அண்மையில் திடீரென்று சுவாசுகாங் நூலகத்தில் நுழைந்தேன். முதலில் ஆங்கிலப்பகுதிக்குச் சென்றேன். இதய நோய்வராமல் தடுப்பதுபற்றிய ஆங்கில மருத்துவ நூலைப்படித்துவிட்டு தமிழ்ப்பகுதிக்கு வந்து நான் எடுத்த நுல்கள் யூ.ஆர்.ஆனந்தமூர்த்தி எழுதிய ‘சமஸ்காரா’ என்ற புதினம், தமயந்தி எழுதிய ‘வாக்குமூலம்’ என்கிற சிறுகதைத்தொகுப்பு. தமயந்தியின் அக்கக்கா குருவிகள் பற்றி தம்பி நெப்போலியன் என்னுடன் பேசியது நினைவுக்கு வந்தது. தமயந்தி தன்முனைப்பும், சாதிக்கத்துடிக்கும் ஆர்வமும், முற்போக்கு எண்ணமும்கொண்ட பெண்ணாக நான் முடிவு செய்திருந்தேன். பண்பலை வானொலியில் பணியாற்றினார் அல்லது பணியாற்றுகிறார் என்ற தகவல் நூலைப்படித்தபோது தெரிந்தது. எதோ ஒரு வார இதழில் பணியாற்றியதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தப்பின்னணியோடுதான் அவருடைய சிறுகதைத்தொகுப்பிற்குள் நுழைந்தேன். சிறுகதைகள் பக்கங்கள்கூடி சிறுகதையாக இல்லாதநிலையில் அது எத்தகைய கதையாக இருந்தாலும் கரைந்து படிப்பதற்கு மனம் இசைவதில்லை. இவருடைய கதைகள் அளவில் சிறுகதையாகவே அமைந்தது நான் ஆர்வமாகப் படிப்பதற்குக் காரணம். அப்படி கையிலெடுத்து படித்தபொழுது எல்லா கதைகளையும் இயல்பாக படித்துவிட்டேன் என்று சொல்லமுடியாது. கதை சொல்வது யார்? கதைப்பாத்திரங்கள் யார் யார்? என்று நினைவில் நிறுத்திக்கொண்டு படிப்பதில் சில இடங்களில் எனக்குச் சிரமம் ஏற்பட்டது.. ஆனாலும் கதையைச்சொல்லிச்செல்லும் முறையைக் கவனத்தில்கொள்ளக்கருதி படிக்கத்தொடங்கினேன். தொடக்கம்முதல் முடிவுவரை கதையில் வரும் சில சொற்றொடர்களை அடுக்கிப்பார்த்தால் அது ஒரு கவிதையாக மாறும் என்பது என் முடிவு.
“அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்! (“Sharing Knowledge With Every One”)” – பதிவுகள்
பதிவுகளிற்கு வரும் ஆக்கங்களை மூலக் கருத்துச் சிதையாத வண்ணம் திருத்துவதற்கு ஆசிரியருக்குப் பூரண அதிகாரமுண்டு. அது ஆசிரியரின் உரிமை. ஆனால் அதனை விரும்பாவிட்டால் படைப்புகளை அனுப்பும் பொழுது ‘வெளியிடுவதானால் திருத்தாமல் மட்டுமே வெளியிடவும்’ எனக் குறிப்பிட்டு அனுப்பி வைக்கவும். இதன் மூலம் பல தவறுகளை நீக்கி விட முடியும். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்ப விரும்பினால் லதா (யூனிகோடு) எழுத்தினை அல்லது ஏதாவதொரு tsc எழுத்தினைப் பாவித்து தட்டச்சு செய்து அனுப்பி வையுங்கள். அனுப்ப முன்னர் எழுத்துப் பிழைகளை, இலக்கணப் பிழைகளைச் சரி பார்த்து அனுப்பி வையுங்கள். மேற்படி பிழைகளுக்குப் படைப்புகளை அனுப்பும் படைப்பாளர்களே பொறுப்பு. தற்போதைய சூழலில் ‘பிரதியைச் சரிபாத்தல்’ எமக்கு மிகவும் சிரமமானது. இருந்தாலும் முடிந்தவரை திருத்த முயல்வோம். முக்கியமான இலக்கணப் பிழையாக பன்மை எழுவாயும், ஒருமைப் பயனிலையும் கொண்டமைத்த வாக்கியங்களைக் கூறலாம். ‘பாமினி’ எழுத்தினைப் பாவித்து அனுப்பி வைப்பதைத் தவிர்க்க முனையுங்கள். ‘பாமினி’ எழுத்தில் வரும் படைப்புகள் பதிவுகளில் உடனடியாகப் பிரசுரமாவதில் தாமதம் ஏற்படலாம். அவற்றை tscற்கு மாற்றும் பொழுது பல எழுத்துகள் , ‘இ’, ‘அ’,’ஆ’, மற்றும் ‘ஞ’ போன்றன காணாமல் போய் விடுவதால் மீண்டும் அவ்வெழுத்துகளைத் தட்டச்சு செய்ய வேண்டிய மேலதிக வேலை எமக்கு ஏற்பட்டு விடுகிறது. ஒருங்குறி (யூனிகோட்) எழுத்துக்கு மாற்றுகையில் தேவையற்ற எழுத்துகளை இடையிடையே தூவி விடுகின்றது. அவற்றை நீக்குவதென்பது மேலதிக வேலை. குறிப்பாகப் படைப்பானது மிகவும் நீண்டதாகவிருந்தால் தேவையற்ற சிரமத்தைத் தருகிறது.’