அழியாத கோலங்கள்: ஜிம் பிறவுனின் ‘எல் கொண்டர்’ & ஜூலியனோ ஜெம்மா (Giuliano Gemma)

அழியாத கோலங்கள்: ஜிம் பிறவுனின் ‘எல் கொண்டர்’

ஜிம் பிறவுனின் 'எல் கொண்டர்'பொதுவாக வெஸ்டேர்ன் திரைப்படங்களில் கறுப்பின நடிகர்கள் கதாநாயகர்களாக நடிப்பது குறைவு. ஆனால் அவ்விதமாக நடித்த நடிகர் ஒருவரின் திரைப்படத்தையும் என் பதின்ம வயதுகளில் (நான் பார்த்துக் குவித்த ஆங்கிலத் திரைப்படங்களில்) பார்த்திருக்கின்றேன்.

இவரது ஓரிரு திரைப்படங்களே அக்காலகட்டத்தில் வெளிவந்ததாக நினைவு. இவரது படங்களைப்பார்ப்பதற்கு இளைஞர்கள் முண்டியடிப்பார்கள். அந்த நடிகர்தான் ஜிம் பிறவுண். அந்தத்திரைப்படம் ‘எல் கொன்டொர்’ (El Condor).

பாதுகாப்பான மண் கோட்டையொன்றில் வைக்கப்பட்டிருந்த தங்கத்தைக் கொள்ளையடிப்பதற்காக இவரும், எனக்கு மிகவும் பிடித்த இன்னுமொரு நடிகரான லீ வான் கிளீவ் (Lee Van Cleef) இணைந்து அமெரிக்க இந்தியர்களின் குழுவொன்றும் செல்வார்கள். கண்களைச் சுருக்கி, இதழ்க்கோடியில் இலேசாகச் சிரிப்பைத் தவழவிடும் லீ வான் கிளீவ்வின் நடிப்பு எப்பொழுதும் என்னை மிகவும் கவர்ந்ததொன்று. The Good The Bad and The Ugly திரைப்படத்தில் கெட்டவனாக (The Bad) நடித்திருப்பவர் இவரே. இவரது பல திரைப்படங்கள் அக்காலகட்டத்தில் யாழ்நகரில் திரையிடப்பட்டன. ‘சபாட்டா (Sabata)’ தொடர் திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை. ‘அடியோஸ் சபாட்டா’, ‘ரிடேர்ன் ஆஃப் சபாட்டா’ ஆகியவை நினைவில் நிழலாடுகின்றன.

அக்கோட்டையினைப் பாதுகாக்கும் அதிகாரியாக ‘பற்ரிக் ஒ”நீல்’ (Patrick O’Neal) நடித்திருப்பார். அவரது மனைவியாகப் தொலைக்காட்சி நடிகையாகவிருந்து திரைப்பட நடிகையாகப் புகழ்பெற்ற மரியானா ஹில் (Marianna Hill) நடித்திருப்பார். இவரது தந்தையான ஃப்ராங் ஸ்வார்ஸ்கோஃப் (Frank Schwarzkopf) ஒரு கட்டடக்கலைஞர். போர்த்துக்கீசர். ஜோர்ஜ் புஷ் சீனியர் காலத்தில் ஈராக்குடன் நடந்த வளைகுடா யுத்தத்தில் அமெரிக்கா இராணுவத்தளபதியாக யுத்தத்தை வழி நடத்திய நோர்மன் ஸ்வார்ஸ்கோஃப்பின் மைத்துனர். இவர் தனது தாயாரின் குடும்பப்பெயரான ஹில் என்பதைத்தன் குடும்பப்பெயராக வரித்துக் கொண்டவர்.

Continue Reading →

குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டும் இலக்கியக் குழுக்கள்!

குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டும் இலக்கியக் குழுக்கள்!குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டும் இலக்கியக் குழுக்கள்!காலத்துக்காலம் நாடுகளில் இலக்கியக் குழுக்கள் இயங்கும். இவற்றின் பின்னால் இவற்றின் சீடர்கள் இணைந்து இவர்களின் அங்கீகாரத்துக்காக அலைவார்கள். ஆதரவாகச் செயற்படுவார்கள். பதிலுக்கு இவர்கள் சீடப்பிள்ளைகளின் படைப்புகள் அவை எத்தகையவையாகவிருந்தபோதும் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். ஒருவருக்கொருவர் அங்கீகாரம். இதுதான் இதன் பிரதான நோக்கம். இக்குழுக்கள் தமிழகத்தின் பிரபல எழுத்தாளர்கள், பதிப்பகங்கள் & சஞ்சிகைகளைக் கைகளில் போட்டுக்கொள்வார்கள். அவையும் இக்குழுக்களின் பிதாமகர்களைத் தூக்கிப்பிடித்துக்கொள்வார்கள். இவை போன்ற இலக்கியக் குழுக்களின் ஆதிக்கம் முன்பு பலமாக இருந்தது. ஆனால் இன்று இணையத்தின் வருகை, முகநூல் போன்ற சமூக ஊடகங்களின் வருகை அவ்வகையான ஆதிக்கத்தை ஆட்டங்காண வைத்து விட்டது. இணையத்தின் மூலம் உலகத்தின் பல்வேறு பாகங்களிலுமுள்ள வாசகர்களை இலகுவாக எழுத்தாளர்கள் அணுக முடிகின்றது.

கனடாவைப்பொறுத்தவரையில் தற்போதுள்ள குழுக்களில் முக்கியமானது மூன்று குழுக்களின் கூட்டிணைப்பு. ‘அன்னை -இல்லம்’ பத்திரிகை, ‘நேரம்’சஞ்சிகை மற்றும் ‘தமிழ்-விருது’ ஆகிய குழுக்கள் இணைந்து கூட்டுக் குழுவாக இயங்குகின்றன. இக்குழுக்களில் இணைந்து முனைவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் சிலர் தீவிரமாக இயங்குகின்றார்கள். இவர்கள் தம் குழுக்களைச் சாராதவர்களின் படைப்புகளை வாசிப்பதில்லை. அவை பற்றிக் கதைப்பதோ , எழுதுவதோ இல்லை.

Continue Reading →

படித்தோம் சொல்கின்றோம்: அம்ரிதா ஏயெம்மின் கதைத் தொகுதி – விலங்குகள் தொகுதி ஒன்று அல்லது விலங்கு நடத்தைகள்

படித்தோம் சொல்கின்றோம்: அம்ரிதா ஏயெம்மின் கதைத் தொகுதி - விலங்குகள் தொகுதி ஒன்று அல்லது விலங்கு நடத்தைகள்கிளிநொச்சி அறிவியல் நகரில் நடைபெற்ற 49 ஆவது இலக்கியச் சந்திப்பிற்கு வடக்கு, கிழக்கு, தலைநகரத்திலிருந்தும் கனடா, லண்டன், மற்றும் தமிழ்நாட்டிலிருந்தும் பல கலை, இலக்கிய ஆளுமைகள் வந்திருந்தனர். நண்பர் கருணாகரனின் அழைப்பில் அங்கு சென்றிருந்தேன். அவுஸ்திரேலியா திரும்பியது முதல் பல்வேறு பணிகள் இருந்தமையால் அந்த இரண்டு நாள் சந்திப்பு குறித்து எந்தவொரு பதிவும் எழுதுவதற்கு கால அவகாசம் கிடைக்கவில்லை. ஆனால், அதற்கு வந்திருந்த பலரும் தத்தமது முகநூல் வழியாக படங்களையும் குறிப்புகளையும் வெளியிட்டிருந்ததாக அறிந்தேன். என்னிடம் முகநூல் கணக்கு இல்லையென்பதனால், வேறு எதுவும் தெரியவில்லை!

குறிப்பிட்ட 49 ஆவது இலக்கியச்சந்திப்பில் உரையாற்றிய இலக்கிய நண்பர் எஸ். எல். எம். ஹனீபா அவர்கள், அந்த சந்திப்புக்கு வருகை தந்திருந்த அம்ரிதா ஏயெம் எழுதிய விலங்குகள் தொகுதி ஒன்று அல்லது விலங்கு நடத்தைகள் என்ற கதைத்தொகுதி பற்றி ஒரு வரியில் சிலாகித்துச்சொன்னார். அன்றுதான் அம்ரிதா ஏயெம் அவர்களை முதல் முதலில் சந்திக்கின்றேன். அவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் விலங்கியல் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் எனவும் இயற்பெயர் ஏ.எம். றியாஸ் அகமட் எனவும் அறிந்துகொண்டடேன்.

