்கு    கடிதம்    எழுதினேன் –  பதிலே இல்லை.கடிதமா ? ஐயோ – எழுத  நேரம்  எங்கே  கிடைக்கிறது.  அமர்ந்து  கடிதம் எழுதுவதற்கு    நேரம்    தேடி    போராடுகின்றோம்.கோபிக்க வேண்டாம்.    உங்கள்     கடிதம்     கிடைத்தது.    பதில்   எழுத முடியாமல்      போய்விட்டது.     அவ்வளவு     பிஸி.இவ்வாறு     உரையாடுபவர்களை      நாம்    பார்த்திருக்கின்றோம்.எப்பொழுது?மி.மு.   காலத்தில்.     அதென்ன   மி.மு?    மின்னஞ்சலுக்கு     முன்னர்   நாம் வாழ்ந்த     காலத்தில்.     தற்பொழுது    மி.பி.  காலத்தில்    வாழ்கின்றோம்.  அதாவது    மின்னஞ்சலுக்கு   பிற்பட்ட    காலத்தில்.      மின்னஞ்சல்  தந்த  கொடைகள்    முகநூல்  –   டுவிட்டர்  –  ஸ்கைப்.   இனிவரும்    காலத்தில்   மேலும்    புதிய    சாதனங்கள்  வரலாம்.ஆனால்  –   இந்த மென்பொருள்    சாதனங்கள்    எல்லாம்    வருவதற்கு   முன்பே   இந்தப்பத்தியின்   தொடக்கத்தில்  குறிப்பிட்ட   சமாதானங்களைக்  கூறி  தப்பிப் பிழைக்காமல் –  தனக்கு   வரும்   கடிதங்களுக்கெல்லாம்   தளராமல்   பதில் கடிதம்   எழுதிய   ஒருவர்   நம்   மத்தியில்   வாழ்ந்து   மறைந்தார்   என்பதை எத்தனை பேர்   அறிந்திருப்பார்கள்?.அவர்தான்    பேராசிரியர்   கைலாசபதி.   கடிதம்     எழுதுவதும்   ஒரு   கலைதான்   என   உணர்த்திய   இலக்கிய வாதியாக   அவரை   நான்   இனம்   காண்கின்றேன்.தனக்கிருந்த   பல  முக்கிய  பணிகளில்  ஒன்றாக  கடிதங்கள் எழுதுவதையும்  அவர்  கருதியிருக்க வேண்டும்.  பல  வருடங்களுக்கு முன்னர்  கைலாசபதி  எழுதிய  கடிதங்கள்  பலவற்றை  மிகவும்   பத்திரமாக பாதுகாத்து  ஒரு   கோவையில்   பிணைத்து   வைத்திருந்த    கவிஞர்    முருகையனிடம்தான்    கைலாசபதியைப் பற்றிய   இந்த   உண்மையை   அறிந்து கொண்டேன்.இதுவரையில்  –   கைலாசபதி    தமது    நண்பர்களுக்கு    இலக்கிய   நயத்துடன் எழுதிய  கடிதங்கள்   நூலாக   வெளிவரவில்லை.   கைலாஸின்   நண்பர்கள் இணைந்தால்    இப்படியொரு   முயற்சியிலும்   இறங்கிப் பார்க்கலாம். எழுத்தாளர்களுக்கு   ஆலோசனை   கூறும் – அபிப்பிராயம்  தெரிவிக்கும் கருத்துக் கருவூலங்களான   அவை   எதிர்காலத்தில்   தொகுக்கப்படலாம்  என்ற   எதிர்பார்ப்பும்   எனக்குண்டு.இன்றைய  மின்னஞ்சல்   யுகத்தில்   மறைந்துவரும்  கடிதக்கலை   என்று சில    மாதங்களுக்கு   முன்னர்   ஒரு   கட்டுரை   எழுதியிருந்தேன்.  அதனை பல   ஊடகங்கள்   மறுபிரசுரம்   செய்திருந்தன.   அக்கட்டுரையிலும் கைலாசபதியின்   கடிதக்கலையைத்தான்   விதந்து   பதிவுசெய்திருக்கின்றேன்.

