யாழ்ப்பாணம் அரியாலையில் நாவலர் வீதியில் அமைந்த ஸ்ரான்லி கல்லூரியில் (தற்பொழுது கனகரத்தினம் மத்திய கல்லூரி) 1962 ஆம் ஆண்டளவில் எனக்கும் எனது மச்சான் முருகானந்தனுக்கும் ஆறாம் வகுப்பு புலமைப்பரிசில் அனுமதி கிடைத்தது. அப்பொழுது எனக்கு பதினொரு வயதிருக்கும். நான் முதல் தடவையாக பனைமரங்களைப்பார்த்தது அக்காலத்தில்தான். அதற்கு முன்னர் அந்தக்கற்பகதருவை பாடசாலை பாடப்புத்தகங்களில்தான் பார்த்திருக்கின்றேன். ஈழவிடுதலைப்போராட்டம் ஆரம்பமானதன்பின்பு பல இலக்கிய மற்றும் ஆய்வு நூல்களில் பனைமரங்கள் அட்டைப்படமாகின. ரஜனி திராணகம சம்பந்தப்பட்ட யாழ். பல்கலைக்கழக மனித உரிமை ஆசிரியர் சங்கத்தின் வெளியீடான முறிந்த பனை, மூத்த பத்திரிகையாளர் கார்மேகத்தின் ஈழத்தமிழர் எழுச்சி, செ.யோகநாதன் தொகுத்த ஈழச்சிறுகதைகள் வெள்ளிப்பாதசரம், ஜெயமோகனின் ஈழத்து இலக்கியம், பேராசிரியர் கா.சிவத்தம்பியின் யாழ்ப்பாணம் சமூகம் – பண்பாடு – கருத்துநிலை உட்பட பல நூல்கள் பனைமரத்தை ஒரு குறியீடாகவே அட்டைகளில் சித்திரித்துள்ளன.
இலக்கிய ஆய்வு நூலுக்கான ‘தமிழியல் விருது–2011’ என்ற பரிசைப் பெற்ற நுணாலிலூர் கா. விசயரத்தினம் அவர்களால் எழுதப்பட்ட ‘வியக்க வைக்கும் பிரபஞ்சம்’ என்ற அறிவியல் நூலொன்று அண்மையில் வெளிவந்துள்ளது. வியக்க வைக்கும் பிரபஞ்சம்! இது நாம் அனைவரும் ஒப்பும் ஓர் உண்மை. வியப்பு என்பது அறிவினால் அளவிட முடியாது எனும் உணர்வும், உணர்வினால் உணர்த்திட முடியாது எனும் அறிவும் ஒருசேரத் திரண்ட திகைப்பு எனலாம். இந்நூலில், கதிரவன் மண்டலம் அன்றும் இன்றும், பிரபஞ்சம், விண்மீன்கள், சூரியன், நிலாக்கள், ஒன்பது கோள்களாகிய புதன், சுக்கிரன், பூமி, வௌ;வாய், வியாழன், சனி, விண்மம் (யுறேனஸ்), சேண்மம் (நெப்டியூன்), சேணாகம் (புளுட்டோ), பிரபஞ்சத்துக்கும் அப்பால், வான் கங்கை, நான்கு வேறுபட்ட சூரியன்களின் ஒளி பெற்றுப் பவனி வரும் ஒரு புதிய கோள் ஆகியவை பற்றிப் பேசப்படுகின்றன. இவைகள் அனைத்தும் வான்வெளித் தொடர்பு பற்றிய செய்திகளாகும். மேலும் இவைகள் யாவும் முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்தனவாகும். சூரிய குடும்பத்திலுள்ள ஒன்பது கோள்களில் முதல் ஆறு கோள்களாகிய புதன், சுக்கிரன் (வெள்ளி), பூமி, செவ்வாய், வியாழன், சனி ஆகியவற்றிற்குத் தமிழ்ப் பெயர்கள் அமைந்துள்ளன. மற்றைய மூன்று கோள்களாகிய யுறேனஸ், நெப்டியூன், புளுட்டோ ஆகியவற்றிற்குத் தமிழ்ப் பெயர்களின்றி ஆங்கிலச் சொற்கள்தான் பாவனையில் இதுவரை இருந்துள்ளன. இவற்றிற்கான தமிழ்ப் பெயர்களை முறையே விண்மம், சேண்மம், சேணாகம் என்று பாவனைப்படுத்தி முதல் அடி எடுத்து வைத்துள்ளார் ஆசிரியர்.
