பதிவுகள் வாசகர்களே! உங்களது ஆக்கபூர்வமான கருத்துகளை எதிர்பார்க்கின்றோம். பதிவுகளில் வெளியாகும் படைப்புகள் பற்றிய மற்றும் பதிவுகள் இதழ் சம்பந்தமான உங்களது கருத்துகளை எழுதி அனுப்பி வையுங்கள். உங்களது கருத்துகளை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். – ஆசிரியர்
சுப்ரபாரதிமணியனின் மொத்த சிறுகதைகளின் எண்ணிக்கை 250 தொடும்.ஆரம்ப காலக் கதைகள் வெகு யதார்த்தமான அவரின் குடும்பம் சார்ந்தவர்கள் பற்றின சித்தரிப்புகளாய் அமைந்திருந்தன, அப்பா என்ற ஆளுமையும் கிராமச் சூழலும், சேவற்கட்டு வாழ்க்கையும் குறிப்பிடதக்கதான குடும்ப நிகழ்வுகளும் சிறுகதைகளாயிருந்தன. அவற்றையெல்லாம் அவரின் அனுபவக் கதைகளாகக் கொள்ளலாம். அனுபவ விஸ்தரிப்பே கதைகள் என்ற வரையறையை விட்டு வெளியே வந்த போது இவருக்குத் தென்பட்ட உலகம் பரந்திருந்தது. அந்த பரந்த உலகத்தை கூர்ந்து அவதானித்து கதைகளுக்குள் கொண்டு வந்த போது நிறைய எழுத ஆரம்பித்தார். செகந்திராபாத் வாழ்க்கையை சிறுகதைகளாக ஒரு தமிழன் அந்நிய மொழி பேசும் மாநிலத்தில் வாழும் போது அவன் அந்நியமாக்கப்படுகிற சூழலும், மதக்கலவரங்களால் மனிதர்கள் சிதறுண்டு கிடப்பதும், அந்த பிரதேசத்திற்குரிய விசேச மனிதர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். .
க.பஞ்சாங்கம் குறித்து எழுதவேண்டும் என்ற ஆர்வம் நிர்பந்தத்தால் ஏற்பட்ட ஒன்றல்ல. ஒருவகை ஆர்வத்தால் பிறந்தது. இவ் ஆர்வத்திற்கு எனது ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி” நாவலை முன்வைத்து அவர் வெளிக்கொணர்ந்த ‘வியத்தலும்-பாராட்டுதலும்’ என்ற ஒரு சிறு தீப்பொறி பொறுப்பு. அவருடைய நூல்களும் சொற்களும், கழி வீச்சினையொத்த மொழி வீச்சும், கருத்துக்களை முன்வைக்கிறபொழுது பொருளின் தராதரத்தை துல்லியமாக எடைபோடும் திறனும், எண்ணத்தில் பதிவானவற்றை இம்மியும் பிசகாமல் எடுத்துரைக்கும் வல்லமையும் அத்தீப்பொறி செந்தழலாக என்னுள் பற்றி எரியக் காரணமாயிற்று. அம்மனிதரோடு ஒப்பிடுகையில் எனது சிறுமையையும் உணர்கிறேன். அவர் மாத்திரமல்ல திருவாளர்கள் பிரபஞ்சன், ரெ.கார்த்திகேசு, வே.சபாநாயகம், கி.அ.சச்சித்தானந்தன், தமிழவன் ஆகியோர், நூலின் மூலமே ஆக்கியோனை கவனத்திற்கொள்கிறவர்களாக இருக்கிறார்கள். பிரபஞ்சன் எல்லா நூல்களையும் வாசிப்பார், பிடித்திருந்தால் கண்களில் நீர் கசிய பாராட்டுவார். சிறியவர் பெரியவர் பேதம் பார்ப்பதில்லை. மேலே நான் குறிப்பிட்டிருந்த பலரும் அப்படியானவர்கள்தாம். அவர்களைப்போல பரந்த வாசிப்பு எனக்கில்லை. சிற்றிதழ்கள், நண்பர்களின் பரிந்துரை இணையதளங்களின் கருத்தியங்கள் அடிப்படையில் தேர்வுசெய்கின்ற போக்கு பல நேரங்களில் நல்ல நூல்களை வாசிக்க முடியாமற் செய்துவிடுகிறது. இழப்பு படைப்பாளிக்கு மட்டுமல்ல நுகர்கிற வாசகனுக்குங்கூட. வணிக உலகில், கனியிருக்க காயைதேர்வு செய்து அல்லாட வேண்டியிருக்கிறது.
