தமிழர் மத்தியில்: நந்தா!

கனடாத் தமிழர்களுக்கு  'தமிழர் மத்தியில் நந்தா' என்னும் பெயரில் பரிச்சயமானவர் நந்தகுமார் ராஜேந்திரன்கனடாத் தமிழர்களுக்கு  ‘தமிழர் மத்தியில் நந்தா’ என்னும் பெயரில் பரிச்சயமானவர் நந்தகுமார் ராஜேந்திரம். இவரை எனக்கு எனது மொறட்டுவைப் பல்கலைக்கழக நாட்களிலிருந்தே பழக்கம். அந்தப் பழக்கம் அண்மையில் இவரது மறைவு வரையில் தொடர்ந்தது. மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் நான் எனது கட்டடக்கலைத்துறைப் படிப்பினை ஆரம்பித்த சமயம் நந்தகுமார் கட்டடக்கலைத்துறையின் இறுதி ஆண்டு மாணவராகவிருந்தார். நான் எனது முதல் வருடத்தை பல்கலைக்கழக விடுதியிலிருந்துதான் கற்றேன். முதல் நாள் விடுதிக்குச் சென்றதிலிருந்து புதிய மாணவர்கள் அனைவரும் அங்கிருந்த  ‘சீனியர்களான’ சிங்கள மாணவர்கள் அனைவராலும் இனவேறுபாடின்றிக் கடுமையான ‘ராகிங்’ எனப்படுகின்ற பகிடிவதைக்கு ஆளாக்கப்பட்டோம். அந்த வருடம் பல்கலைக்கழகங்களில் பகிடிவதை தடை செய்யப்பட்டிருந்த போதும் விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்களால் அதனிடமிருந்து தப்ப முடியவில்லை. ஆனால் எமது ‘சீனியர்களான’ தமிழ் மாணவர்கள் மட்டும் மிகவும் கடுமை குறைந்த பகிடி வதைக்குப் புதிய மாணவர்களை உள்ளாக்கினார்கள். நான் முதன் முறையாக நந்தாவைச் சந்தித்ததே அவ்வகையான பகிடிவதை ஓன்றின் மூலம்தான். எனது விரிவுரைகள் தொடங்குவதற்கு முதல் நாள் வெளியில் எங்கோ  சென்று விட்டு விடுதிக்குத் திரும்பியபோது அங்கு எங்களை எதிர்பார்த்து நந்தா காத்திருந்தார். விடுதியில் அப்போது தங்கியிருந்த புதிய மாணவர்களை குறிப்பாகக் கட்டடக்கலைத்துறை பயில வந்திருந்த மாணவர்களை அழைத்து இலேசாக வெருட்டலுடன் கூடிய கேள்விகளைக் கேட்டார். அன்றிலிருந்து தொடங்கிய எங்களது பழக்கம் அண்மையில் அவரது மறைவுவரை தொடர்ந்தது. நான் நகர அமைப்பு அதிகார சபையில் பணி புரிந்து கொண்டிருந்த சமயம் நந்தா மத்திய கிழக்கு நாடொன்றுக்குச் சென்று திரும்பி கொழும்பில் சுயமாகத் தொழில் செய்துகொண்டிருந்ததாகவும் ஞாபகம். அப்பொழுதிருந்தே சுயமாகத் தொழில் செய்வதில் முனைப்புள்ள ஒருவராகத்தான் நந்தா விளங்கினார்.

Continue Reading →

‘தென்றலின் வேகம்’ நூல் விமர்சனம்: இளங் கவிக்குயில் ரிம்ஸா முஹம்மதின் கன்னி வெளியீடான ‘தென்றலின் வேகம்” (கவிதைத் தொகுப்பு)

