காது மந்தமாதலென்னும் நிசப்த நோய்….

ஆரவாரத்துடன் உடலுக்கு வேதனையுடன் வரும் நோய்களைக் கண்டறிவதில் சிக்கல்கள் ஏதும் இல்லை. ஏனெனில் வேதனையைத் தாங்க முடியாத நோயாளி உடனடியாகவே மருத்துவரை நாடுவார். வேதனைக்கான அடிப்படை நோயை மருத்துவர் துரிதாக இனம் காணுவார். குணமாக்குவது சுலபம். ஆனால் உடலுக்கு வேதனை கொடுக்காது அசுமிசமின்றி வரும் நோய்களைப் பற்றி நோயாளிகள் அக்கறை எடுப்பதில்லை. நோய் படிப்படியாக முற்றி, பிரச்சனை பூதாகரமாகும் நேரத்தில்தான் மருத்துவரை நாடுவார்கள். காலம் கடந்ததால் மருத்துவத்தின் மூலம் பூரணை பலனை பெறுவது சிக்கலாகியிருக்கும்.  அப்படியான நோய்களில் ஒன்றுதான் காது மந்தமாதல். வயசு போனால் காது மந்தமாகும்தானே எனக் கிணடலடித்து அசட்டை பண்ணாதீர்கள். - 'டொக்டர்' எம்.கே.முருகானந்தன் MBBS(Cey), DFM (Col), FCGP (col) , குடும்ப மருத்துவர் -ஆரவாரத்துடன் உடலுக்கு வேதனையுடன் வரும் நோய்களைக் கண்டறிவதில் சிக்கல்கள் ஏதும் இல்லை. ஏனெனில் வேதனையைத் தாங்க முடியாத நோயாளி உடனடியாகவே மருத்துவரை நாடுவார். வேதனைக்கான அடிப்படை நோயை மருத்துவர் துரிதாக இனம் காணுவார். குணமாக்குவது சுலபம். ஆனால் உடலுக்கு வேதனை கொடுக்காது அசுமிசமின்றி வரும் நோய்களைப் பற்றி நோயாளிகள் அக்கறை எடுப்பதில்லை. நோய் படிப்படியாக முற்றி, பிரச்சனை பூதாகரமாகும் நேரத்தில்தான் மருத்துவரை நாடுவார்கள். காலம் கடந்ததால் மருத்துவத்தின் மூலம் பூரணை பலனை பெறுவது சிக்கலாகியிருக்கும்.  அப்படியான நோய்களில் ஒன்றுதான் காது மந்தமாதல். வயசு போனால் காது மந்தமாகும்தானே எனக் கிணடலடித்து அசட்டை பண்ணாதீர்கள். அந்த வரிசையில் நிற்பவர்களில் நீங்களும் ஒருவராயிருக்கலாம். ஏனெனில் காது மந்தமாவதது மூப்படைவதால் மட்டுமல்ல எந்த வயதிலும் நேரலாம். காது கேட்காமல் போவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. வயதாவது முக்கிய காரணம் என்பதை அறிவோம். அத்துடன் பரம்பரை அம்சம், ஒலிகள், வைரஸ் தொற்று நோய்கள், ஏன் பல மருந்துகளும் கூடத்தான்.  ஆனால் அண்மைகாலங்களில் கவனத்தை ஈர்த்திருப்பது நீரிழிவு நோயாளிகளின் காது மந்தமாவது எனலாம்.

Continue Reading →

(1) சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு!

சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு!- வெங்கட் சாமிநாதன் -நான் கும்பகோணம் பாணாதுரை ஹைஸ்கூலில் படித்துக் கொண்டிருந்த போது தான் (1947-49) செல்லப்பாவின் சிறுகதைத் தொகுப்பு ஒன்று, மணல் வீடு என் கையில் அகப்பட்டது. செல்லப்பா என்ற பெயரும் எனக்கு அதற்கு முன் அறிமுகம் இல்லை. அதில் சிறுகதைகள் உண்டு படிக்க வேண்டும் என்றும் அதை நான் கையிலெடுக்கவில்லை. எதாக இருந்தாலும் சுவாரஸ்யமாக இருந்தால் படிக்கத் தொடங்கிவிடும் ஆர்வமும் சுபாவமும் ஐந்தாறு வருடங்களாகவே இருந்து வந்தது. அனேகமாக அது தான் நான் படிக்கும் முதல் சிறு கதைத் தொகுப்பாக இருக்க வேண்டும். அதில் எனக்கு இப்போது நினைவில் இருப்பது ஒரே ஒரு கதை தான்.  ஒரு தாசில்தார் அவருடைய மனைவி, பின் வீட்டுக்கு வந்து போகும் ஒரு பண்ணையார்.. தாசில்தார் தம்பதியருக்குக் குழந்தைப் பாக்கியம் இல்லை. ஏக்கத்தில் என்னென்னவோ வேண்டுதல்கள் பிராயச்சித்தங்கள் பலன் இருக்கவில்லை. இடையே ஒரு ஜோஸ்யர் எதிர்ப்படுகிறார். அவர் சொன்ன தோஷப் பரிகாரம், ”ஒரு ஏழை பிராமணனுக்குக் கோ தானம் ஒன்று செய்தால், தோஷம் நிவர்த்தியாகும், தானம் செய்த பலன் அந்த வருஷ முடிவிற்குள் தெரியும்” என்று சொல்கிறார். வீட்டுக்கு வரும் பண்ணையாரிடம்  தாசில்தார் மனைவி தன் வழக்கமான புலம்பல்களுக்கிடையில் இதையும் சொல்லி தானம் செய்ய ஒரு பசுவுக்கு ஏற்பாடு செய்யச் சொல்கிறாள். பண்ணையாரும் ஒரு பசுமாட்டை ஒட்டிவந்து தாசில்தார் வீட்டில் கட்டி விடுகிறார். பின் என்ன? பசு தானம் ஏற்க ஒரு ஏழைப் பிராமணனுக்கும் ஏற்பாடு செய்து பசுவும் தானம் செய்யப்பட்டு விடுகிறது. தாசில்தாரும் அவர் மனைவியும் அந்த நல்ல செய்திக்காகக் காத்திருக்கிறார்கள். நாட்கள், மாதங்கள் கடந்து ஒரு நாள் பண்ணையார் ஒரு தட்டில் பட்டுப்புடவை வேஷ்டி, பழம் பாக்கு வெத்திலை சகிதம் தாசில்தாரையும் அவர் மனைவியையும் பார்த்து நமஸ்கரித்துச் சொல்கிறார். “ ”ஆசீர்வாதம் செய்யுங்கள். ரொம்ப காலம் கழித்து எனக்கு புத்திர பாக்கியம் கிடைத்துள்ளது ஆண்டவனோட  அனுக்கிரஹம். இப்பவாவது அவனுக்கு கண் திறந்ததே”

Continue Reading →

குருமண்காட்டு நினைவுகள்….

குருமண்காட்டு நினைவுகள்.... - வ.ந.கிரிதரன் -சில வேளைகளில் நான் நினைத்துப் பார்ப்பதுண்டு: என் எழுத்து மற்றும் வாசிப்பின் மீதான ஆர்வத்திற்கு முக்கிய காரணங்கள் எவை , காரணமானவர்கள் யார் என்று. என் வீட்டுச் சூழல்தான் முதல் காரணம். வீடு முழுவதும் தமிழ்ச் சஞ்சிகைகளும், நூல்களுமாக விளங்கியதற்குக் காரணம் அப்பாதான். எனது பால்யகாலத்தில் வீடு முழுவதுமே தமிழகத்திலிருந்து வெளிவந்த சஞ்சிகைகள், பத்திரிகைகளென்று விளங்கியதற்குக் காரணம் அப்பாதான். இதனால் சிறுவயதிலேயே எங்களுக்கு வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டு விட்டது. இவ்விதம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கிய அப்பா ஒருபோதுமே எங்களது வாசிப்புக்குத் தடை போட்டதில்லை. எனது பாடசாலை வாழ்க்கையில் அப்பா வாங்கித் தந்த நூல்கள் பத்திரிகைகளுடன் அன்றைய காலகட்டத்தில் புத்தகக் கடைகளில் தொங்கிக் கிடக்கும் ‘பாக்கட் சைஸ்’ துப்பறியும் நாவல்களையெல்லாம் வாசித்துத் தள்ளினேன். அப்பாவுக்கு நான் மர்ம நாவல்களை வாசிப்பது தெரிந்திருந்தாலும் ஒருநாளும் ‘அவற்றை வாசிக்காதே’ என்று அணை போட்டதில்லை. இப்பொழுது நினைத்துப் பார்க்கும்போது அவரது பரந்த மனது விளங்குகின்றது. அன்னம் பாலையும் , நீரையும் பிரித்துப் பார்ப்பதைபோல் நாங்களும் பரந்து பட்ட வாசிப்பின்மூலம் நல்லதைத் தேர்ந்தும், அல்லதைத் தவிர்த்தும் விடுவோமென்று அவர் திடமாக நம்பியிருந்ததாகவேபடுகிறது. அந்த நம்பிக்கைக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் நாங்களும் வாசிப்பில் பரிணாமமடையவில்லையென்பதை இப்பொழுது உணரமுடிகிறது.

