திரும்பிப்பார்க்கின்றேன்:: யாழ்தேவி நீ யார் தேவி? நிற்பதும் ஓடுவதும் யாருக்காக? எடிட்டிங் கற்றுத்தந்த எடிட்டர் ‘நடா’ நடராஜா

யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் யாழ்தேவி ஓடவிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திபார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.    தற்பொழுது கிளிநொச்சிவரையில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த ரயில் பற்றித்தான் எத்தனை சுவாரஸ்யமான கதைகள் இருக்கின்றன. காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு…

Continue Reading →

ஆண் பெண் பேதம் பேசும் தமிழ் இலக்கியப் பாங்கு

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)ஆரம்ப காலந்தொட்டுப் பெண்களை விட ஆண்களின் ஆற்றல் மேம்பட்டிருந்ததை அவதானிக்க முடிகின்றது. இதைக் கருத்திலெடுத்த அன்றைய ஆன்றோரும் சான்றோரும் ஆண்களுக்கென்று புறம் சார்ந்த சில இயல்புகளையும், பெண்களுக்கென்று அகம் சார்ந்த சில இயல்புகளையும் வரையறுத்துக் கொடுத்துள்ளனர். இதன் பிரகாரம் ஆண்கள் தம் குடும்பத்தைப் பேணிப் பாதுகாத்தல், பொருளீட்டல், போரிட்டு நாட்டைக் காத்தல், இனத்தைக் காத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டனர். அதே நேரம் பெண்கள் சமைத்தல், வீட்டு வேலைகளைக் கவனித்தல், கணவர் பிள்ளைகளைப் பேணல், உற்றார் உறவினரை அரவணைத்து விருந்தோம்பல் போன்றவற்றில் ஈடுபட்டிருந்தனர். இவ்வண்ணம் பெண்கள் வீட்டோடு இருந்து கொள்ள, ஆண்கள் வெளி உலகத்தோடு பழகத் தொடங்கினர். இது ஆண், பெண் ஆகியோருக்கிடையில் ஏற்ற இறக்கம் உருவாவதற்கு ஏதுவாயிற்று. அக்காலப் பெண்களும் வீட்டோடு முடங்கிக் கிடக்கப் பழகிக் கொண்டனர். இதைப் பழக்கப் பட்டனர் என்றும் கூறலாம். ஆண் உதவியின்றிப் பெண்களால் தனித்து ஒரு கருமமும் ஆற்ற முடியாதிருந்தது. அவர்களுக்கு உதவத் தகப்பன், சகோதரர்கள், கணவர், பிள்ளைகள் என்று பலர் தயாராயிருந்தனர். ‘பெண் தன்னை அழகுபடுத்தக் கூடாது, தனித்து வீட்டுக்கு வெளியில் வரக் கூடாது, பிற ஆடவர் கண்களில் படக் கூடாது’ என்ற கடும் கட்டுப்பாடுகள் அன்றைய பெண்களை வாட்டி வதைத்தன. அவர்களும் நாளடைவில் இவற்றிற்கு அடிமையாயினர்.

Continue Reading →

ஐம்பது வருடங்களின் வளர்ச்சியும் மாற்றங்களும் (3)

