அமைதியும் ஆற்றலும் ஆளுமையும் இணைந்த இலக்கிய கலாவித்தகர் மணிவிழா நாயகர் கலாமணி

எல்லாமே நேற்று நிகழ்ந்தது போலிருக்கிறது.  காலங்கள் நடக்கவில்லை. சக்கரம்பூட்டிக்கொண்டு ஓடுவதனால்தானோ  என்னவோ    நண்பர் கலாமணியுடனான   நட்புறவின்    தொடக்கமும்    நீட்சியுற்ற  நேசமும் பல்வேறு நிகழ்வுகளின் ஊடே மனதில் பசுமையாக நிறைந்திருக்கிறதுஎழுத்தாளர் முருகபூபதிஎல்லாமே நேற்று நிகழ்ந்தது போலிருக்கிறது.  காலங்கள் நடக்கவில்லை. சக்கரம்பூட்டிக்கொண்டு ஓடுவதனால்தானோ  என்னவோ    நண்பர் கலாமணியுடனான   நட்புறவின்    தொடக்கமும்    நீட்சியுற்ற  நேசமும் பல்வேறு நிகழ்வுகளின் ஊடே மனதில் பசுமையாக நிறைந்திருக்கிறது. இலங்கையில் கலாமணிக்கும் எனக்குமிடையே துளிர்த்த நட்பு அவுஸ்திரேலியாவில்தான் கொடியாக –  செடியாக – மரமாக செழித்து கிளைவிட்டு படர்ந்தது என கருதுகின்றேன்.  அவர் தனது பட்டமேற்படிப்பு ஆய்வுக்காக   அவுஸ்திரேலியா   சிட்னிக்கு வந்தார்.   நான் வாழ்ந்த மாநில மாநகரம் மெல்பன். மனைவி  பிள்ளைகளை விட்டுப்பிரிந்து வரும் துயரத்தை கடந்துவருதல் என்பது எத்தகைய   மனஉளைச்சல்   என்பதை  அனுபவத்தில் உணர்ந்திருக்கின்றேன். Home Sick இடம்பெயர்ந்தவர்களும் புலம் பெயர்ந்தவர்களும்   அனுபவித்த    புத்திக்கொள்முதல்தான். எனினும் தான் வந்தநோக்கத்தில்   கண்ணும்   கருத்துமாக இருந்து   அந்த இக்கட்டான காலகட்டத்தை கடந்துவந்தவர் கலாமணி.   சிறிது காலத்தில் மிகவும் பிரயாசைப்பட்டு மனைவி மக்களை இங்கு அவர் அழைத்துக்கொண்டபின்பு    ஓரு குடும்பத்தலைவன் என்ற முறையில் அவர்களின்   எதிர்காலம்   குறித்த   ஏக்கமும்   கவலையும் அவரது மனதில் கொழுவேறியது.

Continue Reading →

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

சித்திரை வருக! இத்தரை சிறக்க! சித்திரை வருடப் பிறப்பில் எங்கணும்மகிழ்ச்சிப் பூக்கள் பூத்துக் குலுங்குக.இன்பம் பொங்கிடும் பூமியில் இனியும்துன்பம் தரும் போர்கள் வேண்டா.வர்க்கப் பிளவுகள் இல்லா தொழிக.வறுமை…

Continue Reading →

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் ‘வைகறை’ சிறுகதைத் தொகுதி மீது ஒரு பார்வை

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் 'வைகறை' சிறுகதைத் தொகுதி மீது ஒரு பார்வைவைகறைப் பொழுதினில்
வைகறை வருவது
மனதுக்கு இனியது
சிறுகதை தாங்கி
சிறப்புடன் திகழ்வது
சிந்தைக்குச் சிறந்தது!

