துளைகளிடப்பட்ட இதயங்களோடு தேர்தலை நோக்கிப் பயணிக்கும் வடக்கு

- எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை -அடிக்கொவ்வொன்றாய் இராணுவக் குடியிருப்புக்கள், சைக்கிள்களில் ஏறிப் பயணித்துக் கொண்டிருக்கும் இராணுவத்தினர், குண்டுகளும் ரவைகளும் ஏற்படுத்திய துவாரங்களைத் தாங்கியிருக்கும் வீடுகள், தலை சிதைந்துபோன தீக்குச்சிகளை நட்டுவைத்தது போல பனை மரங்கள்…இவற்றைத் தாண்டி சிறப்பாகச் செப்பனிடப்பட்டிருந்த ஏ9 பாதை வழியே நாம் கிளிநொச்சி நகரத்தைச் சென்றடைந்தோம்.   வடக்கின் வசந்தம் ஏ9 பாதையோடு மட்டுப்பட்டிருந்தது. ஏ9 ஐத் தாண்டியுள்ள கிராமங்கள் இன்னும் பிசாசுகளின் மைதானம் போலவே காட்சி தருகின்றன.  அம் மக்களின் முகங்களில் நிச்சயமற்ற தன்மையின் சாயல் படிந்திருந்தது. இடைக்கிடையே, உடைந்துபோன மதில்களில் சிரித்துக் கொண்டிருக்கும் முகங்கள் நெருங்கி வரும் தேர்தலை எமக்கு ஞாபகமூட்டுகின்றன. அவை அநேகமாக ஆளும்கட்சி வேட்பாளர்களது சுவரொட்டிகளே.  கிளிநொச்சியானது நீண்டகாலமாக விடுதலைப் புலிகளது கட்டுப்பாட்டிலிருந்த ஒரு பிரதேசமாகும். இப்பொழுது நடக்கப் போகும் மாகாணசபைத் தேர்தலானது, இங்குள்ள சிலர் 30 வருட காலத்துக்குப் பின்னர் முகம் கொடுக்கப் போகும் முதல் தேர்தலாகும். எனினும் அவர்கள் அதனை மிகப் பெறுமதியான ஒன்றாகக் கருதுவதில்லை. தேர்தல் எனப்படுவது, ஜனநாயக ஆட்சி முறையின் முதல் இலட்சணமாகும். எனினும் எமது பயண இலக்குகளான கிளிநொச்சி மற்றும் முல்லைத் தீவு மாவட்டங்கள் இன்னும் சிவில் ஆட்சி முறையிலிருந்து தூரப்படுத்தப்பட்ட, இராணுவ ஆட்சியின் கீழ், துயருறும் வாழ்க்கையை நடத்திச் செல்லும், கடந்த கால குரூர யுத்தத்தைத் தெளிவாகக் காட்சிப்படுத்தும்படியாக இருண்டுபோன பிரதேசங்களாகும்.