அங்கு நின்ற இரண்டு நாட்களும் அவருடன் பழகியதனால், அவரது எளிமையான சுபாவங்களும் அதிர்ந்து பேசாத இயல்புகளும் என்னை பெரிதும் கவர்ந்தன. இலக்கிய சந்திப்பில் எஸ். எல். எம். ஹனீபா, இவரது கதைத் தொகுதி பற்றிச்சொல்லும்போது அதில் வரும் இரண்டு பாத்திரங்களின் பெயர்களைச் சொன்னதும் அரங்கம் சிரித்தது. ஒன்று ராஜபக்‌ஷ. மற்றது விக்னேஸ்வரன்.

மதிய உணவு இடைவேளையில், அம்ரிதா, எனக்கு தனது கதைத்தொகுதியை தந்தார். எனது புகலிட நாடு திரும்பியதும் படித்துவிட்டு எழுதுவேன் எனச்சொல்லியிருந்தாலும், ஏற்கனவே குறிப்பிட்ட பணிச்சுமைகளினால் எழுதுதற்கான நேரம்
கடந்துகொண்டேயிருந்தது.

Continue Reading →

கதை பிறந்த கதை: வீடற்றவன் சிறுகதை பிறந்த கதை!

Kevin   Clarkeஇச்சிறுகதை உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் உருவான சிறுகதை. ஒரு முறை வீடற்ற வீதி மனிதர் ஒருவரை ‘டொராண்டோ’ நகரின் வீதியொன்றில் சந்தித்தேன். அவருடனான எனது அனுபவத்தை மையமாக வைத்து உருவான கதையிது. கதையில் அம்மனிதரின் உண்மைப்பெயரை , உரையாடலின்போது அவர் கூறிய பெயரை, பாவித்துள்ளேன். பின்னரே அறிந்துகொண்டேன் அவ்வீதி மனிதர் உரையாடலின்போது கூறிய தகவல்கள் பொய்யல்ல என்பதை. அம்மனிதரின் முழுப்பெயர்ட் கெவின் கிளார்க் (Kevin Clarke). இவரைப்பற்றிய விக்கிபீடியாத் தகவல்களைப் பின்வரும் இணைப்பில் காணலாம்: https://en.wikipedia.org/wiki/Kevin_Clarke_(politician)

இவருடன் உரையாடியபோது இவர் தான் ‘டொரோண்டோ நகரின் முதல்வர் பதவிக்குப் போட்டியிடப்போவதாகக் கூறியபோது நான் அதனை உளவளர்ச்சி பாதிப்புற்ற வீதி மனிதர் ஒருவரின் கூற்றாகவே எண்ணியிருந்தேன். இருந்தாலும் நடந்த சம்பவத்தை மறக்காமல் பதிவு செய்ய வேண்டுமென எண்ணி அதனை ஒரு சிறுகதையாக எழுதினேன். அவ்விதம் எழுதுகையில் அம்மனிதர் தெரிவித்த பெயரினையே பாவித்தேன். இச்சம்பவம் நடந்து சில மாதங்களுக்குப் பின்னர் பத்திரிகைச் செய்தியொன்றில் பே வீதியும் , அடிலெய்ட் வீதியும் சந்திக்கும் சந்திக்கண்மையில் வீடற்ற மனிதர்களுக்கிடையில் ஏற்பட்ட சண்டை பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் ஒருவர் மீது வழக்குப் பதிவான விடயத்துடன் அம்மனிதரே ‘டொராண்டோ மாநகர முதல்வர் பதவிக்குப் போட்டியிட்ட கெவின் கிளார்க் என்னும் விபரமும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்பொழுதே அறிந்து கொண்டேன் அம்மனிதரும் நான் சந்தித்த வீதி மனிதரும் ஒருவரென்பதை. அவர் கூறியவை பொய்யல்ல என்பதை. அம்மனிதருடனான உரையாடலின்போது அம்மனிதர் எனக்குக் கூறியவற்றை வைத்தே கதையின் உரையாடலினைப் பின்னியுள்ளேன். விக்கிபீடியாவிலுள்ள இவரைப் பற்றிய குறிப்புகள் இவர் ஒரு காலத்தில் ஸ்கார்பரோ பகுதியில் ஆசிரியராகவிருந்ததைத் தெரிவிக்கின்றன.