- வெங்கட் சாமிநாதன் -இந்த இடத்தில், சந்தர்ப்பத்தில் சல்மா என்னும் கவிஞரைப் பற்றிப் பேசுவதும் பொருத்தமாக இருக்கும். அதற்கான காரணங்கள் சுவாரஸ்யமானவை பல. சல்மா தன் கவிதைகளில் தன் சொந்த துயரங்களையும் இழப்புகளையும் பற்றித் தான் பேசுகிறார் என்று தோன்றும். ஆனால் அவை உண்மையில் அத்தோடு நிற்பதில்லை. இறக்கை முளைத்துப் பறக்கத் தொடங்கி விடுகின்றன. அக்கவிதைகள் வேறு நிலைகளுக்கு நம்மை இட்டுச் செல்கின்றன. தன்  சொந்த துயரங்கள், தன் குடும்பத் துயரங்களாக, ஒரு சமூகத்தின் துயரங்களாக, அவர் சார்ந்திருக்கும் மதத்தின் நிலைப் பாட்டிலிருந்து பெறும் துயரங்களாக விரிவடைகின்றன, அவரை  மட்டிலும் ஒரு பெண்ணாக, தனிப்பட்ட வியக்தியாகத் தாக்கி வதைக்கும் துயரமாக நின்றுவிடாது பெண் சமூகம் முழுதையும், தான் சார்ந்த இஸ்லாமிய பெண் சமூகம் முழுதும் ஆழ்த்தியிருக்கும் துயரமாக, இழப்புக்களாக விரிவு படுகிறது. மதம் மாத்திரமல்ல, ஆண் வர்க்கமே தன் மதத்தின் துணை கொண்டு தன் மேலாண்மைக்கு தன் மதத்தையே ஆயுதமாக, சமூக நியாயமாக பயன்படுத்திக்கொள்கிறது. சல்மாவின் சொந்த துயரங்களும் இழப்புக்களும் பெண்சமூகத்தின் துயரங்களுக்கும் இழப்புக்களுக்கும் metaphor ஆகிறது. அவரது குரல் பெண்சமூகமே, குறிப்பாக இஸ்லாமிய பெண் சமூகமே அதை அழுத்தி வதைக்கும் ஆணாதிக்கத்துக்கு எதிராக எழுப்பும் குரலாகிறது. சல்மாவுக்கு அவரது கவிதைகள் விடுதலைக்கான மொழியாகிறது.

Continue Reading →

தனித்து விடப்பட்ட பாதையில் தனித்து நடந்து வந்த ஒரு மனிதர்

- வெங்கட் சாமிநாதன் -கடந்த சனிக்கிழமை செப்டம்பர் மாதம் 7-ம் தேதியன்று பி.என். ஸ்ரீனிவாசன் தனது 85-ம் வயதில் காலமானார் என்ற செய்தியை நான் இணையத்தில் தான் படித்தேன். அவ்வப்போது இலங்கைத் தமிழர் பற்றிய செய்திகளை, தமிழ் நாட்டுச் செய்திகளைத் தொகுத்து திருவள்ளுவர் இலக்குவனார் அனுப்பும் மடல் ஒன்றில் இந்த செய்தியும் இருந்தது. தமிழ்த் தினசரிப் பத்திரிகை எதிலும் இந்த செய்தி வந்துள்ளதா என்பது எனக்குத் தெரியாது. வாரப் பத்திரிகைகள் எதுவும் இதை ஒரு பொருட்டாகக் கருதுமா என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு இந்தப் புறக்கணிப்பு அதிர்ச்சி தரவில்லை. இது இந்தக் காலத்தில் நடப்பது தான், ஒன்றும் புதிதல்ல என்ற காலத்தை ஒட்டி உணரும் புத்தி இருந்தாலும், வேதனையாகத்தான் இருந்தது. இப்போது இது குறித்து நான் எழுதும் போது எந்தனை பேர் தமிழர்கள், இணையங்களில் தொடர்பு கொண்டவர்கள் என் வேதனையைப் பகிர்ந்து கொள்வார்கள் என்பதும் எனக்குத் தெரியாது. ஒரு வேளை நான் யாரையும் குற்றம் சொல்ல முடியாது என்பதும் தெரிகிறது. பி.என். ஸ்ரீனிவாசனும் இது பற்றியெல்லாம் கவலைப் பட்டவரில்லை. ஆனால் தனக்கு எது சரி, எது நடப்பது சரியல்ல, எது சரி செய்யப் படவேண்டும் என்று தோன்றுகிறதோ அதைச் செய்வதில் முனைப்புக் கொண்டு செயல்பட்டு வந்தார். அது என்ன பலனைத் தருகிறது, யார் தனக்கு துணைவருவார்கள் என்பது பற்றியும் அவர் கவலைப் பட்டவர் இல்லை. அப்படி ஒரு ஜீவன், அப்படி ஒரு வாழ்க்கை. தான் வாழும் காலத்தின் தர்மங்களை, வாழ்க்கை முறைகளை, நம்பிக்கைகளைப் பற்றிக் கவலை கொள்ளாது தன் வழியில் தான் நினைத்ததை முடிந்த அளவில் செயல் படுத்தி வந்தவர். அவர் வேறு ஒரு யுகத்தில், யுக தர்மத்தில் வாழ்ந்தவர். அந்த தர்மங்கள் இப்பொது அழிந்து விட்டன். செலவாணி அற்றுப் போய்விட்டன. அவரது மரணத்தைப் பற்றி அடுத்த நாளே தனது மடலில் எழுதிய திருவள்ளுவர் இலக்குவனார் பின் வரும் செய்தியையும் உடன் தருகிறார்.