இளங் கவிக்குயில் ரிம்ஸா முஹம்மதின் கன்னி வெளியீடான 'தென்றலின் வேகம்" (கவிதைத் தொகுப்பு) - விமர்சனம் / கருத்து.இணையத்தில் இறக்கைக்கட்டிப் பறந்து வந்த கவிதைத் தொகுப்பை கணனி முன் அமர்ந்து மிக பவ்வியமாய் வாசிக்க ஆரம்பித்தேன். வாசிக்க வாசிக்க தென்றலின் வேகத்தை எனக்குள்ளும் உணர ஆரம்பித்தேன். வானிலை ஆராய்ச்சியாளர்களுக்கும் கணிக்க முடியாது இந்தத் தென்றலின் வேகம் எத்தனை கிலோ (மனோ) மீற்றர் என்று. அத்தனை உணர்ச்சிப் பெருக்குடன் நூலின் எழுத்துக்களின் மேல் விழிகளை விரட்டும் வாசகர்களின் அடிமனதைத் தொட்டுச் சலனப்படுத்தும் கவிமலர்களால் கோர்க்கப்பட்ட கவிதைத் தொகுப்பாய் தென்றலின் வேகம் தவழ்கிறது. முதலில் என் கண்களில் கவரப்பட்டு கருத்தைத் தொட்டக் கவிதை ‘கண்ணீரில் பிறந்த காவியம்!” அதில், முன்னேற்றப் பாதையிலேநான் எடுத்து வைத்தஒவ்வொரு அடியும்சறுக்கு மர ஏற்றச்சவாரியாகசாணேற முழஞ்சறுக்கிசலிப்பாகின! என தான் எடுக்கும் முயற்சியையும் சந்திக்கும் தோல்வியையும் விளக்கும் கவிஞரின் அந்தக் கவிதை இவ்வாறு முடிகிறது… கண்ணீரில் பிறந்ததோ காவியம்-என் கடமையில் நிலைத்ததோசீவியம்!!!

Continue Reading →

யாழ்ப்பாண வாழ்வியல் மீதான பயணம். முருகேசு ரவீந்திரனின் “வாழ்க்கைப் பயணம்” சிறுகதைத் தொகுப்பிற்கான ஓர் இரசனைக் குறிப்பு

அண்மையில் யாழ்ப்பாணத்தில் வெளியீடு  செய்யப்பட்ட முருகேசு ரவீந்திரனின் வாழ்கை பயணம் சிறுகதை தொகுதி வாசித்த முடிந்து பல நாட்கள் ஆகியும் அதன் பாதிப்பில் இருந்து  விடுபட முடியாத தொரு மனநிலை எனக்கிருக்கிறது அண்மையில் யாழ்ப்பாணத்தில் வெளியீடு  செய்யப்பட்ட முருகேசு ரவீந்திரனின் வாழ்கை பயணம் சிறுகதை தொகுதி வாசித்த முடிந்து பல நாட்கள் ஆகியும் அதன் பாதிப்பில் இருந்து  விடுபட முடியாத தொரு மனநிலை எனக்கிருக்கிறது. கதை மாந்தர்களை எம்மோடு உலவ விடுகின்ற உறவாக்கி விடுகின்ற திறமை ரவிந்திரனுக்கு  வாய்த்திருக்கிறது.  இது அவரது  படைப்பிற்கு கிடைத்த  வெற்றியெனலாம். வானொலி அறிவிப்பாளராக பலராலும் அறியப்பட்ட முருகேசு ரவீந்திரன் யாழ்பாணத்தை பிறப்பிடமாக கொண்டவர். தொழில் காரணமாக இருபது வருடங்கள் கொழும்பில் வாழ்ந்தாலும் அவரது பெரும்பாலான கதைகள் யாழ்ப்பாணத்தையே களமாக கொண்டு  புனையப்பட்டுள்ளன. யாழ் மண் அதன் பாரம்பரியம் அதற்கே உரிய தனித்தமான சிறப்பியல்புகள் கதைகளில் உயிர் நாதமாக வேரோடி இருப்பதை படிப்பவர்கள் அறிய முடியும். 1990ற்கு பின் எழுதப்பட்ட 12 சிறுகதைகள் இந் நூலில் இடம்பெற்றுள்ளன. ரவிந்திரனுடய கதைகளில்    காணப்படுகின்ற  சிறப்பம்சம் அதனுடய எளிமை தன்மை ஆகும் வாழ்வியல் அனுபவங்களை ஆடம்பரமில்லாது இயல்பாக சித்தரித்துள்ளமை வாசகனை பாத்திரங்களின் ஒருவனாக  அவனுக்கு மிகவும் நெருங்கியவனாக உணரச்செய்து விடுகின்றது.  அதாவது எழுத்துக்களோடு  ஓர் அகவயமான தொடர்பை ஏற்ப்படுத்தி விடுகிறது.

Continue Reading →

எழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்: எழுத்தாளர் சத்யானந்தனின் வலைப்பதிவு!