நடிப்பதற்காகவே எழுதப்படும் படிப்பதற்காக மாத்திரம் எழுதப்படும் நடிப்பதற்கும் படிப்பதற்கும் எழுதப்படும் நாடகங்கள் என்று மூன்றுவகைகள் இருப்பதாக ஒரு சந்தர்ப்பத்தில் பேராசிரியர் மு.வரதராசன் குறிப்பிட்டார். நாடகங்களை எழுதினால் நடிக்கமாத்திரமே முடியும். படிப்பதற்காக நாடகங்கள் எழுதமுடியாது எனச்சொல்லும் விமர்சகர்களும் இருக்கிறார்கள்.ஒரு காலத்தில் தமிழ் சினிமாப்படங்களின் கதை வசனங்கள் கையிலே சுருட்டக்கூடிய பருமனில் சிறு நூல்களாக வெளியாகின. அவற்றைப்படித்துப்பாடமாக்கி பாடசாலைகளிலும் மற்றும் பிரதேச சனசமூகநிலையங்கள் ஊர் மன்றங்களில் நாடகம் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக வீரபாண்டிய கட்டபொம்மன் (வசனம் சக்தி கிருஷ்ணசாமி) இரத்தக்கண்ணீர் (வசனம் திருவாரூர் தங்கராசு) திரைப்பட வசனத்தை வைத்துக்கொண்டு நடித்திருக்கிறார்கள். வரி வட்டி திறை வானம் பொழிகிறது… பூமி விளைகிறது… வயலுக்கு வந்தாயா ஏற்றம் இறைத்தாயா…அங்கு கொஞ்சி விளையாடும் எம்குலப்பெண்களுக்கு மஞ்சள் அரைத்துக்கொடுத்தாயா? மாமனா மச்சானா. என்று பாடசாலைக்காலத்தில் கட்டபொம்மன் வசனம் பேசிய பலர் எம்மத்தியில் இருக்கிறார்கள்.
[ பதிவுகள் ஜூன் 2004 இதழ் 54 இதழில் வெளியான கட்டுரை.-] இன்று பெண்மொழி, பெண்களின் எழுத்து என்பன பரவலாகப் பேசப்படுகிறது. அவை குறித்த சர்ச்சைகளும், விவாதங்களும் பரவலாக இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் மைதிலியின் ‘இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள்’ என்ற நு¡ல் வெளிவந்திருக்கிறது. சல்மாவின் ‘ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’ மாலதி மைத்ரியின் ‘சங்கராபரணி’ மற்றும் குட்டிரேவதியின் ‘முலைகள்’ தொகுப்பைத் தொடர்ந்து பெண்களின் வெளிப்படையான எழுத்துத் தொடர்பாய் சர்ச்சைகள் வெகுசன ஊடகங்களிலும் சிற்றிதழ்களிலும் இடம்பெற்று வருகிறது. அடக்குமுறை சார்ந்த வாழ்வின் வலியைச் சொல்லும் சல்மாவின் ‘ஒப்பந்தம்’ என்ற கவிதையில் கூட
‘எல்லா அறிதல்களுடனும்
விரிகிறதென் யோனி’
என்ற இறுதி வரிகளையே பத்திரிகைகளில் எடுத்துப் போட்டிருந்தார்கள். அதனு¡டாக சர்ச்சையில் குளிர்காயும் ஒரு வியாபாரத் தன்மைதான் தென்படுகிறது. ‘காமத்துப்பால் கவிதைகள்’ என்ற தலைப்பில் இந்தியா ருடே எடுத்துப் போட்டிருக்கிறது. இவற்றிலெல்லாம் மிகுந்த அக்கறையுடன் ஊடகங்கள் செயற்ப்பட்டு வருகின்றன. ‘முலைகள்’ போன்ற பெண்களின் தொகுப்புக்களுக்கான விமர்சனங்களைப் பார்க்கையில், முலைகள் யோனி போன்றவைகள் ஆண்களுக்குச் சொந்தமானது போலவும் அவர்கள்தான் அதைப்பற்றி எழுத முடியும் என்பது போலவும் இருக்கிறது. சமகால சூழல் இப்படியிருக்க, ஈழத்தில், தொண்ணு¡றுகளிலேயே வெளிப்படைத் தன்மை கொண்ட கவிதைகளை மைதிலி எழுதியுள்ளார்.