Continue Reading →

‘The body’ presents us with a mature writer looking back on his past. – By V.N.Giritharan –

'The body' presents us with a mature writer looking back on his past. -  By V.N.Giritharan -Writer Stephen King.The novella , ‘The body’ which is the centre piece of the book , ‘Different Seasons’ by Stephen King is the story about a mature writer Gorden Lachance who is also a famous horror writer like Stephen King, and his childhood traumatic experience with the body of dead human being. Subtitled ‘Fall From Innocence’, it is a story about man’s search for the meaning of his life. As Stephen King points out ‘to the three Ds – death, destruction and destiny where would be without them?’, this short novella is about the death and uncertainty of life. It is an autobiographical novel, told by narrator Gordon Lachance. Gordon Lachance looks back on his past and analyzes the events which happened on that labor weekend when he is twelve years old. Why does he look on his past? What is the purpose of looking back? The four main reasons are imposing control over the events which have troubled him for years, rediscovering the lost passion and pleasure of the writing, reliving the past to get some kind of wholeness in his life, and understanding the past in order to get ready for some future mortality. The first reason is imposing control over the events which have troubled him over the years in a new , fictional form and getting a kind of happiness, and dreadful exhilaration. Gordon Lachance’s childhood experience with the dead body of Ray Brower is the  one that urges him to become a writer. It troubles him over the years. Gordon Lachance’s childhood experience with the dead body of Ray Brower is the one that urges him to become a writer. He wants to get rid of the pain and suffering caused by that experience. He finds some kind of pleasure , happiness and exhilaration by controlling those event as a writer. The following remarks of Gordon Lachance prove that the above mentioned reason is true. “But it was the first time I had ever really used the place I knew and the things I felt in a piece of fiction and there was a kind of dreadful exhilaration in seeing things, that had troubled me for years come out in a new form, a form over which I had imposed control.” (‘Different Seasons’, 323)

Continue Reading →

‘Apt Pupil’ is a symbolic novella about American society, Nazis’ atrocities and human life. – By V.N.Giritharan

'Apt Pupil' is a symbolic novella about American society, Nazis' atrocities and human life.  - By V.N.GiritharanWriter Stephen King.‘Apt Pupil’ is a symbolic novella about American society, Nazi atrocities and human life. ‘Life is a tiger you have to grab by the tail, and if you don’t know the nature of the beast, it will eat you up’ says Dick Bowden, Todd’s father. It is true. In ‘Apt Pupil’, Stephen King shows how Todd Bowden loses his hold on the tiger and becomes the nightmare of American society. The author analyzes the ups and downs of American society,  the great human tragedy of the 20th century and   human existence through the symbolic characters Todd Bowden,  Kurt Dussander and Morris Heisel.

Stephen King uses a two way approach to criticize  Americans. He creates Todd Bowden as a symbol for America. Todd Bowden’s personality reflects the positive and the negative aspects of his own society.  If you compare Todd Bowden and America, you could easily see the similarities between them. Like America  he is so young, healthy, energetic, hard working and positive. At the same time, his fondness for violence reflects the dark side of America.  When Todd reads the war magazines, he reads with ‘a mixture of revulsion and excitement’ (King, 118). When he listens to the stories from Dussander , he is not concerned about the sufferings of the victims. Instead, he wants to hear  about ‘the firing squads. The guys who had to dig their own graves… German doctors trying to mate women with dogs, putting identical  twins into  refrigerators to see whether they would die at the same time.’ ( King, 127, 128). Yes, he wants to hear about all the gooshy stuff. When he listens ‘his tongue came out and wetted his lips ‘(King, 127).  

