உலகின் தலைசிறந்த ஆவணப்பட இயக்குனர்கள் என நாம் சிலரைக் குறிப்பிட முடியும்; அதுபோல உலகின் தலசிறந்த ஆவணப்படங்கள் எனவும் சிலவற்றை நாம் குறிப்பிட முடியும். இலத்தீனமெரிக்காவின் ஜெட்டினோ மற்றும் சொலானஸ், பிரான்சின் கிரிஸ் மார்க்கர் போன்றவர்கள் உலகின் ஆவணப்பட மரபை உருவாக்கிய மேதைகள் என்றால், அவர்கள் உருவாக்கிய எ கிரின் வித் எ கேட் (A Grin with a Cat) த ஹவர் ஆப் த பர்னசஸ் (The Hour of the Furnces) போன்ற ஆவணப்படங்களை நிரந்தரத்துவம் பெற்ற உன்னதக் கலைப்படைப்புகள் என நாம் குறிப்பிடலாம். இந்த இயக்குனர்களின் வரிசையில் வைத்துப் பேசத்தக்க இந்திய ஆவணப்பட இயக்குனர் என ஓருவரைக் குறிப்பிட வேண்டுமானால், அவர் ஆனந்த் பட்வர்த்தன் எனத் தயங்காமல் குறிப்பிடலாம்; அதுபோல உலகின் தலைசிறந்த ஆவணப்படங்களில் ஒன்றாக அவர் உருவாக்கிய ஜெய் பீம் காம்ரேட் ஆவணப்படத்தையும் நாம் முன்வைக்கலாம். குறிப்பிட்ட வரலாற்றில் வாழ நேர்ந்த மக்கள்திரளின் ஆற்றலையும், அவர்கள் எதிர்கொண்ட அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகளையும், அந்த வரலாற்றில் வைத்து அவர்கள் அடைந்த தனிநபர்ப் பாடுகளையும், அவர்களது விடுதலைத் தேட்டத்தையும் பதிவு செய்தவை இவர்கள் உருவாக்கிய ஆவணப்படங்கள். கிரிஸ் மாக்கரின் எ கிரின் வித் எ கேட்(1977) நிலவிய சோசலிசம் நெருக்கடிக்கு உள்ளான காலகட்டத்தில், 1968 பாரிஸ் மாணவர் தொழிலாளர் எழுச்சியின் பத்து ஆண்டுகளின் பின் உருவாக்கப்பட்டது. சொலானஸ், ஜெட்டினோவின் த ஹவர் ஆப்த பர்னசஸ்(1968) சே குவேரா பொலிவிய மலையில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலைமையில் இலத்தீனமெரிக்க மக்களை நோக்கிய புரட்சிகர அறைகூவலாக உருவாக்கப்பட்டது.
படைப்புக்களைப் பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்துவிட்டு, ‘பெருமானே, பிரசுரமாகுமா? ஆகாதா?’ எனப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தவர்களை – சேர்த்து அனுப்பிவைத்த தபாற் தலைகளுடன் திரும்பிவந்த படைப்புக்களால் மனமுடைந்து சோர்ந்து போனவர்களை – பெண்டாட்டியின் தாலியை அடகு வைத்துப் புத்தகம் போட்டவர்களை – பெருமனம் படைத்த பிரசுராலயங்கள் வாரிச் சுருட்டியதால் வங்குரோத்தானவர்களை – படிப்பாரற்றுப் பரணில் தூங்கி அடைகாக்கும், கன்னிகழியாக் கதை, கவிதைப் புத்தகாசிரியர்களை – கக்கத்துள் அல்லது கைப்பைக்குள் சுருட்டிக் கட்டி வைத்துக்கொண்டு காண்போர், கதைப்போரின் கைகளுக்குள் தம் புத்தகங்களைப் பலவந்தமாய்த் திணித்தவர்களை – இப்படியாக, எண்ணிலா ‘இம்சைகள்’ தந்தும், தாங்கியும் வந்த தமிழ் எழுத்தாளர்களைப் பற்றியெல்லாம் இன்னுமின்னும் சொல்லிக்கொண்டே போகலாம். கடுதாசியிலான புத்தகங்கள் புழக்கத்திற்கு வந்த காலத் ‘துயர்காதைப் புராணங்கள்’ இவை.
