நினைவுகளின் சுவட்டில் .. (99)

வெங்கட் சாமிநாதன்இந்த நினைவுகளை எழுதும் போது, 60 வருஷங்களுக்கு முந்திய அந்தக் காலமும் மனிதர்களும் வாழ்க்கையும் கொஞ்சம் வினோதமாகத் தான் தோன்றுகின்றன. அப்படியும் இருந்ததா என்று. அப்படித்தான் இருந்தன. நான் வாழ்ந்து பார்த்து அனுபவித்த அனுபவங்களாயிற்றே. –  ஹிராகுட்டிலிருந்து புர்லாவுக்கு போய்க்கொண்டிருக்கிறேன். நடந்து. ஹிராகுட்டிலிருந்து சம்பல்பூர் பத்து மைல் தூரம். அந்த ரோடிலேயே சுமார் மூன்று மைலோ அல்லது நாலோ நடந்து பின் வலது பக்கம் கிளை பிரியும் ரோடில் போகவேண்டும் அதில் சுமார் இர்ண்டு மைல் தூரம் போனால் மகா நதி. மகா நதிப் பாலத்தைக் கடந்து இன்னும் மூன்று மைல் தூரம் நடந்தால் புர்லா. விடுமுறையில் ஊருக்குப் போக ரயில் பிடிக்க சம்பல்பூர் ஸ்டேஷனுக்குப் போகவேண்டும். சைக்கிள் ரிக்‌ஷாவில் போய்க்கொண்டிருக்கிறேன். மகாநதியைக் கடந்து விட்டான். ஆனால் நான் ரயிலைப் பிடிக்க நேரத்துக்குப் போய்ச் சேர்வேன் என்ற நம்பிக்கையில்லை. பின்னாலிருந்து ஒரு லாரி வருவதைப் பார்தேன். சைக்கிள் ரிக்‌ஷாவிலிருந்து இறங்கி, அந்த லாரியை நிறுத்தி, ”ரயிலைப் பிடிக்க வேண்டும்,. சம்பல்பூரில் விட்டு விடுவாயா?” என்று கேட்கிறேன். ”ஏறிக்கொள்,” என்கிறான். திரும்பி வந்து சைக்கிள் ரிக்‌ஷாக்காரனுக்கு பேசிய காசைக் கொடுத்து விட்டு லாரியில் ஏறிக்கொள்கிறேன். இன்னொரு சமயம் சம்பல்பூரிலிருந்து ஹிராகுட்டுக்கு ஒரு லாரி போகிறது. இப்போது புர்லா போகும் ரோடு வந்ததும், ”இங்கு இறக்கிவிடு, நான் நடந்து போய்க்கொள்கிறேன்,” என்று சொன்னேன். அவன் நிறுத்த வில்லை.” எவ்வளவு தூரம் நடப்பாய்”, என்று சொல்லி, புர்லா ரோடில் மகா நதியைத் தாண்டி, அவன் வழியை விட்டு எனக்காக லாரியைத் திருப்பி ஐந்து மைல் தூர என் நடையை மிச்சப்படுத்திக் கொடுத்துவிட்டு பின் தன் வழியில் செல்கிறான். என்னிடம் இதற்கு ஒரு பைசா காசு கேட்கவில்லை. யாருமே கேட்டதில்லை. அவ்வப்போது நினைப்பு வந்ததைச் சொல்லிச் செல்கிறேன்.

Continue Reading →

மல்லப்பாடி தொல்லியல் அகழாய்வு

 [இச்செய்திகளை எடுத்துரைத்தவர் இத்தளத்தில் அகழாய்வை நடத்திய பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி, பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம் (ஓய்வு). தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடான ‘அருங்கலைச் சொல் அகரமுதலி’ உதவியுடன் இதைத் தமிழாக்கி தட்டச்சு செய்தவர் சேசாத்திரி]