Continue Reading →

தமிழ்த் திரைப் பாலைவனத்தில் துளிர்த்த ஒரு தளிர் – பாலு மகேந்திராவின் ’வீடு’

பாலு மகேந்திரா- வெங்கட் சாமிநாதன் -ஆங்கிலத்தில் motion picture, film, cinema என்று பல பெயர்களில் குறிப்பிடப்படுவதை தமிழில் திரைப்படம், சினிமா, சலனப்படம் என்று பல பெயர்களில் குறிப்பிடுவது வழக்கமாகியுள்ளது. நாம் பேசும் இந்தப் புதிய 20- நூற்றாண்டு கலைக்கு, புதிதாகத் தோன்றிய தொழில் நுட்பத்திலிருந்து பிறந்த ஒரு கலைக்கு, திரும்பவும் தொழில் நுட்பமும் கலையாகப் பரிணமித்துள்ள ஒன்றைச்  சினிமா என்ற பெயரிலேயே, அதன் தனித்வத்தைத் தனித்துக்காட்ட,  குறிப்பிட வேண்டுமென்று எனக்குத் தோன்றுகிறது. பொது வழக்கில் இந்தப்பெயர்கள் எல்லாம் அதிகம் சிந்தனையில்லாது பயன்படுத்தப் படுகின்றன. தமிழில் திரைப்படங்கள் தான் வந்துள்ளனவே தவிர சினிமா என்று தொழில் நுட்பம் சார்ந்த கலைப் படைப்பு வெகு அரிதாகவே, ஒன்றிரண்டே தேடினால் கிடைக்கிறது என்று சொன்னால், திரைப்படங்களுக்கும் சினிமா என்று சொல்லத் தகுந்த ஒன்றிற்கும் நான் அர்த்த வேறுபாட்டோடு இச்சொற்களைப் பயன்படுத்துகிறேன் என்பதைப் புரிய வைக்க நான் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கிறது. சுமார் எண்பது வருட கால தமிழ்த் திரைப்பட வரலாற்றில் தமிழ் மக்களுக்கு பல்லாயிரக் கணக்கில் தரப்பட்டுள்ள, திரைப்படங்கள், சலனப் படங்கள், films எனப்பட்டவை மட்டுமே தெரிந்திருக்கும், ஆனால் சினிமா என்ற கலையை அறியாதவர்கள் என்று தான்  சொல்ல வேண்டும். நானும்  சொல்லி வருகிறேன். ஆனால் திரைப்படத்துக்கும் சினிமா என்ற ஒரு தொழில் நுட்பம் தந்த கலைக்கும் இடையேயான பாகுபாட்டை திரைப்படம் ஒரு வெறியே ஆகிவிட்ட தமிழ் நாட்டில் புரிந்து கொண்டுள்ளார்கள் என்று சொல்ல முடியாது.

Continue Reading →

பிரசரை அளவிடும்போது ….டொக்டர் செய்வதும் நீங்கள் செய்ய வேண்டியதும்

பிரசரை அளவிடும்போது ....டொக்டர் செய்வதும் நீங்கள் செய்ய வேண்டியதும்- 'டொக்டர்' எம்.கே.முருகானந்தன் MBBS(Cey), DFM (Col), FCGP (col) , குடும்ப மருத்துவர் -‘பிரஸர் என்பது அறிகுறிகள் அற்ற நோய். இதனால் பெருந் தொகையான மக்கள் தங்களுக்குப் பிரஸர் (உயர் இரத்த அழுத்தம்) இருப்பதை அறியாமலே இருக்கிறார்கள்’ என சில வாரங்களுக்கு முன் சொன்னேன். எனவே பிரஷர் இருக்கிறதா என்பதை அறிய அதை அளந்து பார்ப்பதுதான் ஒரே வழி. நீங்கள் மருத்துவரிடம் செல்லும்போது அவர் அளவிடுவார். இப்பொழுது பலரும் பிரஸர்மானிகளை வாங்கி வைத்து தாங்களாகவே தங்கள் வீடுகளில் அளந்து பார்க்கிறார்கள்.

