சீட்டு விளையாட்டே வாழ்க்கை

சுப்ரபாரதிமணியன்தீவிரமான வாசிப்பின் அடுத்த வெளிப்பாடு எழுதிப் பார்ப்பது. கவிதையின் இறுக்கம் பிடிபடாதபோது-அல்லது கவிதையிலிருந்து அடுத்த தளத்திற்குச் செல்கிறபோது சிறுகதை மனதில் வந்துவிடும். வாசிப்பு தந்த பாதிப்பில் உரைநடையில் எதையாவது எழுதிப் பார்க்கத் தோன்றும். அல்லது வாசிப்பின்போது கிடைத்த, பிடிபடுகிற விஷயத்திற்கு இணையான இன்னொரு அனுபவத்தை எழுதிப் பார்க்கத் தோன்றும். அந்த விஷயம், அனுபவம் சிறுகதைக்கான முரண் அற்றும் இருக்கலாம். முரண் அல்லது திருப்பம் சிறுகதையின் கடைசியில் வெளிப்பட்டு இருக்க வேண்டும் என்பது பல சமயங்களில் செயற்கையாகவும் அமைந்துவிடும். சமூக முரணே சிறுகதைக்கான முரண் என்று சொல்லலாம். இதை உடைத்தெறிகிற பல வடிவங்கள் நம்முன் இன்று.  ‘நாலு பேரும், பதினைந்து கதைகளும்’ என்றொரு தொகுப்பு. நானும் நாலு நண்பர்களும் சேர்ந்து வெளியிட்டோம். (கார்த்திகா ராஜ்குமார், ப்ரியதர்ஷன், நந்தலாலா) அது எழுபதுகளில் சா. கந்தசாமி, க்ரியா ராமகிருஷ்ணன் போன்றோர் இடம் பெற்ற ‘கோணல்கள்’ என்ற தொகுப்பின் சாயலைக் கொண்டிருந்தது. அதில் உள்ள ‘கவுண்டர் கிளப்’ என்ற நீண்ட கதை என் சின்ன வயசின் கிராம வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தது. கொங்கு மண் சார்ந்த வாழ்க்கையும், அனுபவங்களும் அதனூடாக அமைந்த வாழ்க்கையின் சிக்கல்களும், முரண்களும்-அதை ஒரு சிறுகதையாக்கியிருந்தது.

Continue Reading →

சிங்கப்பூர் தமிழ் இலக்கியம்!

[ பதிவுகள் இணைய இதழின் நவம்பர் 2005 இதழ் 71 இல் வெளியான கட்டுரை. ஒரு பதிவுக்காக ஒருங்குறியில் மீள்பிரசுரமாகின்றது. -பதிவுகள் ]  