இச்செய்திகளை எடுத்துரைத்தவர் இத்தளத்தில் அகழாய்வை வழிநடத்திய பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி, பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம் (ஓய்வு). தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடான 'அருங்கலைச் சொல் அகரமுதலி' உதவியுடன் இதைத் தமிழாக்கி தட்டச்சு செய்தவர் சேசாத்திரிமல்லப்பாடி தருமபுரி மாவட்டத்தில் பர்கூருக்கு அருகே சிறுகுன்றுகளின் அடிவாரத்தில் இடம்கொண்டுள்ள ஒரு சிறிய சிற்றூர். இந்நிலப் பரப்பின் அகத்தேயும், சுற்றியும் புதிய கற்காலப் பண்பாட்டுச் சான்றெச்சங்கள் உள்ளன. இந்நிலப் பரப்பின் புதிய கற்கால மக்கள் குன்றுகளின் அடிவாரத்திலும் சமவெளிகளிலும் வாழ்ந்திருந்தனர். இத்தளத்தில் பாறை வண்ணஓவியங்களும் கூட இடம்கொண்டுள்ளன. இங்கத்துப் பாறைகளில் இயற்கையான மலைமுழைஞ்சுகள் (cavern) உள்ளன, அவற்றின் மேற் கூரைகளில் வண்ணோவியங்கள் இடம்கொண்டுள்ளன. இக் காட்சிப்படங்கள் வேட்டை முதலாயவற்றில் இருந்து வண்ணிக்கின்றன. அவை கரிக்கட்டை, சுண்ணாம்பு, செங்காவி போன்ற இயற்கை வண்ணங்களைக் கொண்டு வெறுஙகையால் வரையப்பட்டு உள்ளன.  

Continue Reading →

அரிக்கமேடு தொல்லியல் அகழாய்வு!

[இச்செய்திகளை எடுத்துரைத்தவர் இத்தளத்தில் அகழாய்வை வழிநடத்திய பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி, பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம் (ஓய்வு). தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடான ‘அருங்கலைச் சொல் அகரமுதலி’ உதவியுடன் இதைத் தமிழாக்கி தட்டச்சு செய்தவர் சேசாத்திரி]

இச்செய்திகளை எடுத்துரைத்தவர் இத்தளத்தில் அகழாய்வை வழிநடத்திய பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி, பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம் (ஓய்வு). தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடான 'அருங்கலைச் சொல் அகரமுதலி' உதவியுடன் இதைத் தமிழாக்கி தட்டச்சு செய்தவர் சேசாத்திரிஅரிக்கமேடு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய சிற்றூர். இது முன்பே முனைவர் மார்டிமர் வீலரால் 1942 இல் அகழாய்வு செய்யப்பட்ட ஒரு இந்தோ – உரோம தளம். இதுவே தொல்லியல் அகழாய்வுகள் மண்ணடுக்கியல் (stratigraphy)  நெறிமுறையைப் பயன்கொண்டு செய்யப்பட்ட முதல் தளம். அவர் இத்தளத்தை கி.மு. 2 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வரையானது என நாள்குறித்தார். அவருடைய அகழாய்வில் பெரும் எண்ணிக்கையில் பானைஓட்டு பிராமிப் பொறிப்புகள், உரோமர் மட்கலங்கள், உரோமக் காசுகள், உரோமர் குடியேற்றங்கள் ஆகியன கண்டறியப்பட்டன. அவர் இதன் காலக் கணக்கீட்டை கருப்பு – சிவப்புநிற மட்கலன்கள், உரோமக் காசுகள் ஆகியவற்றின் அடிப்படையில் பொருத்தினார்.

Continue Reading →

திருவேற்காடு தொல்லியல் அகழாய்வு!

[இச்செய்திகளை எடுத்துரைத்தவர் இத்தளத்தில் அகழாய்வை வழிநடத்திய பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி, பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம் (ஓய்வு). தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடான ‘அருங்கலைச் சொல் அகரமுதலி’ உதவியுடன் இதைத் தமிழாக்கி தட்டச்சு செய்தவர் சேசாத்திரி]

இச்செய்திகளை எடுத்துரைத்தவர் இத்தளத்தில் அகழாய்வை வழிநடத்திய பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி, பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம் (ஓய்வு). தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடான 'அருங்கலைச் சொல் அகரமுதலி' உதவியுடன் இதைத் தமிழாக்கி தட்டச்சு செய்தவர் சேசாத்திரிதிருவேற்காடு சென்னைக்கு அருகே பூந்தண்மல்லி பெங்களூர் நெடுஞ்சாலையில் இருந்து சில அயிர் மாத்திரிகள் (kilo meter) கிளைத்துப் பிரியும் சாலை வழியே கூவம் ஆற்றின் கரைமேல் இடம் கொண்டுள்ளது. இது அன்றாடம் பல்லாயிரம் பக்கதர்களை ஈர்க்கும் தேவி கருமாரி அம்மன் கோவிலில் இருந்தும் மிக அருகில் தான் உள்ளது. இத்தளத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பண்டை வரலாறு மற்றும் தொல்லியல் துறையால் பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தியின் வழிகாட்டுதலில் 1996 முதல் 2000 வரை பற்பல பருவங்களுக்கு அகழாய்வுகள் நடத்தப்பட்டன.  