அன்னா ஹஸாரே‘எழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்’ என்று கூறும் எழுத்தாளர் சத்யானந்தனின் வலைப்பதிவான tamilwritersathyanandhan  என்னும் இணையத்தளத்தினைப் பதிவுகள் வாசகர்களுக்கு இம்முறை அறிமுகப்படுத்துகின்றோம். தனது மேற்படி வலைப்பதிவில் தனது கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், தொடர் கட்டுரைகள் மற்றும் நாவல் போன்ற பல படைப்புகளை ஆவணப்படுத்தியிருக்கின்றார் சத்யானந்தன். அண்மையில் பதிவு செய்திருந்த ‘அன்னா ஹஸாரே மந்திரவாதி அல்லர்’ என்னும் கட்டுரையினை இங்கு மீள்பிரசுரம் செய்திருக்கின்றோம். மேற்படி தளமானது எழுத்தாளர் சத்யானந்தனின் படைப்புலகை அறிந்து கொள்வதற்குரிய நல்லதொரு தளம். இது போல் எழுத்தாளர்கள் ஒவ்வொருவரும் தமது படைப்புகளை ஆவணப்படுத்துவது அவசியமானதாகும். அவரது தளத்தில் அவரது ஆக்கங்களை வாசிப்பதற்கு இங்கே அழுத்தவும்.

அன்னா ஹஸாரே மந்திரவாதி அல்லர்

– சத்யானந்தன் –

30 வருடங்களுக்கு முன் மூத்த எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆனந்த விகடனில் “சொல்” என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதினார். பின்னாளில் அந்தக் கவிதை ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்னும் அவரது நாவல் சினிமாவாக ஆன போது அதில் பாட்டாக வந்தது. அதில் வரும் ஒரு பத்தி இது:

கும்பிடச் சொல்லுகிறேன்-உங்களை
கும்பிட்டுச் சொல்கிறேன்- என்னைக்
கொல்வதும் கொன்று கோயிலில் வைப்பதும்
கொள்கை உமக்கென்றால்- உம்முடன்
கூடி இருப்பதுண்டோ?

Continue Reading →

ஆய்வும் திறனாய்வும், ஆவணப்படுத்தலும், என்படைப்புகளும் பற்றி….

 அமெரிக்கா மண்ணின் குரல்அண்மையில் ‘டொராண்டோ’ வருகை தந்திருந்த எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன் ‘ஈழத்து அரசியல் நாவல்’ என்னும் தலைப்பில் ஆய்வுரைகள் நிகழ்த்தியதாக அறிவித்திருந்தார்கள். உண்மையில் அவர் ஆற்றியதோ சமர்ப்பித்ததோ ஆய்வுரைகளல்ல; திறனாய்வுகளே. விமர்சனம் என்னும் வடமொழியின் தமிழ் வடிவமே திறனாய்வு. திறனாய்வுக்கும் ஆய்வுக்கும் இடையிலுள்ள வித்தியாசங்களை அறியாமல் பலர் இடம் மாறி அவற்றைப் பயன்படுத்தி வருவதை அவ்வப்போது அவதானித்திருப்பீர்கள். ஆய்வு என்பது ஒரு விடயத்தைப் பற்றிய தகவல்களை இயலுமானவரையில் திரட்டித் தொகுப்பது. அத்தொகுப்பின் இடையில், முடிவில் அவ்வப்போது தனது ஆய்வின் விளைவாக தான் அடைந்த, அறிந்த , புரிந்த விடயங்களைப் பற்றி கருத்துகளை, விமர்சனங்களை வைக்கலாம். அவ்விதம் வைப்பதில் தவறேதுமில்லை. இருந்தாலும் அந்த ஆய்வானது அந்த ஆய்வுக்கான விடயம் பற்றித் திரட்டிய தகவல்களைத் தொகுத்து உள்ளடக்கியிருக்க வேண்டும். அவ்விதமில்லாமல். ஒரு சில குறிப்பிட்ட படைப்புகளைப் பற்றி மட்டுமே அதனைப் படைத்தவர் தனது கருத்துகளை, முடிவுகளை முன்னெடுப்பாரானால் அது வெறும் திறனாய்வே. அதனைத்தான் யமுனா ராஜேந்திரனும் அண்மையில் டொராண்டோ வந்திருந்தபொழுது செய்திருந்தார். அவர் தனக்கு, தன் இலக்கியக் கோட்பாடுகளுக்கமைய ஏற்றுக்கொண்ட படைப்புகளை மட்டுமே தெரிவு செய்து அவை பற்றிய கருத்துகளை வழங்கியிருந்தார். ஆனால் ஆய்வென்பது காய்தல் உவத்தலின்றி செய்யப்பட வேண்டியதொன்று.