Continue Reading →

தி.க.சி. யின் நினைவில்

தி.க.சி. யின் நினைவில்என்னை மிகவும் திகைப்புக்கும் ஆச்சரியத்துக்கும் உள்ளாக்கிய மனிதர் சமீபத்தில் மறைந்த தி.க.சி. அறுபதுகளின் இடை வருடங்களிலிருந்து தான் தி.க.சி. எனக்குத் தெரிய வந்ததே.  தாமரை என்னும் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெளிவந்து கொண்டிருந்த பத்திரிகையின் ஆசிரியராக. தமிழ் நாட்டு முற்போக்கு எழுத்தாளர்களுக்கு ஆதரவாளராக, கட்சிக் கோட்பாடுகளுக்கு , பிரசாரகராக, வழிகாட்டியாக. இவையெல்லாம் அவரது வெளித்தெரிந்த ரூபங்கள் பலவென்றாலும் அதிகம் கேட்கப்படும் குரல் ஒன்று தான். பின்னிருந்து தூண்டும் சக்தியும் ஒன்றுதான்.  இவை எதுவும் எனக்கு பிடித்தமான காரியங்கள் அல்ல.  அதே காலத்தில் வெளிவந்து கொண்டிருந்த, எழுத்து, இலக்கிய வட்டம் போன்ற பத்திரிகைகள் எனக்குப் பிடித்தமானவையாக, என் பார்வைக்கு ஒத்திசைவு கொண்டவையாக இருந்தன. தாமரை அல்ல. ஆனால், இந்த முற்போக்கு முகாமில் இருப்பவர்கள் பற்றியோ அவர்கள் செயல்பாடுகள் பற்றியோ எதுவும் கறாராகச் சொல்லி விட முடிந்ததில்லை. முற்போக்கு கூடாரத்திலிருந்தவர்களோடு மிக நெருக்கமாக இருந்த வல்லிக்கண்ணன், தாமரை இதழ் கட்சிக்கென தொடங்கப் பட்டதே விஜய பாஸ்கரன் நடத்தி வந்த சரஸ்வதியின் திறந்த மனப்போக்கும் செயல்பாடுகளும் ஜீவாவுக்குப் பிடிக்காமல் போய்விடவே,  கட்சியின் குரலை முழுக்க பதிவு செய்வதற்கென்றே தொடங்கப்பட்டது தான் தாமரை என்று சொல்லியிருக்கிறார். இதை அவர் சொன்னது, தாமரை தொடங்கப்பட்ட போது அல்ல.  வெகு காலம் பின்பு. அனேகமாக, என் நினைவு சரியெனில், தீபம் பத்திரிகையில், சரஸ்வதி காலம் என்னும் தொடரின் கடைசி பக்கங்களில் அதன் மரணத்தைப் பற்றிச் சொல்லும் போது இந்த திரைக்குப் பின் நடந்த கதையைச் சொல்கிறார். சரஸ்வதி பத்திரிகை  அச்சாகி வந்த ஜனசக்தி பிரஸ்ஸில் அதைத் தாமதப் படுத்தியே ஜீவா சரஸ்வதியை கடை மூட வைத்தாராம். அவர் சொல்லியிராவிட்டால் இந்த ரகசியங்கள் வெளிவராமலே போயிருக்கும். வல்லிக்கண்ணன் தைரியமாக தன் மனதில் பட்டதை, தான் பார்த்த உண்மைகளைப் பதிவு செய்த மிக அரிதான  சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்று. இன்னொன்றையும் சொல்லி விடுகிறேனே. விஜய பாஸ்கரனின் சமரன் என்ற இதழில் திமுகவையும் அதன் தலைவர்களையும் சாட்டையடி என்று தான் அந்த விளாசலைச் சொல்ல வேண்டும். அப்படி விளாசியவர் தான் அதற்கு முன்னரும் மௌனம். பின்னரும் சுமார் 50 வருடங்களுக்கு வாயைத் திறக்கவில்லை. இவை யெல்லாம்  எப்படி நிகழ்கின்றன என்பது எனக்கு இன்னமும் புரியாத புதிராக, ஆச்சரியமாக இருந்து வருகிறது.

Continue Reading →

அறிவியல் பேசும் சங்க இலக்கியங்கள்

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)அறிவியல் என்பதற்கு விஞ்ஞானம், நுணங்கியல், இயல்நூல், ஆய்வுத்துறை, அறிவு, பொருளாய்வுத்துறை, புறநிலை ஆய்வுநூல், அறிவு பற்றிய துறை, பருப் பொருள்களை ஆயும் நூல் தொகுதி ஆகிய கருத்துக்கள் அகராதியை அலங்கரித்து நிற்கின்றன. மனித இனம், வாழ்வு, வளம், நலம், பண்பு, வசதிகள் யாவும் மேன்னிலையடைவதற்கு உறுதுணையாயிருப்பது உலகில் உலாவும் அறிவியலாகும். மண்ணியல், வானியல், இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய பல துறைகள் அறிவியலில் அடங்கும். இவ்வாறான அறிவியலைப் பூமித் தாயின் மக்களில் ஒரு சிலர் அறிவியற் பூங்காவில் நுளைந்து தத்தமக்கான துறைகளில் ஆர்வங் கொண்டு உலக முன்னேற்றத்தில் உதவிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் சேவை மகேசன் சேவையாகும். இனி, பண்டைத் தமிழர்களின் பழமை வாய்ந்த அறிவியல் பற்றிய செய்திகள் பழந் தமிழ் இலக்கியங்களில் எவ்வாறு பேசப்படுகின்றன என்ற பாங்கினையும் காண்போம்.