‘டொரோண்டோ’ அனுபவங்களை மையமாக வைத்துப் பல சிறுகதைகளை எழுதியுள்ளேன். அவ்வகையில் அவ்வனுபவங்கள் மறக்க முடியாதவை; முக்கியமானவை. –

Continue Reading →

விலக்கப்பட்ட வேதாகமங்கள்: சயந்தன் கதிரின் ‘அர்த்தம்’ சிறுகதைத்தொகுதி குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்

எதேச்சையாகத்தான் அந்த நூல் எனது கண்ணில் பட்டது. ஆனாலும் புறந்தள்ள முடியவில்லை. எமது மறக்கப்பட்ட, அல்லது மறக்கடிக்கப்பட்ட வரலாற்றின் பெரும்பகுதி இது போன்ற இலக்கியப்பிரதிகளுக்குள்தான் புதையுண்டு கிடப்பதாக எனக்குள் ஒரு நம்பிகை. எனவே இது பற்றி ஒரு சிறு குறிப்பொன்றினை எழுதலாம் எனது மனதில் தோன்றியதால், அதனை எழுதுவதற்கு எண்ணாமல் துணிந்தேன். இதற்குமப்பால் அந்த நூலின் வடிவமைப்பும் மிகவும் விசித்திரமாக இருந்தது. மற்றைய நூல்களைப் போல் அல்லாமல், 6’*6’ என்ற அங்குல அளவுத்திட்டத்தில் பதிப்பிக்கப்பட்ட அந்நூலானது அச்சு அசலாக ஒரு இறுவெட்டு(DVD) அல்லது குறுந்தகடு(CD) ஒன்றின் உறையின் வடிவத்திலேயே மிகவும் சிறியதாகவும் கவர்ச்சிகரமாகவும் தோற்றமளித்தது. அந்த நூலின் பெயர் : அர்த்தம் ஆசிரியர் : கதிர் சயந்தன் (இப்போது சயந்தன் கதிர் ) வெளியீடு : நிகரி பதிப்பகம் (2003)

சயந்தன் கதிரிற்கு இப்போது அறிமுகம் தேவையில்லை. ஆரம்பத்தில் பல்வேறுபட்ட சிறுகதைகளையும் எழுதிய அவர் இன்று ‘ஆறாவடு’ ‘ஆதிரை’ போன்ற நாவல்களின் மூலம் நவீன தமிழ் இலக்கிய உலகில் தனது தடத்தை ஆழமாகப் பதித்து, தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு தவிர்க்க முடியாத ஆளுமையாக உருப்பெற்றுள்ளார்.

6 சிறுகதைகளை மட்டும் கொண்ட இந்த 84 பக்கங்கள் அடங்கிய இந்த நூல் பற்றி நான் எழுத ஆரம்பிக்கும் போதே என்னுள் ஏதோ உறைத்தது. பல வருடங்களுக்கு முன்பு சயந்தனின் ‘ஆதிரை’ நாவல் வெளிவந்த போது ‘பதிவுகள்’ இணையத்தளத்தில் ஒரு சிறு குறிப்பொன்றினை எழுதியிருந்தேன். அந்த குறிப்பின் ஆரம்பத்தில் பின்வருமாறு எழுதியிருந்தேன். “இன்றைய நவீனதமிழ் இலக்கிய உலகில் சயந்தன் மிகவும் கவனத்திற்குரிய ஒரு எழுத்தாளர். இவரது ஏனைய நூல்களை நாம் கண்ணுற்ற போதும் அது மிகப் பெரிய பாதிப்புக்களை எம்மிடையே ஏற்படுத்தவில்லை. ‘அர்த்தம்’ சிறுகதைத்தொகுதி தமிழ்த்தேசியத்தின் பிரச்சார ஊதுகுழல்களாக விளங்கிய பல சிறுகதைகளையும் ‘ஆறாவடு’ நாவல் பலத்த சிரமமான வாசிப்பனுபவத்துடன் கடக்க வேண்டிய ஒரு நாவலாகவும் விளங்கியது”. இப்போது நினைத்துப் பார்க்கும் போது ஒரு தவறான தகவலை இதனை வாசித்தவர்களிடம் பகிர்ந்து கொண்டதற்காக மனம் மிகவும் வருந்தியது. நான் அதில் எழுதியது போல் இந்தச் சிறுகதைகள் ஆனது தமிழ்த்தேசியத்தின் அல்லது விடுதலைப்புலிகளின் பிரச்சார ஊது குழழ்களாக அமைந்திருக்கவில்லை. மாறாக தம்மீது வலிந்து திணிக்கப்பட்ட போரை எதிர்கொண்ட மக்களின் போராட்ட வாழ்வினையும், அவ்வாழ்வில் அவர்கள் எதிர்கொண்ட வலிகளையும் துயரங்களையும் கூடவே அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கைகளையும் வெற்றியை நோக்கிய அவர்களது கனவுகளையும் குறித்தே இது பேசுகின்றது.