மருத்துவர்கள் அளவிடுவது

பிரஸரை பிரஸர்மானி கொண்டு அளவிடுவார்கள். பொதுவாக மருத்துவக் கிளினிக்குகளில் மெர்குரி (Mercury) கொண்ட பிரஸர்மானியை உபயோகிப்பார்கள். நோயாளியின் கையின் முழங்கைக்கு மேற்பட்ட பகுதியில் துணியினால் மூடப்பட்ட ரப்பர் பை (cuff) போன்ற ஒன்றை இறுக்கமாகச் சுற்றுவார்கள். பின்பு தனது கையிலுள்ள பம்பினால் காற்றை அடிப்பார்கள். இதன்போது உங்கள் கை இறுகுவது போல உணர்வீர்கள். அந்நேரத்தில் காற்றின் அமுக்கத்தால் கைநாடியின் இரத்த ஓட்டம் தடைப்படும். பின் காற்றின் அமுக்கத்தை குறைக்க இரத்த ஓட்டம் வழமையாகும்.

Continue Reading →

தொடர்நாவல்: மனக்கண் (25)

25-ம் அத்தியாயம்: சுரேஷின் திகைப்பு!

தொடர்நாவல்: மனக்கண் (25)தொடர்நாவல்: மனக்கண் - அ.ந.கந்தசாமி -ஸ்ரீதர் தன் மகன் பிறந்து ஆறு மாதங்களின் பின் ஒரு நாள் காலை 10 மணியளவில் ‘அமராவதி’ மாளிகைக்கு முன்னாலிருந்த பெரிய வேப்பமரத்தின் குளிர்ந்த நிழலில் ஒரு வசதியான நாற்காலியில் உட்கார்ந்து தன் குண்டு மகனோடு விளையாடிக் கொண்டிருந்தான். செக்கச் செவேலென்று உருண்டு திரண்டு சீனத்துப் பொம்மை போல் விளங்கிய முரளிதரன் – அது தான் சின்னச் ஸ்ரீதரின் பெயர்- ஸ்ரீதரின் மடியில் ஒரு நிலையில் நில்லாது புரள்வதும், பல விதமான ஒலிகளைச் செய்து சிரித்துக் கூத்தடிப்பதுமாக இருந்தான். நல்ல தேகாரோக்கியத்துடனும் உயிர்த் துடிப்போடும் விளங்கிய முரளி என்னதான் சின்னவனாக இருந்தாலும், அவனை அங்குமிங்கும் விழுந்து விடாமல் பிடித்து வைத்து வேடிக்கை காண்பிப்பது அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை. ஆகவே “முரளி, புரளி பண்ணாதே” என்ற இன்பப் பல்லவியை அடிக்கடி பாடிக் கொண்டிருந்தான் ஸ்ரீதர். அவனுக்கு அந்தப் பல்லவியைத் திருப்பித் திருப்பிச் சொல்வதில் தனி ஆனந்தம்.

Continue Reading →

நூல் அறிமுகம்: இலக்கிய – அறிவியல் நுகர்வுகள்

இலக்கிய ஆய்வு நூலுக்கான ‘தமிழியல் விருது-2011’ என்ற பரிசைப் பெற்ற நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்களால் எழுதப்பட்ட ‘இலக்கிய–அறிவியல் நுகர்வுகள்’ என்ற ஆய்வு நூலொன்று அண்மையில் வெளிவந்துள்ளது. இதில் பழந்தமிழ் இலக்கியம் பற்றிய கட்டுரைகள், தமிழ் இலக்கிய வரலாற்றுக் கட்டுரைகள், பக்தி இலக்கியக் கட்டுரைகள், சிவநெறிச் சிந்தனைக் கட்டுரைகள், விலங்கியற் கட்டுரைகள், தாவரவியற் கட்டுரைகள், பவுதிகவியற் கட்டுரைகள், கற்பனைக் கட்டுரைகள்    என்று பலதிறப்பட்ட விடயங்கள் இந்த நூலில் அடங்கியுள்ளன.இலக்கிய ஆய்வு நூலுக்கான ‘தமிழியல் விருது-2011’ என்ற பரிசைப் பெற்ற நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்களால் எழுதப்பட்ட ‘இலக்கிய–அறிவியல் நுகர்வுகள்’ என்ற ஆய்வு நூலொன்று அண்மையில் வெளிவந்துள்ளது. இதில் பழந்தமிழ் இலக்கியம் பற்றிய கட்டுரைகள், தமிழ் இலக்கிய வரலாற்றுக் கட்டுரைகள், பக்தி இலக்கியக் கட்டுரைகள், சிவநெறிச் சிந்தனைக் கட்டுரைகள், விலங்கியற் கட்டுரைகள், தாவரவியற் கட்டுரைகள், பவுதிகவியற் கட்டுரைகள், கற்பனைக் கட்டுரைகள்    என்று பலதிறப்பட்ட விடயங்கள் இந்த நூலில் அடங்கியுள்ளன.

