யோ.கர்ண்னின் ‘தேவதைகளின் தீட்டுத்துணி’ வடலி பதிப்பக வெளியீடாக வெளிவந்த சிறுகதைத் தொகுதி. அண்மையில் வெளிவந்த சிறுகதைத் தொகுதிகளில் முக்கியமானதோரிடம் இதற்குண்டு. அதற்கு முக்கியமானதொரு காரணம் இதன் ஆசிரியர்தான். முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்த யுத்தத்தின் பாதிப்பை நேரில் கண்டவர் இவர். அதுவரை நடைபெற்ற ஆயுதப் போராட்டத்தில் நேரில் பங்குபற்றிய சாட்சியாக இருந்தவர் இவர். அக்காலகட்டத்திலும், அதன் பின்னர் யுத்த காலகட்டத்திலும் நடைபெற்ற மனித உரிமை மீறல்களையெல்லாம் சாட்சியாக நின்று அவதானித்தவர் இவர். யுத்தம் காரணமாகக் காலினை இழந்தவர் இவர். இவற்றின் காரணமாக இவரது அனுபவங்களை அடிப்படையாகக்கொண்டு உருவான கதைகளிவையென்பதால் முக்கியத்துவம் வாய்ந்தவை இத்தொகுதிக் கதைகள். யோ.கர்ணனின் கதைகள் ஆயுதப் போராட்ட நிகழ்வுகளை, யுத்த காலகட்டத்தின் அவலங்களை, ‘மனிக் பார்ம்’ தடுப்புமுகாம் அனுபவங்களைப் பதிவு செய்யும் ஆவணங்களாக விளங்குகின்றன. அதே சமயம் நடைபெற்ற நிகழ்வுகளின் மீதான விமர்சனங்களாகவும் விளங்குகின்றன. இத்தொகுப்பு பல்வேறுபட்ட அவலங்களை, நிகழ்வுகளை வெளிக்கொணர்ந்திருக்கிறது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்த மக்களின் அன்றாட வாழ்பனுவங்களை விபரிக்கும் சிறுகதைகள், யுத்த்தில் மக்கள் அடைந்த துன்பங்களையும், அழிவுகளையும் வெளிப்படுத்துகினறன. போராளிகளுக்கும், படையினருக்குமிடையில் நடைபெற்ற ஆயுத மோதல்களை எந்தவிதப் பிரச்சார நோக்கமுமின்றி விபரிக்கின்றன. உதாரணமாகத் தொகுதியின் முதலாவது கதையான ‘ஆதிரையும் நாற்பது ஆமிக்காரரும்’ கதையினை எடுத்துக்கொண்டால் அக்கதையிலிருந்து பல்வேறு தகவல்களைப் பெற முடியும். அக்காலகட்டத்தில் வன்னிப் பகுதியில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஆள்சேகரிப்புக்கான தெருக்கூத்துகள் பற்றி, போராளிகளுக்கான நான்கு மாதப் பயிற்சி பற்றி, அதன் பின்னர் அவர்களுக்குக் கொடுக்கப்படும் ஆயுதங்கள் பற்றி, ஜெயசிக்குறு காலகட்ட இராணுவத்துடனான மகளிர் அணியொன்றின் போராட்ட நடவடிக்கைகள் பற்றி, தன்னை அழிப்பதற்கு முன்னர் பொறுப்பாளருடன் ‘வாக்கி டோக்கி’யில் தொடர்புகொண்டு ‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’ என்று கூறிவிட்டுத் தன்னை அழிப்பது போன்ற நடைமுறைகள் பற்றி பல்வேறு தகவல்களை இச்சிறுகதையினை வாசிக்குமொருவர் அறிந்துகொள்ள முடியும். இவ்விதமான தகவல்கள் மிகவும் முக்கியமானவை. அந்தச் சூழலில் வாழாத ஒருவரால் இதுபோன்ற தகவல்களையெல்லாம் விபரிக்க முடியாது. அந்த வகையில் யோ.கர்ணனின் சிறுகதைகள் கூறும் தகவல்கள் ஈழத்தமிழர்களின் யுத்தகாலகட்டத்து வாழ்வை மையமாக வைத்துப் புனைவுகளைப் படைக்க விரும்பும் எழுத்தாளர்களுத் துணைபுரியும் ஆவணங்களாகவிருக்கின்றன.