Continue Reading →

புத்தாண்டே! நீ வாழ்க! வருக!

புத்தாண்டே வாழ்க! வருக!

இன்னுமோர் ஆண்டு! புத்தாண்டு!
புத்தாண்டே! உனக்கு வயது எப்பொழுதுமே
ஒன்றுதான்.
வயது ஒன்றானதும் மீண்டும்
வந்து பிறக்கின்றாய். ஆனால்
அந்தவோராண்டினுள்தான் நீ
எத்தனை எத்தனை மாற்றங்களை இப்புவியில்
ஏற்றி விடுகின்றாய். உருவாக்கி விடுகின்றாய்.

இன்பமும் , துன்பமும்
இருப்பின் இயற்கையென்பதை
எடுத்துக்காட்டி நிற்கின்றாய்.
உணர்ந்து பின் மீண்டும்
உறுதியுடன் இருப்பினை எதிர்நோக்கத்தானோ
நீ
மீண்டுமொரு பிறப்பினை
மறு வருடத்திலேயே எடுக்கின்றாய்?

இன்று புதியாய்ப்பிறந்தோமென்று நீ
இங்கு வந்து மீண்டும் பிறப்பதற்கு
எடுக்கும் காலமோ ஒராண்டு!
உன் வழியில் நாமும் மீண்டுமிங்கு
உதிப்போம்; உரமுடன்
உலகத்தை உள்வாங்கி எதிர்கொள்வோம்.

உலகைச் சீரழிக்க மாட்டோம்.
உலகைச் சீரமைப்போம் என்றோர்
உறுதி எடுப்போம். அதையும்
உணர்வுபூர்வமாகவே எடுப்போம். இவ்வுலக
உயிரனைத்துமெம் உறவுகளென்றெண்ணி
உண்மை உணர்ந்து இம்மண்ணை
இன்பப்பூக்காடாக்குவோம். இதற்காக
இணைந்து எழுவோம்; உயர்வோம்.

புத்தாண்டே! நீ வாழ்க! வருக! இப்
புவிதனை நீ
புத்துணர்ச்சியால்,.
பேரின்பத்தால்
பொங்க வைப்பாய்.
மகிழ்ச்சிக்கடலால்
மூழ்கடிப்பாய்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 357: கவிதை – தேவதைகளுக்கு வயசாவதும் இல்லை. – – அருண்மொழிவர்மன் –

எழுத்தாளர் அருண்மொழிவர்மன்எழுத்தாளர் அருண்மொழிவர்மன் அண்மையில் தான் முன்னர் யாழ் உதயன் பத்திரிகையில் தனது யாழ்ப்பாண டியூசன் நிலையங்கள் பற்றி எழுதிய கட்டுரையினை முகநூலில் பகிர்ந்திருந்தார். அக்கட்டுரையின் இறுதிப்பந்தியின் வரிகளை கவிதையாக அடுக்கி அதற்கு ‘தேவதைகளுக்கு வயசாவதில்லை’ என்று தலைப்புமிட்டுள்ளேன். அதனையே இங்கு பகிர்ந்துள்ளேன். கட்டுரையின் இறுதி வரிகளிலுள்ள கவித்துவமே என்னை இவ்வாறு வரிகளைக்கவிதையாக அடுக்கத்தூண்டியது.