Continue Reading →

திரும்பிப் பார்க்கின்றேன்: சிவாஜி முதல் சிவாஜி வரையில் எழுதி ஓய்ந்த சுஜாதா

சுஜாதாஎழுத்தாளர் முருகபூபதிஇலக்கியப்படைப்புகள்  எழுதத்தொடங்குவதற்கு  முன்னர்  குமுதம்    இதழ்களில்    சுஜாதாவின்     எழுத்துக்களைப்    படித்திருந்த   போதிலும்    தொடர்ந்து படிப்பதற்கு    ஆர்வமூட்டாத    எழுத்துக்களாக அவை  என்னை   சோர்வடையச்செய்திருந்தன.  நான்  படித்த  சுஜாதாவின்  முதலாவது   தொடர் நைலான் கயிறு. அதுவும்  மர்மக்கதைதான். எனினும் அவரது   பாலம்   என்ற   சிறுகதை மாத்திரம்   நீண்ட   நாட்கள்   மனதில்  தங்கி   நின்றது.  அச்சிறுகதை   உளவியல்   சார்ந்து   வித்தியாசமாக   எழுதப்பட்டிருந்தது. நான்   தீவிரமாக   வாசிக்கத்தொடங்கிய  1970   காலப்பகுதியில்     சுஜாதாவின் பெரும்பாலான   கதைகள்  மர்மக்கதைகளாக  இருந்ததனாலோ   என்னவோ   பின்னர் அவற்றிலிருந்த    ஆர்வம்   குறைந்துவிட்டது. ஒருநாள்   இந்திராபார்த்தசாரதியின்   தந்திரபூமி   நாவலைப்படித்தபொழுது அந்நாவலுக்கு   சுஜாதா   எழுதியிருந்த   முன்னுரை  என்னைப்பெரிதும்   கவர்ந்தது.   அந்நாவலின்  நாயகன்   கஸ்தூரியின்   தோல்வியை   ஜூலியசீஸரின்  வீழ்ச்சிக்கு   ஒப்பானது   என    சுஜாதா  எழுதியிருந்தார். பின்னர்  மீண்டும்   அவரது எழுத்துக்கள்    மீது   ஆர்வம்   தோன்றியது.   சுஜாதாவின்    பாணியில்    இலங்கையில்   எழுதிய  ஒரு  எழுத்தாளரும்  எனது  இனிய   நண்பர்தான்.    அவர்தான்  தெளிவத்தை  ஜோசப்.     சுஜாதா   சங்கர் –  கணேஷ்   என்ற  இரட்டையர்களை  தமது  தொடர்கதைகளில்  துப்பறியும்   நிபுணர்களாக    படைத்திருந்தார்.  தெளிவத்தை  ஜோசப்  ரமேஷ் -ரவிந்திரன்   என்ற  புனைபெயரில்  சில  கதைகளை  சுஜாதாவின்   பாணியில்   எழுதிப்பார்த்தார்.   பிறகு  தொடரவில்லை.  இப்படி  சுஜாதாவின்   பாதிப்புக்குள்ளான    பல எழுத்தாளர்கள்   தமிழகத்திலும்  இலங்கையிலும்  மட்டுமல்ல   அவுஸ்திரேலியாவிலும்     இருக்கிறார்கள்.

Continue Reading →

மகேந்திரனின் உதிரிப்பூக்கள் – ஒரு மறுபார்வை

- வெங்கட் சாமிநாதன் -சில மாதங்களுக்கு முன் அருண், மகேந்திரனின் முள்ளும் மலரும் படத்தைப் பற்றி நான்  பேசாமொழிக்கு எழுதவேண்டும் என்று சொன்னார். அது மகேந்திரனின் முதல் படம் என்றும் தகவல் ஒன்று சொன்னார். எனக்கு சந்தோஷம் தான். ஆனால் முள்ளும் மலரும் நான் பார்த்தில்லை. தில்லியை விட்டு சென்னைக்கு மாறிக் குடி வந்த போது இங்கு முதன் முதலாக பொதிகை தொலைக்காட்சியில் மாறுதலாக பழைய தமிழ்ப் படங்களும் சில வித்தியாசமான தமிழ்ப் படங்களையும் பார்க்க முடிந்திருந்தது. விளம்பர வருமானத்தையே குறியாகக் கொள்ளாமல் மாறுபட்ட நடைமுறைகளை பொதிகை கைக்கொள்ள முடிந்திருக்கிறது காரணம், அது மத்திய அரசின் பொறுப்பில் இருந்தது தான். இப்படித்தான் மகேந்திரனின் உதிரிப்பூக்கள் படம் பார்த்து, ‘பரவாயில்லையே, இப்படியும் தமிழ்ல படங்கள் வருகின்றனவே” என்று சந்தோஷப்பட்டேன். அதை நான் பொதிகையில் பார்த்தேனா, இல்லை லோக்சபா தொலைக்காட்சியிலும் க்ளாஸிக்ஸ் என்று சொல்லி அனேக சிறப்பான படங்களையும் காட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்களே, அதிலா? நினைவில்லை. ஒரு வேளை லோக் சபா தொலைக் காட்சியிலும் பார்த்திருக்கக் கூடும். எதானால் என்ன, விளம்பர வருமானத்தையே நம்பியிருக்காத, அதையே குறியாகக் கொள்ளாத ஒரு தொலைக்காட்சி ஸ்தாபனத்தில் தான் இவற்றைப் பார்த்திருக்க முடியும். பார்த்தேன். இடையிடையே பழைய விஜயகாந்தின் பழைய படத்தையும் க்ளாஸிக்ஸ் என்று சொல்லிக் காட்டுவார்கள் லோக்சபா சானலில்.  பழசானால் க்ளாஸிக்ஸ் தானாமே.