Continue Reading →

வாழ்வியலில் இலக்கியமும் விஞ்ஞானமும்

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்) -இலக்கியங்கள் எந்த மொழியில் எழுந்தாலும் அவற்றுள் சிலவற்றில் அறிவியல் சார்ந்த கருத்துச் செறிவுகள்; பற்றிப் படர்ந்திருப்பதை நாம் காணலாம். அன்று, நம்மில் அதிகமானோர் இவ்வாறான இலக்கியங்களை, இலக்கியக்கண்கொண்டு மாத்திரம் பார்த்ததினால், இலக்கிய நயத்தை மட்டும்தான் உள்வாங்கிக் கொண்டனர். அவற்றில் அமைந்த அறிவியல் அவர்களுக்கு அன்று புலப்படவில்லை. இன்றைய மக்களின் வாசிப்புப் பழக்கம் மாறுபட்டதனாலும், அறிவியல் ஆர்வம் கூடியதனாலும், அவர்கள் விஞ்ஞானத்தையும் இலக்கியத்தையும்  ஒரே தட்டில் வைத்து ஆய்வு செய்யப் பழகி வருகின்றனர். இதனால், விஞ்ஞானிகள் இலக்கியத்தில் செறிந்துள்ள அறிவியலைத் தங்கள் ஆய்வுகளுக்கு உட்படுத்திப் பல புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைப் புரிந்து அரும் பெரும் சாதனைகளை நிலைநாட்டி வருகின்றனர். விஞ்ஞானிகளுக்கு ஆய்வின்பொழுது பலபல சந்தேகங்கள் எழுவது இயல்பு.  இவற்றை ஒவ்வொன்றாக நிவர்த்தி செய்யும் பொழுது ஆய்வின் தரம் உயர்நிலை அடைகின்றது. 

Continue Reading →

அப்புக்கல்லு தொல்லியல் அகழாய்வு

[இச்செய்திகளைத் தொகுத்து வழங்கியவர் பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி, பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக் கழகம் (ஓய்வு). தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடான ‘அருங்கலைச் சொல் அகரமுதலி’ உதவியுடன் இதைத் தமிழாக்கி தட்டச்சு செய்தவர் சேசாத்திரி]

இச்செய்திகளை எடுத்துரைத்தவர் இத்தளத்தில் அகழாய்வை வழிநடத்திய பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி, பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம் (ஓய்வு). தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடான 'அருங்கலைச் சொல் அகரமுதலி' உதவியுடன் இதைத் தமிழாக்கி தட்டச்சு செய்தவர் சேசாத்திரிஅப்புக்கல்லு வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டுப் பகுதிக்கு அருகில் இடம் கொண்டுள்ளது. இத்தளம் அணைக்கட்டில் இருந்து 7 அயிர் மாத்திரி (kilo meter) தொலைவில் கிடக்கின்றது. இது சிறு குன்றுகளாலும், நெல்வயல்களாலும் அதோடு ஒரு கால்வாயாலும் சூழப்பட்டு உள்ளது. இது குன்றின் அடிவாரத்தே அமைந்த ஒரு செழிப்பான சிற்றூர். புதியகற்காலக் குடியேற்றங்கள் மலையைச் சுற்றிலும் இருந்தன.   புதிய கற்கால மக்கள் வழக்கமாக குன்றின் அடிவாரத்திலோ அல்லது குன்றுகளின் உச்சி மீதோ வாழ்ந்தனர். அவர்கள் தம் குடியிருப்பிடத்தை ஊன்றுவதற்காக குன்றின் உச்சியில் ஒரு இடத்தைத் தெரிவு செய்வர். இக்குன்றுகள் சரிவாகவும் கால்களால் ஏறத்தக்கனவாகவும் இருக்கும்.