- வெங்கட் சாமிநாதன் -முதலில் என்னுடைய அறியாமையை ஒப்புக்கொள்ள வேண்டும். சிங்கப்பூர் பார்க்கப்போனால் ஒரு நகரமே.. அந்த நகரம் தான் ஒரு நாடாக, மலேயாவிலிருந்து பிரிந்த நாடாக, கொஞ்ச காலம் முன் தன் இருப்பை மேம்படுத்திக் கொண்டுள்ளது. லீ க்வான் யூ வின் தலைமை வழிகாட்டுதலில் வியக்கத் தக்க பொருளாதார வளர்ச்சி அடைந்து Asian Tiger-ல் ஒன்றாக ஆகியுள்ளது.. அந்த அரசில் ஒரு தமிழர் அயல்நாட்டு உறவு அமைச்சராகும் அளவிற்கு தமிழர்களின் இடம் அந்நாட்டில் சிறப்புப் பெற்றுள்ளது. தமிழ் அந்நாட்டின் அரசு மொழிகளில் ஒன்று. சரி. இதெல்லாம் சரி. ஆனால் இலக்கியம்?  தென் ஆப்பிரிக்கா, ·பிஜி, மாரிஷஸ், மலேசியா, கயானா இலங்கை, இப்படி பல நாடுகளுக்கு 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து, தமிழ் நாட்டின் தென்மாவட்டங்களிலிருந்து தமிழ் மக்கள் லக்ஷக்கணக்கில் கரும்பு, ரப்பர் தோட்டங்களில் கூலிகளாக தங்கள் வயிற்றுப் பாட்டிற்கு சென்றனர். அவர்கள் ஏழைகள். படிப்பற்றவர்கள். பல இடங்களில் அவர்கள் தம் தாய் மொழியையும் மறந்தவர்கள் தான். அப்படி இருக்க இலக்கியம் என்று அவர்களிடமிருந்து என்ன எதிர் பார்க்க முடியும்.? அதிகம் அவர்கள் ஒரு முருகன் கோயில் அல்லது மாரியம்மன் கோயில் எழுப்பி காவடி, தீமிதி என்று தம் தமிழ் அடையாளத்தை நினைவுறுத்திக் கொண்டிருக்கலாம். மலேசியாவில் இது வெகு சிறப்பாக நடை பெறுகிறது. தமிழ் சினிமாவில் நேற்றைய தீபாவளி ரிலீஸ் வரை அப்டுடேட்டாக இருக்கலாம். சரி. அதற்கு மேல்? ஒர் விதி விலக்கு. இலங்கை. ஆனால் அங்கு இலக்கியப் படைப்புகளில் ஆழ்பவர்கள், தேயிலை ரப்பர் தோட்ட தொழிலாளிகள் அல்ல. சரித்திர காலத்திலிருந்தே அங்கு வாழ்ந்து வரும் ஈழத் தமிழர் தான். 50 களிலோ என்னவோ கு. அழகிரிசாமி மலேயா சென்று சிறுகதை வகுப்புகள் நடத்தியதாக படித்த ஞாபகம். வகுப்பு  நடத்தி, யாரும் சிறுகதைக்காரராகும் வாய்ப்பு இருக்கிறதா? யாரும் அந்த வகுப்பிலிருந்து சிறுகதைக்காரராக வெளியேறியிருக்கிறார்களா? தெரியாது. 

Continue Reading →

ஹெக்கோடு சுப்பண்ணா (1932-2005)! இருப்பு தெரிந்தாலல்லவா இழப்பு வருத்தும்

[ பதிவுகள் இணைய இதழின் செப்டம்பர் 2005 இதழ் 69 இல் வெளியான கட்டுரை. ஒரு பதிவுக்காக ஒருங்குறியில் மீள்பிரசுரமாகின்றது. -பதிவுகள் ]  

ஹெக்கோடு சுப்பண்ணா (1932-2005)!- வெங்கட் சாமிநாதன் -போனமாதம் மூன்றாம் வாரமோ என்னமோ ஒரு நாள் வெளி ரங்கராஜனிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. இரங்கல் கூட்டம். ஹெக்கோடு சுப்பண்ணா (1932-2005} மறைந்து விட்டார். திகைப்பாகவும் வேதனையாகவும் இருந்தது. எப்படி இந்தச் செய்தியை பத்திரிகையிலிருந்து என் பார்வை தவறவிட்டது? வெளி ரங்கராஜனைக் கேட்டேன். பங்களூரிலிருந்து வந்த நஞ்சுண்டன் மூலம் தான் தனக்கு இந்தச் செய்தி தெரிந்ததாகவும், உடனே அவசர அவசரமாக ஏற்பாடு செய்ய வேண்டியதாயிற்று என்றார். அடுத்த இரண்டாம் நாள் நஞ்சுண்டனும் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். சென்னை பதிப்பை விட்டுத்தள்ளுங்கள், பங்களூர் பதிப்பில் கூட ஹிந்துவில் இந்த செய்தி வரவில்லை என்று அவர் சொன்னார். சரிதான் தமிழ் மரபு காப்பாற்றப் பட்டு விட்டது என்று நினைத்துக் கொண்டேன். சென்னையிலிருக்கும் லா.ச.ரா வே யாரென்று தெரிந்திராத, பைத்தியக்காரக் கூத்தாட்டத்திற்கும், சினிமாவுக்கும் வித்தியாசம் தெரியாத ஹிந்துவுக்கு, யாரும் அதற்கு எடுத்துச் சொன்னாலும்,  கர்னாடகாவில் ஏதோ ஒரு ஒதுங்கிய கிராமத்தில் நாடகம் போடும் பாக்குத் தோட்டக் காரராகத்தான் ஹிந்து பத்திரிகை அதைப் புரிந்து கொண்டிருக்கும்.. ஹிந்துவின் முகச்சித்திரமே இது வென்றால், மற்ற தமிழ் பத்திரிகைகளைப் பற்றிப் பேசுவது வீண். அந்த காலத்தில், சோழ நாட்டுத் தூதுவன் குதிரையேறி பாண்டி நாட்டுக்கு ஓலை கொண்டுவந்தால் தான் சோழநாட்டு செய்தி தெரியும் என்ற கதையாயிற்று இன்று. கர்னாடகாவிலிருந்து வந்த தூதுவர் சொல்லித்தான் நமக்குச் செய்தி தெரிகிறது. 