ஈழத்து கவிதை உலகில் தனக்கென தனி இடத்தைப் பெற்றவர்களில் ஒருவராகத் தெரிபவர் வானம்பாடி என அன்புடன் அழைக்கப்படும் வதிரி.சி.ரவீந்திரன் ஆகும். 25/10/1953இல் சாவகச்சேரியில் பிறந்த இவர் வதிரியையும், பின்னர் கொழும்பையும் வாழ்விடமாகவும் கொண்டிருப்பதனால் இவரின் சிந்தனைத் தளம் விரிவடைய பலருடன் நட்புடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. இவரின் கவிதை முயற்சி பூம்பொழிலில் எழுதியதுடன் ஆரம்பமாகியது எனலாம். கவிதை,சிறுகதை, கட்டுரை, நாடகம், நூல்விமர்சனம் என தன் திறமையை வெளிப்படுத்தி நின்றாலும் கவிதை மூலமே அறியப்பட்டவர். சாவகச்சேரி ட்றிபேக் கல்லூரியிலும், வதிரி.வடக்கு மெதடிஸ்ட் மிஷன் பாடசாலையிலும், உய்ர வகுப்பை கரவெடி தேவரியாளி இந்துக் கல்லூரியிலும் பயின்றார். இளமையிலேயே வாசிக்கும் பழக்கத்தினை கொண்டிருந்தவரின் அறிவுப் பசிக்குத் தீனி போடுபவர்களாக பலர் இருந்திருக்கிறார்கள். குறிப்பாக இவருக்கு வாய்த்த ஆசிரியர்களும், நண்பர்களும் தான்.தேவரையாளி இந்துக் கல்லூரியின் பெருமை இலக்கியத்தும் உண்டு. அங்கு படித்த காலத்தில் தான் எழுத்தாளர். திரு.தெணியான், கவிஞரும், நாடகாசிரியருமான கலாநிதி.காரை.எஸ்.சுந்தரம்பிள்ளை ஆகியோரின் நெறிப்படுத்தல் இவருக்குக் கிடைத்ததும் வாய்ப்பாக அமைந்தது. நாடகங்களில் நடிக்கும் ஆர்வம் மேலோங்க பல நாடகங்களில் நடித்தும் உள்ளார். கலாநிதி.காரை.சுந்தரம்பிள்ளை அவர்களினதும்,திரு.இளவரசு ஆழ்வாப்பிள்ளையினதும் நாடக இயக்கம் நடிப்பில் ஜொலிக்க உதவியது.நாடகப் பயிற்சிப் பட்டறையின் அனுபவம் இன்று வரை நாடக விமர்சகராகவும்,தேசிய நாடக சபை உறுப்பினராகவும் இயங்க முடிந்திருக்கிறது.
எனது வலைப்பதிவுக்காக Night என்னும் தலைப்பிலெழுதிய ஆங்கிலக் கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு.
தாய்ப்பறவை தனது
சிறகுகளைப் பரந்து
விரிக்கிறது.
கருமையின் சிறகுகள்.
