[சிங்கை நகர் வன்னிப் பகுதியில் இருந்ததாக கலாநிதி குணராசா , கலாநிதி புஷ்பரட்ணம் ஆகியோர் கருதுவார்கள். ஆனால் சிங்கை நகர் வல்லுபுரத்திலேயே இருந்திருக்க வேண்டுமென்பதுதான் இக்கட்டுரையாளரின் கருத்து. நல்லூர் இராஜதானி நகர அமைப்பு ஆய்வின் இரண்டாம் பதிப்பு நூலாக வெளிவரும்போது இந்தக் கட்டுரையும் உள்ளடக்கியே வெளிவரும். இக்கட்டுரை ஏற்கனவே திண்ணை, பதிவுகள் ஆகிய இணைய இதழ்களில் வெளிவந்தது. இப்பொழுது மீள்பிரசுரமாக வெளிவருகிறது ஒரு பதிவுக்காக.. – வ.ந.கி -] சிங்கை நகர் நல்லூர் தமிழரசர்களின் இராஜதானியாக விளங்குவதற்கு முன்னர் விளங்கிய நகர். இதன் இருப்பு பற்றிப் பல்வேறு விதமான ஊகங்கள், கருதுகோள்கள் நிலவுகின்றன. ஒன்றிற்குப் பின் முரண்பாடான ஊகங்கள் ஆய்வாளர்களை மேலும் மேலும் குழப்பத்திலாத்தி வைப்பனவாகவுள்ளன. முதலியார் இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர் போன்றோர் வல்லிபுரமே சிங்கை நகராக இருந்திருக்கக் கூடிய சாத்தியங்கள் உள்ளதாகக் கருதுவர். பேராசிரியர் சிற்றம்பலமோ நல்லூரே சிங்கைநகரெனக் கருதுவார். கலாநிதி க.குணராசா, கலாநிதி ப.புஷ்பரட்ணம் ஆகியோர் பூநகரிப் பகுதியிலேயே சிங்கை நகர் அமைந்திருந்ததாகக் கருதுவர். ஆனால் கலாநிதி புஷ்பரடணத்தை மேற்கோள் காட்டி கலாநிதி குணராசா சிங்கை நகர் பூநகரிப் பகுதியில் இருந்ததை வலியுறுத்துவார்.
[சிங்கை நகர் வன்னிப் பகுதியில் இருந்ததாக கலாநிதி குணராசா , கலாநிதி புஷ்பரட்ணம் ஆகியோர் கருதுவார்கள். ஆனால் சிங்கை நகர் வல்லுபுரத்திலேயே இருந்திருக்க வேண்டுமென்பதுதான் இக்கட்டுரையாளரின் கருத்து. நல்லூர் இராஜதானி நகர அமைப்பு ஆய்வின் இரண்டாம் பதிப்பு நூலாக வெளிவரும்போது இந்தக் கட்டுரையும் உள்ளடக்கியே வெளிவரும். இக்கட்டுரை ஏற்கனவே திண்ணை, பதிவுகள் ஆகிய இணைய இதழ்களில் வெளிவந்தது. இப்பொழுது மீள்பிரசுரமாக வெளிவருகிறது ஒரு பதிவுக்காக.. – வ.ந.கி -] சிங்கை நகர் நல்லூர் தமிழரசர்களின் இராஜதானியாக விளங்குவதற்கு முன்னர் விளங்கிய நகர். இதன் இருப்பு பற்றிப் பல்வேறு விதமான ஊகங்கள், கருதுகோள்கள் நிலவுகின்றன. ஒன்றிற்குப் பின் முரண்பாடான ஊகங்கள் ஆய்வாளர்களை மேலும் மேலும் குழப்பத்திலாத்தி வைப்பனவாகவுள்ளன. முதலியார் இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர் போன்றோர் வல்லிபுரமே சிங்கை நகராக இருந்திருக்கக் கூடிய சாத்தியங்கள் உள்ளதாகக் கருதுவர். பேராசிரியர் சிற்றம்பலமோ நல்லூரே சிங்கைநகரெனக் கருதுவார். கலாநிதி க.குணராசா, கலாநிதி ப.புஷ்பரட்ணம் ஆகியோர் பூநகரிப் பகுதியிலேயே சிங்கை நகர் அமைந்திருந்ததாகக் கருதுவர். ஆனால் கலாநிதி புஷ்பரடணத்தை மேற்கோள் காட்டி கலாநிதி குணராசா சிங்கை நகர் பூநகரிப் பகுதியில் இருந்ததை வலியுறுத்துவார்.