Continue Reading →

(8) – சி. சு. செல்லப்பா: தமிழகம் உணர்ந்து கொள்ளாத ஒரு வாமனாவதார நிகழ்வு!

சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு!- வெங்கட் சாமிநாதன் -முப்பதுகளிலிருந்து எழுத்தாளனாக வாழ விரதம் பூண்டு சென்னைக்கு வந்து விட்ட செல்லப்பாவுக்கு இரண்டு தலைமுறைகளுக்கும் மேலாக தான் விரும்பிய இலக்கிய வாழ்க்கை வாழ்ந்துவிட்ட பிறகு, இனி சென்னையில் வாழ வழியில்லை என்று தோன்றிவிட்டது ஒரு சோகம் தான். சோக உணர்வு நமக்கு. ஆனால் அவருக்கு, வத்தலக்குண்டுக்கு குடிபெயர நினைத்தது இயல்பான விஷயம் தான். சொந்த மண். பிறந்த மண். வத்தலக்குண்டு செல்லப்பாவின் பாசம் நிறைந்த ஊர். அவரது பிள்ளைப் பிராயம் கழிந்த ஊர். அந்த ஊர் மாத்திரமா? அந்த மண்ணின் மனிதர்களும், பேச்சும், வாழ்க்கையும் பண்பாடும் அவரது இதயத்தை நிறைக்கும் சமாசாரங்கள். அவரது எழுத்து அத்தனையும் அந்த மண்ணையும் மக்களையும் வாழ்க்கையையும் பற்றியுமே இருக்கும். கதை, நாடகம், நாவல் எல்லாமே, பால்ய கால நினைவுகள் அத்தனையும்,  அம்மண்ணையும்  மக்களையும் பற்றியே இருக்கும். மனிதனுக்கும் மிருகத்துக்கும் இடையே ஆன  வீர விளையாட்டுக்கூட ரத்தம் படிந்ததாக இராது. அது சார்ந்த தர்மங்களைப் பேசுவதாக இருக்கும். குற்ற பரம்பரையினராக ஆங்கிலேயர் காலத்திலிருந்து பேசப்பட்ட, அவ்வாறே அதற்கான கடுமையுடன் நடத்தப்பட்ட தேவர் மக்களிடம் கூட, அவர்களில் இன்னமும் குற்றம் புரியும் பழக்கம் விடாதவர்களிடம் கூட நிலவும் தர்மங்களைப் பற்றித் தான் அவர் கதைகள் பேசும்.