தொல்காப்பியம்
தொல்காப்பியம் இடைச் சங்க காலத்தில் எழுந்த முதல்  இலக்கண,  இலக்கிய  நூலை  யாத்த  தொல்காப்பியர் (கி.மு. 711) இவ்வுலகத்தின் ஐம்பெரும் பூதங்களான சேர்க்கைத் தோற்றம் பற்றியும், உலகிலுள்ள ஆறறிவு உயிர்களின் வளர்ச்சி பற்றியும் ஆய்ந்து, தொகுத்து மரபியலில் சூத்திரம் அமைத்த சிறப்பினையும் காண்கின்றோம். மரபியலென்பது முன்னோர் சொல் வழக்கு, அன்றுதொட்டு வழிவழியாக வரும் பழக்க வழக்கங்கள் ஆகியவை பற்றிக் கூறப்படுவதாகும்.  

Continue Reading →

பேராசிரியர் கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் நினைவு நாளை முன்வைத்து …

பேராசிரியர் கலாநிதி கார்த்திகேசு  சிவத்தம்பி அவர்களின் நினைவு நாளை  முன்வைத்து …dr_n_subramaniyan.jpg - 12.37 Kbதமிழ் ஆய்வுலகின் தலைமைப் பேராசிரியராகவும் ‘விமர்சன மாமலை’ என்ற கணிப்புக்குரியவராகவும் திகழ்ந்தவர், கலாநிதி  கார்த்திகேசு  சிவத்தம்பி அவர்கள்(1932-2011). ஒரு கல்வியாளருக்குரிய  ‘சமூக ஆளுமை’யானது  எத்தகையதாக அமையவேண்டும் என்பதைத் தமிழ்ச் சூழலிலே இனங்காட்டிநின்ற முக்கிய வரலாற்றுப் பாத்திரம்,அவர்.  அப்பெருமகன் நம்மைவிட்டுப் பிரிந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. 06-07-2014 அன்று அவர் நம்மைப் பிரிந்த மூன்றாவது நினைவுதினம் ஆகும். அந்நாளையொட்டி அவரது நினைவுகளை மீட்பதற்காக மேற்கொள்ளப்படும்   முன்னெடுப்புகளுள்   ஒன்றாக  இச் சிந்தனை உங்கள் பார்வைக்கு வருகிறது. பேராசிரியர் பற்றி விரிவானதொரு ஆய்வுநூல் எழுதும் ஆர்வத்துடன் தகவல் தேட்டங்களில் ஈடுபட்டுவரும் நான் அத்தொடர்பில் கடந்த சில ஆண்டுகளில் அவ்வப்போது   வெளிப்படுத்திவந்துள்ள சிந்தனைகளின்  ஒரு பகுதியை இங்கு கட்டுரை வடிவில் உங்கள் கவனத்துக்கு  முன்வைத்துள்ளேன்.    பேராசிரியரைப் பற்றிய இக் கட்டுரையைத் தொடங்குவதற்கு முதற்படியாக அவரைப்பற்றிய பொது அறிமுகக் குறிப்பொன்றை இங்கு முன்வைப்பது அவசியம் எனக்கருதுகிறேன்

 பொது அறிமுகம்

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியவர்கள்  ஈழத்தின்  வடபுலத்தின் வடமராட்சி மண்ணின் மைந்தன் ஆவார்.   இலங்கைப் பல்கலைக்கழகத்தின் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்ற  இவர்  பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் “பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம்” என்ற தலைப்பில்  மார்க்ஸிய ஆய்வாளர் Dr.George Thomson அவர்களின் வழிகாட்டலில் ஆய்வு நிகழ்த்தி டாக்டர் பட்டம் பெற்றவர்.  ஈழத்தில் வித்தியோதயா பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ் கற்பிக்கும் பணியை மேற்கொண்டவரான  இவர்,  ஈழத்தின்  கிழக்குப் பல்கலைக்கழகத்திலும்  தமிழகத்தின்  தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் , சென்னைப் பல்கலைக்கழகம்   சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றிலும்  ‘வருகைதரு சிறப்பு நிலைப் பேராசிரியராகப் பணியாற்றியவராவார். அத்துடனமையாது தமிழ்நாட்டிலும் அனைத்துலக நிலையிலும்  பல்வேறு  தமிழியல் ஆய்வரங்குகளில் பங்குகொண்டு சிறப்பித்தவர். இவ்வாறான இயங்கு நிலைகளினூடாக, தமிழியலின் உயராய்வுச் செயற்பாட்டை முற்றிலும்  ‘ஆய்வறிவுப் பாங்கானதாக’க்  கட்டமைப்பதில் அவர் பெரும் பங்களிப்பை ஆற்றியவர் அவர்.