நிரோமி டி சொய்சாவின் (Niromi De Soyza) ‘தமிழ்ப் பெண்புலி’ (Tamil Tigress) என்னும் ஆங்கில நூலை அண்மையில்,டொராண்டோவிலுள்ள ‘The World’s Biggest Book Store’ இல் வாங்கினேன்; அங்கிருந்த கடைசிப் பிரதிகளான இரண்டிலொன்று. இந்த நூலினை வாங்கும் எண்ணமோ அல்லது வாசிக்கும் எண்ணமோ ஆரம்பத்திலிருக்கவில்லை. இந்நூல் பற்றிய கருத்தினைக் கூறும்படி முகநூல் நண்பரொருவர் கேட்டுக்கொண்டதன் விளைவாக வாங்கும் எண்ணம் உண்டாயிற்று. ஒரு குழந்தைப் போராளியாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து பயிற்சி எடுத்துக் கொண்டதிலிருந்து , விலகியதுவரையிலான தனது அனுபவத்தினை விபரிக்கும் வகையில் ஆசிரியர் எழுதியுள்ளார். இது பலத்த வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பிய நூல். ஆஸ்திரேலியாவில் வசிக்கும் எழுத்தாளர் நட்சத்திரன் செவ்விந்தியன் இந்நூலின் உண்மை விளம்பும் தகுதி பற்றிப் பலமாகத் தனது எதிர்ப்பினைக் கட்டுரைகள் வாயிலாகப் பதிவு செய்துள்ளார். பத்திரிகையாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் நிரோமி டி சொய்சா பற்றி ஆதரவான கருத்தினைக் கூறும் வகையில் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
புதிய பனுவல் : An International Journal of Tamil Studies is a quarterly, bi-lingual journal in Tamil and English that publishes…
20-ம் அத்தியாயம்: மோகனாவின் ஓலம்!
வேதனையில் வீழ்ந்திருந்த ஒருவன் விகடப் பேச்சுப் பேசினால், பேசுபவனுக்கு அது விகடமாக இருந்தாலும் கேட்பவர்களுக்கு அது சாதாரண வேதனையிலும் பார்க்க அதிக வேதனையையே உண்டு பண்ணும். ஸ்ரீதரின் பகடிப் பேச்சுகள் யாவும் அத்தகைய உணர்ச்சிகளையே பாக்கியத்துக்கு உண்டு பண்னின. இன்னும் பிள்ளை அனுபவிக்கும் துன்பம் தாய்க்கும் தந்தைக்கும் கொடுக்கும் வேதனை, அப்பிள்ளை தான் அனுபவிக்கும் துன்பத்திலும் பார்க்க அதிகமாகவே இருக்கிறது. இயற்கையின் நெறியாலும் சமுதாயக் கூட்டுறவாலும் ஏற்படும் இப்பிள்ளைப் பாசத்தோடு ஒப்பிடக் கூடிய பேருணர்ச்சி இவ்வுலகில் வேறில்லை என்றே கூற வேண்டும். மக்கட் பேறு மதிக்கவொண்ணாத பேறாக இருப்பதினாலேயே தாய் தந்தையருக்குத் தம் பிள்ளைகள் மீது இத்தகைய பாசம் ஏற்படுகிறது. அதனால் தான் திருவள்ளுவர் கூட
முனைவர் தெ.வெற்றிச்செல்வனை ஆசிரியராக்கொன்டு வெளிவரும் இணையத்தளம் ‘பன்னாட்டுத் தமிழ் ( A Study of International Tamilology) ‘. அத்தளத்தினை இம்முறை ‘பதிவுகள்’ வாசகர்களுக்கு அறிமுகம் செய்கின்றோம்.…
முன்னுரை