Continue Reading →

தாலாட்டுப் பாடல்கள் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

நீண்ட இடைவெளிக்குப் பின் ஏப்ரல் 2011 இல் எழுதத் தொடங்கிய கிண்ணியா பி.ரி. அஸீஸ் அவர்கள் டிசம்பர் 2011 வரையான ஒன்பது மாதங்களுக்குள் ஒன்பது படைப்புக்களை வெளியிட்டவர். தாலாட்டுப் பாடல்கள் என்ற தொகுதி தாயன்பின் வெளிப்பாடான தாலாட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பாத்திமா ருஸ்தா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த நூல் 19 பக்கங்களில் கைக்கு அடக்கமான நூலாக காணப்படுகின்றது. 2012 இல் சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ள கிண்ணியா பி.ரி. அஸீஸ் அவர்கள்; தனது இளம் காலத்தில் கிண்ணியாச் செல்வன் என்ற புனைப் பெயரில் தனது படைப்புக்களைத் தந்தவர். பல்வேறு ஆளுமைகளைக் கொண்டிருக்கும் இவர், ஒரு தாய் தன் பிள்ளைகளைத் தாலாட்டும் பாடல்களாக தனது தொகுதியை வெளியிட்டிருப்பது சிறப்பம்சமாகும்நீண்ட இடைவெளிக்குப் பின் ஏப்ரல் 2011 இல் எழுதத் தொடங்கிய கிண்ணியா பி.ரி. அஸீஸ் அவர்கள் டிசம்பர் 2011 வரையான ஒன்பது மாதங்களுக்குள் ஒன்பது படைப்புக்களை வெளியிட்டவர். தாலாட்டுப் பாடல்கள் என்ற தொகுதி தாயன்பின் வெளிப்பாடான தாலாட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பாத்திமா ருஸ்தா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த நூல் 19 பக்கங்களில் கைக்கு அடக்கமான நூலாக காணப்படுகின்றது. 2012 இல் சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ள கிண்ணியா பி.ரி. அஸீஸ் அவர்கள்; தனது இளம் காலத்தில் கிண்ணியாச் செல்வன் என்ற புனைப் பெயரில் தனது படைப்புக்களைத் தந்தவர். பல்வேறு ஆளுமைகளைக் கொண்டிருக்கும் இவர், ஒரு தாய் தன் பிள்ளைகளைத் தாலாட்டும் பாடல்களாக தனது தொகுதியை வெளியிட்டிருப்பது சிறப்பம்சமாகும். இத்தொகுதியை வெளியிட்ட பதிப்பகத்தார் ஷஇனிய ராகம், சுவை நயம் மற்றும் கருத்தாழமிக்க இவை தாயன்பில் ஒரு இன்ப அதிர்வை ஏற்படுத்தும். பிஞ்சு மனங்களில் பூரிப்பையும் கொண்டு வரும்| என்கின்றனர். கிராமிய மணம் கமழும் இந்தப் பாடல்கள் குழந்தைகளை ஆசிர்வதிப்பதாகவும், நற்செயல்களை விதைக்க கற்றுக் கொடுப்பதாகவும் அமைந்திருக்கின்றன.

Continue Reading →

முருகபூபதியின் “உள்ளும் புறமும்” நூல் மதிப்பாய்வு

முருகபூபதியின் “உள்ளும் புறமும்” நூல் மதிப்பாய்வுஇப்பொழுது அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் இலங்கை எழுத்தாளர் லெ. முருகபூபதி அவர்களின் நூல் ஒன்றுவெளிவந்திருக்கின்றது. சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் வெளியீடாக வந்திருக்கும் ‘உள்ளும் புறமும்’ என்னும் இந்த நூலுக்குச் சூட்டப்பெற்றுள்ள பெயர் ஒருபுனைகதைப் படைப்புக்குரியதாகவே தோன்றுகிறது. அதேசமயம் அவ்வாறிருக்க இயலாதென மறுகணம்நினைத்துக் கொண்டேன்.   கனடாவில் வதியும் க.நவம் அவர்களின் ‘உள்ளும் புறமும்’ சிறுகதைத் தொகுதியொன்றுமுன்னர் வெளிவந்திருப்பதனை  நன்றாக அறிந்தவர் முருகபூபதி. எனவே தமது புனைகதைப்படைப்பொன்றுக்கு இந்தப் பெயரைச் சூட்டி இருக்கமாட்டார். சிறுகதை, நாவல், பயண இலக்கியம், கடித இலக்கியம், சிறுவர் இலக்கியம்,கட்டுரை, நேர்காணல் எனத் தமது ஆளுமையின் வெளிப்பாடாகப் பலதுறை சார்ந்த நூல்களைப்பூபதி ஏற்கனவே வெளியிட்டுள்ளார். இந்த நூல் வித்தியாசமான ஒரு நூலாக இருக்க வேண்டுமென எனக்குள்ளே தீர்மானித்துக் கொண்டேன். நூலைத்திறந்து உள்ளே நோக்குகையில் நூலின் பெயருக்குக் கீழே ஒரு கோடிட்டு, இந்தக்கோட்டுக்குக் கீழ், “சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு – 2011 தொடர்பான பதிவுகள்” எனக்குறிப்பிடப்பட்டுள்ளதைக் கண்டு கொண்டபின்னர் குழப்பமில்லாத ஒரு தெளிவு உண்டானது. சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு – 2011 தொடர்பான உள்ளும் புறமுமான விபரங்கள் அடங்கிய பதிவு இந்த நூல் என்பதனைத் தெளிவாக உணர்ந்து கொள்ள முடிந்தது.