திரு. விசயரத்தினம் அவர்கள், பழந்தமிழ் இலக்கியத்தில் ஆராக் காதல் கொண்டவராதலால் அவருடைய கட்டுரைகள் அனைத்திலும் இலக்கிய வாடை கமழ்கிறது. அறிவியலை அணுகும் போதும் அதனைப் பழந்தமிழ் இலக்கியத்தின் ஊடாகப் பார்க்கின்ற ஒரு போக்கைப் பார்க்க முடிகின்றது.

கட்டுரைகளிற் பெரும்பாலானவை தமிழ் இலக்கியம் பற்றியே பேசுகின்றன. பழந்தமிழ் இலக்கியத்தைப் பற்றிப் பேசுவதன் மூலம், பழந்தமிழ் மக்களின் பழக்க வழக்கங்கள் பற்றியும், அவர்கள் தமது அகவாழ்விலும் புறவாழ்விலும் கடைப்பிடித்த ஒழுகலாறுகள் பற்றியும் ஆணித்தரமாகக் கூறிச் செல்கிறார். பண்டைத் தமிழரின் இலக்கியப் படைப்புகள் பற்றியும், குறுந்தொகைக் காட்சிகளின் மாட்சிமை பற்றியும், தொல்காப்பியர் காலம் பற்றியும், சங்க நூல்களின் படைப்பாண்டுகள் பற்றியும் விரிவாக விளக்கி எழுதியுள்ளார்.

Continue Reading →

நமது வானத்தின் கீழ்! “யுத்தத்தின் சுவடாய் நான் மட்டும் போதும்”

இரத்தத்தில் துவட்டிய அடையாளங்களுடன் அநாதரவாக அழிக்கப்பட்ட ஒரு சமுகத்தின் எச்சம்.மெழுகின் ஒளியில் மின்னி மறையும் சுவடுபோல் ஒரு இனம் வாழ்ந்து அழிந்த தீவு வெறிச்சோடிய வரண்ட பாலையாய் திரைமறைவில்.எதுவும் நிகழாததுபோல் எந்த சலனமுமற்று வேடிக்கை பார்த்தபடியிருக்கும் ஒரு சோக சூரியன் என நம் கண்முன்னே நடந்த பேரவலத்தை தொக்கி நிற்கிறது "யுத்தத்தின் சுவடாய் நான் மட்டும் போதும்"பன்னாட்டு படைப்பாளிகளின் படைப்பு நூல் அட்டை. தி.அமிர்தகணேசன் என்ற அகன் அவர்களின் ஆழுமையை பறைசாற்றியபடி விரிகிறது நூலின் பக்கங்கள்.    இரத்தத்தில் துவட்டிய அடையாளங்களுடன் அநாதரவாக அழிக்கப்பட்ட ஒரு சமுகத்தின் எச்சம்.மெழுகின் ஒளியில் மின்னி மறையும் சுவடுபோல் ஒரு இனம் வாழ்ந்து அழிந்த தீவு வெறிச்சோடிய வரண்ட பாலையாய் திரைமறைவில். எதுவும் நிகழாததுபோல் எந்த சலனமுமற்று வேடிக்கை பார்த்தபடியிருக்கும் ஒரு சோக சூரியன் என நம் கண்முன்னே நடந்த பேரவலத்தை தொக்கி நிற்கிறது “யுத்தத்தின் சுவடாய் நான் மட்டும் போதும்”பன்னாட்டு படைப்பாளிகளின் படைப்பு நூல் அட்டை. தி.அமிர்தகணேசன் என்ற அகன் அவர்களின் ஆழுமையை பறைசாற்றியபடி விரிகிறது நூலின் பக்கங்கள்.   எசேக்கியல் காளியப்பன் அவர்களின் அருமையான வாழ்த்துடன் ஆரம்பித்தாலும் அனைவரையும் அழைத்து செல்கிற பக்கம் அணிந்துரை. திறனாய்வின் தேர்ந்த புலமையை மிக எளிமையாகவும், அழகாகவும்  ‘பரவசப்படுத்தும் யாரையும்’எனும் மகுடத்தில் மதிப்பிற்குரிய க.பஞ்சாங்கம் ஐயா கூறியிருக்கும் கருத்துக்கள் வாசிப்பவர்களை வேறொரு தளத்திற்கு அழைத்து செல்கின்றன.” வாசகர் நோக்கில் அனுபவம்… என்று மு. ராமச்சந்திரன் தமிழ் மொழியைத்தாண்டி சமூகப் பொறுப்புள்ள வலுவான வரிகள் தன்னை வெகுவாய் பாதித்ததாக கூறியிருப்பது படைப்பாளிகளுக்கும், தொகுப்பாளிக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி. நோக்கவுரை எனும் மகுடத்தில் பொள்ளாச்சி அபி வாழ்க்கையின் ஒரு பகுதி காதலென்பது பொய்,காதல் மட்டுமே வாழ்க்கையெனக்கருதும் சிலருக்கு சாட்டையை வீசியிருப்பது அடித்தளும்பாய் தெரிகிறது.இன்றைய நிலையின் தேவையுணர்ந்து எழுதும் சிலரை சுட்டுவித்து அடையாள படுத்தியிருப்பது ம், இன்னும் எழுத புதிதாக தளத்திற்குள் தம்மை இணைக்கும் கவிதா நெஞ்சங்களை நோக்குணர்ந்து ஆக்குவோம் இலக்கியம் என்ற தொனியில் நல்ல கருத்துக்கள் பகிர்ந்திருப்பது ஒருபானை சோற்றுக்கு ஒருசோறு பதம்போல்.