– ஈழநாட்டின் வடபாகத்திலிருந்து செங்கோலோச்சிய அரசரின் வரலாற்றைச் சுருக்கமாக எடுத்துக் கூறுகின்றது இந்நூல். கி. பி. 1519 முதல் கி. பி. 1565 வரை யாழ்ப்பாணத்தை அரசாண்ட சங்கிலி என்பவனைத் தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்ட சங்கிலி என்னும் நாடக நூலின் ஒரு பகுதியாக அமைந்த இவ்வரலாறு பலர் வேண்டுகோளுக்கிணங்கத் தனிநூலாக வெளியிடப்படுகின்றது. ஈழத்துத் தமிழ் மக்களின் வரலாற்றைப் பற்றிய விரிவான நூல் ஒன்று மிகவும் விரைவில் வெளிவரும். இந்நூலை ஆக்குங்கால் உடனிருந்துதவிய நண்பர்க்கும் ஆயோலை தூக்கி ஆராய்ந்த அன்பர்க்கும் நாம் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம். நூலினை நல்ல முறையில் அச்சிட்டுதவிய சுதந்திரன் அச்சகத்தார்க்கும் எம்நன்றி உரித்து. குற்றம் களைந்து குணங்கொண்டு எம்மை ஊக்குவித்தல் பெரியோர் கடன். க. கணபதிப்பிள்ளை, பல்கலைக்கழகம், பேராதனை, 20-8-1956 –
[ ‘கொடகே’ வாழ்நாள் சாதனையாளர் (2012)ற்கான கௌரவ சாஹித்திய விருதினைப் பெறுகிறார் கே. எஸ் சிவகுமாரன் அவர்கள் எழுத்தாளர் முருகபூபதியால் எழுதப்பட்டுத் தமிழ்முரசு(ஆஸ்திரேலியா) இணையத்தளத்தில் வெளியான கட்டுரை இதனையொட்டி இங்கு மீள்பிரசுரமாகிறது. – பதிவுகள்]
ஆர்ப்பாட்டம் எதுவுமின்றி அமைதியாக இலக்கியப்பணியாற்றுபவர்களை இக்காலத்தில் காண்பது அபூர்வம்தான். தழும்பாத நிறைகுடமாக எம்மத்தியிலிருப்பவர் கே.எஸ்..சிவகுமாரன். இதுவரையில் தமிழில் 22 நூல்களையும் ஆங்கிலத்தில் இரண்டு நூல்களையும் வரவாக்கிவிட்டு தொடர்ந்தும் அயராமல் ஆங்கில, தமிழ் இதழ்களில் எழுதிக்கொண்டிருக்கிறார். தங்கள் நூல்களைப்பற்றி ஆங்கில, தமிழ் ஊடகங்களில் சிற்றிதழ்களில் கே.எஸ்.எஸ். எழுதமாட்டாரா? என்று காத்திருக்கும் படைப்பிலக்கியவாதிகளும் எம்மத்தியிலிருக்கிறார்கள். சிவகுமாரன் தன்னை ஒரு இலக்கியவிமர்சகன் என்று சொல்லிக்கொள்ள விரும்பாதவர். இன்றும் தான் ஒரு திறனாய்வாளன்தான் என்று அடக்கமாகச்சொல்லிக்கொள்ளும் இவர், சிறுகதை எழுத்தாளருமாவார். அத்துடன் ஆங்கிலத்திலும் தமிழிலும் கவிதைகளும் எழுதியிருக்கிறார். ஆயினும் ஒரு விமர்சகராக, திறனாய்வாளராக, பத்தி எழுத்தாளராக, மொழிபெயர்ப்பாளராகத்தான் வெளியுலகிற்கு அறியப்பட்டிருக்கிறார். இருமை, சிவகுமாரன் கதைகள் ஆகிய இரண்டு சிறுகதைத்தொகுப்புகள் இதுவரையில் வெளியாகியிருக்கின்றன. பெரும்பாலான இவரது கதைகள் உளவியல் சார்ந்திருக்கும். விரைவில் பவளவிழாக்காணவுள்ள கே.எஸ்.எஸ்., பேராதனைப்பல்கலைக்கழக ஆங்கிலப்பட்டதாரி. தமது வாழ்நாளில் பெரும்பகுதியை இலக்கியத்திற்கும் ஊடகம் மற்றும் இதழியலுக்கும், மொழிபெயர்ப்பிற்கும் கல்வித்துறைக்கும் அர்ப்பணித்திருப்பவர். தன்னை எங்கும் எதிலும் முதனிலைப்படுத்திக்கொள்ள விரும்பாத அளவுக்கு அதிகமான தன்னடக்க இயல்புகொண்டவர். விமர்சகர்கள் விமர்சனத்துக்கும் கண்டனத்துக்கும் ஆளாகும் இயல்பினர் என்பதனாலோ என்னவோ, தம்மை ஒரு திரனாய்வாளர் என்று சொல்லிக்கொள்வதில் அமைதிகாண்பவர். எவரையும் தமது எழுத்துக்களினால் காயப்படுத்தத்தெரியாதவர்.