பாமினி’யில் எழுத விரும்புவர்கள் அவற்றை ஏதாவதொரு ‘உருமாற்றி’ (Converter) மூலம் ஒருங்குறிக்கு மாற்றி, அவற்றை மின்னஞ்சல் செய்தியாக அனுப்பி வையுங்கள். ‘உருமாற்றிக’ளை பின்வரும் இணையத் தளத்திலிருந்தும் பெற்றுக் கொள்ளலாம்:
(1998-ம் வருடம் என்று நினைக்கிறேன். Indian Council for Cultural Relations, இந்தியா சுதந்திரம் அடைந்து 50 வருஷங்கள் ஆனதை ஒட்டி, இந்திய மொழிகள் அனைத்திலும் காணும் இலக்கிய வளர்ச்சியைப் பற்றி எழுதப் பலரைக் கேட்டிருந்தார்கள். அத்தோடு ஒரு சில மாதிரி படைப்புக்களையும் மொழிபெயர்த்துத் தரச் சொல்லிக் கேட்டார்கள். தமிழ் மொழி வளர்ச்சி பற்றி எழுத என்னைப் பணித்திருந்தார், இதன் ஆசிரியத்வம் ஏற்ற ICCR இயக்குனர் திரு ஓ.பி. கேஜ்ரிவால். இவை அனைத்தும் தொகுக்கப் பெற்று Indian Horizons என்ற தலைப்பில் 500 பக்கங்கள் கொண்ட ஒரு தொகுப்பு ஜனவரி-ஜூன், 1999-ல் வெளியானது. இந்திய மொழிகள் அனைத்திலிருந்துமான (டோக்ரி, கஷ்மீரி, ஸிந்தி, உருது மொழிகள் உட்பட) இலக்கிய வளர்ச்சி பற்றிய மதிப்பீட்டுக் கட்டுரைகளுடன், அந்தந்த மொழிகளின் சில கதைகள், கவிதைகளும் மொழி பெயர்க்கப்பட்டு சேர்க்கப்பட்டன. இவற்றில் தமிழ் மொழிக்காகச் சேர்க்கப்பட்டவை, ஜெயமோகனின் மாடன் மோட்சம் என்ற கதையும் சல்மாவின் சில கவிதைகளும். எனது தமிழ் இலக்கிய வளர்ச்சி பற்றிய கட்டுரைக்கு Engma of Abundance என்று தலைப்பு கொடுத்திருந் தார்கள். Enigma of Abundance………..!!! தலைப்பு என்னமோ வசீகரமாகத்தான் இருக்கிறது. ஆனால் கட்டுரையில் சொல்லப்பட்ட விஷயங்கள் இதை நியாயப்படுத்துமா என்பது தெரியவில்லை. ஆகவே இப்போது எனக்குள்ள சுதந்திரத்தில் மிகச் சாதாரண மொழியில்,
இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் நாவல் இலக்கியம் பற்றிய ஆரம்பநிலை ஆய்வுகள் கணிசமான அளவு மேற்கொள்ளப்பட்டுள்ளன. சில்லையூர் செல்வராசனில் இருந்து கலாநிதி செ. யோகராசா வரை இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகள் ஈழத்து நாவல் இலக்கியம் பற்றிய பருமட்டான ஒரு வரைபை மேற்கொள்வதற்கு சான்றாக அமைந்துள்ளன. இவ்வகையில் ஈழத்தில் தோன்றிய முதல் நாவல் தொடக்கம் அண்மைக்கால நாவல்கள் வரை எழுதப்பட்ட விமர்சனங்களையும், கட்டுரைகளையும், பல்கலைக்கழக மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள நாவல்கள் தொடர்பான ஆய்வுகளையும் கவனத்தில் எடுக்கும்போது நாவல்களின் போக்கையும் அவை குறிக்கும் சமூக பண்பாட்டு அம்சங்களையும் கண்டுகொள்ள முடியும். இந்த அடிப்படையை வைத்துக்கொண்டு இலக்கியமும் இரசனையும் என்ற பொருளில் சில சிந்தனைகளை இவ்விடத்தில் குறித்துரைக்கலாம். வாசிப்புக்குப் பல்வேறு படிநிலைகள் உள்ளன. நாளாந்தச் செய்திப் பத்திரிகை வாசிப்பதிலிருந்து ஆய்வேடுகளை வாசிப்பது வரையில் இந்தப் படிநிலைகள் வேறுபட்டுச் செல்கின்றன. இலக்கிய வாசிப்பும் இந்தப் படிநிலைகளில் ஒன்றுதான். தொடர்ச்சியான வாசகன் ஓன்றிலிருந்து இன்னொன்றுக்குத் தாவுவதுபோல இந்தப் படிநிலைகளைத் தாண்டிச் சென்றுகொண்டேயிருப்பான்.