ஜீவநதியின் 28 ஆவது வெளியீடாக மலர்ந்திருக்கிறது ப. விஷ்ணுவர்த்தினி எழுதிய நினைவு நல்லது வேண்டும் என்ற சிறுகதைத் தொகுதி. 93 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்நூலில் 12 சிறுகதைகள் இதில் உள்ளடங்கியிருக்கின்றன. அருள் திரு இராசேந்திரம் ஸ்ரலின் அவர்களின் வாழ்த்துச் செய்தியோடு, வி. ஜீவகுமாரனின் முன்னுரையும் இத்தொகுதியை அலங்கரிக்கின்றன எனலாம். இது நூலாசிரியரின் இரண்டாவது சிறுகதைத் தொகுதியாகும். இவர் ஏற்கனவே 2010 இல் மனதில் உறுதி வேண்டும் என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். நினைவு நல்லது வேண்டும் என்ற சிறுகதைத் தொகுதி போரின் கொடுமைகள், மக்கள் அதனால் பட்ட அவதிகள், யுத்தம் அழித்துச் சென்ற செல்வங்கள் போன்ற பலதரப்பட்ட விடயங்கள் சம்பந்தப்படுத்தி எழுதப்பட்டிருப்பதானது, போர் மக்களின் மனதில் எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது என்பதை நன்கு உணரக்கூடியதாக இருக்கின்றது. எத்தனை ஆயிரம் உயிர்கள் இந்த போரின் போது இறந்தன? எத்தனை நபர்கள் காணாமல் போயுள்ளனர்? என்ற அடிப்படைக் கேள்விகளுக்கு விடையே இல்லாத சூழலில் இந்தத் தொகுதியானது சிலருக்கு, சிறந்த ஆறுதலாகக்கூட இருக்கலாம் என்ற அளவுக்கு அதில் சித்தரிக்கப்பட்டுள்ள விடயங்கள் மனதைக் கவர்கின்றன.
வெ.சா.அவர்கள் தனது ‘தற்கொலைக்கு ஒரு கலைஞனை விரட்டும் சமூகம்’ கட்டுரையில் “வியாளம் என்றொரு புத்தகம் சமீபத்தில் என் நெடுநாளைய நண்பர், பேராசிரியர், தமிழறிஞர் செ.ரவீந்திரனிடமிருந்து வந்தது. வியாளம் என்றால் என்ன பொருள் என்று தெரியவில்லை. தமிழறிஞர் எனக்குத் தெரிந்தவர் சிலரிடம் கேட்டுவிட்டேன். தெரியவில்லை. இதைப் படிப்பவர் யாராவது சொல்லக் கூடும்.” என்று வேண்டுகோளொன்றினை விடுத்திருந்தார். அது பற்றிச் சில வார்த்தைகளைப் பதிவு செய்வதே இக்குறிப்புகளின் நோக்கம். தமிழ் இலக்கியத்தில் வியாளம் என்ற சொல் பாம்பு, புலி, யாளி, கெட்ட குணமுள்ள யானை போன்ற பல அர்த்தங்களில் கையாளப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. தோலாமொழித்தேவர் இயற்றிய ‘சூளாமணி’யில் 912 பாடலாகப் பின்வரும் பாடல் வருகிறது.
வியாளம் என்றொரு புத்தகம் சமீபத்தில் என் நெடுநாளைய நண்பர், பேராசிரியர், தமிழறிஞர் செ.ரவீந்திரனிடமிருந்து வந்தது. வியாளம் என்றால் என்ன பொருள் என்று தெரியவில்லை. தமிழறிஞர் எனக்குத் தெரிந்தவர் சிலரிடம் கேட்டுவிட்டேன். தெரியவில்லை. இதைப் படிப்பவர் யாராவது சொல்லக் கூடும். மிகுந்த சோகத்துடனும் இழப்பின் வலியுடனும் பாச உணர்வுடனும் இளமையில் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட ஒரு கலைஞனுக்கு அவரது தோழமையும் உடன் செயலாற்றும் வாய்ப்பும் பெற்றவர்கள் தங்கள் நினைவுகளை அஞ்சலியாகத் தந்துள்ளதன் தொகுப்பு இது. மறைந்த கலைஞனின் ஆளுமையையும் நேர்மையையும் பிரதிபலிப்பதே போல, மிக எளிமையான மிகுந்த தன்னடக்கம் கொண்ட, எவ்வித பகட்டும் அற்ற அவருடன் கொண்ட தங்கள் பாசத்தையும் அவரது ஆளுமையும் செயலும் தங்களுக்குத் தந்த வியப்பையும் பதிவு செய்துள்ள அஞ்சலி இது. வேலாயுதம் அந்தக் கலைஞனின் பெயர். தன்னடக்கம், எளிமை என்றேன். ஆளுமையும் செயல் திறனும் தந்த வியப்பு என்றேன். இவையே அவரை அந்த சோக முடிவுக்கு இழுத்துச் சென்றதோ என்னவோ.