படைப்பாளிகளையும் பத்திரிகையாளர்களையும் கல்வித்துறை சார்ந்த ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் பதிப்புத்துறையில் இருப்பவர்களை மிரட்டிக்கொண்டிருக்கும் ஒரு பிசாசு இருக்கிறது. இது கண்களுக்குத்தெரியும் பிசாசுதான், ஆனால் எப்படியோ கண்களுக்குத்தப்பிவிடும். எங்கே எப்படி காலை வாரிவிடும் என்பதைச்சொல்லமுடியாது. மானநட்ட வழக்கிற்கும் தள்ளிவிடும் கொடிய இயல்பு இந்தப்பிசாசுக்கு இருக்கிறது. அதுதான் அச்சுப்பிசாசு. மொழிக்கு ஆபத்துவருவதும் இந்தப்பிசாசினால்தான். 1990 ஆம் ஆண்டு மறைந்த எங்கள் கல்விமான் இலக்ஷ்மண ஐயரை நினைக்கும் தருணத்தில் அவர் ஓட ஓட விரட்டிய இந்த அச்சுப்பிசாசுதான் எள்ளல் சிரிப்போடு கண்முன்னே தோன்றுகிறது. இலக்ஷ்மண ஐயர் கொழும்பு மலே வீதியில் அமைந்த கல்வி அமைச்சில் தமிழ்ப்பிரிவின் வித்தியாதிபதியாக பணியாற்றிய காலத்தில் எங்கள் நீர்கொழும்பூர் விஜயரத்தினம் மகா வித்தியாலயத்தின் ( தற்பொழுது இந்து மத்திய கல்லூரியாக தரமுயர்த்தப்பட்டிருக்கிறது) பழைய மாணவர் மன்றத்தை உருவாக்கியிருந்தோம் பாடசாலையில் எமது மன்றம் நடத்திய நாமகள் விழாவுக்கு பிரதமவிருந்தினராக இலக்ஷ்மண ஐயரை அழைப்பதற்காக சென்றிருந்தோம்.
அண்மையில் ‘டொராண்டோவி’ருந்து வெளிவரும் ‘டொராண்டோ ஸ்டார்’ தினசரியில் ஏப்ரல் 2, 2013இல் வெளியான ‘தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருதுகள்’ பற்றி ‘டெப்ரா பிளாக்’ ((Debra Black) எழுதிய கட்டுரை பற்றி, கனடிய பல்லின இலக்கியம், மற்றும் கனடிய இலக்கியம்’ பற்றிய எனது கருத்துகளைச் சிறியதொரு வாசகர் கடிதமாக எழுதி அனுப்பியிருந்தேன். அதனை ‘டொராண்டோ ஸ்டார்’ தனது ஏப்ரல் 4, 2013 பதிப்பிற்கான ஆசிரியர் கடிதத்தில் ‘Shedding light on ethnic literature’ என்னும் தலைப்பில் பிரசுரித்திருந்தது. அக்கடிதத்தையும், அது கூறும் கருத்துகளையும், அத்துடன் எனது வலைப்பதிவுக்காக எழுதிய ஆங்கிலக் கவிதையினையும் இம்முறை ஒரு பதிவுக்காகப் பதிவு செய்கின்றேன். மேற்படி கடிதம் சிறியதாகவிருந்தாலும் அது கூறும் விடயம் மிகவும் முக்கியமானது. கனடாவின் உத்தியோக மொழிகள் ஆங்கிலமும், பிரெஞ்சும் ஆனபடியால் கனடிய இலக்கியமென்றால் மேற்படி மொழிகளில் வெளியாகும் படைப்புகளைப் பற்றி மட்டுமே கொண்டதாகப் பலர் கருதிவிடுகின்றார்கள். ஆனால், கனடா பல்லின மக்கள் அதிகமாக வாழும் நாடுகளிலொன்று. இங்கு வாழும் பல்லின மக்களால் அவர்களது மொழிகளில் வெளியாகும் இலக்கியப் படைப்புகளைப் பற்றிக் கனடாவின் பெரும்பான்மைச் சமூகமான ஆங்கிலேயர்களோ அல்லது பிரெஞ்சு சமூகத்தவரோ அதிகமாக அறியமுடியாத நிலையே நிலவுகின்றது.