Continue Reading →

மனம் திறந்து எழுதும் ஒரு கலைஞன் – தமிழ்த் திரை உலகில்

இப்போது நம் முன் நிற்கும் செழியன் சென்னை மனிதர். கோடம்பாக்கத்தில் தன் அதிக நேரத்தைச் செலவிடுகிறவர். திரைப் பட ஒளிப்பதிவாளர்.- வெங்கட் சாமிநாதன் -செழியன் என்ற பெயரில் எனக்குத் தெரிந்தவர். இருவர் ஒருவர் கனடாவில். கவிதை, நாடகங்கள் எழுதுகிறவர். யாழ்ப்பாணத்தவர். புலம் பெயரும் முன் தன் ஆரம்ப வாழ்க்கையைப் பற்றி சுய சரிதையாக, வானத்தைப் பிளந்த கதை என்று நாட்குறிப்புகளாகத் தொகுத்துத் தந்துள்ளார். எவ்வளவு நிச்சயமற்ற வாழ்க்கையிலும் தன் நகைச்சுவை உணர்வை இழக்காதவர். இன்னொருவர், இப்போது நம் முன் நிற்கும் செழியன் சென்னை மனிதர். கோடம்பாக்கத்தில் தன் அதிக நேரத்தைச் செலவிடுகிறவர். திரைப்பட ஒளிப்பதிவாளர். சும்மா படமெடுப்பவர் இல்லை. தன் தொழிலைக் கலையாக உணர்பவர். அத்தகைய பதிவுகள் இவர் பொறுப்பேற்ற படங்களில் நமக்குக் காணக்கிடைக்கும். ஆனாலும், இவர் எப்படி தமிழ்த் திரைப்படத்துக்குள் நுழைந்தார்? நுழைந்து எப்படி காலம் தள்ளுகிறார்? என்ற எண்ணம் என்னில் முழுமையாக முதலிலும், “எப்படியும் எங்காவது தொடங்கத் தானே வேண்டும்?” என்ற சமாதானத்தோடு இப்போதும் உணர்ந்து வருகிறேன். சென்னைக்கு நான் குடி வந்த முதல் வருடத்திலேயே (கி.பி. 2000) செழியன் எனக்கு அறிமுகமானார். யாரோ என்னவோ என்று தான் நான் நினைத்தேன். கணையாழியில் இருந்த கவிஞரும் என்னை ஆத்மார்த்தமாக நேசித்த நண்பருமான  யுகபாரதி என்னை செழியனிடம் அழைத்துச் சென்றார். அந்த முதல் சந்திப்பில் செழியனை மிகவும் கஷ்டப்படுத்தினேன் என்று நினைக்கிறேன். ஸ்டுடியோக்குள் என்னை என்னென்னவோ செய்து பார்த்தார். ஒன்றும் சரிப்படவில்லை என்று நினைக்கிறேன். பின்னர் அவர் ஸ்டுடியோவின் மாடி வெராண்டாவின் கைப்பிடிச் சுவரில் சாய்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது, என்னிடம் pose வேண்டாமல், அவர் பாட்டில் குனிந்தும் சாய்ந்தும் தூர நின்றும், கிட்டத்தில் மண்டியிட்டும் என்னென்னவோவெல்லாம் கரணங்கள் செய்து படமெடுத்துத் தள்ளிக்கொண்டிருந்தார். என்னை முதன் முதலாக இன்னொருவர் முகம் சுளிக்காது பார்க்கக் கூடும் படங்களை எடுத்தவர் செழியன்தான். மற்றதெல்லாம் ஒருமாதிரிதான். ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருப்[பது போலவும், எதையோ உற்றுக் கவனிப்பது போலவும், “பரவாயில்லையே நான் கூட இப்படி பார்க்கும்படியான தோற்றத்தில் உள்ள கணங்களை, அவை மறையும் முன் பிடித்து உறைய வைத்துவிட்டாரே. என்று மகிழ்ந்தேன். ஒரு மோசமான subject- ஐ வைத்துக்கொண்டு கூட பரவாயில்லை என்று சொல்லத் தக்க படைப்பைத் தந்துவிடுவது பெரிய விஷயம் தான்.. அப்போ, தமிழ் சினிமாவுக்கு ஒளிப்பதிவாளராக சேரத் தக்க நிபுணத்துவம் உள்ளவர் தானே, சந்தேகமில்லை. தமிழ் சினிமாவில் கிடைப்பதை வைத்துத் தானே ஒப்பேத்தவேண்டும்?