‘தூக்கணாங்குருவிக்கூடு தூங்கக் கண்டார் மரத்திலே’ என்ற பாடல் காதுக்கு இனிமையாக இருப்பது போல் கூடுகளும் கண்ணுக்கு விருந்தாக… இருக்கும். ‘ இன்றைய தலைமுறைக் குழந்தைகளில் எத்தனை பேர் தூக்கணாங் குருவியையும், அதன் கூட்டையும் பார்த்திருப்பார்கள் என்பது கேள்விக்குரியதே. ஒரு அற்புதமான கட்டிடக்கலைஞன் பறவையாய் பிறந்து விட்டதே என்று வியக்கும் வ்ண்ணம் ஒரு பறவை கூடுகட்டி வாழ்ந்து வருகிறது. ஒரு அற்புதமான கூட்டினை கட்டுவதற்கு அது பதினெட்டு நாட்கள் எடுத்துக்கொள்கிறது என்றால் அது எவ்வளவு பெரிய வல்லுநராக இருக்க வேண்டும். வீடு கட்டியாகி விட்டது. வீட்டுக்கு விளக்கேத்த வேண்டுமே. பறவைகள் மண்ணெண்ணெய்க்கும் மின்சாரத்துக்கும் எங்கு போகும். இயற்கை அதற்கும் வழி சொல்லித்தந்துள்ளது. ஒரு மின்மினிப்பூச்சியை பிடித்து வந்து கூட்டில் வைத்துள்ள ஈரகளிமண்ணில் அதைப் பதித்து வைத்து கூட்டுக்குள் ஒளியேற்றிக் கொள்கிறது.
“புதுமைப்பித்தனது வாழ்க்கை தமிழ் எழுத்தாளர் ஒருவரின் சோக நாடகம், உயிருள்ள எழுத்தாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை” – என்று எழுதிய தொ.மு.சிதம்பரரகுநாதன் தமது 79 ஆவது வயதில் திருநெல்வேலியில் மறைந்தார் என்ற அதிர்ச்சியும் துயரமும் கலந்த செய்தியை தாங்கிய கடிதம் 2001 ஆம் ஆண்டு இறுதியில் இலங்கையிலிருந்து நண்பர் கே.கணேஷிடமிருந்து எனக்கு வந்தது. வாராந்தம் கொழும்புப் பத்திரிகைகள் இங்கு திங்கள் அல்லது செவ்வாய் கிடைத்துவிடும். ஆனால் அவற்றில் இந்த மறைவுச் செய்தியை காணமுடியவில்லை. திருநெல்வேலி பெருமாள்புரத்தில்தான் இப்பொழுதும் அவர் வசிக்கிறார் என நம்பிக்கொண்டிருந்தேன். இறுதியாக 90 இல் அவரது இல்லத்திற்கு குடும்பத்தோடு விருந்தினராகச் சென்றேன். எனது அப்பாவின் வழியில் அவர் எனது நெருங்கிய உறவினர் என்பது எனக்கு எப்பொழுதும் பெருமை தரும் விஷயம். அவரது மருமகள் (மகனின் மனைவி) மாலதி ஹரீந்திரன் எனக்கு அண்ணி முறை. இந்த உறவு முறைகளுக்கெல்லாம் அப்பால் ரகுநாதனை நான் பெரிதும் மதிப்பதற்கு பல காரணங்கள் இருந்தன. அதனாலேயே அவரது மறைவின் பின்னர் எனது பறவைகள் நாவலை அவருக்கே சமர்ப்பணம் செய்திருந்தேன். புதுமைப்பித்தனின் நெருங்கிய சகாவான ரகுநாதன், அவர் குறித்து கொண்டிருந்த – எமக்குப் புகட்டும் பாடம் என்ன? என்பதையே இந்த ஆக்கத்தின் ஆரம்பத்தில் குறிப்பிட்டேன். எனவே ரகுநாதன் குறித்து என்னால் சொல்லக்கூடியது இதுதான்:- ‘ரகுநாதனது வாழ்க்கை சமரசங்களுக்குட்படாத ஒருவரின் துணிவு, உயிருள்ள எழுத்தாளர்களுக்கு ஒரு முன்னுதாரணம்.’