உண்மைதான் தலைமுறைகள் மாறினாலும் தேவதைகளுக்கு வயசாவதில்லைதான். 🙂 உங்களில் பலருக்கு அருண்மொழிவர்மன் பகிர்ந்துள்ள கட்டுரையின் இறுதி வரிகள் பழைய பதின்ம வயது நினைவுகளைக் கிளறி விட்டிருக்கக் கூடும்; கிளறி விடக்கூடும். வயசாகாத உங்கள் தேவதைகளை மீண்டும் நினைவுக்குக்கொண்டு வந்திருக்கக்கூடும் 🙂


அருண்மொழிவர்மனின் இப்பதிவை வாசித்தபோது பல வருடங்களுக்கு முன்னர் எழுத்தாளர் வ.அ.இராசரத்தினம் எழுதிய சிறுகதையொன்றின் ஞாபகமெழுந்தது. தன் நினைவுகளில் வயசாகமலிருந்த தன் பாடசாலைப்பருவத்து இனியவளை மீண்டும் சந்தித்தபோது முதுமையின் தளர்வுடன் கோலம் மாறியிருந்த, வயதுபோய் விட்டிருந்தது கண்டு திகைப்படையுமொருவன் பற்றிய கதையது. வயதாகிவிட்ட அவனது தேவதை பற்றிய கதையது.


புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பசீரும் ‘பால்ய காலத்து சகி’ நாவலில் தன் தேவதையை மீண்டும் சந்திக்கும் ஒருவன் அடையும் உணர்வுகளை, அனுபவங்களை வெளிப்படுத்தியிருப்பார்.

Continue Reading →

திருப்பூர் இலக்கிய விருது” ( பெங்களூர் எழுத்தாளர்கள் மட்டும் –மற்றவர்களுக்கான பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும்)

 - சுப்ரபாரதிமணியன் -

25/12/19 ” திருப்பூர் இலக்கிய விருது”  ( பெங்களூர் எழுத்தாளர்கள் மட்டும் –மற்றவர்களுக்கான பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும்)

சாகித்ய அகாதமி பரிசு பெற்ற பெங்களூர் இறையடியான் ( மொழிபெயர்ப்புக்காக ) அவர்களூம் திருமதி ஜெயந்தி சாகித்ய  அகாதமி பெங்களூர் அலுவலரும், மொழிபெயர்ப்பாளருமான ஜெயந்தி அவர்களும் திருப்பூர் இலக்கிய விருதை பெங்களூரில் நடைபெற்ற கன்னட – தமிழ்  கவிஞர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் வழங்கினர். எழுத்தாளர்கள் குறித்து கன்னட பேராசிரியரும் மொழிபெயர்ப்பாளருமான மலர்வதி அறிமுகப்படுத்தினார். சாகிதய அகாதமியின் கவுரவ இயக்குனர் ( மொழிபெயர்ப்பு ) விஜய் சங்கர், சுப்ரபாரதிமணியன், நந்தவனம் சந்திரசேகர் . சாகிதய அகாதமியின் யுவபுரஸ்கார் விருது பெற்ற  ஸ்ரீதர பனவாசி., பேரா. மா.தா கிருஷ்ண்மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். RT நக்ர, பால்பவ்னில் 25/12/19 அன்று நிகழ்ச்சி நடைபெற்றது

Continue Reading →

பதிவுகளில் அன்று: எழுத்தாளர் ஜெயமோகனின் மின்னஞ்சல்கள்!

ஜெயமோகன்From: “Jeya J Mohan” < jeyamohanb@rediffmail.com>
Sent: Thursday, May 16, 2002 10:14 PM

Subject: Re: Re:


அன்புள்ள கிரிதரன் அவர்களுக்கு , பதிவுகளில் தேவகாந்தனின் எதிர்வினை படித்தேன். எனக்கு அவரது கருத்துக்களுடன் மாறுபாடு உள்ளது .அவர் எழுதிமுடித்தபிறகு எழுதுகிறேன். அவரது கட்டுரையை முழுமையாக வெளியிட்டிருக்கலாம் . பதிவுகள் அடிக்கடி renew செயயப்படுவதில்லை . ஆகவே அடுத்த பகுதிக்காக காத்திருந்து எத்தனைபேர் படிப்பார்கள் என்பது கேள்விக்குறிதான் .இதை கவனிக்கவும்