Continue Reading →

நூல் அறிமுகம்: ஏ. நஸ்புள்ளாஹ்வின் காவி நரகம் சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

நூல் அறிமுகம்: ஏ. நஸ்புள்ளாஹ்வின் காவி நரகம் சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்புகிண்ணியா ஏ. நஸ்புல்லாஹ்வின் காவி நரகம் என்ற சிறுகதைத் தொகுதி பேனா பதிப்பகத்தின் மூலம் 125 பக்கங்களில் வெளிவந்துள்ளது. பின்னவீனத்துவப் பாணியை கைக்கொண்டு மிகவும் வித்தியாசமான போக்கில் தனது சிறுகதைகளை நஸ்புள்ளாஹ் யாத்துள்ளார். பின்னவீனத்துவ பிரக்ஞை மிக்க இவர் இதற்கு முன் துளியூண்டு புன்னகைத்து, நதிகளைத் தேடும் சூரிய சவுக்காரம், கனவுகளுக்கு மரணம் உண்டு ஆகிய மூன்று கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். காவி நரகம் என்ற இச்சிறுகதைத் தொகுதியில் புத்தன் வந்த பூமியிலே, இவர்களை நடைபாதையாக உபயோகிக்காதீர்கள், முரண்களின் சாபம், கன்னத்தில் அறையும் கதை, நிலைகுலைவு, மனிதம், ஆறு கண்களால் எழுதிய மூன்று கடிதங்கள், இப்படிக்கு பூங்காற்று, காவி நரகம், வேரறுந்த விலாசங்கள், விதவைத் தேசம், சுதா சுங்கன் மீன் போல அழகு, ஓர் எழுத்தாளனின் கதை ஆகிய தலைப்புக்களிலான ஏ. நஸ்புள்ளாஹ்வின் 13 சிறுகதைகளைக் காண முடிகின்றது. 08 கதைகள் போர்க்காலச் சூழல் சம்பந்தமானவையாகவும், ஏனைய 05 கதைகள் இன்னோரன்ன விடயங்;கள் சம்பந்தமானவையாகவும் என்று இரண்டு பகுதிகளாகவே பிரித்துப் பார்க்கும் அமைப்பில் இந்த 13 சிறுகதைகளும் அமைந்துள்ளன. போர்க்காலச் சூழல் சம்பந்தமான கதைகள் யாவும் கடந்த மூன்று தசாப்தங்களாக தமிழ் மக்கள்  அனுபவித்த துயரங்கள், கஷ்டங்கள் நிறைந்த வாழ்வியலை வெளிக்காட்டி நிற்கின்றன.

Continue Reading →

நூல் அறிமுகம்: என் எல்லா நரம்புகளிலும் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

நூல் அறிமுகம்: என் எல்லா நரம்புகளிலும் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்புகிண்ணியா மண்ணுக்கு பெருமை சேர்க்கும் விதமாக போனா பதிப்பகத்தின் மூலம் 48 பக்கங்களில் 39 கவிதைகளை உள்ளடக்கியதாக வெளிவந்திருக்கிறது ஜே. பிரோஸ்கானின் என் எல்லா நரம்புகளிலும் கவிதைத் தொகுதி. இந்தக் கவிதைத் தொகுதியானது ஜே. பிரோஸ்கானின் நான்காவது கவிதைத் தொகுதியாகும். இவர் ஏற்கனவே இதுவும் பிந்திய இரவின் கனவுதான் (2009), தீ குளிக்கும் ஆண் மரம் (2012), ஒரு சென்ரி மீட்டர் சிரிப்பு பத்து செகன்ட் கோபம் (2013) ஆகிய கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. என் எல்லா நரம்புகளிலும் பயணிக்கின்ற குருதி வார்த்தைகள் என்ற தலைப்பிட்ட தனதுரையில் பிரோஸ்கான் ”என் படைப்புக்கள் சமூகத்தை நெருங்கிவிட நம்பிக்கையூட்டும் அடையாளத்தோடு, என் தலைமீது சுமத்தப்பட்டிருக்கும் மனித உணர்வுகளின் தேடல்களை உண்மைக்கு, உண்மையாய் பகிர்ந்து கொள்வதின் மற்றுமொரு பதிவுதான் என் எல்லா நரம்புகளிலும்” என்று குறிப்பிடுகின்றார்.

Continue Reading →