Continue Reading →

ஐம்பது வருடங்களில் மாற்றமும் வளர்ச்சியும் (2)

- வெங்கட் சாமிநாதன் -ஆர் ஷண்முக சுந்தரம் இந்த சந்தர்ப்பத்தில் குறிப்பாகச் சொல்லப்பட வேண்டிய ஒரு திறன் வாய்ந்த எழுத்தாளர். அவர் ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். பள்ளிப் படிப்பு அதிகம் பெறாதவர். இலக்கிய சர்ச்சைகள், நகர வாழ்க்கையின் சந்தடி, இவற்றில் எதிலும்  சிக்கிக்கொள்ளாத தூரத்தில் அமைதியாக வாழ்ந்தவர். அவருக்கு பணம் தேவைப்பட்டபோதெல்லாம் தன்னுடைய நோட்புக்கில் ஒரு குறு நாவல் எழுதி முடித்துவிடுவார். அதற்கு அவருக்கு ஏதோ சில நூறு ரூபாய்கள் கிடைத்துவிடும். இப்படித்தான் நாகம்மாள், சட்டி சுட்டது (1965), அறுவடை (1960) போன்ற நாவல்கள் எழுதப்பட்டன. இவை அந்நாட்களில் குறிப்பிடத் தக்க எழுத்து என்று சொல்லவேண்டும். இன்று நாகம்மாள், அறுவடை போன்றவை க்ளாஸிக்ஸ் என்றே சொல்லவேண்டும். அவரது நாவல்கள் கோயம்புத்துர் மாவட்டத்து விவசாயிகளின் வாழ்க்கையைச் சுற்றி எழுந்தவை. கிரேக்க அவல நாடகங்களின் மைய இழையோட்டத்தை அவற்றில் காண்லாம். எதிலும் ஒரு மகிழ்ச்சி தரும் முடிவு இருப்பதில்லை. இன்னும் இரண்டு முக்கியமான எழுத்தாளர்களைப் பற்றிச் சொல்லவேண்டும். அவர்கள் இருவரும் ஒரு குறுகிய ஆரம்ப கால கட்டத்தில் இடதுசாரி கூடாரத்தைச் சேர்ந்தவர்களாக விருந்தனர். ஆனால் அதிக காலம் அந்த கூடாரத்தில் தங்கவில்லை. பின்னர் அந்தக் கட்டுக்களைத் தாமே தகர்த்து  வெளியே வந்துவிட்டனர்.  ஒருவர் நாம் சற்று முன்னர் பசுவய்யா என்ற பெயரில் கவிஞராக அறிமுகம் ஆன சுந்தர ராமசாமி (1931). சுந்தர ராமசாமி அதிகம் எழுதிக்குவிப்பவரில்லை. அவருக்கு தன் எழுத்தின் நடை பற்றியும் அதன் வெளிப்பாட்டுத் திறன் பற்றியும் மிகுந்த கவனமும் பிரக்ஞையும் உண்டு. இரண்டாமவர் த. ஜெயகாந்தன் (1931) இதற்கு நேர் எதிரானவர். ஏதோ அடைபட்டுக்கிடந்தது திடீரென வெடித்தெழுவது போல, அணை உடைந்த நீர்ப்பெருக்கு போல, மிகுந்த ஆரவாரத்துடன், நிறைய எழுதித் தள்ளிக் கொண்டிருப்பவர். நிகழ்கால தமிழ் இலக்கியத்தின் ஒரு அடங்காப் பிள்ளை. அவருக்கென ஒரு பெரிய, மிகப் பெரிய விஸ்வாஸம் கொண்ட ரசிகக் கூட்டமே உண்டு.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் – 28: வந்தேறு குடியும், பூர்வீகக் குடியும்’ கவிதையும் மேலுமிரு ஆங்கிலக் கவிதைகளும்!

பதிவுகள் ஜூன் 2008 இதழ் 102 இதழில் வெளியான எனது 'வந்தேறு குடியும், பூர்வீகக் குடியும்' கவிதையினையும், எனது வலைப்பதிவுக்காக எழுதிய மேலுமிரு ஆங்கிலக் கவிதைகளையும் இம்முறை 'வாசிப்பும், யோசிப்பும்' பகுதியில் பதிவு செய்கின்றேன்.

கவிதை: வந்தேறு குடியும், பூர்வீகக் குடியும்!

– வ.ந.கிரிதரன்

பதிவுகள் ஜூன் 2008 இதழ் 102 இதழில் வெளியான எனது ‘வந்தேறு குடியும், பூர்வீகக் குடியும்’ கவிதையினையும், எனது வலைப்பதிவுக்காக எழுதிய மேலுமிரு ஆங்கிலக் கவிதைகளையும் இம்முறை ‘வாசிப்பும், யோசிப்பும்’ பகுதியில் பதிவு செய்கின்றேன்.

Continue Reading →