வல்லமை என்ற இணைய இதழ் நடத்திய சிறுகதைப்போட்டியில் பரிசு பெற்ற சிறுகதை காட்சிப்பிழை. அவுஸ்திரேலியாவில் வதியும் சுதாகரன் இலங்கை பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரி. முன்னர் நியூசிலாந்தில் வாழ்ந்துவிட்டு அவுஸ்திரேலியா மெல்பனுக்கு வந்தவர். பல வருடங்களாக சிறுகதை, கட்டுரை, பத்தி எழுத்துக்கள் எழுதுபவர். இலங்கையிலும் தமிழகத்திலும் மற்றும் வெளிநாடுகளிலும் நடந்த பல சிறுகதைப்போட்டிகளில் பரிசில்கள் பெற்றவர். அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தில் பல பதவிகளிலிருந்து சிறந்த பங்களிப்பு செய்துவருபவர். சq;கத்தின் 10 ஆவது எழுத்தாளர் விழாவை (2010) முன்னிட்டு நடத்தப்பட்ட சர்வதேச சிறுகதை, கவிதைப்போட்டிகளை திறம்பட நடத்தியிருப்பவர். தற்பொழுது சங்கத்தின் செயற்குழுவில் இதழாசிரியராக பணியாற்றுபவர். குறிப்பிட்ட வல்லமை இணைய இதழின் சிறுகதைப்போட்டிக்கு வந்த கதைகளை தேர்வு செய்தவர் தமிழகத்தின் பிரபல இலக்கியவிமர்சகர் வெங்கட்சாமிநாதன். குட்டுப்பட்டாலும் படவேண்டும் மோதிரக்கையினால் என்பார்கள். வசிட்டவர் வாயால் பிரம்மரிஷிப்பட்டம் என்பார்களே அதேபோன்றதுதான் வெங்கட்சாமிநாதனின் தேர்வு. சுதாகரனின் காட்சிப்பிழை வல்லமை தொகுத்த பரிசுக்கதைகளின் தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. பாலகிருஷ்ணனுக்கும் கனடாவில் வயது முதிர்ந்தவர்கள் தஞ்சமடையும் இல்லத்திலிருக்கும் தெமட்டகொட அங்கிளுக்கும் இடையே அப்படி என்னதான் பிரச்சினை?
“அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்”
கடந்த வாரம் ‘டொராண்டோ’ மாநகரினைத் துவம்சம் செய்த உறைமழைப்புயல் காரணமாக ஏற்பட்ட மின்சார இழப்பு நீங்கி, மின்சாரம் அடுத்த நாளே எமக்குக் கிடைத்துவிட்டபோதும் (இன்னும் ஆயிரக்கணக்கானவர்களுக்குக் கிடைக்காமலிருப்பது துரதிருஷ்ட்டமானது) இன்றுதான் – டிசம்பர் 28, 2013 – இணையத்தொடர்ப்புக்கான சேவை மீண்டும் கிடைத்தது. இதன் காரணமாக கடந்த ஒருவார காலமாகப் பதிவுகள் இணைய இதழுக்கான பராமரிப்புப் பணி தடைப்பட்டுப்போயிருந்தது. படைப்புகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் பதிவுகள் தனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறது. உங்கள் படைப்புகள் பதிவுகளில் விரைவில் பிரசுரமாகும்.
[அ.ந.க. வின் இக் கட்டுரை ‘தமிழோசை’ கார்த்திகை 1966 இதழில் வெளி வந்தது. இதன் மறு பகுதி எம்மிடம் இல்லை. யாரிடமாவதிருந்தால் அனுப்பி வைத்தால் தகுந்த சன்மானம் தரப்படும். அ.ந.க. வின் சிறுகதைகள் , கட்டுரைகள், கவிதைகள் ஏனைய ஆக்கங்களை வைத்திருப்பவர்கள் அனுப்பி வைத்தால் தகுந்த சன்மானம் வழங்கப் படும். ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரியில் எம்முடன் தொடர்பு கொள்ளலாம்.]