Continue Reading →

முகநூற் குறிப்புகள்: மாடிக் கோயில்!

தமிழகத்தில் கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்கு முன்பு வரை எழுப்பட்ட கோயில்கள் அனைத்தும் மரம்,செங்கல்,சுண்ணாம்பு, உலோகம் போன்ற பொருட்களையே பயன்படுத்தினர், இதனால் இவை அதிகபட்சமாக ஒரு நூற்றாண்டிற்கு மேல் நிலைக்கவில்லை, பல நூற்றாண்டுக...ள் தாண்டி நிலைக்கும் கோயில்களை உருவாக்க வேண்டும் என்று எண்ணிய "மகேந்திர வர்மன்" என்ற பல்லவ மன்னன் முதன் முதலில் செஞ்சிக்கு அருகே இருக்கும் "மண்டகப்பட்டு" என்ற ஊரில் பாறைகளை குடைந்து "குடவரைக் கோயில்" ஒன்றை உருவாக்கினான் , இந்த குடவரைக் கோயில் தான் தமிழகத்தில் பிற்காலத்தில் கட்டப்படவிருந்த பல ஆயிரம் கலைக் கோயில்களுக்காக எழுப்பப்பட்ட அஸ்திவாரமாக அமைந்தது.தமிழகத்தில் கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்கு முன்பு வரை எழுப்பட்ட கோயில்கள் அனைத்தும் மரம்,செங்கல்,சுண்ணாம்பு, உலோகம் போன்ற பொருட்களையே பயன்படுத்தினர், இதனால் இவை அதிகபட்சமாக ஒரு நூற்றாண்டிற்கு மேல் நிலைக்கவில்லை, பல நூற்றாண்டுக…ள் தாண்டி நிலைக்கும் கோயில்களை உருவாக்க வேண்டும் என்று எண்ணிய “மகேந்திர வர்மன்” என்ற பல்லவ மன்னன் முதன் முதலில் செஞ்சிக்கு அருகே இருக்கும் “மண்டகப்பட்டு” என்ற ஊரில் பாறைகளை குடைந்து “குடவரைக் கோயில்” ஒன்றை உருவாக்கினான் , இந்த குடவரைக் கோயில் தான் தமிழகத்தில் பிற்காலத்தில் கட்டப்படவிருந்த பல ஆயிரம் கலைக் கோயில்களுக்காக எழுப்பப்பட்ட அஸ்திவாரமாக அமைந்தது. மாடிக் கோயில் என்பது “மாடிபோல் அமைந்த கோயில்” என்று பொருள், கோயில் விமானத்திற்குள் மாடிப்படிகள் அமைத்து (அதாவது ஒரே கோயிலுக்குள் பல கோயில்களை ஒன்றின் மேல் ஒன்றாக 1st FLOOR, 2nd FLOOR போன்று இவற்றை அமைத்திருப்பர். கடைசி கோயிலுக்கு சென்றடைந்ததும் நீங்கள் விமானத்தின் உச்சியில் நின்று கொண்டு ஊரின் அழகை ரசிக்கலாம், இது போன்ற கோயில்களை இன்று பார்ப்பது மிகமும் அபூர்வம். தமிழகத்தில் உள்ள சுமார் 40,000 மேற்பட்ட கோயில்களில், அந்த காலத்தில் கட்டப்பட்ட இந்த மாடிக்கோயில்களின் அமைப்பை தாங்கி இன்று தமிழகத்தில் இரண்டு கோயில்கள் உள்ளன. ஒன்று காஞ்சிபுரத்தில் உள்ள “வைகுண்டப் பெருமாள் கோயில்” மற்றொன்று உத்திரமேரூர் “சுந்தரவரதப் பெருமாள் கோயில்” இந்த இரண்டு கோயில்களும் பல்லவ மன்னர்களால் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவையாகும், தமிழகத்தில் முற்காலத்தில் செங்கற்களால் கோயில்கள் கட்டப்பட்டிருந்தன என்பதற்கு ஆதாரமாக பழைய பாடல்களில் காணமுடிகின்றது.