[அண்மையில் இலண்டனில் ஆகஸ்ட் 14 தொடக்கம் – ஆகஸ்ட் 18 வரை நடைபெற்ற ‘உலகத் தமிழியல் மாநாடு 2013’இல் ஆகஸ்ட் 15 அன்று வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை.- நுணாவிலூர் கா. விசயரத்தினம். ]
தொல்காப்பியம் என்னும் நூலை ‘ஒல்காப் பெரும் புகழ்த் தொல்காப்பியன்’ எனப் போற்றப்படுபவரும் தி.மு. (திருவள்ளுவருக்கு முன்) அறுநூற்றி எண்பது (680 – கி.மு.711) ஆண்டில் வாழ்ந்தவருமான தொல்காப்பியனார் இவ்வரிய இலக்கிய இலக்கண நூலைப் பாடியருளினார். இந்நூல் தொன்மை, செழுமை, வளம், செப்பம், வனப்பு, நாகரிகம், பெருநிலை போன்றவற்றுடன் தோன்றிக் காலத்தால் பழமை வாய்ந்த ஓர் உயிர் நூலாய் நம் மத்தியில் உலா வருகின்றது. இந்நூலை யாத்த தொல்காப்பியனார் தலைச் சங்க இறுதியிலும் இடைச் சங்கத் தொடக்கத்திலும் வாழ்ந்தவருமாவார். ‘இடைச் சங்கத்தாருக்கும் கடைச் சங்கத்தாருக்கும் நூலாயிற்று தொல்காப்பியம்’ என்பது நக்கீரனாரின் கூற்றாகும். ‘தொல்காப்பியம் பண்டைத் தமிழர்களின் தொன்மையையும், நாகரிகச் சிறப்பையும் விளக்கும் பழம் பெருநூல்’ என்று டாக்டர் மு. வரதராசனார் கூறியுள்ளார். தொல்காப்பியனார் ஒரு காப்பியக்குடியில் தோன்றியவரென்றும், அவர் இயற் பெயர் தொல்காப்பியர் எனவும் சான்றோர் கூறுவர். வேறு சிலர் இவரின் இயற்பெயர் ‘திரணதூமாக்கினி’ எனவும், ‘சமதக்கினியாரின் புதல்வர்’ எனவும் கூறுவர். குறுமுனி அகத்தியனாரின் பன்னிரு மாணாக்கர்களுள் முதல் மாணவன் தொல்காப்பியனார் எனவும் ஒரு கூற்றுண்டு. இன்னும், இவர் பரசுராமரின் உடன் பிறந்தவரென்றும் ஒரு கதையுமுண்டு.
இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த குருதேவ என அழைக்கப்பட்ட ரவீந்திரநாத் தாகூர் பல்முகத் தன்மை கொண்டவராக விளங்கின கவிஞர், ஓவியர், நாடகாசிரியர், நாவலாசிரியர், சிறுகதையாளர், விமர்சகர், பாடகர், இசையமைப்பாளர் என்று பல்வேறு தளங்களில் இயங்கியவர் ரவீந்திரநாத் தாகூர் அவர்கள். இது அவரின் 150 வது பிறந்த் தின நூற்றாண்டு…(2012) தாகூரின் கவிதைகள் பெருமளவில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உலகளவில் பேசப்பட்டவை. இந்தியக் கவிதை மரபில் வியாசரும், கபிரும், ராம்பிரசாத்தும் அவரை வெகுவாக பாதித்திருக்கிறார்கள். வங்காள நாட்டுப்புற இசையோடு தன்னை அவர் ஈடுபடுத்திக் கொண்ட பின்புதான் அவரது கவிதை உலகும் இசையறிவும் பல சிகரங்களை அடைந்தன. இயற்கையும் மனித உணர்வுகளுமான வெளிப்பாடுகள் அவரை, அவர் கவிதைகளை இன்னும் செழுமையாக்கின. முப்பதுகளில் நவீனத்துவமும், யதார்த்தமும் இணைந்த பரிசோதனை முயற்சிகளாக வங்காள இலக்கியத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். அவரின் கீதாஞ்சலி அவருக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது.
ஆகஸ்ட் 15 என்று ஒரு புத்தகம். குமரி எஸ். நீலகண்டன் எழுதியது. இந்த மாதிரி தலைப்புகள் கொண்ட நாவல்கள் புதிதல்ல. வெகு அபூர்வம் என்று சொல்லவேண்டும். 1984 என்று அறுபது வருடங்களுக்கு முன் ஜியார்ஜ் ஆர்வெல் எழுதியது ஸ்டாலினின் கொடூர யதேச்சாதிகாரமும் கம்யூனிஸ சித்தாந்தமும் உலகை, மனித சமுதாயத்தை எங்கு இட்டுச் செல்கின்றன என்று அவர் 1949- ல் எழுதியது. அது ஒரு anti-utopia என்று வகைப்படுத்தினாலும், அது நம் மனித துயரைத் துடைக்க வந்த சித்தாந்தம் பேசினாலும், ஒரு யதேச்சாதிகாரரின் கீழ் மனித சமுதாயத்தின் சுதந்திரத்தை பறித்து அழிவுக்கு இட்டுச் செல்லும் ஒரு பயங்கர சொப்பனம், அது சொப்பனமல்ல, நிகழ்ந்து கொண்டிருக்கும் நிஜம் என்பதைச் சித்தரித்தது. அது கையாண்ட பல புதிய சொல்லாக்கங்கள் இன்று எந்த அரசினதும் ஆயுதங்களாகி அன்றாட புழக்கத்தில் வந்துள்ள மொழியாகியுள்ளது. (ஜியார்ஜ் ஆர்வெல்லுக்கும் முன்னால் கி.பி. 2000 என்று 1940களில் எப்போதோ வருங்கால கனவாக ஒரு உடோப்பியாவை போன நூற்றாண்டில் ஐம்பதுக்களிலிருந்து எழுபதுக்கள் வரை பெரிதும் கொண்டாடப்பட்ட மு. வரதராசனார் எழுதியது ஒன்றும் தமிழில் உண்டு. அதற்கும் முன்பாக கோதைத்தீவு என்று வ.ரா. ஒரு உடோப்பியா எழுதியிருக்கிறார்.