தமிழில் சூழற் பாதுகாப்பு பற்றிய விரிவான தகவல்களுடன் கூடிய, சாதாரண வாசகர்களுக்குரிய நூல்கள் மிகவும் குறைவு. இவ்விதமானதொரு நிலையில் வெளிவந்திருக்கும் பொ.ஐங்கரநேசனின் ‘ஏழாவது ஊழி’ மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நூலினை அண்மையில் வாசித்தபோது இவ்விதம்தான் தோன்றியது. தாவரவியலில் முதுநிலைப் பட்டதாரியான பொ.ஐங்கரநேசன் மேற்படி சூழல் பாதுகாப்பு பற்றிய துறையிலுள்ள தன் புலமையினை நன்கு பயன்படுத்திப் பொதுவான வாசகரொருவருக்கு மிகவும் இலகுவாக விளங்கும் வகையில், செறிவானதொரு நூலினைப் படைத்துள்ளார். சூழற் பாதுகாப்பு பற்றிய நாற்பத்தியொரு கட்டுரைகளை உள்ளடக்கிய ‘ஏழாவது ஊழி’ நூலினைத் தமிழகத்திலிருந்து சாளரம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இன்றைய மனிதரின் செயற்பாடுகளினால் நாம் வாழும் இந்த அழகிய நீல்வண்ணக்கோள் எவ்விதம் பாதிக்கப்படுகின்றது, இதனைத் தவிர்க்க சர்வதேச உலகம் என்ன செய்ய வேண்டும், தனிப்பட்ட மனிதர்கள் எவ்விதம் பங்களிக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் மிகவும் விரிவாக, அரிய பல தகவல்களுடன் நூலினைப் படைத்துள்ள ஐங்கரநேசன் முயற்சி காலத்தின் தேவைக்குரிய பயனுள்ள முயற்சி. இந்த நூல் சூழற் பாதுகாப்பு பற்றி விரிவாக விளக்குவதுடன், சூழற் சீரழிவுக்குக் காரணமான நாடுகள், நிறுவனங்கள் (குறிப்பாகப் பன்னாட்டு நிறுவனங்கள் ) பற்றியதொரு விமர்சனமாகவும் அதே சமயத்தில் இந்த விடயத்தில் இன்னும் நம்பிக்கையினை இழக்காததொரு நம்பிக்கைக் குரலாகவும் விளங்குகின்றது. பெரும்பான்மையின் பெயரால் நிலம், இயற்கைச் சூழல் அபகரிக்கப்படும்போது, பாதிக்கப்படும் சிறுபான்மையினமும் சூழற் சீரழிவுக்குக் காரணமாகவிருக்கிறது என்பதையும் நாம் மறந்துவிட முடியாது.
தமிழில் சூழற் பாதுகாப்பு பற்றிய விரிவான தகவல்களுடன் கூடிய, சாதாரண வாசகர்களுக்குரிய நூல்கள் மிகவும் குறைவு. இவ்விதமானதொரு நிலையில் வெளிவந்திருக்கும் பொ.ஐங்கரநேசனின் ‘ஏழாவது ஊழி’ மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நூலினை அண்மையில் வாசித்தபோது இவ்விதம்தான் தோன்றியது. தாவரவியலில் முதுநிலைப் பட்டதாரியான பொ.ஐங்கரநேசன் மேற்படி சூழல் பாதுகாப்பு பற்றிய துறையிலுள்ள தன் புலமையினை நன்கு பயன்படுத்திப் பொதுவான வாசகரொருவருக்கு மிகவும் இலகுவாக விளங்கும் வகையில், செறிவானதொரு நூலினைப் படைத்துள்ளார். சூழற் பாதுகாப்பு பற்றிய நாற்பத்தியொரு கட்டுரைகளை உள்ளடக்கிய ‘ஏழாவது ஊழி’ நூலினைத் தமிழகத்திலிருந்து சாளரம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இன்றைய மனிதரின் செயற்பாடுகளினால் நாம் வாழும் இந்த அழகிய நீல்வண்ணக்கோள் எவ்விதம் பாதிக்கப்படுகின்றது, இதனைத் தவிர்க்க சர்வதேச உலகம் என்ன செய்ய வேண்டும், தனிப்பட்ட