Continue Reading →

சிங்கம் வைத்திலிங்கத்தின் முகநூற் குறிப்பு: அனைத்துப் போராளிகளையும் மக்களையும் நினைவில் நிறுத்துவோம்!

தமிழ் மக்களின் அரசியல் வரலாற்று வாழ்வியலில் அனைத்து அடக்கி-ஒடுக்கல்களுக்கும்-எதிராகப் போராடி மடிந்த அனைத்துப் போராளிகளையும் மக்களையும் நினைவில் நிறுத்துவோம். அவர்களின் தியாகங்களுக்கு சிரம் தாழ்த்துவோம்.

Continue Reading →

திரைப்படம் எதிர் இலக்கியம்

யமுனா ராஜேந்திரன்திரைப்படம் மனித நடத்தையை விளக்க முயலும் காட்சிரூப மொழியிலானது. இலக்கியம் மனித உளவியலை விளக்க முயலும் குறியீடுகளான சொற்களால் ஆனது. திரைப்படத்தில் மனிதர்களின் உடல்மொழி அடிப்படையானது எனில், இயற்கை அதனது துணைப்பிரதி. மௌன இடைவெளி திரைப்படத்தில் பெரும் அர்த்தம் உளவியல் மொழியிலானது. இலக்கியத்தில் மௌன இடைவெளி கற்பனைக்கு உரிய இடம். ஸ்பரிச அனுபவம் என்பதனை திரைப்படம் பாவனைகளாலும் இலக்கியம் சொற்களாலும் பற்றிப் பிடிக்க முனைகிறது. இரண்டும் தத்தம் அளவில் வெகுதூரம்-காலம் பயணம் செய்து தமக்கென தனித்தனி தர்க்கங்களையும் கொண்டிருக்கிறது. ஓன்றைவிடப் பிறிதொன்று மேன்மையானது என இதன் இரண்டினதும் வரலாற்றினையும் சாதனைகளையும் கொடுமுடிகளையும் அறிந்த எவரும் சொல்ல மாட்டார்கள். இப்படிச் சொல்ல முனையும் இலக்கியவாதியை திரைப்படக் கலையை அறியாதவன் எனவும், திரைப்பட இயக்குனரை இலக்கியம் அறியாதவன் எனவுமே சொல்ல முடியும்.

Continue Reading →

சோபாசக்தியின் நாவல்கள் ‘கொரில்லா,ம் குறித்து’

 ஆய்வுச்சுருக்கம்:

ஷோபாசக்தி சு. குணேஸ்வரன் ஷோபாசக்தியின்  ‘கொரில்லா’, ‘ம்’ ஆகிய நாவல்கள் ஈழப்போராட்ட அரசியல் வரலாற்றைப் புனைவாக்கிய படைப்புக்களாகும்.  புகலிடத்தில் இருந்து வெளிவந்தவற்றுள் உள்ளடக்கத்தாலும்  உருவத்தாலும் புனைவுமொழியாலும் வித்தியாசங்களைக் கொண்டவை. ‘கொரில்லா’ ஈழப்போராட்டம் தொடங்கிய வரலாற்று ஓட்டத்தை ஒரு பகுதியாகச் சித்திரிக்கிறது. தமிழ்ப் போராளி அமைப்புக்களின் ஆரம்ப காலச் செயற்பாடுகள், அவற்றுக்கிடையிலான முரண்பாடுகள்  ஆகியவற்றை நிஜ மாந்தர்களின் கதைகளின் ஊடாகச் சொல்கிறது. ‘ம்’ நாவலும் இந்தப் போராட்ட அரசியலின் தொடர்ச்சியான வீழ்ச்சியினைப் பேசுகிறது. நாவல்கள் இரண்டிலும் அதிகாரமும் துரோகமும் தப்பித்தலும் இயலாமையும் நிறைந்திருப்பதைக் காணலாம். இவற்றில் வெளிப்படும் எள்ளலுக்கூடாக ஈழ அரசியல் பற்றிய விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது. இரண்டு நாவல்களும் மரபுமுறையான கதை சொல்லும் உத்தியை நிராகரிக்கின்றன. முதலில் ஒரு போராளியாக இருந்து பின்னர் எழுத்தாளரான ஷோபாசக்திக்கு போராட்டச்சூழல் அன்னியமானதல்ல என்பதும் இங்கு குறிப்பிடவேண்டும். இவ்வகையில், ஈழப் போராட்ட வரலாற்றைப் புனைவாக்கிய புகலிட நாவல்கள் என்றவகையில்  தமிழ்ச்சூழலில் கவனத்திற்குரியனவாகவும் விரிவான ஆய்விற்குரியனவாகவும் அமைந்துள்ளன.

Continue Reading →

இரு ஓவியர்களின் உரையாடல்கள்

- வெங்கட் சாமிநாதன் -இரு ஓவியர்கள், நெடு நாள் நண்பர்கள் தம் சாவகாசமான பேச்சில் என்ன பேசிக்கொள்வார்கள்? தில்லி மும்பை ஒவியர்களாக இருந்தால் சர்வ தேச தளங்களில் தம் ஒவியங்களுக்கு திடீரென கிடைத்துவரும் திடீர் மவுஸ் பற்றி, ஹுஸேனும் ரஸாவும் டி சோஸாவும் இந்திய ஒவியங்களுக்கு ஏற்படுத்தியுள்ள கவனிப்பு பற்றி, பேசியிருக்கக் கூடும்.  ஆனால் தமிழகத்து ஒவியர்களுக்கு அப்படியான சிந்தனைகள் செல்ல வாய்ப்பில்லை. இன்னம் அவர்களுக்கு அத்தகைய வாய்ப்பு கிட்டியிருக்க வில்லை. ஒவியங்கள் பற்றி, தம் புதிய முயற்சிகள் பற்றி, அவற்றைச் சந்தைப் படுத்துவது பற்றி.  தம் குடும்ப சுக துக்கங்கள் பற்றி, தமிழக சூழலில் தாம் ஓவியராக வாழ்வது பற்றி? அத்தோடு அவர்கள் போராட முடியாது. எத்தகைய சூழலிலும் தாம் ஒவியராக துணிந்து வாழ்வதன் மூலமாகவே தம் இருப்பை அவர்கள் ஸ்தாபித்துக்கொள்ள முடியும். அதிகார மையங்கள், அரசு நிறுவனங்கள் சார்ந்து வாழவேண்டிய நிர்பந்தங்கள் ஏற்படலாம். ஆனால் அவற்றையும் மீறி தம் இருப்பை சிலர் நிலை நிறுத்திக்கொள்ள முடியும். திருக்குறள் அத்தியாயம் ஒவ்வொன்றுக்கும் ஒரு படம் போட்டுக்கொடு என்று வேண்டுகோள் பிறக்கலாம். எதிர்ப்பது பகையை வளர்க்கும். கிடைக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு ஏதோ படம் போட்டுக்கொடுத்து விட்டு அதை மறந்து விடலாம். அது தனது என்று அவர்கள் பெருமைப் பட்டுக்கொள்ள வேண்டாம். போட்டுக்கொடுத்த படம் தானே மறைந்து விடும். ஒரு குறுகிய கால விளம்பரத்துக்கு வேண்டப்பட்டது அது.