முத்தமிழின் முடிவான தமிழ் நாடகத் தமிழ் என்று நாம் பல படப் பேசிக் கொண்டாலும்நாடகத் தமிழ் என்று ஒன்று உண்மையிலேயே கிடையாது என்பதே எனது தாழ்மையான கருத்து. இவ்வாறு தமிழில் நாடகத் தமிழில் நாடகம் இல்லாதிருப்பதைச் சுட்டிக் காட்டியதும் கூட்டில் நிறுத்தப்பட்ட வழக்கின் எதிரிபோல் நொண்டிசாக்குகள் கூற ஆரம்பித்து விடுகின்றனர் தாமே தமிழின் காவலர்கள் என்று தம்மைப் பற்றித் தவறாகக் கணக்கிட்டு வைத்திருக்கும் ஒருசிலர். பூம்புகாரும் கபாடபுரமும் கடல் கோளுக்காளானதைச் சுட்டிக்காட்டி ‘எத்த்னை எத்தனை நாடகங்களைக் கத்துங் கடல் விழுங்கிக்கொண்டதோ?’ என்று கூறி நிறுத்தி விடுகின்றார்கள் இவர்கள். இவர்கள் கூறுவதை முழுவதும் உண்மையெனக் கொண்டாலும்கூட கடல் கோள் நிகழ்ந்து இப்பொழுது எத்தனை ஆண்டுகள் கழிந்து விட்டன? கடல் கோளுக்கும் இன்றைக்குமிடையில் கழிந்த ஆயிரக்கணக்கான வருடங்களுள் பல மொழிகள் புதிதாக இலக்கணம் வகுத்து புத்திலக்கியங்களும் கண்டு முன்னேறி விட்டன.ஆங்கில இலக்கியத்தை எடுத்துப் பார்த்தால் கடந்த ஜந்து நூறு வருடங்களுள் தானே அவ்விலக்கியம் உலகின் தலையாய இலக்கியங்களுள் ஒன்றாக மலர்ந்திருக்கின்றது. நாடகத் துறையில் உலக மகா மேதை ஷேக்ஸ்பியர் வாழ்ந்து மறைந்து நானூறு வருடங்களேயாகின்றன.இந்நிலையில் எப்போதோ நிகழ்ந்த சிலவற்றைக் கூறி நம்மை நாமே ஏமாற்றுதல் கையாலாகாத்தனம். உண்மையென்னவென்றால் தமிழ் மொழியினர் பல்லாயிர வருடங்களாகவே திறனும் ஊக்கமுமற்ற ஒரு சமுதாயாமாக மாறி விட்டனர். தமிழர்களாகிய நாம் இன்றைய சாதனையற்ற வாழ்வின் குறைபாட்டை மறக்கவும் மறைக்கவும் பழம் பெருமை பேசிப் போலி இறுமாப்படைய ஆரம்பித்து விட்டோம். இது இன்று நேற்று ஆரம்பித்த நோயல்ல. பல நூற்றுக்கணக்கான வருடங்களாகவே தமிழர்கள் இதைச் செய்து வந்திருக்கின்றார்கள்.
– அறிஞர் அ.ந.க.வின் ‘நான்ஏன் எழுதுகிறேன்?’ என்னுமிக் கட்டுரை ஏற்கனவே ‘தேசாபிமானி’, ‘நுட்பம் (மொறட்டுவைத் தமிழ்ச் சங்க வெளியீடு), பதிவுகள் ஆகியவற்றில் வெளிவந்த படைப்பு. ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றது. – பதிவுகள்-
அப்பொழுது எனக்குப் பதினேழு வயது நடந்து கொண்டிருந்தது. உள்ளத்திலும் உடம்பிலும் சுறுசுறுப்பும், துடிதுடிப்பும் நிறைந்த காலம். உலகையே என் சிந்தனையால் அளந்துவிட வேண்டுமென்று பேராசைகொண்ட காலம். காண்பதெல்லாம் புதுமையாகவும், அழகாகவும், வாழ்க்கை ஒரு வானவில் போலவும் தோன்றிய காலம். மின்னலோடு உரையாடவும், தென்றலோடு விளையாடவும் தெரிந்திருந்த காலம். மின்னல் என் உள்ளத்தே பேசியது. இதயத்தின் அடியில் நனவிலி உள்ளத்தில் புகுந்து கவிதை அசைவுகளை ஏற்படுத்தியது. பலநாள் உருவற்று அசைந்த இக்கவிதா உணர்ச்சி ஒருநாள் பூரணத்துவம் பெற்று உருக்கொண்டது. எழுத்தில் வடித்தேன். “சிந்தனையும் மின்னொளியும்” என்ற தலைப்பில் இலங்கையின் ஓப்புயர்வற்ற இலக்கிய ஏடாக அன்று விளங்கிய ‘ஈழகேசரி’யில் வெளிவந்தது. இக்கவிதை ஒரு காரியாலயத்தில் மேசை முன்னுட்கார்ந்து என்னால் எழுதப்பட்டதல்ல. இயற்கையோடொன்றிய என் மனதில் தானே பிறந்த கவிக்குழதை இது. எனினும் பல ஆண்டுகளுக்குப் பின்னர் இலக்கிய சித்தாந்தங்கள் பலவற்றை ஆராய்ந்து நான் என்ம்னதில் ஏற்றுக் கொண்ட அதே கருத்துகளின் சாயலை இக்கவிதையில் என்னால் இன்று காண முடிகிறது.