ஆம்! இளம் பெண் எழுத்தாளரும், கவிதாயினியும், பூங்காவனம் காலாண்டு சஞ்சிகையின் துணை ஆசிரியருமான தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா, தனது இரண்டாவது நூலாக வைகறை என்ற சிறுகதை நூலை வெளியிட்டிருக்கிறார். இவர், ஏற்கனவே `இன்னும் உன் குரல் கேட்கிறது’ என்ற பெயரில் கவிதைத் தொகுதி ஒன்றினை வெளியிட்டிருந்தார். வாசகர் மனதில் அந்தக் குரல் ஒலித்துக்கொண்டிருக்கும் வேளையில்தான் வைகறை சிறுகதைத் தொகுதியும் வந்துவிட்டது. இந்நூல் இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின் 27வது வெளியீடாகும். இளம் எழுத்தாளர்களை இனங்கண்டு ஊக்குவிப்பு முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் மேற்படி மன்றம், கவிதாயினியும் பூங்காவனம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியருமான வெலிகம ரிம்ஸா முஹம்மதின் `தென்றலின் வேகம்’ என்ற கவிதைத் தொகுதியினையும் ஏற்கனவே வெளியிட்டு வைத்தமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் – 10: அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின், எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்’

வாசிப்பும் யோசிப்பும் - 10அண்மையில் அ.முத்துலிங்கத்தின் நூலான ‘ஒன்றுக்கும் உதவாதவன்’ படித்தேன். அதிலொரு கட்டுரை ‘கிழங்கு கிண்டியபோது கிடைத்த ரத்தினக்கல்’. பேராசிரியர் ம.இலே.தங்கப்பாவின் மொழிபெயர்ப்பில் சங்கப்பாடல்கள் சில Love Stands Alone என்னும் பெயரில் வெளிவந்திருந்தது பற்றிய தனது கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அதில் மிகவும் நன்கறியப்பட்ட பாரி மகளிரின் கவிதையான புறநானூறுப் பாடலான ‘அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்’ பாடலின் மொழிபெயர்ப்பைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் – 9: அ.மு.வின் அனுபவங்கள் அபுனைவுகளா? அல்லது புனைவுகளா?

வாசிப்பும் யோசிப்பும் - 9தமிழகத்தில் நன்கு அறியப்பட்ட ஈழத்து எழுத்தாளர்களில் முதலிடத்தில் இருப்பவர் எழுத்தாளர் அ.முத்துலிங்கம். எந்தவொரு விடயத்தையும் மிகவும் சுவையாக, நெஞ்சில் உறைக்கும் வகையில் எழுதுவதில் வல்லவரிவர்.  மிகவும் சாதாரணவொரு விடயத்தைக்கூட மிகவும் சுவையானதாக, முக்கியத்துவம் வாய்ந்ததாக தனது எழுத்தாற்றல் மூலம் மாற்றிவிடுவதில் அசகாய சூரரிவர். இவரது அபுனைவுகளை வாசிக்கும்போது எனக்கு தோன்றும் முதல் எண்ணம் அவை உண்மையிலேயே அபுனைவுகளா? அல்லது புனைவுகளா? ஏனென்றால் அவரது ஒவ்வொரு அனுபவமும் மிகவும் சுவையாக, புனைகதைக்குரிய திருப்பங்கள், சம்பவங்களுடன் இருப்பதுதான் அந்த எண்ணம் தோன்றக் காரணம். பொதுவாக ஒவ்வொருவர் வாழ்விலும் பல சம்பவங்கள் நடைபெற்றிருக்கும். அவற்றில் சில வேண்டுமானால் புனைகதைக்குரிய சம்பவங்கள், திருப்பங்களுடன் இருக்கும். ஆனால் நடைபெறும் ஒவ்வொரு சம்பவமும் அவ்விதமிருப்பதில்லை. ஆனால், அ.மு.வின் அபுனைவுகளென்று எண்ணிக்கொண்டு வாசிக்கும் பெரும்பாலான படைப்புகள் அற்புதமான புனைவுகள போலிருப்பதை நான் உணர்ந்திருக்கின்றேன்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 8: மலேசிய எழுத்தாளர் வே.ம.அருச்சுணனின் ‘வேர் மறந்த தளிர்கள்’ பற்றிய குறிப்புகள்!

[தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளிவந்துகொண்டிருக்கும் மலேசிய எழுத்தாளர் வே.ம.அருச்சுனனின் 'வேர் மறந்த தளிர்கள்' நாவல் விரைவில் நூலாக வெளிவரவுள்ளது. அதற்காக எழுதிய முன்னுரை இது. - வ.ந.கி-]   [தற்போது ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடராக வெளிவந்துகொண்டிருக்கும் மலேசிய எழுத்தாளர் வே.ம.அருச்சுணனின் ‘வேர் மறந்த தளிர்கள்’ நாவல் விரைவில் நூலாக வெளிவரவுள்ளது. அதற்காக எழுதிய முன்னுரை இது. – வ.ந.கி-]   இன்று இணையத்தின் வரவு ஏற்படுத்தியிருக்கும் நல்விளைவுகளிலொன்று பல்வேறு நாடுகளிலும் வாழும் மக்களுக்கிடையிலான தொடர்புகளை மிகவும் இலகுவாக்கி விட்டது என்பதுதான். தகவல் பரிமாற்றம் எத்துறையினைச் சேர்ந்ததாகவிருந்தாலும், அதனை மிகவும் இலகுவாக்கிவிட்டது. இதனை அனைவரும் புரிந்துகொண்டு மிகவும் ஆரோக்கியமாகச் செயற்படுவது அவசியம். இந்த இணையத்தின் வரவு இலக்கியத்தைப் பொறுத்தவரையிலும் பல நல்ல விடயங்களை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச நாடுகள் பலவற்றில் வாழும் எழுத்தாளர்களின் படைப்புகளை, அவர்கள் வெளியிடும் இணைய இதழ்களை, அச்சூடகங்களின் இணையப் பதிப்புகளை .. இவற்றையெல்லாம் இலகுவாகக் கண்டடைய முடிகிறது. வாசிக்க முடிகிறது. அந்த வகையில் எத்துறையினைச் சேர்ந்ததாகவிருந்தாலும் (இலக்கியமுட்பட) அத்துறைமீதான ஆய்வினை இணையம் மிகவும் இலகுவாக்கி விட்டது. இந்த இணையத்தின் விளைவாக உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பல்வேறு காலகட்டங்களில் புலம்பெயர்ந்த தமிழர்கள் படைக்கும் இலக்கியத்தை அறிய, வாசிக்க முடிகிறது. இதன் மூலம் பல்வேறு தகவல்களை அப்படைப்புகளினூடு அறிய முடிகிறது. இவ்விதமாக அண்மைக்காலத்தில் நான் அறிந்துகொண்ட மலேசிய எழுத்தாளரே வே.ம.அருச்சுணன். இவரது சிறுகதைகள், கட்டுரைகள், இலக்கிய நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் மற்றும் ‘வேர் மறந்த நாவல்’ பற்றியெல்லாம் ‘பதிவுகள்’ இணைய இதழ்மூலம் அறிந்துகொண்டேன். அந்த நாவல் நூலாகவும் வெளிவரவிருப்பது மகிழ்ச்சிக்குரியது. இந்த நாவலைப் படித்தபொழுது எழுந்த சில என் உணர்வுகளின் வெளிப்பாடே இக்கட்டுரை.

Continue Reading →

காலமும் கணங்களும்: இலக்கிய உலகில் ஒரு யோகி கணேஷ்!