Continue Reading →

கவிதை: பொருள் சார்ந்த நிரல்! (An object oriented program)

– எனது வலைப்பதிவுக்காக எழுதிய ‘An object oriented program’ கவிதையின் தமிழாக்கம். – வ.ந.கி – –

பொருள் சார்ந்த 'புறோகிறாம்' (An object oriented program)

வீழும் இலை, பாடும் புட்கள்,
நீல வான், மரங்கள், சுடரும் நட்சத்திரங்கள்,
மானுடர்….
நாம் இயங்கும் வெளி-நேர
நிரலினை
எழுதியது யார்?

Continue Reading →

தமிழ் எழுத்தில் ஒரு புதிய உலகின் நுழைவு – வெங்கடேஷின் நாவல், இடைவேளை

தமிழ் எழுத்தில் ஒரு புதிய உலகின் நுழைவு – வெங்கடேஷின் நாவல், இடைவேளை- வெங்கட் சாமிநாதன் -கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்னிருந்து  தகவல் தொழில் நுட்பம் சார்ந்த வளர்ச்சி, இந்திய படித்த இளைஞர்களிடையே ஒரு பெரிய கனவுலகத்தைச் சிருஷ்டித்தது. அவர்கள் என்றும் நினைத்தும் பார்த்திராத பொருளாதார வளத்தையும் அவர்கள் காண்பது கனவல்ல என்ற நினைப்பையும் தந்தது. தகவல் தொழில் நுட்பம் நுழையாத துறை இல்லை என்று ஆகியது. அது இல்லாது வளர்ச்சி அடையும் துறை இல்லை என்றாகியது. எல்லா பொறியியல் துறைகள் மாத்திரமல்ல, கல்வியிலிருந்து தொடங்கி பலசரக்கு வியாபாரம் வரை அதன் வியாபகம். ஒரு காலத்தில் நமக்குத் தெரிந்த சிவில், எலெக்ட்ரிகல், மெக்கானிகல் கல்லூரிகளுக்கு இருந்த மவுசும், தலைநிமிர்வும் குறைந்து தகவல் தொழில் நுட்பத்துக்குத் தாவியது. கல்லூரி வாசலில் வேலை வாய்ப்புகள் தேடி வந்தன. படிப்பு முடிந்ததும் நாலு அல்லது ஐந்து இலக்க சம்பள வாய்ப்புக்களைத் தேடி அலைந்த காலம் போய் கல்லூரி வாசலில் ஆறு இலக்க வாய்ப்புக்கள் தேடி வந்தன. செங்கல் புழுதி முகத்தில் படிய வெயிலில் நிற்க வேண்டாம். கை கரியாகாது, உடையில் எண்ணைக் கரை படியாது.  பிரம்மாண்ட குளிர் பதன கட்டிடங்களுக்குள் தூசி படியாது வியர்க்காது உடையின் மடிப்பு கலையாது வேலை. அலுவலகத்தில் இருப்பு ஒரு சின்ன தடுப்புக்குள் தான், இருந்தாலும் என்ன! அமெரிக்காவும், ஜெர்மனியும் ஃபின்லாந்தும் தில்லியோ சென்னையோ என ஆயிற்று. சென்னை பெண்ணுக்கு அமெரிக்காவிலிருந்து வரும் மாப்பிள்ளை, புதிதாகத் தோன்றும் முப்பது மாடி, கட்டிடத்தில் ஒரு ஃப்ளாட். பழசாகிவிட்டது என்று எண்ணி அடிக்கடி மாற்றும் புது மாடல் கார்கள். திடீரென தகவல் தொழில் நுட்பம் படித்தவர்கள் எங்கோ ஒரு உச்சத்தில் தான் உட்கார்ந்து கொண்டார்கள்.

Continue Reading →