Continue Reading →

பரிணாம வளர்ச்சியின் மனித வரலாறு

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)மனிதன், விலங்கு, பறவை, ஊர்வன, மரம், தாவரம், செடி, கொடி போன்ற உயிரினங்கள் வாழவேண்டுமெனில் ஓர் இருப்பிடம் தேவைப்படுகின்றது. இவை யாவுக்கும் இருப்பிடம் கொடுத்து நிற்பது அந்தரத்தில் நின்று சுழன்றுகொண்டிருக்கும் ஒன்பது கோள்களில் ஒன்றான பூமியாகும். பூமியில் மட்டும்தான் உயிரினங்கள் வாழமுடியும். மற்றைய எட்டுக் கோள்களிலும் உயிரினம் வாழ முடியாது. பூமியில் உள்ள நீர், காற்று, வெப்பம் ஆகியவை உயிரினங்களை வாழ வைக்கின்றன. இதனால்தான் பூமியும் உயிர் பெற்றுச் சிறப்புடன் நிலைத்துள்ளது. எனினும் சூரியன் இன்றேல் பூமியும் இல்லை. ஏன் மற்றைய எட்டுக் கிரகங்களும் இயங்காது அழிந்துவிடும். எனவே சூரியன் பிறந்த கதையையும்  காண்போம்.  ஒரு  கருநிலைக்  கோட்பாட்டின்படி (Theory) 460 கோடி ஆண்டுகளுக்குமுன் ஒரு கிட்டிய நட்சத்திரம் விசையால் அழிக்கப்பட்டு அந்த வெடிப்பொலி அதிர்வு அலைகளைக் கதிரவன் முகிற் படலமூலம் வெளியேற்றி அதற்குக் கோணமுடக்கான இயங்கு விசையைக் கொடுத்தது.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் – 11: ‘பென்குவின் பதிப்பகம் வெளியிட்ட தமிழ்க் கவிதைத் தொகுப்பு பற்றி..’

வாசிப்பும் யோசிப்பும் - 11அண்மையில் The Rapids Of A Great River கவிதைத் தொகுப்பினைப் பார்த்தேன். உலகப் புகழ்பெற்ற ‘பென் குவின்’ நிறுவனத்தாரின் இந்தியக் கிளையினரால் வெளியிடப்பட்ட தொகுப்பு. தமிழக மற்றும் இலங்கைத் தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பு. மொழிபெயர்த்துத் தொகுத்திருப்பவர்கள்: லக்சுமி ஹோல்ம்ஸ்ட்ரோம், சுபஸ்ரீ கிருஷ்ணசாமி K.. ஸ்ரீலதா ஆகியோர். பென்குவின் தமிழ்க் கவிதைத் தொகுப்பு என்று முன் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கைக் கவிஞர்களில் சேரன், சோலைக்கிளி, அவ்வை, திருமாவளவன், செழியன், சிவசேகரம், சண்முகம் சிவலிங்கம், எம்.ஏ.நுஃமான், பிரமிள், சு.வில்வரத்தினம், கி.பி.அரவிந்தன் என்று பலரின் கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பு. தமிழக மற்றும் இலங்கைக் கவிஞர்களின் கவிதைகளை உள்ளடக்கியதாகத் தொகுப்பு வெளிவந்திருப்பது மகிழ்ச்சியளிப்பது. ஆனால் இந்தத் தொகுப்பில் கவிதைகள் தொகுக்கப்பட்ட விடயம் பற்றிச் சில கேள்விகள் என் மனதிலெழுந்தன. அதனை வாசகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமென்று எண்ணுகின்றேன்.

Continue Reading →

பதிவுகளில் அன்று: இலங்கை அரசின் மீனவர்கள் மீதான தாக்குதல்களும், இந்தியாவின் அமைதியும்!