[‘மதமாற்றம் ‘நாடக ஆசிரியரான அறிஞர் அ.ந.கந்தசாமி 3-7-1967 வெளிவந்த ‘செய்தி’ இதழில் தனது நாடகமான ‘மதமாற்றம்’ கொழும்பில் மேடையேற்றப்பட்ட காலகட்டத்தில் எழுதிய விமர்சனக் கட்டுரையிது.ஒரு பதிவுக்காக இங்கு மீள்பிரசுரமாகின்றது. -பதிவுகள்-]
சுய விமர்சனம் , எழுத்துத் துறைக்குப் புதிதல்ல. ஜவர்ஹலால் நேரு தன்னைப் பற்றித் தானே விமர்சனம் செய்து நேஷனல் ஹெரால்ட்ட் பத்திரிகையில் ஒரு விமர்சனக் கட்டுரை எழுதினார். பெர்னாட்ஷா தனது நாடகங்களுக்குத் தானே விமர்சனங்கள் பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார். ஆனால் எனக்கும் அவர்களுக்கும் ஒரு வித்தியாசம். அவர்கள் புனை பெயர்களுக்குள் ஒழிந்திருந்து எழுதினார்கள். நான் எனது சொந்தப் பெயரிலேயே இக்கட்டுரையை விளாசுகிறேன். காலஞ்சென்ற கல்கி அவர்களும் தமது சிருஷ்டியைப் பற்றித் தாமே விமர்சனக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ‘தியாக பூமி’ சினிமாப் படத்தைப் பற்றி அவர் விமர்சனக் கட்டுரைகள் எழுதி, நாடெங்கும் ஏற்படுத்திய பரபரப்பு எனக்கு ஞாபகமிருக்கிறது. ‘கல்கி’ கூடத் தமது சொந்தப் பெயரில் இவற்றை எழுதவில்லை. ‘யமன்’ என்ற புனை பெயருக்குள் புகுந்து கொண்டே அவர் இவற்றை எழுதியதாக நினைவு.
கொழும்பில் எனது ‘மதமாற்றம்’ நாடகம் நான்காவது முறை அரங்கேறியிருக்கிறது. அரங்கேற்றியவர் பிரபல சிறுகதையாசிரியர் காவலூர் இராசதுரை. டைரக்ஷன் லடீஸ் வீரமணி. நடித்தவர்களில் தான் தோன்றிக் கவிராயரென்று புகழ் படைத்த சில்லையூர் செல்வராசன், ஞானாஞ்சலி, தோத்திரமாலை போன்ற பல நூல்களை எழுதிய நவீன உவமைக் கதாசிரியர் முத்தையா இரத்தினம் என்பவர்கள் இவர்களில் சிலர்.
இந்த ஆண்டு தமிழகத்தின் விஷ்ணுபுரம் விருதைப்பெற்றுக்கொள்ளும் தெளிவத்தை ஜோசப் இலங்கை மலையகத்தின் மூத்த எழுத்தாளர். இவரை உங்களில் பலர் 2009 ஆம் ஆண்டு நாம் அவுஸ்திரேலியாவில் நடத்திய ஒன்பதாவது எழுத்தாளர் விழாவில் சந்தித்திருப்பீர்கள். வெகு சுவாரஸ்யமாகப்பேசுவார். அவரது எழுத்துக்களும் சுவாரஸ்யமானவை. ‘மனிதர்கள் நல்லவர்கள்’ என்ற சிறுகதையை அவர் மல்லிகையில் பல வருடங்களுக்கு முன்னர் எழுதியிருக்கிறார். காலத்தை முந்திய கதையென்றாலும் மனித உணர்வுகள் இன்றும் அப்படியே வெவ்வேறு வடிவங்களில்தான் இருக்கின்றன. அதனால் காலத்தை வென்றும் வாழும் கதையாக என்னை கவர்ந்தது. அனைவரும் ஒன்றாகிக்களிக்க ஏதாவது ஒரு பண்டிகை வரவேண்டியிருக்கிறது. அது தீபாவளி இந்தக்கதையில். இங்கு நாமும் ஒன்றாக கூடிக்களிக்க இந்த அமர்வு தேவையாக இருக்கிறது. அவுஸ்திரேலியாவின் இயந்திரமயமான வாழ்க்கை வாழும் எம்மவருக்கும் குடும்ப ஒன்று கூடல்கள் வாராந்தம் அல்லது மாதாந்தம் அல்லது வருடாந்தம் தேவையாக இருக்கிறது. இலங்கையில் மலையகத்தில் பண்டிகைகள்தான் உறவினர்கள் ஒன்று கூடுவதற்கு சிறந்த நிகழ்வாகியிருக்கிறது என்பதை கதையின் தொடக்கத்திலேயே சொல்லிவிடுகிறார். அடுத்த வரியை பாருங்கள்: பஸ்ஸில் ரயிலில் தியேட்டரில் ஒரு நல்ல இடம் பிடித்துக்கொள்வதற்கு முட்டிமோதும் அளவுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல இடம் பிடிப்பதற்கு நம் மக்கள் முட்டுவதில்லை. மோதுவதில்லை. இந்த அங்கதம் எந்தவொரு நாட்டு மக்களுக்கும் பொருந்துகிறது.