Continue Reading →

வேர் அறுதலின் வலி நூலுக்கான இரசனைக்குறிப்பு

வேர் அறுதலின் வலி நூலுக்கான இரசனைக்குறிப்புயாழ் முஸ்லிம் வலைத்தளத்தின் வெளியீடாக வேர் அறுதலின் வலி என்ற கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது. 21 வருடங்களுக்கு முன்பு முஸ்லிம்கள் வெளியேற்றப்ட்ட நிகழ்வினையொட்டி யாழ் வலைத்தளம் நிகழ்த்திய போட்டிக்காக வந்து சேர்ந்த கவிதைகளை இத்தொகுப்பு ஏந்தி நிற்கிறது. வரலாற்றுப் பதிவாகவும், ஆழ் மனசில் வேரூன்றிய வலிகளின் வெளிப்பாடாகவும் இங்கு 127 பக்கங்களில 55 கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. விடுதலைப் புலிகளினால் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கே இந்த நூல் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. வ.ஐ.ச. ஜெயபாலனின் சிறப்பானதொரு முன்னுரையையும், ஆசிரியர் எம்.எஸ்.ஏ. ரஹீம், முன்னால் அதிபர் எம்.எம். அப்துல் குத்தூஸ் ஆகியோர்; ஆசியுரைகளையும், ஊடகவியலாளர் ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர் அவர்கள் அணிந்துரையையும் வழங்கி நூலை சிறப்பித்திருக்கிறார்கள்.

மறந்துபோனதாக காட்டிக்கொள்ளும் இந்த நிகழ்வினை மறக்க முடியுமா என்பதாக ஊடகவியலாளர் அன்ஸிர் அவர்கள் எம்மை மீண்டும் ஒருமுறை சிந்திக்க வைத்திருக்கிறார். அதாவது வடபுலத்து முஸ்லிம்களுக்கு நிகழ்ந்த அந்த கொடுங்கணங்களை மீட்டிப் பார்க்கும் சந்தர்ப்பமாக இந்த நூல் வெளிவருவதற்கு முன்நின்று செயற்பட்டிருப்பவர் அன்ஸிர் அவர்கள்தான். காத்திரமாக இத்தொகுதி வெளிவர உந்துதலாக இருந்த அவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

Continue Reading →

நினைவுகளின் சுவட்டில் (98)

(98) – நினைவுகளின் சுவட்டில்

- வெங்கட் சாமிநாதன் -எனக்கு புர்லாவில் வீடு கிடைத்த 1950-ன் ஆரம்ப நாட்களிலேயே பணியில் சேர வந்திருந்த நாஸரத் காரர் தேவசகாயத்தை, “உங்களுக்கென வீடு கிடைக்கும் வரை நீங்கள் என்னோடு தங்கிக் கொள்ளலாம்,” என்று சொல்லிக் கூட்டி வந்ததிலிருந்து, ஒரு சில மாதங்களில் தேவசகாயமும் தன் ஊர் நண்பர் என்று சொல்லி  வேலுவை அழைத்து வந்தாரா? அதிலிருந்து அனேகமாக புர்லா வரும் தமிழர்களுக்கு வீடு கிடைக்காதவருக்கு என் வீடு முதல் தங்குமிடமாயிற்று. இப்போது அரை நூற்றாண்டுக்கும் மேல் காலம் கடந்துவிட்ட பிறகு யார் எப்போது எப்படி வந்து சேர்ந்தார்கள் என்று நினைவு படுத்திச் சொல்வது கடினம். வந்தார்கள். பிறகு வேறு வீடு கிடைத்ததும் சென்றார்கள். சிலர் தேவசகாயம் போல் தமக்கென வீடு கிடைத்த பிறகும், “என்னத்துக்கு அங்கே போய்க் கிடந்துக்கிட்டு..” என்று அலுப்புடன் என்னுடனேயே தங்கினார்கள். இந்த வீட்டில் கிடைக்கும் நண்பர்கள் குழுவையும் அது தந்த கலகலப்பையும் ஆனந்தத்தையும் வீட்டு தனியே போய் எங்கோ முடங்கிக் கிடப்பானேன்.

Continue Reading →