காலமும் கணங்களும்: இலக்கிய உலகில் ஒரு யோகி கணேஷ்!எழுத்தாளர் முருகபூபதிபாலாவின் இயக்கத்தில் வெளியான பரதேசி படத்தைப்பார்த்த எனது இரண்டாவது மகள் பிரியா மிகவும் கலவரமடைந்து “ அப்பா…நாம் விரும்பி ருசித்து அருந்தும் தேநீருக்குப்பின்னால் துயரம் நிறைந்த பெரிய வரலாறே இருக்கிறதே…பரதேசி படம் என்னை மிகவும் பாதித்துவிட்டது” என்றாள். தேநீரின் நிறம் சிவப்பு. அதன் மூலப்பொருளை உற்பத்தி செய்யும் மக்களின் குருதியிலிருந்தும் உழைப்பிலிருந்தும் பிறந்த உலகப் பிரசித்திபெற்ற பானம். பிரித்தானியர் இந்தியாவிலிருந்து தமிழ்மக்களை கூலி அடிமைகளாக இலங்கைக்கு அழைத்துவந்து இறுதியில் அவர்களை நாடற்றவர்களாக்கிவிட்டுச்சென்ற வரலாற்றை மகளுக்குச்சுருக்கமாகச் சொல்லிவிட்டு, இயக்குநர் பாலா தமிழ்நாட்டில் தேயிலைத்தோட்டங்களில் கூலி அடிமைகளாக வேலைசெய்த மக்களுக்கு நேர்ந்த கொடுமையை சித்திரித்திருக்கிறார்” என்றேன். மறைந்த இலக்கியவாதி கே.கணேஷ் அவர்களைப்பற்றி இந்த காலமும் கணங்களும் தொடர் எழுதும்போது பரதேசி படமும் கணேஷ் நீண்ட நாட்களுக்கு முன்னர் எனக்கு எழுதியிருந்த பின்வரும் கவிதையும் நினைவுக்கு வந்தன.

Continue Reading →

பைத்தகோரஸ் தேற்ற வாய்ப்பாடும்! போதையனார் தேற்ற வாய்ப்பாடும்!

அறிவியல் தோன்றாக் காலத்துக்குமுன்பே தமிழ் இலக்கியங்களில் அறிவியல் நிறையப் பேசப்பட்டுள்ளதை நாம் காண்கின்றோம். அறிவியலாரும் இலக்கியலாரும் தனி வழிப் பயணிப்பதை நாம் அறிவோம். அவர்கள் தங்கள் தொழில்…

Continue Reading →

பூங்காவனம் 12 ஆவது இதழ் மீது ஒரு பார்வை!

பூங்காவனம் 12 ஆவது இதழ் மீது ஒரு பார்வை!2013 ஆம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துக்களுடன் மலர்ந்திருக்கும் பூங்காவனத்தின் 12 ஆவது இதழ் வாழ்த்துவோர், வீழ்த்துவோரின் செயற்பாடுகளைத் தாண்டி வாசிப்பின் மகத்துவத்தை வாசகர்களுக்கு எடுத்துக்காட்டி இலங்கையின் மூத்த பெண் எழுத்தாளர்களில் ஒருவரான தர்காநகரைச் சேர்ந்த திருமதி. சுலைமா சமி இக்பாலின் முன் அட்டைப் படத்துடன் தனது படைப்புக்களைத் தந்திருக்கிறது. இதழின் உள்ளே திருமதி. சுலைமா சமி இக்பால் அவர்கள் 1977 ஆம் ஆண்டு தனது 17 ஆவது வயதில் எழுத்துலகில் நுழைந்ததில் இருந்து இன்றுவரை எழுதிக்கொண்டிருக்கும் அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். களுத்துறை மாவட்டத்தின் தர்காநகர் மீரிப்பன்னையைப் பிறப்பிடமாகவும், மாவனல்லை கிருங்கதெனியவை வசிப்பிடமாகவும் கொண்ட இவர், தர்காநகர் முஸ்லிம் மகளிர் மத்திய கல்லூரியில் ஆரம்பம் முதல் உயர்தரம் வரை கல்வி பயின்று ஆசிரியராகி அதே பாடசாலையில் பல வருடங்கள் கற்பித்து, தான் கற்ற பள்ளிக்கூடத்துக்கு பெருமை சேர்த்திருக்கிறார். ஜும்ஆ, முஸ்லிம் ஆகிய இஸ்லாமியச் சஞ்சிகைகளில் எழுதியவர். தினகரன், தினக்குரல், வீரகேசரி, விடிவெள்ளி போன்ற பத்திரிகைகளில் சிறுகதைகளை எழுதி வருகிறார். 1984 முதல் சுமார் பத்தாண்டு காலப் பகுதியில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை ஷநெஞ்சோடு நெஞ்சம் மாதர் மஜ்லிசுக்கு| பிரதித் தயாரிப்பாளராக இருந்து பங்களிப்புச் செய்து வந்திருக்கிறார்.