[இச்செய்திகளை எடுத்துரைத்தவர் இத்தளத்தில் அகழாய்வை வழிநடத்திய பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி, பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம் (ஓய்வு). தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடான ‘அருங்கலைச் சொல் அகரமுதலி’ உதவியுடன் இதைத் தமிழாக்கி தட்டச்சு செய்தவர் சேசாத்திரி]
திருவக்கரை விழுப்புரம் மாவட்டத்தில் மயிலம், வானூர் ஆகிய ஊர்களுக்கு அருகில் இடம் கொண்டுள்ளது. இத்தளம் மிகத் தொன்மையானது, அருந்திருஆனது (sacred). இச்சிற்றூரில் சோழர் காலத்து சிவன் கோவில் ஒன்று உள்ளது. இது அரிக்கமேட்டிற்கு அருகே புதுச்சேரி மாநிலத்தின் எல்லை மேல் கிடக்கின்றது. இத்திருக்கோவில் சைவக் குரவர் அப்பர் அடிகளால் பாடல் பெற்றுள்ளது. நிலத்தியல்முறையில், திருவக்கரை ஒரு நன்கு அறியப்பட்ட பன்னாட்டு முகாமையுடைய தளம் ஆகும் இச்சிற்றூர் நீடுநெடிய காலத்திற்கு முன்னேயே இதாவது, சற்றொப்ப இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நிலைப்பட்டிருந்ததாகக் கருதப்படுகின்றது. இங்கு உள்ள கற்கள் தொன்மையானவை. மேலும், தொன்மையான மரங்கள் நிலத்தடியில் நிகழ்ந்த வேதிஎதிர்வினையால் கற்களாக (மரப் புதைபடிவமாக) உருமாறி உள்ளன. இது நிலத்தியல்முறையில் முகாமையான தளம் என்பதோடு உலகம் முழுவதிலும் இருந்து நிலத்தியலரால் (geologist) வருகைதரப்படும் தளம். இந்நாளில் கூட, கல்லாய் உருத்திரிந்த மர மீதிமிச்சங்களைக் கோவிலுக்கு அருகே மேற்பரப்பில் காணவும், திரட்டவும் இயலும். அங்கு முற்கால மக்களின் மீதிமிச்சங்களைக் கொண்ட ஒரு மிகப்பெரும் திட்டை உள்ளது. இது ஒரு புதைத்தல் மற்றும் வாழிடம் சேர்ந்த தளம் ஆகும். அங்கே இடைஇடையே காணும்படியாகப் பெருங்கற்காலப் புதைப்பிடங்களும் உள்ளன.
சங்கதமிழ் இலக்கியங்கள் காதல்,வீரம்,கொடையை மட்டுமன்றி இல்லறத்துக்குரிய அறங்களுள் ஒன்றாக விருந்தோம்பலையும் சிறப்பித்துக் கூறுகின்றன.விருந்தோம்பலில் தமிழரே பேர் பெற்றவர்கள். பழந்தமிழர் விருந்தோம்பலை வாழ்க்கையின் உயிர் நாடியாகக் கொண்டமை அக்கால நூல்களால் நன்கு தெரிகிறது. .பழந்தமிழ் நூல்களில் விருந்து மணமே பெரிதும் கமழ்ந்து கொண்டிருந்தது விருந்தோம்பலின் அருமையை அறிந்து வள்ளுவர் விருந்தோம்பலுக்கென்று தனியோர் அதிகாரத்தைப் படைத்துள்ளார் விருந்து’ என்ற சொல் புதுமையைப் குறித்துப் பின்பு ஆகுபெயராய் விருந்தினரைக் குறித்து வழங்கலாயிற்று ‘விருந்து தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே’(பொருளதிகாரம்,237) என்ற தொல்காப்பிய நூற்பா மூலம் அறியலாம். இல்லற நெறி பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலே’ இல்லறத்தின் தலையாய நெறியாகும். விருந்தோம்பல் இல்லாத வாழ்க்கை இல்வாழ்க்கை ஆகாது விருந்தோம்பலில் பெண் பெரும் பங்கு பெறுகிறாள் .ஆதலின் ‘நல்விருந்தோம்பலின் நட்டாள்’ எனத் திரிகடுகம் கூறும். தொல்காப்பியமும் மனைவிக்கு உரிய மாண்புகளாக விருந்தோம்பலையும் சுற்றம் ஓம்பலையும் சுட்டுகிறது ‘விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்’(கற்பியல்,11) இல்லறத்தில் கணவன் மனைவியர் இருவரும் இணைந்து விருந்தோம்ப வேண்டும் என்பதை,இளங்கோவடிகளும்,கம்பரும் தம் காப்பியங்களில் புலப்படுத்தியுள்ளனர்.