(குறிப்பு – பிரதேசம் சார்ந்த நவீன இலக்கிய வளர்ச்சி தொடர்பாக 2000 ற்குப் பின்னர் யாழ்மாவட்ட இலக்கியச் செயற்பாடுகள் தொடர்பாக ஒரு வினாவை மகுடம் ஆசிரியர் அனுப்பியிருந்தார். அதற்கு எழுதப்பட்ட சுருக்கமான பதிலே இங்கு தரப்படுகிறது.)
2000 ற்குப் பின்னரான காலம் அரசியல் ரீதியில் பல மாற்றங்களைக் கொண்டதாக இருக்கிறது. போரும் – சமாதானமும், போரும் – அழிவும் என மாறியகாலம். இக்காலங்களில் எழுந்த கலை இலக்கியங்களும் மக்களின் துன்பங்களையும் அதிலிருந்து மீளமுடியாத வாழ்க்கையையும் எடுத்துக் காட்டுவனவாகவே அமைந்திருந்தன. இவற்றை மிக நுண்மையாகத்தான் நோக்கவேண்டும். ஆனாலும் சில பொதுவான ஓட்டங்களை இங்கு சுட்டிக்காட்டலாம். கவிதையைப் பொறுத்தவரையில் குறிப்பிடத்தக்க முயற்சிகள் நடந்தேறியிருக்கின்றன. குறிப்பாக யாழ்ப்பாணம் ஏனைய பிரதேசங்களில் இருந்து முற்றாகத் துண்டிக்கப்பட்டு மூடுண்ட காலமாக இருந்தபோது வெளிவந்த படைப்புக்கள் மக்களின் இயல்புவாழ்க்கை அழிக்கப்பட்டதன் வெளிப்பாடுகளைப் புலப்படுத்துவனவாக அமைந்திருந்தன. இக்காலத்தில் ஆயுதம் தரித்த எல்லாத்தரப்பினரிடம் இருந்தும் மக்கள் பல்வேறுவிதமான வாழ்க்கை முரண்பாடுகளை எதிர்கொண்டனர். குறிப்பாக அக்காலத்தில் வெளிவந்த தீபச்செல்வன், சித்தாந்தன், துவாரகன், சத்தியபாலன் ஆகியோரின் கவிதைகளின் ஊடாக இந்த மூடுண்ட காலங்களை அறிந்துகொள்ள முடியும். அப்போது வெளிவந்த மூன்றாவது மனிதன் சஞ்சிகையில் ஹரிகரசர்மா எழுதிய ‘யாழ்ப்பாண நாட்குறிப்புகள்’ என்ற புனைவுசாரா எழுத்துக்களையும் இக்கவிதைகளோடு இணைத்து நோக்கலாம்.