Continue Reading →

தொடர் நவீனம்: மனக்கண் முடிவுரை!

 அறிஞர் அ.ந.கந்தசாமி -தொடர் நாவல்: மனக்கண்1966ம் ஆண்டு அக்டோபர் மாதம் மாதம் ‘மனக்கண்’ தொடர் நவீனம் மூலம் வாசகர்களுக்கும் எனக்கும் உண்டான தொடர்புகள் சென்ற வாரம் ஒரு முடிவுக்கு வந்தன. அதாவது, எட்டு மாதங்களாக வாரந் தவறாது நிலவிய ஓர் இனிய தொடர்பு சென்ற பெளர்ணமித் தினத்தன்று தன் கடைசிக் கட்டத்தை அடைந்தது. கதை என்ற முறையிற் பார்த்தால் மனக்கண் சற்று நீளமான நாவல்தான் என்றலும் உலக நாவல்களோடு ஒப்பிடும்போது அதனை அவ்வளவு நீளம் என்று சொல்லிவிட முடியாது. கிரேக்க கவிஞனான களீமாச்சன் (Callimachun) “ஒரு பெரிய புஸ்தகம், ஒரு பெரிய பீடை” என்று கூறியிருக்கிறான். அவன் கூற்றுபடி பார்த்தால் என்னுடைய நாவல் ஒரு நடுத்தரமான பீடையே. ஏனென்றால், நாவல் என்பது ஒரு சீரிய இலக்கியத் துறையாக வளர்ச்சியடைந்துள்ள மேல் நாடுகளில் பொதுவாக நாவல்கள் 20,000 வார்த்தைகளில் இருந்து 20 இலட்சம் வார்த்தைகள் வரை நீண்டவையாக வெளி வந்திருக்கின்றன. யார் அந்த 20 இலட்சம் வார்த்தை நாவலை எழுதியவர் என்று அதிசயிக்கிறீர்களா? பிரெஞ்சு நாட்டின் புகழ்பெற்ற நாவலாசிரியரான மார்சேல் புரூஸ்ட் (Marcel Proost) என்பவரே அந்த எழுத்தாளர். நாவலின் பெயர் “நடந்ததின் நினைவு” (Remembrance of the past). ஆனால் புரூஸ்ட் மட்டும் தான் இவ்வாறு நீண்ட நாவல்களை எழுதினார் என்று எண்ணி விட வேண்டாம். உலகத்தின் மிகச் சிறந்த நாவல் என்று கருதப்படும் (War and peace) “யுத்தமும் சமாதானமும்” லியோ டால்ஸ்டாய் எழுதியது. விக்டர் ஹியூகோவின் (Les miserables) “ஏழை படும் பாடு” என்பனவும் குறைந்தது ஏழெட்டு இலட்சம் வார்த்தைகள் கொண்ட பெரிய நாவல்கள் தான். இவர்களில் முன்னவர் ருஷ்யாக்காரர். மற்றவர் பிரான்சைச் சேர்ந்தவர். இவர்களைப் போலவே ஆங்கிலத்தில் ஹோன்றி பீல்டிங் (Henry Fielding) நீண்ட நாவல்கள் எழுதியிருக்கிறார். இவரது “டொம் ஜோன்ஸ்” (Tom Jones) பதினெட்டு பாகங்களைக் கொண்டது. இதில் இன்னொரு விசேஷமென்னவென்றால் இந்தப் பதினெட்டுப் பாகங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு விசேஷ முன்னுரையும் அவரால் எழுதப்பட்டது. தமிழில் இவ்வாறு நீண்ட நாவலெழுதியவர் “கல்கி”.

Continue Reading →