அவுஸ்திரேலியாவில் பல வருடங்களாக தமிழ் எழுத்தாளர் விழாவையும் கலை -இலக்கிய சந்திப்புகளையும் நடத்திவரும் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அண்மையில் மெல்பனில் தமிழில் சிறுகதை இலக்கியம் தொடர்பாக அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியை வேர்மண்ட் சவுத் சமூக நிலைய மண்டபத்தில் நடத்தியது. இதுதொடர்பாக இந்த ஆக்கத்தை எழுதுவதற்கு விரும்பினேன். ஏற்கனவே அவுஸ்திரேலியாவில் தமிழ் இதழ்கள் – மொழிபெயர்ப்பு முயற்சிகள் – இலக்கிய இயக்கம் – கலை, இலக்கியத்துறை சார்ந்த நம்மவர்கள் தொடர்பாக சில கட்டுரைகளை எழுதியிருக்கின்றேன். உயிர்ப்பு- Being Alive (ஆங்கில மொழிபெயர்ப்பு) முதலான சிறுகதைத்தொகுப்புகளையும் பதிப்பித்திருக்கின்றேன். அந்த வரிசையில் அவுஸ்திரேலியாவில் தமிழ்ச்சிறுகதை இலக்கியம் பற்றிய இந்த ஆக்கத்தை எழுதுவதற்கு முனைந்தேன். சிறுகதை இலக்கிய வடிவம் எமக்கு மேனாட்டினரிடமிருந்து கிடைக்கப்பெற்றதாக விமர்சகர்கள் இன்றுவரையில் பதிவு செய்துகொண்டிருக்கிறார்கள். தமிழ்ச்சூழலில் எமது முன்னோர்கள் சிறந்த கதைசொல்லிகளாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை ஏனோ மறந்துவிடுகின்றோம். தொலைக்காட்சியின் வருகைக்குப்பின்னர் கதைகேட்கும் ஆர்வம் குழந்தைகளுக்கும் இல்லை. கதைசொல்ல பாட்டா, பாட்டிமாருக்கும் அக்கறை இல்லை. இலங்கையில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இவர்கள் அனைவருமே தற்பொழுது தொலைக்காட்சி நாடகங்களை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவுஸ்திரேலியா தமிழ்ச்சூழலும் அதற்கு விதிவிலக்கல்ல. பகல்பொழுதில் வேலைக்குச் செல்வதனால் தொலைக்காட்சித்தொடர்களை பிரத்தியேகமாக பதிவுசெய்ய வழிசெய்துவிட்டு – மாலை வீடு திரும்பியதும் அவற்றைப்பார்த்து திருப்தியடையும் நடைமுறை வந்துவிட்டது பல வீடுகளில். இந்த இலட்சணத்தில் எத்தனைபேர் சிறுகதைகளைப்படிக்கிறார்கள்? அல்லது படிப்பதற்கு நேரம் ஒதுக்குகிறார்கள்.? சிறுகதை எழுத்தாளர்கள் தமது படைப்பு தொடர்பாக எவரேனும், வாசகர் கடிதமாவது – கருத்தாவது எழுதமாட்டார்களா என்று காத்துக்கிடக்கின்றனர். சிறுகதைத்தொகுதியை வெளியிட்டால் அதனைப்பற்றி குறைந்தபட்சம் இதழ்களில் சிறிய அறிமுகக்குறிப்பாவது பதிவாகுமா? என்ற எதிர்பார்ப்புடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.