மனிதர்கள் எவ்விதம் பங்களிக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் மிகவும் விரிவாக, அரிய பல தகவல்களுடன் நூலினைப் படைத்துள்ள ஐங்கரநேசன் முயற்சி காலத்தின் தேவைக்குரிய பயனுள்ள முயற்சி. இந்த நூல் சூழற் பாதுகாப்பு பற்றி விரிவாக விளக்குவதுடன், சூழற் சீரழிவுக்குக் காரணமான நாடுகள், நிறுவனங்கள் (குறிப்பாகப் பன்னாட்டு நிறுவனங்கள் ) பற்றியதொரு விமர்சனமாகவும் அதே சமயத்தில் இந்த விடயத்தில் இன்னும் நம்பிக்கையினை இழக்காததொரு நம்பிக்கைக் குரலாகவும் விளங்குகின்றது. பெரும்பான்மையின் பெயரால் நிலம், இயற்கைச் சூழல் அபகரிக்கப்படும்போது, பாதிக்கப்படும் சிறுபான்மையினமும் சூழற் சீரழிவுக்குக் காரணமாகவிருக்கிறது என்பதையும் நாம் மறந்துவிட முடியாது.
அறிமுகம்
அ. முத்துலிங்கம் 80 களுக்கு முன்னர் ஈழத்தில் இருந்து தொழிலின் நிமிர்த்தம் புலம்பெயர்ந்து சென்ற தலைமுறையைச் சேர்ந்தவர். உலக வங்கியிலும் ஐ.நா சபையிலும் பணிபுரிந்து ஓய்வு பெற்று தற்போது கனடாவில் வாழ்ந்து வருகிறார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தோற்றம் பெற்ற காலத்தில் கைலாசபதியால் எழுத்துலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர். அக்காலத்தில் எழுதிய சிறுகதைகள் 1964 இல் ‘அக்கா’ என்ற தொகுதியாக வெளிவந்தது. பின்னர் ஆசியா, ஆபிரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல பாகங்களிலும் உள்ள நாடுகளுக்கு பயணப்பட்டு வாழ்ந்தவர். ஏறத்தாழ 25 வருடம் எழுத்திலிருந்து ஒதுங்கியிருந்து பின்னர் 1995 இல் இரண்டாங் கட்டமாக தமிழ்ப்படைப்புலகில் நுழைந்தார். காலம், அம்மா போன்ற புகலிடச்சஞ்சிகைகள் ஊடாகவும், தமிழகச் சஞ்சிகைகள் ஊடாகவும் சிறுகதைகளை எழுதியபோது தமிழ்நாட்டில் நன்கு அடையாளம் காணப்பட்டார். அதன்பின்னரே திகடசக்கரம், வம்சவிருத்தி, வடக்கு வீதி ஆகிய சிறுகதைத்தொகுதிகள் வெளிவருகின்றன.
மின்னஞ்சல், ஸ்கைப், டுவிட்டர், எஸ். எம். எஸ். அறிமுகமானதன் பின்னர் கடிதம் எழுதுவதே அரிதாகிவிட்டது. தற்காலத்தில் படிவங்களையும் ஒன்லைனில் பூர்த்திசெய்து அனுப்ப முடிந்திருப்பதனால் அதிலும் பேனைக்கு வேலையில்லாமல் போய்விட்டது. காசோலைக்கு ஒப்பமிடுவதற்கு மாத்திரம் பேனை உதவும் காலத்தில் வசதி படைத்தவர்கள் மாறிவிட்டார்கள். எழுத்தாணியும் பனையோலை ஏடுகளும் வெள்ளீய அச்சும் நூதனசாலைக்குச் சென்று விட்டன போன்று தபால் முத்திரைகளும் வருங்காலத்தில் ஆவணக்காப்பகத்தில் இடம்பெறலாம். அவுஸ்திரேலியாவில் தபால் நிலையங்களை போஸ்ட் ஷொப் (Post Shop) என அழைக்கிறார்கள். அந்தப்பெயரில்தான் தபால் நிலையம் காட்சிப்பலகையில் துலங்குகிறது. அங்கே முத்திரை மட்டுமல்ல இனிப்பு சொக்கலெட்ää தண்ணீர்ப்போத்தல் காகிதாதிகள் உட்பட வேறு பொருட்களும் விற்பனையாகின்றன. மக்கள் முத்திரை வாங்குவதும் குறைகிறது. காரணம் கணினிதான்.