திருப்பூர் என்றதும் நினைவுக்கு வருவது நொய்யல் என்னும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஜீவ நதியும், அதன் கரையில் உருவாகி வெற்றிலைக்கும், தாழம்பூவுக்கும், விதவிதமான கீரை காய்கறி வகைகளுக்கும் பெயர் பெற்று விளங்கிய சின்னஞ்சிறிய திருப்பூர் நகரமும், விடுதலைப் போர்க்கொடி கீழே விழாமல் தன் இன்னுயிரில் தாங்கிய திருப்பூர் குமரனும் நினைவுக்கு வருவார். மக்களைக் காந்தமாய்க் கவரும் விதவிதமான பின்னலாடைகள் நினைவுக்கு வரும். புதிதாய் முளைத்தெழும் வண்ண வண்ணக்கட்டிடங்களும் நினைவுக்கு வரும். இம்மாதிரியான கவர்ச்சிமிக்க எண்ணத் திரைகளை நீக்கிவிட்டுப் பார்த்தால் உள்ளே தெரிவதென்ன? சாயச் சாக்கடையாகச் சிறுத்துக் கொண்டிருக்கும் நொய்யல் நதி. சாயப்பட்டறைக் கழிவுகளால் விஷமாகிக் கொண்டிருக்கும் தெருக்கள். மனிதனின் மொத்த வாழ்க்கையையே சூதாட்டம் ஆக்கி, மனித மதிப்புகளை வெளிறி வண்ணமிழக்கச் செய்யும் பனியன் தொழில்-இந்தச் சூதாட்டத்தில் கணம்தோறும் வெட்டுப்பட்டுக் கல்லறைக்குப் போகும் ராஜா, ராணி, யானை, குதிரைகள், சேவகர்கள்: இவைகளை மாற்றி மாற்றிக் காட்சிகளாகப் பக்கம் பக்கமாக வரைந்து காட்டியிருக்கிறார் சுப்ரபாரதிமணியன் தன் சாயத்திரை நாவலில்.
கொள்ளுப்பிட்டி ரண்முத்து ஹோட்டலில் ஒரு நூல் வெளியீட்டுவிழா. நானும் ஒரு பேச்சாளன். என்னை நூலாசிரியரின் பதிலுரைக்கு முதல், விழாத்தலைவர் பேசுவதற்கு அழைக்கிறார். எப்படி? “நேரம் போய்க் கொண்டிருக்கிறது. இனி அடுத்துப் பேசப் போகிறவர் முருகப10பதி. அவருக்கு ஒரு வேண்டுகோள், கெதியாகப் பேசி முடித்துவிட்டு, நீர்கொழும்பு பஸ்ஸை பிடிக்க ஓடவும்.”