ஜெயமோகன்

[உங்களது ஆக்கபூர்வமான கருத்துகளுக்கு நன்றி. தேவகாந்தனின் கட்டுரையினை முழுமையாக வெளியிடாதது எங்கள் தவறு தான். பதிவுகளுக்கு ஆக்கங்கள் அனுப்பும் போது நாங்கள் குறிப்பிட்டுள்ளவாறு tscu_inaimathi அல்லது inaimathitsc போன்றவற்றிலேதாவது எழுதி அனுப்பினால் எமக்கு முழுமையாகப் பிரசுரிப்பதில் சிரமமிருக்காது. திரும்பவும் தட்டச்சு செய்ய வேண்டிய சிரமமிருக்காது. இருந்தாலும் எதிர்வரும் காலங்களில் இது போன்ற தவறுகளைக் குறைக்க

முயற்சி செய்கின்றோம்.-ஆசிரியர்]


From: jeya mohan nagercoil

To: editor@pathivukal.com

Sent: Thursday, September 02, 2004 11:31 PM


டி செ தமிழன் எம் ஜி சுரேஷ் என்னை ‘அம்பலப்படுத்தி விட்டது ‘குறித்து புளகாங்கிதம் அடைவது ஆச்சரியம் அளிக்கவில்லை. இப்படி அடைபவர்களை முன்னால் கண்டுதான் சுரேஷ் அந்த அப்பட்டமான அவதூறை எந்த ஆதாரமும் இல்லாமல், எந்த தயக்கமும் இல்லாமல் எழுதியிருக்கிறார். அந்த தரத்திலான அவதூறுகளை அவர் கவிதா சரண் காலச்சுவடு இதழ்களின் எல்லா இதழ்களிலும் கண்டு மேலும் மேலும் [மாதாமாதம் ] புளாகாங்கிதம் அடையலாம். – ஜெயமோகன் –

Continue Reading →

கணன் ஸ்வாமியின் ‘பரதேசியின் வலித்தொகை’

கணன் ஸ்வாமிநண்பர் கணன் ஸ்வாமியுடன் சிறிது நேரம் உரையாடும் சந்தர்ப்பம் இன்று நடைபெற்ற தேடகம் அமைப்பினரின் முப்பதாண்டு விழாவின்போது கிடைத்தது. அப்பொழுது அவர் தமிழகத்துப் புதுக்கோட்டையிலுள்ள இலங்கைத்தமிழ் அகதி முகாமில் சுமார் பதினைந்து வருடங்கள் தான் வாழ்ந்ததாகக் குறிப்பிட்டார். அக்காலகட்டத்தில் அவர் நண்பர்களுடன் இணைந்து ‘பரதேசியின் வலித்தொகை’ என்றொரு கையெழுத்துச் சஞ்சிகையும் நடத்தியதாகக் குறிப்பிட்டார். அத்துடன் 2008 வரை ‘மனுதர்’ எனுமொரு வலைப்பதிவினையும் நடாத்தி வந்ததாகவும் குறிப்பிட்டார். அவ்வலைப்பதிவுக்குச் சென்று பார்த்தேன். ஒரு பதிவு மட்டுமேயிருந்தது. ஏனையவை நீக்கப்பட்டு விட்டன போலும்.

கணன் ஸ்வாமி தன் புதுக்கோட்டை அகதிகள் முகாம் வாழ்வனுபவங்களைப் பதிவு செய்வது மிகவும் அவசியம். அவ்விதம் செய்தால் அது வரலாற்று முக்கியத்துவம் வாய்த்த நல்லதோர் ஆவணமாகவிருக்கும். கணன் ஸ்வாமி செய்வாரா? செய்வார் என்று எதிர்பார்ப்போம்.

அவரது ‘மனுதர்‘ வலைப்பதிவிலுள்ள ‘பரதேசியின் வலித்தொகை‘ 11 கவிதைகளின் தொகுப்பிது. அப்பதிவினை இங்கு நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். பரதேசியின் வலித்தொகை தொகுப்புக்கு நல்லதொரு பெயர். அகதிகளாகப் பரதேசம் அலைந்து திரிபவர்களின் வலியினை வெளிப்படுத்தும் கவிதைகளின் தொகை (தொகுப்பு).

Continue Reading →