Continue Reading →

முகநூற் குறிப்புகள்: சீர்காழி தாஜின் முகநூற் பதிவுகள் பற்றியதொரு கலந்துரையாடல்

முகநூற் குறிப்புகள்: சீர்காழி தாஜின் முகநூற் பதிவுகள் பற்றியதொரு கலந்துரையாடல்

எழுத்தாளர் சீர்காழி தாஜ் எனது முகநூல் நண்பர்களில் முக்கியமானவர்களிலொருவர். அவர் அவ்வப்போது முகநூலில் இடும் பதிவுகள், சிறு குறிப்புகளாகவிருக்கட்டும் அல்லது குறுங்கவிதைகளாகவிருக்கட்டும், கலந்துரையாடலைத் தூண்டுபவை. அவரது எழுத்தில் வெளிப்படும் பாசாங்கற்ற உண்மையின் தெளிவும், தனக்குச் சரியென்று பட்டதை மனம் நோகாதவாறு துணிச்சலுடன் கூறும் பண்பும் , மற்றும் ஆங்காங்கே விரவிக்கிடக்கும் அங்கதமும் என்னை மிகவும் கவர்ந்தவை. அண்மையில் முகநூலில் அவர் சில குறுங்கவிதைகளைப் பதிந்திருந்தார். அவை பற்றிய முகநூலில் பதிவு செய்த எனது கருத்துகளையும் (கவிதை வடிவில்), அவற்றையும் பதிவுகள் வாசகர்களூடன் பகிர்ந்துகொள்வதன்பொருட்டு இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

Continue Reading →

பொங்கல் கவிதை: ‘இன்று புதிதாய்ப் பிறந்தோ மென்று’ பொங்கல் செய்வோம்; களிப்போம்.

'இன்று புதிதாய்ப் பிறந்தோ மென்று'  பொங்கல் செய்வோம்; களிப்போம்.

உலகப் பந்தின் திக்குக ளெங்கும்
பரந்து வாழும் தமிழர் வாழ்வில்
முக்கிய நாளே! பொங்கல் நாளே!
அதிலும் கதிரின் கருணை வாழ்த்தி
உழுது வாழும் உழவர் போற்றும்
உன்னத நாளிது வாழ்த்தி நிற்போம்
இந்த நாளில் இன்பமும் பொங்கிட
வேண்டி நிற்போம். வேண்டி நிற்போம்.
யுத்தம் மலிந்த பூமியில் இனிமேல்
நித்தமும் அமைதி நிலவிட வேண்டும்
என்றே நாமும் வேண்டி நிற்போம்.
மானிடர் யாவரும் அன்பு கொண்டு
மதங்கள், மொழிகள், இனங்கள் மற்றும்
நிலவிடும் பிரிவுகள் நீங்கி அன்புடன்
வாழ்ந்திட வேண்டி நிற்போம் நாமே.

Continue Reading →