Continue Reading →

தேடி எடுத்த கதை: அறிஞர் அ.ந.கந்தசாமி – ‘குடும்ப நண்பன் ஜில்’

அறிஞர் அ.ந.கந்தசாமிஅணமையில் இணையத்தில் கூகுள் தேடுபொறியில் ‘அ.ந.கந்தசாமி’ என்று உள்ளீடிட்டுத் தேடுதலை மேற்கொண்டபோது சிங்கப்பூர் தேசிய நூலகச் சபையின் இணையத்தளமும் பெறப்பட்ட பதில்களிலொன்றாகவிருந்தது. அதனை அழுத்தி சிங்கப்பூர் தேசிய நூலக சபையின் இணையத்தளத்திற்குச் சென்றபோது அ.ந.கந்தசாமியின் சிறுகதையொன்று, ‘குடும்ப நண்பன் ஜில்’,  நுண்சுருள் மூலம் சேமிக்கப்பட்டிருந்த தகவல் கிடைத்தது. அந்தக் குறிப்பில் கருத்துச் சொல்லும் பகுதியில் அச்சிறுகதையினை எவ்விதம் எடுக்கலாம் என்பது பற்றிய எனது எண்ணங்களைப் பதிவு செய்திருந்தேன். என்ன ஆச்சரியம்! சில மணித்தியாலங்களீலேயே அந்நூலக சபையின் நூலகர்களிலொருவரான சுந்தரி பாலசுப்பிரமணீயத்திடமிருந்து மின்னஞ்சலொன்று என் மின்னஞ்சல் முகவரிக்கு வந்திருந்தது. அதில் அவர் நூலக சபையின் இணையத் தளத்திலுள்ள பத்திரிகைகளில் தமிழ் முரசு பத்திரிகையைத் தெரிவு செய்து, அறிஞர் அ.ந.கந்தசாமியின் மேற்படி ‘குடும்ப நண்பன் ஜில்’ என்னும் சிறுகதையினை வாசிப்பதற்கான வழிமுறைகளை விளக்கியிருந்தார். அறிஞர் அ.ந.கந்தசாமி எழுத்தினை ஆயுதமாகப் பாவித்துப் போராடிய மக்கள் எழுத்தாளர். இக்கதையும் அதனையே புலப்படுத்தும். இலங்கைத் தோட்டத்தொழிலாளர்களின் வாழ்வைப் பின்னணியாகக் கொண்டு பின்னப்பட்ட சிறுகதையிது. இதுவரை இச்சிறுகதையினைப் பற்றி யாரும் பேசிக் கேட்டதேயில்லை.  இச்சிறுகதையினைப் பெற முடிந்ததற்காக சிங்கப்பூர் தேசிய நூலக சபைக்கும் மிகவும் நன்றி. சிங்கப்பூர் தேசிய நூலக சபையின் முன்மாதிரியைப் பின்பற்றி ஏனைய நூலகங்களும் , இணையத்தின் மூலம் இவ்விதமாகப் படைப்புகளை வாசிப்பதற்கு வசதிகள் செய்து கொடுத்தால் நல்லது. இவ்விதமாக அறிஞர் அ.ந.கந்தசாமியின் படைப்புகள் பல பல்வேறு பத்திரிகைகள், சஞ்சிகைகளில் பரவிக் கிடக்கின்றன. இவற்றையெல்லாம் சேகரித்து வெளிக்கொணரவேண்டும். அதுவே நாம் அவருக்குச் செய்ய வேண்டிய நன்றிக்கடன். – ஆசிரியர்  –

Continue Reading →

பால் நிலைப் பிறழ்வு குறித்தான கீழை, மேலைத் தேய கலை இலக்கியங்கள் பற்றிய ஒரு கண்ணோட்டம்