[‘பதிவுகளில் அன்று’ பகுதியில் ‘பதிவுகள்’ இணைய இதழில் அன்றைய காலகட்டத்தில் வெளியான ஆக்கங்கள் அவ்வப்போது மீள்பதிவு செய்யப்படும். ]

இலங்கை அரசின் மீனவர்கள் மீதான தாக்குதல்களும், இந்தியாவின் அமைதியும்!அண்மைக் காலமாக தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதும் , கொல்லப்படுவதும் உபகண்ட அரசியலை அவதானித்து வருபவர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்து வருகின்றது. உலக அரங்கில் இராணுவ மற்றும் பொருளியல்ரீதியில் பலம் பொருந்திய வல்லரசுகளிலொன்றாகப் பரிணமித்துவரும் பாரதம் எதனால் தனது மண்ணின் முக்கியமானதோரினத்தின் கடற்றொழிலாளர்கள் மீது , அதுவும் அன்றாட வாழ்வே கேள்விக்குறியாக ஆழியினுள் அலைக்கழிந்து, வாழ்க்கையினையோட்டிச் செல்லும் வறிய தொழிலாளர்கள் மீது நடாத்தப்படும் இத்தகைய தாக்குதல்களை உறுதியாகத் தட்டிக் கேட்காமலிருந்து வருகின்றது என்னும் கேள்வி அரசியல் அவதானிகள், தமிழ் மக்கள், தமிழ் மக்கள் மத்தியில் இயங்கும் அரசியல் அமைப்புகள், மற்றும் மனித உரிமை அமைப்புகள் மத்தியில் எழுவது நியாயமானதுதான். ஒருவரா, இருவரா … கடந்த பல வருடங்களாக இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டும், படுகொலை செய்யப்பட்டும் வந்த தமிழக மீனவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் அதிகமானதாகும். இந்திய மத்திய அரசின் இந்த மாற்றாந்தாய் மனப்போக்கு இன்றைய அரசியல் சூழலில் இந்திய ஒருமைப்பாட்டுக்கு மிகவும் அபாயகரமானதொரு சமிக்ஞை. ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டபோதெல்லாம் காட்டிய கண்டிப்பையும், தீவிரத்தையும் ஏன் இந்திய மத்திய அரசு தமிழக மீனவர்கள் விடயத்தில் காட்டவில்லை என்ற கேள்வி நியாயமானதே.

Continue Reading →

பதிவுகளில் அன்று: சுப்ரபாரதிமணியனின் நாடக நூல் மணல் வீடு!

[‘பதிவுகளில் அன்று’ பகுதியில் ‘பதிவுகள்’ இணைய இதழில் அன்றைய காலகட்டத்தில் வெளியான ஆக்கங்கள் அவ்வப்போது மீள்பதிவு செய்யப்படும். ]

சுப்ரபாரதிமணியனின் நாடக நூல் மணல் வீடு:  புகழ்பெற்ற எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் முப்பத்தியைந்து நூல்களில்  ஒரு நாடக நூல்  “ மணல் வீடு “  உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை என்று எல்லாத்தளங்களிலும் தடம் பதித்திருக்கிறார். மணல் வீடு என்ற தலைப்பில்  ஜே.கிருஸ்ணமூர்த்தியின் தமிழ் நூல் ஒன்று ஞாபகம் வருகிறது. தமிழில் நாடக நூல்கள் வெகு குறைவு. எழுத்தாளர்களும் ஆர்வம் காட்டுவதில்லை. தி. ஜானகிராமன், இந்திரா பார்த்தசாரதி, பி.எஸ். ராமையா, ஜெயந்தன், பிரபஞ்சன், இன்குலாப் போன்ற எழுத்தாளர்கள் சில நாடகங்களை எழுதியிருக்கிறார்கள். மற்றபடி நவீன நாடகங்களை நாடகக்காரர்களே படைத்துக் கொள்கிறார்கள். நவீன நாடகங்கள் உருவான பிறகு எழுத்தாளர்கள் நாடகத்துறையை திரும்பிப் பார்ப்பதில்லை. அவைகளும் மக்களை நெருங்கவில்லை. கோமல் சுவாமிநாதனின் சட்டக வடிவ நாடகங்கள் மக்களின் போராட்டங்களை சித்தரித்தன. அதனால் மக்களின் பெரும் வரவேற்பை பெற்றன. கோமலுக்குப்பின் சில நல்ல நாடகங்களை தஞ்சை ராமசாமி உருவாக்கி வெற்றி பெற்றார். அமைப்புகள் பின்னணி இல்லாததால் மக்களை அதிகம் சென்றடையவில்லை.

