[அறிஞர் அ.ந.கந்தசாமி நினைவுதினம் பெப்ருவரி 14. அதனையொட்டி அமரர் செம்பியன் செல்வனின் ‘ஈழத் தமிழ்ச் சிறுகதை மணிகள்’ நூலில் அறிஞர் அ.ந.கந்தசாமியைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ள பகுதியினை மீள்பிரசுரம் செய்கின்றோம். -பதிவுகள்]
இலக்கிய மின்னல்
இருளை விரட்டி ஒளியைப் பரப்பும் மின்னல் – சமுதாயத்தில் சூழ்ந்துள்ள மடமை, வறுமை முதலாம் இருள்களை நீக்கி, அறிவையும் ஆனந்தத்தையும் பரப்பும்படி எனக்குப் பணித்தது1, – என்று தனது முதற்படைப்பான ‘சிந்தனையும் மின்னொளியும்’ என்ற கவிதை தனது பதினேழாவது வயதில் பிறந்ததையும், அது பின்னர் ஈழகேசரிப் பத்திரிகையில் வெளிவந்ததையும் நினைவுகொண்ட அமரர் அ.ந. கந்தசாமி அவர்களின் இலட்சியக் கொள்கை வெறி, எழுத்தின் ஆரம்காலம் தொட்டு, அவரின் அந்தியகாலமான 14-2-68 வரை மாறவோ, மறையவோ இல்லை.