சபையில் சிரிப்பலை அடங்கச் சில விநாடிகள் தேவைப்படுகிறது. பம்பலப்பிட்டி சாந்திவிஹார் ஹோட்டலில் ஒரு பிரபல தமிழ்ப் பத்திரிகையாளருக்கு பாராட்டு பிரிவுபசார விழா. புகைபடக் கலைஞர் ஒருவர் சுறுசுறுப்பாக இயங்கி, படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார். விடைபெறவுள்ள பத்திரிகையாளரைப் பாராட்டிப் பேசுவதற்கு ஒரு முஸ்லிம் அரசியல் பிரமுகர் தலைவரால் அழைக்கப்படுகிறார். பிரமுகர் தமது பேச்சுக்கிடையே – அந்தப் புகைப்படக் கலைஞரையும் புகழ்ந்து சில வார்த்தைகளை உதிர்த்துவிட்டு “அந்தக் கலைஞர் சிறந்த படப்பிடிப்பாளர், அவருக்கும் நாம் பாராட்டு விழா நடத்த வேண்டும்” என்கிறார். உடனே, தலைவர் “அந்தக் கலைஞர் பத்திரிகைகளுக்காக எடுத்த படங்களையும் பார்த்துள்ளேன். அவர் எடுத்த வேறு படங்களையும் பார்த்துள்ளேன்” என்று சொன்னவுடன் சபையில் அட்டகாசமான சிரிப்பொலி எழுந்து அடங்கியது. அந்தப்புகைப்படக்கலைஞர் நாணத்துடன் தலைகவிழ்ந்து சபையின் பின்புறம் ஓடி வந்துவிட்டார்.
1957 இல் எழுத ஆரம்பித்தவர் திரு நீர்வை பொன்னையன் அவர்கள். இவரது முதல் சிறுகதை பாசம் என்பதாகும். இக் கதையானது ஈழநாடு வாரப் பதிப்பில் பிரசுரமாகியுள்ளது. அதனையடுத்து மேடும் பள்ளமும் என்ற கதை கலைச் செல்வி இலக்கிய சஞ்சிகையில் பிரசுரமாகியுள்ளது. தொடர்ந்து தமிழன், வீரகேசரி, தேசாபிமானி, வசந்தம், தினக்குரல் ஆகிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் இவர் தொடர்ந்து எழுதி வந்துள்ளார். 1957 இல் எழுத ஆரம்பித்த திரு நீர்வை பொன்னையன் அவர்கள் 2012 வரையான 65 வருட காலப் பகுதிகளில் 91 சிறுகதைகளை எழுதியுள்ளார். 1961 இல் வெளியிடப்பட்ட இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி மேடும் பள்ளமும் என்பதாகும். உதயம், பாதை, வேட்கை, ஜென்மம், நிமிர்வு, காலவெள்ளம் போன்ற சிறுகதைத் தொகுதிகளை இவர் தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளார். நினைவுகள் அழிவதில்லை என்ற இந்த சிறுகதைத் தொகுதியானது இலங்கை முற்போக்குக் கலை இலக்கிய மன்றத்தினூடாக வெளிவந்துள்ள திரு நீர்வை பொன்னையன் அவர்களின் ஒன்பதாவது சிறுகதைத் தொகுதியாகும்.
உழைக்கும் தொழிலாளியான விவசாய மக்களது வர்க்கப் போராட்டங்களை அடிநாதமாகக் கொண்டும், எமது தாயகத்திலுள்ள பௌத்த சிங்கள பேரினவாத அரசாங்கத்தினதும், தமிழ்ப் போராட்டக் குழுக்களதும் பாசிச நடவடிக்கைகளையும், அழிப்புக்களையும் அம்பலப்படுத்தி எதிர்ப்புக் குரல் எழுப்பியும் இவரது படைப்புக்கள் யாவும் புனையப்பட்டுள்ளன. இவர் தனியல்லன். சுரண்டலையும், சூறையாடலையும் தகர்த்தெறிந்து ஒரு புதிய சகாப்தத்தை நிர்மாணிப்பதற்காகப் போராடி வருகின்ற முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின் முக்கிய மூத்த உறுப்பினர் ஆவார்.