Continue Reading →

முகநூல்: தனி மனிதன் உருவாக்கிய கருத்துக்களம்: 1,360 ஏக்கர் காடு! யார் இந்த மாமனிதர்?

அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமவாசி திரு.ஜாதவ் பயேங். அங்குள்ள மக்கள் இவரை 'முலாய்' என அழைக்கின்றனர். பிரம்மபுத்திரா நதியில் 1979 ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அதிக அளவில் பாம்புகள் அடித்து வர பட்டிருக்கிறது. வெள்ளம் வடிந்த பின் மேலும் பல ஊர்வன இறந்த நிலையில் அங்கே கிடந்திருக்கின்றன. மரங்கள் இன்றி அதிகரித்த வெப்பத்தினால் தான் இந்நிலை என புரிந்து கொண்டபோது இவரது வயது 16 ! பின் இது சம்பந்தமாக வனத்துறையை அணுகி விசாரித்த போது ஆற்றின் நடுவே உள்ள அந்த மணல் படுகையில் மரங்கள் எதுவும் வளராது மூங்கில் மரம் வேண்டுமானால் வளரலாம்,முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்...ஒருவரும் உதவி செய்யாத போது தனி நபராக செயலில் இறங்கி விட்டார். 1980 ஆம் ஆண்டில் அசாமில் உள்ள ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் இடத்துக்கு அருகில் 200 ஹெக்டேர் மணல் படுகையில் 'சமூககாடுகள் வளர்ப்பு' திட்டத்தின் படி வனத்துறையினர், மற்றும் தொழிலாளர்களும் இணைந்து மரக் கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட்டது, பணி முடிந்ததும் மற்றவர்கள் சென்று விட இவர் மட்டும் மரகன்றுகளை பராமரித்து கொள்ள அனுமதி கேட்டு அங்கேயே தங்கி விட்டார். பின்னர் வனத்துறையினரும், மற்றவர்களும் இதனை அப்படியே மறந்துவிட்டனர், அந்த பக்கம் யாரும் எட்டி கூட பார்க்கவில்லை...!உலக வரலாற்றிலேயே எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை செய்துவிட்டு மிக அமைதியாக அடக்கமாக இருக்கிறார் ஒருவர். மனித குலத்திற்கு அவர் செய்த சிறந்த சேவை இது…எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். ‘தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை’ என ஒற்றை வரியுடன் தனது சாதனை குறித்து சொல்லி முடித்துக்கொள்கிறார். அப்படி என்ன செய்தார் ?!கிட்டத்தட்ட 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவில் தனி நபராக ஒரு காட்டை உருவாக்கி இருக்கிறார்…!

யார் இவர் ?

அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமவாசி திரு.ஜாதவ் பயேங். அங்குள்ள மக்கள் இவரை ‘முலாய்’ என அழைக்கின்றனர். பிரம்மபுத்திரா நதியில் 1979 ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அதிக அளவில் பாம்புகள் அடித்து வர பட்டிருக்கிறது. வெள்ளம் வடிந்த பின் மேலும் பல ஊர்வன இறந்த நிலையில் அங்கே கிடந்திருக்கின்றன. மரங்கள் இன்றி அதிகரித்த வெப்பத்தினால் தான் இந்நிலை என புரிந்து கொண்டபோது இவரது வயது 16 ! பின் இது சம்பந்தமாக வனத்துறையை அணுகி விசாரித்த போது ஆற்றின் நடுவே உள்ள அந்த மணல் படுகையில் மரங்கள் எதுவும் வளராது மூங்கில் மரம் வேண்டுமானால் வளரலாம்,முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்…ஒருவரும் உதவி செய்யாத போது தனி நபராக செயலில் இறங்கி விட்டார். 1980 ஆம் ஆண்டில் அசாமில் உள்ள ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் இடத்துக்கு அருகில் 200 ஹெக்டேர் மணல் படுகையில் ‘சமூககாடுகள் வளர்ப்பு’ திட்டத்தின் படி வனத்துறையினர், மற்றும் தொழிலாளர்களும் இணைந்து மரக் கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட்டது, பணி முடிந்ததும் மற்றவர்கள் சென்று விட இவர் மட்டும் மரகன்றுகளை பராமரித்து கொள்ள அனுமதி கேட்டு அங்கேயே தங்கி விட்டார். பின்னர் வனத்துறையினரும், மற்றவர்களும் இதனை அப்படியே மறந்துவிட்டனர், அந்த பக்கம் யாரும் எட்டி கூட பார்க்கவில்லை…!

Continue Reading →

அமைதியும் ஆற்றலும் ஆளுமையும் இணைந்த இலக்கிய கலாவித்தகர் மணிவிழா நாயகர் கலாமணி

எல்லாமே நேற்று நிகழ்ந்தது போலிருக்கிறது.  காலங்கள் நடக்கவில்லை. சக்கரம்பூட்டிக்கொண்டு ஓடுவதனால்தானோ  என்னவோ    நண்பர் கலாமணியுடனான   நட்புறவின்    தொடக்கமும்    நீட்சியுற்ற  நேசமும் பல்வேறு நிகழ்வுகளின் ஊடே மனதில் பசுமையாக நிறைந்திருக்கிறதுஎழுத்தாளர் முருகபூபதிஎல்லாமே நேற்று நிகழ்ந்தது போலிருக்கிறது.  காலங்கள் நடக்கவில்லை. சக்கரம்பூட்டிக்கொண்டு ஓடுவதனால்தானோ  என்னவோ    நண்பர் கலாமணியுடனான   நட்புறவின்    தொடக்கமும்    நீட்சியுற்ற  நேசமும் பல்வேறு நிகழ்வுகளின் ஊடே மனதில் பசுமையாக நிறைந்திருக்கிறது. இலங்கையில் கலாமணிக்கும் எனக்குமிடையே துளிர்த்த நட்பு அவுஸ்திரேலியாவில்தான் கொடியாக –  செடியாக – மரமாக செழித்து கிளைவிட்டு படர்ந்தது என கருதுகின்றேன்.  அவர் தனது பட்டமேற்படிப்பு ஆய்வுக்காக   அவுஸ்திரேலியா   சிட்னிக்கு வந்தார்.   நான் வாழ்ந்த மாநில மாநகரம் மெல்பன். மனைவி  பிள்ளைகளை விட்டுப்பிரிந்து வரும் துயரத்தை கடந்துவருதல் என்பது எத்தகைய   மனஉளைச்சல்   என்பதை  அனுபவத்தில் உணர்ந்திருக்கின்றேன். Home Sick இடம்பெயர்ந்தவர்களும் புலம் பெயர்ந்தவர்களும்   அனுபவித்த    புத்திக்கொள்முதல்தான். எனினும் தான் வந்தநோக்கத்தில்   கண்ணும்   கருத்துமாக இருந்து   அந்த இக்கட்டான காலகட்டத்தை கடந்துவந்தவர் கலாமணி.   சிறிது காலத்தில் மிகவும் பிரயாசைப்பட்டு மனைவி மக்களை இங்கு அவர் அழைத்துக்கொண்டபின்பு    ஓரு குடும்பத்தலைவன் என்ற முறையில் அவர்களின்   எதிர்காலம்   குறித்த   ஏக்கமும்   கவலையும் அவரது மனதில் கொழுவேறியது.

Continue Reading →