“இவர் ஓர் எழுத்தாளர் அல்லர். ஆனால், எப்பொழுதுமே எழுத்தாளர்களுக்கு மத்தியிலே காணப்படுபவர். எழுத்தாளர்களுக்காக எதையும் செய்யத்துணிபவரும் கூட.குறிப்பாக முற்போக்கு எழுத்தாளர்களால் நன்கு அறியப்பட்டவர். மாணிக்கவாசகர்தான் அவரது பெயர்.” – இவ்வாறு மல்லிகை 2010 அக்டோபர் இதழில், தமது வாழும் நினைவுகள் தொடரில் பதிவு செய்கிறார் நண்பர் திக்குவல்லை கமால். கமாலின் வார்த்தைகளை நான் மட்டுமல்ல மாணிக்கவாசகரை நன்கு தெரிந்த அனைவருமே அங்கீகரிப்பார்கள். எனது வாழ்வை ஒருகட்டத்தில் திசை திருப்பியவர்தான் இந்த மாணிக்கவாசகர். 1973-1976 காலப்பகுதியில் நிரந்தரமான வேலை எதுவும் இல்லாமல் அலைந்துகொண்டிருந்தேன். காலிமுகத்திடலில் வீதி அகலமாக்கும் நிர்மாணப்பணியில் ஒப்பந்த அடிப்படையில் அங்கு வேலை செய்த தொழிலாளர்களை ‘மேய்க்கும்’ ஓவர்ஸீயர் வேலையையும் ஒப்பந்தம் முடிந்ததும் இழக்கநேர்ந்தது. எனது நிலைமையைப்பார்த்து பரிதாபப்பட்ட பிரேம்ஜியும் சோமகாந்தனும் எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பக வேலைகளுக்காக என்னை உள்வாங்கி மாதம் 150 ரூபா அலவன்ஸ் தந்தார்கள். நானும் நீர்கொழும்பு – கொழும்புஎன தினசரி பஸ்ஸ_க்கு செலவழித்து பயணித்துக்கொண்டிருந்தேன். முற்போக்குஎழுத்தாளர் சங்கம் மற்றும் கூட்டுறவுப்பதிப்பகத்தின் பணிகளின்போதுதான் மாணிக்ஸ்அறிமுகமானார். அவருடன் அறிமுகமான மற்றுமொருவர் சிவராசா மாஸ்டர். இருவருமே கம்யூனிஸ்ட் கட்சியின் (மாஸ்கோ) ஆதரவாளர்கள். அத்துடன் இருவரும் ஆசிரியர்களாக கொழும்பில் பணியிலிருந்தவர்கள்.
ஒரு துருவம் மனுஷி. இளம் பெண். புதுவை பல்கலைக் கழகத்தில் முதுகலைப் படிப்பு முடிந்து இப்போது ஆராய்ச்சி மாணவி என்று நினைக்கிறேன். குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள் என்னும் தன் முதல் கவிதைத் தொகுப்புடன் நம் முன் அறிமுகம் ஆகிறார். தன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் காலத்தில், ஒரு நாள் கவிதை எழுதத் தொடங்கியதாகச் சொல்கிறார். கவிதை அன்றிலிருந்து அவரது பிரக்ஞையை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. அந்தக் கவிதை, பேருந்து ஒன்றில் பயணம் செய்யும் சக பயணிகள் அனைவரையும் கவர்ந்த, ஒரு ஆறுமாதக் குழந்தையின் சிரிப்பு எழுதத் தூண் டியது. ஆனால் தன் வார்த்தைகளால் அந்த அனுபவம் முழுதையும் சொல்ல முடியவில்லை என்கிறார் மனுஷி. புரிகிறது. அந்தத் தொடக்கத்திலிருந்து பின் எழுதிய கவிதைகளை தோழிகள், நண்பர்கள் கவிதை நன்றாக இருப்பதாகவும் ஆனால் ”ஏன் விரக்தி, வெறுமை, கண்ணீர் பற்றியதாகவே இருக்கிறது?” என்று கருத்து சொன்னதாகச் சொல்கிறார் மனுஷி. முன்னுரை எழுதி வரவேற்றுள்ள அவரது ஆசிரியரும் துயரங்களின் அழகியல் என்றே மனுஷியின் கவிதைத் தொகுப்பு பற்றி கருத்து தெரிவித்திருக்கிறார். ஒர் இளம் வயதுப் பெண், குழந்தையின் சிரிப்பை கவிதையாகத் தந்த ஒரு பெண்ணின் கவிதை துயரங்களின் தொகுப்பாகவா இருக்கும்?. அந்த வயதின் ஏக்கங்களும், அவ்வப்போதைய தனிமையும் இருக்கும் தான். ஆனால் அவையே எல்லாமுமல்ல. வேர்த்துக் கொட்டிய வானம் என்று ஒரு கவிதையைத் தொடங்க விரும்பினாலும் அது என்னை நனைத்து போனது என்று தான் அடுத்த வரி எழுத வருகிறது. ஏன்? வேர்த்துக் கொட்டியது வானத்திற்கு. அதுக்கு என்ன பயமோ, கஷ்டமோ?. ஆனால் மனுஷி நனையத்தான் செய்கிறார். ஏன்? இருவர் மனங்களும் ஆட்பட்டிருப்பது வெவ்வேறு உணர்வுகளில். திரும்பவும்