இவ்வளவு மாதங்களுக்குப் பிறகு போன வருடம் டிஸம்பர் மாதத்திலிருந்து நடந்த நிகழ்வுகளை அவற்றின் தொடர்ச்சியில் சொல்லாம் தான். ஆனால் இவற்றின் தொடக்கம் எங்கு எப்போதிலிருந்து என்பதெல்லாம் எனக்கு தெரியாத காரணத்தால் சொல்வது கடினம். ஒருவாறாக யூகிக்கலாம். அது தவறாகவும் இருக்கலாம். சரி இப்படித்தான் தொடங்குகிறது. அம்ருத வர்ஷினி என்ற பங்களூரிலிருந்து செயல்படும் ஒரு ஸ்தாபனத்திலிருந்து கே.எஸ்.எல் ஸ்வாமி என்பவர் கையெழுத்திட்டு 5.12.2012 தேதியிட்ட கடிதம் இரண்டு நாட்களுக்குப் பிறகு எனக்கு வந்தது. அந்த ஸ்தாபனம் 22.12.2012 அன்று டாக்டர் பி.பி. ஸ்ரீனிவாஸ் என்னும் பிரபல சினிமா பின்னணி பாடகருக்கு 82 வயது பூர்த்தி யாகிறது (பி. 22.9.1931) அன்று அவரது ஸ்ஹஸ்ர சந்திர தர்ஸனமும் பூர்த்தி ஆவதால் அந்த வைபவத்தைக் கொண்டாடவும் அவரை கௌரவிக்கவும் ஒரு பெரும் விழா ஒன்று ஏற்பாடு செய்துள்ளோம், அந்த சந்தர்ப்பத்தில் பி.பி ஸ்ரீனிவாஸ் கன்னட சினிமாவுக்கு மட்டுமல்ல, தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி சினிமா படங்களிலும் ஆயிரக்கணக்கான பாட்டுக்கள் பாடி இரண்டு தலைமுறை ரசிகர்களை மகிழ்வித்துள்ளவர். இந்த அனைத்து மொழிகள் தவிர, ஆங்கிலம், உருது சமஸ்கிருதம் மொழிகளிலும் அவர் வல்லுனராக இருந்தவர். எனவே, 22.12.2012 அன்று அவரைக் கௌரவிக்கும் போது இந்த அனைத்து மொழிகளிலும் தம் பங்களிப்பைத் தந்துள்ள, பி.பி ஸ்ரீனிவாஸ் போல 80 வயது நிறைந்த, அறிஞர்களையும் கௌரவிக்கத் திட்டமிட்டுள்ள்தாகவும், அவ்வகையில் தமிழ் மொழிக்குத் தாங்கள் செய்துள்ள பாராட்டத்தக்க சேவையைக் கருத்தில் கொண்டு பி..பி.ஸ்ரீனிவாஸை கௌரவிக்கும் அதே மேடையில் தங்களையும் கௌரவிக்க விரும்புகிறோம். இது பி.பி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கும் மகிழ்ச்சி தரும். எனவே இந்த கௌரவத்தை ஏற்க, தங்கள் ஒப்புதலை உடன் தெரிவிக்க வேண்டுகிறோம், என்று கண்டிருந்தது.
‘A Refugee’s Thoughts On Birds’ (ஓர் அகதியின் பறவைகள் பற்றிய சிந்தனைகள்’), A SQUIRREL AND I , The damsels of the night sky and their giggles மற்றும் My Belief on E.T ஆகிய கவிதைகளை அண்மையில் எனது படைப்புகளை உள்ளடக்கியுள்ள ஆங்கில வலைப்பதிவுக்காக எழுதினேன். வலைப்பதிவின் இணைய முகவரி: http://vngiritharan23.wordpress.com/
அக்கவிதைகள் கீழே:
(ஆவணி 31, 2013 சனிக்கிழமை கனடா சுயாதீன திரைப்பட இயக்கியத்தினால் பட்டறை, மற்றும் கலந்துரையாடல் என ஒரு முழுநாள் நிகழ்வாக மிச்சிகன் பல்கலைக்கழக பேராசிரியர் சொர்ணவேல் அவர்கள் பங்கேற்ற அமைவில் வாசிக்கப்பட்ட பேச்சு உரைவடிவத்தின் உரைக்கட்டு வடிவம் இது.) ஒரு மாறுதலுக்காக மட்டுமன்றி, இந்தமாதிரியான ஒரு அலசல்தான் இந்த நூலிலுள்ள விஷயங்களின் தாற்பரியங்களை விளங்கிக்கொள்ளும் சுலபத்திற்கு வாய்ப்பானது என்று கருதுகிற வகையில், இந்த முறையில் இந்நூல் பற்றிய என் கருத்துக்களைத் தொகுத்தளிக்க விழைகின்றேன். ஐசன்ஸ்டெயினிற்கும் மார்க்கருக்கும் நடுவிலுள்ள அளவிலாத் தூரத்தில் சஞ்சரிக்கும் மார்க்சின் ஆவி, உலகமயமாதலுக்குப் பின்னும் நம்மை ஆட்டுவிக்கும் என்ற மார்க்சிய அடிப்படைக் கூறான இருமை எதிர்வைக் கட்டவிழ்த்த தெரிதாவின் கூற்றில் உண்மை இருக்கின்றது’ என்று கடைசிப் பக்கத்தில் வரும் வசனங்களோடு இந்த நூல் முடிவடைகின்றது. முடிவிலிருந்தே ஆரம்பிக்கலாம்.