பூங்காவனம் இலக்கிய வட்டத்தின், கலை இலக்கிய சமூக சஞ்சிகையான பூங்காவனம் 13 ஆவது இதழ் பூத்து தற்போது வாசகர்கள் கைகளில் மணம் பரப்பிக்கொண்டிருக்கிறது. ஷஅன்னையும் பிதாவும் முன்னரி தெய்வம்| என ஒளவையார் தாய் தந்தையரின் முக்கியத்துவத்தைப் பற்றி சொல்லும் போது குறிப்பிடுகின்றார். உண்மையில் சகலவற்றிலும் தாய்க்கும், தந்தைக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு என்பதைப் பலர் மறந்துவிடுகின்றனர். பொருளாதாரத்தின் பலம் அவர் கையில்தான் இருக்கிறது. அவரது உழைப்பு இன்றேல் குடும்பத்தின் வாழ்வு நிலை வழுக்கி வீழ்ந்துவிடும். அன்னையர் தினத்தைப் போல தந்தையருக்கும் தினம் ஒன்று இருக்கிறது என்பதனை வாசகர்களுக்கு நினைவூட்டி அவர்களைக் கன்னியப்படுத்த வேண்டும் என்பதை சஞ்சிகை ஆசிரியர் சுட்டிக் காட்டியிருக்கிறார். பூங்காவனத்தின் உள்ளே நான்கு சிறுகதைகள், எட்டுக் கவிதைகள், இரண்டு கட்டுரைகள், இரண்டு நூல் மதிப்புரைகள் என்பவற்றோடு வாசகர் கடிதமும், நூலகப் பூங்காவும் வழமை போல் இடம் பிடித்துள்ளன. செல்விகள் ரிம்ஸா முஹம்மத், எச்.எப். ரிஸ்னா இருவரும் ஆரவாரம் எதுவுமின்றி அமைதியாக இலக்கியச் சேவை புரிந்து வரும் திருமதி பவானி தேவதாஸ் அவர்களை நேர்கண்டு அவர் மூலமாக பல இலக்கியத் தகவல்ளைத் தந்து இருக்கிறார்கள். திருமதி. பவானி தேவதாஸ் கண்டியில் பிறந்து வளர்ந்து விஞ்ஞான ஆசிரியையாகி கல்விச் சேவை செய்தவர். ஸிந்து கன்னியா என்ற பெயரில் இவருக்கு ஒரே ஒரு மகள் மாத்திரம் இருக்கிறார்.
இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் எழுத்தாளர்கள் -கலைஞர்கள்- இலக்கிய வாசகர்களால் 1988ம் வருடம் ஜெர்மனியின் ‘ஹேர்ண்’ நகரத்தில் தொடங்கப்பட்ட இலக்கியச் சந்திப்பு இந்த இருபத்தைந்து வருடங்களில் நாற்பது சந்திப்புத் தொடர்களை மேற்கு அய்ரோப்பியத் தேசங்களிலும் கனடாவிலும் நிகழ்த்தி, அதனது நாற்பத்தியொராவது சந்திப்புத் தொடரைத் தாயகத்தில் நிகழ்த்தும் இந்தத் தருணம் உற்சாகமானதாகும். இலங்கையில் கொடிய போர் நடந்துகொண்டிருந்த காலங்களில், இலங்கையில் மிகக் கடுமையான கருத்துச் சுதந்திர அடக்குமுறைகள் நிலவிய காலங்களில், அந்த அடக்குமுறைகள் எல்லைகளைக் கடந்து புலம்பெயர்ந்த தேசங்களிற்கும் கடத்தப்பட்ட காலங்களில், இலக்கியச் சந்திப்பாளர்கள் தாயகத்தில் நடந்துகொண்டிருந்த யுத்தத்திற்கும் அனைத்து அடக்குமுறைகளிற்கும் அதிகாரங்களிற்கும் எதிரான தங்களது குரலை சுயாதீனமாக, யாருக்கும் பணியாத உறுதியுடன் தொடர்ச்சியாக