[ அமரர் ஏ.ஜே.கனகரத்னாவின் நினைவு தினம் அக்டோபர் 11. அதனையொட்டி ‘பதிவுகள்’ இதழ் 38இல் (பெப்ருவரி 2003) வெளியான யமுனா ராஜேந்திரனின் இக்கட்டுரை மீள்பிரசுரமாகின்றது. – பதிவுகள் – ]
(1). மத்து : மித்ர: சென்னை: மறுபிரசுரம் : டிசம்பர் 2000. (2). மார்க்சியமும் இலக்கியமும் : சில நோக்குகள் : அலை வெளியீடு : யாழ்ப்பாணம் 1981. (3). செங்காவலர் தலைவர் யேசுநாதர் : மித்ர : சென்னை : டிசம்பர் 2000
அக்டோபர் புரட்சி தொடங்கி இரண்டாயிரமாண்டு இறுதிவரையிலான ஆண்டுகள் , உலகின் மிகப்பெரிய வரலாற்று உற்பவங்களுக்குச் சாட்சியமாக இருக்கிறது. 1968 பிரெஞ்சு மாணவர் எழுச்சியும், அதைத் தொடர்ந்து சமவேளையில் முதலாளித்துவத்துக்கும், அதிகாரவர்க்க சோசலிசத்திற்கும் எதிரான கலாச்சார விமர்சகர்களும் படைப்பாளிகளும் தோன்றினர் இலக்கியவாதியான ஸார்த்தர், கோட்பாட்டாளரான மார்க்யூஸ், உளவியல் ஆய்வாளரான எரிக் பிராம், பொருளியலாளரான கென்னத் கால்பிரெய்த் போன்றவர்கள் அக்கால கட்டத்தில் முக்கியமான சிந்தனையாளர்களாக இருந்தனர். எண்பதுகள் அதிகார வர்க்க சோசலிசத்தின் வீழ்ச்சியும், தேசிய இன எழுச்சிகளின் உச்சபட்ச வீச்சும் நிகழ்ந்த ஆண்டுகளாகின. இருபதாம் நு¡ற்றாண்டின் இறுதி ஆண்டுகளில், உலக முதலாளித்துவம், ‘உலகமயமாதல்’ எனும் புதிய பெயராகியிருக்கிறது. சோசலிசத்தினதும் இடதுசாரிக் கோட்பாட்டினதும் கோஷங்களை இன்று மதவழிப்பெருந்தேசியம் ஸ்வீகரித்துக் கொண்டுவிட்டது. இனக்குழுக்களுக்கிடையிலான போர்களும், விளிம்பு நிலை மக்களுடைய வேட்கைகளும், பெண்விடுதலை குறித்த பிரக்ஞையும் எமது நாடுகளில் புதிய வீறுடன் எழுந்திருக்கிறது. ஏ.ஜேயின் எழுத்துக்கள் இந்தக் கால இடைவெளியில் நிகழ்ந்த அறிவுத்துறை நடவடிக்கைகளைத் தமிழில் ஆவணப்படுத்தியிருக்கிறது. வரலாற்று உற்பவங்களுக்கு ஆதாரமாகவிருந்த, உலகைக் குலுக்கிய முக்கியமான புத்தகங்கள், தமிழ் மொழியில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. மார்க்சீய அழகியல் தொடர்பான விவாதங்கள் தொகுக்கப்பட்டிருக்கிறது. இந்த நு¡ற்றாண்டு அறிவுப் பரப்பின் குறுக்கு வெட்டுத்தோற்றத்தை, ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் கால கட்டத்தில் அறிமுகம் கொள்ள நினைக்கிறவர்களுக்கு நிச்சயமாகவே நாம் ஏ.ஜே.யின் எழுத்துக்களைப் பரிந்துரைக்கமுடியும்.