எழுத்தாளர் தேவகாந்தன்(பாலின் நிலைமாற்றத்தினை பாலின மாற்றம் என்பதா, பால்நிலைப் பிறழ்வென்பதா என இக் கட்டுரை 05.05.2012இல் நடைபெற்ற இலக்கியச் சந்திப்பு 39இல் வாசிக்கப்பட்டபோது ஒரு பிரச்சினை தோன்றியது. பால்நிலை மாற்றம் என்று குறிப்பிடுவதே சரியென்று, இலக்கியச் சந்திப்பு வாசிப்பின் பின் நான் யோசித்திருந்தாலும், மீண்டும் மீண்டுமான என் யோசிப்பில் அலியென்பது ஒரு பிறழ்வெனவே தோன்றியது. ஆண் அல்லது பெண் ஆகவேண்டியது இரண்டுமல்லாததாக ஆவது ஒரு பிறழ்வுதான். ஆனால் ஆண் அலி, பெண் அலி தம்மைப் பெண்ணாக மாற்றிக்கொள்வதை மாற்றம் எனக் குறிப்பிடல் சரியாகலாம். எனவே தொடர்ந்தும் பிறழ்வு என்ற சொல்லையே இக் கட்டுரையில் நான் பாவித்திருக்கிறேன். சில இடங்களில் வரநேர்ந்திருக்கும் மாற்றம் என்ற சொல்லை நான் வலிந்து மாற்ற முயற்சி செய்யவில்லை.) பால் நிலைப் பிறழ்வு குறித்தும், பாலியல் சார்ந்த பகுப்புகள் குறித்தும், கலவி நிலைகளும் அதுபற்றிய விளக்கங்கள் பற்றியும் சிந்திக்க முனையும் ஒருவருக்கு, அவைபற்றிய முதல்நிலைத் தகவல்களைத் தருபவை கீழைத் தேய எழுத்துக்களாகவே இருக்கின்றமை வெளிப்படையானது.

Continue Reading →

வாசகர் கடிதங்கள் ….

From: thilaga bama
To: pathivukal
Sent: Thursday, December 22, 2011 3:19 PM
Subject: அணையைக் கட்டினார்கள், அடிவயிற்றில் அடித்தார்கள்

வணக்கம், இந்தக் கட்டுரையை தங்கள் இதழ்களீல் மீள்பிரசுரம் செய்திடவேண்டும் . அணைகள் பிரச்சனைகளாக இருக்கின்ற இந்த நேரத்தில் இக்கட்டுரை  அவசியம் எனக் கருதுகின்றேஎன். இக்கட்டுரையுடன் கட்டுரைஆசிரியரின் புகைப் படமும், கட்டுரையையும் அனுப்பியுள்ளேன். கட்டுரையை எழுதியவர் எனது பாட்டனார். அவரது அனுமதியுடன் அனுப்பியுள்ளேன்

Continue Reading →

ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ரத்னவேல் நடராஜன்

‘ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ரத்னவேல் நடராஜன்’ என்னும் வலைப்பதிவினை இணைய இதழுக்கு அறிமுகம் செய்கின்றோம். மிகவும் பயனுள்ள வலைப்பதிவு. உடல் நலம், இலக்கியம், அறிவியல் எனப் பல்வேறு விடயங்களைப் பற்றியும்…

Continue Reading →

யமுனா ராஜேந்திரனுடன் சில மணித்தியாலங்கள்

தற்போது 'டொராண்டோ' வந்திருக்கும் கலை, இலக்கிய விமர்சகரான எழுத்தாளர் யமுனா ராஜேந்திரனை தமிழ் கலை, இலக்கிய உலகு நன்கறியும். கோவையில் பிறந்த யமுனா ராஜேந்திரன் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகின்றார். தற்போது ‘டொராண்டோ’ வந்திருக்கும் கலை, இலக்கிய விமர்சகரான எழுத்தாளர் யமுனா ராஜேந்திரனை தமிழ் கலை, இலக்கிய உலகு நன்கறியும். கோவையில் பிறந்த யமுனா ராஜேந்திரன் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகின்றார். அரசியல், கலை, இலக்கிய விமர்சகத்துறையில், மொழிபெயர்ப்புத் துறையில் ஓய்வற்று அவர் ஆற்றிவரும் பணி என்னைப் பிரமிக்க வைப்பதுண்டு. பல்வேறு நிகழ்வுகளில் பங்குபற்றிவருமிவரை எழுத்தாளர் ‘கனவுச்சிறை’ தேவகாந்தனின் இருப்பிடத்தில் சந்திக்கும் வாய்ப்பு இன்று – மே 17, 2012 –  கிடைத்தது. இவர்களுடன் எழுத்தாளர் டானியல் ஜீவாவும் இச்சந்திப்பில் கலந்து கொண்டார். ஏற்கனவே பத்திரிகை சஞ்சிகைகள் வாயிலாக யமுனா ராஜேந்திரனை அறிந்திருந்தாலும், ‘பதிவுகள்’ மூலமாகத்தான் அவருடனான மின்னஞ்சல் தொடர்பு முதலில் ஏற்பட்டது. ஆனால் இன்றுதான் அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சந்திப்பு குறுகிய நேரம்தானென்றாலும் மிகவும் பயனுள்ளதாகவும், நெஞ்சில் நிலைத்து நிற்கும் சந்திப்புகளிலொன்றாகவும் அமைந்து விட்டது.

Continue Reading →