ஒலித்துக்ண்டிருந்தார்கள். யுத்தத்திற்குப் பின்னும் இந்த எதிர்க் குரலை இலக்கியச் சந்திப்புத் தன்னுடன் வைத்தேயிருக்கிறது. ஒடுக்குமுறைகள் இருக்கும்வரை இந்த எதிர்க்குரலும் ஒலித்துக்கொண்டேயிருக்கும். சிறுபத்திரிகைகளில் செயற்பட்டுக் கொண்டிருப்பவர்களையும் தீவிர இலக்கிய எழுத்தாளர்களையும் மாற்று அரசியற் செயற்பாட்டாளர்களையும்; மார்க்ஸியம், தலித்தியம், பெண்ணியம், பெரியாரியம், பின்நவீனத்துவம், உடலரசியல் போன்ற சிந்தனைப் போக்குகளையும் இணைக்கும் சுதந்திரக் களமாக இலக்கியச் சந்திப்பு இருந்துகொண்டேயிருக்கிறது. யுத்தம் முடிந்த பின்பும் யுத்தத்தின் சுவடுகள் நம்முடனேயே இருக்கின்றன. இலங்கையில் பேச்சு – எழுத்துச் சுதந்திரம் இன்னும் அரசாங்கத்தாலும் பிற ஆயுதக் குழுக்களாலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிக்கொண்டேயிருக்கின்றது. அதேவேளையில் யுத்த காலத்தின் கடுமையான கெடுபிடிகள் சற்றே தளர்ந்து ஒரு இடைவெளி இலங்கையில் உருவாகியுமிருக்கிறது. இந்த இடைவெளியே இலக்கியச் சந்திப்புத் தொடரை இலங்கைக்கு நகர்த்தியிருக்கிறது.
”எனது நீண்டகால மருத்துவ பணியில் நான் பெற்ற அனுபவங்கள் பல்லாயிரம் அவற்றின் சில துளிகளின் வெளிப்பாடாகவே இந்த கருணை நதி கருக் கொண்டது” கருணை நதி குறுநாவலின் முகவுரையில் அதன் ஆசிரியர் மிதாயா கானவி (மிதிலா) இவ்வாறு குறிப்பிடுகின்றார். ”மனித வாழ்வின் வாழ்வியல் அனுபவங்களே இலக்கியமாகிறது” அந்த வகையில் கருணை நதி மருத்துவ தாதியாக கடமையாற்றும் மிதாயாகானவியின் மருத்துவ துறைசார்ந்த அனுபவங்களை உணர்வூட்டும் காதல் கதையொன்றுடன் பேசுகிறது. ஈழத்தமிழ் மக்கள் நெருக்கடியானதும் துன்பகரமானதுமான பாதையை கடந்து வந்திருக்கிறார்கள் முள்ளி வாய்க்கால் பேரவலம் ஒரு இனத்தின் பேரழிவாக பதிவாகியிருக்கிறது. இந்த அனர்த்தங்களோடு இணைந்து பயணிக்கிறது கருணை நதி இதுவே இந் நாவலை கவனத்துக்குரியதாக்குகிறது. இலங்கையில் நிகழ்ந்த போர் அவலங்கள் பல்வேறு வகையில் பதிவு செய்யப்பட்டிருக்கினறன. அந்தவகை இலக்கிய பதிவாக வெளிவந்த கருணை நதி தமிழர் துயரை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. இதைவிட போர்ச்சூழலில் நின்று மக்கள் துயர் துடைத்த மருத்ததுவ பணியாளர்களின் கருணையை மறக்க முடியாது. காதலின் ஏக்கமும் தேடலுமே கதையின் கருவென விரிந்தாலும் மருத்துவ பணியின் மனிதநேய அணுகுமுறை கருணை நதியாக கதையெங்கும் பரவுகிறது. உண்மையை எழுதுதலே சிறந்த இலக்கியமாகிறது .இங்கும் வாழ்வின் யதார்த்தமே நாவலின் வெற்றியை தீர்மானித்திருக்கிறது.